Followers

Search Here...

Saturday, 29 March 2025

ஹிந்து குடும்பம் எப்படி உள்ளது?

ஹிந்து குடும்பம் எப்படி உள்ளது?

அப்பா முருகனை வழிபட்டார்.

அம்மா பெருமாளை வழிபட்டாள்.

மகன் சிவனை வழிபட்டான்.

மகள் துர்க்கையை வழிபட்டாள்.


அனைவருக்கும் தெரியும் "ஒரே தெய்வம் தான் பல ரூபங்களில் இருக்கிறது" என்று. 

யாரும் யாரையும் வெறுத்ததில்லை. வழிபாட்டையும் நிறுத்தவில்லை. 

சிவன் கோவிலுக்கு அனைவரும் சென்றனர். 

விஷ்ணு கோவிலுக்கும் அனைவரும் சென்றனர். அனைத்து பண்டிகையும் சேர்ந்தே கொண்டாடினர். 

குல தெய்வம் என்று கருப்பண்ணசாமி, அம்மன் என்று வழிபாடும் சேர்ந்தே செய்தனர். 


தன் கற்பனையில் உருவாக்கிய தெய்வத்தை எடுத்து கொண்டு வந்தார்கள் வந்தேறிகள். பாரத நாட்டில் நுழைந்தார்கள்.


கற்பனையில் உருவான இவர்களின் தெய்வ வழிபாடும், உண்மையில் ஒரே தெய்வத்தை தான் அடைகிறது என்று பார்த்தான் ஹிந்து.

வந்தேறியின் தெய்வத்தையும் மதித்தான் ஹிந்து. 


வந்தேறிக்கு ஹிந்துவின் பரந்த குணம் புரியவில்லை. ஹிந்துவும் வந்தேறியின் குறுகிய புத்தியை புரிந்து கொள்ளவில்லை.

நாத்தீகனையும் வாழ விடும் ஹிந்துவை, வந்தேறியால் புரிந்து கொள்ள முடியவில்லை.


அப்பனை காசு கொடுத்தும், தாயை கற்பழித்தும், அன்பு இரக்கம் என்று சொல்லி குழப்பியும், அவர்கள் வழிபடும் தெய்வத்தை குறை சொல்லியும். கேலி செய்தும், பயத்தை காட்டியும் மாற்றினான் வந்தேறி.


அப்பன் ஒருவனை மாற்றினான் வந்தேறி.

அடடா! குடும்பமே மதம் மாற்றப்பட்டது.

பெண்களுக்கு சுதந்திரம் பறி போனது. முக்காடு போட்டும், விதவை கோலம் கொடுத்தும் வீட்டில் ஒடுக்கினர்.

கோவில் சென்றால் உற்சவம், குழந்தை பிறந்தால் உற்சவம்,

கல்யாணம் என்றால் உற்சவம்,

இறந்தால் கூட உற்சவம்.

கோவிலில் எப்பொழுதும் உற்சவம். உணவு, கொண்டாட்டம், நெற்றியில் அழகான திலகம், கழுத்தில் நகைகள். அழகான ஆடைகள் என்று இருந்த குடும்பம், வீட்டில் அடங்கி போனது.


கோவிலை விட்டு விட்டு, அவர்கள் கட்டி இருக்கும் இடத்திற்கு சென்றால், மரண அமைதியும், ஒப்பாரியும் அழுகையையும் காதுகள் கேட்டது.

மனம் ஆனந்தத்தை இழந்து, சோகம் அடைந்தது. பெண்கள் வீட்டில் அடைக்கப்பட்டனர். அலங்காரம் அழிந்து பெண்கள் விதவை கோலம் கொண்டனர். ஆண் ஆதிக்கம் வளர்ந்தது.


பரம்பரை பரம்பரையாக காப்பாற்றிய தெய்வத்திடம் பகை வளர்த்து, ஹிந்து தர்மத்தை விட்ட குடும்பத்தை, ஒரு சமயம் நாட்டிற்கே எதிராக சிந்திக்க வைத்தனர்.


மதம் மாறியவன், "தான் ஒரு ஹிந்து" என்று அறிந்து இருந்தான். நல்லவனாக இருந்து மறைந்தான். எரிக்கப்படாமல் புதைக்கப்ட்டான்.

திவசம் செய்யாததால், ஆவியாய் அலைந்தான்.

ஆவி பிசாசு மேல் அதீத நம்பிக்கை வைத்து விட்டான்.


காசுக்காக தன் குல தெய்வத்தை விட்டான். சுதந்திரமாக வழிபட்ட தன் குடும்பத்தை சுருக்கினான். 

தெய்வமும் சக்தி அற்றது போல, ஒரே ஒரு ரூபம் தான் என்று நம்பினான்.

தனக்குள்ளும் அந்த தெய்வம் இருக்கிறது என்று சொன்ன ஹிந்து தர்மத்தை புரிந்து கொள்ளாமல் ஏமாற்றப்பட்டான்.


மதம் மாற்றப்பட்டவன் மறைந்த பிறகு, இவனால் மதம் மாற்றப்பட்ட பிள்ளைகள் தன்னை வந்தேறிகளின் விந்துக்கள் என்று நினைக்க தொடங்கினர். 

ஹிந்துக்கள் மேல் விஷத்தை கக்கினர்.

அடிமைப்படுத்த நினைத்த, தன் குடும்ப பெண்களை கெடுத்த வந்தேறிகளை வெறுக்காமல், தங்கள் மூதாதையர்கள் என்று நினைத்தனர். 

அவர்களை போல நாமும் இந்த பாரத தேசத்தை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்தனர். 

அதற்காக ஹிந்துவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் பக்கம் நின்றனர். அவர்களுக்கே ஓட்டு போட்டனர்.


இப்படி ஒரு கூட்டம் இருப்பதை பார்த்து, திருடர்கள் சேர்ந்து கொண்டு கட்சி ஆரம்பித்தனர்.

ஹிந்துவை எதிர்த்து பேசினர். ஹிந்து பண்டிகையை மறுத்தனர்.


ஒரே குடும்பத்தில் பல தெய்வ வழிபாடு செய்யும் ஹிந்துவை பார்த்து "தெய்வத்தின் பெயரால் சண்டை போடுகிறான்" என்று புரளி கிளப்பினர்.

தெய்வத்தின் பெயரால் மத வெறி உண்டாக்கும் வந்தேறியை பற்றி பேச மறுத்தனர்.


ஹிந்துவின் மகத்துவத்தை இன்னும் புரிந்து கொள்ளாத ஹிந்து குடும்பத்துக்கு, காசு கொடுத்து திருடர்கள் ஓட்டு வாங்கினர்.


ஹிந்துவின் மகத்துவம் தெரிந்த ஹிந்துக்களை கேலி செய்தனர்.

வந்தேறிகளால் மதம் மாற்றப்பட்ட குடும்பத்தை கொண்டே ஹிந்துக்களை பற்றி அவதூறு பரப்பினர். 

மதம் மாற்றபட்டவர்கள், ஹிந்து பெயரில் இருந்து கொண்டே, ஹிந்துக்களை கேலி செய்தனர்.

இவர்கள் மூலம், திருடர்கள் ஆட்சியை பிடித்தனர்.


ஹிந்து குடும்பங்கள் விழிக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. 

திருடர்கள் ஆட்சி மறையும் காலம் வந்து விட்டது.


1000 வருடங்கள் வந்தேறிகள் ஆண்டும் கூட, அழியாத ஹிந்துக்கள், வந்தேறிகளின் பொய்களால், கற்பழிப்பால் மதம் மாற்றப்பட்ட கூட்டத்திடம் சிக்காது. 

இவர்களையும் ஒரு நாள் தெளிய வைத்து, மீண்டும் ஹிந்து சாம்ராஜ்யம் அமையும் என்பதே பாரத தேசத்தின் இயற்க்கை.


எப்படி ஒரு காலத்தில் ஹிந்துக்கள் ஏமாற்றப்பட்டு பௌத்த மதத்தை ஏற்று, பிற்காலத்தில் மீண்டும் சுதந்திரமான ஹிந்து வழிபாட்டு முறைக்கு வந்தார்களோ அது போல, பாரத நாடு பணம் கொழிக்கும் நாடாக மாறும் பொழுது, காசுக்கும் பயத்துக்கும் மதம் மாறிய நம் ஹிந்துக்கள் மீண்டும் ஹிந்துவாக மாறி விடுவார்கள். 

சுதந்திர காற்றை அனுபவிப்பார்கள். பெண்கள் சுதந்திரம் அடைவார்கள். 


பெண்ணும் தெய்வம் தான் என்று துர்க்கை, மஹாலக்ஷ்மி என்ற பெண் தெய்வங்களையும் வணங்க வருவார்கள்.


பிற மதங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. அதை மனிதன் பிரச்சாரம் மூலம் காப்பாற்ற, படாத பாடுபடுகிறான்.


ஹிந்து மதம் என்ற சனாதன தர்மத்தை, அதாவது காலம் காலமாக இருக்கும் அறத்தை, வேதத்தில் சொல்லப்படும் தெய்வங்களே காக்கிறது. 

அதனால் ஹிந்து தர்மம் அழியாதது. 

1000 வருடங்கள் முயற்சி செய்தும் அழியாதது. 

பாரத நாட்டில் 80 கோடிக்கும் மேல் ஹிந்துக்கள் உள்ளனர்.

அது மட்டுமல்ல,

இன்று, உலகம் முழுக்க எங்கு சென்றாலும் ஹிந்துக்களை பார்க்க முடியும்.

மேகம் போல சில காலம் மறைக்கபட்டாலும், மேகம் கலைந்ததும், மதம் மாறியவர்கள் கூட மீண்டும் தாய் மதம் திரும்பி விடுவார்கள்.


ஹிந்துவாக நாம் செய்ய வேண்டியது என்ன? 

நமக்கு பிடித்த தெய்வத்தை பற்றி சரித்திரம், பாடல் அனைத்தும் ஒரு முறையாவது படித்து விட வேண்டும். அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும். 

அந்த தெய்வத்தின் கோவில்கள் எங்கெங்கு உள்ளதோ அங்கு சென்று பார்க்க வேண்டும். அங்கு கோவிலில் சேவை செய்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

நம் பெருமையை நாம் அறிய வேண்டும். நம் குடும்பத்தில் அடிக்கடி பேச வேண்டும்.


இதை செய்தால் ஹிந்து ஒருபோதும் மதம் மாற்றப்பட மாட்டான். மாறாக மதம் மாறி பெண்களை அடிமையாக வைத்து, குறுகிய மனப்பான்மையோடு இருப்பவர்கள் மீண்டும் ஹிந்துவாக மாறி சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பிப்பார்கள்.

திலோத்தமா யார்? சிவபெருமானுக்கு 4 தலைகள் எப்படி உருவானது? இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் எப்படி உருவானது?

ஸுந்தன் உபஸுந்தன் இருவரும் அசுரர்கள்.

இவர்கள் நிகும்பன் என்ற அசுரகுல அரசனின் பிள்ளைகள். நிகும்பன் ஹிரண்யகசிபுவின் பேரன்.


ஸுந்தன் உபஸுந்தன் இருவருக்கும் ஆச்சர்யமான ஒற்றுமை இருந்தது.

இவர்கள் நினைப்பது ஒன்றாகவே இருந்தது.

இவர்கள் செய்யும் செயலும் ஒன்றாகவே இருந்தது.

இவர்கள் அடைய ஆசைப்படுவதும் ஒன்றாகவே இருந்தது.

இவர்கள் சுகமாக நினைப்பதும் ஒன்றாகவே இருந்தது,

இவர்கள் துக்கமாக நினைப்பதும் ஒன்றாகவே இருந்தது.

இவர்களிடம் எண்ணத்திலோ, செயலிலோ வித்யாசம் காணப்படவில்லை.

ஒருவனை விட்டு மற்றொருவன் சாப்பிடக்கூட மாட்டான்.

ஒருவனை விட்டு மற்றொருவன் பேசக்கூட மாட்டான்.

ஒருவனுக்கு ஒருவன் பிடித்ததை செய்து கொண்டும், ஒருவனுக்கு ஒருவன் பிடித்ததையே பேசி கொண்டும் இருந்தனர்.

ஒரே ஒழுக்கம் கொண்டிருந்தனர்.

ஒரே செய்கைகள் கொண்டிருந்தனர்.

இவ்வாறு, ஒரே ஒருவன், இரண்டாக தெரிவது போல வாழ்ந்து கொண்டிருந்தனர்.


ஒரு சமயம், இவர்கள் 3 லோகங்களையும் ஜெயிக்க ஆசைப்பட்டு, விந்திய மலையில் கால் கட்டை விரலில் நின்று கொண்டு கடுமையாக தவம் செய்ய ஆரம்பித்தனர்.

செல்வங்களும், தேவ லோக பெண்களையும் அனுப்பி தேவர்கள் முயற்சி செய்தும், இவர்கள் தவத்தை கலைக்க முடியவில்லை.

இவர்களின் தாயார், சகோதரிகள், மனைவிகள் இவர்களை ராக்ஷஸர்கள் இவர்களை தாக்க, இவர்கள் காப்பாற்று என்று கதறுவது போல மாயையை உருவாக்கினர்.

எதற்கும் அசையாமல் தவத்திலேயே இருந்தனர்.

இவர்கள் தவம் விந்திய மலையையே கொதிக்க செய்தது.

இவர்கள் தவத்தால், ப்ரம்ம தேவன் ப்ரத்யக்ஷம் ஆனார்.

என்ன வரம் வேண்டும்? என்று கேட்க, 

நாங்கள் மாயைகள் அறிந்தவர்களாகவும், ஆயுதங்கள் அறிந்தவர்களாகவும், அதிக பலம் கொண்டவர்களாகவும், நினைத்த ரூபங்களை எடுக்கும் சக்தியுள்ளவர்களாகவும், மரணம் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்று கேட்க,

மரணம் மட்டும் தர இயலாது. மற்ற அனைத்தும் தருகிறேன் என்றார். மரணத்திற்கு பதில் வேறு கேளுங்கள் என்றார்.

அப்படியென்றால், நாங்கள் இருவரும் யாரிடத்திலும் பயம் இல்லாமல், யாரினாலும் மரணம் ஏற்படாமல் இருக்க வேண்டும். மரணம் என்று உண்டு என்றால் நாங்களே எங்களை கொன்றால் தான் மரணம் எங்களுக்கு நேர வேண்டும் என்று கேட்டனர்.

தந்தேன் என்று சொல்லி மறைந்தார் ப்ரம்மா.


மகா பலத்தை அடைந்த இந்த சகோதரர்கள், அசுர லோகம் சென்றனர். இவர்களால் அசுரர்கள் பெரும் சுகத்தோடு வாழ தொடங்கினர்.

அசுர லோகத்தில் எங்கு பார்த்தாலும், சாப்பிடு, இதோ வாங்கி கொள், குடி, விளையாடு, பாடு என்ற சப்தங்களே எங்கும் கேட்டது.

பல வருடங்கள் நாட்கள் போல போனது.

மேல் லோகங்கள், கீழ் லோகமான நாக லோகங்கள் அனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்த இந்த சகோதரர்கள், இந்திரலோகத்தை கைப்பற்றினார்கள். தேவர்கள் ப்ரம்மலோகம் ஓடினர். பிறகு யக்ஷர்கள், ராக்ஷஸர்களை, ஆகாசத்தில் இருக்கும் பறவைகள் அனைத்தையும் கொன்றனர். பிறகு நாக லோகம் சென்று அவர்களையும் ஜெயித்தனர். சமுத்திர தீவுகளில் வசிக்கும் மிலேச்சர்களையும் ஜெயித்தனர். 

பிறகு, பூமியில் ராஜ ரிஷிகள் மஹாயாகங்கள் செய்து, பிராம்மணர்கள் ஹோமங்கள் ஸ்ரார்த்தங்கள் செய்து தேவர்களுக்கு பலம் கொடுக்கின்றனர். இவர்களையும் கொன்று குவிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

பூமியில் உள்ள அரசர்கள் அனைவரையும் கொன்றனர்.

பூமியில்  எங்கெங்கெல்லாம் பிராம்மணர்கள் இருந்தனரோ, அவர்களை தேடி தேடி கொன்றனர். ஒளிந்து இருந்தவர்களை தன் மாயையால் பல ரூபங்கள் எடுத்து கொண்டு கண்டுபிடித்து கொன்றனர்.

பிராம்மணர்கள் கொடுக்கும் சாபமும், ப்ரம்மாவின் வரத்தால் பாறையில் விழுந்த நீர் போல ஆனது.

தன் கன்னத்தில் வழியும் வியர்வையில் மதம் கொண்ட யானைகளை மாயையால் உருவாக்கி, ப்ராம்மணர்களை தேடி தேடி மிதித்து கொன்றனர். புலி சிங்கம் போன்ற ரூபங்கள் எடுத்து கொண்டு மறைந்து இருந்தவர்களை பிடித்து கொன்றனர்.

பூமியில் அரசர்கள், ப்ரம்மமானர்கள் இல்லாது போனார்கள். 

பூமியில் எங்கு பார்த்தாலும் யாகங்கள் இல்லை. ஹோமங்கள் இல்லை. வேதம் இல்லை. திருமணம் போன்ற சுப காரியங்கள் இல்லை. பூமி பயத்தால் சூழ்ந்து இருந்தது. நகரங்கள் நாசம் செய்யப்பட்டு கிடந்தது. பயிர் செய்வது நின்று விட்டது. எங்கும் எலும்பு கூடுகள். 


இதை கண்டு சூரியனும், சந்திரனும், நவ க்ரஹமும், 7 ரிஷிகளும், அஸ்வினி போன்ற அனைத்து நக்ஷத்திரங்களும் தேவர்களும் துக்கம் அடைந்தனர்.

பூமியில் குருக்ஷேத்ரம் என்ற இடத்தில் வாசம் செய்ய தொடங்கினர் இந்த அசுர சகோதரர்கள்.


அப்போது தேவ ரிஷிகளும், ப்ரம்ம ரிஷிகளும் பூமியில் நடக்கும் இந்த நிலையை பார்த்து கவலை கொண்டு பிரம்மாவிடம் சென்றனர்.

ப்ரம்மா இவர்கள் சொல்வதை கேட்ட பின், விஸ்வகர்மாவை அழைத்து, நீ உலகத்தில் யார் பார்த்தாலும் ஆசைப்படும் அளவுக்கு ஒரு பெண்ணை ஸ்ருஷ்டி செய்" என்றார்.

உடனே நமஸ்காரம் செய்து விட்டு, மூன்று உலகங்களிலும் அசையும் மற்றும் அசையாத பொருட்களில் பார்ப்பதற்கு எது இனியதோ அது அதை எடுத்து ஒரே ஒரு பெண் ரூபத்தில் சேர்த்தான்.

கோடி கொடியான ரத்தினங்களை அவள் தேகத்தில் சேர்த்தான். இப்படி உருவாக்கப்பட்ட இந்த பெண் அழகில் கண்ணை கவர்ந்தாள்.

யாராவது இவளை பார்த்தால், பார்த்த இடம் சரியாக இல்லை என்று கண்ணை விலக்க முடியாதபடி இருந்தாள்.

ஸ்ரீ தேவி போன்றவளும், திடமான உடல்வாகு கொண்டவளாகவும் இருந்தாள்.

அந்த பெண் பிராம்மாவை பார்த்து "என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டாள்.

பார்த்தாலே கண்களும் மனமும் கவரப்படும் படியாக இருந்த இவளை பார்த்த பிறகு ப்ரம்மா விஸ்வகர்மாவை பார்த்து, "நீ இவளை கோடிக்கணக்கான ரத்தினங்களில் உள்ள சாரமான அழகை கொண்டு எள் (திலம்) எள்ளாக பார்த்து படைத்து இருக்கிறாய். அதனால் இவளுக்கு திலோத்தமா என்று பெயர் வைக்கிறேன் என்றார்.

அதை கேட்ட அவள், மீண்டும் அவரை வணங்கி, என்னை எதற்காக படைத்தீர்கள்? நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டாள்.

திலோத்தமா! நீ உன் அழகினால் அசுரர்களான ஸுந்தன் உபஸுந்தன் இருவரையும் மதி மயங்க செய். உன்னை பார்த்தத்தினால் அவர்களுக்குள் சண்டை உருவாகும் படி செய்" என்றார். 

அப்படியே செய்கிறேன் என்றாள்


புறப்படும் முன் அங்கிருந்த தேவர்கள், சங்கரர், ப்ரம்ம தேவன் அனைவரையும் சுற்றி வலம் வந்து நமஸ்கரித்தாள்.

அப்படி அவள் வலம் வரும் போது, ப்ரம்மா கிழக்கு முகமாக அமர்ந்திருந்தார். சங்கரர் தெற்கு பக்கமாகவும், இந்திரன் வட பக்கமாவும் இருந்தார்கள். ரிஷிகள் நான்கு புறத்திலும் சூழ்ந்து இருந்தனர்.

இவர்கள் அனைவரையும் சுற்றி வந்தாள் திலோத்தமை. சங்கரரும் இந்திரனும் இவளால் மனதை நிறுத்த முடியாமல் பார்த்தனர். அப்போது வைத்த கண்ணை எடுக்க முடியாமல் சங்கரருக்கு, தெற்கு பக்கம் ஒரு தலையும், மேற்கு பக்கம் ஒரு தலையும், வடக்கு பக்கம் ஒரு தலையும் உருவாக்கி, சதுர் முகம் உண்டானது.

அதே சமயம், இந்திரன் ஒரு கண் போதாது என்று பார்க்க, ஆயிரம் கண்கள் அவனுக்கு உருவானது.

 அங்கிருந்த மற்ற தேவர்கள், ரிஷிகள் அனைவரது கண்களும் அவளையே பார்த்தன. 

இந்த ஆச்சர்யத்தை பார்த்தே அனைவரும் அந்த அசுரர்களுக்கு முடிவு ஏற்பட்டு விடும் என்று நிச்சயித்தனர்.


யாரும் ஜெயிக்க முடியாதபடி வாழ்ந்து கொண்டிருந்த இந்த சகோதரர்கள் ஒரு சமயம் மேடு பள்ளம் இல்லாத விந்திய மலை சாரல் வீசும் இடத்திற்கு சென்று அங்கு மரங்களில் பூக்கள் பூத்து குலுங்கும் இடத்திற்கு சென்றனர். 

அங்கு தேவலோக பெண்களை அழைத்து விளையாடி கொண்டிருந்தனர். 

அப்போது உடல் தெரியுமாறு சிவந்த ஒற்றாடை உடுத்திக்கொண்டு, அந்த காட்டில் பூத்த பூக்களையும், நதியில் பூத்திருந்த கொன்றை பூக்களையும் பறித்து கொண்டு இவர்கள் அருகில் வந்தாள் திலோத்தமை.

மதுபானம் செய்திருந்த இவர்கள், இவளை பார்த்ததும் திடுக்கிட்டனர். 

இவளை இருவரும் அனுபவிக்க ஆசைப்பட்டனர்.

ஸுந்தன் திலோத்தமையின் வலது கையை பிடிக்க, உபஸுந்தன் அவளின் இடது கையை பிடித்தான்.

வரத்தினால் இவர்கள் பெற்று இருந்த பலத்தாலும், செல்வத்தாலும், அதனால் உண்டான கர்வத்தாலும், மது உண்ட மயக்கத்தாலும், கொழுத்து இருந்த இருவரும் ஒருவரை பார்த்து ஒருவர் புருவத்தை நெறித்தனர்.

மதம் கொண்டதாலும், காமம் கொண்டதாலும் "இவள் என்னுடைய மனைவி. நீ மரியாதை செய்யத்தக்கவள்" என்று ஸுந்தன் சொன்னான்.

உபஸுந்தன், "இவள் என் மனைவி. உனக்கு மருமகள்" என்றான்.

"இவள் உனக்கில்லை. எனக்கு தான்" என்று இருவரும் சொல்லிக்கொண்டனர்.

இந்த பேச்சு கோபமாக மாறியது.

இவள் ரூபத்தில் மயங்கி கிடந்த இருவரும், நேசத்தையும், மன ஒற்றுமையையும் இழந்து, இரண்டு கதைகளை எடுத்து கொண்டு அடித்து கொண்டனர்.

இவ்வாறு இருவரும் அடித்து கொள்ள, ரத்தம் பீறிட்டு இருவரும் தரையில் விழுந்து மடிந்தனர்.

இதை கண்ட அசுர பெண்கள் பெரும் துக்கமுற்று, பயம் ஏற்பட்டு பதைபதைப்போடு பாதாள லோகம் சென்றனர்.


ப்ரம்மா திலோத்தமையை பார்த்து ஆசிர்வதித்து, "நீ யார் கண்ணிலும் தென்பட கூடாது என்பதால், நீ ஆதித்யன் சஞ்சரிக்கும் லோகங்களில் சஞ்சரி. நீ யார் கண்ணிலும் தெரிய மாட்டாய்" என்று ஆசிர்வதித்து அனுப்பினார்.


திலோத்தமையின் இந்த சரித்திரத்தை சொன்ன நாரதர், பாண்டவர்கள் திரௌபதியின் காரணமாக எக்காரணம் கொண்டும் சண்டையிட்டு கொள்ளாமல் குடும்பம் நடத்த வேண்டும் என்று உபதேசம் செய்தார்.

அதற்கு பிறகு, இந்திரபிரஸ்தத்தில் பாண்டவர்கள் சுகமாக வசிக்க தொடங்கினர்.

பாண்டவர்கள் தங்களுக்குள் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர்.

"திரௌபதி நம் ஒவ்வொருவரோடும் ஒரு வருஷம் வசிப்பாள். திரௌபதியோடு இருக்கும் போது மற்றொருவர் பார்த்தால், 12 மாதங்கள் ப்ரம்மச்சர்யத்தோடு வனத்தில் வசிக்க வேண்டும்" என்று உடன்படிக்கை செய்து கொண்டனர்.


நாரதர் இவர்களின் உடன்படிக்கையை கண்டு சந்தோஷப்பட்டு ஆசிர்வதித்து, பிறகு தான் லோகத்துக்கு சென்றார்.



How is a Hindu Family?

How Was a Hindu Family?

The father worshiped Murugan.
The mother worshiped Perumal.
The son worshiped Shiva.
The daughter worshiped Durga.

Everyone knew that "there is only one God in many forms."
No one hated each other. No one stopped worshiping their deity.

Everyone went to Shiva temples.
Everyone went to Vishnu temples.
All festivals were celebrated together.

They worshiped Karuppannasami as their family deity and also worshiped the Goddess.

Then came the outsiders, bringing their own imagined gods. They entered the land of Bharat.

The Hindu saw that even these imagined gods ultimately reached the one and only Supreme God.
He respected the outsider's god as well.

But the outsider could not understand the Hindu’s broad-mindedness.
And the Hindu could not understand the outsider’s narrow thinking.

The outsider could not grasp how a Hindu even let atheists live peacefully.

Then, using money to sway the father, violating the mother, confusing the people with sweet words about love and mercy, mocking their gods, instilling fear—they converted the Hindu.

By converting just one man, the entire family’s religion changed.
Women lost their freedom. They were veiled, dressed like widows, and confined within the home.

Before:

  • Temples always had festivals.
  • The birth of a child was a celebration.
  • Weddings were grand festivals.
  • Even funerals had rituals filled with meaning.

Hindus wore beautiful tilaks on their foreheads, adorned gold jewelry, and dressed in fine clothes.
But after conversion, they were shut inside homes.

When Hindus left their temples and visited places built by the outsiders, all they heard was deathly silence, wailing, and mourning.
Joy was lost. Sorrow filled the air.
Women were locked inside.
Adornment vanished, and they were dressed like widows.
Male dominance grew.

The family, once devoted to the gods who had protected them for generations, now turned against their own faith.

The converted Hindu still knew deep inside that he was once a Hindu.
He remained good at heart—but he was now buried instead of cremated.
Without the sacred last rites, he wandered as a lost spirit.
The belief in ghosts and spirits grew stronger.

He had abandoned his family deity for money.
He had restricted the free worship that his family once enjoyed.
He believed his new god had only one form and forgot that divinity exists within himself, as taught by Hindu Dharma.

After he died, his converted children started believing that they were the true descendants of the outsiders.
They hated Hindus.

Instead of hating those who once enslaved and violated their women,
they considered them their ancestors.
They dreamed of reclaiming Bharat for their new faith.

They sided with anyone who spoke against Hindus.
They voted for those who opposed Hindus.

Seeing this, corrupt politicians formed parties against Hindus.
They spoke against Hinduism.
They rejected Hindu festivals.

Looking at Hindus, who worshiped multiple gods in harmony, they spread false claims that Hindus fought over their gods.
But they never spoke about how outsiders spread religious hatred.

Politicians paid money to buy votes from Hindus who did not understand their own greatness.

They ridiculed Hindus who understood their heritage.
They used the converted Hindus themselves to spread hatred against Hindus.
Converted people, still carrying Hindu names, insulted Hindus.
Through them, corrupt leaders took control.

But now, the time for Hindus to awaken has come.
The era of corrupt rule is ending.

Even after 1,000 years of foreign rule, Hindus never disappeared.
They will not fall for the lies and violence that converted their ancestors.
One day, even the converted will realize the truth and return to Hinduism.

This is the destiny of Bharat.

Just as Hindus were misled into Buddhism and later returned to Hindu worship,
one day, as Bharat becomes prosperous again, even those who converted out of fear and money will return to Hinduism.
They will breathe the air of freedom once again.
Women will regain their independence.

They will once again worship the divine feminine—Durga, Mahalakshmi.

Other religions are man-made.
They struggle to sustain themselves through preaching and forced conversions.

But Hinduism—Sanatana Dharma—is eternal.
The Vedic deities themselves protect it.
That is why, even after 1,000 years of destruction, it has never disappeared.

Even today, Hindus number over 800 million in Bharat.
And not just in Bharat—
Hindus are found all over the world.

Like clouds covering the sun for a while, the truth may be hidden temporarily,
but when the clouds clear, even those who converted will return to their mother faith.

What Should Hindus Do?

  • Read the history and stories of your favorite deity.
  • Understand the meaning behind them.
  • Visit the temples of your gods and see their grandeur.
  • Help those who serve in temples.
  • Learn and speak about your heritage in your family.

If Hindus do this, they will never be converted.
Instead, those who have been forced into restricted religions will return to Hinduism.
They will once again breathe free air.

!

Saturday, 15 March 2025

சூத்திர பெண் யாரை மணக்கலாம்? வியாச மஹாபாரதம் அறிவோம்

சூத்திர பெண் யாரை மணக்கலாம்? வியாச மஹாபாரதம்

அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மர், பல தர்மங்களை யுதிஷ்டிரருக்கு சொன்னார்.


அப்படி சொல்லும் போது, வர்ண கலப்பு எப்பொழுது ஏற்படும் என்று சொல்கிறார்.


भार्याश्चतस्रो राजेन्द्र ब्राह्मणस्य स्वधर्मतः।

ब्राह्मणी क्षत्रिया वैश्या शूद्रा च भरतर्षभ।।

அரசனே! ப்ராம்மண பெண்கள், க்ஷத்ரிய பெண்கள், வைஸ்ய பெண்கள், சூத்திர பெண்கள் ஆசைப்பட்டால் பிராம்மண பையனை மணந்து கொள்ளலாம்.


இன்றைய காலப்படி, பிராம்மண வர்ண தொழிலான வக்கீல், மாநில மற்றும் மத்திய சட்டசபை மந்திரியாக இருக்கும் பெண்கள், க்ஷத்ரிய வர்ண தொழிலான நீதிபதி, ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் இருக்கும் பெண்கள், வைஸ்ய வர்ண தொழிலான வியாபாரம் செய்யும் முதலாளிபெண்கள், சூத்திர வர்ண தொழில் செய்யும் அதாவது மேல் சொன்னவர்களுக்கு வேலை செய்யும் பெண்கள், இவர்கள் ஆசைப்பட்டால் பிராம்மண பையனை மணந்து கொள்ளலாம்


राज्ञां तु क्षत्रिया वैश्या शूद्रा च भरतर्षभ।

वैश्यस्य वैश्या विहिता शूद्रा च भरतर्षभ।।

க்ஷத்ரிய பெண்கள், வைஸ்ய பெண்கள், சூத்திர பெண்கள் விரும்பினால் க்ஷத்ரிய பையனை மணந்து கொள்ளலாம்.

வைஸ்ய பெண்கள், சூத்திர பெண்கள் விரும்பினால் வைஸ்ய பையனை மணந்து கொள்ளலாம்


இன்றைய காலப்படி, க்ஷத்ரிய வர்ண தொழிலான நீதிபதி, ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் இருக்கும் பெண்கள், வைஸ்ய வர்ண தொழிலான வியாபாரம் செய்யும் முதலாளி பெண்கள், சூத்திர வர்ண தொழில் செய்யும் அதாவது மேல் சொன்னவர்களுக்கு வேலை செய்யும் பெண்கள், இவர்கள் ஆசைப்பட்டால் க்ஷத்ரிய பையனை மணந்து கொள்ளலாம்.

இன்றைய காலப்படி, வைஸ்ய வர்ண தொழிலான வியாபாரம் செய்யும் முதலாளி பெண்கள், சூத்திர வர்ண தொழில் செய்யும் அதாவது மேல் சொன்னவர்களுக்கு வேலை செய்யும் பெண்கள், இவர்கள் ஆசைப்பட்டால் வைஸ்ய பையனை மணந்து கொள்ளலாம்


शूद्रस्यैका स्मृता भार्या प्रतिलोमे तु सङ्करः।

शूद्रायास्तु नरश्रेष्ठ चत्वारः पतयः स्मृताः।।

சூத்திர பெண்கள் விரும்பினால் சூத்திர பையனை மணந்து கொள்ளலாம்.

மேல் வர்ணத்து பெண், கீழ் வர்ணத்திலுள்ள பையனை மணந்து கொண்டால், ஜாதி கலப்பு உண்டாகி விடும்.

சூத்திர பெண், நான்கு வர்ணத்தில் உள்ள எந்த ஆணையும் மணந்து கொள்ளலாம். 


இன்றைய காலப்படி, வைஸ்ய வர்ண தொழிலான வியாபாரம் செய்யும் முதலாளிப்பெண்கள், சூத்திர வர்ண தொழில் செய்யும் அதாவது மேல் சொன்னவர்களுக்கு வேலை செய்யும் ஆண் பையனை மணந்து கொண்டால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் கலப்பு ஜாதியை உருவாக்கி விடுவார்கள்.


वर्णोत्तमायास्तु पतिः सवर्णस्त्वेक एव सः।

द्वौ क्षत्रियाया विहितौ ब्राह्मणः क्षत्रियस्तथा।।

பிறக்கும் பிள்ளைகள் குணக்கலப்போடு பிறக்காமல், தெளிவான குணத்தோடு இருக்க, பெண்கள் தங்கள் வர்ணத்தில் இருக்கும் ஆண் பிள்ளையை மணந்து கொள்வதே சிறந்தது. அதாவது, பிராம்மண வர்ணத்தில் உள்ள பெண், பிராம்மண வர்ண பையனை மட்டுமே மணந்து கொள்வதால் குணம் கலந்த பிள்ளைகள் பிறக்க மாட்டார்கள்.


க்ஷத்ரிய வர்ணத்தில் உள்ள பெண், அந்த க்ஷத்ரிய வர்ண பையனையோ, பிராம்மண வர்ண பையனையோ மணந்து கொள்ளலாம்.


இன்றைய காலப்படி, பிராம்மண வர்ண தொழிலான வக்கீல், மாநில மற்றும் மத்திய சட்டசபை மந்திரியாக இருக்கும் பெண்கள், அதே போன்ற பிராம்மண வர்ண தொழிலான வக்கீல், மாநில மற்றும் மத்திய சட்டசபை மந்திரியாக இருக்கும் பையனை மணந்து கொள்ளலாம்.


இன்றைய காலப்படி, க்ஷத்ரிய வர்ண தொழிலான நீதிபதி, ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் இருக்கும் பெண்கள், அதே போன்ற க்ஷத்ரிய வர்ண தொழில் செய்யும் பையனையோ, பிராம்மண வர்ண தொழிலான வக்கீல், மாநில மற்றும் மத்திய சட்டசபை மந்திரியாக இருக்கும் பையனையோ மணந்து கொள்ளலாம்.


वैश्यायास्तु नरश्रेष्ठ विहिताः पतयस्त्रयः।

सवर्णः क्षत्रियश्चैव ब्राह्मणश्च विशाम्पते।।

வைசிய வர்ணத்தில் உள்ள பெண், அந்த வைசிய வர்ண பையனையோ, க்ஷத்ரிய வர்ண பையனையோ, பிராம்மண வர்ண பையனையோ மணந்து கொள்ளலாம்


இன்றைய காலப்படி, வைஸ்ய வர்ண தொழிலான வியாபாரம் செய்யும் முதலாளி பெண்கள், அதே போன்ற வைஸ்ய வர்ண தொழில் செய்யும் பையனையோ, க்ஷத்ரிய வர்ண தொழிலான நீதிபதி, ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் இருக்கும் பையனையோ, பிராம்மண வர்ண தொழிலான வக்கீல், மாநில மற்றும் மத்திய சட்டசபை மந்திரியாக இருக்கும் பையனையோ மணந்து கொள்ளலாம்.


இவ்வாறு பீஷ்மர் பெண்கள் யார் யாரை மணக்கலாம்? என்று விவரித்தார்.


அனுசாசன பர்வம் 53

Saturday, 1 March 2025

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து - திருக்குறள் 1

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து - திருக்குறள் 1

மனிதா! எப்படி எழுத்துக்களுக்கு எல்லாம் "அ" என்ற அகரம் அடிப்படையாக இருக்கிறதோ, அதுபோல நீ வாழும் உலகத்திற்கு அந்த ஆதியான முதல் பகவான் இருக்கிறார். அவரே உன் படைப்பிற்கு காரணம். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு


மனிதா! தூய அறிவுவடிவாக இருக்கும் அந்த இறைவனுடைய திருவடிகளை தொழாமல் நீ இருந்தால், நீ கற்ற கல்வியினால் உனக்கு என்ன பயன் கிடைக்க போகிறது? ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்


மனிதா! கவிழ்ந்த தாமரை மலர் போன்ற உன் நெஞ்சினில் வீற்றிருக்கும் இறைவனின் திருவடிகளை நீ இடைவிடாமல் நினைத்து வாழ்ந்தால், உனக்கு மோக்ஷமும், அனைத்து இன்பங்களும் கிடைத்து விடுமே. ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்


மனிதா! உலகையும் உன்னையும் படைத்த இறைவனுக்கு விருப்பு வெறுப்பு இல்லை. அந்த இறைவனின் திருவடிகளை நீ எப்பொழுதும் நினைத்து கொண்டிருந்தால், எப்போதும் எவ்விடத்திலும் உனக்கு துன்பம் இல்லை. இது நிச்சயம். ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல


மனிதா! நீ இறைவனிடம் உண்மையாக அன்பை, விரும்பி செலுத்தினால், நீ அறியாமல் செய்த பாவ புண்ணியங்கள் கூட கழிக்கப்பட்டு, உன்னை பாதிக்காமல் இருக்கும். இது நிச்சயம். ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

மனிதா!  தோல், வாய், கண், மூக்கு, செவி. இந்த ஐந்தின் மூலம் ஏற்படும் உணர்வுகளை நீ அடக்கி, இறைவன் எதிர்பார்க்கும் தூய்மையான ஒழுக்கநெறியில் நீ நின்றால், உனக்கு நிலையான நல்வாழ்வு கிடைக்குமே. ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்


மனிதா! அறிவு, ஆற்றல், குணம்.. இந்த மூன்றிலும் ஒப்பில்லாத இறைவனின் பாதங்களை நீ இடைவிடாது சிந்தித்தால், நீ மனக்கவலை சிறிதும் இன்றி வாழலாம். இறைவனின் திருவடியை நினைக்காமல் வாழ்ந்தால், உன் மனக்கவலை கூட உன்னை விட்டு எளிதில் நீங்காதே! ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது


மனிதா! தர்மம், அதாவ்து அறமே வடிவமாக விளங்கும் இறைவனின் திருவடியை நீ நினைக்காமல் போனால், நீ கடல் போன்ற பொருள் சேர்ப்பதிலும், இன்பத்தை தேடுவதிலுமே காலத்தை கடத்தி, இந்த கடல் போன்ற துன்ப கடலை கடக்க முடியாமல் தவிப்பாய்.  ஆதிபகவானின் திருவடியை பிடித்துக்கொள். இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது



மனிதா! மதிக்கத்தக்க குணங்களையுடைய பகவானின் திருவடியை வணங்காதவன் தலையில், கண் இருந்தும் குருடனே, காது இருந்தும் செவிடனே. புலன்கள் இருந்தும் அது பயனற்றவையே. ஆதிபகவானின் திருவடியை வணங்கு. இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை


மனிதா! பகவானுடைய திருவடியை நீ பற்றினால் மட்டுமே, மறுபிறப்பு என்ற பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது. ஆதிபகவானின் திருவடியை வணங்கு. இதுவே உன் அறம். இதுவே உன் தர்மம்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்


சமஸ்கிருதம் தர்மம், அர்த்தம், காமம் என்று சொல்கிறது.

அதையே, தமிழில் அறம், பொருள், இன்பம் என்று சொல்கிறோம்..


திருவள்ளுவர் இங்கு இறைவனை வணங்குவது நம் அறம், நம் தர்மம் என்று சொல்கிறார். 


அதிகாரம் 1, கடவுள் வாழ்த்து.