மீறி பேசினால், சம்சாரிகள் பேசும் பேச்சை கேட்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார்.
சம்சாரிகள் எப்படி பேசுவார்கள்?
தன்னை பற்றி நல்லதாக பேசுவார்கள்
பிறரை பற்றி தோஷம் சொல்வார்கள்.
தெய்வத்தை குறை சொல்வார்கள்.
ஹரி பக்தி செய்யும் பாகவதர்களை திட்டுவார்கள்.
வரம் ஹுதுவஹ ஜ்வாலா
பஞ்சராந்தர்வ்ய வஸ்திதி:
ந சௌரி சிந்தா விமுக ஜன சம்வாசவை ரசம்
वरम् हुतवह-ज्वाला पंजरंतरव्य वस्थिति:
न शौरी चिंता विमुक जन संवासवै रसम्
என்று சாஸ்திரம் சொல்கிறது.
வந்திருப்பது பாகவதன் என்றால், கதவை திறந்து வைத்திருக்கலாம்.
'சம்சாரிகள் வந்தால், அவர்கள் பேச்சிலிருந்து தப்பிக்க, நான்கு புறமும் நெருப்பு மூட்டியோ, அல்லது நெருப்பு போல வெயில் அடித்தாலும், கதவை மூடிக்கொண்டு புழுக்கத்தில் கூட இருக்கலாம்.
ஆனால் ஹரி பக்தி செய்யும் பாகவதன், ஒருக்காலும் சம்சாரிகளோடு பேச கூடாது'
என்று வேதாந்த தேசிகர் சொல்கிறார். (ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரம்)
சம்சாரிகளிடம் விலகியே இருக்க ஆசைப்படும் குலசேகர ஆழ்வார், 'சம்சாரிகளுக்கு என்னை கண்டால் பைத்தியம் போல தெரிகிறது, எனக்கு அவர்களை பார்த்தால் பைத்தியமாக தெரிகிறது' என்று பாடுகிறார்.
பேயரே எனக்கு யாவரும்
யானும் ஓர் பேயனே
எவர்க்கும் இது பேசி
என் ஆயனே அரங்கா!
என்று அழைக்கின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
- பெருமாள் திருமொழி
என்னை.பொறுத்தியவரையில் ஹரிபக்தி செய்யாத சம்சாரிகளை கண்டால், பைத்தியம் போல தெரிகிறது (பேயரே எனக்கு யாவரும்).
எப்பொழுதும் யாரை பார்த்தாலும் பெருமாளை பற்றியே பேசி (எவர்க்கும் இது பேசி) கொண்டு, நானும் ஒரு பைத்தியம் போல (யானும் ஓர் பேயனே) இருக்கிறேன்.
"என் கண்ணா! அரங்கா!" (என் ஆயனே அரங்கா!) என்று கதறி அழைக்கின்றேன். ஒரு பைத்தியம் போல எம்பெருமானே கதி என்று சரணடைந்து கிடக்கிறேன் (பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே),
சட்டமன்றத்தில், பாராளுமன்றத்தில், இன்று இந்தியசட்டத்தின் (சாஸ்திரம்) படி ஆட்சியை வழிநடத்தும் MLA, MPக்கள் என்ற இன்றைய பிராம்மண வர்ணத்தார் (லௌகீக மற்றும் வைதீக பிராம்மண ஜாதியை இங்கு சொல்லவில்லை) சொல்லப்பட்ட அறிவுரை, ஒழுக்கம். அன்று பிராம்மண வர்ணத்தார் எப்படி வாழ்ந்தார்கள்? தெரிந்து கொள்வோம், மஹாபாரதம்.
பாரத போர் முடிந்த பிறகு, கௌரவர்கள் பக்கம் இருந்த அனைவரும் மடிந்தார்கள்.
பாண்டவர்கள் பக்கமும் அபிமன்யு, மற்றும் திரௌபதியின் 5 பிள்ளைகள் உட்பட அனைவரும் மடிந்து விட்டார்கள்.
அனைவருக்கும் தகனம் செய்து, கங்கையில் தீர்த்த தர்ப்பணம் தானே செய்தார் யுதிஷ்டிரர்.
அந்த சமயத்தில், கர்ணன் தனது மூத்த சகோதரன் என்ற செய்தியையும் குந்திதேவி மூலமாக கேட்டயுதிஷ்டிரர், மீள முடியாத சோகத்தில் மூழ்கினார்.
நிலத்திற்காக குலத்தை அழித்தோமே! உலகத்தில் இருந்த க்ஷத்ரிய அரசர்கள் எல்லோரும் அழிந்து விட்டனரே! பிள்ளைகளும் போய் விட்டனரே! என்றதும்,
'இனி ராஜ்யம் எனக்கு தேவையில்லை. ஒரு மரத்தடியில் போய் அமர்ந்து, உடல் சம்பந்தமாகவோ, மனம் சம்பந்தமாகவோ இனி எந்த ஒரு முயற்சியும் செய்யாமல், விருப்பும் இல்லாமல், வெறுப்பும் இல்லாமல், வனம் சென்று வாழ போகிறேன்'
என்று சொல்லி விட்டார்.
'யுதிஷ்டிரர் சந்நியாசியாக செல்ல கூடாது' என்று, அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் போன்றோர் கர்மாவே சிறந்த தர்மம், க்ருஹஸ்த தர்மமே சிறந்தது என்று சொல்லி சமாதானம் செய்ய முயற்சித்தனர்.
அந்த சமயம்,
திரௌபதியும், பிறகு மீண்டும் அர்ஜுனனும், வ்யாசரும் "தண்ட நீதியே' சிறந்தது என்று பேசினார்கள்.
அப்பொழுது,
அரசனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட தண்ட நீதியை, எப்படி இரண்டு ப்ராம்மணர்கள் மதித்தார்கள்?
அவர்களுடைய தவவாழ்க்கை எப்படி தூய்மையாக இருந்தது? என்று சொல்லதொடங்கினார்..
अत्राप्य उदाहरन्तीमम् इतिहासं पुरातनम् |
शङ्खः च लिखितः चास्तां भ्रातरौ संयत व्रतौ ||
- vyasa mahabharata
புராண காலத்தில் (ஒரு சமயம்), கடுமையான தவசீலர்களான சங்கர் மற்றும் லிகிதர் என்ற சகோதரர்கள் வாழ்ந்தார்கள்.
तयॊः आवसथाव् आस्तां रमणीयौ पृथक् पृथक् |
नित्यपुष्पफलैः वृक्षैरः उपेतौ बाहुदाम् अनु ||
- vyasa mahabharata
அவர்களுக்கு பாஹுதா என்ற நதிக்கரையில் பூக்களும், பழங்களும் நிறைந்து இருக்கும் இரு ஆஸ்ரமங்கள் தனித்தனியே இருந்தன.
ஒரு சமயம் லிகிதர், தன்னுடைய சகோதரர் சங்கர் ஆஸ்ரமத்துக்கு வந்தார். அப்பொழுது சங்கர் ஆஸ்ரமத்தை விட்டு வெளியே சென்று இருந்தார்.
सॊ ऽभिगम्याश्रमं भ्रातुः शङ्खस्य लिखितः तदा |
फलानि शातयाम् आस सम्यक् परिणतान्य उत ||
- vyasa mahabharata
தன்னுடைய சகோதரர் சங்கர் ஆஸ்ரமத்துக்குள் உலவி கொண்டிருந்த லிகிதர், அங்கு நன்றாக பழுத்திருந்த ஒரு பழத்தை பறித்தார்.
तान्य उपादाय विस्रब्धॊ भक्षयाम् आस स द्विजः |
तस्मिंश् च भक्षयत्य एव शङ्खॊ ऽपय् आश्रमम् आगमत् ||
- vyasa mahabharata
அருகில் யாரும் இல்லாத நிலையில், அந்த பழத்தை சாப்பிட்டார். அவர் சாப்பிட்டு கொண்டிருக்கும் சமயத்தில், சங்கர் வந்து விட்டார்.
भक्षयन्तं तु तं दृष्ट्वा शङ्खॊ भ्रातरम अब्रवीत् |
कुतः फलान्य अवाप्तानि हेतुना केन खादसि ||
- vyasa mahabharata
சங்கர், லிகிதரை பார்த்து, "இந்த பழங்கள் எங்கிருந்து கிடைத்தது? ஏன் இதை சாப்பிட்டாய்?" என்று கேட்டார்.
सॊ ऽब्रवीद् भ्रातरं ज्येष्ठम् उपस्पृश्याभिवाद्य च |
इत एव गृहीतानि मयेति प्रहसन्न इव ||
- vyasa mahabharata
தனது சகோதரர் வந்ததை பார்த்த லிகிதர் அருகில் சென்று நமஸ்காரம் செய்தார். "அண்ணா! இங்கிருந்து தான் இந்த பழங்களை எடுத்துக்கொண்டேன்" என்று சகஜமாக சிரித்து கொண்டே சொன்னார்.
तम् अब्रवीत् तदा शङ्खः तीव्रकॊप समन्वितः |
स्तेयं त्वया कृतम् इदं फलान्य आददता स्वयम् |
गच्छ राजानम् आसाद्य स्वकर्म प्रथयस्व वै |
अदत्तादानम् एवेदं कृतं पार्थिव सत्तम |
स्तेनं मां त्वं विदित्वा च स्वधर्मम अनुपालय |
शीघ्रं धारय चौरस्य मम दण्डं नराधिप ||
- vyasa mahabharata
கடுமையான கோபத்துடன் சங்கர் "நீயாகவே பழங்களை எடுத்த காரணத்தால், இந்த காரியம் திருட்டாகும். ஆகையால் நீ அரசனிடம் சென்று 'அரசே! கொடுக்காத பழத்தை எடுத்ததால், நான் திருடனாகிறேன். என்னை திருடன் என்ற ரீதியில் பார்த்து, எனக்கு தகுந்த தண்டனையை வழங்கி, உன் தண்ட நீதியை காப்பாற்று' என்று தெரிவித்து கொள்" என்றார்.
इत्य उक्तस् तस्य वचनात् सुद्युम्नं वसुधाधिपम् |
अभ्यगच्छन् महाबाहॊ लिखितः संशितव्रतः ||
- vyasa mahabharata
வாழ்க்கையை நெறியோடு வாழ விரும்பும் லிகிதர், சகோதரர் சொன்னது தர்மமே என்று ஏற்று, அப்பொழுது தர்மப்படி அரசாட்சி செய்து கொண்டிருந்த ஸுத்யும்னரிடம் சென்றார்.
உடனே ஸுத்யும்னரை பார்த்து, "மகாராஜன்! சகோதரர் கொடுக்காத பழத்தை, நானே எடுத்து சாப்பிட்டு விட்டேன். அந்த குற்றத்துக்காக என்னை தாமதமின்றி தண்டிக்க வேண்டும்" என்றார்.
प्रमाणं चेन मतॊ राजा भवतॊ दण्डधारणे |
अनुज्ञायाम् अपि तथा हेतुः स्याद् ब्राह्मणर्षभ |
स भवान् अभ्यनुज्ञातः शुचि कर्मा महाव्रतः |
ब्रूहि कामान् अतॊ ऽन्यांस तवं करिष्यामि हि ते वचः ||
- vyasa mahabharata
இதை கேட்ட அரசர் ஸுத்யும்னர், "ப்ராம்மணர்களில் உத்தமரே! ஒருவனுக்கு 'தண்டனை விதிப்பது அரசன் கடமை' என்பது உண்மையே என்றாலும், 'அனுமதி கொடுப்பதும்' அரசனுக்கு உரியதே! ஆகையால், கடுமையான விரதத்தை அனுஷ்டிக்கும் நீங்கள் குற்றமற்றவர் என்று அனுமதி அளிக்கிறேன். ஆகையால், நீங்கள் வேண்டியதை கேளுங்கள். நான் உங்கள் இஷ்டம் போல செய்கிறேன்" என்றார்.
छन्द्यमानॊ ऽपि ब्रह्मर्षिः पार्थिवेन महात्मना |
नान्यं वै वरयाम् आस तस्माद् दण्डाद् ऋते वरम् |
ततः स पृथिवीपालॊ लिखितस्य महात्मनः |
करौ प्रच्छेदयाम् आस धृतदण्डॊ जगाम सः ||
- vyasa mahabharata
இப்படி மஹாத்மாவான அரசர் சொல்லியும், தனக்கு 'தண்டனையை தவிர வேறு ஏதும் வேண்டாம்' என்று சொல்லிவிட்டார் லிகிதர்.
இப்படி சொன்னதால், உலகில் தர்மத்தை நிலைநாட்ட வேண்டிய அரசனாக இருந்து, திருட்டுத்தனத்துக்கு உரிய தண்டனையாக லிகிதரின் இரு கையையும் வெட்டி தண்டனை கொடுத்து விட்டார்.
स गत्वा भ्रातरं शङ्खम् आर्तरूपॊ ऽब्रवीद् इदम् |
धृतदण्डस्य दुर्भुद्धे: भगवन् क्षन्तुम अर्हसि ||
- vyasa mahabharata
கை அறுபட்ட நிலையில், தன் சகோதரரான சங்கரை பார்க்க சென்றார். அவரிடம் 'எனது குற்றத்துக்காக தண்டனை பெற்றேன். என் புத்தி குறைவை நீங்கள் மன்னிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தார்.
न कुप्ये तव धर्मज्ञ न च दूषयसे मम |
धर्मॊ तु ते व्यतिक्रान्तः ततः ते निष्कृतिः कृता |
स गत्वा बाहुदां शीघ्रं तर्पयस्व यथाविधि |
देवान् पितॄन ऋषींश् चैव मा चाधर्मे मनॊ कृथाः ||
- vyasa mahabharata
சங்கர் "தர்மம் தெரிந்தவனே! உன்னிடத்தில் எனக்கு ஒரு கோபமும் இல்லை. நீ ஒரு குற்றமும் இப்பொழுது செய்யவில்லை. நீ தர்மத்தை மீறியதால், அந்த குற்றத்துக்கு ப்ராயச்சித்தம் தேவைப்பட்டது. நீ உடனேயே பாஹுதை என்ற நதிக்கரைக்கு சென்று, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் ரிஷிகளுக்கும் தர்மப்படி தர்ப்பணம் செய். இனி அதர்மத்தில் மனதை செலுத்தாதே!" என்றார்.
तस्य तद् वचनं श्रुत्वा शङ्खस्य लिखितः तदा |
अवगाह्यापगां पुण्याम् उदकार्धं प्रचक्रमे |
प्रादुरास्तां ततः तस्य करौ जलज संनिभौ |
ततः स विस्मितॊ भ्रातुः दर्शयाम आस तौ करौ ||
- vyasa mahabharata
இவ்வாறு சங்கர் சொன்னதும், அவர் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, லிகிதர் அந்த நதியில் சென்று நீராடி, தர்ப்பணம் செய்ய இறங்கினார்.
அப்பொழுது, தண்ணீரில் தாமரை மலர்வது போல, அவரின் இரு கைகளும் உண்டாகி விட்டன.
ततः तम् अब्रवीच छङ्खः तपसेदं कृतं मया |
मा च ते ऽत्र वि शङ्का भूद् दैवम् एव विधीयते ||
- vyasa mahabharata
உடனே சங்கர், "இது என் தபோ பலத்தால் செய்யப்பட்டது. உனக்கு சந்தேகம் வேண்டாம். அதிருஷ்டம் (விதி) இப்படியாக உள்ளது" என்றார்.
किं नु नाहं त्वया पूतः पूर्वम् एव महाद्युते |
यस्य ते तपसॊ वीर्यम् ईदृशं द्विजसत्तम ||
- vyasa mahabharata
உடனே லிகிதர், "மஹாதேஜஸ்வியே ! உமது தவத்துக்கு இப்படி ஒரு சக்தி இருக்குமானால், என்னை அப்பொழுதே பரிசுத்தமாக ஆக்கி இருக்கலாமே?" என்று கேட்டார்.
एवम् एतन् मया कार्यं नाहं दण्डधरस तव |
स च पूतॊ नरपतिः त्वं चापि पितृभिः सह ||
- vyasa mahabharata
சங்கர், "என்னால் உன்னை சுத்தனாக ஆக்கி இருக்கமுடியும் என்றாலும், தண்டனை தரும் அதிகாரம் எனக்கு இல்லையே. மக்களின் அரசனுக்கு தானே பாவத்திற்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தண்டனை கொடுத்ததால், அந்த அரசரும் தன்னுடைய தண்ட நீதியை காப்பாற்றினார். செய்த தவறுக்கு தண்டனையை ஏற்றதால், நீயும் பரிசுத்தமானாய்." என்று சொன்னார்.
स राजा पाण्डवश्रेष्ठ श्रेष्ठॊ वै तेन कर्मणा |
प्राप्तवान परमां सिद्धिं दक्षः प्राचेतसॊ यथा ||
- vyasa mahabharata
பாண்டவர்களில் உத்தமனே! அந்த உத்தம அரசரான ஸுத்யும்னர் தண்ட நீதியை பரிபாலனம் செய்ததால், ப்ராசேதஸ், தக்ஷனை போல உயர்வான ஸித்தி பெற்றார்.
एष धर्मः क्षत्रियाणां प्रजानां परिपालनम् |
उत्पथे ऽस्मिन् महाराज मा च शॊके मनॊ कृथाः ||
- vyasa mahabharata
"மக்கள் தீய வழியில் செல்லாமல் பாதுகாப்பது" அரசனின் பெரிய தர்மமாகும்.
மகாராஜன்! சோகத்தை மனதில் அனுமதிக்காதீர்.
भ्रातुः अस्य हितं वाक्यं शृणु धर्मज्ञ सत्तम |
दण्ड एव हि राजेन्द्र क्षत्रधर्मॊ न मुण्डन ||
- vyasa mahabharata
தர்மம் தெரிந்த உத்தமனே! உனது தம்பியான அர்ஜுனன் சொன்ன "தண்டநீதியை" கேள். தர்மத்தை காக்க அரசாட்சி செலுத்துவதே, க்ஷத்ரிய அரசனின் தர்மம் (கடமை). சந்யாசிகளுக்கு உரியது சந்நியாச தர்மம். சந்நியாச தர்மம் க்ஷத்ரியனான உனது தர்மம் அன்று" என்று கூறினார்.
பாரத போர் முடிந்த பிறகு, கௌரவர்கள் பக்கம் இருந்த அனைவரும் மடிந்தார்கள்.
பாண்டவர்கள் பக்கமும் அபிமன்யு, மற்றும் திரௌபதியின் 5 பிள்ளைகள் உட்பட அனைவரும் மடிந்து விட்டார்கள்.
அனைவருக்கும் தகனம் செய்து, கங்கையில் தீர்த்த தர்ப்பணம் தானே செய்தார் யுதிஷ்டிரர்.
அந்த சமயத்தில், கர்ணன் தனது மூத்த சகோதரன் என்ற செய்தியையும் குந்திதேவி மூலமாக கேட்ட யுதிஷ்டிரர், மீள முடியாத சோகத்தில் மூழ்கினார்.
நிலத்திற்க்காக குலத்தை அழித்தோமே! உலகத்தில் இருந்த க்ஷத்ரிய அரசர்கள் எல்லோரும் அழிந்து விட்டனரே! பிள்ளைகளும் போய் விட்டனரே! என்றதும்,
'இனி ராஜ்யம் எனக்கு தேவையில்லை. ஒரு மரத்தடியில் போய் அமர்ந்து, உடல் சம்பந்தமாகவோ, மனம் சம்பந்தமாகவோ இனி எந்த ஒரு முயற்சியும் செய்யாமல், விருப்பும் இல்லாமல், வெறுப்பும் இல்லாமல், வனம் சென்று வாழ போகிறேன்'
என்று சொல்லி விட்டார்.
யுதிஷ்டிரர் சந்நியாசியாக செல்ல கூடாது என்று, அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் போன்றோர் கர்மாவே சிறந்த தர்மம், க்ருஹஸ்த தர்மமே சிறந்தது என்று சொல்லி சமாதானம் செய்ய முயற்சித்தனர்.
அந்த சமயம், திரௌபதியும், "தண்ட நீதியே' சிறந்தது என்று பேசினாள்.
இப்படி பலர் சொன்ன பிறகு, வியாசர் யுதிஷ்டிரரிடம் உபதேஸிக்கிறார்.
तपॊ यज्ञ: तथा विद्या भैक्षम् इन्द्रिय निग्रहः |
ध्यानम् एकान्तशीलत्वं तुष्टिर दानं च शक्तितः |
ब्राह्मणानां महाराज चेष्टाः संसिद्धि कारिकाः ||
- வ்யாஸ மஹாபாரதம் (Vyasa Mahabharata)
மஹாராஜனே! தவம், யக்ஞம், ஆத்மாவை பற்றிய அறிவு, உயிர் தக்க வைக்க பிக்ஷை வாழ்க்கை, புலன் அடக்கம், தியானம், தனிமையை விரும்புவது, ஆத்ம சுகத்தில் இருப்பது, கிடைத்ததில் திருப்தி, தன் சக்திக்கு தகுந்த தானம் செய்வது,
இந்த தர்மங்கள் அனைத்தும், ப்ராம்மணர்களுக்கு ப்ராம்மணத்துவம் 'ஸித்தி' அடைவதற்காக விதிக்கப்பட்டவை.
क्षत्रियाणां च वक्ष्यामि तवापि विदितं पुनः |
यज्ञॊ विद्या समुत्थानम् असंतॊषः श्रियं प्रति |
दण्डधारणम् अत्युग्रं प्रजानां परिपालनम् |
वेद ज्ञानं तथा कृत्स्नं तपॊ सुचरितं तथा |
द्रविणॊपार्जनं भूरि पात्रेषु प्रतिपादनम् |
एतानि राज्ञां कर्माणि सुकृतानि विशां पते |
इमं लॊकम् अमुं लॊकं साधयन्तीति नः श्रुतम ||
- வ்யாஸ மஹாபாரதம் (Vyasa Mahabharata)
க்ஷத்ரியர்களுக்கு விதிக்கப்பட்ட தர்மம் உனக்கு தெரிந்தாலும், மீண்டும் சொல்கிறேன்.
யாகம் செய்வதிலும், உலகம் மற்றும் ஆத்மா பற்றிய அறிவு, பொருள் சேர்ப்பதில் திருப்தி இல்லாமலும், புகழில் ஆசையும், ஆட்சியில் பாராபட்சம் இல்லாமல் தண்ட நீதியோடு நிர்வாகமும், அனைத்து உயிர்களையும் காப்பதும், வேதனையை அறிவதும், தவமும், ஒழுக்கமான தனிமனித வாழ்க்கையும், பொருள் ஈட்டுவதில் திறனும், அந்த பொருளை நல்ல தர்மங்களுக்கு கொடுப்பதும், அரசர்களுக்கு விதிக்கப்பட்ட தர்மம்.
இப்படி க்ஷத்திரியன் க்ஷத்ரியத்துவம் அடையும் போது, இவ்வுலகில் மட்டுமல்ல, மேல் உலகிலும் புகழோடு இருப்பான்.
தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்? ஆபஸ்தம்ப ரிஷி சொல்லும் சூத்திரத்தை அறிவோம்..
तिष्ठन्न् आचामेत् प्रह्वो वा |
आसीनः त्रि: आचामेद् धृदयड़गमाभिः अद्भिः ||
- ஆபஸ்தம்ப சூத்ரம்
tiṣṭhann ācāmet prahvo vā |
āsīnas trir ācāmed-dhṛdayaṅgamābhir adbhiḥ ||
- Apastamba sutra (formula)
ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்...
நின்று கொண்டே தண்ணீர் குடிக்க கூடாது.
அமர்ந்து கொண்டு, மூன்று முறை, கையில் பட்டாணி அளவுக்கு எடுத்து உட்கொண்ட பிறகு, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
Apastamba rishi says...
One should not drink water while standing.
One must sit and sip water [for purification] thrice in hand and then drink remaining.
Swayambu Manu (creator of human) elaborate little further on how people in 4 varna should drink..
ஸ்வாயம்பு மனு (மனித குலத்தின் முதல் மனிதர்), மூன்று முறை தண்ணீர் கையில் விட்டு குடிக்கும் போது, 4 வர்ணத்தில் (ஜாதியை சொல்லவில்லை) இருப்பவர்கள் எப்படி குடிக்க வேண்டும் என்று சொல்கிறார்.
பொதுவாக, தூய்மையான இடத்தில் அமர்ந்து கொண்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்.
கையில் விட்டு கொள்ளும் நீர், நுரைத்து இருக்க கூடாது. ஒரு பட்டாணி அளவுக்கு எடுத்து கொண்டு குடிக்க வேண்டும்.
One must sit in a pure place, and should sip water thrice from his hand, water which is free from bubbles and foam, and which he has attentively regarded, in such a quantity as would cover a Māśa bean.
The water sipped by a Brahman (today MLA and MPs in assembly who directs other 3 on right and wrong) should be felt reaching his heart.
பிராம்மண வர்ணத்தில் இருப்பவர்கள் (இன்று, சட்டசபையில் மற்ற 3 வர்ணத்தில் இருப்பவர்களுக்கு எது தர்மம்/அதர்மம் என்று வழிகாட்ட, மந்திரிகள் என்ற பெயரில் பிராம்மண வர்ணத்தில் உள்ளனர்) நீரை கையில் எடுத்து மூன்று முறை குடிக்கும் போது, நெஞ்சு வரை போய் சேர்ந்ததை உணரும் படியாக அருந்த வேண்டும்.
The water sipped by a Kshatriya (protection force, army, police) should be felt reaching his throat.
க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவர்கள் (இன்று, போலீஸ், ராணுவம் என்ற பெயரில் க்ஷத்ரிய வர்ணத்தில் உள்ளனர்) நீரை கையில் எடுத்து மூன்று முறை குடிக்கும் போது, கழுத்து வரை போய் சேர்ந்ததை உணரும் படியாக அருந்த வேண்டும்.
The water sipped by a Vaiśya (employer) should be felt reaching his stomach.
வைசிய வர்ணத்தில் இருப்பவர்கள் (இன்று, சுயதொழில், வியாபாரம் என்ற பெயரில் வைசிய வர்ணத்தில் உள்ளனர்) நீரை கையில் எடுத்து மூன்று முறை குடிக்கும் போது, வயிறு வரை போய் சேர்ந்ததை உணரும் படியாக அருந்த வேண்டும்.
The water sipped by a sudra (employee) should be felt reaching his tongue.
சூத்திர வர்ணத்தில் இருப்பவர்கள் (இன்று, மற்றவர்களுக்கு வேலை செய்பவர்கள் (employee) என்ற பெயரில் சூத்திர வர்ணத்தில் உள்ளனர்) நீரை கையில் எடுத்து மூன்று முறை குடிக்கும் போது, நாக்கு வரை போய் சேர்ந்ததை உணரும் படியாக அருந்த வேண்டும்.
Million of years ago, veda talks about this science of drinking water.
Today,
Science is recommending everyone to drink water in sitting position rather standing position.
If every one of readers, spend time on reading all Sutra (formula) given by apastamba, manu, narada, etc many research and development and rediscovery can be made.
Hail and be proud of Vedic Dharma @ Sanathana Dharma @ Hindu Dharma.
போர் முடிந்த பிறகு, 100 பிள்ளைகளை இழந்த த்ருதராஷ்டிரன், அருகில் வந்த பீமனை ஆத்திரத்தில் கொல்ல நினைத்தான்.
வாசுதேவ கிருஷ்ணர், த்ருதராஷ்டிரன் மனநிலை அறிந்து, இரும்பினால் செய்யப்பட்ட பீமனின் சிலையை அருகில் நிறுத்த, அதை இறுக கட்டி உடைத்து விட்டான்.
கிருஷ்ணர், பிறகு விதுரர் தர்ம உபதேசம் செய்து சமாதானம் செய்தனர்.
காந்தாரிக்கு திவ்ய ஞானம் கொடுத்தார் வியாசர்.
காந்தாரி, போர்க்களம் சென்று இறந்து கிடக்கும் தன் பிள்ளைகளையும், பாண்டவர் பக்கம் இறந்த அபிமன்யு போன்றவர்களையும் பார்த்து புலம்பினாள்.
கோபத்தில், 'யாதவ வீரர்கள் அடித்து கொண்டு மடிவார்கள், குல பெண்கள் கதறி அழுவார்கள். கிருஷ்ணா! வனத்தில் அனாதை போன்று சென்று மறைவாய்', என்று சபித்தாள்.
ஸ்ரீகிருஷ்ணர் சமாதானம் செய்தார்.
பிறகு,
அனைவருக்கும் தகனம் முறையாக செய்து, கங்கை கரையில் ஜல தர்ப்பணம் செய்ய கிளம்பினார் யுதிஷ்டிரர்.
அனைவருக்கும் தர்ப்பணம் செய்த பிறகு, குந்தி தனது மகனான கர்ணனுக்கும் தர்ப்பணம் செய்ய சொன்னாள்.
'கர்ணன் தன்னுடைய மூத்த சகோதரன்' என்று தெரிந்ததும் இதுவரை இருந்த துக்கத்தை காட்டிலும், மீள முடியாத துக்கத்தில் மூழ்கி விட்டார் யுதிஷ்டிரர்.
நாரதர், கர்ணனை பற்றியும், அவன் பெற்ற பல சாபத்தை பற்றியும் சொல்லி, 'துக்கப்பட வேண்டாம்' என்று சொன்னார்.
அப்பொழுதும், சமாதானம் அடைய முடியாமல் இருந்த யுதிஷ்டிரரிடம் குந்திதேவி மீண்டும் வந்து சமாதானம் செய்ய முயற்சித்தாள்.
"நானும், சூரிய தேவனும் கர்ணனிடம் உள்ள ஒற்றுமையை கண்டும், உன்னிடம் சொல்ல சக்தி இல்லாமல் இருந்தோம். தர்மத்தை காப்பதில் சிறந்த கர்ணன், உங்களிடம் விரோதம் பாராட்ட ஆரம்பித்த பிறகு, நானும் அவனை பற்றி உன்னிடம் சொல்லாமல் இருந்து விட்டேன்' என்று சொன்னாள்.
தர்ம புத்தி உள்ளவரும், கண்ணீரால் நிரம்பிய கண்களை உடையவரும், மிக்க தேஜஸ் உடையவருமான யுதிஷ்டிரர், தாயார் இப்படி சொன்னதும், சோகத்தின் மிகுதியால்,
"ரகசியத்தை மூடி வைத்து கொண்டதால் உன்னால் இப்பொழுது நாங்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறோம்" என்று சொல்லி, மேலும் துக்கம் தாளாமல்,
"எல்லா உலகங்களிலும் இன்று முதல் பெண்களிடம் ரகசியம் தங்காமல் போகட்டும்" என்று சாபமிட்டார்.