Followers

Search Here...

Thursday, 16 September 2021

வயோதிகம் (முதுமை) சாபமா?

வயோதிகம் நமக்கு கொடுக்கப்பட்ட சாபமா?

பகவான் நம்மை 'குழந்தையாக' பிறக்க செய்கிறான்.

விளையாடி மகிழ்கிறோம். 

"பகவான் கருணை உள்ளவன்" என்று சொல்கிறோம்.

பகவான் நமக்கு பிறகு நல்ல 'இளமையான உடல், அழகு' கொடுக்கிறார்.

அங்கும் இங்கும் ஓடி பொருள் சேர்க்கிறோம். 

கல்யாணம் செய்து கொண்டு, காமத்தில் ஈடுபட்டு குழந்தை பெற்று, குடும்பமாக மகிழ்கிறோம்.

"பகவான் கருணை உள்ளவன்" என்று சொல்கிறோம்.





பிறகு, பகவான் நமக்கு உடலை இளைக்க செய்து, உடலால் எதையும் செய்ய முடியாதவனாக ஆக்கி 'வயோதிகம்' கொடுக்கிறார்.

ஓடி ஆட முடியாமல், காமத்திற்கு உடல் ஒத்துழைக்காமல், உடல் சோர்ந்து விட, குடும்பத்தில் உள்ளவர்களும் நம் தேவையை அதிகம் பொருட்படுத்தாமல் இருக்க, 'இந்த நிலை வந்ததே!' என்று புலம்பி, "பகவான் கருணை இல்லாதவன்" என்று சொல்லி விடுறோம்.

"வார்தக்யே முனி வர்தீனாம்" என்று மஹாகவி காளிதாசன் 'பகவானை தியானம் செய்யத்தான், வ்யோதிகமே வருகிறது" என்று சொல்கிறார்.

பகவான் என்ன நினைத்து நமக்கு இந்த வயோதிகம் கொடுக்கிறார்?

"போதும் நீ மற்றவருக்காக, உலகத்துக்காக உழைத்தது.  போதும் உனக்கு இந்த உலக ஆசைகள். 

இனியாவது என்னோடு வந்து விட கடு முயற்சி செய்.

என் கோவிலே கதியாக இரு. என்னை பற்றி பஜனையோ, சத்சங்கமோ நடந்தால், அங்கு சென்று கேள்.

இளமை காலத்தில் கோவிலுக்கு சென்றால், சத்சங்கத்தில் ஈடுபட்டால் "வீட்டில் வேலை இல்லையா? குடும்பம் இல்லையா?" என்று கேள்வி கேட்டு கொண்டே இருப்பார்கள்.

இதோ தானாக கிடைத்தது வயோதிகம்.  

இனி நீ கோவிலுக்கு போனாலும், "ஏன் கோவிலுக்கு போனாய்?" என்று யாரும் கேட்க மாட்டார்கள். "எப்படியோ நிம்மதியாக இருந்தால் சரி. நம்மை தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி" என்று தான் நினைப்பார்கள். 

பாகவதம், பகவத் கீதை, ராமாயணம், 4000 பாசுரங்கள், சிவபக்தனாக இருந்தால் பதிகங்கள், கந்த புராணம், முக்தி தரும் வராஹ அவதாரம் படித்து கொண்டே இருக்கலாமே! நடக்க முடிந்தால், கோவில் வாசலில் சென்று அமர்ந்து, பகவத்தியானம் செய்யலாமே! 




அருமையாக வயோதிகம் தானாக கிடைத்தும், மீண்டும் உலக விஷயத்தில் செலவு செய்வானா ஒருவன்?

இளமை காலம் வரை தெய்வத்துக்கு நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலையில், தானாக வரும் வயோதிகம் வரமல்லவா?"

வயோதிகம் "பகவத் பக்தி செய்ய தானாக கிடைத்த வரம்

என்று உணர வேண்டும். 


திருமழிசை ஆழ்வாரின் அணுகிரஹத்தால், அரசனின் பட்டத்துமஹிஷிக்கு இளமை திரும்பிவிட்டது. 

காஞ்சியை ஆண்டு வந்த அரசன், சிஷ்யரான கணிகண்ணனை அழைத்து, 'தனக்கும் இளமை கிடைக்க வேண்டும்" என்று கேட்க, இப்படி ஒரு ஞான உபதேசம் செய்தார்.

"இளமை தர முடியாது என்றால் காஞ்சியில் இருக்க கூடாது" என்று அரசன் சொல்ல, 

கணிகண்ணன் தன் குருவிடம் சொல்லிவிட்டு கிளம்ப, 'தானும் வருகிறேன்' என்று திருமழிசை ஆழ்வாரும் கிளம்ப, வேகாசேது என்ற பெருமாள் திருவெஃகாவில்  பள்ளி கொண்டு இருக்க, பாம்பு பையை சுருட்டி கொண்டு என்னோடு வாருங்கள் என்று ஆழ்வார் அழைக்க, பெருமாள் கல் ரூபத்தோடு எழுந்து ஆழ்வாரோடு நடக்க ஆரம்பித்தார்.

காஞ்சியை விட்டு, சுமார் 4 km தள்ளி இருக்கும் ஓரிருக்கை என்ற இடம் வர, சாயங்காலம் ஆனதால், அந்த இரவை அங்கு கழிக்க ஆழ்வார் நினைக்க, பெருமாள் அங்கேயே படுத்து விட்டார். 

ஒரு நாள் அங்கு பெருமாள் தங்கியதால், இந்த ஊருக்கு "ஓரிருக்கை" என்ற பெயர் ஏற்பட்டது.

பெருமாளே சென்று விட்டதால், காஞ்சியை விட்டு சகல தேவதைகளும் கிளம்பி விட, திடீரென்று காஞ்சியே சூன்யமாக காட்சி அளித்தது.

அரசன் 'ஆழ்வாருக்கு செய்த அபசாரம் தான் காரணம்' என்று உணர்ந்து, அந்த இரவே ஓடி சென்று ஆழ்வாரை மீண்டும் காஞ்சி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார் அரசன்.




துவேஷம் இல்லாத ஆழ்வார், "கிளம்பு என்று சொன்னதால் கிளம்பினோம். வர சொன்னால் வருகிறோம்" என்று கிளம்ப, கனிகண்ணனோடு பெருமாளும் பின் தொடர்ந்து வந்து மீண்டும் காஞ்சிக்கு வந்து படுத்துக்கொண்டார்.

குரு சொன்னால், சிஷ்யன் கேட்க வேண்டும்.

பகவான் சொன்னால், நாம் அனைவரும் கேட்க வேண்டும்.

அது மட்டுமல்ல, 

"உத்தம பக்தன் எது சொன்னாலும், மறுக்காமல் பகவானும் கேட்பார்" என்று காட்ட, பெருமாள் இப்படி ஒரு லீலை செய்தார். 

வேகாசேது என்ற பெருமாள், அன்றிலிருந்து யதோக்தகாரி என்றும், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்றும் பெயர் பெற்றார்.

Friday, 10 September 2021

இந்தியாவுக்குள் கால் வைக்கும் முன், வெளிநாட்டவர்கள் சமுதாயத்திற்கு ப்ரயோஜனமாக என்ன கண்டுபிடித்தார்கள்? பாரத தேச ஒப்பீடு.. ஒரு அலசல்...

 "சூரியன் ஒரே இடத்தில் தான் உள்ளது. சூரியனை மற்ற கிரகங்கள் சுற்றுகிறது" என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளனர் இன்றைய விஞ்ஞானிகள்.

சூரியன் உதிப்பதும், மறைவதும் நம்மை பொறுத்து உண்மை போல தெரிகிறதே தவிர,  மஹாமேருவில் கஸ்யபரின் புத்ரனான சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை. எப்போதும் தெரிந்து கொண்டே இருக்கிறான் என்று என்றோ ஆராய்ச்சி செய்து அன்றைய விஞ்ஞானிகளான ரிஷிகள் சொல்லிவிட்டனர்.

கஸ்யப: அஷ்டம:

ஸ மஹாமேரும் ந ஜஹாதி

- தைத்தரீய (யஜு வேதம்)

"உலகம் உருண்டை" என்று வராக அவதாரத்திலேயே சொல்லிவிட்டது நம் வேதம்.


"செவ்வாய் (mars) சிவப்பு கிரகம்" என்று அறிவியல் சொல்கிறது. 

சர்வ சாதாரணமாக, நவக்ருஹ சன்னதியில், செவ்வாய் தேவதைக்கு "சிவப்பு துணி கட்டி", என்றோ நம்முடைய இந்த உண்மையை வேதம் சொல்லி விட்டது.


வேத ஒலியே, ஆகாசத்தில் நிரம்பி உள்ளது. (Sound that exist in space is Veda)

வேத ஒலியே, தன் அதிர்வினால் காற்றை உண்டாக்கியது. (Sound vibration created Air)

காற்றின் அதிர்வே, அக்னியை உண்டாக்கியது. (Air vibration created Fire)

அக்னியின் அதிர்வே, நீரை உண்டாக்கியது. (Fire vibration created water)

நீரின் அதிர்வே, மண் என்ற பல உலகங்களை உண்டாக்கியது. (Water vibration created sand)

இது படைப்பின் வரிசை.

"அழிவு" என்பது இதற்கு எதிராக செல்கிறது.

மண்ணில் உருவாகிய அனைத்து உடல்களும் மண்ணுக்குள்ளேயே மறைந்து விடுகிறது. 

அக்னியில் உருவான தேவதைகள், தங்கள் பதவி காலம் முடிந்தவுடன், அக்னியில் மறைந்து விடுவார்கள்..


'இப்படி உருவான மண் உலகம், அதே வரிசையில் அழிக்கப்பட்டு வேதத்தில் அடங்கி விடும்' என்று சொல்கிறது நம் வேதம்.

பிரளயம் ஏற்படும் போது, 

  • மண் உலகம் நீரில் கரைந்து, 
  • நீர் அக்னியில் மறைந்து,
  • அக்னி காற்றில் மறைந்து,
  • காற்று, சப்த ப்ரம்மம் என்று சொல்லப்படும் வேத ஒலியில் மறைந்து விடும்.
  • 'அந்த வேதம், பரவாசுதேவனின் ஞானம் (அறிவு) என்பதால், அனைத்தும் பரமாத்மாவில் அடங்கி விடும்' 

என்று படைப்பையும், பிரளயத்தையும் சொல்கிறது வேதம்.

வேதம் சொல்லும் பல விஷயங்களில், ஒரு அளவுக்கு தான் இன்று அறிவியல் அடி எடுத்து வைத்து கண்டுபிடித்துள்ளது. 

காற்றிலிருந்து, அக்னியிலிருந்து, தண்ணீர் எடுக்க இன்று முயற்சிகள் நடக்கிறது. 

இந்த வரிசையை படைப்பு சொல்லும் போதே வேதம் சொல்லிவிட்டது.

ஆனால், 

'மூலமான வேத ஒலிகளை ஆராய்ச்சி செய்தால், காற்றினால், அக்னியால், நீரால், மண்ணால் வரும் வியாதிகள், மாறுபாடுகளை சரி செய்ய முடியும்' என்ற ஆராய்ச்சியை இன்றைய அறிவியல் இன்னும் தொடங்கவில்லை.


ஜெர்மனி போன்ற நாடுகள் வேத ஒலியை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து உள்ளனர் என்று அறிகிறோம்.


வேதத்தை எழுதி படித்தால், படிக்க முடியுமே தவிர, ரிஷிகள் ஆகாசத்தில் எந்த ஒலி அதிர்வில் கேட்டார்களோ, அதே போல உச்சரிக்க முடியாது.

சரியான வேத உச்சரிப்பே, சரியான ஒலி அலைகளை உண்டாக்கி, காற்று, அக்னி, நீர், மண் போன்றவற்றால் உண்டாகும் மாறுபாட்டை, வியாதிகளை குணப்படுத்தும்.

அந்த உச்சரிப்பை இன்று வரை காப்பாற்றி வரும் ஒரே சமூகம் 'வேத ப்ராம்மணர்கள்' மட்டுமே. 

வேதத்தை விட்டு விட்டு, வேலைக்கு, வியாபாரத்துக்கு, நாட்டுக்கு வேலை செய்யும் பிராம்மணர்கள்

வியாபாரிகள் (வைஸ்யர்கள்), 

வேலைக்கு செல்பவர்கள் (employee/சூத்ரர்கள்), 

நாட்டை காப்பவர்கள் (க்ஷத்ரியர்கள்) அனைவரும், 

இன்று 1000 கணக்கில் மட்டுமே உள்ள வேத ப்ராம்மணர்களை சரியான முறையில் பயன்படுத்தினால், இருக்கும் கொஞ்சம் வேத ஒலிகளின் பலனையாவது இன்று பெறலாம்.

ராமாயண காலத்தில், 'பலை அதிபலை' என்ற இரு மந்திரங்கள் விசுவாமித்திரர் சொன்னார் என்று வருகிறது.

இந்த மந்திரம் பசி தூக்கம் ஏற்படாமல் செய்து விடும் என்று பலன் சொல்லப்படுகிறது.

அந்த மந்திரத்தை ராம லக்ஷ்மணர்களுக்கு விசுவாமித்திரர் உபதேசம் செய்தார்.

இன்று, 

இந்த மந்திரத்தை ஸித்தி செய்ய, ஆராய்ச்சி செய்ய ஆள் இல்லை. 

மந்திரம் கிடைத்தாலும், அதன் உண்மையான வேத ஒலி எப்படி இருக்க வேண்டும்? என்று தெரியாமல் போய் விட்டது. 

'த்ரேதா யுகத்தில், சுமார் 8 லட்சம் வருடங்கள் முன், குபேரன் அன்றே flight வைத்து இருந்தான். அதை ராவணன் பிடுங்கி வைத்து இருந்தான்' என்று ராமாயணம் காட்டுகிறது.

இன்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து விட்டனர்.

அதே சமயம்,

ராவணன், தன் உருவை மாற்றி கொள்ளும் சக்தி கொண்டிருந்தான்.  

இந்த ரகசியத்தை கண்டுபிடிக்க இன்னும் முடியவில்லை.

மேலும்,

போரில், இவர்கள், வேடுவன் போல வெறும் அம்பு விட்டு சண்டை செய்யவில்லை.. 

அஸ்திரம், சஸ்திரம் என்று பல விதமான அணுகுண்டு பயன்படுத்தி உள்ளனர்.




அஸ்வத்தாமன் ப்ரம்மாஸ்திரம் விட்ட போது, அர்ஜுனன் பதிலுக்கு ப்ரம்மாஸ்திரம் எடுக்க, "உலகமே அழிந்து விடும்" என்று தடுத்தார் என்று பார்க்கிறோம்.

அந்த அஸ்திரங்களை "தனுர் வேதம்" என்ற பகுதியில் இருந்து கற்று கொண்டனர் என்று பார்க்கிறோம்.

இன்று அந்த வேத ஒலிகள் தொலைந்து விட்டது. 

காரணம்?

1000 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்ரமிப்பால், வடக்கில் இருந்த பல வேத ப்ராம்மணர்கள் கொல்லப்பட்டனர்.

கில்ஜி மற்றும் துக்ளக் காலத்தில் 80 வருடம் மட்டுமே சிக்கிய தமிழகத்தை, மராட்டிய மன்னர்களும், பிறகு விஜயநகர மன்னர்களும் காப்பாற்றி விட்டனர்

(கில்ஜியை தொடர்ந்து துக்ளக் காலத்தில் தமிழகத்தை கைப்பற்றி இருந்த இஸ்லாமியர்கள் என்ன செய்தார்கள் என்ற ஒரே ஒரு சம்பவம் இதோ... )

ஹிந்துகளாக உள்ள தமிழர்கள் ஆந்திர தேசத்துக்கும், கன்னட தேசத்துக்கும், மராட்டிய தேசத்துக்கும் என்றும் கடமைப்பட்டு இருக்கிறோம். 

ஹிந்துக்களாக இல்லாத மற்றவர்கள் இவர்களை மதிக்க வேண்டும் என்று நினைப்பது கூட அறிவீனம்.


1000 வருடம் முன்பு இருந்த கோவில்கள் இன்றும் தமிழகத்தில் மட்டும் தான் அப்படியே உள்ளது.

1000 வருடம் முன்பு இருந்த வேத பிராம்மண பரம்பரை இன்றும் தமிழகத்தில் மட்டும் தான் அப்படியே உள்ளனர்.


வடக்கில் (பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட), கோவில்களும், ப்ராம்மணர்களும் 1000 வருட காலத்தில் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டதால், பல ஆராய்ச்சி குறிப்புகள், வேத சம்ஹிதைகள், ப்ராஹ்மண பாகங்கள் தொலைந்து விட்டது.


வடக்கில், இன்று நாம் காணும் கோவில்கள் அமைப்பும், ப்ராம்மணர்கள் வேதம் உச்சரிப்பதும் வித்யாசமாக இருப்பதற்கு இதுவே காரணம். இதை சரி செய்ய செல்வந்தர்கள் முன் வர வேண்டும். 


தமிழகத்தில் உள்ள கோவில்கள் போன்றே பாரத தேசம் முழுவதும் கட்டப்பட வேண்டும்.

வடக்கில் உள்ள வேத ப்ராம்மணர்களை தமிழகம் வந்து கற்று கொள்ள செய்ய வேண்டும்.


ஆந்திர தேசமும், உத்கல தேசமும் (ஒடிசா) சந்திக்கும் மகாநதி கரையில் உள்ள "ஜயமங்களம்" என்ற ஊரில், குமரிலபட்டர், தைத்தரீய யஜுர் வேத பிராம்மண குடும்பத்தில் பிறந்தார். 

அவரை ஆதிசங்கரர் சந்தித்தார் என்று பார்க்கிறோம்.

புண்ய ஸ்லோக மஞ்சரி என்ற நூல், ஆதி சங்கரர் கி.மு. 477ல் அவதரித்தார் என்று சொல்கிறது.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் நுழையாத  காலத்தில், மலையாள தேசத்தில் உதித்த ஆதி சங்கரர், மொழி பிரச்சனை இல்லாமல்,  குமரில பட்டருடன் பேசினார். 




பிறகு காஷ்மீர் சென்று அங்கு இருந்த காஷ்மீரி ப்ராம்மணரான மண்டல மிஸ்ரரை சந்தித்து வேதத்தின் ஞான மார்க்கத்தை பற்றி பேசினார் என்று பார்க்கிறோம்.

மொழி பிரச்சனை இல்லாத தேசமாக இருந்துள்ளது நம் தேசம். 

அதனால் வியாபாரிகள் எங்கு சென்றும் வியாபாரம் செய்துள்ளனர் என்றும் தெரிகிறது.

அன்று இருந்த ப்ராம்மணர்களை, அவர்கள் காப்பாற்றி வைத்து இருந்த பல சாஸ்திரங்களை கொளுத்தி, அவர்களை கொன்று, கோவிலை இடித்து சர்வ நாசம் செய்தனர் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்.

947ADக்கு முன்,, நம்முடைய தேசத்துக்குள் நுழைவதற்கு முன், எந்த உருப்படியான கண்டுபிடிப்பும் செய்யாத இவர்கள், பல வேத சூத்திரங்களை (formula) அர்த்தம் தெரிந்து வாங்கி கொண்டு, சொல்லி கொடுத்த ப்ராம்மணர்களை கொன்று விடும் பழக்கம் கொண்டிருந்தனர்.


குதுப்மினார் என்ற ஸ்தூபத்தை சிற்ப சாஸ்திரம் தெரிந்த ஹிந்துக்களை வைத்து கட்டிய பிறகு, "இதே போல நீ வேறு எங்கும் கட்டி விட கூடாது" என்று சொல்லி, கட்டிய அனைத்து ஹிந்துக்களையும் கொன்று விட்டான் குதுப்தின் ஐபக்.


இதே போல, 

தாஜ் மஹால் கட்டிய போது, ஸாஜஹான், கட்டிய ஹிந்துக்களை கொல்ல உத்தரவிட்டான்.


இப்படி வேத ஒலியால் பல ஆச்சர்யங்களை, சாஸ்திரங்கள், மந்திரங்கள், சூத்திரங்கள் (formula) என்று வைத்து இருந்த க்ஷத்ரியர்கள், ப்ராம்மணர்கள், வைஸ்யர்கள் அழிக்கப்பட்டு, தமிழ்நாட்டை தவிர மீதம் உள்ள அனைத்து தேசத்திலும் இருந்த பல ரகசிய சூத்திரங்கள் கடத்தப்பட்டன. 



இந்த சூத்திரங்களால் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான மாளிகைகள், கோவில்கள் தரை மட்டம் ஆக்கப்பட்டன. 

அறிவோடு எவர் இருந்தாலும் உயிரோடு விடாமல், கொலை செய்யப்பட்டனர்.

அல்லது தனக்கு அடிமையாகவோ, தனக்கு வேலை செய்யவோ அமர்த்தி கொண்டனர்.


ஆச்சர்யம்...  

இந்தியாவை நோக்கியே பிச்சை எடுத்து வந்து உலக மக்கள், திடீரென்று செல்வந்தர்கள் ஆனார்கள். 

தேனையும், ரொட்டியையும், பஞ்சு துணியை சுற்றி கொண்டும், தொப்பி அணிந்து கொண்டும் அலைந்த உலக மக்கள், 

திடீரென்று தங்க வைர நகைகள், கிராம்பு, மிளகு, ஏலக்காய், சுவையான உணவு, அலங்காரம், நாகரீகம் என்று பேச ஆரம்பித்தனர்.





ஒரு உருப்படியான ஆராய்ச்சியும் செய்யாத இவர்கள், இந்தியாவில் கால் எடுத்து வைத்த பிறகு, 

"Flight" கண்டுபிடிக்கின்றனர்.

"உலகை அழிக்கும் அஸ்திரங்கள்" கண்டுபிடிக்கின்றனர்.

"உலகம் உருண்டை" என்று கண்டுபிடிக்கின்றனர்.

"செவ்வாய் கிரகம் சிவப்பு" என்று கண்டுபிடிக்கின்றனர்.

"வாரத்தில் ஏழு நாள் தான்" என்று ஒப்புக்கொண்டனர்.

"வருடம், மாதம் எல்லாம் ஒத்து கொள்ள" ஆரம்பித்தனர்.

ஒலி அலைகளின் மகத்துவத்தை உணர்ந்து ரேடியோ கண்டுபிடித்தனர்.

"ஒலி மூலமாக தகவல்களை பரிமாற்ற முடியும்" என்று கண்டுபிடித்தனர்.


அடடா..  என்ன கண்டுபிடிப்பு...


நம் தேசத்துக்குள் நுழைந்து நாசம் செய்த பிறகு, தாங்கள் கண்டுபிடித்து விட்டது போல காட்டி விட்டனர்.


'வெளிநாட்டவன் கண்டுபிடித்தான்' என்று சொல்வது ஒரு புறம் இருந்தாலும், இவர்கள் இந்தியாவுக்குள் காலடி வைப்பதற்கு முன் என்ன கிழித்தார்கள்? என்று ஹிந்துக்கள் கேட்க வேண்டும்.


இன்று இந்தியர்கள் பல தேசங்களுக்கு சென்று சம்பாதிப்பது நடக்கிறது.

அன்று,

இந்தியாவை நோக்கியே உலகம் வந்தது. 


பிச்சை எடுப்பவன் தானே அடுத்தவன் ஊருக்கு செல்வான். நம்மை நோக்கியே அரேபிய குதிரைகளும், போர்சுகல், பிரெஞ்ச், இங்கிலாந்து பாவாடைகளும், ஏன் அன்று படை எடுத்தார்கள்?  என்று ஹிந்துக்கள் கேட்க வேண்டும். 


கோடீஸ்வரர்களாக இருந்த நம்மை அழிக்க, நமக்கு ஆதாரமாக இருந்த அறிவை (வேத சூத்திரங்களை) மொழி பெயர்த்து தெரிந்து கொண்டு, 

விஷயம் அறிந்தவர்களை கொன்று விட்டு, 

முடிந்தவரை கோவில்களை இடித்து, கொள்ளை அடித்து, 

ப்ராம்மணர்களை வேதம் படிக்க விடாமல், ஆராய்ச்சி செய்ய விடாமல் தடுக்க, தங்கள் வேலைக்கு பணி அமர்த்தி, அறிவை அழித்தனர். 


அறிவுக்கு ஆதாரமாக இருந்த வேத ஒலிகளை ஒழிக்க, ப்ராம்மணர்களை கொன்றனர்.


ஸாம வேதத்தில் 100க்கும் மேற்பட்ட சம்ஹிதைகள் இருந்துள்ளது.

இன்று,

வெறும் இரண்டே இரண்டு சம்ஹிதைகள் மட்டும் தான் உள்ளன.

அதிலும் ஜைமினி சம்ஹிதை அறிந்துள்ள வேதியர்கள் அழியும் நிலையில் உள்ளனர். 

அவர்களிடம் பேசி, அவர்களை பாதுகாத்து, அதில் ஆராய்ச்சி செய்ய ஆள் இல்லை.


ஜைமினி சம்ஹிதை கற்றுள்ள ப்ராம்மணர்கள், தங்கள் பிள்ளையை வேதம் கற்று கொள்ள வேண்டாம் என்று ABCD கற்று சம்பாதிக்கட்டும் என்று அனுப்பி விட்டனர்.


இதனால் ஹிந்துக்களுக்கு பெரும் நஷ்டம்..

வேத ஒலிகள் எப்படி ரிஷிகள் கேட்டார்களோ, 

அதே முறையில் வேத ஒலி எழும்பினால், ஆரோக்கியம் உண்டாகும், வெற்றி உண்டாகும், 

செல்வம் தானாக தேடி வரும். 

தெய்வங்களை ஆகர்ஷிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

இந்த பல ரகசியங்கள் அவர்களோடு அழிந்து போய் விடும்


அனைத்தையும் இழந்து விட்டால், மீண்டும் ஆராய்ச்சி செய்து செய்து தான் வாழ வேண்டி வரும்.


மழை வேண்டுமானால், அதற்கான வேத ஒலிகள் இன்றும் உள்ளது. 

சரியான உச்சரிப்பில் மழைக்கான வேத ஒலிகள் உச்சரிக்கப்படும் போது, அந்த ஒலி அலைகள், காற்றை உருவாக்கி, மழையை கொண்டு வந்து விடும்.

இன்றும் வருண ஜபம் செய்தே, மழையை கொண்டு வரும் வேதியர்கள் உள்ளனர்.

இவர்களை காக்க மறந்து விட்டால், அந்த வேத ஒலிகள் மறைந்து விடும்.


எழுதி படித்தால், அறிவு உண்டாகுமே தவிர, மழையை உருவாக்கும் படி எப்படி அந்த வேத ஒலிகள் ஒலிக்க வேண்டும்? என்று தெரியாமல் போய் விடும்.


பிறகு மழை வேண்டுமென்றால், அறிவியல் ஆராய்ச்சி மூலம் மழை வரவழைக்க, கோடிக்கணக்கில் செலவு செய்ய நேரும்.


1000 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்ரம்பிப்பால், ப்ராம்மணர்கள் கொல்லப்பட்டதால், வேத ஒலிகள் பல இழந்து விட்டோம். 

இருக்கும் சில வேத சம்ஹிதையையாவது காப்பாற்ற வேத ப்ராம்மணர்களை காக்க வேண்டும்.


ஒலி அலையை ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும்.


சம்ஸ்க்ரித மொழியை அறிந்து கொண்டால், 120 கோடி மக்களில் குறைந்தது 100 பேராவது ஆராய்ச்சி செய்து தொலைந்து போன பல ரகசிய அஸ்திரங்கள், சிற்ப சாஸ்திரங்கள், தெய்வத்தை வரவழைக்கும் சாமர்த்தியம்  உண்டாகும். 

Thursday, 9 September 2021

ஓம் என்றால் என்ன? காயத்ரீ மந்திரத்தோடு ஓம் பூ: புவ: ஸுவ: என்று சேர்த்து சொல்வதன் அர்த்தம் என்ன? வேதம், பிரணவத்துடன், ப்ரம்மத்துடன் எப்படி தொடர்பு கொண்டுள்ளது?...

பகவானின் இதயத்திலிருந்து வந்த சங்கல்பமே "வேதம்".

நமக்கு சிவனும், முருகனும், பெருமாளும், பராசக்தியும் தெரிந்ததற்கு காரணமே "வேதம்" தான்.

நம்முடைய பல கேள்விகளுக்கு பதில் கொடுத்ததும் "வேதமே". 

வேதத்தை கிண்டல் செய்பவன், வேதம் நமக்கு காட்டிய சிவனையும், விஷ்ணுவையும், ஓங்காரத்தையும், முருகனையும், கணேசனையும், சக்தியையும் சேர்த்து கிண்டல் செய்கிறான் என்று ஹிந்துக்கள் உணர வேண்டும்.

வேதம் ஓத கூடாது என்று சொல்பவன், உண்மையில் நாம் வணங்கும் தெய்வத்தை அவமானப்படுத்த நினைக்கிறான் என்றே ஹிந்துக்கள் அறிய வேண்டும். 

வேதம் மட்டும் நமக்கு இல்லாமல் போயிருந்தால், அதிகபட்சம் 

"பரமாத்மா இருக்கிறார். எங்கோ இருக்கிறார். நமக்கு தெரிய மாட்டார். அவர் வரமாட்டார்

என்று அரைகுறையாக உருட்டிக்கொண்டு, 'தெய்வத்தின் பெயரால்' தங்கள் இஷ்டத்துக்கு பாவங்கள் செய்து கொண்டு இருப்போம். 




  • பரமாத்மா யார்?
  • அவருக்கும் ப்ரணவத்துக்கும் என்ன சம்பந்தம்?
  • அவர் விஷ்ணுவாகவும், சிவனாகவும், பிரம்மாவாகவும் ஏன் ரூபம் தரித்தார்? 
  • ஏன் உலகை படைத்தார்? 
  • எப்படி உலகை படைத்தார்?
  • நம்மை ஏன் படைத்தார்? 
  • உலகில் ஏன் இவ்வளவு வேறுபாடுகள்?
  • மனிதனின் குறிக்கோள் என்ன?
  • மனிதர்கள் துன்பத்தில் இருந்து விடுபட்டு விடுதலை அடைய வழி என்ன?

என்ற பல கேள்விகளுக்கு, பதில் தெரியாமலேயே போயிருக்கும்.

பகவான் மட்டுமே பதில் சொல்லக்கூடிய இந்த கேள்விகளுக்கு, பகவானின் இதயத்திலிருந்து வெளிவந்த வேதம், அனைத்து கேள்விக்கும் பதில் சொல்கிறது. 

பகவான் என்ன நினைக்கிறார்? என்று தெரிந்து கொண்டு விட்டால், இந்த கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைத்து விடுகிறது.

"வேதம் என்ன சொல்கிறது?" என்று அறிவதன் மூலம், நமக்கு விடை கிடைக்கிறது.


அந்த வேதம், பகவானோடு எப்படி சம்பந்தப்பட்டு இருக்கிறது? என்று அறிவோம்.  


* வேதங்கள் நான்கு : ரிக், யஜுர், சாம, அதர்வண

* நான்கு வேதமும், அதனதன் வேத ஆதியில் (முதல் மந்திரம்) அடக்கம்.


வேத ஆதி (முதல் மந்திரம்) என்ன?

1. ரிக் வேத ஆரம்ப மந்திரம்: 

அக்நிமீளே புரோஹிதம் யக்ஞஸ்ய தேவம் ருத்விஜம் ஹோதாரம் ரத்ந தாதமம்

அர்த்தம்

யக்ஞத்தின் தேவனும், 

யக்ஞத்தில் வரிக்கப்பட்டவரும், 

முதன்மையாக இருப்பவரும், 

எல்லா தேவர்களையும் கூப்பிடுபவரும், 

செல்வத்தை தருபவரும், 

ஸ்ரேஷ்டமாக இருப்பவருமான 

அக்னி பகவானே ! 

பூ: புவ: ஸுவ: என்று விராட் ரூபத்தையே நாராயணனாக பார்க்கும் போது, அவருடைய கண்களாக இருக்கும் அக்னியே உன்னை துதிக்கிறேன்.




2. யஜுர் வேத ஆரம்ப மந்திரம்: 

இஷேத்வா - ஊர்ஜேத்வா - வாயவஸ்த - உபாயவஸ்த - தேவோவ: ஸவிதா - ப்ரார்ப்யது - ஸ்ரேஷ்டதம் ஆய கர்மணே

அர்த்தம்:

இஷ்டமான அதே சமயம் புஷ்டியான அன்னம் உண்டாவதற்காகவும்,

நல்ல பசும்பால் உண்டாவதற்காகவும்,

செய்யப்படும் சிறந்த யாகமாகிய கர்மத்தில், ஸவிதாவான ஈஸ்வரன் உன்னை தூண்டட்டும்.


3. சாம வேத ஆரம்ப மந்திரம்: 

அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்ய தாதயே  நிஹோதா ஸத்ஸி ப'ர்ஹிஷி

அர்த்தம்:

அக்னி தேவனே ! வருக.. வருக.. ஹவிசை பெறுவதற்காக கூப்பிடப்பட்ட தாங்கள், இந்த தர்ப்ப ஆஸனத்தில் அமருவீராக 


4. அதர்வண வேத ஆரம்ப மந்திரம்: 

ஸந்நோ தேவீ: அபிஷ்டய

ஆபோ பவந்து பீதயே

ஸம்யோ: அபி ஸர வந்து ந : 

அர்த்தம் :

நமக்கு நல்ல திவ்யமான குடி தண்ணீர் கிடைக்கட்டும். நல்ல மழை பொழியட்டும்.

* வேத ஆதியாக இருக்கும் இந்த நான்கு மந்திரமும், காயத்ரீ மந்திரத்தில் அடக்கம்.

தத் ச வி துர் வ ரே ணி யம்

பர் கோ தே வஸ் ய தீ ம ஹி

தி யோ யோ நஹ் ப்ர சோ த யாத்


காயத்ரீக்குள் வேத மந்திரங்கள் அனைத்தும் அடங்கி இருக்கிறது என்பதால் தான், வேதம் கற்கும் முன், காயத்ரீ மந்திரத்தை முதலில் குரு ப்ரம்ம உபதேசமாக செய்கிறார்.


* காயத்ரீ வ்யாஹ்ருதியில் அடக்கம்.

(பூ: புவ: ஸுவ: என்ற கீழ், நடு, மேல் உலகங்களை, வ்யாஹ்ருதி என்று சொல்கிறோம். 

இந்த உலகங்களுக்குள் காயத்ரீ மந்திரம் அடங்கி உள்ளது என்று நினைத்து விட கூடாது.

மூன்று உலகங்கள் விராட் புருஷனான நாராயணனின் அங்கம் என்று ரூபமாக தியானித்து, அந்த விராட் புருஷனாக இருக்கும் நாராயணனின் அங்கத்தில் காயத்ரீ என்று அடங்கி இருக்கிறாள் என்று தியானிக்க வேண்டும்.

அதனால் தான், 

காயத்ரீ மந்திரம் சொன்னாலும், பிராணாயாமம் செய்தாலும், ப்ராயசித்த ஹோமங்கள், ப்ரோக்ஷணம், சமர்ப்பணம் செய்தாலும், பூ: புவ: ஸுவ: என்ற வ்யாஹ்ருதியை சேர்த்தே சொல்கிறோம். 





காயத்ரீ மந்திரம் மட்டும் அர்த்தம் தெரிந்து சொன்னால், பகவானின் நாமத்தை பூஜித்ததாகும். 

பூ: புவ: ஸுவ: என்ற வ்யாஹ்ருதியை சேர்த்து காயத்ரீயை சொல்லும் போது, பகவானின் ரூபத்தை தியானிக்க முடிவதால் பகவானின் ரூபத்தை பூஜித்ததாகவும் ஆகும்.

* வ்யாஹ்ருதி ப்ரணவத்தில் (ஓம்) அடக்கம்.

என்ற ஒலியும், என்ற ஒலியும், என்ற ஒலியும் சேரும் போது, "ஓம்" என்ற பிரணவம் கேட்கிறது.


மொழியின் அடிப்படையில்

"" என்பது உயிர் எழுத்து என்று அறிகிறோம்.

'உயிர்' என்றால் ஆத்மா என்று சொல்கிறோம்.


"ம்' என்பது மெய் எழுத்து என்கிறோம். 

'மெய்' என்றால் உடல் சொல்வோம்.


உயிர் ('ஆத்மா') மெய்யோடு (உடலில்) புகும் பொழுது, உயிர்மெய் என்று சொல்கிறோம்.

அதாவது,

+ம் = என்ற உயிர்மெய் வருகிறது.

ஓம் என்ற பிரணவம் இந்த ரகசியத்தை தான் நமக்கு சொல்கிறது.

என்ற உயிரே "பரமாத்மா".

அவரே ஆயிரக்கணக்கான உடல்களில் பிரவேசித்து, "" போல தெரிகிறார். அவரே என்று தனித்தும் இருக்கிறார். 

இந்த உறவை தெரிந்து கொள்ளவே "" என்ற உறவு காட்டுகிறது. 


* ப்ரணவம் (ஓம் - அஉம) ப்ரம்மத்தில் () அடக்கம்.


ப்ரம்மமே "பரமாத்மா". 

ப்ரம்மமே "பகவான்".

ப்ரம்மமே "கிருஷ்ணராக" வந்தார்.

"நான் ப்ரணவத்தில் '' என்ற அகாரமாக இருக்கிறேன்" என்று கீதையில் சொல்கிறார்.

ப்ரம்மமே ஒலி ரூபத்தில் 'ப்ரணவமாக' இருக்கிறார்.

ப்ரம்மமே பார்க்கும்படியாக ரூபத்துடன், '' என்ற விஷ்ணுவாக இருக்கிறார், மூன்று உலகங்களே அங்கமாக கொண்ட விராட் புருஷனாகவும் இருக்கிறார்.


இப்படி பரமாத்மாவிலிருந்து ஓம்

பிறகு பூ புவ ஸுவ

பிறகு காயத்ரீ

பிறகு 4 வேதத்தின் முதல் மந்திரங்கள்

பிறகு வேதங்கள்

வேதத்தை கொண்டு ப்ரம்ம தேவன், உலகங்களை படைக்கப்பட்ட வரிசை காட்டப்படுகிறது.


இந்த வரிசையை தியானிக்கவே, காயத்ரீயை மட்டும் சொல்லாமல்,

ஓம்

பூ: புவ: ஸுவ:

என்று சொல்லி, பிறகு 

தத் ச வி துர் வ ரே ணி யம்

பர் கோ தே வஸ் ய தீ ம ஹி

தி யோ யோ நஹ் ப்ர சோ த யாத்

என்று காயத்ரீ மந்திரம் சொல்கிறோம்.


குருநாதர் துணை...

 

Wednesday, 8 September 2021

வேதம் என்றால் என்ன? ரிக் யஜுர் ஸாம அதர்வண வேதம் எப்படி பிரிகிறது? சம்ஹிதை என்றால் என்ன?

வேதம் :

வேதம் என்றால் "அறிவு (ஞானம்)" என்று பொருள்.

யாருடைய அறிவு?

பரமாத்மாவின் அறிவு.


பரமாத்மாவின் அறிவால் (வேதம்) தான், 

  • பிரம்மா படைக்கப்பட்டார்,
  • நாம் படைக்கப்பட்டோம்,
  • உலகம் படைக்கப்பட்டது, 
  • அவரவர்களுக்கு தர்மங்கள் (rules) படைக்கப்பட்டது.

வேதத்தை மதிக்காதவன், பரமாத்மாவின் அறிவை (ஞானத்தை) அவமதிக்கிறான்.

வேதத்தை மதிக்காதவன், பரமாத்மாவின் அறிவை (ஞானத்தை) கொண்டு படைக்கப்பட்ட தன்னையே அவமதித்து கொள்கிறான்




பரமாத்மா ஏன் நம்மை படைத்தார்? 

பரமாத்மா ஏன் உலகை படைத்தார்?

போன்ற கேள்விகளுக்கு பரமாத்மா என்ன நினைக்கிறார் என்று அறியும் போது, பதில் கிடைத்து விடும்.

வேதம் அவருடைய இதயத்திலிருந்து வெளிப்பட்டது என்பதால், பரமாத்மாவின் எண்ணத்தை, வேதம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அந்த வேதம் ஆகாசத்தில் சப்த ரூபமாகவே உள்ளது.

ஆதலால், வேதத்துக்கு "சப்த ப்ரம்மம்" என்றும் பெயர் உண்டு.

பரமாத்மாவின் இந்த ஞானம் (வேதம்) நான்கு கிளையாக (சாகை) பிரிந்து உள்ளது.

  • * ரிக் சாகை
  • * யஜூ சாகை
  • * ஸாம சாகை
  • * அதர்வண சாகை.

அபிவாதயே சொல்லி, தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளும் போது, 'தான் எந்த சாகையை படிப்பவன்?' என்று சொல்லி பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்கின்றனர். 


யஜு வேதம் படிப்பவர்கள், 'யஜு சாகா அத்யாயீ'  என்று சொல்லி நமஸ்கரிக்கிறான்.


இந்த 4 சாகைகள், இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது.

  1. சம்ஹிதை (தெய்வங்களை அழைக்கும் மந்திரங்கள் மட்டும்)
  2. ப்ராஹ்மணம் (மந்திரங்களின் விளக்கத்தை உபநிஷத் மூலம் சொல்கிறது)

வேதம் நான்கு கிளையாக (சாகை) பிரிந்து இருப்பதால், 'ரிக், யஜு, ஸாம, அதர்வண சாகைகள்' என்று சொல்கிறோம்.

நான்கும் "வேதம் தான்" என்ற ரீதியில் பார்க்கும் போது, அதனதன் கிளையாக இருக்கும் ப்ராஹ்மண பாகத்தையும் "சாகை" என்று சொல்வதுண்டு.

ரிக் சாகை:

* சம்ஹிதைகள்: (மந்திரங்கள்)

  1. பாஷ்கல சம்ஹிதை
  2. சாகல சம்ஹிதை
  3. கௌஷீதகீ சம்ஹிதை

     சம்ஹிதைக்குள் ஸூக்தங்கள் பல உள்ளன. 

     மொத்தம் 1028 ஸூக்தங்கள் உள்ளது.

      உதாரணத்திற்கு, 

      வாலகில்ய ரிஷியின் 11 சூக்தங்கள் நமக்கு கிடைக்கின்றன. இது போன்ற பல ரிஷிகளின் சேர்த்து , மொத்தம் 1028 ஸூக்தங்கள் உள்ளன.

      1028 ஸூக்தங்களை, 10 மண்டலமாக அல்லது 8 அஷ்டகங்களாக பிரித்து கொண்டு படிக்கின்றனர்.

       1028 ஸூக்தங்களில், மொத்தம் 10,552 ரிக் அல்லது வேத மந்திரங்கள் உள்ளன.

       10 மண்டலத்தில் உள்ள விஷயங்கள்:

       மண்டலம் 1 :

        இதில் 191 ஸூக்தங்கள் உள்ளன.

        இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:

  1. ஜேதா (மதுசந்தஸின் பிள்ளை)
  2. மேதாதிதி (கண்வரின் பிள்ளை)
  3. சுனசேபர் (அஜீகர்தரின் பிள்ளை)
  4. தேவராதர் (விச்வாமித்ரரின் பிள்ளை)
  5. பராசரர் (சக்தியின் பிள்ளை)
  6. கௌதமர் (ரஹுகணரின் பிள்ளை)
  7. குத்ஸர் (அங்கிரஸரின் பிள்ளை)
  8. கச்யபர் (மரீசியின் பிள்ளை)
  9. கக்ஷீவான்
  10. அகஸ்தியர்
  11. அம்பரீஷ்ர் 

         இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:

  1. அக்னி
  2. விச்வே தேவர்கள்
  3. இந்திரன்
  4. வாயு
  5. வருணன்
  6. அஸ்வினி தேவர்கள்
  7. சரஸ்வதி
  8. சப்த மருத்துக்கள்
  9. வனஸ்பதி
  10. பூஷா
  11. பகன்
  12. ஆதித்யன்
  13. ப்ரம்ஹணஸ்பதி
  14. ஸோமன்
  15. ரிபுக்கள்
  16. ஸவிதா
  17. விஷ்ணு
  18. ருத்ரன்
  19. ஸாத்யர்கள்
  20. உஷா
  21. ராத்ரி
  22. நதிகள்

         இந்த ஸூக்தங்களில்,

  • கர்பம் கலையாமல், சுக பிரசவம் ஆகும் மந்திரம் உள்ளது.
  • ரோகம், விஷம் போன்ற உபாதைகள் நீக்கும் ஸூக்தங்கள் உள்ளன.
  • சிற்சில இடங்களில், தேவதைகளின் ரூபம், ஆயுதம், குணம், வாஹனம் சொல்லப்படுகிறது.
  • உரல், உலக்கை பற்றி கூட ஒரு பாடல் உள்ளது.
  • புரூரவஸ், மது, துர்வஸூ, த்ருஹ்யு போன்ற அரசர்களை பற்றி குறிப்பு உள்ளது.
  • அஸ்வினி தேவர்கள் ததீசிக்கு அருள் செய்தது பற்றி குறிப்பு உள்ளது.
  • மருத்துக்களை இந்திரன் பேதித்த கதை உள்ளது.
  • லோபமுத்ரா கதை உள்ளது.
  • அகஸ்தியர், வாதாபி என்ற ராக்ஷஸன் கதை உள்ளது.
  • இந்திரன் வ்ருத்ராசுரனை வதம் செய்த ஆதாரம் உள்ளது.
  • த்ரிவிக்ரம அவதாரம் பற்றிய குறிப்பு உள்ளது.

       மண்டலம் 2 :

        இதில் 43 ஸூக்தங்கள் உள்ளன.

        இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:

  1. க்ருத்ஸமதர்
  2. கூர்மர் (க்ருத்ஸமதரின் பிள்ளை)
  3. பார்கவரான சௌனகர்

         இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:

  1. அக்னி
  2. இந்திரன்
  3. ராகா
  4. ஸினீவாலீ
  5. அதிதி

         இந்த ஸூக்தங்களில்,

  • இந்திரன் விஸ்வரூபனை தேவ புரோஹிதராக வரித்த கதை உள்ளது.
  • இந்திரன் பர்வதங்களின் சிறகை வெட்டிய கதை இங்கு உள்ளது.
  • தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது.
  • துக்கத்தை நீக்கும் மந்திரம் உள்ளது.

       மண்டலம் 3 :

        இதில் 62 ஸூக்தங்கள் உள்ளன.

        இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:

  1. விசுவாமித்திரர்
  2.  விசுவாமித்திரர் கோத்திரத்தில் வந்த பல ரிஷிகள்

         இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:

  1. அக்னி
  2. இந்திரன்

         இந்த ஸூக்தங்களில்,

  • சிந்து, சரஸ்வதி நதிகளின் பெருமை உள்ளது.
  • இந்திரன் வ்ருத்ராசுரனை வதம் செய்த சரித்திரம் உள்ளது.
  • விஷ்ணுவின் பெருமை சொல்லப்பட்டு உள்ளது.
  • தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது.
  • வேத மாதாவான, பிரசித்தமான காயத்ரீ பற்றி குறிப்பு உள்ளது.
  • பாரத தேச மக்களை பற்றி குறிப்பு உள்ளது.

      மண்டலம் 4 :

        இதில் 58 ஸூக்தங்கள் உள்ளன.

        இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:

  1. வாமதேவர் (கௌதமரின் பிள்ளை)
  2. த்ரஸத்தஸ்யு (புருகுத்ஸரின் பிள்ளை)
  3. புருமீடர் (ஸஹோத்ரரின் பிள்ளை)
  4. அஜமீடர் என்ற ராஜரிஷி


         இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:

  1. அக்னி
  2. இந்திரன்
  3. அதிதி

         இந்த ஸூக்தங்களில்,

  • த்ரஸத்தஸ்யு, பௌர-குத்ஸரின் சரித்திரம் உள்ளது.
  • இந்திரன் விஷ்ணுவின் அருளால், வ்ருத்ராசுரனை வதம் செய்த சரித்திரம் உள்ளது.
  • தெய்வங்களை பற்றி கதைகள் கேட்பது, உண்மை பேசுதலின் பெருமை சொல்லப்பட்டு உள்ளது.
  • தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது.
  • உழவர்களின் பெருமை சொல்லப்பட்டு உள்ளது.
  • கலப்பைக்கு தேவதையாக இருக்கும் சீதாதேவியின் பெருமை பற்றி குறிப்பு உள்ளது.
  • பசுக்களின் பெருமை உள்ளது.
  • நெய்யை (க்ருத ஸூக்தம்) பற்றிய பாடல்கள் உள்ளது

      மண்டலம் 5 :

        இதில் 87 ஸூக்தங்கள் உள்ளன.

        இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:

  1. ஆத்ரேய
  2. ஆத்ரேய கோத்திரத்தில் வந்த ரிஷிகள்


         இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:

  1. அக்னி
  2. இந்திரன்
  3. ஸூரியன்

         இந்த ஸூக்தங்களில்,

  • ஸ்வர்பானு என்ற அசுரனின் கதை உள்ளது.
  • ஆசிர்வதிக்கும் (ஸ்வஸ்திவாசன) ஸூக்தம் உள்ளது.
  • யமுனை நதியின் பெருமையும், அங்குள்ள ராதஸ் என்ற ஸ்ரீயை பற்றியும், அங்கு கிடைக்கும் பசும்பால், வெண்ணெய், நெய் பற்றியும் சொல்லப்பட்டு உள்ளது.
  • தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது.

      மண்டலம் 6 :

        இதில் 75 ஸூக்தங்கள் உள்ளன.

        இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:

  1. பாரத்வாஜர்
  2. பாரத்வாஜ கோத்திரத்தில் வந்த ரிஷிகள்


         இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:

  1. அக்னி
  2. இந்திரன்
  3. விஷ்ணு

         இந்த ஸூக்தங்களில்,

  • ததீசியின் கதை உள்ளது.
  • கோ (பசு) ஸூக்தம் உள்ளது.
  • வில்லின் பெருமை சொல்லப்பட்டு உள்ளது.
  • தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது.

      மண்டலம் 7 :

        இதில் 104 ஸூக்தங்கள் உள்ளன.

        இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:

  1. வஸிஷ்டர்
  2. வஸிஷ்ட கோத்திரத்தில் வந்த ரிஷிகள்


         இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:

  1. அக்னி
  2. இந்திரன்
  3. விஷ்ணு
  4. ருத்ரன்

         இந்த ஸூக்தங்களில்,

  • மழையை தரும் பர்ஜன்யன் என்ற தேவதையின் பாடல் உள்ளது.
  • பராசரின் கதை உள்ளது.
  • வஸிஷ்டர் அவதாரம் சொல்லப்பட்டு உள்ளது. அவருடைய புத்ரர்களின் கதையும் உள்ளது.
  • நமுசி என்ற அசுரனின் கதை உள்ளது.
  • புரு, புரு-குத்ஸன், த்ரஸத்தஸ்யு போன்ற அரசர்களின் கதை உள்ளது.
  • ஸ்யவனரின் கதை உள்ளது.
  • சாந்தி சூக்தம் இங்கு உள்ளது.
  • பாக்ய சூக்தம் இங்கு உள்ளது.
  • அனைவரையும் தூங்க செய்யும் மந்திரம் இங்கு உள்ளது.
  • தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது.

      மண்டலம் 8 :

        இதில் 103 ஸூக்தங்கள் உள்ளன.

        இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:

  1. கண்வர்
  2. கண்வ கோத்திரத்தில் வந்த ரிஷிகள்
  3. வைவஸ்வத மனு
  4. விரூப ஆங்கிரசர்
  5. ஜமதக்னி (ப்ருகுவின் பிள்ளை)


         இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:

  1. இந்திரன்
  2. விஷ்ணு

         இந்த ஸூக்தங்களில்,

  • ப்ருதுவின் (வேனனின் பிள்ளை) கதை உள்ளது.
  • இந்திரன் நுரையால், நமுசியின் தலையை வெட்டி எறிந்து கதை உள்ளது.
  • த்ரஸத்தஸ்யுயின் (புரு-குத்ஸரின் பிள்ளை) கதை உள்ளது.
  • ஸிந்து அஸிக்னி என்னும் நதிகளின் பெருமை உள்ளது.
  • 7 ஸிந்துக்களின் குறிப்பு உள்ளது.
  • தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது

      மண்டலம் 9 :

        இதில் 114 ஸூக்தங்கள் உள்ளன.

        இந்த ஸூக்தங்களை, 'பவமான ஸூக்தங்கள்"  என்று சொல்கிறோம்.

        இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:

  1. ஆங்கிரஸர்
  2. ஆங்கிரஸ கோத்திரத்தில் வந்த ஆயாஸ்யர்
  3. ஆங்கிரஸ கோத்திரத்தில் வந்த உசத்யர்
  4. ஆங்கிரஸ கோத்திரத்தில் வந்த ஆவத்-ஸாரர்
  5. ஆங்கிரஸ கோத்திரத்தில் வந்த நித்ருவர்


         இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் ஒரே தெய்வம்: 

  1. ஸோமன்

         இந்த ஸூக்தங்களில்,

  • ஸோம பானத்தின் பெருமை சொல்லப்பட்டு உள்ளது.
  • ஸோம தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது

      மண்டலம் 10 :

        இதில் 191 ஸூக்தங்கள் உள்ளன.

        இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:

  1. த்ரிதர்
  2. த்ரி-சிரஸூ (த்வஷ்டாவின் பிள்ளை)
  3. சங்கர் (யாமயான கோத்திரத்தை சேர்ந்தவர்)
  4. வஸூகர் (இந்திரனின் பிள்ளை)
  5. வஸூகரின் மனைவி
  6. கோஷா (கக்ஷீவானின் மகள்)
  7. சர்யாதி
  8. புரூரவஸ்
  9. ஊர்வசி
  10. ஸரமா என்ற பெண் நாய் (இந்திரனுக்கு சேவை செய்பவள்)
  11. பரசுராமர் (ஜமதக்னியின் பிள்ளை)
  12. வாகம் ப்ரூணி என்ற தேவீ
  13. ப்ருது (வேனனின் பிள்ளை)


         இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:

  1. இந்திரன்
  2. விஷ்ணு
  3. அக்னி

         இந்த ஸூக்தங்களில்,

  • ஸ்ரீ ராம அவதாரத்தின் குறிப்பு (அக்னி ஸூக்தத்தில்) உள்ளது.
  • ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தின் குறிப்பு (கர்ம ஸூக்தத்தில்) உள்ளது.
  • விவாஹ (கல்யாண) மந்திரங்கள் இங்கு உள்ளது.
  • பித்ரு மேத மந்திரங்கள் இங்கு உள்ளது.
  • த்ரஸத்தஸ்யு (புரு-குத்ஸரின் பிள்ளை), நஹுக்ஷன், யயாதி, யது, துர்வஸூ, இக்ஷ்வாகு, சந்தனு போன்ற அரசர்களின் புகழ் பாடப்பட்டு உள்ளது.
  • கங்கா, யமுனா, சரஸ்வதி, ஸரயு என்னும் நதிகளின் பெருமை உள்ளது.
  • வைகுண்டன் என்ற ஒரு இந்திரன் பாடிய ஸூக்தம் உள்ளது.
  • விஷ்ணுவே பரமாத்மா, அவரே புருஷன் என்று ப்ரம்மம் யார் என்பதை நிரூபிக்கும் 'புருஷ ஸூக்தம்" இங்கு உள்ளது.
  • நாஸதீய-ஸூக்தம் இங்கு உள்ளது.
  • ஹிரண்யகர்ப-ஸூக்தம் இங்கு உள்ளது.
  • விஸ்வகர்ம-ஸூக்தம் இங்கு உள்ளது.
  • வாக்தேவி (அம்ப்ரூணரின் பெண்) பரமாத்மாவின் பெருமையை பாடும் சூக்தம் இங்கு உள்ளது.
  • புரூரவ-சக்கரவர்த்தியும் ஊர்வசியும் பேசிக்கொண்ட 2 அழகான ஸூக்தங்கள் இங்கு உள்ளது.
  • மழைக்கு வேண்டிய மந்திரங்கள் இங்கு உள்ளது.
  • யக்ஷ்ம  ரோகம் நீங்க மந்திரம் இங்கு உள்ளது.
  • புரி ஜகந் நாத மூர்த்தி ஆவிர்பாவத்திற்கு ஆதாரம் இங்கு உள்ளது.
  • தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது

* ப்ராஹ்மணம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)

  1.  ஐதரேய ப்ராஹ்மணம்


சுக்ல (அயாதயாம) யஜுர் சாகை:

எந்த ரிஷி, எந்த தேவதையை, எந்த சந்தஸில் வழிபட்டார் என்று தெளிவாக இருப்பதால், இந்த யஜு சாகைக்கு "சுக்ல யஜு" என்று பெயர்.

* சம்ஹிதைகள்: (மந்திரங்கள்)

  1.  காண்வ சாகை சம்ஹிதை
  2.  மாத்யந்தின சாகை சம்ஹிதை

      சம்ஹிதைகளை, 40 அத்யாயமாக பிரித்து கொண்டு படிக்கின்ற்னர்.

* ப்ராஹ்மணம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)

  1.  சதபத ப்ராஹ்மணம்





கிருஷ்ண (தைத்தரீய) யஜுர் சாகை:

எந்த ரிஷி, எந்த தேவதையை, எந்த சந்தஸில் வழிபட்டார் என்று தெளிவாக இல்லாததால், இந்த யஜு சாகைக்கு "கிருஷ்ண யஜு" என்று பெயர்

* சம்ஹிதை: (மந்திரங்கள்)

  1.  தைத்தரீய சம்ஹிதை

      சம்ஹிதையில்,

             * 44 ப்ரச்னங்களும்

             * 651 அனுவாகங்களும்

             * 2198 பஞ்சாதிகளும் உள்ளன.

      படிப்பதற்காக, 2 முறையில் பாடம் அமைத்து உள்ளனர்.

  • ஸாரஸ்வத பாடம்
  • இந்த பாடமுறையை 7 காண்டமாக பிரித்து உள்ளனர்.
    • காண்டம் 1
      • வாமன அவதாரம் சொல்லப்பட்டுள்ளது
      • ஊர்வசி புரூரவ சம்பாஷணை சொல்லப்பட்டுள்ளது
      • ரக்ஷோக்ன மந்திரங்கள் சொல்லப்பட்டுள்ளது
      • விஷ்ணு மஹிமை சொல்லப்பட்டுள்ளது
      • மாதம், ருதுக்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
    • காண்டம் 2
      • ஸுவர்பானு என்ற அசுரன் கதை சொல்லப்பட்டுள்ளது
      • ஸ்வாயம்பு மனு பெருமை சொல்லப்பட்டுள்ளது
      • இந்திரன், விஷ்ணு, அஸ்வினி குமாரர்கள் பெருமை சொல்லப்பட்டுள்ளது
      • வ்ருத்ர உபாக்யானம் சொல்லப்பட்டுள்ளது
      • விஸ்வரூபர் கதை சொல்லப்பட்டுள்ளது
      • ரஜஸ்வலா நியமம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • வாக்குக்கும் மனசுக்கும் ஏற்பட்ட போட்டி பற்றி சொல்லப்பட்டுள்ளது
    • காண்டம் 3
      • விச்வாமித்ரருக்கும், வஸிஷ்டருக்கும் ஏற்பட்ட அஸூயை சொல்லப்பட்டுள்ளது
      • நாபாநேதிஷ்டன் கதை சொல்லப்பட்டுள்ளது
    • காண்டம் 4
      • ஹிரண்ய ஸூக்தம் இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • நக்ஷத்ர தேவதைகள் பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • கருத்மானின் மகிமை சொல்லப்பட்டுள்ளது
      • மாதங்கள், ருதுக்கள் பற்றி  சொல்லப்பட்டுள்ளது
      • ஸ்ரீருத்ரம், சமகம் இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • விஸ்வகர்மா ஸூக்தம் இங்கு சொல்லப்பட்டுள்ளது
    • காண்டம் 5
      • சுனஸ்சேபன் கதை இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • தேவதைகள் விதிக்கப்பட்ட பசுக்கள் இவை இவை என்று இங்கு சொல்லப்பட்டுள்ளது
    • காண்டம் 6
      • கத்ருவிற்கும் சுபர்ணாவிற்கும் நடந்த போட்டி இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • ருத்ரன் பசுபதியானது பற்றி  இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • விஷ்ணுவின் வராஹ அவதாரம்  இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • இந்திர வ்ருத்ர யுத்தம்  இங்கு சொல்லப்பட்டுள்ளது
    • காண்டம் 7
      • வராஹ அவதாரம் இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • கணித வாய்ப்பாடு இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • பங்குனி உத்ரம் பெருமை இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • சித்ரா பௌர்ணமியின் பெருமை இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • ஒரு அழகான ப்ரச்னோத்தரி இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • தேசியகீதம் இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • அஸ்வத்தின் விராட் ரூபமான ஸ்துதி இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • நீதி கதைகளும், இதிகாச புராணங்களும் இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • பொதுவாகவே, பழைய கால சாரத்தையும், நாகரீக முன்னேற்றத்தையும் அறிந்து கொள்ள முடியும்.
      • விஞ்ஞானிகள் பிரமிக்கும் அளவுக்கு அருண-ப்ரஸ்னத்தில் ககோளம் விஷயங்கள் அடங்கி உள்ளது.
  • ஆர்ஷேய பாடம்
    இங்கு ரிஷி, சந்தஸ், தெய்வம் தெரிந்து அத்யயனம் செய்யும் படி அமைக்கப்பட்டுள்ளதால், இந்த முறை பாடமே சிறந்தது. இந்த முறையில் படிப்பதை போதாயனர், ஆபஸ்தம்பர், வித்யா-ரண்யர் போன்றோர் ஆதரிக்கின்றனர்.
    போதாயன ரிஷியின், க்ரூஹ்ய ஸூத்ரம், 5 விரதங்களை விதிக்கிறது. இதனாலும் ஆர்ஷேய பாட முறையே சிறந்தது என்று சொல்லப்படுகிறது.
    • ஹோத்ரு வ்ரதம்
    • சுக்ரீய வ்ரதம்
    • உபநிஷத் வ்ரதம்
    • கோதாந வ்ரதம்
    • ஸம்மித வ்ரதம்

    இந்த பாடமுறையை 5 காண்டமாக பிரித்து உள்ளனர்
    • ப்ராஜா பத்யம்
      • புரோடாச விஷயம் சொல்லப்பட்டுள்ளது
      • யஜமான விஷயம் சொல்லப்பட்டுள்ளது
      • ஹோதாக்களின் ஹோத்ரம் சொல்லப்பட்டுள்ளது
      • பித்ருமேதம் சொல்லப்பட்டுள்ளது
    • ஸௌம்யம்
      • அத்வர்யுவின் விஷயம் சொல்லப்பட்டுள்ளது
      • க்ரஹங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • தாக்ஷிணங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • ஸமிஷ்ட யஜுக்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • அவப்ருத யஜுக்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • வாஜபேயம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • சுக்ரீயம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • ஸவனங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
    • ஆக்யம் or ஆக்னேயம்
      • அக்ன்யாதேயம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • அக்னி ஹோத்ரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • அக்னி உபஸ்தானம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • அக்னி சயனம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • ஸாவித்ரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • நாசிகேதம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • வைச்வ-ஸ்ருஜம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • ஆருணம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
    • வைஸ்வ-தேவம்
      • ராஜ-ஸூயம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • பசுபந்தம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • இஷ்டிகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • நக்ஷத்ரேஷ்டிகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • திவச்யேந்யபாகா என்ற இஷ்டிகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • ஸாத்ராயணம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • உப-ஹோமங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • அஸ்வமேதம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • புருஷமேதம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • ஸௌத்ராமணி பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • அச்சித்ரங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • பசு-ஹோத்ரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • உபநிஷத்துக்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
    • ஸ்வாயம்புவம்
      • காடகத்தில் பாடப்பட்ட விதியே இங்கும் சொல்லப்பட்டுள்ளது.
        காடகத்தில் உள்ள வேதாந்த விஷயங்கள் முழுக்ஷுக்களுக்கு உபயோகமானது.

    இந்த 5 காண்டத்துக்கு, ப்ரஜாபதி, ஸோமன், அக்னி, விச்வேதேவர்கள், ஸ்வயம்பு என்ற 5 காண்ட ரிஷிகள் உள்ளனர்.


    * ப்ராஹ்மணம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)

    1.  தைத்தரீய ப்ராஹ்மணம்

    ஆரண்யகம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)

    ப்ரஹ்ம வித்யை தெரிந்து கொள்ள, கடோ உபநிஷத், தைத்தரீய உபநிஷத்துக்கள் இங்கு உள்ளது.

    காடகம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)

    காடகத்தில் உள்ள வேதாந்த விஷயங்கள் முழுக்ஷுக்களுக்கு உபயோகமானது

    ஸாம சாகை:

    வேதங்களில் "ஸாம வேதமாக இருக்கிறேன்" என்று பகவான் சொல்கிறார்.

    * சம்ஹிதைகள்: (மந்திரங்கள்)

      ஸாம வேதத்திற்கு "கானமே" முக்கிய லக்ஷணமாக சொல்லப்பட்டு உள்ளது.

      ஸாம கானத்திற்கு,

      சிலர் 5 லக்ஷணங்கள் சொல்கின்றனர் (ப்ரஸ்தானம், உத்கீதம், ப்ரதிஹாரம், உபத்ரவம், நிதனம்)

      சிலர் 7 விதமான ஸாமகானத்தை (ஆசாஸ்தி, ஸ்துதி ஸாங்க்யானம், ப்ரலாபம், பரிதேவனம், ப்ரைஷம், அன்வேஷணம், ஸ்ருஷ்டி) சொல்கின்றனர்

      சிலர் 10 விதமான லக்ஷணங்கள் சொல்கின்றனர் (காயத்ரம், ரதந்தரம், வாமதேவ்யம், ப்ருஹத்-ஸாமம், வைரூபம், வைராஜம், சக்வரீ, ரேவதீ, யக்ஞாயக்ஞம், ராஜநம்)

      சிலர் 16 விதமான கானத்தை சொல்கின்றனர்.

      • ஹாஉ - இந்த கானம் "இந்த லோகமே தேவதையாக" குறிப்பிடுகிறது.
      • ஹாஇ - இந்த கானம் "வாயு தேவதையை" குறிப்பிடுகிறது
      • அத - இந்த கானம் "சந்திரன் என்ற  தேவதையை" குறிப்பிடுகிறது
      • இஹா - இந்த கானம் "ஆத்மா தேவதையை" குறிப்பிடுகிறது
      • ஈ - இந்த கானம் "அக்னி தேவதையை" குறிப்பிடுகிறது
      • ஒளஹோ அஹோ - இந்த கானம் "விச்வே தேவர்களை" குறிப்பிடுகிறது.
      • ஊ, ரூ, நிஹவா, ர - இந்த நான்கு கானத்திற்கும், "ஆதித்யன் தேவதை" என்று காட்டுகிறது.

    1.  ஜைமினி சாகை சம்ஹிதை
    2.  கௌதம சாகை சம்ஹிதை
    3. கௌதம் சாகையை, 2ஆக பிரிக்கின்றனர். 
      • பூர்வார்சிகம் (3 காண்டங்களாக, 5 அத்தியாயங்களை கொண்டுள்ளது)
        • ஆக்னேய காண்டம் (1)
        • ஐந்தர காண்டம் (3)
        • பாவமான காண்டம் (1)
      • உத்தரார்சிகம் (21 அத்தியாயங்கள் உள்ளது)

           பூர்வார்சிகத்தில் உள்ள 5 அத்தியாயத்தில் 650 ரிக்குகள் (மந்திரங்கள்) கானம் செய்யப்படுகிறது.

           உத்தரார்சிகத்தில் உள்ள 21 அத்தியாயத்தில் 1225 ரிக்குகள் (மந்திரங்கள்) கானம் செய்யப்படுகிறது.

         மொத்தம், 1875 ரிக்குகள் (மந்திரங்கள்) கானம் செய்யப்படுகிறது

         இந்த 1875 ரிக்குகள் (மந்திரங்கள்) கீழே சொல்லப்பட்டுள்ள ரிஷிகளால் கண்டுபிடிக்கப்பட்டன.

    • வஸிஷ்டர்
    • கச்யபர்
    • வாமதேவர்
    • ஸௌபரி
    • விச்வாமித்ரர்
    • சுனஸ்சேபர்
    • ஸூஜனர்
    • ரஹுகணர்
    • ப்ருகு
    • பரத்வாஜர்
    • அஸிதர்
    • தேவலர்
    • பராசரர்
    • ப்ரதர்தனர்
    • ஸப்த ரிஷிகள்
    • வைகானஸ ரிஷிகள்
    • குத்ஸர்
    • ஆங்கிரஸர்

        இந்த 1875 ரிக்குகள் (மந்திரங்கள்) கீழே சொல்லப்பட்டுள்ள தெய்வங்களின் புகழ் பாடுகின்றன.

    • அக்னி
    • இந்திரன்
    • பூஷா
    • விச்வே தேவர்கள்
    • மருத்துக்கள்
    • ஸோமன்
    • ருத்ரன்
    • விஷ்ணு

        ரிக் வேத மந்திரங்களே இங்கும் பாடப்படுகின்றன. கானத்தால் பேதமே தவிர, விஷயத்தில் பேதம் இல்லை.

    • நமுசியின் சிரசை நுரையால் கொய்தது சொல்லப்படுகிறது
    • வராஹ அவதாரம் 
    • சொல்லப்படுகிறது
    • த்ரிவிக்ரம அவதாரம் 
    • சொல்லப்படுகிறது
    • விஷ்ணு ஸூக்தம் 
    • சொல்லப்படுகிறது
    • புருஷ ஸூக்தம் சொல்லப்படுகிறது.

    * ப்ராஹ்மணம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)

    1.  சந்தோக ப்ராஹ்மணம் / அஷ்ட ப்ராஹ்மணம்

    ஆரண்யகம்: (6வது அத்தியாயம்)

    அதர்வண சாகை:

    * சம்ஹிதை: (மந்திரங்கள்)

    1.  அதர்வ சம்ஹிதை

          சம்ஹிதையை 20 காண்டங்களாக பிரிக்கின்றனர்.

          மொத்தம், 5977 ரிக்குகள் (மந்திரங்கள்) உள்ளன.

          இந்த 5977 ரிக்குகளை கண்டுபிடித்த ரிஷிகளின் பெயர்கள்:

    • அதர்வா
    • ஸிந்து த்வீபர்
    • சாதனர்
    • சந்தாதி
    • ப்ருக்வங்கிரஸ்
    • வஸிஷ்டர்
    • சௌனகர்
    • சுக்ரர்
    • பரத்வாஜர்
    • கபிஞ்ஜலர்
    • கண்வர்
    • விச்வாமித்ரர்
    • உத்தாலகர்
    • ரிபு
    • பாதராயணி
      இந்த 5977 ரிக்குகள் புகழும் தேவதைகளின் பெயர்கள்
    • இந்திரன்
    • அக்னி
    • விஷ்ணு
    • ருத்ரன்
    • ஸோமன்
    • அச்வினி குமாரர்கள்
    • ஸூர்யன்
    • கருத்மான்
    • ப்ரஜாபதி

    20 காண்டங்கள் உள்ளது:

    காண்டம் 1:

    • மேதைத்தனத்தை வளர்க்க கூடிய மந்திரங்கள் இங்கு உள்ளது.
    • ரோகத்தை நீக்க கூடிய மந்திரங்கள் இங்கு உள்ளது.
    • ராக்ஷஸரகளை நாசம் செய்து, வெற்றியை தரக்கூடிய மந்திரங்கள் இங்கு உள்ளது.
    • மழையை மந்திரங்கள் இங்கு உள்ளது.
    • சிறுநீரகம் கெட்டு, மூத்திரம் வெளி வராமல் இருந்தால், சரி செய்யும் மந்திரங்கள் இங்கு உள்ளது.
    • இதயநோய் குணமாக்கும் மந்திரங்கள் இங்கு உள்ளது.
    • வெண் குஷ்டம் குணமாக்கும் மந்திரங்கள் இங்கு உள்ளது
    • காய்ச்சல் குணமாக்கும் மந்திரங்கள் இங்கு உள்ளது
    • ரத்த பெருக்கான வாந்தி பேதி நிற்க குணமாக்கும் மந்திரங்கள் இங்கு உள்ளது
    • யக்ஷ்ம (cancer) நீங்கவும் மந்திரங்கள் இங்கு உள்ளது
    • சுக பிரசவமாக மந்திரங்கள் உள்ளது.
    • நீண்ட ஆயுள் உண்டாக மந்திரங்கள் உள்ளது.
    • உடல் நலத்திற்கு வேண்டிய மந்திரங்கள் உள்ளது.

    காண்டம் 2:

    • பரமகாமத்திற்கு மந்திரங்கள் உள்ளது. 
    • பாப விமோசனத்திற்கு மந்திரங்கள் உள்ளது,
    • பயம் நீங்க மந்திரங்கள் உள்ளது
    • பந்தம் நீங்க மந்திரங்கள் உள்ளது
    • வயலில் பயிர்கள் வளர மந்திரங்கள் உள்ளது
    • கோஷ்டத்தில் பசுக்கள் நன்கு வளர, மந்திரங்கள் உள்ளது
    • காமத்தில் இச்சையுள்ள பெண்களை வசியம் செய்ய மந்திரங்கள் உள்ளது

    காண்டம் 3:

    • எதிரி படைகளை குழம்ப வைக்க மந்திரங்கள் உள்ளது
    • இழந்த இடங்களை மீண்டும் பெற மந்திரங்கள் உள்ளது
    • ராஜ லக்ஷணம் கூறப்பட்டு உள்ளது.
    • மக்களால் அரசன் நியமிக்கப்படுவது பற்றி கூறப்பட்டு உள்ளது.
    • ராஜ்யத்தை நிர்வாகம் செய்வது பற்றி கூறப்பட்டுள்ளது.
    • சாலைகள் நிர்மாணம் செய்வது பற்றி கூறப்பட்டுள்ளது.
    • பசுமடம் பற்றி கூறப்பட்டுள்ளது.
    • க்ருஷி, வணிகம் முதலியவைகளின் அமைப்பு கூறப்பட்டுள்ளது. அதன் முன்னேற்றம் பற்றியும் கூறப்பட்டுள்ளது

    காண்டம் 4:

    • ப்ரஹ்ம வித்யை இங்கு சொல்லப்பட்டுள்ளது.
    • ஆத்ம வித்யை இங்கு சொல்லப்பட்டுள்ளது
    • பிறரை தூங்க செய்ய மந்திரம் இங்கு உள்ளது.
    • விஷத்தை நீக்க மந்திரம் இங்கு உள்ளது.
    • சங்க நாதத்தின் பெருமை இங்கு சொல்லப்பட்டுள்ளது.
    • பிசாச சமனம் செய்வது பற்றி சொல்லப்பட்டுள்ளது
    • ராஜ்யாபிஷேகம் பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளது
    • தாய் பூமியின் (மாத்ரு பூமி/ராஷ்டிர தேவி) ராணுவ சேனையை கவனித்தல் பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளது.
    • காமதேனுவின் மகிமை இங்கு சொல்லப்பட்டுள்ளது
    • மரணத்தை தாண்டுவதை பற்றி சொல்லப்பட்டுள்ளது.

    காண்டம் 5:

    • உயிரை காப்பாற்றி கொள்வது பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளது
    • உலகிலேயே முதன்மையானவனாய் ஆகும் வழி இங்கு சொல்லப்பட்டுள்ளது.
    • குஷ்டரோகம் நீங்க மந்திரங்கள் உள்ளது.
    • ஸ்ர்பநாசம் செய்ய மந்திரங்கள் உள்ளது.
    • க்ருத்யைக்கு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.
    • மாட்டின் வ்யாதியை நீக்க மந்திரங்கள் உள்ளது.
    • குழந்தை உண்டாக மந்திரங்கள் உள்ளது.
    • புது வீட்டிற்கு குடி போவதற்கான மந்திரங்கள் உள்ளது.
    • ரக்ஷோக்னம் முதலிய விஷயங்களுக்கு மந்திரங்கள் உள்ளது.

    காண்டம் 6:

    • குழந்தை உண்டாக மந்திரங்கள் உள்ளது.
    • கர்பத்தில் வளரும் சிசு ஆண் பிள்ளையாக பிறக்க, பும்ஸ-வனம் மந்திரங்கள் உள்ளது
    • கர்பம் கலையாமல் இருக்க கர்ப-ரக்ஷண மந்திரங்கள் உள்ளது.
    • கண் வியாதிக்கு ஏற்ற சிகிச்சை, மருந்து, மந்திரம் உள்ளது.
    • தலைமுடி வளர தைலம், அதற்கான மந்திரங்கள் உள்ளது.
    • கன்னிகைக்கு பொருத்தமான பதி கிடைக்க மந்திரம் உள்ளது.
    • பையனுக்கு பொருத்தமான பெண் கிடைக்க மந்திரம் உள்ளது.
    • பைத்தியம் தெளிய மந்திரம் உள்ளது.
    • குஷ்ட ரோகம், யக்ஷ்ம ரோகம் நிவர்த்தி செய்ய மந்திரம் உள்ளது.
    • அம்புபட்ட பட்ட இடத்தில் சிகித்ஸை செய்ய மந்திரங்கள் உள்ளது.
    • கடன் அடைவதற்கு மந்திரம் உள்ளது.
    • உணவு கிடைத்து கொண்டே இருக்க மந்திரம் உள்ளது.
    • ஞாபக சக்திக்கு மந்திரங்கள் உள்ளது.
    • அன்பு உண்டாக மந்திரங்கள் உள்ளது.

    காண்டம் 7:

    • கண்டமாலை என்ற ரோகம் நீங்க சிகித்ஸையும், மந்திரமும் உள்ளது.
    • கெட்ட ஸ்வப்னங்கள் நீங்க மந்திரம் உள்ளது.
    • கவசம் அணிவதற்கு மந்திரம் உள்ளது

    காண்டம் 8:

    • ப்ரதிஸர மணியை பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளது.
    • கர்ப தோஷ நிவாரணம் சொல்லப்பட்டுள்ளது.
    • பலவிதமான மூலிகைகள் பற்றிய ரஹஸ்யங்கள் சொல்லப்பட்டுள்ளது.

    காண்டம் 9:

    • மது வித்யை சொல்லப்பட்டுள்ளது
    • சாலை நிர்மானம் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
    • அதிதி ஸத்காரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
    • காமத்தின் பெருமை சொல்லப்பட்டுள்ளது.
    • ஆத்ம வித்யை சொல்லப்பட்டுள்ளது.

    காண்டம் 10:

    • க்ருதயா பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.
    • மணி பந்தனம் சொல்லப்பட்டுள்ளது.
    • ஸர்வாதார வர்ணனம் சொல்லப்பட்டுள்ளது.
    • கோமாஹாத்யம் சொல்லப்பட்டுள்ளது.

    காண்டம் 11:

    • ருத்ர ஸூக்தம் இங்கு உள்ளது.
    • அன்னம், ப்ராணன் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
    • ப்ரம்மசர்யம் பெருமை சொல்லப்பட்டுள்ளது.

    காண்டம் 12:

    • பூமியை பற்றி ஒரு பெரிய ஸூக்தம் இங்கு உள்ளது. பூமியின் பெருமை சொல்லப்பட்டுள்ளது.
    • வராஹ அவதாரம், த்ரிவிக்ரம அவதாரம், ப்ருது அவதாரம் சொல்லப்பட்டுள்ளது.

    காண்டம் 13:

    • முற்றிலும் உபநிஷத்து போல, வேதாந்த விஷயங்களே இங்கு உள்ளது

    காண்டம் 14:

    • விவாஹ மந்திரங்கள் யாவும் இங்கு கிடைக்கிறது

    காண்டம் 15:

    • இதிலும் உபநிஷத்து போல, வேதாந்த விஷயங்களே இங்கு உள்ளது.
    • இங்கு 'வ்ராத் ஸூக்தத்தில்'  பரமாத்மாவை 'வ்ராத்யன்' என்ற பதத்தினால் அழைக்கிறது. வ்ரதத்தினால் அடையப்படுபவன் என்பதால் பரமாத்மாவுக்கு இந்த பெயர் கொடுத்து அழைக்கிறது.

    காண்டம் 16:

    • கெட்ட கனவுகள் பலிக்காமல் இருக்க மந்திரம் இங்கு உள்ளது.
    • துக்கத்திற்கு விமோசன மந்திரம் உள்ளது.
    • கெட்டவர்களை நாசம் செய்ய, மந்திரங்கள் உள்ளது.

    காண்டம் 17:

    • அப்யுதம் (மங்களம்) உண்டாக பிரார்த்தனைகள் இங்கு உள்ளது

    காண்டம் 18:

இறந்த பிறகு ஒருவருக்கு செய்ய வேண்டிய கர்ம காரிய மந்திரங்கள் இங்கு உள்ளது.

    காண்டம் 19:

    • புருஷ ஸூக்தம் உள்ளது
    • நக்ஷத்திரங்களை பற்றிய ஸூக்தம் இங்கு உள்ளது.
    • சாந்தி கோஷம், தர்ப மணி, ஔதும்பர மணி, சதவார மணி போன்ற மணிபந்தங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ளது.
    • ராத்ரி தேவதை, காலம், வேதமாதா, பரமாத்மாவை பற்றிய விஷயங்களை பேசுகிறது

    காண்டம் 20:

    • இந்திரனின் பெருமையை பற்றிய சூக்தங்களே இங்கு உள்ளது

    * ப்ராஹ்மணம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)

    1. அதர்வ ப்ராஹ்மணம்


    இங்கு சொல்லப்பட்ட சம்ஹிதைகள் இன்று இருக்கிறது. 

    1000 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில், இது போல பல சம்ஹிதைகள் காப்பாற்றி வந்த ப்ராம்மணர்கள் கொல்லப்பட்டு, அழிந்து விட்டது. 

    ஸாம வேதத்தில் 100க்கும் மேல் சம்ஹிதைகள் இருந்தன. அதில் இன்று இரண்டே இரண்டு மட்டும் தான் உள்ளது.


    அதிலும் ஜைமினி சாகை என்ற சம்ஹிதை காற்றுள்ள வேதியர்கள் மிகவும் குறைவே. 

    இந்த சந்ததியினர் காப்பாற்றப்படாமல் இருந்தால், இந்த சம்ஹிதையும் மறைந்து போய் விடும்.

    சம்ஹிதைகள் (மந்திரங்கள்) அத்யயனம் செய்து முடித்தாலேயே, அந்த வேதத்தை படித்ததாக ஆகும்.

    மேலும்,

    ப்ராஹ்மண பாகத்தில் உள்ள உபநிஷத்துக்களை தெரிந்து கொண்டால், வேத மந்திரங்களின் அர்த்தமும் (வேதாந்தம்) விளங்கும்.

    ரிக் வேத சம்ஹிதை (மந்திர பாகம்) முழுவதையும், 45 மணி நேரம் தொடர்ந்து எதையும் பார்க்காமல், உச்சரிப்பு பிசகாமல் சொல்லும் வேத ப்ராம்மணர்கள் இன்றும் உள்ளனர்.

    இதற்கு இவர்கள் தங்கள் பால்ய வயதான 7 முதல் 16 வயது வரை கடுமையான வ்ரதங்களுடன், தினமும் 4 மணிக்கு எழுந்து, உணவு கட்டுப்பாட்டுடன், 8 மணிநேரம் தினமும் பயிற்சி செய்து, பெற்றோருடன் வசிக்காமல், குருகுல வாசம் செய்து, வேதத்தில் உள்ள சம்ஹிதையை உச்சரிப்பு பிசகாமல் கற்று கொள்கின்றனர்.

    இதற்கு மேல், ப்ராஹ்மண பாகத்தையும் தெரிந்து கொள்ள மேலும் பல வருடங்கள், ஆயுள் முழுக்க செலவு செய்து கற்று கொள்கின்றனர்.

    இத்தகைய தவ வாழ்வு காரணமாக ப்ராஹ்ம்மணர்கள் மதிக்கப்பட்டனர். 

    இன்றும் அத்தகைய வேத ப்ராஹ்ம்மணர்கள் மதிக்கப்படுகின்றனர்.

    குருநாதர் துணை

Thursday, 2 September 2021

ஆதி தமிழன் யார்? யார் பழங்குடி? Who is Native Tamilan?

ஆதி தமிழன் யார்? யார் பழங்குடி? யார் தமிழன்?

தமிழ் சங்க இலக்கியம் என்ன சொல்கிறது?



"தொல்குடி தமிழன்" என்று சங்க இலக்கியம் யாரை சொல்கிறது??


சங்க இலக்கியங்களில் ஒன்றான "திருமுருகாற்றுப்படை" நமக்கு பதில்" சொல்கிறது.


பழங்குடியினருக்கு என்று சலுகைகள் அரசாங்கம் கொடுக்கிறது... 

ஆனால், "உண்மையான பழங்குடி யார்?" என்று அரசாங்கம் சங்க இலக்கியங்களை படித்து முடிவு செய்ததாக தெரியவில்லை.


சங்க இலக்கியமான "திருமுருகாற்றுப்படை", அந்தணர்களே தமிழகத்தில் இருந்த "பழங்குடியினர்" (தொல்குடி) என்று தெளிவாக சொல்கிறது.  


அதிலும், 

இந்த அந்தணர்கள் பல ரகங்களில் இருக்கிறார்கள். 

(சாம வேதம் அறிந்தவர், ரிக் வேதம் அறிந்தவர், யஜுர் வேதம் அறிந்தவர், அதர்வண வேதம் அறிந்தவர், இரண்டு வேதங்கள் (த்விவேதி) அறிந்தவர், மூன்று வேதங்கள் ஒரு சேர அறிந்தவர் (த்ரிவேதி), நான்கு வேதமும் அறிந்தவர் (சதுர்வேதி)) 

என்று சொல்கிறது.


சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை,  “பலவேறு தொல்குடி அந்தணர்கள் இருந்தார்கள்” என்று தெளிவாக சொல்கிறது. 


இருமூன்று எய்திய இயல்பினில் வழாஅது 

இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி

என்ற பாடலில், 

"அந்தணர்களுக்கு (2+3) 6 கடமைகள் உண்டு. 

அவர்கள் பெற்றோர்கள் உயர்ந்த பண்புகள் கொண்டு இருந்தார்கள். 

இந்த அந்தணர்களே, ஆதியில் இருந்தே வாழ்ந்து வரும் தொல்குடியினர் '

என்று சான்றிதழ் கொடுக்கிறது. 


வாழ்க திருமுருகாற்றுப்படை..


உண்மையான தமிழன்..  அந்தணனே!

ஆதி பழங்குடி தமிழன்.. அந்தணனே!