Followers

Search Here...

Friday, 24 April 2020

நிர்வாகம் செய்ய, குடும்பம் நடத்த முக்கியமான தகுதி எது? தெரிந்து கொள்ளவேண்டும்...

சகிப்பு தன்மை
குடும்பத்துக்காக சம்பாதித்து, குடும்பத்துக்காகவே உழைத்தாலும்,
குடும்பத்தில் உள்ளவர்களே சில சமயம் அவமானப்படுத்தவும் செய்வார்கள். திட்டுவார்கள்.




"குடும்பத்துக்கே இவன் தான் ஆதாரம்"
என்று தெரிந்தும் அவமானம் செய்யத்தான் செய்வார்கள். குறை கண்டுபிடிப்பார்கள்.
இது இயற்கை என்று உணர வேண்டும்.
பலரை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவனுக்கும் இதே நிலை தான்.
கீழே வேலை பார்ப்பவர்களே திட்டுவார்கள், கேலி செய்வார்கள்...

இப்படி கேலி செய்பவர்களை, திட்டுபவர்களை கண்டு கோபப்பட்டால், சமயத்தில் கவிழ்த்தும் விடுவார்கள்.
வியாபாரத்தை முடக்கி விடுவார்கள்.
கோபம் கூடவே கூடாது..
பொறுப்பில் இருப்பவர்கள் பொறுமையை இழக்கவே கூடாது.

'சகிப்பு தன்மை'யால் மட்டுமே, தனக்கு ஏற்படும் அவமானங்களை கண்டுகொள்ளாமல் சமாளிக்க வேண்டும்.

இவர்கள் செய்யும் கேலிகளை, திட்டுதல்களை பொறுமையுடன் ஆலோசனை செய்து பார்க்க வேண்டும்.

நியாயம் இல்லாத கேலிகளை, திட்டுதலை, ஆலோசனைகளை சிரித்து கொண்டே விலக்க வேண்டும்.
கோபம் அடையாமல் சகித்து, அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்.
சகிப்பு தன்மை இல்லாதவன்,  குடும்ப நிர்வாகம் செய்யவும் லாயக்கு இல்லை.

சகிப்பு தன்மை இல்லாதவன்,
நிர்வாகம் செய்யவும் லாயக்கு இல்லை.

சகிப்பு தன்மை இல்லாதவன்,
எந்த பொறுப்பை ஏற்கவும் லாயக்கு இல்லை.

Wednesday, 22 April 2020

யமன் செய்த அவதாரம்... பற்றி தெரிந்து கொள்வோமே

'ஆணிமாண்டவ்ய ரிஷி' ஒரு சமயம் ஆழ்ந்த தியானத்திலிருந்த பொழுது,  அவருடைய ஆஸ்ரமத்துக்குள், திருடர்கள் நுழைந்து அவர்கள் திருடிய பொருட்களை போட்டு விட்டு ஓடி விட்டனர்.
இவர்களை துரத்தி வந்த காவலர்கள், இவருடைய ஆஸ்ரமத்தில் நுழைந்தனர்.
மகரிஷியின் அருகில் அரண்மனையில் திருடிய நகைகள்  கிடப்பதைக் கண்டு இவரை சந்தேகப்பட்டு சிறைப்படுத்தி விட்டனர்.




அந்த காலங்களில், திருடுவதற்கு மக்கள் பயப்படுவார்கள்.
திருட்டுக்கு தண்டனையாக கழுவேற்றி விடுவார்கள். 
கழுவேற்றம் (impalement) என்பது ஒரு மரணதண்டனை. கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றி விடுவார்கள்.
அரச தண்டனை மிக கடுமையாக இருந்த காலம் அது.
எதிர்பாராவிதமாக, இவர் திருடவில்லை என்று நிரூபணம் ஆகாமல் போக, அரசன், தண்டனை யாருக்கும் பொது என்ற காரணத்தால், மாண்டவ்ய ரிஷியை ஊசி போல இருக்கும் கழுவில் ஏற்றி  விட்டான். 

தியானம் கலையாமலேயே இருந்த ரிஷி, உடல் நாசமானதால், 
தன் சூக்ஷ்ம ரூபத்துடன் யமலோகம் சென்று விட்டார்.

கழுவேற்றிய மரத்தில் தன் உடல் கிடப்பதை பார்த்த ரிஷி, எம தர்மமனிடமே நியாயம் கேட்டார்.

"தான் செய்யாத குற்றத்துக்கு இத்தனை பெரிய தண்டனையா?"
என்று யமதர்மனை கேட்டார்.

ரிஷியான மாண்டவ்யரை பார்த்து எம தர்மராஜன்,
"ரிஷி ! நீங்கள் சிறு வயதாக இருக்கும் போது, ஒரு தும்பியின் வாலைக் [பட்டாம்பூச்சி] கயிற்றால் கட்டி அதன் அடிப்பகுதியை முள்ளால் குத்தி கொடுமை படுத்தினீர்கள். அதற்கான தண்டனையே இது” என்று சொன்னார்.
இதை கேட்ட மாண்டவ்ய ரிஷி,
“என்ன அநியாயமான சட்டம் இது!! 
அறியாப் பருவத்தில் செய்த சிறு தவறுக்கு இத்தகைய பெரிய தண்டனையா? 
16 வயது வரை நல்லது எது? கெட்டது எது? என்று தெரியாதே !  
குழந்தை பருவத்தில் செய்யும் பாவங்களுக்கு இப்படி ஒரு சட்டம் இருக்குமானால், நான் செய்த தவத்தை நீங்கள் பலனாக ஏற்றுக்கொண்டு, 16 வயது வரை செய்த பாவங்களுக்கு தண்டனை கிடையாது என்று சட்டத்தை மாற்றுங்கள்" 
என்று சொல்லிவிட்டார்.

அவர் செய்த தவத்துக்கு பலனாக, யமதர்மன் "சரி! மாற்றினேன்" என்று உடனேயே சட்டத்தை மாற்றினார்..
உடனே மாண்டவ்ய ரிஷி, யமதர்மனை பார்த்து,
"அறியாப் பருவத்தில் செய்த சிறு தவறுக்கு தண்டனை இல்லை என்று சட்டத்தை மாற்றி விட்டீர்கள். 
இருந்தாலும், அதோ பாருங்கள்..  என் உடல் இன்னும் அதே கழுவில் உள்ளது. 
சட்டம் மாற்றிய பிறகும், நடைமுறையில் இல்லாத சட்டத்தால், தண்டிக்கப்பட்டு இந்த உடல் இன்னும் பூமியில் கிடப்பதால், அதற்கு பிராயச்சித்தமாக, நீங்களும் பூமியில் அவதரிக்குமாறு, நான் சாபமிடுகிறேன்."
என்று சொல்லிவிட்டார்.

"ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்ய போகிறார், நாராயணன்"
என்று தெரிந்ததும், அவருக்கு முன்பாகவே முப்பத்து முக்கோடி தேவர்களும் பிருந்தாவனத்தில் இடையர்களாக அவதாரம் செய்து விட்டனர்..

ரிஷிகள் கோபிகைகளாக வந்து விட்டனர். 

எம தர்மனுக்கு மட்டும் ஓய்வே கிடையாது. 
நரகத்தில் இவருக்கு எப்பொழுதும் வேலை. 

"தானும் கிருஷ்ண  அவதாரத்தில் கலந்து கொள்வோமா? 
தன்  வீட்டுக்கும் கண்ணன் ஒரு முறையாவது வருவாரா?" 
என்று காத்து இருந்த யமதர்மன், ஆணி மாண்டவ்யர் கொடுத்த சாபத்தை அனுகிரஹமாக ஏற்றுக்கொண்டு, தன் சார்பாக சித்ரகுப்தனை சிறிது காலம் பார்க்க சொல்லிவிட்டு,  விதுரராக அவதரித்தார்.
மஹாபாரதத்தில் விதுரர் சொல்லும் தர்மங்கள் "விதுர நீதி" என்று புகழ் பெற்றது. 
தர்மத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால், "விதுர நீதி" படித்தாலேயே போதும்.




யமதர்மனுக்கு "ஸ்ரீ கிருஷ்ணரை" பஜிப்பவர்களை கண்டால் பேரானந்தம் உண்டாகும்.  
யமதர்மனே கிருஷ்ண பக்தர் தான், என்கிற போது "யமனை கண்டு நாம் ஏன் அச்சம் கொள்ளவேண்டும்?".

வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்.
வாழ்க ஹிந்து தர்மம்.
வாழ்க நம் புராணங்கள்.

Sunday, 19 April 2020

Why Sita Devi went for Agni Pariksha (Fire Test)? How Divine Couple interact with each other? - Hindus must read....

Shri Rama and Sita Devi are divine couples. They are the incarnation of Supreme God (Narayana) and Mahalakshmi.
Every husband and wife were termed as "Couples".
But,
Shri Rama and Sita Devi are always termed as "Divine Couples".




A Normal couple, have to speak to express their needs.
A Divine couple, can understand each other needs even without speech or expressions.
Ravana kidnapped Rama's wife Sita, disguising himself as a Fake Sadhu to Srilanka from Panchavati, Maharashtra (Nasik) like a coward.
Rama travelled from Maharastra till Srilanka (almost 2000KM by walk) and destroyed mighty Army of Ravana and Killed Ravana for his cheap behaviour.
Rama was elated to bring back Sita.  
Since Rama can't enter any city in his exile period, he asked Vibheeshana to bring back Ayodhya Queen "Sita" with due respect to his place.

Vibeeshana along with his wife and daughter with due respect took Sita Devi in a closed chariot and took her towards Rama's place.
Shri Rama was surrounded by millions of Warriors including Hanuman, Sugriva. 
These warriors fought for Rama and even ready to give up their lives to bring back Sita.
More importantly, they were ready to give up live for sita whom "no one have ever seen" except Hanuman.

When Sita Devi in the Closed Chariot coming near Rama's place, the millions of warriors shouted "Sita Mata ki Jai..", "Jai Shri Ram".   
Everyone got excited and there was a huge excitement over the victory achieved. 
Shri Rama felt, that this millions of Warriors who fought for Sita come back, should have the privilege to see Sita Devi before they leave to Ayodhya.
Sita Devi have almost came near to his place.

Rama, signalled to let Sita Devi to walk a little distance, so that warriors can have a glimpse of Sita Devi.

The Elated Sita Devi happily came out of the Chariot and started Walking on Foot towards Rama.

The Crowd became Crazy after seeing Sita Devi. 
There was a Huge roar and chanting of "Jai Sitaram"..  
There was a huge cry over the warriors to see Sita Devi.
Some shouted "Here is Sita Devi... "
Some shouted "I saw Sita Devi.."  
Some shouted "Where is Sita devi?...". 

Being a Queen and an elite Woman and who always think about her husband,
Sita suddenly felt extremely disturbed and embarrassed about herself.  

She took her Saree and closed her face completely. 
With so much of hatred, she Hide her face completely, and walked towards Rama and stood before him.

There is no talk between Sita and Rama.  

Being a Divine Couple, Rama understand Sita's mindset

If we are also Divine couple or True Mahatma, We could have understood what went thru Shri Rama and Sita devi inside.

This is what happened to Sita Devi: 
Sita Devi was extremely happy to get back to her Husband. She was extremely happily to walk on foot amidst of the Warriors who fought for her.
But suddenly, she felt extremely ashamed of herself, that "Ravana captured him and kept her in Ashoka Vana for 9 months".  
She felt extremely self-depreciated with the incident happened to her.

Sita Devi felt extremely sad, that "How the world would react to her going forward?"  
Moreover,
She felt "How world would criticize and shame his Husband if he accepts her?" 




Sita Devi, very well knew that "She was pure and frightened Ravana to come near her".
There is no question on chastity..  
But she could not find any answer "How the people would believe her?" 
She could not find any answer, "How people will treat Rama going forward, if he acccept her as princess who was captured by other man for months..?

She felt extremely stressed that "She is going to defame his husband fame forever !"  

These thoughts brought Sita Devi to an extreme distress.. 
She didn't even had the courage to see the crowd.
She didn't had any clue how to handle this situation..
Yet,
Since Rama asked Vibheeshana to bring Sita, she had to obey his husband order.
Also, she believed that "only her Husband can relieve her from this extreme distress."



Sita devi felt like "Sacrificing her own life after seeing her husband once".  
She didn't wanted to live and bring shame to Rama. 
She didn't wanted to live because she felt people around cannot be convinced.
She didn't want to live as she don't know how to show her Chastity and Purity.

With Such state of mind, when Sita Devi stood before Rama, Rama immediately understood her situation.

As a husband, he wanted to eliminate her distress in any means.  

To eliminate her distress, he was even ready to show the world that he was arrogant in front of everyone who fought for him..

Knowing Sita Situation, Rama turned his face towards Lakshmana and said these Harsh words,
"Lakshmana!  As a responsible Husband and being Brave Kshatriya Men, my duty was to save Sita.
With all my might, i had travelled all the way from Panjavati till Lanka (almost 2000km) and killed Ravana and saved her now.  

Now, if Sita wants to live in Ayodhya, she is welcome. I can support her financially and she can live their peacefully. 
If Sita wants to live in Kishkinda, she can very live there. Sugriva will take care of her like his sister and protect her.
If Sita wants to live here in Lanka, she can live here as well. Vibheeshana will take care of her like his true sister and protect her.
If Sita want to live anywhere, she can live wherever she likes. I will give her all support"

Rama who cried for Sita Devi,
Rama who walked 2000KM to bring back Sita Devi,
Rama who killed mighty Kumbakarna, Ravana to bring back Sita Devi,
Rama who is never known to speak harsh words on anyone,
Rama who himself asked Vibheeshana to bring back Sita Devi with Due respect,
have spoken such Harsh Words to everyone's surprise. 

It was a surprise and shock to everyone, except "Sita Devi".

Sita Devi who was standing before Rama in extreme distress, felt like a medicine over the wound. 

Even though Rama says "Live anywhere and i will support you, he never said i have divorced you....". 
This means that, he is ready to accept her, provided Sita feels good about herself.

Sita who felt like giving up her life with such stressful mind, felt that She got the approval from his husband to prove herself.

Just like Rama spoke to Lakshmana, Sita turned towards Lakshmana and commanded him,
"Lakshmana!  I am not interested to live if i can't live with Shri Rama.  
I want to sacrifice my life here itself in front of Rama.  
If i am pure and rama is also eka-patni vradan (who dont marry anyone else), may this fire don't burn me. 
I don't want to waste a minute.  Please setup a fire with woods now"

Lakshmana looked at his Brother Rama for his acceptance.
Rama showed sign of acceptance.

Lakshmana who is such a true servant and brother of Rama, went ahead and setup the fire with huge woods.

Everyone around, got into the state of shock, after such a Huge Victory over Ravana, except Hanuman. 

Hanuman looked with absolute calmness.
He never felt "Sita would get burnt in fire" by his own experience. 
When Ravana set fire in Hanuman's tail in Lanka, Hanuman did not got burnt even an inch, but set entire Lanka on fire. 

Before leaving Lanka, Hanuman once again visited Sitadevi and found that Sita Devi herself was praying for hanuman safety and requested Agni Bhagavan not to burn him.
If Sita Devi can save Hanuman from fire, can't she save herself from Fire?  
Due to this,
Hanuman had no fear in his heart and watching the proceedings.

He was also damn sure that nothing will happen, not only because sita can protect herself, but,
she also said "if rama is eka-patni vradhan may this fire don't burn me."

So, Hanuman had no doubt in his mind and was looking at the proceedings with absolute calmness.
Sita devi entered the flame and came out of the flame like a fragrant flower with no inch of burn. 

Sita Devi felt extremely happy and elated that she could prove herself.  
Also, she felt extremely happy that she can now be a Queen of Rama. 
All her stress got disappeared.  She was in a state of Joy.

She happily walked towards Rama and sat besides him like a Queen.
Rama smiled at her with extreme happiness that her stress got disappeared.  
The Warriors and Leaders like Sugriva, Vibheeshana, Hanuman, and Lakshma got elated to have the Darshan of Shri Rama and Sita Devi together.




If Rama have spoken such a harsh words from Heart, how Sita would have reacted after proving herself?  But she was elated and came and sit besides Rama.

If Rama have spoken such a harsh words from Heart, how Rama himself would have accepted when sita devi sat besides him?

This is the Divine Couple who interacted between each other without speech but able to convey each other.
Hence, Lord Rama and Sita Devi are still guiding the Human Community on how to live like a Human with strong principles.

Rama accepted Sita as her Queen and took her happily back to Ayodhya.

Normal People, can never understand why Sita Devi closed her face with Saree while walking towards Rama. 
Normal People can never understand, the hearts of Divine couples (Sita and Rama) who are divine and who speaks from their heart.

Only Divine Couple and Mahatma, can really understand what went inside Rama and Sita and can understand this.    

Blessed are those who read this..  
Blessed are those who believe in Hindu Culture...
Blessed are those who value the Hindu Marriages which never allows Divorce.


Saturday, 18 April 2020

ப்ருஹஸ்பதியின் மனைவி தாரா, சந்திரன் மூலமாக புதனை பெற்றாள்.. வேதம் என்ன சொல்ல வருகிறது?.. புரிந்து கொள்வோம் காரணத்தை...

"பேன்" தலையில் ஏற்படும் புழுக்கத்தில் இருந்து தானாக உண்டாகிறது.
பேன் "மனிதனால் உண்டானது" என்பதே உண்மை.
அதற்காக, பேனுக்கு தகப்பன் "மனிதன்" என்று சொல்ல முடியுமா? 
இது உண்மை என்றும் சொல்லலாம்.
இது உண்மையில்லை என்றும் சொல்லலாம்.

அது போல,
சில படைப்புகளை, வேதம் சொல்லும் போது, அனைத்தையும் "ஆண் பெண் சேர்க்கை" என்ற காம எண்ணத்துடனேயே பார்க்க கூடாது...




"மனிதனிடம் இருந்து பேன் உண்டானது" என்று சொன்னாலும், "இருவருக்கும் தகப்பன் மகன் உறவு இல்லை" என்று தெரிகிறது.

ஆண் பெண் சேர்க்கை இல்லாமல் சில படைப்புகள் உருவாகின்றன. 
ஆதியில் ப்ரம்ம தேவன் நாராயணனால் படைக்கப்பட்டதும், 
பிறகு, ப்ரம்ம தேவனிடமிருந்து ருத்ரன் வெளிப்பட்டதும், 
ப்ரம்ம தேவனின் மனதால் சனத் குமாரர்கள், ரிஷிகள், ஸ்வாயம்பு மனு போன்றவர்கள் படைக்கப்பட்டார்கள் என்பதும் இது போன்றதே..

"ஆண் பெண் சேர்க்கை படைப்பு" என்று நம் கீழ்த்தரமான புத்தியுடன் பார்க்க கூடாது.

மனிதன் இதை புரிந்து கொள்ள தானோ என்னவோ!! அவனவன்  தலையிலேயே பேன்  உருவாகி, "படைப்புகள் அனைத்தும் ஆண் பெண் சேர்க்கையினால் மட்டும் இல்லை என்று புரிந்து கொள்" என்று தலையை பிராண்டிக்கொண்டே இருக்கிறது.

வேதம், சில படைப்புகளை ஆண் பெண் சேர்க்கையாக சொல்லும். 
வேதம், சில படைப்புகளை திவ்யமான படைப்பாக சொல்லும். 
வேதம், சில படைப்புகளை கிரகங்கள் குணத்தை பார்த்து சொல்லும்.. 
அனைத்தையும் "ஆண் பெண் சேர்க்கை" என்ற புத்தியுடன் பார்ப்பவன், வேதம் சொல்வதை புரிந்து கொள்ளவே முடியாது.

சூரியன் உதித்தால், தாமரை மலரும். என்று சொல்கிறோம்
"தாமரைக்கும் சூரியனுக்கும் சம்பந்தம் உண்டு" என்று சொல்லும் போது, இது "காம உறவு" என்று நினைக்க கூடாது.
"தூங்கு மூஞ்சி மரம், சூரியன் மறைந்து விட்டால், கூம்பி விடும்". ஆதலால், 
"சூரியனுக்கு இந்த மரத்துக்கும் காதல்" என்று நினைக்கக்கூடாது.

இந்த இரண்டுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது. 
இந்த சம்பந்தத்தை சொல்லும் போது, இதையே காமம் என்று நினைக்கக்கூடாது.
தேவர்களின் படைப்பை,
கிரகங்கள் (Planets, Stars) படைக்கப்பட்ட நிகழ்வை,
மனு அரசர் படைக்கப்பட்டதை சொல்லும் போது,
'நாம் பிறந்தது போல, இதுவும் ஆண் பெண் சேர்க்கையினால் ஏற்பட்ட படைப்பு தான்' என்று பார்க்க கூடாது.

தேவர்கள், ரிஷிகள், தேவர்களை,ரிஷிகளை,ஸ்வாயம்பு மனுவை ப்ரம்ம தேவன் மனதால் படைத்தார் என்று வேதம் சொல்கிறது.
நமக்கு மீறிய படைப்புகள் என்ற அளவாவது புரிந்து கொண்டு, பக்தியுடன் அறிந்து கொள்ள வேண்டும்.
மனித சக்திக்கு, புத்திக்கு அப்பாற்பட்ட காரியம் செய்ய கூடியவர்கள் தேவர்கள், ரிஷிகள்.




தெய்வ படைப்புகளை வேதம் சொல்லும் போது, பயபக்தியுடன் கேட்க வேண்டுமே தவிர, ஆண் பெண் சேர்க்கை என்ற ரீதியில் பார்க்கவே கூடாது.

ரிஷிகள் தேவர்களை படைத்தார்கள்.  
அத்ரியின் கண்களிலில் இருந்து தோன்றினார் "சோமன்" (சந்திரன் அம்சம்)

கஸ்யபர் ஒருவரே பல வித படைப்புகளை படைத்தார்.
"அசுரர்களை, தேவர்களை, பக்ஷிகளை, பாம்புகளை படைத்தார்" என்று வேதம் சொல்கிறது.

கஸ்யப ரிஷி, "பாம்பை ஸ்ருஷ்டி செய்தாரா?"
என்று மீண்டும் ஆண் பெண் சேர்க்கை என்ற புத்தியுடனேயே பார்க்க கூடாது.

"நாம் தான் பேனை ஸ்ருஷ்டி செய்கிறோம். மனிதனும் பேனும் ஒன்றா?" 
யோசிக்க வேண்டும்.

அது போல,
வேதம், சில படைப்புகளை பற்றி சொல்லும் போது, மனித உறவுகளை போல, ஆண் பெண் சேர்க்கை உறவு போல பார்க்கக்கூடாது.

"கிரகங்களில் சில கிரகங்கள் நட்பு கிரகங்கள்.. 
சில கிரகங்கள் எதிரிகள் என்றும்" வான சாஸ்திரம் சொல்கிறது.
இதை அறியும் போது, வேதம் சொல்லும் சில படைப்புகளை உண்மையாக புரிந்து கொள்ள முடியும்.


"ப்ருஹஸ்பதியின் மனைவி 'தாரா'.  தாராவுக்கும் சந்திரனுக்கும் 'புதன்' பிறந்தான்"
என்று சொல்கிறது வேதம்.
மேலும்,
புதன் 'மகா புத்திசாலியாக இருந்தான்' என்று சொல்கிறது வேதம்..
ராமபிரானாக பரமாத்மா அவதரித்த நாளும் "புதன் கிழமையே". 
'புதன் கிழமையில் பிறந்தவர்கள் புத்தி கூர்மை கொண்டவர்களாக இருப்பார்கள்' என்று சொல்கிறது நம் ஹிந்து தர்மம்.

மனித புத்தியுடன் இதை பார்த்தால்,
ஒரு மனைவியை இன்னொருவன்  கூட்டி சென்றுவிட்டானா?
என்று தான் பார்க்க தோன்றும்.

போலி மதத்தில் உள்ளவர்கள், இந்த கதையை எடுத்து காட்டி, ஹிந்துக்களை குழப்ப நினைப்பார்கள்.
மற்ற போலி மதங்களை போல "500 பக்க நாவல் அல்ல" நம் ஹிந்து தர்மம்.
காரணம் புரிந்து கொண்டால், போலி மதத்தை விட்டு, அனைவரும் ஹிந்துவாகி விடுவார்கள்.

வான சாஸ்த்திரம் அறிந்தவன் பார்க்கும் போது, இதன் மூலம் வேதம் என்ன சொல்கிறது? என்று ஆராய்கிறான்.

ப்ருஹஸ்பதி தேவர்களுக்கு குரு (Priest of Demi Gods in Heaven).
ஆங்கிலத்தில் "Jupiter Planet"  என்று கவனிக்க வேண்டும்.

"தாரா" என்றால் நக்ஷத்திரம்.
"Jupiter Planet (ப்ருஹஸ்பதி) கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நக்ஷத்திரம் (தாரா), 
ஒரு சமயம் சந்திரனின் (moon) கட்டுப்பாட்டில் வந்தது.
இந்த ஈர்ப்பினால், 
புதன் என்ற மிகவும் அழகான, புத்திசாலியான கிரகம் படைக்கப்பட்டது" 
என்பதையே வேதம் சொல்கிறது.
வான சாஸ்திரம் படிப்பவர்கள் இதை புரிந்து கொள்வார்கள்.
புதன் கிரகம் என்றால் "Mercury planet" என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இதை பார்க்கும் போது,
புதன் கிரகம் (Mercury), "சந்திரனுக்கு (moon) பிறகு படைக்கப்பட்டது" என்று தெரிகிறது.

ஒரு வேளை, மனிதன் சந்திரனில் வாழும் அளவிற்கு முன்னேறி விட்டால், புதன் கிரகம் (Mercury Planet), சந்திரனுக்கு பிறகு படைக்கப்பட்டதா? என்று ஆராய்ச்சி செய்யலாம்.
வேதத்தை கொண்டே பல ஆராய்ச்சிகள் செய்யலாம், இன்றைய ஆராய்ச்சியாளர்கள்.



சூரியன் மனிதனுக்கு ஆரோக்கியம் தருகிறது.
சந்திரன் மனிதனுக்கு புஷ்டி தருகிறது
என்று சொல்கிறது வேதம்.

சூரியன் எங்கு இருக்கிறது, நாம் எங்கு இருக்கிறோம்!!
எப்படி நமக்கு ஆரோக்கியம் தரும்? என்று கேட்பானா ஒரு அறிவாளி!!
"வைட்டமின் D  சத்து சூரியனில் இருந்து வருகிறது"
என்று அறிவியல் சொல்லி வேதம் சொல்வதற்கு ஆமாம் சொல்கிறதே?

"சூரியன், சந்திரன் போன்றவை நமக்கு ஆரோக்கியம், புஷ்டி தருகிறது" என்ற உண்மை இருக்கும் போது,
வேதம் "சாயா (நிழல்) கிரகங்கள் சூரியனை மறைக்கும் போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது" என்று சொல்கிறது.
சாயா கிரகங்கள் "ராகு கேது" என்றும் சொல்கிறது.
இவர்கள் அசுரர்கள் என்றும் சொல்கிறது.

பூமிக்கு அருகில் இருக்கும் சந்திரனை பற்றி அறிந்து கொள்ளவே இன்னும் முடியவில்லை!
இந்த சாய கிரகங்களோ இருட்டு என்று சொல்கிறது.. 
இதை கண்டுபிடிக்க பல லட்சம் காலங்கள் மனிதனுக்கு தேவைப்படும்.

"ஒரே அசுரன் தான் இப்படி ராகு, கேதுவாக ஆகி, சந்திரனை, சூரியனை சில நாழிகைகள் மறைக்கிறான்" என்று இவர்கள் யார் என்றும் வேதம் சொல்கிறது.

தேவர்கள் பாற்கடலை கடைந்து அம்ருதம் கிடைத்த போது, அசுரர்கள் எடுத்துக்கொண்டு ஓடி விட்டனர்.
இவர்களிடம் இருந்து சாமர்த்தியமாக மோகினி அவதாரம் செய்து வாங்கி, தேவர்களுக்கு அம்ருதம் போட்டார் மஹாவிஷ்ணு.
அப்பொழுது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் அமர்ந்த ஒரு அசுரன் அம்ருதம் சாப்பிட்டு விட்டான்.
இவனை தன் சக்கரத்தால் இரண்டாக துண்டித்து விட்டார் பெருமாள். அம்ருதம் சாப்பிட்டதால் ராகு கேது என்ற கிரகங்களாக ஆகி விட்டார்கள்.

சூரியன் இந்த கிரகங்களால் மறைக்கப்படும் போது, ஆரோக்கியம் நமக்கு குறையும், ஆதலால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது என்று சொல்கிறது.
"இது அறிவியல்".  இதை பொருட்படுத்தாத மக்கள், எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருக்கிறார்கள்.
ஒரு வைரஸ் (Corona) பாதிக்கும் போது, இவர்கள் லட்சணம் என்ன?
என்று தெரிந்து விடுகிறது.

வாழ்க நம் ஹிந்து தர்மம்..
வாழ்க நம் வேதம் சொல்லும் படைப்பின் ரகசியங்கள்..
ஹிந்துவாக பிறப்பதே நாம் செய்த புண்ணியம்..

ஆண் பெண் சேர்க்கை இல்லாமல், படைக்கப்பட்டார்கள் தேவர்கள், மனு போன்றோர். எப்படி இதை புரிந்து கொள்வது? சேர்க்கை இல்லாமல், படைக்கப்பட்டவர்கள் தேவர்கள், மனு போன்றோர். எப்படி இதை புரிந்து கொள்வது?

"ஆண் பெண் சேர்க்கை" மூலம் தான், படைப்புகள் அனைத்தும் நடக்கிறது என்ற கண்ணோட்டத்திலேயே, அனைத்தையும் பார்க்க கூடாது.  
ப்ரம்ம தேவன், தன் "மனதிலிருந்து சனத் குமாரர்கள், ரிஷிகள், ஸ்வயம்பு மனு போன்றவர்களை படைத்தார்" என்று வேதம் சொல்கிறது.




சனத் குமாரர்கள் "உலக சிருஷ்டியில் நாங்கள் ஈடு படமாட்டோம்" என்று ப்ரம்ம தேவனிடம் சொல்ல, கோபத்தை அடைக்க, அவர் நெற்றியில் இருந்து ருத்ரன் வெளிப்பட்டார் என்று சொல்கிறது.
அவரே 11 ருத்ரர்களாக பிறகு ஆகி, பிறகு கைலாயம் என்ற லோகத்துக்கு சென்று விட்டார் என்று சொல்கிறது வேதம். மேலும் படிக்க இங்கே பார்க்கவும்.

"ஆண் பெண் சேர்க்கை" மூலம் தான் படைப்புகள் அனைத்தும் நடக்கிறது என்ற கண்ணோட்டத்திலேயே, அனைத்தையும் பார்க்க கூடாது. 

சாதாரண பேன் எப்படி உண்டாகிறது? என்று கவனித்தாலே, வேதம் சொல்லும், ஆரம்ப கால ஸ்ருஷ்டி  நமக்கு புரிந்து விடும்.
நம் தலையில் உள்ள புழுக்கத்தில் இருந்து "பேன் உண்டாகிறது".. ஆண் பெண் சேர்க்கை தேவைப்படாமல் தானே உருவாகிறது.
ஆரம்ப படைப்பு எதுவுமே "ஆண் பெண் சேர்க்கை இல்லாமல் தான் நடக்கிறது".

மனிதனில் முதல் படைப்பு "மனு".
மனுவை தன் மனதிலிருந்து ஸ்ருஷ்டி செய்தார் பிரம்மா என்று சொல்லும் போது, "ஆண் பெண் சேர்க்கை இல்லாமல் மனித ஸ்ருஷ்டி எப்படி நடக்கும்?" என்று நினைக்கக்கூடாது.
"ஆரம்ப ஸ்ருஷ்டி எதுவுமே, சேர்க்கை இல்லாமல் நடக்கிறது" என்பதை நாம் புரிந்து கொள்ளவே, நம் தலையிலேயே பேன் உருவாகி நமக்கு புரிய செய்கிறது.
சற்று கவனிக்கும் போது தான், நமக்கு படைப்புகளின் ரகசியங்கள் புரியும்.

திடீரென்று நம் தலையில் பேன் உருவாவதையும்,
திடீரென்று மர பட்டையில் இருந்து மரவட்டை உருவாவதை கவனிக்கும் போது, ஆரம்ப ஸ்ருஷ்டியை புரிந்து கொள்ள முடியும்.

மனிதர்களால் எழுதப்பட்ட 500 பக்க போலி புத்தகம் அல்ல, ஹிந்து மதம்..
மனிதன் ஆடையில்லாமல் முட்டாள் ஆதாம் ஏவாளாக பிறந்தார்கள் என்று சொல்லவில்லை நம் தர்மம்.

முதல் மனிதனே ஸ்வாயம்பு மனு. மனு உலகை ஆளும் திறனுடன், அரசாங்க சட்டம் எப்படி இருக்க வேண்டும்? சமுதாயம் எப்படி அமைக்க வேண்டும்? என்று மனு நீதி கொடுத்தார் என்று மனிதன் மகா அறிவாளியாக தான் படைக்கப்பட்டான் என்று ஆரம்பிக்கிறது..

இன்று வரை நம் இந்திய சட்டம், மனு நீதியை கொண்டு தான் உள்ளது. அம்பேதகர், சட்டத்தை மனு நீதியை கொண்டே அமைத்தார்.
அது மட்டுமல்ல, போலி மதத்தில் உள்ளவர்களே, மனித குலத்தை "Adam" என்று சொல்லாமல் நம் மனுவை தான் "Man" என்று சொல்கின்றனர்.

போலி மதத்தை சேர்ந்தவன் கூட, மனிதன் முட்டாள் ஆதாம் வம்சம் என்று சொல்லி கொள்ள பிரியப்படவில்லை என்கிற போது, அறிவுள்ள ஹிந்துக்கள் சொல்வார்களா?

நாம் அனைவருமே மனு வம்சம்..
மனு பிரம்மாவால் படைக்கப்பட்டவர். ஆதலால் நாம் ரிஷி வம்சம்.




எந்த ஜாதியில் இருந்தாலும், உன் கோத்திரம் (பரம்பரை) என்ன என்று கேட்டால்? 
ஒவ்வொருத்தரும் நான் "கௌசீக ரிஷி" கோத்திரம், நான் "பரத்வாஜ" கோத்திரம் என்று சொல்கிறார்கள்.

நாம் எந்த ரிஷி பரம்பரை? என்பதை ஹிந்துக்கள் அனைவரும் தெரிந்து இருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் அந்த ரிஷியை பற்றி முழுவதுமாக தெரிந்து இருக்க வேண்டும்.

1000 வருட இஸ்லாமிய ஆக்கிரமிப்பில், 500 வருட கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில், "தான் எந்த ரிஷி பரம்பரை?" என்பதையே மறந்து விட்டார்கள் பலர்.

விழித்து எழ வேண்டும் ஹிந்துக்கள்..
தன் ரிஷி யார்? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
முடிந்தால், தன் வீட்டின் பெயராக ரிஷியின் பெயரை வைத்து அடையாளப்படுத்தி கொள்ள ஆரம்பிக்க வேண்டும்..

அவர் சரித்திரத்தை, பெருமையை எழுதி, அந்த குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு சொல்லி தர வேண்டும்..

இது ஒவ்வொரு ஹிந்துவின் கடமை... 
இதை செய்யும் போது, நம் குலம் எத்தனை பெருமை வாய்ந்த குலம் என்பது புரியும்..

"ஆதியில் அனைவருமே பிரம்ம தேவன் படைப்பு தான்"
என்பதும் புரியும்.
ப்ரம்மாவையும் படைத்த நாராயணன் தான், "நம் முழு முதற்கடவுள்" என்பதும் புரியும்.
சில ரிஷிகளை பற்றி தெரிந்து கொள்ள.. இங்கே படியுங்கள்.. நீங்கள் எந்த ரிஷி பரம்பரை என்று தேடுங்கள்.. உங்கள் ரிஷிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  

வாழ்க ஹிந்துக்கள்.