Followers

Search Here...

Thursday, 16 April 2020

ஸத்-அஸத் இரண்டுக்கும் அப்பாற்பட்டு இருக்கிறார் பரப்பிரம்மம் என்று சொல்கிறது வேதம்... புரியவில்லையே!! புரிந்து கொள்வோமே!

"ஸத்-அஸத் இரண்டுக்கும் சாட்சியாக, அப்பாற்பட்டு இருக்கிறார், பரப்பிரம்மம்" என்று சொல்கிறது வேதம்
"ஸத்" என்றால் "இருக்கிறது" என்று அர்த்தம்.
"அஸத்" என்றால் "இல்லை" என்று அர்த்தம்.

கேள்வி: உலகம் இருப்பது தெரிகிறதா?
கண் இருப்பவன் "உலகம் தெரிகிறது" (ஸத்) என்று சொல்கிறான்.
கண் இல்லாதவன் "தெரியவில்லை" (அஸத்) என்று சொல்கிறான்.




கேள்வி: இருட்டில் உலகம் தெரிகிறதா?
கண் இருப்பவனும் "உலகம் தெரியவில்லை" (அஸத்) என்று சொல்கிறான்.
கண் இல்லாதவனும் "உலகம் தெரியவில்லை" (அஸத்) என்று சொல்கிறான்.

கேள்வி: தெய்வம் இருப்பது தெரிகிறதா?
சிலர் "தெய்வம் இருக்கிறார்" (ஸத்)  என்று சொல்கிறார்கள்.
சிலர் "தெய்வம் இல்லை" (அஸத்)  என்று சொல்கிறார்கள்.

இப்படி எதை கேட்டாலும்,
சிலர் ஸத் என்றும், 
சிலர் ஸத் என்றும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

"ஸத்-அஸத் இரண்டுக்கும் அப்பாற்பட்டு இருக்கிறார், பரப்பிரம்மம்"
என்று சொல்கிறது வேதம்

வேதம் சொல்லும் இந்த ரகசியத்தை புரிந்து கொள்ள முடியுமா? 
குருநாதர் வழிகாட்டுகிறார்.

கேள்வி: இருட்டில் நீ இருப்பது தெரிகிறதா? 
கண் இருப்பவனும் "நான் இருக்கிறேன்" (ஸத்) என்று சொல்கிறான்.
கண் இல்லாதவனும் "நான் இருக்கிறேன்" (ஸத்) என்று சொல்கிறான்.

"இருக்கிறார் என்றும், இல்லை என்றும் யார் சொல்வது?" என்று கேட்டால்,
"நான் சொல்கிறேன்" என்று பதில் உள்ளுக்குள் இருந்து வருகிறது.

யார் பேசுவது? என்று கேட்டால், "நான் பேசுகிறேன்" என்று உள்ளுக்குள் இருந்து பதில் வருகிறது.

"நான் இருக்கிறேன்" என்று உள்ளுக்குள் இருந்து பேசுவது யார்?
உள்ளிருந்து பேசுவது "பரப்பிரம்மம்" என்று அறிந்து கொள் என்று வேதம் காட்டுகிறது.

இந்த பரப்ரம்மமே எங்கும் இருக்கிறது.
அந்த பரப்ரம்மமே பல ரூபத்தில் இருக்கிறது.
அந்த பரப்ரம்மமே "இது ஸத் என்றும், இது அஸத் என்றும்" சொல்லி லீலை (விளையாடு) செய்து கொண்டு இருக்கிறது.

ஸத்-அஸத் இரண்டுக்கும் அப்பாற்பட்டு சாட்சியாக இருக்கிறார் (ஸத்), பரப்பிரம்மம்.

"நானே பரப்பிரம்மம்" என்று சொல்வது அகம்பாவம். அப்படி ஒருவரும் சொல்லக் கூடாது.
மாறாக,
"பரப்பிரம்மே எங்கும் இருக்கிறார்" என்பதே உண்மை என்பதால்,
"பரப்பிரம்மே  நானாகவும் இருக்கிறார்" என்று சொல் லும் போது, அகம்பாவம் நமக்கு ஏற்படாது. 
"அனைவருமே பரமாத்மா ஸ்வரூபம் தான்" என்ற ஞானம் பிறக்கும் போது நமக்கு சித்த சுத்தி உண்டாகும்.

கடவுள் (பரப்பிரம்மம்) உள்ளே இருப்பதால் தான், மாயையின் காரணத்தால், "ஒருவன் கடவுள் இல்லை" என்றும், கொஞ்சம் உணர்ந்தவன் "கடவுள் இருக்கிறார்" என்று சொல்கிறான்.

கடவுள் இருக்கிறார் (ஸத்) என்று சொல்வதால் தான், பரப்பிரம்மம் இருக்கிறார் என்று நினைக்கக்கூடாது. அவர் என்றுமே இருக்கிறார்.
கடவுள் இல்லை (அஸத்) என்று சொல்வதால், பரப்பிரம்மம் இல்லாமல் போவதும் இல்லை. அவர் என்றுமே இருக்கிறார்.




உண்மையில்,
"கடவுள் இல்லை" என்று சொல்பவன், "நானே இல்லை" என்று சொல்கிறான். 
இதை விட ஒருவன் தன்னை தாழ்த்திக்கொள்ள என்ன இருக்கிறது?

"இருக்கிறார்" என்றாலும், "இல்லை" என்றாலும், 
இரண்டையுமே சாட்சியாக பார்த்து கொண்டு இருக்கிறார் பரப்பிரம்மம்.
இதையே வேதம், 
ஸத்-அஸத், இரண்டுக்கும் அப்பாற்பட்டு இருக்கிறார் பரப்பிரம்மம் என்று சொல்கிறது.

நம் ஆத்மாவே பரப்பிரம்மம் என்று உணர வேண்டும்.

வாழ்க நம் ஹிந்து தர்மம்
வாழ்க நம் ஹிந்துக்கள்

வாழ்க நம் குருநாதர்.


Tuesday, 14 April 2020

வ்யாக்ர பாதர் ரிஷி, தொளமிய ரிஷி பற்றி தெரிந்து கொள்வோமே... தெரிந்து கொள்வோமே நம் ரிஷிகள் பெருமையை..

வ்யாக்ர பாதர் முக்தி ஸ்தலம் "சிறுபுலியூர்".  
வ்யாக்ர பாதர், ஒரு சமயம் கைலாசத்தில் சிவபெருமானிடம் "ஆனந்த தாண்டவம் பார்க்க வேண்டும்"
என்று தன் ஆசையை சொன்னார்.




"புண்டலீகபுரம் என்ற தேசம் தக்ஷிண பாரதத்தில் உள்ளது.
அங்கு கோவிந்தராஜ பெருமாளாக மஹாவிஷ்ணு இருக்கிறார். 
அங்கு உங்களுக்கு தரிசனம் தந்து ஆனந்த தாண்டவம் செய்வேன்" என்கிறார்.
"கோவிந்தராஜ பெருமாள்" இருக்கும் இந்த தேசம், திரு சித்ரகூடம் என்று அழைக்கப்பட்ட காலம் அது.

வ்யாக்ர பாதர், தன்னுடன் பதஞ்சலி முனிவரை அழைத்துக்கொண்டு, இந்த தேசத்துக்கு வந்தார்.
சாயங்கால வேளையில், கோவிந்தராஜனுக்கு முன், சிவபெருமான் ஆனந்த நடனம் ஆட, நந்தி தேவர் தாளம் போட, வ்யாக்ர பாதர் இந்த காட்சியை பார்த்து ஆனந்தம் அடைந்தார்.  
நடனம் ஆடியதால், சிவபெருமானுக்கு இங்கு "நடராஜர்" என்று பெயர் ஏற்பட்டது.

பிறகு, "தனக்கு மோக்ஷம் வேண்டும்" என்று சிவபெருமானிடம் கேட்டார்.

சிவபெருமான் "ஞானம் நான் தருவேன்.. மோக்ஷம் பெருமாள் தருவார்"
என்று சொல்லி, நாராயணனை திரு அஷ்டாக்ஷர மந்திரம் சொல்லி தியானிக்க சொல்லி மறைந்தார்.

இன்று இந்த திவ்ய தேசத்தை, சிதம்பரம் என்றும் சிற்றம்பலம் என்றும் சொல்கிறோம்.

வ்யாக்ர பாதர் (புலி போன்ற கால் உடையவர்) "சிறுபுலியூர்" என்று சொல்லப்படும் திவ்ய தேசத்துக்கு வந்தார்.
அங்கு திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்து கொண்டே, நாராயணனை தரிசிக்க காத்து கொண்டிருந்தார்.
பெருமாள் கோகுலத்தில் பிறந்த "குழந்தை போல, தூளியில் ஆடிக்கொண்டே திவ்ய காட்சி கொடுத்தார்.

சிறு குழந்தையாக பெருமாளை, புலி போன்ற கால் உடைய வ்யாக்ர பாதர் இங்கு தரிசித்து, இங்கேயே இருந்து முக்தி பெற்றார்.

இதன் காரணத்தாலேயே இந்த ஊருக்கு "சிறு புலியூர்" என்று பெயர் ஏற்பட்டது.

"உபமன்யு" வ்யாக்ர பாதரின் புத்திரர்.
இந்த தமிழ்நாட்டில் தான், தொளமிய ரிஷியின் ஆஸ்ரமத்தில், உபமன்யு படித்தார்.

தன்  தகப்பனார் போலவே சிவபெருமானை  தரிசித்தார். 
இவருக்கு கண் தெரியாமல் போன போது, தொளமிய ரிஷி "காஞ்சி வரதராஜனை (அத்திவரதரை)" வழிபட சொல்ல,
பேரருளாளன் அருளால், கண் பார்வை இவருக்கு மீண்டும் கிடைத்தது.
பெரும் ரிஷி இவர்.

"ஆருணி, வைதன், உத்தங்கர்" போன்றார் உபமன்யுவுடன் படித்தார்கள்.

உத்தங்கர் தன் குருநாதரிடம் வேதம் முழுவதும் படித்து முடித்து விட்டு,
"குரு தக்ஷிணை தர வேண்டுமே" என்று குருவிடம் கேட்டார்.
"தனக்கு எதுவும் வேண்டாம், குருமாதாவிடம் கேள்" என்று சொல்லிவிட்டார்.

"பௌஷ்ய ராஜன் மனைவி வைத்து இருக்கிறாள். அதை வாங்கி கொண்டு வா" என்று  குருமாதா கேட்டாள்.
குருநாதர் "அதையே தனக்கு குரு தக்ஷிணையாக கொண்டு வா" என்று சொல்லிவிட்டார்.

பௌஷ்ய அரசனிடம் சென்று "தனக்கு நாக ரத்தினம் வேண்டும். குருநாதனுக்கு குரு தக்ஷிணையாக கொடுக்க வேண்டும்" என்று கேட்டு விட்டார் உத்தங்கர்.




விலைமதிப்பில்லாத நாகரத்தினத்தை உத்தங்கர் போன்ற வேத பிராம்மணன் தன்  குருநாதருக்காக தானம் கேட்கிறாரே, என்று தாராளமாக கொடுத்துவிட்டாள் அரசனின் மனைவி.

"தக்ஷகன்" என்ற நாகராஜன் பிறந்த இடம் "திருநாங்கூர்".
சிதம்பரம் ஆரம்பித்து திருநாங்கூர் (நாகூர்) தொடர்ந்து நூகூர், நாகப்பட்டினம் வரை "நாகர்கள் ஆண்ட" தேசமாக இருந்தது.

தமிழகத்தில் தான் ரத்தினங்கள் அதிகமாக அந்த காலங்களில் இருந்தது.
பிற்காலத்தில்,
திருநாங்கூரை தலைமையாக கொண்டு, திருமங்கை ஆழ்வார்  ஆட்சி செய்த பிரதேசம் இது.
அதை எடுத்துக்கொண்டு வரும் போது, தக்ஷகன் என்ற நாகராஜன், மனித வடிவெடுத்துக்கொண்டு, ப்ராம்மணனை போல வந்து, பேசிக்கொண்டே திடீரன்று கையில் இருந்த இரத்தின மாலையை எடுத்துக்கொண்டு ஓடி பாம்பு பொந்துக்குள் நுழைந்து விட்டான்.

மனிதன் ஒரு பாம்பு பொந்துக்குள் நுழைந்ததை கண்டு!! 'வந்தது நாகதேவன்' என்று புரிந்து கொண்டார் உத்தங்கர்.
பிறகு, இந்திரா தேவன், அக்னி தேவனின் உதவியால், தக்ஷகனை நாங்கூர் பிரதேசத்தில் இருந்து விரட்டி, ரத்தினத்தை கைப்பற்றினார்.

தன் குருவிடம் நாக ரத்தினத்தை குரு தக்ஷிணையாக கொடுத்து விட்டார்.

தக்ஷகன் பிறகு காண்டவ வனத்தில் இருந்து வந்தான். 
இந்த புதர் வளர்ந்த காட்டை தான், யுதிஷ்டிரருக்கு திருத்ராஷ்ட்ரன் கொடுத்தான். 
அர்ஜுனன் இந்த காண்டவ வானத்தை அழித்து, இந்திரப்பிரஸ்தம் (Delhi) என்ற நகரம் உருவாக்கினார்.
அங்கிருந்து தக்ஷகன் தப்பித்து சென்றான். 
இந்த தக்ஷன் தான், சாபம் காரணமாக பிறகு அபிமன்யுவின் மகன் "பரீக்ஷித்"தை விஷம் தீண்டி கொன்றான்.

பரீக்ஷித் மகன் ஜனமேஜயன் அரியணை ஏறினார்.
அப்போது, இந்த உத்தங்கர் தான், இவரிடம் சென்று
"தக்ஷகன் தான் உன் தகப்பனை கொன்றார்" என்று சொன்னார்..

இதற்கு பழி தீர்க்க, பெரிய சர்ப்ப யாகம் ஏற்பாடு செய்தான்.
தக்ஷசீலா என்ற இடத்தில் யாகம் ஆரம்பித்தான்.
உலகில் உள்ள நாகம் எல்லாம் தானாக அக்னி குண்டத்தில் வந்து விழ ஆரம்பித்தது.
அஸ்தீகர் என்ற ரிஷி, ஜனமேஜயனை சமாதானம் செய்து, யாகத்தை நிறுத்தினார். தக்ஷன் தப்பித்தான்.

ஜனமேஜயன் யாகம் செய்த இடம் இன்று, "தஷீலா (Taxila)" என்ற பெயருடன் இன்றும் இருக்கிறது.  இன்று பாகிஸ்தான் பகுதியாக போய் விட்டது.

பீஷ்மர் "வ்யாக்ரபாத கோத்திரம்". 
யுதிஷ்டிரிடம் "கோத்திரம் என்ன?" என்று விராட அரசன் கேட்ட போது, "தான் வ்யாக்ர பாத ரிஷி கோத்திரம்" என்று சொல்கிறார்.

தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் சிவபெருமானை நமக்கு கொடுத்த, சிறுபுலியூரில் பெருமாளை நமக்கு கொடுத்து,
தமிழ்நாட்டில் மோக்ஷம் அடைந்த வ்யாக்ர பாதர்,
மஹாபாரத குரு வம்சத்துக்கு ரிஷி
என்பது வட பாரதமும், தெற்கு பாரதமும் எத்தனை உறவை கொண்டு இருந்தது என்பது தெரிகிறது.

அர்ஜுனன் இந்த பிரதேசங்களில் ஸ்ரீரங்கம் வரை தீர்த்த யாத்திரை வந்த காரணமும் நமக்கு புரிகிறது.

Monday, 13 April 2020

யார் சந்நியாசி? "சித்த சுத்தி" என்றால் என்ன? "சித்த விகாரம்" என்றால் என்ன? சித்த சுத்தி யுடன் நாம் எப்போதும் இருந்தோம்?. எளிதான உதாரணத்துடன் தெரிந்து கொள்வோமே !

யார் சந்நியாசி?
சித்த சுத்தி யாருக்கு உள்ளதோ, அவனே சந்நியாசி.
சித்த சுத்தி யாருக்கு உள்ளதோ, குடும்பத்தில் இருந்தாலும், அவனும் சந்யாசியே.

சித்தம் என்றால் "எண்ணம்" என்று அர்த்தம்.




"சித்த சுத்தி" என்றால் என்ன? "சித்த விகாரம்" என்றால் என்ன?

நம்முடைய சித்தம் இரட்டை குணங்களில் சிக்கி கொள்ளாதவரை, "சித்த சுத்தியுடன்" தான் இருக்கிறோம்.
இதை நாம் அனுபவித்தும் இருக்கிறோம்.
"சித்த சுத்தி" இருக்கும் வரை நாமும் 'சந்நியாசி தான்.

"சித்த சுத்தி" உள்ளவனே 'சந்நியாசி.

நம்முடைய சித்தம் இரட்டை குணங்களில் சிக்கி கொள்ளும் போது, "சித்த சுத்தி" கறைப்பட்டு, "சித்த விகாரம்" ஏற்பட்டு விடுகிறது. க்ருஹஸ்தன் ஆகி விடுகிறோம்.

இரட்டை குணங்கள் என்றால் என்ன? 
சுகம்-துக்கம், லாபம்-நஷ்டம்,
வெற்றி-தோல்வி, மானம்-அவமானம்,
இளமை-மூப்பு, ஆரோக்கியம்-ரோகம்,
ஆண்-பெண், வாழ்வு-சாவு.
இதை தான் இரட்டைக குணங்கள் என்று சொல்கிறோம்.

நாம் அனைவருமே குறைந்தபட்சம் சித்த சுத்தியோடு தான் பிறக்கிறோம்.
குழந்தையாக இருக்கும் போது, ஆண்-பெண் என்ற இரட்டைக பேதங்கள் இருப்பதில்லை.
பிறகு,
சித்த விகாரம் படிப்படியாக ஏற்பட்டு, உலகில் மாட்டிக்கொண்டு விடுகிறோம்.

ஒரு இளம் பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இளம் பெண்ணான இவள், அந்த ஆண் குழந்தையை தூக்கி கொஞ்சுகிறாள்..
ஆண் என்று தெரிந்தும், கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறாள்.
அங்கமெல்லாம் பார்த்து பார்த்து, தொட்டு தொட்டு, குளிப்பாட்டி விடுகிறாள்.
அந்த ஆண் குழந்தை, தன்னை தொட்டாலும் ரசிக்கிறாள். காமம் அடைவதில்லை

பெண் தானே இவள்? இந்த குழந்தையோ ஆண் ஆயிற்றே?
ஆனால்,
இவளுக்கு ஆணை தொடுகிறோமே!!  கொஞ்சுகிறோமே!! பார்க்கிறோமே!!
என்று மனம் விகாரம்  அடையவில்லையே?..

இவளுக்கு ஆணை தோடுகிறோமே என்ற கூச்சமோ, காமமோ ஏற்படவில்லையே?

இதன் காரணம் என்ன?
குழந்தை "சித்த சுத்தியுடன்" இருக்கிறது. இதுவே காரணம்.

இதன் காரணத்தால், அந்த குழந்தையை பார்க்கும் பெண்ணான தாய்க்கு, இவன் ஆண் என்ற வேற்றுமை தெரியவில்லை.
அதே ஆண் குழந்தை, 24 வயது ஆகி இளைஞனாக நிற்கும் போது,
தன் குழந்தை தானே என்று குளிப்பாட்டி விடுவாளா? குழந்தையை அன்று தொட்டது போல தொடுவாளா? மாட்டாளே..

அவள் குழந்தை தான். மறுப்பு இல்லை.
ஆனாலும், அந்த குழந்தைக்கு இப்போது சித்த விகாரம் ஏற்பட்டு விட்டது. இரட்டைகள் இருப்பது புரிகிறது.
ஆண்-பெண் வித்யாசம் தெரிகிறது.
குழந்தையாக இருந்த போது, இரட்டைகள் தெரியவில்லை. இவன் சித்தம் சுத்தமாக இருந்தது.

சித்தம் சுத்தமாக இருக்கும் போது, பேதம் தெரியவில்லை.
சித்தம் சுத்தமாக இருக்கும் குழந்தையை, பெண்கள் எல்லோரும் எடுத்து கொஞ்சினார்கள். காமம் ஏற்படவில்லை.

சித்த விகாரம் அடைந்த பின், பேதங்கள் தெரிந்து விடுகிறது.
பெற்ற தாயானாலும், தன் மகனிடமிருந்து ஒதுங்கி நிற்கிறாள்.

உண்மையில், உடலால் காமம் ஏற்படுவதில்லை.
யாருக்கு சித்தம் விகார பட்டு, இரட்டைகள் தெரிகிறதோ!
அவர்களுக்கே காமம், கோபம், பேராசை, பொறாமை உண்டாகிறது.




சித்த சுத்தி அடைந்தவனே சந்நியாசி.
அப்படிப்பட்ட மகான்களை தரிசிப்பதே பாக்கியம்.

இந்த நிலையில் இருந்தவரே, ஸ்ரீ சுகர்.

16 வயது பாலகனாக, சிவபெருமானே வ்யாசருக்கு அக்னியில் இருந்து தோன்றினார்.

வியாசர் "சாக்ஷாத் நாராயணன்".
பிராம்மண ரூபத்தில் பராசர ரிஷிக்கு மகனாக தோன்றினார். 
மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள் கொடுத்தவர்.
சேர்ந்து இருந்த வேதத்தை நான்காக பிரித்து கொடுத்தார்.
"வேத வியாசர்" என்ற புகழப்படுகிறார்.

ஒரு சமயம் ப்ரம்மத்தையே தியானித்து கொண்டு இருக்கும், 16 வயது ரூபத்தில் இருக்கும் ஸ்ரீ சுகர், காட்டில் எங்கு போகிறோம் என்று தெரியாமலேயே நடந்து கொண்டிருந்தார்.
தன் பிள்ளை "சுகரை" கூப்பிட்டு கொண்டே வியாச பகவான் வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு குளத்தில், சில இளம் பெண்கள் குளித்து கொண்டு இருந்தனர்.
ஸ்ரீசுகர் அந்த வழியாக போவதை பார்த்தும், சாதாரணமாக குளித்து கொண்டு இருந்தனர்.

பின் தொடர்ந்து வந்த வ்யாஸரை கண்டதும், "யாரோ ஆண் வருகிறாரே!" என்று பயப்பட, வியாச பகவான் "நானோ முதியவன். என் பிள்ளையோ இளைஞன். அவனை கண்டு வித்யாசம் காட்டாத நீங்கள், என்னை கண்டு பயம் கொள்கிறீர்களே?"
என்று கேட்டார்.

அதற்கு, அந்த பெண்கள்,
"நாங்கள் பெண்கள் என்றே அவருக்கு தெரியாததால், அவரை பார்த்து எங்கள் எண்ணத்திலும் பேதம் தோன்றவில்லை.
நீங்கள் கேட்பதிலேயே உங்களுக்கு நீங்கள் ஆண், நாங்கள் பெண் என்று தெரிவதாலேயே, எங்களுக்கு பேதம் தெரிகிறது. அதனால் எங்களை அறியாமலேயே பயம் ஏற்பட்டது.. கூச்சம் ஏற்பட்டது."
என்று பதில் சொன்னார்கள்.

வ்யாஸரே சந்நியாசி தான். ரிஷி தான்.
இருந்தாலும் "தன் பிள்ளையின் பெருமையை தான் ரசிக்க, தனக்கு பேதம் உள்ளது போல காட்டிக்கொண்டு, ஸ்ரீ சுகரின் சித்த சுத்தி நிலையை பிறர் சொல்லி கேட்க ஆசைப்பட்டதால்", இப்படி ஒரு லீலை செய்தார்.

பகவத் கீதையை படிக்கும் போது, பல இடங்களில் இந்த சித்த சுத்தி ஏற்பட என்ன வழி? என்று பேசுகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

"சுகம்-துக்கம், மானம்-அவமானம், வெற்றி-தோல்வி 
என்ற இரட்டை குணங்களை மதிக்காதே!! 
தர்மம் எங்கு உள்ளதோ அங்கே தோல்வி ஏற்படுமாம் என்றாலும், தர்மத்தின் பக்கமே நில்" 
என்று சொல்கிறார்.

சித்த சுத்தி ஏற்படும் போது, சந்யாஸ நிலை நமக்கு ஏற்படுகிறது. 
இந்த நிலை,
நமக்கு மன அமைதியை தருகிறது.
திருப்தியை தருகிறது.
ஸத் சங்கத்தை நாட வேண்டும் என்ற புத்தியை தருகிறது.
மகான்களை தரிசிக்க, தெய்வங்களை தரிசிக்க தூண்டுகிறது.
கடைசியில் மோக்ஷம் வரை நம்மை கூட்டி செல்கிறது.

வாழ்க பகவத் கீதை.
வாழ்க நம் ஆத்ம குரு.
வாழ்க ஹிந்துக்கள்.


Why Hindus worship Pigs, Tortoise as gods?.. A christian Query...

A Christian asked "Hindus have gods as pig, as tortoise, as human, as divine form.
Are you trying to prove that God and man are different?"
He asked.
“This is not to show difference between god and human. It tells us that Bhagavan have full freedom and he come to us in any form. This makes hindus to be cautious to behave with other living being and be in non violence always".

Bhagavan says
"Don't Look at the tree as tree alone. Dont just look at animals, just as animals.
Always remember, that i can come in any form and as i reside in everything you see"

"This truth always come to the mind of hindus as they see paramatma every where. This mindset of respecting others and adhere non violence comes because god did avatar in all forms".

For that reason, "Lord came as a pig and a tortoise, not to show difference between human and god"
Premika Mahatma replied.

Whether this is understood by that Christian or not.. does not matter to us.
Hindus must feel proud of our culture and our god.

Also mahatma said,
"Yes. Even our veda says only one god. Veda addresses him as brammam or parampurusha.
Veda which is also called as sruti, even fear to address paramatma directly by his name as Narayanan due to respect.

Even in our culture, calling by names of elders, husband and mahatma is never in practice until the stupid foreign culture entered india in 947AD ghurid dynasty and 1400AD Christian entry.

At few instance, veda says "Narayana Param" which clearly says "Narayana is the supreme god".

While addressing who is parampurusha, veda clearly confirms once again by saying "That purusha is Lakshmi's husband". (Purusha Shukta)

Also Veda says,
Supreme God Narayana, don't need hands. He can do 1000 works without a need of hand.
Supreme God Narayana, don't need eyes. He can see 1000 things without a need a of eye.

But still he takes form, to please his bhakt who want to see him thru his eyes, touch him in hands.

Narayana in his Krishna Avatar, proved this, when draupati shouted "Govinda.." at hastinapur.

At that time, krishna was playing chess with sathyabama in dwaraka.




Where is UP...Where is Gujarat?..

Sri Krishna without a need of ear, heard draupati.
Not only that. ..
Sri Krishna without a need of legs, he reached hastinapur to save draupati.
Sri Krishna without a need of hands, he gave unlimited sarees to draupati.

Islam says God don't come. He stays in his abode. He saves us..

Krishna proving this..

Krishna came as beautiful human form. Its not because he need that. But it's for the devotees..

Even today, this krishna roopa will mesmerize the hearts of humans.

To develop bhakthi, supreme god ready to take any form.

Such is the beauty of Our hindu God.

Saturday, 11 April 2020

பன்றியை, ஆமையை தெய்வமாக ஏன் கும்பிடுகிறீர்கள்?... காரணம் என்ன?

ஒரு கிறிஸ்தவன் கேட்டான் :
உங்கள் ஹிந்து மதத்தில், பல தெய்வங்கள்.. 
அதில் ஒரு தெய்வம் பன்றி. 
இன்னொரு தெய்வம் ஆமை. 
இன்னொரு தெய்வம் மனிதன். 
இன்னொரு தெய்வம் நரனும் சிங்கமும் சேர்ந்த உருவம்...
இப்படி நீங்கள் தெய்வத்தை காட்டி கொள்வது, 
மனிதன் வேறு, தெய்வம் வேறு என்று காட்டவா?
மனித சக்தி வேறு? தெய்வ சக்தி வேறு என்று காட்டவா?...
கேட்ட கிறிஸ்தவன் கேலிக்காக கேட்காமல், உண்மையான சந்தேகத்துடனேயே கேட்டான்.
தெரிந்து கொள்ளும் ஆசையில் தான் கேட்டான்.




மகான்கள் நேர்மையாக, உண்மையிலேயே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவனுக்கு, நேரடியாகவோ, அனுபவ ரீதியாகவோ கட்டாயம் பதில் கிடைக்க செய்வார்கள்.. சொல்வார்கள்..

குருநாதர் சொல்கிறார் :
"மனிதன் வேறு தெய்வம் வேறு" என்று காட்டுவதற்காக இப்படி சொல்லப்படவில்லை.
இந்த அவதாரங்கள் கற்பனையும் அல்ல.
ஒவ்வொரு சமயத்தில், ஒவ்வொரு காரணத்துக்காக இது போன்ற அவதாரங்கள் நடந்தது.

"பன்றி" முகத்தில் பகவான், "க்ஷத்ரியனாக" பகவான், "ப்ராம்மணனாக" பகவான், "சண்டாளனாக" பகவான், "ரிஷியாக" பகவான் 
என்று பல வித அவதாரம் பகவான் செய்தார் என்பது ஒரு புறம் சத்தியமாக இருந்தாலும்,
"பகவான் எந்த ரூபத்திலும் வர சக்தி உடையவர்.. அவர் உன் கண் எதிரே கழுதையாகவும் வந்து நிற்பார், பிராம்மணனாகவும் வந்து நிற்பார், அரசனாகவும் வந்து நிற்பார்"
என்று மனிதனை நிதானிக்க செய்கிறார்.

இந்த உணர்வு தான், ஹிந்துக்களுக்கு ஜீவ காருண்யத்தை ஊட்டுகிறது.

"கல்லை கல் என்று மட்டும் பார்க்காதே! 
ஆடு மாடு வந்தாலும் மிருகமாக மட்டும் பார்க்காதே ! 
தெய்வத்தால் எப்படியும் வர முடியும் என்று அறிந்து கொள்! எதையும் அலட்சியம் செய்து விடாதே!!" என்று  மனிதனை நிதானிக்க செய்கிறது.

கல்லை பார்த்தாலும், மரத்தை பார்த்தாலும், விலங்கை பார்த்தாலும், மனிதனை பார்த்தாலும், "அனைத்துக்குள்ளும் பரமாத்மா இருக்கிறார்" என்ற அனுபவத்தை கொடுக்கிறது.

"விலங்கு, பயிர்கள் எல்லாம் மனிதன் தின்பதற்கே" என்ற எண்ணம் ஹிந்துக்களுக்கு கிடையாது.
அப்படி இருந்தால் அவன் வழிதவறி போன ஹிந்து, என்றே சொல்லி வருத்தப்பட வேண்டும்.

"பகவான் எந்த ரூபத்திலும் வர சக்தி படைத்தவர்" என்கிற போது, ஹிந்துக்கள் யாரிடத்திலும், எதனிடத்திலும் இயற்கையாகவே மரியாதையோடு பழகுகிறார்கள்.

பகவான் ஒருவர் தான். 
பகவான் ரூபம், குணங்களை கடந்தவர் தான். 
அத்வைதம் "இதை தானே சொல்கிறது".

ஆயிரம் கைகளால் செய்ய வேண்டியதை, கைகள் இல்லாமலே செய்து விடுவார் பகவான்.
ஆயிரம் கண்கள் சேர்ந்து பார்க்க வேண்டிய காட்சிகளை, கண்கள் இல்லாமலேயே பார்த்து விடுவார் பகவான்.

பரமாத்மா கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, ஹஸ்தினாபுரத்தில் திருத்ராஷ்டிரன் அரண்மனையில் திரௌபதி "கோவிந்தா" என்று அலற, துவாரகையில் இருந்த கண்ணன் கேட்டார்.

உத்திர பிரதேசம் எங்குள்ளது? துவாரகை எங்குள்ளது?

"கடவுள் இருக்கிறார். அவர் அவதாரம் செய்ய தேவையில்லை. 
இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு நம்மை ரக்ஷிக்கிறார்" 
இது போன்ற போதனைகள் புதிதான விஷயமில்லையே ஹிந்துக்களுக்கு.
கிருஷ்ண பரமாத்மா, திரௌபதி அலறியதை பல கிலோ மீட்டர்  தள்ளி இருந்தும் கேட்டாரே! அது மட்டுமா,
வண்ண வண்ண புடவைகள் கைகள் இல்லாமலேயே கொடுத்தாரே!, 

ஹஸ்தினாபுரம் வரை நடந்து செல்லாமலேயே, துவாரகையில் இருந்த படியே கொடுத்து, அவள் மானத்தை காப்பாற்றினாரே!.
கிருஷ்ண அவதார காலத்திலேயே, தான் பகவான், தனக்கு கை இல்லாமலேயே கொடுக்க முடியும், கண் இல்லாமலேயே பார்க்க முடியும், கால் இல்லாமலேயே பயணிக்க முடியும் என்று காட்டினாரே!

அஸ்தினாபுரம் பகவான் வராமலேயே ரக்ஷித்து விட்டாரே!.
தெய்வம் வர தேவை இல்லை. அங்கிருந்தபடியே ரக்ஷிப்பார் என்று இதை தானே மற்ற மதங்கள் சொல்கிறது... ஹிந்துக்களுக்கு புதிதில்லையே!.

பின்பு ஏன் பகவான் அழகான கிருஷ்ண ரூபத்தை, ராம ரூபத்தை ஏற்றார்? பகவான் உருவம் எடுத்து கொள்வது பக்தன் பார்த்து ரசிப்பதற்காக தான்.

"பகவானுக்கு உருவம் இல்லை" என்று நினைப்பவனுக்கு,  மறைந்தே இருக்கிறார். அவனுக்கு காட்சி
கிடைப்பதில்லை.

பொதுவாக ஹிந்துக்கள் ரசிகர்களாக இருக்கின்றனர்.

"பகவான் சர்வ சக்தி வாய்ந்தவர்" என்று ஒரு பக்கம் பேசி விட்டு, இன்னொரு பக்கம் "அவர் உருவம் தரிக்க மாட்டார்" என்று சொல்வதே தெய்வத்தை அவமானப்படுத்தும் பேச்சாகும்.
மனிதனுக்கு வழிகாட்ட ராமபிரானாக பரமாத்மா அவதரித்தார். 
மனிதனுக்கு தர்மத்தை காட்ட, மனிதனாக தானே அவதரித்து ஆக வேண்டும்.



மனிதனாக அவதரித்தும் தெய்வமாகவே இருந்து காட்டினார் கிருஷ்ண அவதாரத்தில்.
பிறந்த போதே "என்னை கோகுலத்தில் விடுங்கள்" என்று பேசினார். சாதாரண குழந்தை பேசுமா?
7 வயதில் மலையை சுண்டு விரலால் தூக்கி விட்டார். சாதாரண 7 வயது குழந்தை மலையை தூக்க முடியுமா?
இவர் செய்த எந்த செயலுமே பிரமிக்க தக்கதே தவிர, நாமும் செய்ய முடியாதது.. தெய்வம் தெய்வமாகவே இருந்தார். அனைத்து சக்திகளையும் காட்டினார்.
மோக்ஷம் அடைய பகவத் கீதையை உபதேசித்தார்.
சக்தியுள்ள தெய்வத்துக்கு, மனிதனாக மட்டும் தான், வர முடியுமா? இல்லையே..
நாயாக வந்தார் பாண்டுரங்கன்..
"வந்திருப்பது பகவான்" என்று  நாமதேவர் கண்டுபிடித்து விட்டார்.

கழுதை ரூபத்தில் வந்தார் பகவான், ஏகநாதர் கண்டுபிடித்து விட்டார்.
பிராம்மண ரூபத்தில் தத்த்ராத்ரேயர், பரசுராமர், வாமனன், வியாச ரிஷி போன்ற ரூபங்களில் வந்தார்.
'தெய்வம் என்றால் கிரீடம் தானே வைத்து இருக்கும்?' என்று ஏமாறாமல், தெய்வம் எப்படி வந்தாலும், பாரத மக்கள் கண்டுபிடித்தனர்.
க்ஷத்ரியன் போல, கிரீடம், வாள், அம்பு வில் எடுத்து ராமபிரானாக வந்த போதும்,
க்ஷத்ரியன் போல, சக்கரம் எடுத்து கிருஷ்ண பரமாத்மாவாக வந்த போதும் பாரத மக்கள் கண்டுபிடித்தனர்.

"தெய்வம் அவதரிக்க முடியாது, தெய்வத்துக்கு அவதரிக்க சக்தி இல்லை, தேவையும் இல்லை" 
என்று நினைப்பவர்களால், தெய்வ அவதாரம் நிகழ்ந்தாலும் உணர முடிவதில்லை.

வராக, கூர்ம, ராம அவதாரங்களை வழிபடும் போது, "பகவான் எந்த ரூபத்திலும் வருவார்" என்ற சிந்தனை, ஹிந்துக்களுக்கு சாதாரணமாகவே ஏற்பட்டு விடுவதால்,
மனித குணத்துக்கு மீறிய குணங்கள் கொண்டவர்கள் பிறக்கும் போதே, ஹிந்துக்களால் ஒரு கால கட்டத்தில், அவன் 'அசுரனா? தேவனா? ரிஷியா? ஸித்தனா? சிவபெருமானா? அல்லது சாக்ஷாத் அந்த நாராயணனா?'
என்று புரிந்து கொள்ள முடிகிறது.

"எதுவாகவும் பகவான் வர முடியும்" என்ற இந்த ஞானம் ஹிந்துக்களுக்கு இருப்பதாலேயே, தேவர்களும், சில சமயம் அசுரர்களும், ரிஷிகளும், சிவபெருமானும், நாராயணனும் பாரத மண்ணில் அவதரித்து கொண்டே இருக்கிறார்கள்.

"தெய்வம் வரவே வராது" என்று தீர்மானித்து விட்டவர்களிடம்,
"தெய்வம் இப்படி மட்டும் தான் இருப்பார்" என்று முடிவு கட்டி விட்டவர்களிடம், "தெய்வங்கள் வருவதே இல்லை".

அவர்கள் செய்யும் புண்ணிய கர்மாவுக்கு ஏற்ப பலனையும், 
அவர்கள் செய்யும் பாப கர்மாவுக்கு ஏற்ற பலனையும் கொடுத்து விட்டு, 
மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்.
மோக்ஷம் இவர்களுக்கு இப்போது இல்லை என்று சம்சார உலகில் உழன்று கொண்டே இருக்கிறார்கள்.

பாரத மண்ணில் தெய்வ அவதாரம், தேவ அவதாரம், ரிஷிகளின் அவதாரம், சித்தர்களின் அவதாரம் நிகழ்ந்து கொண்டே இருப்பதற்கு காரணம் இதுவே... 

தெய்வத்தை பார்க்க தெரிந்தவனிடம், தெய்வமும் விளையாட ஆசைப்படும்.

கல் என்று நினைத்தால், கல்லுக்குள் தெய்வம் வருவதில்லை.

"கல்லுக்குள் தெய்வம் வரும்" என்று நினைக்கும் ஹிந்துவுக்கு,
"சக்தி உள்ள தெய்வம் அவனுக்காக கல்லுக்குள் பிரவேசித்து" அவன் நம்பிக்கையை வளர்க்கிறது.




ஹிரண்யகசிபு தானே கல், மண் கொண்டு கட்டிய தூணை காட்டி,
"இந்த தூணில் உன் நாராயணன் இருக்கிறானா?" என்று கேட்கிறான்.
அவன் சொல்வது உண்மைதான். அவன் கட்டிய தூண் தான். அது கல் தான்.
ஆனால், "அந்த தூணிலும் பரமாத்மா இருக்கிறார்" என்று அவன் பிள்ளை பிரகலாதன் சொல்ல,
பக்தன் சொன்ன சொல்லுக்காக, பகவான் தன்னை கல்லுக்குள் பிரவேசித்து கொண்டு நரசிம்மமாக வெளிப்பட்டார்.

கல், தெய்வமா? இல்லை.
ஆனால், ஒரு பக்தன் அந்த கல்லில் தெய்வத்தை கண்டு விட்டால், அந்த கல்லிலும் தெய்வம் வருகிறார்.

"தெய்வம் உண்டு" என்று சொல்லி, ஆனால் "தெய்வத்துக்கு இந்த சக்தி கிடையாது, அவர் இப்படி பக்தனுக்காக வர மாட்டார்" என்று சொல்வதே வழிபடும் தெய்வத்தை இகழும் செயலாகும்.
தெய்வத்தை சிறுமைப்படுத்துவதை ஹிந்துக்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

ஹிந்துக்கள் பரந்த மனம் கொண்டதற்கு காரணமும் இதுவே.
அதிதியையும் தெய்வமாக வழிபடும் வழக்கம் ஏற்பட்டதற்கு காரணமும் இதுவே.
பசுவை தெய்வமாக வணங்குவதும் இதன் காரணமே.
யாரை பார்த்தாலும் கை கூப்பி வணங்கும் காரணமும் இதுவே.

"தானே அனைத்துமாக இருக்கிறேன்" என்று பரமாத்மா நாராயணன் காட்டுவதை, ஹிந்துக்கள் புரிந்து கொள்ள முடிவதால், எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் வணங்குகிறார்கள்.

குருவே துணை.
இது அந்த கிறிஸ்தவனுக்கு புரிந்ததோ இல்லையோ!!..
ஹிந்துக்களுக்கு நம் பெருமை புரிந்து கொள்ள வாய்ப்பாக அமைகிறது.

வாழ்க நம் குருநாதர்.
வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க நம் தெய்வங்கள்.