Followers

Search Here...

Sunday, 19 May 2019

அறிவியலில் முன்னேற்றம் மேற்கு நாட்டவர்கள் வந்த பிறகு தான் வந்தது" என்று நினைப்பவர்களுக்கு ஒரே கேள்வி...நம் பெருமையை நாம் அறிவோம்...

1498ADல் 'வாஸ்கோட காமா' போர்ச்சுகல் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு நுழைந்தான். அன்று ஆரம்பித்தது கிறிஸ்தவ நுழைவு, ஆங்கில மோகம், பாரத தேசத்தில்.



அதற்கும் முன்,
808ADல் இஸ்லாமிய மதம் ஈரான், ஆப்கான் போன்ற பௌத்த தேசங்களாக மாறி இருந்த ஹிந்து தேசங்களில் நுழைந்தன.
அதன் தொடர்ச்சியாக கோரி அரசாட்சி மூலம் இஸ்லாமிய ஊடுருவல் ஆப்கான், பாகிஸ்தான், இந்தியா வரை நுழைந்தது.
த்ரேதா யுகத்தில், ராமாயண காலத்தில், புஷ்பக விமானத்தில் (flight) ராமர் ஒரே நாளில் இலங்கையில் இருந்து, அயோத்தி திரும்பினார் என்று வருகிறது. இலங்கை, அயோத்தி கற்பனை இடமில்லை. இன்றும் இருக்கிறது.



துவாபர யுகத்தில், 5000 வருடத்திற்கு முன் நடந்த மகாபாரத போரில், வெறும் அம்பு மட்டும் எய்து சண்டை இடவில்லை. அதையும் தாண்டி, அஸ்திரம், சஸ்திரம் (atom, nuclear bomb) என்ற உலகை அழிக்கும் ஆயுதங்களை துரோணர், அஸ்வத்தாமா பயன்படுத்தனர் என்று வருகிறது. உத்திர பிரதேசம் கற்பனை இடமில்லை.
அர்ஜுனன் சில வருடங்கள் வனவாச சமயத்தில், பூலோகத்தில் இருந்து கிளம்பி, சொர்க்க லோகம் (space) சென்று இந்திரனோடு இருந்தான். அங்கு தேவலோகத்தில் உள்ள ஊர்வசி, தன்னை மணந்து கொள்ள கேட்டும், மறுத்தான் அர்ஜுனன் என்றதும் "ஒரு வருடம், நீ ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத பேடியாக போ" என்று சபித்தாள் என்று பார்க்கிறோம்.
திருமூலர் கூடு விட்டு கூடு பாயும்  ஆற்றல் பெற்ற சித்தராக வாழ்ந்தார் என்று அவர் சரித்திரம் காட்டுகிறது.
இறந்தவர்களை கூட உயிர் பிழைக்க வைக்கும் சஞ்சீவி போன்ற மூலிகைகள் (medicine) ராமாயண காலத்தில் பயன்படுத்தினர் என்று சொல்லப்படுகிறது.



த்ரேதா யுகத்தில், 60000 வருடம் வாழ்ந்த தசரத சக்கரவர்த்தி,  ராமருக்கு பட்டாபிஷேகம் செய்யலாம் என்று நினைத்த போது, அவர் தலை முடியில் ஒரே ஒரு முடி மட்டும் வெள்ளையாக (beauty science) இருந்தது என்று சொல்லப்படுகிறது.
இருக்கும் இடத்திலேயே எங்கோ நடக்கும் விஷயங்களை பார்க்கும் (drone) சக்தி உடைய ரிஷிகள் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது.

இதையும் தாண்டி, என்ன நடக்க போகிறது என்றும் சொல்லக்கூடிய ஞானிகள், ரிஷிகள் இருந்தனர் என்றும் காட்டப்படுகிறது.
எங்கேயோ நடப்பதை பார்க்கும் சக்தியை, சக்தி இல்லாதவர்களுக்கும் கொடுத்து, அவர்களையும் எங்கோ நடக்கும் சம்பவங்களை பார்க்க வைக்கும் (video chat) சக்தி உள்ளவர்களாக இருந்தனர் என்று சஞ்சயன் சபையில் இருந்து கொண்டே மகாபாரத போரை பார்த்து த்ருதராஷ்டிரனுக்கு சொன்னான் என்று வருகிறது.


தேவகியின் ஏழாவது குழந்தை, அவள் கர்ப்பத்தில் இருந்து, ரோகினியின் கர்பத்துக்கு (sarogate mother) ஒரே ராத்திரியில் இடம் மாறி, பலராமர் அவதரித்தார் என்று வருகிறது.
பரதன் ராமரை பட்டாபிஷேகம் செய்து அயோத்திக்கு கூட்டி வர, காட்டுக்கு செல்லும் போது, கூட வந்த அயோத்தி மக்களுக்கு ஒரு இடத்திலிருந்து மரங்களை வேரோடு எடுத்து, போகும் வழியெல்லாம் நிழலுக்கு நட்டு (machinery), உணவுக்கு ஏற்பாடு செய்து கஷ்டம் தெரியாமல் கூட்டி கொண்டு போனார் என்றால், எந்த இயந்திரம் கொண்டு மரங்களை பெயர்த்து, இன்னொரு இடத்தில் வைத்தார்கள் என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.




அறிவியல், மருத்துவம், ஆன்மீகம் என்று அனைத்திலும் நாம் வல்லவர்களாக இருந்தோம் என்று நம் சரித்திரங்களே காட்டுகிறது.
அது சம்பந்தமான விஷயங்கள் ஒவ்வொரு சரித்திரத்திலும் சொல்லப்படுகிறது.
கோவிலில் சென்றால், கல் தூணில் 7 ஸ்வரங்கள் கேட்கிறது..
இன்று வரை துரு பிடிக்காத இரும்பை தயாரித்து, எப்படி துரு பிடிக்காத இரும்பை தயார் செய்தனர் என்று இன்று வரை இன்றைய அறிவியல் தலை சொறிந்து கொண்டு உள்ளது...



ஆச்சரியங்கள் இன்றும் காட்சி பொருளாக நமக்கு தெரிகிறது.

"அறிவியலில் முன்னேற்றம் மேற்கு நாட்டவர்கள் வந்த பிறகு தான் வந்தது" என்று பிதற்றுபவர்களுக்கு ஒரே கேள்வி...

808ADக்கு முன் இந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள், இஸ்லாமியராகள், உலகிற்கு அறிவியல் சம்பந்தமாக என்ன கண்டுபிடிப்பு செய்து காட்டினீர்கள்?

குண்டூசிக்கு ஓட்டை எங்கு போட வேண்டும் என்பது கூட இந்தியாவில் கால் வைத்ததற்கு பின்பு தான் மேற்கத்தியர்களுக்கு மூளையில் உதித்தது என்றால், இந்திய மண்ணில் இவர்கள் கொள்ளையடித்தது பொன்னை மட்டுமா?

Aeroplane ஆரம்பித்து sarogate mother வரை வளர்ந்த இன்றைய அறிவியல் வளர்ச்சி இந்தியாவுக்கு இவர்கள் கால் பதிக்கும் முன் ஏன் நடக்கவில்லை?
இவை எல்லாமுமே நம்மிடம் இருந்தது தானே... அழிந்து விட்டதா, திட்டமிட்டு அழிக்கப்பட்டு விட்டதா?

திருடி சென்றது நம் செல்வத்தை மட்டுமா?
Max Muller போன்ற பல கிறிஸ்தவர்கள் எதற்காக எங்கள் வேத சாஸ்திரங்களை படித்து, பலருடன் பேசி அதன் அர்த்தத்தை அரைகுறையாக புரிந்து கொண்டு, அவர்கள் மொழியில் மொழி பெயர்க்க, தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்?
சம்ஸ்க்ரிதம் படிக்க மாட்டேன் என்று உளறி கொண்டு இருக்கும் நாம் ஒரு புறம் இங்கு இருக்க, நம் சாஸ்திரத்தை ஏன் இவர்கள் படித்தார்கள்?

இந்தியாவுக்குள் நுழைந்த பின், மேற்கு நாட்டினருக்கு திடீரென்று ஆராய்ச்சி கூடங்கள் (research and dev center) அமைக்கும் பழக்கம் ஏன் ஏற்பட்டது?

பாரத மண்ணில் பேச்சு வழக்கில் இருந்த பொது மொழியான சமஸ்கரித மொழி ஏன் இவர்களால் அழிக்கப்பட்டது?

தேனும், குல்லாவும் மட்டுமே வைத்து இருந்த இவர்கள், இந்தியாவுக்குள் கால் வைப்பதற்கு முன், இந்த மேற்கு நாடுகள் எதை உலக நன்மைக்காக கண்டு பிடித்தனர்?

ஏதாவது உருப்படியான ஆராய்ச்சிகள் உண்டா?
ஒன்று கூட இல்லையே...
நம் நாட்டில் நுழைய தானே உலகமே ஆர்வம் காட்டியது...

இந்த பாரத மண்ணில் இருந்து திருடி, நமக்கே வேறு மாதிரி விற்று, இன்று மார்தட்டி கொள்கின்றனர்...

வெட்கப்பட வேண்டியது பாரத மக்கள் தான்.
சமஸ்கரித மொழியை ஒழித்து கட்டிய ஆங்கிலேயன், நமக்குள் பிரிவை ஏற்படுத்தி,
இது ப்ராம்மணன் மட்டுமே கற்றான் என்று மொழி பகையையும் ஊட்டி,
பிராம்மண பகையையும் ஊட்டி,
தன் ஆங்கில மொழியை படிக்க வைத்தான்.

இதற்கு காங்கிரஸ் கட்சியும் துணையாக நின்று, விடுதலை கிடைத்த பின்னும், சம்ஸ்க்ரிதம் பொது மொழியாக ஆக்கப்பட்டு வேத சாஸ்திரங்கள் அனைவருக்கும் கொடுக்க வழி செய்யவில்லை.
விளைவு,
சாணக்யன் வரை படித்த அர்த்த சாஸ்திரத்தை (financial mgmt) படித்து தெரிந்து கொள்ள முடியாமல், கிறிஸ்தவன் நமக்கு கொடுத்த MBAவை படிக்க தள்ளப்பட்டோம்.
ஆங்கிலத்திலேயே படிப்பதால், நம் அறிவும் அவனுக்கு பயன்பட்டு வேகமாக அறிவியல் முன்னேற்றம் அவன் செய்து காட்டுவது போல தெரிகிறது..
இன்று கூட உலகமெங்கும், இந்தியர்கள் தானே கீழே வேலை செய்கிறார்கள்.


சாணக்யன் இருந்த காலம் வரை நம் நாட்டிற்கு வெளி நாட்டவன் ஓடி ஓடி வந்தான்..
அவன் படிப்பை அவன் மொழியிலேயே நாம் படிக்க ஆரம்பித்த பின், இந்திய நாடே வெளிநாட்டை நம்பி வாழும் நிலைக்கு ஆளாகி விட்டது.
ப்ராம்மணன் தெய்வ சம்பந்தமான சாம வேதம், ரிக் வேதம், யஜுர் வேதம் மட்டுமே முக்கியமாக கற்றான்.
அது மட்டும் தானா சம்ஸ்க்ரிதம்..?

மற்ற ஜாதி மக்களும் சம்ஸ்க்ரிதம் தானே பொது மொழியாக பேசினார்கள்.
இன்று ஆங்கிலம் பொது மொழி போல, தமிழன் தன் வியாபரத்துக்காக கன்னட தேசம் சென்று சம்ஸ்க்ரிதம் தானே பேசியுள்ளான்.
கோவிலை கட்டிய ஸ்தபதியும்,  ஸ்தாபத்யம் (engineering) என்ற வேதத்தை அறிந்து இருந்தான். அவன் கட்டிய கோவில்கள் தானே இன்று வரை நம் கண் முன் காட்சியாக நிற்கிறது...
இன்றுவரை அந்த காலத்தில் கட்டிய கோவிலை போல இன்றைய அறிவியல் கட்ட முடியவில்லையே...
இன்று வரை கரிகாலன் கட்டிய அணை உடையவில்லையே.
எத்தனை அற்புதமான அறிவு செல்வத்தை மொழி பகையின் காரணமாக இழந்து, அதே கல்வியை கிறிஸ்தவன் கொடுத்த ஆங்கிலத்தில் படித்து, அவன் நாட்டிற்கு வேலை செய்து, இந்தியாவே சேவை மையமாக ஆகி விட்டோம்...


தன் வாழ்க்கையை தானே நிர்ணயம் செய்த பாரத மக்களை, காங்கிரஸ் அரசாங்கம் விடுதலை அடைந்த உடனேயே கீழ் கண்ட சாஸ்திரங்களை படிக்க வழி செய்து இருந்தால், இன்று நாமும் ஜப்பான், சீனாவுக்கும் மேல் சென்று இருப்போம்.
ஆங்கில வழி கல்வியால், அற்புதமான சமஸ்கரித மொழியை பேச்சு வழக்கில் இருந்தும், பொது மொழியாகவும் இருக்க விடாததால், இன்று இந்திய மக்கள் யாவரும், அமெரிக்கா, ஆஸ்திரேலியாகாரன் விழித்து இருக்கும் இரவில் முழித்து, அவனுக்கு கால் பிடித்து விட்டு கொண்டு இருக்கிறான்.
சமஸ்கரித மொழியை அழிக்கிறேன் என்று, காங்கிரஸ் அரசு, பெரும் செல்வமான கல்வியை மக்களுக்கு கொடுக்காமல் வஞ்சம் செய்து, புதிதான ஆங்கில மொழியை கற்க வைத்து, அவர்கள் கண்டுபிடித்த அறிவியலை நாமும் படிக்க வைத்து, நம்மையும் அதே ஆங்கில வழியிலேயே ஆராய்ச்சி செய்ய வைத்து, நாம் பின்னணியில் வேலை செய்து கண்டுபிடிக்க, மேற்கத்திய கண்டுபிடிப்புகள் என்று நமக்கே சொல்லி, இலவச வேலைக்காரன் போன்று ஆக்கி விட்டது காங்கிரஸ் கடந்த 60 ஆண்டுகளில்.

நாம் அனைவரும் கற்று இருந்த கல்வி செல்வங்கள்... நாம் அனைவருமே இழந்து விட்ட சில கல்வி செல்வங்கள்...இதோ..



அர்த்த சாஸ்திரம் (finance mgmt),
காம சாஸ்திரம் (art of love),
யோக சாஸ்திரம்,
சித்த மருத்துவம்,
ஆயுர்வேதம் (medicine)
காந்தர்வ வேதம் (music)
தனுர் வேதம்(army)
சிக்ஷை (expert in phonetics, phonology, pronunciation)
வியாகரணம் (expert in grammers and linguistic analysis)
நிருக்தம் (expert interpretation of words and to help establish the proper meaning of the words)
சந்தஸ் (expert in poetic metres)
ஜோதிஸம் (expert in knowing Auspicious time for rituals and expert in astrology and astronomy.)
ஸ்ம்ருதி,
யோகம் (expert in meditation, contemplation and liberation)
ஸாங்க்யம் (Expert in consciousness and matter)
நியாயம் (Expert in exploring sources of knowledge)
என்று பல வித சாஸ்திரங்கள், பாரத மக்கள் அனைவருமே கற்றார்களே...
துக்ளக் ஆட்சியில் தங்கத்தால் காசு அடிக்க தங்கம் போதாமல் போக, செப்பில் அதே மதிப்புள்ள காசுக்கள் இனி வழங்கப்படும் என்று அறிவித்தவுடன்,
இஸ்லாமியனாக மாறிய ஹிந்துக்களுக்கு வரி சலுகையும், கோடிக்கணக்கான ஹிந்துக்களுக்கு வருமானத்தில் முக்கால் பங்கு வரியும் விதித்து துக்ளக் பெரும் சூழ்ச்சி செய்து இஸ்லாமிய தேசமாக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.
இவன் அரசாட்சி சமயத்தில் தான் மதுரை வரை சுல்தான் ஆட்சி நடக்க ஆரம்பித்தது. 80 வருடங்கள் தமிழ் நாட்டை சூழ்ந்த இஸ்லாமியர்களை, விஜயநகர இளவரசன் கம்பண்ணா முடிவுக்கு கொண்டு வந்தார்.
இவர் வராது போயிருந்தால், இன்று கும்பகோணத்த்தில், தஞ்சையில் ஒரு கோவில் இருந்து இருக்காது.

ஹிந்துக்களை கிள்ளுக்கீரை என்று கொன்றார்கள் இஸ்லாமியர்கள் நம் நாட்டில் புகுந்து கொண்டு.
உலோகங்களை (metallurgy) பற்றிய அறிவுடன் இருந்த நம் பாரத ஹிந்து மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் அதே போன்ற செப்பு காசு அடித்து விட, பாரத தேசமெங்கும் பெரும் குழப்பம் ஏற்பட்டு, துக்ளக் ஆட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு, இஸ்லாமிய ஆட்சி நடத்தி கொண்டிருந்த பல ஆமிர், வாஜிர்கள், அவரவர்கள் சுல்தான்கள் என்று தானே சொல்லிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். ஒரு நாட்டின் காசை சாதாரண ஊர் மக்கள் கூட செய்ய முடியும் என்றால் எத்தனை திறமை கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்று புறம் பார்க்க வேண்டியுள்ளது. தங்கத்தில் ஏன் காசுகள் வைத்து இருந்தனர் என்றும் புரிகிறது. விலையுயர்ந்த தங்கம் சர்வ சாதாரணமாக இந்த பாரத தேசத்தில் பயன்பட்டு இருந்தது என்றும் தெரிகிறது...



மொழி பகையை தாண்டி, அவரவர் தாய் மொழி அறிவும், பொது மொழியாக சமஸ்கரித, ஆங்கில அறிவும் குழந்தைகள் முதல் கல்லூரி வரை புகட்டப்படும் போது, மீண்டும் இந்த 120 கோடி ஜனங்களில், ஒரு 10 கோடி மக்களாவது இந்த சாஸ்திரங்களை மீண்டும் தோண்டி எடுத்து, இந்திய நாட்டை சுயசார்புள்ள நாடாக மீண்டும் ஆக்கி காட்ட முடியும்.

காங்கிரஸ் போன்ற மேற்கத்திய மோகம் கொண்டவர்கள் இந்தியாவுக்கு கிடைத்த அருமையான சுதந்திரத்தை கோட்டை விட்டு, இன்றைய நிலையில் அடிமை வாழ்வு வாழ செய்து விட்டனர்.
பேச்சும் ஆங்கில வழி ஆகி விட்டதால், நம் அறிவும், ஆராய்ச்சியும் மேற்கு நாடுகள் மென்மேலும் அறிவியலில் வளர உதவி செய்கிறது.  ஆனால் இங்கோ, பாரத மக்கள் உலக நாடுகளுக்கு உழைக்கும் கூலியாகி விட்டான்.

இந்த நிலை மாற, பாரத கலாச்சாரத்தை மீட்டு, ஜப்பான், சீனா போன்று சுயசார்புள்ள நாடாக ஆக்க, பாரத கலாச்சாரத்தை மீட்கும் எண்ணம் கொண்ட கட்சிகளே நாட்டிற்கு அடுத்த 30 வருடங்களுக்காவது தேவை.

நம் அறிவு, ஆராய்ச்சி நம் தாய் மொழியாகவும், நம் பொது மொழியான சமஸ்கரிதம் மூலமே நடக்க ஆரம்பித்தால், நாமும் சீனா, ஜப்பான் போன்று சுய சார்புள்ள நாடாக, மனிதர்கள் நிம்மதியாக வாழ இயலும். ஆங்கிலே வழியில் ஆராய்ச்சிகள் பேசப்படாமல் இருக்கும் போது, நாம் பேசும் ரகசியங்களும் பாதுக்கப்படும். வளர்ச்சி தடைப்படாமல் மீண்டும் பாரத் மக்கள் அவரவர் வீட்டில், ஊரில், கிராமத்தில், பாரத மண்ணில் இருந்து கொண்டே, வாழ இயலும்.



ஹிந்துக்கள் சிந்தனைக்கு....


Wednesday, 15 May 2019

ஹிந்துக்கள் ஏன் கேலிக்கு ஆளாக வேண்டி உள்ளது?ஹிந்துக்கள் நெற்றியில் திலகம், பாரம்பரிய உடை அணிந்து, தெய்வ சம்பந்தமான விஷயங்களில் இருப்பது பற்றி ஒரு அலசல்... ஹிந்துக்கள் சிந்தனைக்கு...




ஆஃபீஸில் சேர்ந்து விட்டு, அதற்கான ஆடை அணியாமல் இருந்தால் அங்கு மரியாதை கிடைக்காது
போலீஸ் வேலையில் சேர்ந்து விட்டு, 'காக்கி துணி அணியமாட்டேன், க்ராப் செய்து கொள்ள மாட்டேன்' என்று சொன்னால், 'போடா வெளியே.. உனக்கு இங்கு வேலை கிடையாது' என்று அனுப்பி விடுவார்கள்..
கோர்ட்டில் வக்கீலாக இருந்து கொண்டு, அதற்கான ஆடை அணிய மாட்டேன் என்றால், உள்ளே அனுமதிக்கவும் மாட்டார்கள். மரியாதையும் கிடைக்காது.

கூர்க்கா வேலை செய்தாலும் அதற்கான ஆடை, ஒழுக்க விதிகள் சொல்லப்படுகிறது.
பள்ளி செல்லும் போது அதற்கான யூனிபார்ம் போட மாட்டேன், பனியன் போட்டு தான் வருவேன் என்று சொன்னால், பள்ளியில் சேர்த்து கொள்ள மாட்டார்கள்.
செருப்பு காலோடு சர்ச்சுக்குள் செல்லும் கிறிஸ்தவனுக்கு கூட, "பாதிரியார்" என்று ஆகும் போது, அதற்கான பாவாடையை அணிந்து கொள்கிறான். 
'ஊர் கேலி செய்யுமே!! அவமானமாக இருக்குமே!! ' என்று நினைத்து அதற்கான ஆடை அணியாமல் இருப்பதில்லை கிறிஸ்தவன்.

பாதிரியை பார்த்து கிறிஸ்தவ மக்களும் 'ஒய்.. பாவாடை' என்று கிண்டல் செய்வதும் இல்லை. பாதிரிக்கு கொடுக்கப்பட்ட உடை அது என்று வரம்பு தெரிந்து இருக்கிறார்கள்.
உலகமே நாகரீகம் என்ற பெயரில் அலைந்து கொண்டு இருக்க, இஸ்லாமிய பெண்கள் இன்றும் தங்களை, கருப்பு ஆடை கொண்டு மறைத்து கொண்டு தான் வெளியில் வருகின்றனர்.
'உலகத்தோடு ஆட்டம் பாட்டம் போட முடியவில்லையே!!' என்று தனக்குள் நினைத்தாலும், விதித்த ஒழுங்கு முறையை இன்று வரை அவர்கள் விடவில்லை.



மீசையை மழித்து, தாடி மட்டும் வைத்து உலகமே 'தீவிரவாதி' என்று பார்க்கும் அளவிற்கு போன நிலையிலும், 'அதற்கும் என் ஆடைக்கும் சம்பந்தம் இல்லை' என்று இஸ்லாமிய ஆண்கள் அவர்களுக்கு சொல்லப்பட்ட ஆடை ஒழுக்கத்தை கடைபிடிக்கின்றனர்.
'அடேய்.. தீவிரவாதி..' என்று நம்மை சொல்வானோ என்று இஸ்லாமியன் தனக்கு கொடுக்கப்பட்ட வேஷத்தை மாற்றிக்கொள்ளவில்லை. கவலைப்படவும் இல்லை.

ஒரு முல்லாவை பார்த்து, மற்ற இஸ்லாமியன் "மானத்தை வாங்காதே... ஊர் உலகம் போல ஜீன்ஸ் போட்டு, க்ராப் செய்து, ஷேவ் செய்து கொள், வேஷத்தை மாற்று" என்று சொல்வதும் இல்லை, கேலி செய்வதும் இல்லை.
ஆனால்,
ஒரு வேதியன், நெற்றியில் விபூதியும், குடுமியும், கச்சமும் கட்டி, கோவிலுக்கு பூஜைக்கு சென்றால், 'ஒய்.. குடுமி.. !! பூ வாங்கி போ' என்று ஹிந்துவே கேலி செய்கிறான். இப்படி கிண்டல் செய்பவனை மற்ற ஹிந்துக்கள் தடுத்து, மன்னிப்பு கேட்க செய்வதும் இல்லை.
எங்கே போகிறான் ஹிந்து?
ஹிந்துக்கள் அனைவருமே, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, குழந்தையாக இருந்தாலும் சரி, நெற்றியில் விபூதியோ, சந்தனமோ, குங்குமமோ ஏதாவது இட்டு கொள்ள வேண்டும் என்று சொன்னாலும், இட்டுக்கொள்ள வெட்கப்படுகிறான்.
நெற்றியில் ஒன்றும் இல்லாத இவன் ஹிிந்துவா? கிறிஸ்தவனா? என்று குழம்பும் அளவுக்கு இவனே தன்னை காட்டி கொள்ள, மத மாற்றத்துக்கும் இடம் கொடுக்கிறான்.






பெண்கள் "பெரிது பெரிதாக நகம் வளர்க்க கூடாது, தலை விரித்து அலைய கூடாது, நெற்றியில் கண்ணுக்கு தெரியும் அளவுக்காவது குங்குமம் இட்டுக்கொள்ள வேண்டும்" என்று சொன்னால், இன்றைய பெண்களால் எதையுமே ஏற்க முடியவில்லை.
அதே சமயம், இஸ்லாமிய பெண்களுக்கு "முகத்தை காட்டவே அனுமதி இல்லை" என்று சொன்னாலும், இது நம் ஆசாரம் என்று வாழ்கின்றனர் இன்று வரை.

"நீ வழிபடும் தெய்வங்களே நெற்றியில் இட்டுக்கொண்டு உள்ளதே, உனக்கு என்ன?" என்று கேட்டால், 'ஊரார் ஏதாவது சொல்வார்களோ!!' என்று நினைக்கிறான்.
தன் தெய்வம் இட்டு கொள்ளும் திலகத்தை தானும் இட்டு கொண்டு, 'நான் உன்னை சேர்ந்தவன்' என்று சொல்லிக்கொள்ள ஆசை இல்லை. ஊரை மகிழ்விக்க ஆசைப்படுகிறான்.


"தெய்வங்கள் தன் செயலை பார்த்து மகிழ வேண்டும்" என்று நினைப்பதை விட, "உலகத்தில் தன்னை பற்றி என்ன சொல்வார்களோ?" என்று நினைத்து சுய மரியாதை என்ற பிரமையில், வாழ போகும் 100 வருட வாழ்க்கைக்காக, தெய்வ அனுகிரஹத்தை இழக்க துணிகிறான்.

கோவிலுக்கு வந்தால் மட்டுமாவது, "பாரம்பரிய ஆடையான வேஷ்டி, புடவை அணிந்து செல்" என்றாலும் கேட்பதில்லை.
"போலீஸ் வேலை சேர்ந்தால்", போலீஸ் ஆடை அணிய எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன்,
"ஆஃபீஸ் சென்றால்", அதற்கான ஆடை அணிய எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன்,
"கூர்க்கா வேலை செய்தாலும்" அதற்கான ஆடை அணிய எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன், 
"மற்ற மதத்தவன்" அவன் கலாச்சார ஆடை, வேஷம் போட்டு அலைவதை பார்த்தும்,
தன் கோவிலுக்கு செல்லும் போது, "நான் ஏன் வேஷ்டி அணிய வேண்டும்? நான் ஏன் புடவை அணிய வேண்டும்? இந்த ஆசாரம் எதற்கு? அது எதற்கு?" என்று கேட்கிறான்.

ஆபிஸ், கோர்ட், கூர்க்கா வேலை செய்தால், "அந்த அந்த இடத்துக்கான ஆடை ஒழுக்கத்தில் இருக்க வேண்டாமா?" என்று வேதாந்தம் பேசும் இவர்கள்,
"கோவிலுக்கு செல்லும் போது வேஷ்டி கட்ட வேண்டுமா? புடவை கட்ட வேண்டுமா?" என்று கேட்க துணிகிறார்கள்..

'தான் அவமானப்படுவோமோ' என்ற பயத்தை மறைக்க, பேடித்தனத்தை மறைக்க,
லட்சக்கணக்கான வருடங்களாக இருக்கும் பாரத தேசத்தில் இருக்கும் ஒழுக்கத்தை கெடுக்க கூட துணிகிறான்.

உலக கிண்டலுக்காக கோவிலையும் கெடுக்க முயலுகிறான்.
ஆசாரத்தையும் அழிக்க முயலுகிறான்.

"கோவிலில் உள்ள மூல விக்ரஹத்தை நானும் தொட்டால் என்ன?" என்று கேட்கிறான்.
'உனக்கு வழிபட உன் வீட்டிலேயே அதே போல விக்ரஹம் செய்து வழிபட அனுமதி உள்ளதே!' என்று சொன்னாலும், பக்தி இல்லாத, பொறாமை மட்டுமே கொண்டுள்ள இவர்கள், 'ஏன் நான் கோவிலில் உள்ள சிவபெருமானை தொட கூடாது?' என்று ஆசாரத்தை கெடுக்க முயலுகிறார்கள்.
இது பக்தியா? பொறாமை அல்லவா இது !! 
இது போன்று பேசுபவர்களை  ஹிந்துக்கள் அடக்க வேண்டாமா?

'பக்தி தான் காரணம், பொறாமை இல்லை என்றால்' சிதம்பரம் கோவிலுக்கு அருகிலேயே, 1000 ஏக்கர் நிலம் வாங்கி, உலகிலேயே பெரிய கோவிலை தாங்களே கட்டி, உலகிலேயே பெரிய சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தன் கையாலேயே பூஜை செய்யலாமே?.. யார் தடுத்தார்கள்?
அப்படி ஒரு பக்தி செய்தால், தெய்வம் அணுகிரஹம் கூட செய்யுமே... 

பொறாமையை லட்சியமாக கொண்டு, காலம் காலமாக உள்ள ஆசாரத்தை கெடுத்து, தானும் ஆசாரம் இல்லாமல் வாழும் இவர்களை என்ன சொல்வது? அடக்க பட வேண்டியவர்கள் அல்லவா இது போன்ற விஷமிகள்.

இப்படி ஆசாரத்தை கெடுக்க முயற்சித்து கொண்டும்,
'தன் ஆடைக்கு தகுந்தாற்போல கோவில் ஆசாரத்தை மாற்றுவேன்' என்று சொல்லி கொண்டும்,
தன்னை யாரும் கேலி செய்வார்களோ! என்று நினைத்து, இவன் தகப்பனார் வரை காத்து வந்த  அற்புதமான கலாச்சாரத்தை இவன் காலத்தோடு அழிக்க முயலுகிறான்.


பக்தன் இப்படி தாறுமாறாக சென்று கொண்டு இருக்க,
கோவிலில் மூல விக்ரஹ தெய்வத்தை தொட்டு அர்ச்சனை செய்ய பாக்கியம் உள்ள அர்ச்சகனும் தடம் புரண்டு ஓடுகிறான். இது அதைவிட வேதனையான விஷயம்,

தெய்வத்தை தொட்டு அர்ச்சனை செய்ய பாக்கியம் உள்ள "அர்ச்சகனுக்கு",

  • "வேதம்" தெரிந்து இருக்க வேண்டும்.
  • சிவ பெருமானை தொட்டு அபிஷேகம் செய்பவன் என்றால் ருத்ரம், நாயன்மார் பாசுரம் தெரிந்து இருக்க வேண்டும்.
  • பெருமாளை தொட்டு அபிஷேகம் செய்பவன் என்றால், புருஷ சூக்தம், ஆழ்வார் பாசுரங்கள் தெரிந்து இருக்க வேண்டும்.
  • எந்த தெய்வங்களை தொட்டு அலங்காரம் செய்ய அர்ச்சகனுக்கு அனுமதி உள்ளதோ, அந்த தெய்வத்திடம் அசையாத 'பக்தி' வேண்டும்.
  • பணத்தில் விரக்தியும், பக்தியில் ஆர்வமும் வேண்டும்.
  • நாவடக்கம் வேண்டும்.
  • இன்முகம் உள்ளவனாக, வரும் பக்தர்களை கடிந்து கொள்ளாதவனாக இருக்க வேண்டும்.
  • ஆயுஸில் அசைவம் தொடாத, சாத்வீக உணவே உண்பவனாக இருக்க வேண்டும்,
  • 'குடுமி' வைத்து இருக்க வேண்டும்.
  • 'கச்சம்' கட்டி இருக்க வேண்டும்.
  • வீண் பொழுது போக்காமல் தெய்வ சிந்தனையே உள்ளவனாக, அது சம்பந்தமான திவ்யமான நூலை படித்து கொண்டு இருக்க வேண்டும்

என்று அர்ச்சகனுக்கும் விதி உள்ளது.
இப்படிப்பட்ட அர்ச்சகன் தன்னை தொடும் போது, அந்த பக்தனான அர்ச்சகரிடம் பேசுகிறார் பெருமாள்.

ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து,
குடுமி, கச்சம் இல்லாமல்,
வேதம் கற்காமல்,
ஒழுக்கமில்லாமல் வாழும் அர்ச்சகன் தொடும் போது,
அர்ச்ச அவதாரத்தில் உள்ள 'தெய்வங்கள் அருவெறுப்பு கொள்கிறார்கள்'.  
இதனால் பெரும் பாபத்தை சம்பாதிக்கிறான். குல நாசத்தை தனக்கே தோண்டிக்கொள்கிறான்.

அர்ச்ச அவதாரங்கள் செய்யும் தெய்வங்கள், ஆசாரங்களை மீறி, செய்யப்படும் ஒழுக்க கேடான செயல்களுக்கு சரியான தண்டனையை கொடுத்து விடுகிறார்கள்.
கோவிலில் உள்ள தெய்வங்கள் எதிர்பார்க்கும் முறைகளை கடைபிடிக்காமல்,
'ஏன்.. நான் இப்படி செய்தால் என்ன?..
நான் trouser போட்டு வந்தால் என்ன?
குடுமி இல்லாமல் பூஜை செய்தால் என்ன?, வேதம் ஓதாமல் மூல விக்ரகத்தை தொட்டால் என்ன?' 
என்று விதண்டா வாதம் செய்து தெய்வத்தை பழிக்கிறார்கள்.


மற்ற மதத்தவன் அவனவன் ஆடை ஒழுக்கத்தில் இருக்கிறானே, நாமும் இருந்தால் என்ன மோசம்? என்று நினைக்காமல் பேடியாக, உலகத்திற்கு பயந்து வாழ்கிறார்கள்.
வாழ்க்கை இழுக்கும் திசையெல்லாம் ஓடி, அடிமை வாழ்க்கை வாழ்கிறார்கள்.

கோவிலுக்கு வரும் பக்தர்களும் வேஷ்டி, புடவை கட்டிக்கொண்டு வருவதில்லை.
அர்ச்சகனுக்கும் குடுமி, கச்சம் இல்லை, வாயில் வேதமும் இல்லை, த்ரி கால சந்தியும் இல்லை.

இருவருக்குமே, தான் வழிபடும் தெய்வத்துக்கு பிடித்தமாதிரி வாழவேண்டும் என்றும் எண்ணம் இல்லை.

ஹிந்துக்கள் மற்றவர்களுக்காக வாழும் வரை, முதுகெலும்பு இல்லாதவரை, மற்றவர்கள் கேலிக்கு ஆளாக வேண்டியது தான்.

ஹிந்துக்கள் சிந்தனைக்கு...

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam -  Morning (With Meaning)



Sandhya Vandanam -  Afternoon (With Meaning)

Sandhya Vandanam -  Evening (With Meaning)







Saturday, 4 May 2019

சனாதன தர்மம் என்றால் என்ன? அதன் அவசியம் இன்றும் தேவையா? பாரத மக்கள் சிந்தனைக்கு....

947AD முன்பு வரை பாரத மக்கள் எப்படி வாழ்ந்தனர்?
அதற்கு பின் எப்படி வாழ்கின்றனர்? என்று அலசி பார்க்கும் போது,
சனாதன தர்மம் என்றால் என்ன? அதன் அவசியம் இன்றும் தேவையா? என்ற தெளிவு நமக்கு ஏற்படும்...



947 வரை பாரத மக்கள் வாழ்ந்த முறை:
  • மனிதன் 1 : விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 2 : முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 3: மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 4: தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 5: சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 6: எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது.
ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் வழிபடும் தெய்வங்களுக்கான கோவில்கள் இருந்தது. வழிபாட்டு முறைகள் இருந்தது.

அடுத்தவன் தெய்வம் வேறாக உள்ளதே!! நம்பிக்கை வேறாக உள்ளதே!! என்று ஒருவனும் பொறாமைப்படவில்லை.
அடுத்தவன் நம்பிக்கையை மதித்தான்.

பாரத பூமியில் 'தெய்வத்தின் பெயரால்' சாமானிய மக்களை கொல்வதோ, கோவில்களை இடிப்பதோ நடக்கவே இல்லை.

அனைத்து பாரத மக்களும் சுய மரியாதையுடனும், நிம்மதியாகவும் வாழ்ந்தனர். செல்வத்தில் புரண்டனர்.

'என் தெய்வம் சிவன்' என்று சொல்பவன், 'காளி கோவிலை இடிப்பேன்' என்று பிறருடைய நம்பிக்கையில் தலையிடவும் இல்லை, இடிக்கவும் இல்லை.
ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீ கிருஷ்ணராக வந்து இருக்கிறார் என்று தெரிந்தும், அர்ஜுனன் போர் நடக்கவிருப்பதால் சிவபெருமானிடம் உள்ள பாசுபத அஸ்திரத்தையும் வாங்கி கொள்ளலாம் என்று தபசுக்கு செல்ல, கிருஷ்ணர் அதற்காக அர்ஜுனன் முயற்சியை தடுக்கவில்லை.
தெய்வங்களுக்குள்ளும் பொறாமையில்லை.
பாரத மக்களுக்குள்ளும் பொறாமையில்லை.

பாரத அரசர்களும் தெய்வ விஷயங்களில்  பொறாமைபடவில்லை.
"சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, விஜயநகர, மராத்திய, குப்த அரசரகள்" என்று அனைத்து அரசர்களும் போட்டி போட்டுக்கொண்டு சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிற அனைத்து தெய்வத்துக்கும் பெரிய பெரிய கோவில்கள், நிலங்கள் கொடுத்து அவரவர் தெய்வ நம்பிக்கையை வளர்த்தனர்.


பொறாமை குணம் இல்லாத அரசன்,
பொறாமை குணம் இல்லாத பாரத மக்கள்,
பொறாமை இல்லாத தெய்வங்கள் - கொண்டதாக இந்த புண்ணிய பாரத பூமி இருந்தது.

இந்த தர்மம் லட்சக்கணக்கான வருடங்களாக (சனாதனமாக) இந்த பாரத மண்ணில் இருந்தது.
பல தெய்வங்கள் இருந்தாலும், கலாச்சாரம் ஒன்றாக இருந்தது. குணம் ஒன்றாக இருந்தது.
இதனால் கலாச்சாரத்தில் ஒன்றுபட்ட, பாரத மக்கள் தங்களை  பொதுவாக "சனாதனமாக இருக்கும் தர்மத்தில்" இருப்பவர்கள் என்று மட்டுமே பெருமையாக சொல்லிக்கொண்டார்கள்.

வரலாற்றில் கிருமிகண்ட சோழன் என்று அழைக்கப்பட்ட குலோத்துங்க சோழன் கூட வைஷ்ணவ கொள்கைகள் ராமானுஜரால் பரவுவதை கண்டு, சிவபக்திக்கு குறைவு வந்து விடுமோ என்ற தனி மனித கோபத்தில்,  ராமானுஜரை கொலை செய்ய நினைத்தான்.
இந்த சதியில் இருந்து தப்பித்து, ராமானுஜர் கர்நாடகத்தில் உள்ள மேல்கோட்டைக்கு சென்று 12 வருடம் தங்கி விட்டார்.
ராமானுஜர் ஸ்ரீ ரங்கத்தில் இல்லை என்றதும், சோழ அரசன் 'பெருமாள் கோவிலை இடிப்பேன், வைஷ்ணவர்களை அடியோடு அழிப்பேன்' என்று இறங்கவில்லை.

தனி மனித பகை இருந்ததே ஒழிய, பிற தெய்வங்களிடம் வெறுப்பு இல்லை.

ராமானுஜர் போன்ற மகானுக்கு அபசாரம் செய்ததால், இந்த சோழன் புற்றுநோய் (cancer) வந்து இறந்தான்.
பின் வந்த சோழ அரசர்கள், ராமானுஜரை அழைத்து அவருக்கான மரியாதையை கொடுத்தனர். ஸ்ரீ ரங்கத்திலேயே கடைசி வரை ராமானுஜர் ஸ்ரீ ரங்கநாதருக்கு சேவை செய்தார்.
ராமானுஜர் ஒரு சோழ அரசனால் விரட்டப்பட்டார் என்பதால், ராமானுஜர் யாரையும் விமர்சனம் செய்யவே இல்லை. சிவ துவேஷம் காட்டவே இல்லை.

அவரவர்கள் அவர்கள் தெய்வத்தை வழிபடுவதில் திருப்தியாக இருந்தனர்.

நாயன்மார்களும் திருப்தியாக சிவ பக்தி செய்தனர்.
ஆழ்வார்களும் திருப்தியாக பெருமாள் பக்தி செய்தனர்.
அருணகிரிநாதர் ஒரு குறைவும் இல்லாமல் முருக பக்தி செய்தார்.

இது தானே சனாதன தர்மம்.
நிம்மதியாக இருந்தது பாரத நாடு.

"வளர்ச்சி, விவசாயம், எல்லை பாதுகாப்பு, நீதியை நிலைநாட்டுவது" இவையே பாரத அரசனுக்கு முக்கிய கடமையாக இருந்தது.
மக்களுக்குள் தெய்வத்தை வைத்து சண்டைகளே இல்லாமல் இருந்தது.
ஹிந்து அரசர்களுக்கு "தெய்வத்தின் பெயரால் சண்டை" என்பதே புரியாத விஷயம். தேவையில்லாத விஷயமும் கூட.


மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்கள் உள்ளே நுழைந்ததும், "தெய்வத்தின் பெயரால்" அட்டகாசம், வெறுப்பு ஆரம்பம் ஆனது.
அது பாரத தேசத்தையும் விட்டு வைக்கவில்லை.
பரவாசுதேவன் நாராயணன், ஸ்ரீராமராக அவதாரம் செய்தும், கிருஷ்ணராக அவதாரம் செய்தும்,
ராம 'மதம்', கிருஷ்ண 'மதம்'
என்று தான்தோன்றி தனமாக மதங்களை உருவாக்கி, உளராமல் இருந்தனர் பாரத மக்கள்.
மஹாவீரர் தோன்றிய பின்,
புத்தர் தோன்றிய பின்,
அவர்கள் பெயரால் 'சன்மார்க்க வழி' என்று முதலில் ஊர் முழுக்க கடைபிடிக்க ஆரம்பித்தனர் பாரத மக்கள்.
கலியின் பிடியில் புத்தி தடுமாறி போன காலம் என்று சொல்லலாம்.

'மதம்' என்று இவர்களும் அடையாளப்படுத்தி கொள்ளவில்லை.
இதுவும் ஒரு தர்ம வழி என்று தான் சொல்லிக்கொண்டனர் பௌத்தர்களும், ஜைனர்களும்.

பாரத மக்களை பொறுத்தவரை, "மதம்' என்ற வார்த்தையை 'கர்வம்' என்ற பொருளில் தான் பயன்படுத்தி வந்தனர் அது நாள் வரை.
"காம, க்ரோத, மத..." என்று சொல்லும் போது, "காமம், கோபம், கர்வம்" போன்ற துர்குணங்கள் நமக்கு இருக்க கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்த பாரத மக்களிடம்,
'கர்வம்' என்ற பொருள் கொண்ட "மதம்" என்ற பெயருக்கு வேறு சாயம் பூசினர் வெளி மதத்தினர்.

வெளிநாட்டில் இருந்து படையெடுத்து வந்த முஸ்லீம்கள், தங்களை "இஸ்லாம்" மதம் என்று அடையாளப்படுத்தி கொண்டனர்.
947ADல் அரேபிய முஸ்லிம்களால், கோரி அரசாட்சி "ஆப்கான் தேசத்தில்" தலை எடுக்க ஆரம்பித்தது.
பௌத்த அரசர்கள் அங்கு வீழ்ந்து, கோரி அரசாட்சி ஆரம்பம் ஆனது.
அன்று ஆரம்பித்தது பாரத நாட்டிற்கு பெரும் சோதனை.


இஸ்லாம் (மனிதன் 7) உள்ளே நுழைந்த போது, பாரத மக்கள் நிலை என்ன ஆனது?


  • மனிதன் 7 : அல்லாஹ் (இறைவன்) இருக்கிறார். அவரை நம்ப வேண்டும். அவரை பற்றி நாமாக உருவகப்படுத்த கூடாது. அவர் போதனை என்ன என்று எங்கள் குரான் மட்டும் தான் சொல்கிறது.எதிர் கேள்வி கேட்காமல் அப்படியே கடைபிடிக்க வேண்டும். உங்கள் கடவுள் நம்பிக்கை எப்படி?
  • மனிதன் 1 : இறைவன் இருக்கிறார். விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 2 : இறைவன் இருக்கிறார். முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 3: இறைவன் இருக்கிறார். மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 4: இறைவன் இருக்கிறார். தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 5: இறைவன் இருக்கிறார். சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 6: இறைவன் இருக்கிறார். எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது.


  • மனிதன் 7 : ஒப்புக்கொள்ளவே முடியாது. அல்லாவுக்கு (இறைவன்) பெயர் வைத்து, ஒரு கோவில் கட்டி, நீங்கள் வழிபடுவதை ஏற்கவே முடியாது. நீங்கள் எல்லோரும் நரகம் போவீர்கள். ஒன்று என் நம்பிக்கையை கடைபிடியுங்கள்.. இல்லை நாங்கள் சமயம் பார்த்து உங்களை அழிக்க முயல்வோம். உங்களை கத்தி முனையை கொண்டாவது எங்கள் வழியில் இறைவனை வணங்க செய்வோம்.

இப்படி ஆரம்பித்த பின், பாரத தேசம் கலவர பூமி ஆனது.

இஸ்லாமியர்கள் வருவதற்கு முன் கூட ஒரு அரசனுக்கும், இன்னொரு அரசனுக்கும் போர் எழுந்துள்ளது.
ஆனால், அரசர்கள் யாவரும், தனியான இடத்தில் தான் போர் நடத்தினர்.

சோழ அரசன் காசி வரை சென்று ஜெய கொடி நாட்டினான் என்று சரித்திரங்கள் சொல்கிறது.
அசோக சக்கரவர்த்தி ஏறத்தாழ பாரத தேசம் முழுவதும் ஆண்டார் என்று சொல்கிறது.

ஒரு நாட்டை பிடிக்க,
பொது மக்களை கொலை செய்வதோ, 
கொள்ளை அடிப்பதோ, 
கோவிலை இடிப்பதோ 
பாரத மக்களும், அரசர்களும் பார்த்திராத குணங்கள். கீழ்த்தரமான குணங்கள்.

முகம்மது கஜினி என்ற அரேபிய இஸ்லாமியன் உள்ளே நுழைந்ததும் அவன் தாக்கியதே சோம்நாத்தில் உள்ள 'சிவன்' கோவிலை தான்.
குஜராத் நகரமே நிலை குலைந்தது.

17 முறை தொடர்ந்து, இவன் சிவன் கோவிலை இடித்து, அங்கு உள்ள தங்கங்களை கொள்ளையடிக்க முயன்றான்.
17 முறையும் அப்போது இருந்த ஹிந்து (சனாதன தர்மத்தில் இருந்த) அரசனால் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டான்.



ஊர் மக்களை தாக்கியும்,
கோவிலை இடித்தும் போர் செய்த இஸ்லாமிய அரேபியர்கள்,
18வது முறை இரவோடு இரவாக திடீர் தாக்குதல் செய்து ஹிந்து அரசனை கொன்று, சோம்நாத் கோவிலை தரைமட்டமாக்கி அங்கு இருந்த கோடிக்கணக்கான நகைகளை அள்ளிக்கொண்டு ஓடினான்.

17 முறையும் தோற்ற கஜினி, ஒவ்வொரு முறையும் மன்னிப்பு கேட்டான். 17 முறையும் மன்னித்தான் ஹிந்து அரசன்.
'கோவிலை இடிப்பதே இவர்கள் முதல் கொள்கை,
பாரத மக்களை தன் வழிபாட்டு முறைக்கு மாற்றுவதே இவர்கள் முக்கிய கொள்கை'
என்று பாரத பூமியை தாக்க வந்த இவர்களை, மற்ற ஹிந்து அரசர்கள் போல தான் இவனும் என்று நினைத்து, 17 முறை மன்னித்து விட்டான் ஹிந்து அரசன்.
விளைவு:
அன்று சோம்நாத் சுற்றி இருந்த லட்சக்கணக்கான சௌராஷ்டிர மொழி பேசும் ஹிந்துக்கள் (சனாதன தர்மத்தில் இருப்பவர்கள்) வாழ வழி தேடி, நாடோடிகளாக வெளி மாநிலங்களுக்கு ஓடி ஓடி, இன்று மஹாராஷ்டிரா முதல் மதுரை வரை சிதறி சிதறி வாழ்ந்து வருகின்றனர்.




அரேபிய இஸ்லாமியர்களால், முதன் முதலில் பாதிக்கப்பட்ட சனாதன தர்மத்தில் வாழ்ந்த முதல் சமூகம் "சௌராஷ்டிர" சமூகமே.
45000க்கும் மேலாக பாரத நாட்டில் இருந்த பெரிய பெரிய முக்கியமான கோவில்களை இடித்து தள்ளினர் அரேபிய இஸ்லாமியர்கள்.
மீண்டும் மீண்டும் அரசர்கள் கட்டுவதை பார்த்து, அதன் பிறகு, கோவில் மேல், மசூதியை கட்ட ஆரம்பித்தனர். தனக்கு அரண்மனைகள் கட்டிக்கொண்டனர்.

வட நாட்டில், தமிழ்நாட்டில் இருப்பது போல லட்சக்கணக்கான கோவில்கள் இருந்தன.
இன்று, ஒன்று கூட, தமிழ்நாட்டில் உள்ளது போல அங்கு காணப்படவில்லை.
1000 வருட இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் பல லட்சம் ஹிந்துக்கள் (சனாதன தர்மத்தில் இருந்தவர்கள்) பயத்தினாலும் பணத்திற்காகவும், இஸ்லாமியனாக மாறினர்.

அலாவுதீன் கில்ஜிக்கு முக்கியமான படை தளபதி "மாலிக் காபுர்".
அலாவுதீன் கில்ஜி, குஜராத் மீது படையெடுத்த போது, அடிமைகளாக இழுத்து வந்த ஹிந்துக்களில் ஒருவன் தான் இந்த மாலிக் காபுர்.


'மாணிக்' என்ற இந்த ஹிந்து மீது கில்ஜிக்கு ஒரு தனிப்பட்ட ஈடுபாடு இருந்ததால், அவனிடம் நெருங்கி பழகினான்.
போர் திறமை இருப்பதை கண்ட கில்ஜி, இவனை பல ஹிந்து அரசர்களை எதிர்த்து போர் செய்ய அனுப்ப, கோவிலை இடிப்பதும், பொது மக்களை கொள்வதன் மூலம் ஹிந்து அரசர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள செய்வதும், ஆங்காங்கு வெற்றிகளை பெற, நாளடைவில், தன்னை இஸ்லாமியனாக மாற்றிக்கொண்டான் "மாணிக்" என்ற "மாலிக் காபுர்".

பணத்திற்காகவும் புகழுக்காகவும் தன்னை இஸ்லாமியனாக ஆக்கிக்கொண்ட பின், இவன் செய்த அட்டகாசங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.

இந்த மாலிக் காபுர் என்பவன் தான், தெலுங்கு தேசத்தில் படையெடுத்த போது, பொது மக்களை தாக்கி, காளி கோவிலை இடித்து, அங்கு கிடைத்த பல வைரங்களில், "கோஹினூர் வைரம்" உட்பட பல கொள்ளையடித்த செல்வங்களை கில்ஜியிடம் கொடுத்தான்.
ஊரை கொள்ளையடித்து, கோவிலை இடிக்க, காகதியா பேரரசு வேறு வழில்லாமல் பெரும் செல்வத்தை மாலிக் காபுர் எடுத்து செல்ல அனுமதித்தது.

இவனே பின்னர், தமிழ்நாட்டுக்கு புகுந்து பாண்டிய மன்னர்களை நேரில் எதிர்க்காமல், ஒரு லட்சம் இஸ்லாம் படைகளுடன் நேராக  மதுரையில் உள்ள மீனாட்சி கோவிலில் செருப்பு காலுடன் நுழைந்து, அங்கு சுந்தரேஸ்வரர் சிவலிங்கத்துக்கு முன் ஒரு சுவர் எழுப்பி வைக்கப்பட்டு இருந்த போலி லிங்கத்தை இடித்து, கோவிலை கைப்பற்றி விட்டான். பாண்டிய மன்னர்களை அடி பணிய செய்தான்.
பொதுவாக கோவிலை தாக்கியும், பொது மக்களை தாக்கியும் தான் அரசர்களை சரணடைய செய்து கொன்றனர்.
இது முடியாத பட்சத்தில், இரவோடு இரவாக திடீர் தாக்குதல் செய்து அரசர்களை தாக்கினர்.
பாண்டிய அரசாட்சி முடிவுக்கு வந்த காலம் அது.

அடுத்த 80 வருடங்கள், கில்ஜி மூலமாக இஸ்லாமிய ஆட்சி ஆரம்பித்து, அடுத்து வந்த முகம்மது பின் துக்ளக் ஆட்சி வரை, இஸ்லாமிய ஆட்சி தொடர்ந்தது.
தமிழர்களை கொன்று குவித்தனர் பாண்டிய தேசத்தை கைப்பற்றிய இஸ்லாமிய அரேபியர்கள்.

மதுரை ரத்த காடாக ஆனது.
80 வருடங்கள் கழித்து கர்நாடகத்தில் இருந்து சிங்கமாக புறப்பட்டு, விஜயநகர இளவரசன் கம்பண்ணா இஸ்லாமிய ஆட்சியை 80 வருடங்களுக்கு பின் முடிவுக்கு கொண்டு வந்தார்.
அதற்கு பின், தமிழநாட்டை இஸ்லாமிய ஆட்சி வட இந்தியாவை போல முழுவதுமாக பிடிக்கவே முடியவில்லை. சோழ நாடு முழுவதுமாக விஜயநகர அரசால் காக்கப்பட்டது.
தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற ஊர்களில் கட்டிய கோவில்கள் தப்பித்தன.

இதே மாலிக் காபுர் தான் மதுரையை தொடர்ந்து, ஸ்ரீ ரங்கம் நுழைந்து, ஸ்ரீ ரங்க கோவிலில் கொள்ளை அடித்து, 13000 வைஷ்ணவர்களை கோவிலிலேயே கொன்று, ரங்கநாதரை டெல்லிக்கே தூக்கி சென்று விட்டான்.
பின்னர் வைஷ்ணவர்கள் சென்று, அவனிடம் நாடகம், நாட்டியம் போன்ற கேளிக்கைகள் செய்து, அவனை எப்படியோ சம்மதிக்க வைத்து, ஸ்ரீ ரங்கநாதரை மட்டும் மீட்டு டெல்லியில் இருந்து கொண்டு வந்து விட்டனர்.
இவன் மகள் சுரதானி என்ற துலுக்கநாச்சியார், ரங்கநாதரை அவள் அரண்மனையில் வைத்து அதுவரை பொம்மையாக விளையாடி கொண்டிருந்தாள்.
ஸ்ரீ ரங்கநாதர் அவளுடன் சிலையாக இருந்தே பேச ஆரம்பிக்க, தன் தந்தை மாலிக் காபுர் அந்த ரங்கநாதரை கொடுத்து விட்டார் என்று தெரிந்து ஸ்ரீ ரங்கம் வர, கோவிலில் நுழைந்து ரங்கநாதரை பார்த்ததும் அவர் சரணத்திலேயே உயிர் துறந்து விட்டாள்.
இதை கேள்விப்பட்டு, மீண்டும் இஸ்லாமியர்கள் ஸ்ரீ ரங்கம் படையெடுக்க, மதுரையில் சுந்தரேஸ்வரர் 80 வருடங்கள் சுவருக்கு பின் இருந்தது போல, ஸ்ரீ ரங்கநாதரும் 80 வருடங்கள் மேலூர், கேரள தேசம், திருப்பதி என்று இருந்து விட்டு, விஜயநகர அரசர்கள் மீண்டும் ஹிந்துக்கள் வாழ வழி செய்த பின், மதுரை மீனாட்சி கோவிலும் திறக்கப்பட்டது. ஸ்ரீ ரங்கமும் திறக்கப்பட்டது.

நினைத்து பார்க்க முடியாத நிலையில், நம் பாட்டனார்கள் வாழ்ந்து, சமாளித்து, அந்த சூழ்நிலையிலும் ஹிந்துவாகவே வாழ்ந்து நம் வரை ஹிந்துவாக வாழ வழி செய்துள்ளனர்.

மறக்க கூடியதா நம் பாட்டனார்கள் அனுபவித்த நிலை?!!.

மதுரை தேசம் மாலிக் காபுர் அட்டகாசத்திற்கு பின், 80 வருடங்கள் இஸ்லாமிய அரேபியர்கள் ஆட்சியில் மாட்டியது.
இந்த சமயத்தில் ஒரு 5 வருடங்கள் மட்டும் எப்படி இருந்தது? என்று இஸ்லாமியன் இபின் படூடா என்பவனே எழுதி வருத்தப்பட்டார்.
என்ன நிலையை தமிழர்கள் சந்தித்தனர்? என்று தெரிந்து கொள்ள படியுங்கள். Tamil_People_LifeStruggle

"தெய்வத்தின் பெயரால்" வெறுப்பையும்,
"தெய்வத்தின் பெயரால்" பிறர் கோவிலை இடிப்பதையும்,
"தெய்வத்தின் பெயரால்" பிற தெய்வங்கள் மேல் நம்பிக்கை உள்ளவர்களை மாற்ற நினைப்பதையும்,
1200 வருடங்கள் தொடர்ந்து செய்தனர் அரேபிய இஸ்லாமியர்கள், கிறிஸ்தவ வெளிநாட்டவர்கள்.

1400ADல் போர்சுகீஸ் கிறிஸ்தவர்கள் (வாஸ்கோட காமா) மூலமாக  ஆரம்பித்தது பாரத நாட்டிற்கு மேலும் ஒரு பெரும் சோதனை.

கிறிஸ்தவ மதமும் நுழைந்த பின், பாரத தேச மக்கள் மேலும் திண்டாடினர்.

ஏற்கனவே மனிதன் 7, 'தன் கொள்கையே சிறந்தது. நீங்கள் என் வழியில் வாருங்கள், இல்லை உங்களை எதிர்க்க தயார்' என்று அட்டகாசம் செய்து கொண்டு இருக்கும் போது, ஏறத்தாழ இதே கொள்கையுடைய கிறிஸ்தவர்களும் (மனிதன் 8) வணிகம் என்ற பெயரில் உள்ளே நுழைந்தனர்.


  • மனிதன் 8 : இறைவன் இருக்கிறார். அவரே ஏசு. அவரை கொன்றாலும் அவர் நமக்காக தான் இறந்து போனார். அதனால் நமக்காக திரும்பவும் வருவார். ஏசுவை நம்பாது இருந்தால் நீங்கள் நரகம் போவீர்கள். உங்களுக்காக உயிர் விட்ட ஏசுவே உங்கள் தெய்வம்.
  • மனிதன் 1 : விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 2 : முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 3: மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 4: தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 5: சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 6: எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது.
  • மனிதன் 7 : அல்லாஹ் (இறைவன்) இருக்கிறார். அவரை நம்ப வேண்டும். அவரை பற்றி நாமாக உருவகப்படுத்த கூடாது. அவர் போதனை என்ன என்று எங்கள் குரான் மட்டும் தான் சொல்கிறது. எதிர் கேள்வி கேட்காமல் அப்படியே கடைபிடிக்க வேண்டும். மனிதன் 8 சொல்வதும் பொய். ஒரு கொலை செய்யப்பட்ட மனிதனை (ஏசு) ஒப்புக்கொள்ளவே முடியாது. நீங்கள் சொல்லும் எந்த முறையையும் ஒப்புக்கொள்ள முடியாது. அல்லாவுக்கு (கடவுள்) பெயர் வைத்து, ஒரு கோவில் கட்டி, நீங்கள் வழிபடுவதை ஏற்கவே முடியாது. நீங்கள் எல்லோரும் நரகம் போவீர்கள். ஒன்று என் நம்பிக்கையை கடைபிடியுங்கள்.. இல்லை நாங்கள் சமயம் பார்த்து உங்களை அழிக்க முயல்வோம். உங்களை கத்தி முனையை கொண்டாவது எங்கள் வழியில் இறைவனை வணங்க செய்வோம்.



கிறிஸ்தவர்கள் ஆட்சியின் போது, கிறிஸ்தவர்கள், காளையார் கோவிலை இடித்து தள்ளிவிடுவோம் என்று சொல்ல, கோவிலை காப்பாற்ற, உயிரை கொடுக்க முன் வந்தனர் "மருது சகோதரர்கள்".

சிவபெருமான் கோவிலை இடிக்க கூடாது என்று, நம் மருது சகோதரர்கள் தூக்கில் தொங்கினர். கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தில் ஹிந்துக்கள் கேவலப்படுத்தபட்டனர்.

தெய்வங்களை கிண்டல் செய்தும், அவமானம் செய்தும் பேசும் பழக்கம் இவர்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. 

கிறிஸ்தவதுக்கு மதம் மாற்றப்படும் ஹிந்துவுக்கும், ஏசு நல்லவரா? கெட்டவரா? என்பதை விட, ஹிந்து தெய்வங்களை பற்றி தனக்கு தோன்றிய படி, கீழ்த்தரமான போதனைகள் தான் அதிகம் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கிறிஸ்தவதுக்கும், இஸ்லாம் கொள்கைக்கும் ஏழாம் பொருத்தம்.

இருவருக்குமே "தங்கள் கொள்கை தான் சரி" என்ற தீவிரம் உடையதால், "மற்றவர்களை தன் கொள்கைக்கு இழுக்க வேண்டும்" என்ற கொள்கையும் உள்ளதால்,
"மற்ற நம்பிக்கை உடையவர்கள் அனைவரும் நாசமாக போவார்கள், நரகம் போவார்கள்" என்று அவர்கள் நம்பிக்கை.

இன்று வரை கிறிஸ்தவ நாடுகள், இஸ்லாமியர்களை நம்புவதில்லை.

'அமெரிக்கர்கள்' எந்த இஸ்லாமிய தேசத்தையும் நம்புவதில்லை. இஸ்லாமியன் இவர்கள் நாட்டுக்குள் வந்தால் ஆயிரம் கேள்விகள் விசாரணைகள் செய்கிறது.
நியூஸிலாந்தில் இந்த பகையே, மசூதிக்குள் புகுந்து, தொழுகை செய்து கொண்டிருந்த சாதாரண இஸ்லாமியர்களை சரமாரியாக கொன்று குவிக்க கொண்டு சென்றது.

இதற்கு சளையில்லை என்று,
இலங்கையில், சர்ச்சுக்குள் புகுந்து இருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரையும் பாம் போட்டு கொன்று குவித்தனர் இஸ்லாமியர்கள்.
'தன் கொள்கை மட்டுமே உயர்ந்த கொள்கை' என்றும்,
'தன் வழிபாட்டு முறையை சரியான வழி' என்றும்,
'தான் நம்பும் தெய்வமே தெய்வம்' என்றும்
தெய்வத்தின் பெயரால், சண்டை இட்டுக்கொள்ளாத நாடுகள்,
இந்த இரு மதங்கள் தோன்றிய பின், மதத்தின் பெயரால் பல கோடி மக்களை இழந்து விட்டது.
பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டு விட்டன.
பல பேரரசுகள் அழிந்து விட்டன.


அன்று கத்தி, வில் கொண்டு, தெய்வத்தின் பெயரால் சண்டை போட்டனர். இனியும் தெய்வத்தின் பெயரால் சண்டையிட்டால் உலகம் அழிந்து போகும்.
கிரேக்க கலாச்சார இறைவழிபாடுகள், கொள்கைகள் அழிந்து, இன்று கிரேக்க நாடு கிறிஸ்தவ நாடாக ஆகி விட்டது.

பல தெய்வங்களை வழிபட்டு கொண்டிருந்த அரேபியர்கள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டனர்.
ஐரோப்பிய நாடுகளே கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு விட்டது.

ரோமானிய பேரரசும் தன் கலாச்சாரம், தெய்வ வழிபாட்டை இழந்து கிறிஸ்தவ நாடாக ஆகி விட்டது.

இப்படி கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்திற்கு மாறிய இவர்களுக்கு,
"மற்ற நம்பிக்கைகள் நரகத்திற்கு தள்ளும், நம் வழியே சொர்க்கம் தரும்" என்று சொல்வதால்,
உலகம் எங்கும் 'தெய்வத்தின் பெயரால்' மத சண்டைகள் இந்த இரு மதங்களாலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

ஜப்பான், சீனா போன்ற தேசங்கள் பௌத்த மதத்தை நம்மிடம் இருந்து எடுத்துக்கொண்டதால் ஓரளவு மத சண்டைகள் இல்லாமல் உள்ளனர்.

நம் பாரத நாட்டிலோ, ஹிந்துக்கள் மட்டும் இல்லாமல்,
1200 வருடங்களில் சனாதன தர்மத்தில் இருந்த லட்சக்கணக்கானவர்களை கிறிஸ்தவனாகவும், இஸ்லாமியனாகவும் மதம் மாற்றி விட்டு, அரேபியர்களும், ஐரோப்பிய கிறிஸ்தவர்களும் அவரவர் ஊருக்கு முடிந்த வரை கொள்ளையடுத்து விட்டு சென்று விட்டனர்.

அவர்கள் சென்று விட்டாலும்,
ஹிந்துவாக இருந்து, இன்று கிறிஸ்தவனாக, இஸ்லாமியனாக வாழும் பாரத மக்கள்,
1200 வருடங்களும் மதம் மாறாமல் ரோமானிய கிரேக்க கலாச்சாரம் அழிந்ததை போல சனாதன தர்மத்தை அழித்து விடாமல், இன்று வரை சனாதன தர்மத்திலேயே (ஹிந்துக்களாக) வாழுவதை பார்த்து பெருமை படாமல், தானும் நம் மூதாதையர்கள் வாழ்ந்த வழியில் செல்வோம் என்று நினைக்காமல், மானத்தோடு வாழும் ஹிந்துக்கள் மேல் வெறுப்பை உமிழ்கின்றனர்.
கிறிஸ்தவர்கள் ஒரு படி மேலே போய், சிவனை கேலி செய்து சித்திரம் வரைந்து வெறுப்பை கக்குகிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து புகுந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய மதவாதிகள், 'மதம்' என்றால் 'கர்வம்' என்று மட்டுமே பயன்படுத்தி வந்த பாரத மக்களை பார்த்து, பல தெய்வங்களை வணங்கினாலும், வேறுபாடு இன்றி, ஒரே கலாச்சாரமாக வாழ்வதை பார்த்து,
சிந்து நதி ஓரம் வந்து 'இந்டு' என்றும், 'இந்து' என்றும், 'ஹிந்து' என்றும், 'ஹிந்டு' என்று வாய்க்கு வந்த வந்தபடி நம் அனைவரையும் அடையாளப்படுத்தினார்கள்.

நம்மை மட்டுமல்ல, பிரயாகை என்ற பெயரை மாற்றி அல்லாஹ்பாத் என்று மாற்றினர்.
கிறிஸ்தவன் பல தமிழ் ஊர் பெயர்களை குட்டி சுவர் ஆக்கினான்.


திருச்சிரார்ப்பள்ளி என்று சொல்ல முடியாமல் ட்ரிசி என்றான், கொல்கத்தாவை கல்கட்டா என்றான்.
மும்பையை பாம்பே என்றான்.

பாரத நாட்டை விட்டு இவர்களை கஷ்டப்பட்டு கிளப்ப வைத்த சமயத்திலும், பாரத நாட்டுக்கே அர்த்தமில்லாத பெயரை கொடுத்து விட்டான். 
நேரு யோசிக்காமல் ஏற்றார்.

ஐரோப்பிய கிறிஸ்தவன், நம் பாரத நாட்டை மூன்றாக பிரித்து, இவன் உளறி கொட்டிய 'இந்டு' என்பதையே 'இண்டியா' என்று ஒரு பகுதிக்கு பெயர் வைத்தான்.
தொன்று தொட்டு பல தெய்வங்கள் வழிபட்டாலும்,
பகை இன்றி ஒரே கலாச்சாரமாக வாழ்ந்த நமக்கும் 'மதம்' என்ற அடையாளத்தை கொடுத்து,
அவன் உளறி கொட்டிய 'ஹிந்து' என்ற வார்த்தையையே மத பெயர் ஆக்கினான்.

"பாக்கி உள்ள 2 பகுதிகளை" கிழக்கு பாக்கிஸ்தான், மேற்கு பாக்கிஸ்தான் என்று பெயர் வைத்து, பிரித்து விட்டான்.

"ஜின்னா" போன்ற ஹிந்துவாக ஒரு பரம்பரையில் இருந்து இஸ்லாமியனாக மாறியவர்கள்,
'பாகிஸ்தான் இனி இஸ்லாமிய நாடு' என்று தெளிவாக சொல்லி நாட்டில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு கிடைக்க செய்தனர்.
நேரு 'இண்டியா ஹிந்துக்கள் நாடு' என்று சொல்லி, ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு தரும் நாடு என்று சொல்ல மறந்தார்.
நேருவின் பெண்ணே இஸ்லாமியனை மணந்து இருந்தார் என்ற போது, நேருவிடம் இதை எதிர்பார்ப்பது அறிவீனமே... எதிர்த்த சர்தார் படேல், போஸ் ஒதுக்கப்பட்டார்கள்.

1000 வருடங்களாக இஸ்லாமியன், கிறிஸ்தவன் என்று மாற்றப்பட்டு இருந்த ஹிந்துக்கள் தங்கள் மதம் முஸ்லீம், கிறிஸ்டின் என்று அடையாளபடுத்தி வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

ஆங்கில மோகம் கொண்ட, ஆங்கிலேயே கிறிஸ்தவர்களுடனேயே பழகிய நேரு, இதையெல்லாம் யோசிக்கும் அளவுக்கு திறன் இல்லாமல் இருந்தார்.
பாரத தேசம் ஹிந்து தேசம் என்று சொல்ல மறந்தார்.
திறன் கொண்ட சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்களை அலட்சியம் செய்தார்.

சுதந்திரம் அடைந்த பின்னும், இன்றும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாரத மண்ணில் ஹிந்துக்களாக வாழ்ந்த பல குடும்பங்கள் இன்று இஸ்லாமியனாகவும், கிறிஸ்தவனாகவும் உள்ளதால், அவர்கள் கொள்கையாலேயே இறைவன் பெயரால் நடக்கும் சண்டைகள் ஓயாமல் உள்ளது.

பாகிஸ்தான் போன்ற பிரித்து கொடுக்கப்பட்ட பாரத தேசம் 'இஸ்லாமிய தேசம்' என்று ஆக்கப்பட்டதால் அங்கு ஹிந்துக்கள் வாழ்வது சாதாரண காரியம் அல்ல. பல லட்ச ஹிந்துக்கள் 1947க்கு பின் இஸ்லாமுக்கு மாற்றப்பட்டு விட்டனர்.

கொள்கையே இவர்களுக்கு தீவிர வாதத்தை கொடுப்பதால், கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களை தங்கள் முதல் எதிரியாக பார்க்கின்றனர்.
இப்பொழுது, இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களை தாக்க ஆரம்பித்து விட்டனர்.


கத்தி, வேல் கொண்டு மத சண்டைகள் நடந்த போது உயிர் சேதங்கள், கட்டிடங்களுக்கு சேதங்கள் நடந்து கொண்டிருந்தன.

இன்றைய நவீன கண்டுபிடிப்புகள் உள்ள காலங்களில் இனியும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் 'தன் வழிபாடு மட்டுமே சிறந்தது. மற்றவன் வழிபாடு நரகம் கொடுக்கும்' என்று சொல்லி சண்டையிட்டால், அனு ஆயுதங்கள் கொண்டு உலகமே நொடிகளில் அழிந்து விடும்.

சிவனை கும்பிட்டாலும் உனக்கு மோக்ஷம் தான்,
முருகனை கும்பிட்டாலும் உனக்கு மோக்ஷம் தான்,
பெருமாளை கும்பிட்டாலும் உனக்கு மோக்ஷம் தான்
என்று சமபுத்தியோடு, பார்த்த சனாதன தர்மத்தில் (ஹிந்துக்கள்) வாழும் ஹிந்துக்கள் இன்றும் அப்படி தான் வாழ்கின்றனர்.

பெருமாள் பக்தன் சிவன் கோவிலுக்கு செல்லாமல் இருந்தாலும், சிவன் கோவிலை இடிப்பேன் என்று சொல்வதில்லை.

முருக பக்தன், காளி கோவிலுக்கு செல்ல மாட்டேன், காளி கோவிலை இடிப்பேன் என்று சொல்வதில்லை.

இன்னும் சொல்லப்போனால், ஹிந்துக்கள் வாயில் தான் சமத்துவம், 'எல்லா சாமியும் ஒன்னு தான்', ராமரை கும்பிட்டாலும், அல்லாவை கும்பிட்டாலும் அவன் நல்லவன் தான் என்று வருகிறது.

"உலகில் உள்ளவர்கள் யார் யாரை வேண்டுமானாலும் தெய்வம் என்று சொல்லிக்கொள்ளட்டும், நமக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்வோம், பிறர் எது சரி என்று நினைக்கிறார்களோ அப்படியே வாழட்டும்" 
என்று சனாதன தர்ம கொள்கையை மட்டும் எடுத்து கொண்டால் போதுமானது.
அவனவன் நம்பிக்கையில் வாழ்வோம்.
என் நம்பிக்கை எனக்கு பெரியது.
உன் நம்பிக்கை உனக்கு பெரியது.
இதுவே சனாதன தர்மம் காட்டிய வழி.

என் நம்பிக்கை மட்டுமே சிறந்தது. உன் நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அழிக்கப்பட வேண்டியது என்று சொல்லும் எந்த கொள்கையும் உலகை நாசமாக்கும்.

தெய்வத்தின் பெயரால் நடக்கும் அநீதிகளை 6 அறிவுள்ள மனிதனால் கட்டாயம் நிறுத்த முடியும்.

இதற்கு நமக்கு தேவை "அவனவன் நம்பிக்கையில் வாழ்வது. அடுத்தவன் நம்பிக்கையில் அவனை வாழ விடுவது என்ற பரந்த மனப்பான்மையே".

இப்படி வாழ ஆரம்பிக்கும் போது, உலகமே சனாதன தர்மத்தில் அவரவர் தெய்வங்களை வணங்கி கொண்டு, ஆனால் பிற தெய்வ வழிபாட்டின் மேல் பொறாமை இல்லாது வாழ தெரிந்த சமுதாயமாக மாறும்.

இந்த சனாதன தர்மத்தை மீண்டும் கொண்டு வர, மனிதனாக இருக்கும் நமக்கு பரந்த உள்ளம் வேண்டும்.


அரேபிய இஸ்லாமியர்கள் பாரத நாட்டில் அத்தனை அட்டூழியம் செய்தனர் என்பது அந்த காலம்.
ஆனால், அந்த தேசம் கூட, இன்று ஹிந்துக்கள் வழிபட கோவில் கட்டி தருகிறோம் என்று வந்துள்ளதே..  இது தானே சனாதன தர்மம்.
யாருக்கும் நியாயமாக வாழ, ஒரு தெய்வத்தை வழிபட அனுமதி அளித்தது தானே சனாதன தர்மம்
இந்த சனாதன தர்மம் உலகம் முழுக்க பரவும் போது, மீண்டும் மனிதர்கள் மனிதர்களாக வாழ ஆரம்பிக்கலாம்.

"எவன் எந்த தெய்வத்தை கும்பிட்டால் நமக்கு என்ன?" என்றாவது இருக்க உலக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

தெய்வத்தின் பெயரால் "நான் மட்டுமே சொர்க்கம் போவேன்.. நீங்கள் எல்லோரும் நரகம் போவீர்கள்" என்று சொல்லி வெறுப்பு, கொலைகளை தவிர என்ன சாதித்தார்கள் இவர்கள்?.

தெய்வத்தை வைத்து சண்டை போடுவதை தவிர்க்க வேண்டும்.
உனக்கு பெருமாள் பிடித்தால், வணங்கிக்கொள்.
உனக்கு யாரையுமே பிடிக்காதா.. அப்படியே இரு.
ஆனால் மற்றவன் நம்பிக்கையை பற்றி உனக்கு என்ன வேலை?

947ADக்கு முன் அப்படி தானே இருந்தோம்?!!.
அவரவர்கள் அவர்களுக்கு பிடித்த தெய்வங்களுக்கு கோவில் அமைத்து கொண்டார்கள்.
ரிஷிகள் எனக்கு கோவிலும் வேண்டாம், ஊரும் வேண்டாம் என்று காட்டில் தவம் செய்தார்கள்.
எங்கு வந்தது தெய்வத்தின் பெயரால் சண்டைகள்?.
6 அறிவுள்ள மனிதன் எவனாக இருந்தாலும், இனியும் தெய்வத்தின் பெயரால் சண்டை செய்வதை விரும்ப மாட்டான்.

சனாதன தர்மத்தின் வழியில் நாம் அனைவரும் செல்ல முயற்சித்தால், தெய்வத்தின் பெயரால் ஏற்படும் சண்டைக்கு முடிவு ஏற்படும்.

இஸ்லாம் உதித்த அரேபிய நாடே இதற்கு அடிக்கல் நாட்டி விட்டது.
அமெரிக்கா போன்ற நாடுகள், அனைத்து தெய்வ நம்பிக்கையையும் அவரவர்கள் வழிபட அனுமதிக்கிறது.
சனாதன தர்மம் இது தானே!!
பாரத மண்ணில் உள்ள இஸ்லாமியர்கள், "அயோத்தியில் என் தெய்வம் ராமர் பிறந்தார், அங்கு ஒரு கோவிலை கட்டி கொள்கிறோம். பாபர் என்ற அரேபியன் இருந்த கோவிலை இடித்துவிட்டான்" என்று சொன்னால், "ஏதோ உனக்கு ஒரு நம்பிக்கை, கட்டிக்கொள். எனக்கும் ஒரு மசூதி கட்டி கொடு" என்று சொன்னால், அது தானே சனாதன தர்மம்.


பரந்த மனம் அமெரிக்கவாசிகளுக்கே, அரேபியர்களுக்கே வந்து விட்டதே.. 

பாரத மக்கள் அனைவரும் சகோதர்களே...  
பரந்த மனத்தை மட்டும் காற்றில் பறக்க விட்டு, தெய்வத்தின் பெயரால் அடித்து கொள்கிறோம்.
இது வெட்கப்பட வேண்டியது. இது நாட்டின் வளர்ச்சிக்கு கேடு.

அடுத்தவன் நம்பிக்கையை ஏன் கேலி செய்ய வேண்டும்?
அடுத்தவன் தெய்வத்தை ஏன் பழிக்க வேண்டும்?

பாரத மக்கள் சிந்தனைக்கு...