Followers

Search Here...

Tuesday, 1 May 2018

பாபங்களுக்கு தண்டனை அனுபவித்தும் ஏன் மீண்டும் மீண்டும் ஜீவன் பாபம் செய்கிறான்?

பாப வாசனை
இந்த உடலை விட்டு ஜீவன் பிரிந்த பின்,
எம தர்மராஜன் ஆணை படி "செய்த பாவங்களுக்கு நரகத்தில் தண்டனை அனுபவிக்கிறான்".



மீண்டும், இந்த உலகில், இவன் செய்த கர்ம பலன்களை பொறுத்து, அதற்கு தகுந்த தாய், தந்தை தேர்ந்தெடுத்து, இந்த உலகில் மீண்டும் பிறக்க அனுக்கிரஹம் செய்கிறார்.

'தான் கொடுத்த தண்டனையில் இவன் திருந்தி, இப்பொழுது கிடைத்த இந்த சரீரத்தை கொண்டாவது ஒழுங்காக வாழ்ந்து, கிருஷ்ண பக்தி செய்து,   கிருஷ்ண சரணம் அடைவானா' என்று எம தர்மராஜன் எதிர்பார்க்கிறார்.

ஆனால் கிடைத்த பிறவியை இந்த ஜீவன், மீண்டும் பாவங்கள் செய்து, கிருஷ்ண பக்தி செய்யாமல் வீணடித்து, கிடைத்த மனித சரீரத்தை இழக்கிறான்.
கிடைத்த ஜென்மத்தை வீணடித்து, மீண்டும் எம தர்மராஜன் முன் வந்து நிற்கும் போது எம தர்மராஜன்,
"எத்தனை தண்டனை முன்பு கொடுத்தாலும், வைகுண்டம் செல்லாமல், ஏன் மீண்டும் மீண்டும் இங்கேயே தண்டனைக்கு வருகிறாய்?"
என்று வருத்தத்தால், கடுங்கோபத்துடன், தன் கடமை படி மீண்டும் தண்டனை கொடுத்து முடிந்தவரை மகா பாபங்களை குறைத்து, மீண்டும் இந்த உலகில் பிறக்க (மனிதனாகவோ, விலங்காகவோ, மரமாகவோ) வழி செய்கிறான்.
பாபங்களுக்கு தண்டனை அனுபவித்தும், ஏன் மீண்டும் மீண்டும் ஜீவன் பாபம் செய்கிறான்? 
அதற்கு பெயர் தான் "வாசனை"

தண்டனை அனுபவித்தும், ஜீவனுக்கு அவன் "பாப குணங்கள் என்ற வாசனை விட்டு விலகுவதில்லை".

இந்த வாசனையே இந்த ஜீவனுக்கு மீண்டும் மீண்டும் செய்த பாபத்தையே செய்ய வைக்கிறது.

வாசனை என்றால் என்ன? புரியும் படியாக சொல்ல வேண்டுமானால்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒருவன் வந்து "என்னுடைய வீட்டில் இருந்த நகையை யாரோ திருடி விட்டார்கள்… யார் திருடினார்கள் என்று தெரியவில்லை" என்று அழுதான்.

போலீஸ் இன்ஸ்பெக்டர், அருகில் இருந்த போலீஸ்காரரிடம் அந்த ஏரியாவில் உள்ள ஒரு கேடியின் பெயரை சொல்லி அழைத்து வரச் சொன்னார்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அந்த கேடி, தலையை சொறிந்து கொண்டே, சிரித்துக் கொண்டு, போலீஸ் இன்ஸ்பெக்டரை பார்த்து "வணக்கம் ஸார்" என்று ஸலாம் போட்டான்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபத்துடன் ஒரு அடி போட்டு, "என்னடா, நகையை திருடினாயா?" என்றார்.



உண்மையை ஒத்துக்கொண்டு, திருடிய நகையை திருப்பி கொடுத்தான்.

நகையை இழந்தவர், "எப்படி கண்டுபிடித்தீர்கள்?" என்று கேட்டார்

"இவன் ஒரு கேடி. இது போன்று பல முறை, இதே போல தவறு செய்து என்னிடம் மாட்டியிருக்கிறான். 
ஒவ்வொரு தடவையும் அடி கொடுத்தாலும் திருந்தாமல் மீண்டும் மீண்டும் செய்கிறான். 
பல தடவை இது போல அடி வாங்கி, பழகி போனதாலோ என்னவோ, ஜெயிலுக்கு போவதும், அடி வாங்குவதும் இவனுக்கு பழகிவிட்டது போல" என்று வருந்தவும் செய்தார்.

இது தான் "வாசனை".
அது போல, 
"பாபம் செய்ய வேண்டும் என்ற வாசனை", இந்த ஜீவனை விட்டு விலகுவதில்லை.
அதனால் தான், தண்டனை பல அனுபவித்தும், உலகில் துக்கமே அதிகம் அனுபவித்தும், பாப வாசனை இருப்பதால், பாபம் செய்து கொண்டே இருக்கிறான்.

இந்த பாப வாசனையை அழிக்க எம தர்மராஜனாலும் முடியாது.

இந்த பாப வாசனை அழிய வேண்டுமானால், இடை விடாது "ராம, ராம, ராம, ராம ..." என்று சொல்லுவதே இந்த ஜீவனுக்கு சித்த சுத்தி தரும்.
ராம நாமம் என்ற மந்திரம், இந்த ஜீவனின் இந்த பாப வாசனையை அழித்து, ராம, கிருஷ்ண பக்தியில் ஆழ்த்தி விடும்.
பாபம் செய்ய வேண்டும் என்ற ஆசையை அழித்து விடும்.

எம தர்மராஜன் "ராம, ராம, ராம, ராம …" என்று சொல்லும் ஜீவனை கண்டு பேரானந்தம் அடைகிறார்.

இந்த ஜீவன் இந்த உலகத்தை விட்டு செல்லும் போது, தானே வந்து, தன் தலை மேல் கால் வைத்து ஏறி வைகுண்டம் செல்லுமாறு வேண்டுகிறார்.

ஒரு ஜீவன் முக்தி அடைந்து விட்டது என்று ஆனந்தம் அடைகிறார் எம தர்மராஜன்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 





sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 





Monday, 30 April 2018

வாலிகர்கள் யார்? ம்லேச்சன் யார்? கர்ணனுக்கும், சல்லியனுக்கும் நடந்த விவாதம்

மஹாபாரத சமயத்தில் ம்லேச்சர்கள், வாலிகர்கள் என்று சிலரை குறிப்பிடுகின்றனர்.
இவர்கள் யார்?



சத்ய யுகம், த்ரேதா யுகம் வரை சனாதன தர்மம் மட்டுமே (இன்று முகலாயர்கள் வைத்த பெயர் "ஹிந்து") உலகம் முழுவதும் இருந்தது.
"சகர' சக்கரவர்த்தி அஸ்வமேத யாக குதிரையை கபில ரிஷி எடுத்து விட்டார் என்று தவறாக புரிந்து கொண்டு, தன் 60000 புத்திரர்களை அனுப்பினார்.
எதிர்க்க வந்த அனைவரும் தீயில் பொசுங்கினர்.

கபிலர் இருந்த அந்த இடம் "கலிபோர்னியா" என்று சொல்லப்படுகிறது. பொசுங்கி சாம்பலாக போனார்கள் என்று சொல்லும் சரித்திரத்தை ஒத்து, கலிபோர்னியா அருகில் Ashland என்ற பெயருடன் இன்றும் பெயர் அளவில் உள்ளது.

சத்ய யுகத்தில் நடந்த இந்த சரித்திரம்.
இதற்கு பின்,
பகீரதன் சொர்க்க லோகத்தில் இருந்து கங்கையை கொண்டு வந்தான்.

கங்கை பாரத பூமியான இமயமலைக்கு வர சம்மதிக்க, அந்த ஜலத்தை கொண்டு, இறந்த தன் முன்னோர்களுக்கு நற்கதி கிடைக்க செய்தார்.

கங்கை பாரத பூமிக்கு வரும் முன் நடந்த நிகழ்வு என்றால், காலத்தால் கணிக்க முடியாத சரித்திரமாக உள்ளது.
கங்கை பூமிக்கு வந்த சரித்திரம் அறிய
https://www.proudhindudharma.com/2017/12/GangaStory.html படிக்கவும்.

துவாபர யுக சமயத்தில் ஈரான் தாண்டி, வெகுவாக சனாதன தர்மத்தில் இருந்து விலகி, தனக்கு தோன்றிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர்.


பல தலைமுறைகள் செல்ல, ஒரு சமயத்தில், இவர்கள் முழுவதுமாக சனாதன தர்மத்தை மறந்து தான் தோன்றியாக, வாழ ஆரம்பித்தனர்.
இவர்கள் வாழும் பூமியும் ம்லேச்ச பூமியாக கருதப்பட்டது.

மஹாபாரத சமயத்தில் பாண்டவர்கள், கௌரவர்கள் போர் செய்த போது, பெரும்பான்மையான ம்லேச்ச படைகள் கௌரவர்கள் பக்கம் சேர்ந்து போரிட்டனர் என்று பார்க்கிறோம்.

மஹாபாரதம் நடந்த சமயத்தில், இஸ்லாம் என்ற மதமோ, கிறிஸ்தவ என்ற மதமோ, பௌத்த என்ற மதமோ, ஜைன என்ற மதமோ உருவாக்கப்படாத காலம்.

மஹாபாரதம் துவாபர யுக முடிவில் நிகழ்ந்தது.
சுமார் 3000BCல் என்று சொல்லலாம்.
3102BC முதல் கலியுகம் தொடங்கியது.

வாலிகர்கள் யார்?
வேத மார்க்கத்தை மீறி, சனாதன (ஹிந்து) குடும்பத்தில் பிறந்தும், நாத்தீக பேச்சு பேசியும், வேத மார்க்கத்தில் சொன்ன தர்மத்தை புரிந்து கொள்லாமல்  எதிர்ப்பவர்களை பொதுவாக, "வாலிகர்கள்" என்று குறிப்பிட்டனர்.



ம்லேச்சன் யார்?
வேத மார்க்க பரம்பரையில் இருந்து பல பரம்பரையாக விலகியவர்கள், சனாதன தர்மம் தெரியாத, அதில் உள்ள தர்மம்-அதர்மம் தெரியாத தனக்கு தோன்றிய வழியில், தனக்கு தோன்றிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, தானே ஒரு இல்லாத தெய்வத்தை உருவாக்கி குருட்டு வழிபாடு செய்பவர்களை "ம்லேச்சன்" என்று குறிப்பிட்டனர்.

இன்றைய நிலையில், ம்லேச்சன் என்பவன் அமெரிக்கா, பிரிட்டன், அரேபிய, ஜப்பான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருக்கும் நம் ஹிந்து கலாச்சாரத்தை அறியாதவர்கள் என்று சொல்லலாம்.

இவர்களுக்கு ஹிந்துக்கள் கலாச்சாரம் மிக்கவர்கள் என்ற ஞானம் உண்டு. அறிவாளிகள், விருந்தோம்பல், குடும்ப கலாச்சாரம் கொண்டவர்கள் ஹிந்துக்கள் என்ற  பொதுவான மரியாதை உண்டு.
இன்று,
இவர்களோடு "ஆப்கான், பாகிஸ்தான், பங்களாதேஷ்" போன்ற பாரத தேசமாக இருந்த பூமியும் ம்லேச்ச தேசமாகிவிட்டது.

இன்றைய நிலையில்,
வாலீகர்கள் என்றால், 947AD வரை, பாரத பூமியாக இருந்த ஆப்கான், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாட்டில், ஹிந்து குடும்பத்தில் பிறந்து, அதில் இருந்து விலகி, இன்று தன்னை வேறு மதத்தினராக நினைத்து வாழ்பவர்களுக்கு, இந்தியாவிலேயே பார்க்க ஹிந்து போன்ற நிறத்தை கொண்டு, நாத்தீகம் பேசிக்கொண்டும், வேறு மதத்தில் புகுந்து கொண்டும் இன்று ஹிந்துக்களையே எதிர்ப்பவர்கள், அனைவரும் வாலீகர்கள் என்று அறியலாம்.
இந்தியாவில் பிறந்து, வேற்று மதத்திற்கு மாறியவர்கள் என்று அனைவருமே வாலீகர்கள் என்று அறியலாம்.

ம்லேச்சனை விட, மிக ஆபத்தானவர்கள் வாலீகர்கள்.
மதம் மாறியதாலும், ஹிந்துக்கள் மீது இவர்களுக்கு ஊட்டப்படும் வெறுப்பும் மிக ஆபத்தானது.

மஹாபாரதத்தில் நாரத முனி, வியாச பகவானை பார்த்து,
"வேத சாஸ்திரம் சொன்னபடி வாழாத, அதற்கு நேர் மாறாக வாழும் வாலீகர்கள், உலகத்திற்கே களங்கம்/கறை போன்றவர்கள்.
இந்த கறை இல்லாத போது,
உலகம் தானே ப்ரகாசிக்கும்." என்று சொல்கிறார்.

ஒரு ஹிந்துவை பார்த்து, "நீ ஒரு வாலீகன்" என்று சொன்னால், அந்த காலத்தில் அதை அவமானமாக கருதினர்.

அதாவது, "ஹிந்துவாக பிறந்தும், ஹிந்துவுக்கு விரோதியாக நடப்பவன், ஹிந்து தர்மம் என்று மதிக்கும் விஷயங்களை எதிர்ப்பவன்" என்பது போன்ற அர்த்தம்.

கர்ணனுக்கும், சல்லியனுக்கும் இந்த விஷயத்தில் தான் வாக்குவாதம் நடந்தது.
சனாதன தர்மத்தில் இருந்த சல்லியனை "வாலீகர்களை ஆட்சி செய்பவன்" என்று கர்ணன் பேசினான்.

மஹா பாரத போரில், பீஷ்மர், துரோணர் வீழ்ந்த பின், அங்க அரசன் (west bengal) கர்ணன் தலைமை ஏற்றான்.

கர்ணனுக்கு, தேர் ஓட்ட மாத்ர அரசர் - சல்லியன் (Punjab in today's pakistan) நியமிக்கப்பட்டார்.
இது சல்லியனை அவமான படுத்துவதாக இருந்தது. இருந்தாலும் சம்மதித்தார்.

போர் புரியும் சமயத்தில், இருவருக்கும் பல வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் கொண்ட கர்ணன், ஓரு சமயம், த்ரிதராஷ்டிரன் சபையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு படுத்தினான்.
த்ரிதராஷ்டிரனை காண வந்திருந்த வேத ப்ராம்மணர்கள், யாகம் செய்ய இடம் கேட்க, மாத்ர தேச அரசனை உதவி செய்ய சொல்ல,
வேதம் கற்ற ப்ராம்மணர்கள்,
'எந்த ஒரு காலத்திலும் வாலிகர்களுடனும், அதே போன்ற செயல்களில் ஈடுபடும் மாத்ர தேசத்தவர்களுடனும் சகவாசம் வைத்துக் கொள்ள கூடாது' என்று கூறி உதவியை மறுத்து விட்டனர்.
இதை நினைவு கூறி, "நீ அந்த தேச அரசன் தானே" என்றான்.



வேத மார்க்க வழியில் நடப்பவனை, "நீ ஒரு வாலிகன்" என்று சொன்னால், அது ஒரு பெருத்த அவமானம்.
சல்லியன் பெரும் அவமானம் கொண்டார்.
இப்படிப்பட்ட வாக்குவாதங்களின் காரணமாக, இக்கட்டான சமயத்தில், தேர் குழியில் சிக்கி கொண்ட சமயத்தில், சல்லிய அரசர், தேரை விட்டு இறங்கி சென்று விட்டார்.
அங்க அரசன், கர்ணன் அர்ஜுனன் பொழிந்த அம்பு மழையில் மடிந்தான்.

இன்றைய West Bengal, பங்களாதேஷ் (Bangladesh) 3000BCல் மஹாபாரத சமயத்தில் எப்படி இருந்தது?
மேலும் தெரிந்து கொள்ள,
https://www.proudhindudharma.com/2017/12/west-bengal-bangladesh.html படிக்கவும்.



Saturday, 28 April 2018

தமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 80 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள்.



*'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வந்து பார்'*, என்று பெருமைப்பட சொல்லும் மதுரைக்காரன், தன் ஆயுளில் மறக்க கூடாத சில பெயர்கள் உண்டு.
1. *அலாவுதீன் கில்ஜி*
2. அவன் படைத்தளபதி *மாலிக் காபுர்* என்ற *மாணிக்* (இஸ்லாமியனான ஹிந்து)
3. கில்ஜிக்கு பிறகு வந்த *முகமது பின் துக்ளக்*
4. மிக முக்கியமாக, *முகமது கியாசுத்தின்*
5. இன்றைய தேதியில் மதுரையில் மீனாட்சி திருக்கல்யாண தேர் ஒடுவதற்கும், ஹிந்துக்கள் இருக்கவும் காரணமான, தமிழ் தேசத்தை கர்நாடகத்தில் இருந்து வந்த விஜயநகர அரசர் *கம்பண்ணா*.

சுமார் 700 வருடங்களுக்கு முன், அலாவுதீன் கில்ஜியின் படை தளபதி "மாலிக் காபுர்" செருப்பு கால்களுடன், தன் ஒரு லட்ச இஸ்லாமிய படையுடன் நம் மீனாட்சி கோவிலில் புகுந்து, போலியாக வைத்திருந்த சிவ லிங்கத்தை இடித்து தள்ளி விட்டான்.

இன்றும் அந்த லிங்கம் 1311ல் நடந்த கதை சொலகிறது. போய் பார்க்கலாம்.

1311ADல் மீனாட்சி கோவில் மூடப்பட்டு, இனி ஹிந்துக்கள் தலை தூக்க முடியுமா? என்ற நிலையில் இருந்தது நம் மதுரை.

1340ல், டில்லியை ஆண்டு கொண்டிருந்த, "முகமது பின் துக்ளக்" ஆணைப்படி, மதுரை வாஜிராக இருந்த "ஜலாலுத்தின் ஹசன்"னிடம் வேலை செய்த "முகம்மது கியாசுதின்" என்பவன், ஜலாலுத்தின், மற்றும் அவன் மகன், மருமகன் அனைவரையும் கொன்று, தான் மதுரை சுல்தான் என்று ஆகி விட்டான்.

1340ல் ஆட்சி செய்ய ஆரம்பித்த *முகம்மது கியாசுதின்* மதுரை முதல் திருச்சி வரை பரவி இருந்த பாண்டிய தேசத்தில் இருந்த ஹிந்துக்களை வெட்டி தள்ளினான்.
1311 முதல் 1371 வரை, தமிழர்கள் எண்ணிப்பார்க்க முடியாத அழிவை சந்தித்தனர். பாண்டிய அரசாட்சி, சோழ அரசாட்சி போன்றவை அஸ்தமித்த காலம். உண்மையான தமிழர்கள் இருந்த காலம்.

சுமார் 60 வருட இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் எத்தனை கொடுமைகள்? என்று நாம் சிந்திக்கும் போதுதான்,
இரான் முதல் தெலுங்கு கன்னட தேசம் வரை 1000 வருடங்கள் இஸ்லாமியர்கள் புகுந்து என்ன அட்டகாசம் செய்து இருப்பார்கள்? என்று புரிந்து கொள்ள முடியும்.

ஏன் தமிழகத்தில் உள்ள கோவில்கள் போல மற்ற மாநிலங்களில் இல்லை? என்ற காரணமும் புரியும்.


60 வருடத்திலேயே தமிழகத்தை இத்தனை சேதப்படுத்த முடியும் என்றால், 1000 வருட ஆக்கிரமிப்பில் கோவில்கள் நிறைந்த இந்த பாரத பூமியை தரை மட்டம் ஆக்கி, இஸ்லாமிய நாடாக ஆக்க பெரும் முயற்சி செய்தனர் என்ற காரணமும் புரியும்.

1000 வருட ஆக்கிரமிப்பில், இரான், ஆப்கான், பாகிஸ்தான்,  பங்களாதேஷ் போன்ற பாரத தேசத்தில் இருந்த இடங்களை இஸ்லாமிய நாடாக மாற்றிவிட்டனர் என்பது வேதனைக்கு உரியது.

70 வருடத்தில் சிக்கிய தமிழகத்தை மேலும் அழிவில் வீழ்ந்து விடாமல், கும்பகோணம் போன்ற தேசங்களுக்குள் கால் பாதிக்க விடாமல் தடுத்தது யார்? தமிழனை காப்பாற்றியது யார்? 

மதுரை சுல்தானாக இருந்த "முகம்மது கியாசுதின்" (1340-1343) என்ன செய்தான்?
முகம்மது கியாசுதின் மதுரையை ஆண்ட காலத்தில், "இபின் படூடா" (ibn Battuda) தங்கி இருந்த போது,
மதுரையில் ஹிந்துக்கள் என்ன நிலைக்கு ஆகினர்? என்று விளக்கி இருக்கிறான்.

1.
மரங்கள் வெட்டப்பட்டு, அந்த இடங்களில், கைது செய்யப்பட்ட ஹிந்துக்கள், வரிசையாக நான்கு gate வழியாக அனுப்பப்பட்டு வரிசையாக தலை சீவபட்டார்கள்.
இவர்களோடு கைது செய்யப்பட்ட இவர்களின் மனைவிகளும் கொலை செய்யப்பட்டு, இவர்களின் தலை முடியை கொண்டு பிணங்களை இணைத்து கீழே போட்டனர்.
பால் குடிக்கும் குழந்தைகளை வெட்டி தூக்கி எறிந்தனர்.
இது போன்று, மறுபடியும் வேறொரு காட்டில் மரங்களை வெட்டி, அந்த இடங்களில் இதே போன்று ஹிந்துக்கள் கொத்து கொத்தாக தலை சீவப்பட்டனர்.

இது போன்ற கீழ் தரமான செயலை பார்த்ததில் நான் அவமானப் படுகிறேன். அப்படி ஒரு தண்டனைக்கான குற்றத்தை இந்த ஹிந்துக்கள் செய்யவில்லை. இந்த காரணத்தால் தானோ, கடவுள் (அல்லா) இவனின் ஆயுளை முடித்து விட்டானோ?

மேலும் இன்னொரு இடத்தில், "இபின் படூடா" (ibn Battuda) சொல்கிறான்
2.
ஒரு நாள், நானும், முகமது கியாசுதினும் உணவு உண்ணும் சமயத்தில், ஒரு ஹிந்துவை, அவன் மனைவி மற்றும் 7 வயது மதிக்க தக்க ஒரு சிறுவனை கைதியாக இழுத்து வந்தனர் காவலாளிகள்.
மதுரை சுல்தான் "முகமது கியாசுதின்" தன் கைகளை அசைத்து நின்று கொண்டிருந்த அந்த ஹிந்துவின் தலையை வெட்ட சைகை செய்தான். மேலும் காவலாளிகளை பார்த்து, அரேபிய மொழியில், 'அவன் மனைவியும், மகனையும் சேர்த்து' என்று சொன்னான்.
உடனே அந்த ஹிந்துவின் தலை வெட்டப்பட்டது. இதை பார்க்க கூடாது என்று நான் கண்ணை மூடிக்கொண்டேன். சிறிது நேரம் கழித்து பார்த்த போது 3 தலைகளும் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தது.

மேலும் இன்னொரு இடத்தில், "இபின் படூடா" (ibn Battuda) சொல்கிறான்
3.
இன்னொரு சமயம், நான் மதுரை சுல்தான் "முகமது கியாசுதினுடன்" இருந்த போது, ஒரு ஹிந்து இழுத்து வரப்பட்டான். அவன் மொழியில் ஏதோ பேசினான். எனக்கு புரியவில்லை. உடனே சுல்தானின் காவலாளிகள் தங்கள் ஈட்டிகளை அந்த ஹிந்துவை நோக்கி கொலை செய்ய சென்றார்கள்.
நான் ஏதோ அசம்பாவிதம் நடக்க போவதை உணர்ந்து வெளியே சென்று விட எழுந்தேன்.
என்னிடம் மதுரை சுல்தான், "எங்கே போகிறீர்கள், இபின் படூடா?" என்றான்.
நான், தொழுகைக்கு நேரம் ஆகி விட்டது. நான் சென்று விட்டு வருகிறேன்" என்று சொல்லி நகர்ந்து விட்டேன்.
என் காரணத்தை புரிந்து கொண்டு சிரித்து கொண்டே, அந்த ஹிந்துவின் கை மற்றும் காலை வெட்ட சொன்னான் சுல்தான். நான் சென்று, பிறகு வந்த போது, அந்த ஹிந்துவின் உடல் ரத்தத்தில் மிதந்து கொண்டு இருந்தது.


மேலும் இன்னொரு இடத்தில், "இபின் படூடா" (ibn Battuda) சொல்கிறான்
4.
நான் மதுரையை அடைந்த போது, தூக்கி வீசப்பட்ட பிணங்களால் உருவான, எங்கும் நோய் பரவி இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஹிந்துக்கள் அதிக பட்சம் 2 அல்லது 3 நாட்களில் இறந்தனர்.

நான் மதுரையை விட்டு செல்லும் போது, பொதுவாக அனைத்து ஹிந்துக்களும் நோய்வாய்ப்பட்டு இருந்தனர் அல்லது இறந்திருந்தனர்.


இப்படி 60 ஆண்டுகள் மதுரை சுல்தான் ஆட்சியில் அனுமானிக்க முடியாத துன்பத்தை நம் பாட்டனார்கள் அனுபவித்தனர்.

தமிழ் தேசத்தை கர்நாடகத்தில் இருந்து வந்த விஜயநகர அரசர் புக்கராயர்  மகன்"*கம்பண்ணா*" காப்பாற்றினார்.

தமிழனை கர்நாடகத்தில் இருந்து வந்த விஜயநகர பேரரசன் காப்பாற்றினான்.

1371ல் கம்பண்ணா மதுரை சுல்தானை விரட்டி, விஜயநகர சாம்ராஜ்யத்தை மீண்டும் நிறுவி, மூடிய கோவிலை திறந்து ஹிந்துக்கள் வாழ வழி வகுத்தார்.
அதே வருடம் மூடப்பட்டு இருந்த ஸ்ரீ ரங்ககோவிலும் திறக்கப்பட்டு, மீண்டும் ஹிந்துக்கள் தலை நிமிர்ந்தனர்.

இனி இஸ்லாமியர்கள் நுழையா வண்ணம், 1378ல் மதுரையை விஜயநகர பேரரசு கைப்பற்றி, இரண்டாம் ஹரிஹர அரசரால், ஹிந்துக்களை வாழ வைத்தது.
தமிழகம் 1000 வருட ஆக்கிரமிப்பில், பெரும்பாலும் விஜயநகர ஆட்சியின் பாதுகாப்பில் தப்பித்தது.
இந்த 60 ஆண்டு காலத்தில் கத்தி முனையில், கற்பழிப்பில் மதம் மாறி இஸ்லாமியர்களாக போனவர்கள் இன்றும் இஸ்லாமியர்களாகவே உள்ளனர் என்பது வேதனைக்குரியது.

கம்பண்ணாவின் மனைவி சொல்கிறாள்.
கம்பண்ணாவின் வெற்றியை "மதுரை விஜயம்" என்ற தொகுப்பில், அவர் மனைவி "கங்காதேவி" சொல்கிறாள்,
1.
மதுரை தேசத்திற்கு வந்த சோதனையை நினைத்து மனம் தாங்க முடியாத வேதனை அடைகிறது. பார்க்கும் இடமெல்லாம் வளர்ந்து இருந்த தென்னை மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு, அந்த இடங்களில் இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு, ஹிந்துக்கள் தலைகள் சொருகப் பட்டு இருந்தன.
மேலும் சொல்கிறாள்
2.
மதுரை பெரு வீதிகளில் சுமங்கலியான பெண்களின் வளையல் சத்தமும், சிரிப்பும் நிறைந்த காலம் போய், இன்று கோவிலை காத்த வேத ப்ராம்மணர்களை தலையை பிடித்து இழுத்து சென்று இரும்பு சுவரில் மோதிய அலறல் சத்தமும், ரத்தமும் கிடக்கிறது.
மேலும் சொல்கிறாள்
3. தாமிரபரணி ஆற்றில் பெண்கள் சந்தனம் மற்றும் மஞ்சள் தேய்த்து குளித்து, சந்தன நறுமணத்துடன் மங்களமாக ஓடிய நதியில் இன்று மாட்டு இறைச்சி உண்ணும் இவர்களால், வெட்டப்பட்ட மாட்டின் ரத்தம், தாமிரபரணி ஆற்றை சிவப்பாக ஆக்கி இருந்தது.
மேலும் சொல்கிறாள்,
4. வீரமும், தைரியமும் உள்ள அரசரே !!
இனியும் தாமதம் செய்யாமல், மூன்று உலகத்திலும் சேர்த்து ஏற்படும் துன்பத்தை ஒரு சேர அனுபவிக்கும் நம் தேசத்து மக்களை காக்க, அந்த துஷ்டர்களை வேரோடு அழியுங்கள். வெற்றியின் அடையாளமாக 100 தூண்களை ராம சேதுவில் கட்டுங்கள்.

இப்படி வெற்றி முழக்கம் இட்டு, தெலுங்கு தேசத்தில் பிறந்து, கர்நாடக தேசத்தில் ஹம்பியை தலைநகராக கொண்ட விஜயநகர அரசன், ஹிந்துக்கள் தமிழ் நாட்டில் வாழ வைத்தான்.

மதுரைக்காரனும், பாண்டிய தேசத்தில் இருந்த அனைத்து மக்களும், ஹிந்துக்களாக இன்றும் இருக்க, ஒரு வீர ஹிந்து கர்நாடகத்தில் இருந்து தான் கிடைத்தான்.
நன்றி மறவாமல் இருப்போம்.









Thursday, 26 April 2018

திருமண சடங்குகளில் ஏன் மாலை மாற்றிக்கொள்கிறார்கள், கை பிடித்து கொள்கிறார்கள், காலை தொட்டுக்கொள்கிறார்கள், எச்சில் தட்டில் சாப்பிடுகிறார்கள்? பழக்கத்தில் நமக்கு இருந்த சிந்தனையை எண்ணி பார்க்க வேண்டும்

ஒருவர் எச்சிலை ஒருவர் சாப்பிட்டால் அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும்.

பகவத் கீதையில், ஸ்ரீ கிருஷ்ணர் உணவில் கூட
சாத்வீக குணத்தை கொடுக்கும் உணவு,
ராஜஸ குணத்தை கொடுக்கும் உணவு,
தாமஸ குணத்தை கொடுக்கும் உணவு உண்டு என்கிறார்.

அது போல,
ஒருவர் செருப்பை ஒருவர் போட்டாலோ,
துணி மணியை உபயோகித்தாலோ ,
ஒருவர் படுக்கையில் அடுத்தவர் படுத்தாலோ,
ஒருவர் மாலையை இன்னொருவர் சூட்டிக்கொண்டாலோ,
ஒருவர் பாத்திரத்தை இன்னொருவர் உபயோகித்தாலோ,
ஒருவர் உள்ளங்கையை  இன்னொருவர் உள்ளங்கையால் தொட்டாலோ,
அவர்கள் குணம் வாசனைகளாக நமக்கு வரும்.

திருமணத்தின் பிறகு இருவருடைய மனமும் ஒத்து போக வேண்டும்,
சண்டை போட கூடாது என்றால், இருவேறு குடும்பங்களில் இருந்து வந்த இவர்களுடைய குணங்களும், வாசனைகளும் இருவருக்கும் ஒன்றாக வேண்டும்.

அதற்கு தான் திருமண சடங்குகளில்,
ஒருவர் மாலையை இன்னொருவருக்கு போடுதல், 
ஒருவர் எச்சில் செய்த தட்டில் இன்னொருவர் சாப்பிடுதல்,
இருவர் உள்ளங்கையயும் சேர்த்து பணிகிரஹணம் என்று பிடித்தல்,
ஒருவர் காலை இன்னொருவர் தொடுதல்,
ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும் துணியை இன்னொருவர் துணியுடன் முடி போடுதல்,
என்று இருவருடைய வாசனைகள், குணங்களை பரிமாறி கொள்ளும் சடங்குகளாக வைத்து இருக்கின்றனர்.

அதனால் மனமும் குணமும் வாசனைகளும் ஒத்துப்போனால், சண்டைகள் குறைந்து ஒற்றுமையாக வாழ்வார்கள் என்பதே காரணம்.




இதனால் தான் சாஸ்திரங்கள்,
மஹான்கள் /பக்தர்கள் சாப்பிட்ட எச்சிலை சாப்பிடு,
அவர்களுக்கு கால் பிடித்து விடு,
அவர்கள் உடுத்திய வஸ்திரத்தை நீ வாங்கிக்கொள்,
அவர்களுக்கு போட்ட பூமாலையை நீ போட்டு கொள்,
அவர்கள் கால் பட்ட மண்ணை தலையில் போட்டு கொள்
என்றெல்லாம் சொல்வதற்கு காரணமும் இதுவே .

அப்படியாவது அவர்களிடம் உள்ள தெய்வீககுணங்களில், வாசனைகளில் கொஞ்சமாவது அழுக்கு படிந்த நமக்கு தப்பி தவறி வந்து விடாதா?? என்ற காரணமே.




இன்றைய அறிவாளிகள் கூட, "The people to whom you Associate, influence your Behaviour" என்கிறார்கள்.
இது போன்ற விஷயங்களை சர்வ சாதாரணமாக பழக்கத்தில் கொண்டு இருந்தோம், இருக்கிறோம், ஹிந்துக்களாகிய நாம்.

கோயில்களில் இறைவனுக்கு சாத்திய புஷ்பங்கள், வஸ்திரங்கள் பிரசாதங்கள் நமக்கு கொடுக்கும் காரணமும் இதுவே.
அந்த தெய்வத்தின் குணங்கள் நமக்கும் சேரட்டும் என்ற காரணமே.

எனவே ஆபீஸிலோ, வெளி இடங்களிலோ ஒருவருடன் ஒருவர் பழகும் போது, இவைகளை நாம் செய்யாதிருத்தல் நமக்கு நல்லது.

FRIENDSHIP வேறு, சுத்தமாக இருத்தல் வேறு.
இரண்டையும் போட்டு குழப்பி கொள்ளாமல் பழகவேண்டும் .

உபநிஷதுகளில் மிக பெரிய தவங்கள் செய்த ஒரு மகரிஷி, இன்னொருவர் செருப்பை போட்டு கொண்டதினால் இன்னொரு பிறவி எடுத்தார்.

பரதன் என்ற ராஜரிஷி, ஒரு மானிடம் பழகி, அந்த மானை நினைத்தே உயிரை விட்டு, மானாக அடுத்த ஜென்மம் எடுத்து விட்டார்.

சாதாரண குலத்தில் பிறந்து, சிறுவனாக இருக்கும் பொழுது, அவர்கள் ஊருக்கு சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்க வந்த ரிஷிகளுக்கு உதவியாக இருந்து, அவர்கள் சாப்பிட்ட பின், விளையாட்டாக ரிஷிகள் சாப்பிட்ட எச்சில் பிரசாதத்தை அந்த சிறுவன் உட்கொண்டு வந்ததற்கே, ரிஷிகள் இவனது அன்பை பார்த்து, பகவான் அணுகிரஹம் கிடைக்க ஆசீர்வதிக்க, 
அடுத்த பிறவியாக "நாரத மகரிஷி" ஆகி, ப்ரம்மாவுக்கே மானஸ புத்ரர்
ஆகிவிட்டார்.

இது போல, எண்ணற்ற உதாரணங்கள் நமது சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ளது .

தண்ணீருக்கு இந்த வாசனைகளை போக்கும் சக்தி உண்டு.

அதனால் தான் ரிஷிகள், ஒரு கமண்டலுவில் அருகில் தண்ணீர் வைத்து கொள்வார்கள்.

ஒரு திருடனின் வாசனையை மோப்பம் பிடிக்கும் நாய்,
தொடர்ந்து சென்று அவன் போகும் பாதையை கண்டுபிடிக்கிறது.
ஆனால் அவன் ஒரு நீர் நிலையை தாண்டிவிட்டால், அந்த நாயினால் அவனுடைய வாசனைகளை கண்டுபிடிக்க முடிவதில்லை.

தண்ணீருக்கு அத்தனை சக்தி உண்டு.

அதனால் தான், பெரியோர்கள், மஹான்கள் அடிக்கடி குளித்து கொண்டே இருக்கின்றனர்.

எனவே சுத்தமாக தொட்டு தொட்டு கலந்து பழகாமல் இருக்க முடியவில்லை என்றாலும், அதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பது தவறு ஏதும் இல்லை.

நமக்கு மற்றவர்களிடம் இருந்து வரும் கெட்ட வாசனைகளில், குணங்களை கொஞ்சமாவது குறைக்க செய்யலாம்.

நல்ல ஆத்மாக்களின் ஸ்பரிசம் நமக்கு பாக்கியத்தை தரும்.
பெருமாளின் காலில் பட்டு, கொடுத்த பூவும், நமக்கு பாக்கியத்தை தரும்.
கோவில் செல்வதும் பாக்கியத்தை தரும்.

கம்பீர புருஷனான ஸ்ரீ ராமர், ஹனுமனை குரங்கு ஜாதி என்று கூட பார்க்காமல், ஆத்மாவின் தூய்மையை பார்த்த ஸ்ரீ ராமர், 
தனக்காக கடல் கடந்து போய் சீதையை கண்டுபிடித்து சொல்ல, 
தன் திவ்ய ஸ்பரிசத்தை ஹனுமான் அனுபவிக்க, அவரை தழுவிக்கொண்டார்.

பரவாசுதேவன் தொட்டால் என்ன பரவசம் ஏற்படும்? என்பது ஹனுமனின் கண்களை கேட்டால் தான் தெரியும்.

நன்றாக நினைவில் கொள்ளுங்கள், ஒருவரிடம் நாம் மிகவும் நெருக்கமானவராக காட்டி கொள்வதற்காக,
வித்யாசம் பார்க்கவில்லை என்பதை காட்டிக்கொள்வதற்காக,
நம் சுத்தத்தை விட்டு கொடுத்து,
எச்சிலை சாப்பிட்டு,
தொட்டு தொட்டு பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

சுத்தம் வேறு, ஒருவரிடம் அன்பாக பழகுவது என்பது வேறு.

பாரத மக்கள், பொதுவாக யாரையையும் தொட்டு பழகுவதில்லை.
நமஸ்கரிப்பதும், கை கூப்பி வணங்குவதும் இதன் காரணமாக தான்.

சகோதரன், சகோதரி ஒரு வயதுக்கு மேல் தொட்டு பேசுவதில்லை.
கணவன் மனைவி உறவில் கூட, ஒரு கட்டுப்பாடு இருந்தது.

ஞானத்தை, மோக்ஷத்தை நோக்கியே நம் சனாதன தர்மம் நம்மை வழி நடத்துகிறது.

Association with people decides your behaviour என்று சொல்வது பாரத மக்களால் கவனமாக கடைப்பிடிக்கப்பட்ட பழக்கம்.

"துஷ்டனை கண்டால் தூர விலகு" என்று சொல்வதெல்லாம் பயத்தால் அல்ல, அவன் சம்பந்தம் கூட உன் மனதை கெடுத்து விடும் என்பதால் தான்.

'இப்படி மற்றவர்களிடம் உள்ள தீய குணங்கள் கூட, பழகுவதினால் கூட தனக்கு வந்து விட கூடாது' என்று நல்ல குணத்தை கெடுத்து கொள்ள விரும்பாத பாரத மக்கள், நேர்மையாகவே வாழ்ந்தனர்.
அடுத்தவன் சொத்தை எடுத்தல், திருடுதல் போன்ற பாவங்கள் 99 சதவீதம் மக்கள் செய்ய அஞ்சினர்.

கோவில்கள் இல்லாத வீடும் கிடையாது, தெருவும் கிடையாது, ஊரும் கிடையாது என்று எங்கு பார்த்தாலும், பாரத மக்கள், தன்னிடம் நல்ல குணங்கள் சேர, தெய்வங்களையே அணுகினர்.

இப்படி பாரத மக்கள் அனைவருமே நல்லவர்களோடு நட்பு கொள்ளவே விரும்பியதால், அனைவரும் பண்புள்ளவர்களாக இருந்தனர். 



உயர்ந்த எண்ணங்களே அதிகம் இருந்ததால், மகான்கள் அவதரித்தனர். 
பாரத தேசத்தில் மூலைக்கு மூலை ஞானிகள், சித்தர்கள், அவதரித்தனர்.

பாரத பூமியே, உலகம் என்ற ஊருக்கு இன்று வரை கோவிலாக இருக்கிறது. 

1000 வருட இஸ்லாமிய படையெடுப்பு, 200 வருட கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு போன்றவை, இந்துக்களிடம் இருந்த ஆன்மீக தேடலை மறைத்து, பணத்திற்காக எங்கும் செல்ல தயார், எவனுக்கும் வேலை பார்க்க தயார் என்ற நிலைக்கு இன்று தள்ளி விட்டது.

பாரத மக்கள், பழக்கத்தில் நமக்கு இருந்த சிந்தனையை எண்ணி பார்க்க வேண்டும்.

நல்லோர்களை நாட வேண்டும். 
பழகுவதில் ஒரு கட்டுப்பாடு கொள்ள வேண்டும்.

பழக்கத்தின் காரணமாக, நம்மிடம்  மற்றவர் துர்குணங்கள் சேர்ந்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

வாழ்க ஹிந்து தர்மம்.
வாழ்க ஹிந்த்துக்கள்.



Tuesday, 24 April 2018

வாசுதேவன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? உள்ளே இருக்கும் பரமாத்மாவை பார், உடம்பை பார்த்து பழகாதே!! உலகத்தால் ப்ரம்மத்தை மறைக்காதே ! ப்ரம்மத்தை கொண்டு, உலகத்தை மறைத்து விடு !

வாசுதேவன் என்ற சொல்லுக்கு அர்த்தம்.

"வச" என்ற சொல்லுக்கு "மறைத்தல்" என்று அர்த்தம்.

'ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்று "உலகம் அனைத்திலும் விஷ்ணுவே எங்கும் புகுந்து அந்தர்யாமியாக (ஆத்மாவாக) உள்ளார்" என்று வேதம் சொல்கிறது.

இதையே, அர்ஜுனன், ஸ்ரீ கிருஷ்ணர் காண்பித்த விஸ்வரூப தரிசனத்தில் கண்டான். அவரே அனைத்துமாக இருப்பதை கண்டான்.

வேதம்
"உலகத்தால் ப்ரம்மத்தை மறைக்காதே.
ப்ரம்மத்தை கொண்டு, உலகத்தை மறைத்து விடு"
என்று ஈஷோ உபநிஷத் ஆரம்பிக்கிறது.

புரியவில்லையே !!
உலகத்தால் ப்ரம்மத்தை மறைக்காதே என்றால் என்ன அர்த்தம்?

ஆத்மா இல்லாத ஒரு உடம்பை, நாம் எத்தனை முறை கூப்பிட்டாலும் நடந்து வராது.
ஆத்மா இல்லாத ஒரு உடம்புக்கு "பிரேதம்" என்று பெயர்.

உடம்பு இல்லாத ஆத்மாவை கூப்பிட்டால், நம் கண்ணுக்கு தெரியாது.

நாம் ஒருவரை கூப்பிட்டால், உடம்போடு கூடவே அதன் ஜீவ ஆத்மாவும் கூடவே வருகிறது.

வருபவரை வெறும் உடம்பு சம்பந்தமாக நீ பார்த்தாய் என்றால், அவரை பார்த்ததினால், பேராசை, பொறாமை, கோபம் போன்ற குணங்கள் உனக்குள் எழும்.






உடம்பை மட்டும் கவனிக்கும் போது, "இவன் தனக்கு வேண்டியப்பட்டவன்", "இவன் எதிரி", "இவன் உயர்ந்தவன்", "இவன் தாழ்ந்தவன்" போன்ற எண்ணங்கள் நமக்குள் வந்து விடும்.

நமக்கு பிடிக்காதவர்கள் வந்தால், "இவன் ஏன் வந்தான்?" என்று கோபம் வரும்.

உடம்பை பார்க்காமல், ஆத்மாவை பார்த்தாய் என்றால், ஒருவரை பார்த்து, பொறாமையோ, கோபமோ உண்டாகாது.

மகாத்மாக்கள், ஞானிகள், ஆத்மாவை மட்டும் தான் பார்க்கின்றனர். இதனாலேயே அவர்களுக்கு யார் மீதும் கோபமோ, பொறாமையோ வருவதில்லை.

ஞானிகள், உடம்பை கவனிக்காமல், ஆத்மாவை மட்டும் கவனிப்பதால், அனைவரும் அந்த பகவானின் அம்சமே என்று பார்க்கின்றனர்.
இதனால் தன்னிடம் துர்குணங்கள் சேராமல் பார்த்துக்கொள்கின்றனர்.

இந்த ஞானம் இல்லாத சாதாரண ஜனங்கள், யாரை பார்த்தாலும் சரீரத்தையே கவனிக்கின்றனர். ஆத்மாவை கவனிப்பதில்லை.

மற்றவர்கள் மீது உள்ள ஆசை, பொறாமை, கோபத்தால், தன்னிடம் துர்குணங்களை வளர்த்து கொள்கின்றனர்.

இந்த ஞானத்தை நாம் அனைவரும் பெற வேண்டும்.

துர்குணங்கள் நமக்கு எழாமல் இருக்க வேண்டும் என்ற ஆசையில், வேதம் நம்மை பார்த்து,
"உள்ளே இருக்கும் பரமாத்மாவை பார், உடம்பை பார்த்து பழகாதே"
என்று சொல்கிறது.

உலகம் முழுவதும் அந்த பரமாத்மா ப்ரவேசித்து உள்ளார். 
ஒவ்வொரு உடம்பிலும் ஜீவாத்மாவாக அவரே உள்ளார்.

'உள்ளே இருக்கும் ஆத்மாவை கவனிக்காமல், உடம்பையே கவனிப்பவர்கள்' அஞானிகள் (உண்மையை அறியாதவர்கள்).




அஞானிகளுக்கு, உடம்புக்குள் ஆத்மாவாக இருக்கும் விஷ்ணு தெரிவதில்லை.
உடம்பையே பார்க்கும் அஞானிகளுக்கு, விஷ்ணு என்ற தேவன் மறைக்கப்படுகிறார்.
இதனாலேயே, விஷ்ணுவுக்கு "வாசுதேவன்" (மறைந்து இருக்கும் தேவன்) என்று பெயர்.

ஞானிகள், உடம்பை பார்க்காமல், உள்ளே மறைந்து இருக்கும் ஆத்மாவை கவனிப்பதால், வாசுதேவனாக இல்லாமல், ப்ரத்யக்ஷமாக தெரிகிறார் பரப்ரம்மா.

ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனனை பார்த்து,
"அர்ஜுனா !! கோடி ஜென்ம புண்யத்தால், ஒருவனுக்கு இந்த ஞானம் உண்டாகிறது.
அத்தகைய ஞானிக்கு, நாயை பார்த்தாலும், கழுதையை பார்த்தாலும், தன்னை கொல்ல வரும் சத்ருவை பார்த்தாலும், அவர்களுக்கு உள்ளே உள்ள பரப்ரம்ம ஸ்வரூபமே தெரிகிறது. அத்தகைய ஞானி எனக்கு மிகவும் பிரியப்பட்டவன்" என்று சொல்கிறார்.
பிரகலாதன் போன்ற தன் பக்தனை மனதில் கொண்டு இதை சொன்னார், ஸ்ரீ கிருஷ்ணர்.