Followers

Search Here...

Friday, 28 July 2023

பீஷ்மர் - 8 வஸுக்களின் அம்சமாகவே பிறந்தார். பீஷ்மரின் பிறப்பு ரகசியம் தெரிந்து கொள்வோமே! - வ்யாஸ மஹாபாரதம்

வியாஸரின் சிஷ்யர் "வைஸம்பாயனர்", ஜனமேஜயனுக்கு அவன் குடும்ப கதையை சொல்கிறார்.

சத்தியம் தவறாத, தோல்வியே அடையாத "மஹாபிஷக்" என்று பெயர் பெற்ற இக்ஷ்வாகு அரசன் ஒருவர் இருந்தார்.

इक्ष्वाकुवंशप्रभो राजासीत्पृथिवीपतिः।

महाभिषगिति ख्यातः सत्यवाक्सत्यविक्रमः।।

- வியாசர் மஹாபாரதம்

அவர் 1000 அஸ்வமேத யாகம் செய்து, 100 ராஜசூய யாகம் செய்து தேவேந்திரனை திருப்தி செய்து இருந்தார்.

அந்த அரசன் பூலோகத்தில் தேகத்தை விட்டு பிரிந்த பிறகு,  மேலுலகில் இருந்தார்.

सोऽश्वमेधसहस्रेण राजसूयशतेन च।

तोषयामास देवेशं स्वर्गं लेभे ततः प्रभुः।।

- வியாசர் மஹாபாரதம்


ஒரு சமயம் தேவர்கள் ப்ரம்ம லோகம் சென்று ப்ரம்ம தேவனை தரிசித்தனர்.

அங்கே ராஜ ரிஷிகளும் இருந்தனர். இந்த மஹாபிஷக் என்ற அரசரும் இருந்தார்.

ततः कदाचिद्ब्रह्माणमुपासांचक्रिरे सुराः।

तत्र राजर्षयो ह्यासन्स च राजा महाभिषक्।।

- வியாசர் மஹாபாரதம்


அப்பொழுது, நதிகளில் சிறந்தவளான கங்கை ப்ரம்மதேவனை தரிசிக்க வந்தாள்.

அப்போது, சந்திரன் போன்ற நிறத்தில் அவள் அணிந்திருந்த பட்டாடை சிறிது காற்றில் சிறிது விலகியது.

अथ गङ्गा सरिच्छ्रेष्ठा समुपायात्पितामहम्।

तस्या वासः समुद्धूतं मारुतेन शशिप्रभम्।।

- வியாசர் மஹாபாரதம்


உடனே அங்கிருந்த தேவர்கள் அனைவரும் தலை குனிந்து கொண்டனர்.

மஹாபிஷக் என்ற இந்த ராஜரிஷி மட்டும் கங்கையை பார்த்து கொண்டே இருந்தார்.

ततोऽभवन्सुरगणाः सहसाऽवाङ्मुखास्तदा।

महाभिषक्तु राजर्षिरशङ्को दृष्टवान्नदीम्।।

- வியாசர் மஹாபாரதம்

இதை கண்ட ப்ரம்ம தேவர், மஹாபிஷக்கை கடிந்து கொண்டார்.

பிரம்மதேவர், "நீ மனிதனாக பிறந்து, பிறகு மீண்டும் நல்ல லோகங்களை அடைவாய்.

மூடனே!  எந்த கங்கையை கண்டு உன் மனம் மயங்கியதோ, அதே கங்கையானவள் மனித லோகத்தில் உனக்கு பிடிக்காததை செய்ய போகிறாள்.

அவள் செயலை கண்டு உனக்கு எப்போது உனக்கு கோபம் வருமோ, அப்பொழுது நீ சாபத்திலிருந்து விடுபடுவாய்." என்று கடிந்து சொன்னார்.

सोपध्यातो भगवता ब्रह्मणा तु महाभिषक्।

उक्तश्च जातो मर्त्येषु पुनर्लोकानवाप्स्यसि।।

यया हृतमनाश्चासि गङ्गया त्वं हि दुर्मते।

सा ते वै मानुषे लोके विप्रियाण्याचरिष्यति।

यदा ते भविता मन्युस्तदा शापाद्विमोक्ष्यते।।

- வியாசர் மஹாபாரதம்


இப்படி சபித்ததும், மனுஷ்ய லோகத்தில் உள்ள ராஜ ரிஷிகளையும், அரசர்களையும் பார்த்த மஹாபிஷக், அங்கு ஆட்சி செய்து கொண்டிருக்கும் "பிரதீபன்" என்ற அரசனை தனக்கு தகப்பனாக ஏற்றார்.

स चिन्तयित्वा नृपतिर्नृपानन्यांस्तपोधनान्।।

प्रतीपं रोचयामास पितरं भूरितेजसम्।

- வியாசர் மஹாபாரதம்


மனதை கட்டுப்படுத்த முடியாமல் தன்னையே பார்த்து கொண்டிருந்த மஹாபிஷக்கை நினைத்து கொண்டே கங்கை திரும்பி சென்றாள்.

सा महाभिषजं दृष्ट्वा नदी दैर्याच्च्युतं नृपम्।।  

- வியாசர் மஹாபாரதம்

ஜனமேஜயா! 

அவள் செல்லும் போது, சொர்க்க லோகத்தில் தேவர்களில் ஒருவர்களான 8 வஸுக்கள் உடல் பொலிவு குன்றி, அறிவு கலங்கி நிற்பதை கண்டாள். உடனே அவர்களை பார்த்து, "ஏன் இப்படி நிறம் மாறி காணப்படுகிறீர்கள்? நீங்கள் நலம் தானே?" என்று விஜாரித்தாள்.

तमेव मनसा ध्यायन्त्युपावृत्ता सरिद्वरा।

सा तु विध्वस्तवपुषः कश्मलाभिहतान्नृप।।

ददर्श पथि गच्छन्ती वसून्देवान्दिवौकसः।

तथारूपांश्च तान्दृष्ट्वा प्रपच्छ सरितां वरा।।

किमिदं नष्टरूपाः स्थ कच्चित्क्षेमं दिवौकसाम्।

- வியாசர் மஹாபாரதம்


தேவர்களாகிய வசுக்கள், கங்கையை பார்த்து, "மஹா நதியே! நாங்கள் விளையாட்டாக வஸிஷ்டருக்கு செய்த சிறு தவறினால் இப்படி ஆகி இருக்கிறோம்.

முன்பு, நான் அறியாமல் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்த வஸிஷ்டருக்கு இடைஞ்சல் செய்தோம்.

உடனே அவர் கோபத்தினால், "நீங்கள் மானிட உலகத்தில் கர்ப்பவாசம் செய்வீர்கள்" என்று சபித்து விட்டார்.

வேத வாக்குள்ள அவர் என்ன சொன்னாலும் பலிக்கும். அதை மாற்றவும் இயலாது.

கங்கா தேவியான நீயே பூலோகத்தில் எங்களை புத்திரர்களாக பெற வேண்டும். மனித பெண் கர்ப்பத்தில் நாங்கள் வசிக்க மாட்டோம்." என்றனர். இப்படி 8 வஸுக்களும் கேட்டு கொண்டதும், "அப்படியே ஆகட்டும்" என்றாள் கங்காதேவி.

तामूचुर्वसवो देवाः शप्ताः स्मो वै महानदि।।

अल्पेऽपराधे संरम्भाद्वसिष्ठेन महात्मना।

विमूढा हि वयं सर्वे प्रच्छन्नमृषिसत्तमम्।।

सन्ध्यां वसिष्ठमासीनं तमत्यभिसृताः पुरा।

तेन कोपाद्वयं शप्ता योनौ संभवतेति ह।।

न तच्छक्यं निवर्तयितुं यदुक्तं ब्रह्मवादिना।

त्वमस्मान्मानुषी भूत्वा सूष्व पुत्रान्वसून्भुवि।।

न मानुषीणां जठरं प्रविशेम वयं शुभे।

इत्युक्ता तैश्च वसुभिस्तथेत्युक्त्वाऽब्रवीदिदम्।।

- வியாசர் மஹாபாரதம்


"மனிதர்களில் எந்த புருஷன் உங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.

मर्त्येषु पुरुषश्रेष्ठः को वः कर्ता भविष्यति।

- வியாசர் மஹாபாரதம்


அதற்கு வஸுக்கள், "ப்ரதீபனுடைய பிள்ளையாக சாந்தனு என்னும் அரசன் பிறந்து பெரும் புகழ் பெறுவான். மனித லோகத்தில் அவன் மூலம் நாங்கள் வர நினைக்கிறோம்" என்றனர்.

प्रतीपस्य सुतो राजा शान्तनुर्लोकविश्रुतः।

भविता मानुषे लोके स नः कर्ता भविष्यति।।

- வியாசர் மஹாபாரதம்

உடனே கங்கை, "தேவர்களே! நீங்கள் என்னிடம் என்ன சொன்னேர்களோ, அதற்கு நான் சம்மதிக்கிறேன். அந்த அரசனுக்கும், உங்களுக்கும் விருப்பமான காரியத்தை நான் செய்வேன்" என்று சொன்னாள்.

ममाप्येवं मतं देवा यथा मां वदथानघाः।

प्रियं तस्य करिष्यामि युष्माकं चेतदीप्सितम्।।

- வியாசர் மஹாபாரதம்


உடனே வஸுக்கள், "மூன்று லோகங்களும் செல்பவளே! நீண்ட காலம் இந்த சாபத்தை நாங்கள் அனுபவிக்க விரும்பவில்லை. ஆதலால், உனக்கு பிறந்த பிள்ளைகளை பிறந்தவுடனே ஜலத்தில் போட்டு விட வேண்டும். புத்தியில்லாத நாங்கள் வஸிஷ்டர் சந்தியா வந்தனம் செய்து கொண்டிருந்த போது, அவருடைய பசுவை பிடிக்க விரும்பி முயற்சி செய்ய, அந்த ப்ரம்மரிஷியால் சபிக்கப்பட்டு இருக்கிறோம். அப்படி சபிக்கப்பட்ட எங்களை நீ உடனே விடுவித்து விட வேண்டும்" என்று கேட்டு கொண்டனர்.

जातान्कुमारान्स्वानप्सु प्रक्षेप्तुं वै त्वमर्हसि।

यथा नचिरकालं नो निष्कृतिः स्यात्त्रिलोकगे।।

जिघृक्षवो वयं सर्वे सुरभिं मन्दबुद्धयः।

शप्ता ब्रह्मर्षिणा तेन तांस्त्वं मोचय चाशु नः।।

- வியாசர் மஹாபாரதம்


இதை கேட்ட கங்காதேவி, "அப்படியே செய்கிறேன். ஆனாலும், (சாந்தனு) அரசனுக்கு பிள்ளையில்லாமல் செய்ய கூடாது. அவருக்கு ஒரு பிள்ளையாவது நிறுத்த வேண்டும். என்னிடம் புத்திரனை எதிர்பார்த்து சேர்ந்த அந்த அரசன் வீண் போக கூடாது" என்றாள்.

एवमेतत्करिष्यामि पुत्रस्तस्य विधीयताम्।

नास्य मोघः सङ्गमः स्यात्पुत्रहेतोर्मया सह।।

- வியாசர் மஹாபாரதம்


அதற்கு அந்த வஸுக்கள், "நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் சக்தியில் 4ல் ஒரு பாகத்தை கொடுக்கிறோம். அந்த சக்தியுடன் உங்களுக்கும் அந்த அரசனுக்கும் பிரியமான புத்திரன் ஒருவன் நிலைப்பான். ஆனால், அவன் மனித லோகத்தில் சந்ததியை உருவாக்க மாட்டான். அதனால், உன்னுடைய வீரமிகு புத்திரனுக்கு புத்திரன் உண்டாக மாட்டான்" என்று சொன்னார்கள். இவ்வாறு கங்கா தேவியுடன் உடன்படிக்கை செய்து கொண்டு, வஸுக்கள் சென்றனர்.

तुरीयार्धं प्रदास्यामो वीर्यस्यैकैकशो वयम्।

तेन वीर्येण पुत्रस्ते भविता तस्य चेप्सितः।।

न संपत्स्यति मर्त्येषु पुनस्तस्य तु सन्ततिः।

तस्मादपुत्रः पुत्रस्ते भविष्यति स वीर्यवान्।।

- வியாசர் மஹாபாரதம்

Sunday, 16 July 2023

சரபம் என்ற விலங்கு எப்படி இருந்தது? சரபங்களை யார் படைத்தார்? வ்யாஸ மஹாபாரதம் சரபத்தை பற்றி சொல்கிறது

சரபம் என்ற விலங்கு எப்படி இருந்தது? சரபங்களை யார் படைத்தார்?

पुलहस्य सुता राजञ्शरभाश्च प्रकीर्तिताः।

सिंहाः किपुरुषा व्याघ्रा ऋक्षा ईहा मृगास्तथा।।

- ஆதி பர்வம் (மஹாபாரதம் வியாசர்)

ப்ரம்மாவின் 6 மானஸ புத்ரர்களில் ஒருவர் புலஹர். 

இந்த மகரிஷி, தன் தபோ பலத்தால், 

சரபங்கள், சிங்கங்கள், (குதிரை உடம்பும், மனித முகமும் கொண்ட) கிம்புருஷர்கள், புலிகள், கரடிகள், ஓநாய்கள் போன்றவற்றை ஸ்ருஷ்டி செய்தார்.


இந்த சரபம் என்ற விலங்கு எப்படி இருந்தது? என்பதை, தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களில் காண முடிகிறது.


இந்த சரபம் என்ற விலங்கு, இறக்கைகளுடன், எட்டு கால்களுடன், சிங்கம் மற்றும் யானையையும் கொல்லக்கூடிய வலுவுள்ள மிருகமாக சித்தரிக்கப்படுகிறது.


Saturday, 15 July 2023

ஸ்வாயம்பு மனுவுக்கும் வைவஸ்வத மனுவுக்கும் உள்ள தொடர்பு... அறிவோம் மனு ஸ்மிருதி...

ஸ்வாயம்பு மனு, பிரம்மாவின் படைப்பையும், உலக ஶ்ருஸ்டியை சொன்னார்.. 

மேலும் விஷயங்களை, பிருகு முனிவர் தன்னிடம் கற்று தெரிந்து இருப்பதால, மேலும் பல தர்மங்களை பிருகு முனிவர் சொல்வார் என்று நியமித்தார்.


பிருகு முனிவர், மிகவும் உற்சாகத்தோடு, ரிஷிகளுக்கு சொல்ல ஆரம்பித்தார்.


स्वायम्भुवस्यास्य मनोः षड्-वंश्या मनवोऽपरे ।

सृष्टवन्तः प्रजाः स्वाः स्वा महात्मानो महौजसः ॥

- மனு ஸ்மிருதி

ஸ்வாயம்பு மனு, ஸ்ருஷ்டி தொழிலை மேலும் செய்ய, தன் வம்சத்தில் 6 பேரை ஸ்ருஷ்டி செய்தார்.


स्वारोचिष: च: उत्तम: च तामसो रैवत: तथा ।

चाक्षुषश्च महातेजा विवस्वत् सुत एव च ॥ 

- மனு ஸ்மிருதி

ஸ்வாரோசிஷன், உத்தமன், தாமஸன், ரைவதன், சாக்ஷுஷன், மஹாதேஜஸ் உடைய வைவஸ்வதனின் அம்சமாக வைவஸ்வதன் என்ற 6 பேரை படைத்தார்.

Thursday, 15 June 2023

இசைஞானி என்றும், ஆத்மஞானி என்றும் சிலரை சொல்கிறோம். ஞானம் என்றால் என்ன? ஞானி என்றால் என்ன?

இசைஞானி, ஆத்மஞானி.. ஞானம் என்றால் என்ன?

பல புத்தகங்களை ஒருவன் படிக்கும் போது, அதில் சொல்லப்பட்ட விஷயங்களை பற்றிய அறிவு அவனுக்கு ஏற்படுகிறது.


உதாரணத்திற்கு, 

ஆத்மா என்றால் என்ன? 

சரீரம் என்றால் என்ன? 

என்று விளக்கும் பல சாஸ்திர புத்தகங்களை படிக்கிறோம். பகவானே தன் திருவாயால் பகவத்கீதையில் ஆத்மா, சரீரம் பற்றி விளக்கி சொல்கிறார்.


இதை படிக்கும் போது, "ஆத்மாவாகிய நாம் இந்த உடலில் இருக்கிறோம். இந்த உடல் ஒரு வாடகை வீடு தான். யமன் என்ற சொந்தக்காரன் எப்பொழுது காலி செய் என்று சொல்வானோ அப்பொழுதே ஆத்மாவாகிய நாம், போட்டது போட்டபடி விட்டுவிட்டு, கிளம்ப வேண்டியது தான்" என்று அறிவு பெறுகிறோம். 

அறிவு வேறு. 

ஞானம் வேறு.


நமக்கு படிப்பு அறிவு இருந்தும், அனுபவத்தில் உணரப்படாத வரை, உடல் பற்றிய கவலையிலேயே இருக்கிறோம். 

பகவானிடத்தில் அன்பு செய்வதையே, ஆத்மா விரும்பும் என்று தெரிந்தும், உலக விஷயங்களிலேயே அன்பு செலுத்துகிறோம். 

 

"நான் ஆத்மா. நான் இப்போது இந்த உடலில் வாடகைக்கு இருக்கிறேன். பகவான் கூப்பிடும் வரை இந்த உடலை அவ்வபோது சரி செய்து கொண்டு, அவரிடமே அன்பு (பக்தி) செய்து கொண்டிருப்பேன்" என்ற இந்த அனுபவ உணர்வோடு வாழ்பவர்களையே "ஞானி" என்று சொல்கிறோம். குறிப்பாக "ஆத்ம ஞானி" என்று சொல்கிறோம் 


ஆத்மாவை பற்றிய அறிவு, படிப்பதால் ஏற்படுகிறது.

ஆத்மாவை பற்றிய அறிவோடு, ஆத்மாவே நான் என்பதை வாழ்க்கையில் அனுபவ ரீதியாக உணர்பவர்கள், "ஆத்மஞானி" என்று அழைக்கப்படுகிறார்கள்.


அது போல, 

இசையை பற்றிய அறிவு, இசை சம்பந்தமான புத்தகங்களை படிப்பதால் நமக்கு ஏற்படுகிறது.


இசையை பற்றிய அறிவோடு, இசையை தன் வாழ்க்கையில் அனுபவ ரீதியாக உணர்பவர்கள்,  "இசைஞானி" என்று அழைக்கப்படுகிறார்கள்.


Monday, 5 June 2023

யார் அந்தணன்? யார் விப்ரன் (குருகுல வாசம் முடித்த வேதியன் - அந்தணன்). அறிந்து கொள்வோம் பிராம்மணன் கடமையை.. மனு ஸ்மிருதி

விப்ரன் (குருகுல வாசம் முடித்த வேதியன் - அந்தணன்)

பூணூல் அணிந்து கொண்டு, காயத்ரீ உபதேசம் பெற்று, குருகுல வாசம் செய்து, வேதத்தை க்ஷத்ரிய, வைசிய, பிராம்மண வர்ணத்தில் இருப்பவர்கள் கற்று கொண்டார்கள். 

இந்த மூவரையும் "த்விஜர்"கள் என்று அப்போது பெயர் சொல்லி அழைக்கிறோம்.


அதில் பிராம்மண வர்ணத்தில் இருப்பவன், வேத கற்ற பிறகு, 6 கடமைகளை கடைபிடிக்கும் அந்தணன் ஆகிறான். 

அந்தணனையே "விப்ரன்" என்றும் "வேதியன்" என்று சொல்கிறோம்


அந்த அந்தணன் பற்றியும் அவன் கடமைகள் பற்றியும் மனு ஸ்மிருதி சொல்வதை அறிவோம்.


பாகம் 2

ब्रह्म-वर्चस कामस्य कार्यो विप्रस्य पञ्चमे ।

राज्ञो बलार्थिनः षष्ठे वैश्यस्यैहार्थिनो अष्टमे ॥

- மனு ஸ்ம்ருதி

ப்ரம்ம தேஜஸ் விரும்பினால், வேதத்தையே உபாசிக்க விரும்பும் வேதியன் என்ற விப்ரன் 5வது வயதிலேயே (பொதுவாக 8 வயது), 

பலத்தை விரும்பும்  க்ஷத்ரியன்  6வது வயதிலேயே  (பொதுவாக 11 வயது), , 

வியாபாரத்தை விரும்பும், வைஸ்யன் 8வது வயதிலேயே (பொதுவாக 12 வயது), 

உபநயனம் (பூணூல்) செய்து கொள்ள வேண்டும். 

मौञ्जी त्रिवृत् समा श्लक्ष्णा कार्या विप्रस्य मेखला ।

क्षत्रियस्य तु मौर्वी ज्या वैश्यस्य शणतान्तवी ॥

- மனு ஸ்ம்ருதி

பிரம்மச்சாரியாக இருக்கும் வேதியன் என்ற விப்ரன்,  வழுவழுப்பான 3 இழைகள் கொண்ட முஞ்சி புல்லால் திரிக்கப்பட்ட அரை ஞாணை அணிய வேண்டும்.

பிரம்மச்சாரியாக இருக்கும் க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவன்,  வழுவழுப்பான 3 இழைகள் கொண்ட மூர்வா புல்லால் திரிக்கப்பட்ட அரை ஞாணை அணிய வேண்டும்.

பிரம்மச்சாரியாக இருக்கும் வைஸ்ய வர்ணத்தில் இருப்பவன்,  வழுவழுப்பான 3 இழைகள் கொண்ட சணல் கொண்டு திரிக்கப்பட்ட அரை ஞாணை அணிய வேண்டும்.


कार्पासम् उपवीतं स्याद् विप्रस्यौर्ध्ववृतं त्रिवृत् ।

शण-सूत्रमयं राज्ञो वैश्यस्याविकसौ त्रिकम् ॥

- மனு ஸ்ம்ருதி

வலதுபுறமாக மூன்று முறை சுற்றப்பட்ட பூணூலை, 

வேதியன் என்ற விப்ரன், பஞ்சினால் செய்தும், 

க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவன் சணலால் செய்தும், 

வைஸ்ய வர்ணத்தில் இருப்பவன் வெள்ளாட்டு முடியினால் செய்தும், அணிந்து கொள்ள வேண்டும்.


ब्राह्मेण विप्रस: तीर्थेन नित्य कालम् उपस्पृशेत् ।

कायत्रैदशिकाभ्यां वा न पित्र्येण कदा चन ॥

- மனு ஸ்ம்ருதி

பிராம்மண வர்ணத்தில் இருக்கும் வேதியன் என்ற விப்ரன்,  ப்ரம்ம தீர்த்தத்தால், ரிஷி தீர்த்தத்தால், தேவ தீர்த்தத்தால் ஆசமனம் செய்து கொள்ளலாம். ஆனால், பித்ருவுக்கு விட்ட தீர்த்தத்தால் ஆசமனம் செய்ய கூடாது.

हृद्गाभिः पूयते विप्रः 

कण्ठगाभिस्तु भूमिपः ।

वैश्यो अद्भिः प्राशिताभिस्तु 

शूद्रः स्पृष्टाभि: अन्ततः ॥

- மனு ஸ்ம்ருதி

ஆசமனம் செய்யும்போது,

பிராம்மண வர்ணத்தில் இருக்கும் வேதியன் என்ற விப்ரன், தன் இதயத்துக்கு செல்லும் அளவுக்கு ஜலத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவன், கழுத்துக்கு செல்லும் அளவுக்கு ஜலத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

வைஸ்ய வர்ணத்தில் இருப்பவன், வாய்க்குள் போகும் அளவுக்கு ஜலத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

சூத்திர வர்ணத்தில் இருப்பவன், ஜலத்தை தொடுவதே போதுமானது.

இப்படி செய்யும் போது, அவரவர்கள் பரிசுத்தமாகிறார்கள்


एतद् अक्षरम् एतां च जपन् 

व्याहृति पूर्विकाम् ।

सन्ध्ययोः वेदविद् विप्रो 

वेदपुण्येन युज्यते ॥

- மனு ஸ்ம்ருதி

ஸந்த்யாவந்தன காலத்தில் ஓங்காரம் (ஓம்), பிறகு வ்யாஹ்ருதி (பூ புவ ஸுவ) சொல்லி, அதனோடு காயத்ரீ மந்திரத்தை சொல்லும் வேதியன் என்ற விப்ரன், புண்ணியத்தை அடைகிறான்.


वेदास: त्याग यज्ञाश्च 

नियमाश्च तपांसि च ।

न विप्र दुष्ट भावस्य 

सिद्धिं गच्छति कर्हि चित् ॥

- மனு ஸ்ம்ருதி

புலன்களை அடக்க முடியாத மனம் கொண்ட வேதியன் என்ற விப்ரன், வேதத்தையே அத்யயனம் செய்தாலும், தானங்களே செய்தாலும், யாகங்கள் செய்தாலும், நியமங்களோடு வாழ்ந்தாலும், தவ வாழ்க்கையே வாழ்ந்தாலும், பலன் தராது ("ஸித்தி" என்ற பலன் கிடைக்காது)


यमेव तु शुचिं विद्यान्नियतं ब्रह्मचारिणम् 

तस्मै मां ब्रूहि विप्राय निधिपायाप्रमादिने ॥  

- மனு ஸ்ம்ருதி

சத்தியம் பேசுதல், பிற உயிருக்கு தீங்கு செய்யாமல் இருத்தல், , பொறுமையாக இருத்தல். இதற்கு யமம் என்று பெயர். "நீ கற்ற கல்வியை மன தூய்மை (யமம்), உடல் தூய்மை இரண்டையும் காப்பாற்றும் பிரம்மச்சாரி எவனோ அவனிடம் என்னை கொடுப்பாயாக" என்று வித்யா தேவதை வேதியன் என்ற விப்ரனிடம் கேட்கிறாள்.


सावित्री मात्रसारो अपि वरं विप्रः सुयन्त्रितः ।

नायन्त्रित स्त्रि वेदो अपि सर्वाशी सर्व विक्रयी ॥

- மனு ஸ்ம்ருதி

காயத்ரீ மந்திரத்தை மட்டும் ஜபித்து கொண்டு, புலன் அடக்கத்தோடு இருக்கும் வேதியன் என்ற விப்ரன், மூன்று வேதமும் அறிந்த, புலன் அடக்கமில்லாத, அனைத்தையும் உண்ணும், எதையும் விற்கும் மனிதனை விட மேலானவன்.

अभिवादात् परं विप्रो ज्यायां सम अभिवादयन् ।

असौ नामाहम् अस्मीति स्वं नाम परिकीर्तयेत् ॥

- மனு ஸ்ம்ருதி

வேதியன் என்ற விப்ரன், தன்னை விட பெரியவரை கண்டால், அவருக்கு அபிவாதனம் செய்து, தன் பெயர், குலம், கோத்திரம் கூறி வணங்க வேண்டும்.


आयुष्मान् भव सौम्यैति वाच्यो विप्रो अभिवादने ।

अकार: च अस्य नाम्नो अन्ते वाच्यः पूर्वाक्षरः प्लुतः ॥ 

- மனு ஸ்ம்ருதி

"ஆயுஷ்மான் பவ ஸௌம்யா" (நீடூழி வாழ் நல்ல பிள்ளாய்) என்று, அபிவாதனம் செய்பவனை பார்த்து வேதியன் என்ற விப்ரன் சொல்ல வேண்டும். அபிவாதனம் செய்தவன் பெயர் "அ"காரத்தில் முடிந்தால், இதையே நீட்டி சொல்ல வேண்டும்.


यो न वेत्ति अभिवादस्य विप्रः प्रति अभिवादनम् ।

न अभिवाद्यः स विदुषा यथा शूद्र: तथैव सः ॥ 

- மனு ஸ்ம்ருதி

எந்த வேதியன் என்ற விப்ரன் அபிவாதனம் செய்தவனுக்கு பதில் சொல்ல அறியாமல் இருக்கிறானோ, அவனை சூத்திரனாக (employee) கருத வேண்டும். அவனுக்கு அபிவாதனம் செய்ய அவசியமில்லை. 


भ्रातु: भार्यौपसङ्ग्राह्या स-वर्णा अहन्यहन्यपि ।

विप्रोष्य तूप सङ्ग्राह्या ज्ञाति सम्बन्धियोषितः ॥

- மனு ஸ்ம்ருதி

தன் வர்ணத்திலேயே மணம் புரிந்து கொண்ட அண்ணனின் மனைவியின் காலில், வேதியன் என்ற விப்ரன் தினமும் விழுந்து வணங்க வேண்டும். மற்றபடி உறவினர்களை அவரவர்கள் வெளியூர் செல்லும் போது மட்டும் வணங்க வேண்டும்.


निषेकादीनि कर्माणि यः करोति यथाविधि ।

सम्भावयति चान्नेन स विप्रो गुरु: उच्यते ॥

- மனு ஸ்ம்ருதி

எந்த வேதியன் என்ற விப்ரன் கர்ப்ப காலங்களில் செய்யப்படும் பும்ஸவனம் போன்ற ஸம்ஸ்காரங்களை செய்து வைத்து, சம்பாவனையாக காய் கறி உணவாக வாங்கி கொள்கிறாரோ, அவரை "குரு" என்று  அழைக்க வேண்டும். பாவங்களை அழித்து தான் வாங்கி கொள்வதால் அவருக்கு, குரு என்று பெயர்.


उत्पादक ब्रह्मदात्रो गरीयान् ब्रह्मदः पिता ।

ब्रह्मजन्म हि विप्रस्य प्रेत्य चैह च शाश्वतम् ॥ 

- மனு ஸ்ம்ருதி

இரண்டாவது பிறப்பு என்பதை கொடுப்பது உபநயனம். அதை செய்து வைத்த ஆசாரியன் தந்தையை விட உயர்ந்தவர். பிரம்மத்தை உபாசிக்கும் வேதியன் என்ற விப்ரனே நிரந்தரமான ப்ரம்ம பதத்தை (மோக்ஷத்தை) அடைகிறான்.


ब्राह्मस्य जन्मनः कर्ता स्वधर्मस्य च शासिता ।

बालो अपि विप्रो वृद्धस्य पिता भवति धर्मतः ॥ 

- மனு ஸ்ம்ருதி

தனக்கு உபநயனம் செய்து ப்ரம்ம பதத்தை நோக்கி செல்ல வழியையும் காண்பித்து, வேதத்தின் அர்த்தத்தையும் சொல்லி கொடுத்த வேதியன் என்ற விப்ரன், தன்னை விட வயது குறைந்தவராக இருந்தாலும், தர்மப்படி, அவரையும் தந்தைக்கு நிகரானவராக கருத வேண்டும்.


विप्राणां ज्ञानतो ज्यैष्ठ्यं क्षत्रियाणां तु वीर्यतः ।

वैश्यानां धान्यधनतः शूद्राणामेव जन्मतः ॥

- மனு ஸ்ம்ருதி

பிராம்மண வர்ணத்தில் இருக்கும் வேதியன் என்ற விப்ரனுக்கு, வேத ஞானத்தால் மட்டுமே மதிப்பு. 

க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவனுக்கு வீர்யத்தால் (வீரம்) மதிப்பு.

வைஸ்ய வர்ணத்தில் இருப்பவனுக்கு தன-தானியங்கள் பெருகுவதால் (wealth) மதிப்பு.

சூத்திர வர்ணத்தில் (employee) இருப்பவனுக்கு வயது முதிர்ச்சியால் (work experience) மதிப்பு.


यथा काष्ठमयो हस्ती यथा चर्ममयो मृगः ।

यश्च विप्रो अनधीयानस्त्रयस्ते नाम बिभ्रति ॥ 

- மனு ஸ்ம்ருதி

மரத்தால் செய்யப்பட்ட யானை, தோலால் செய்யப்பட்ட மான் பொம்மை, வேதத்தை கற்காத விப்ரன் என்ற வேதியன் மூவரும் பெயர் அளவில் 'இது யானை, இது மான், நான் விப்ரன் (பிராம்மணன்)" என்று சொல்லிக்கொள்ளலாமே தவிர, மதிப்பு கிடைக்காது.


यथा षण्ढो अफलः स्त्रीषु 

यथा गौ: गवि च अफला ।

यथा चाज्ञे अफलं दानं 

तथा विप्रो अनृचो अफलः ॥

- மனு ஸ்ம்ருதி

நபும்ஸகன் (ஆண்மை அற்றவன்) பெண்கள் விஷயத்தில் எப்படி பயனற்றவனோ, பசுவிடம் பசு எப்படி பயனற்றதோ, தகுதி இல்லாதவனுக்கு கொடுக்கப்பட்ட தானம் எப்படி பயனற்றதோ, அது போல, வேதத்தை கற்காத விப்ரன் என்ற வேதியன் (பிராம்மணனும்) பயனற்றவனே !

वेदम् एव सदा अभ्यस्येत् तपस्तप्यन् द्विजोत्तमः ।

वेद अभ्यासो हि विप्रस्य तपः परम् इह उच्यते ॥

- மனு ஸ்மிருதி

பிரம்மச்சாரியாக இருக்கும் த்விஜன் என்ற இரு பிறப்பாளன் (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) தவம் போல எப்போதும் வேதத்தை ஓதிக்கொண்டு இருக்க வேண்டும். குருகுல வாசம் முடிந்த பிறகும், வேதியன் என்ற விப்ரனுக்கு (பிராம்மணன்) ஆயுள் முழுவதும் வேதம் ஓதுவதே கடமை.


विप्रोष्य पाद ग्रहणम् अन्वहं च अभिवादनम् ।

गुरुदारेषु कुर्वीत सतां धर्मम् अनुस्मरन् ॥

- மனு ஸ்மிருதி

குருவின் பத்னி வயது மூத்தவளாக இருந்தால், வேதியன் என்ற விப்ரன் எப்பொழுது பார்த்தாலும், காலை தொட்டு நமஸ்கரிக்க வேண்டும்.


आ समाप्तेः शरीरस्य यस्तु शुश्रूषते गुरुम् ।

स गच्छति अञ्जसा विप्रो ब्रह्मणः सद्म शाश्वतम् ॥

- மனு ஸ்மிருதி

உடல் பூமியில் விழும் வரை குருவுக்கு சேவை செய்தே வாழும் வேதியன் என்ற விப்ரன், நிரந்தரமாக பிரம்மத்தை (மோக்ஷம்) அடைவான்.


एवं चरति यो विप्रो ब्रह्मचर्यम् अविप्लुतः ।

स गच्छति उत्तम स्थानं न चैह जायते पुनः ॥

- மனு ஸ்மிருதி

"ப்ரம்மச்சாரியாகவே இருப்பேன்" என்று வாழும் வேதியன் என்ற விப்ரன், நித்யமான ப்ரம்மத்தை அடைவான். அவனுக்கு மறுஜென்மம் கிடையாது.



பாகம் 12

तापसा यतयो विप्रा ये च वैमानिका गणाः ।

नक्षत्राणि च दैत्याश्च प्रथमा सात्त्विकी गतिः ॥

- மனு ஸ்மிருதி

ஸத்வ குணத்தின் அளவை பொறுத்து, கீழ் நிலையான தபஸ்விகள், சந்யாசிகள், வேத விற்பன்னர்கள், விமானத்தில் பறக்கும் கல்விமான்கள், தைத்யர்கள், நக்ஷத்திரங்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்.


लूता अहिसरटानां च तिरश्चां चाम्बुचारिणाम् ।

हिंस्राणां च पिशाचानां स्तेनो विप्रः सहस्रशः ॥

- மனு ஸ்மிருதி

தங்கத்தை திருடிய வேதியன் என்ற விப்ரன், சிலந்தியாகவும், பாம்பு, ஓணான், நீரில் வாழும் உயிரினமாகவும், கொடிய மிருகமாகவும், பிசாசாகவும் பிறவிகளை எடுப்பான்.


संयोगं पतितै: गत्वा परस्यैव च योषितम् ।

अपहृत्य च विप्रस्वं भवति ब्रह्म-राक्षसः ॥

- மனு ஸ்மிருதி

நாடு கடத்தப்பட்டவனோடு உறவு கொண்டவர்கள், பிறர் மனைவியை அடைந்தவர்கள், வேதியன் என்ற விப்ரனின் பொருளை திருடியவர்கள், அடுத்த பிறவியில் ப்ரம்ம-ராக்ஷஸனாகவும் அலைவார்கள்.


वान्ताश्युल्कामुखः प्रेतो 

विप्रो धर्मात् स्वकाच्च्युतः ।

अमेध्यकुणपाशी च क्षत्रियः कटपूतनः ॥

- மனு ஸ்மிருதி

பிராம்மண வர்ணத்தில் வேதியன் என்ற விப்ரனாக இருந்தும், தன் தர்மத்தை விட்டவர்கள், அடுத்த பிறவியில் கொள்ளிவாய் பிசாசாக பிரேத சரீரத்தோடு இருந்து, மனிதர்களின் வாந்தியை சாப்பிடும் ஜென்மத்தை அடைவார்கள். 

க்ஷத்ரிய வர்ணத்தில் (army, police, defence) இருந்தும், தன் தர்மத்தை விட்டவர்கள், மலத்தையும், பிணத்தையும் தின்னும் கடபூதமாக அலைவார்கள்.


एष सर्वः समुद्दिष्टः कर्मणां वः फलोदयः ।

नैःश्रेयसकरं कर्म विप्रस्येदं निबोधत ॥

- மனு ஸ்மிருதி

இது வரை, சாஸ்திரம் சொல்லும் முறையையும், அதற்கு விரோதமான காரியங்கள் செய்வதால் ஏற்படும் துன்பங்களை பற்றியும் சொன்னேன். இனி, விப்ரன் என்று சொல்லப்படும் வேதியன் செய்ய வேண்டிய நன்மை பயக்கும் காரியங்களை சொல்கிறேன்.


वेद अभ्यास: तपो ज्ञानम् इन्द्रियाणां च संयमः ।

अहिंसा गुरु-सेवा च निःश्रेयसकरं परम् ॥

- மனு ஸ்மிருதி

வேதத்தை கற்று கொள்ளுதல்,

வேத அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல், 

பிரம்மத்தை பற்றிய நினைவுடனேயே தபஸில் இருத்தல், 

ப்ரம்ம (மெய்) ஞானத்தை அடைதல், 

புலன் அடக்கதோடு இருத்தல்,

அஹிம்சையோடு இருத்தல், 

குரு சேவை செய்தல். 

இந்த  6 கடமைகளை, வேதியன் என்ற விப்ரன் செய்வதால் மோக்ஷத்தை அடைவான்.


सर्वेषाम् अपि चैतेषां शुभानाम् इह कर्मणाम् ।

किंचित् श्रेयस्करतरं कर्मोक्तं पुरुषं प्रति ॥

- மனு ஸ்மிருதி

இப்போது கூறிய 6 கடமைகளில் எது மிக மிக உயர்ந்தது? என்று சொல்கிறேன்.


सर्वेषाम् अपि चैतेषाम् आत्मज्ञानं परं स्मृतम् ।

तद् ह्यग्र्यं सर्वविद्यानां प्राप्यते ह्यमृतं ततः ॥

- மனு ஸ்மிருதி

வேதியன் என்ற விப்ரனின் 6 கடமைகளில், ப்ரம்ம (மெய்) ஞானத்தை அடைய முயற்சி செய்வதே மிக மிக உயர்ந்த கடமை. பகவானை அறியும் ஞானமே ப்ரம்மஞானம். இந்த ப்ரம்ம ஞானமே மோக்ஷத்திற்கு வழி.


षण्णाम् एषां तु सर्वेषां कर्मणां प्रेत्य चैह च ।

श्रेयस्करतरं ज्ञेयं सर्वदा कर्म वैदिकम् ॥

- மனு ஸ்மிருதி

வேதத்தை கற்று கொள்ளுதல்,

வேத அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல், 

பிரம்மத்தை பற்றிய நினைவுடனேயே தபஸில் இருத்தல், 

ப்ரம்ம ஞானத்தை அடைதல்,

அஹிம்சையாகவே இருத்தல், 

குரு சேவை செய்தல். 

இந்த 6 காரியங்களை கடைபிடிக்கும் வைதீகன் (விப்ரன்) செய்யும் வைதீக காரியங்கள் அனைத்தும் இக லோகத்திலும் பலன் தரும், பரலோகத்திலும் பலன் தரும்.


वैदिके कर्मयोगे तु सर्वाणि एतानि अशेषतः ।

अन्तर्भवन्ति क्रमश तस्मिं तस्मिन् क्रियाविधौ ॥

- மனு ஸ்மிருதி

வைதீக கர்மாவை தான் செய்யவில்லை, பரமாத்மா உள்ளிருந்து செய்கிறார் என்று யோகமாக செய்யும், விப்ரனின் (வைதீக பிராம்மணன்) அனைத்து காரியமும் பெரும் பலன்களை அளித்திடும்.


सुखाभ्युदयिकं चैव नैःश्रेयसिकमेव च ।

प्रवृत्तं च निवृत्तं च द्विविधं कर्म वैदिकम् ॥

- மனு ஸ்மிருதி

யோகமாக வைதீக கர்மாக்களை விப்ரன் என்ற வேதியன் செய்தால் ப்ரவ்ருத்தி (இக உலக சௌக்கியம், சொர்க்க லோகம் சுகங்கள் முதலிய) பயன்களும் அடையலாம். நிவ்ருத்தி (மோக்ஷம்) பயன்களையும் அடையலாம்.


इह चामुत्र वा काम्यं प्रवृत्तं कर्म कीर्त्यते ।

निष्कामं ज्ञातपूर्वं तु निवृत्तमुपदिश्यते ॥

- மனு ஸ்மிருதி

இந்த உலகத்தில் சுகமாக இருப்பதற்காகவும், மேல் உலக சுகங்களை அனுபவிப்பதற்காகவும் விப்ரன் என்ற வேதியன் செய்யும் வைதீக காரியங்களை "ப்ரவ்ருத்தி" என்று சொல்கிறோம்.  எந்த பலனையும் எதிர்பார்க்காமல், இறந்த பிறகும் வேறு பலனை எதிர்பார்க்காமல் விப்ரன் என்ற வேதியன் செய்யும் வைதீக காரியங்களை "நிவ்ருத்தி" என்று சொல்கிறோம்.


प्रवृत्तं कर्म संसेव्यं देवानामेति साम्यताम् ।

निवृत्तं सेवमानस्तु भूतान्यत्येति पञ्च वै ॥

- மனு ஸ்மிருதி

ப்ரவ்ருத்தி மார்க்க வைதீக கர்மாக்களை வேதியன் என்ற விப்ரன் செய்வதன் மூலம், தேவனாகவும், தேவனை போல சில காலங்கள் சொர்க்க லோகங்களில் வாசம் செய்யும் பலன்களை கூட அடையலாம்.


நிவ்ருத்தி மார்க்க வைதீக கர்மாக்களை வேதியன் என்ற விப்ரன் செய்வதன் மூலம், பஞ்சபூதங்களும் விலகி, மோக்ஷத்தை அடையலாம்.


सर्वभूतेषु च आत्मानं सर्वभूतानि च आत्मनि ।

समं पश्यन् न आत्मयाजी स्वाराज्यम् अधिगच्छति ॥

- மனு ஸ்மிருதி

சர்வ சரீரங்களிலும் ஆத்மா உள்ளது. ஒவ்வொரு சரீரங்களில் இருக்கும் இந்த ஆத்மாக்கள் பரமாத்மாவிடம் உரைகிறது. அந்த பரமாத்மா அனைத்து ஆத்மாவுக்கும் உறைவிடமாக இருக்கிறார் என்ற சம புத்தியோடு பார்க்க தெரிந்த வேதியன் என்ற விப்ரன், மோக்ஷம் (வீடு) செல்கிறான்.


यथोक्तान्यपि कर्माणि परिहाय द्विजोत्तमः ।

आत्मज्ञाने शमे च स्याद् वेदाभ्यासे च यत्नवान् ॥

- மனு ஸ்மிருதி

இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜோத்தமர்கள் (பிராம்மண, வைசிய, க்ஷத்ரிய) தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை விட்டாவது, ஆத்ம ஞானத்தை அடைய முயற்சிக்க வேண்டும். வேதம் ஓதுவதே ஆத்ம ஞானத்தை கொடுக்கும்.


एतद् हि जन्म साफल्यं ब्राह्मणस्य विशेषतः ।

प्राप्यैतत् कृतकृत्यो हि द्विजो भवति नान्यथा ॥

- மனு ஸ்மிருதி

பிறவி எடுத்த பலனை அடைய, ப்ராம்மண வர்ணத்தில் இருக்கும் வேதியன் என்ற விப்ரன், வேதம் ஓதியே அடைய வேண்டும். இதுவே மற்ற த்விஜர்களான க்ஷத்ரியர்களுக்கும், வைஸ்யர்களுக்கும் வழி.


तपो विद्या च विप्रस्य निःश्रेयसकरं परम् ।

तपसा किल्बिषं हन्ति विद्यया अमृतमव अश्नुते ॥

- மனு ஸ்ம்ருதி

தவமும், வேதமும் வேத ப்ராம்மணனுக்கு (விப்ரனுக்கு) மேன்மை கொடுக்கும். தவத்தால் விப்ரனின் பாபங்கள் தீரும். வேதத்தால் ப்ரம்மானந்தத்தை அனுபவிப்பான்.


पितृदेव मनुष्याणां वेदश्चक्षुः सनातनम् ।

अशक्यं च अप्रमेयं च वेदशास्त्रमिति स्थितिः ॥

- மனு ஸ்ம்ருதி

வேதம் பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் முன் இருப்பது. வேதம் கண் போன்று இருக்கிறது. வேதம் என்ற கண் கொண்டு தான், மனிதன், தேவன் என்று அனைவரும் தர்மம் எது? என்று அறிகிறார்கள். காலத்திற்கு அப்பாற்ப்பட்ட வேதத்தின் சக்தி எல்லையற்றது. 'வேதத்தின் தன்மை இது தான்' என்று எவராலும் அளவிட முடியாது.


या वेदबाह्याः स्मृतयो याश्च काश्च कुदृष्टयः ।

सर्वास्ता निष्फलाः प्रेत्य तमोनिष्ठा हि ताः स्मृताः ॥

- மனு ஸ்ம்ருதி

வேதத்திற்கு விரோதமாக இயற்றப்பட்ட நூல்களும், தவறான கோட்பாடுகளும், திறம்பட ஒழுங்கு செய்யப்பட்டு எழுதப்பட்டு இருந்தாலும், அவை அனைத்தையும், "அஞானம் என்ற இருளில் இயற்றப்பட்டது" என்றே தள்ள வேண்டும்.


उत्पद्यन्ते च्यवन्ते च यान्यतो अन्यानि कानि चित् ।

तान्यर्वाक्कालिकतया निष्फलान्यनृतानि च ॥

- மனு ஸ்ம்ருதி

வேதத்தை ஆதாரமாக கொள்ளாத எந்த நூலும், வேகமாக தானே ஒரு சமயம் அழிந்து போகும். பொய்யை கற்பிக்கும் மற்ற நூல்களை கற்பதால் மனிதனுக்கு எந்த நற்பலனும் ஏற்பட போவதில்லை.


चातुर्वर्ण्यं त्रयो लोका: चत्वारश्च आश्रमाः पृथक् ।

भूतं भव्यं भविष्यं च सर्वं वेदात् प्रसिध्यति ॥

- மனு ஸ்மிருதி

நான்கு வர்ணத்தை பற்றியும், மூவுலகங்கள் பற்றியும், நான்கு ஆஸ்ரமங்களை பற்றியும் வேதம் சொல்கிறது. நடந்ததும், நடப்பதும், நடக்க போவதை பற்றியும் வேதம் சொல்கிறது.


शब्दः स्पर्शश्च रूपं च रसो गन्धश्च पञ्चमः ।

वेदादेव प्रसूयन्ते प्रसूतिर्गुणकर्मतः ॥

- மனு ஸ்ம்ருதி

சப்தம் (ஒலி), ஸ்பரிசம் (தொடு உணர்வு), ரூபம், ரசம் (சுவை), கந்தம் (சுகந்தம்) என்னும் 5ம் வேதத்திலிருந்தே தோன்றின. இவைகளின் குணமும் செயல்களும் வேதத்திலேயே விளக்கப்பட்டுள்ளன.


बिभर्ति सर्वभूतानि वेदशास्त्रं सनातनम् ।

तस्माद् एतत् परं मन्ये यत्जन्तो: अस्य साधनम् ॥

- மனு ஸ்ம்ருதி

காலத்தை கடந்த வேத சாஸ்திரமே (தர்மம்) சகல உயிர்களையும் (நம்மை) தாங்குகிறது. மேலான நிலையை மனிதன் அடைய வேதமே சாதனமாகும்.


सेनापत्यं च राज्यं च दण्डनेतृत्वमेव च ।

सर्व लोकाधिपत्यं च वेदशास्त्र विदर्हति ॥

- மனு ஸ்ம்ருதி

வேத சாஸ்திரம் முழுவதும் எவன் அறிந்து கொள்கிறானோ, அவனால் பெரும் படையை சேனாபதியாக வழிநடத்த முடியும். ராஜ்யத்தை ஆளும் திறன் இருக்கும். இவ்வளவு ஏன், சகல உலகங்களையும் ஆட்சி செய்யும் தகுதியும் இருக்கும்.


यथा जातबलो वह्निः दहत्यार्द्रानपि द्रुमान् ।

तथा दहति वेदज्ञः कर्मजं दोषम् आत्मनः ॥

- மனு ஸ்ம்ருதி

கொழுந்து விட்டு எரியும் அக்னியானது, எப்படி பசுமையான மரங்களையும் எரித்து விடுமோ, அப்படியே வேதம் முழுவதும் கற்று 'அறிந்தவன்' கர்மாவினால் ஏற்படும் தோஷங்களை கூட எரித்து அழித்து விடும் சக்தி கொண்டிருப்பான்.


वेदशास्त्र अर्थ तत्त्वज्ञो यत्र तत्रा आश्रमे वसन् ।

इहैव लोके तिष्ठन् स ब्रह्म भूयाय कल्पते ॥

- மனு ஸ்ம்ருதி

வேத சாஸ்திரத்தின் அர்த்தத்தை உணர்ந்த தத்வ ஞானி, பிரம்மச்சாரியாக இருந்தாலும், க்ருஹஸ்தனாகவே இருந்தாலும், வானப்ரஸ்தனாக இருந்தாலும், உலகில் வாழ்ந்தபடியே ப்ரம்ம ஞானத்தோடு இருப்பான்.


अज्ञेभ्यो ग्रन्थिनः श्रेष्ठा 

ग्रन्थिभ्यो धारिणो वराः ।

धारिभ्यो ज्ञानिनः श्रेष्ठा 

ज्ञानिभ्यो व्यवसायिनः ॥

- மனு ஸ்ம்ருதி

ஏதோ சிறிது வேத மந்திரங்களை கற்றவர்களை விட, முழுமையாக வேதத்தை கற்றவர்கள் மேலானவர்கள். 

வேதத்தை நன்கு மனதில் பதிய வைத்து கொண்டவர்கள், முழுமையாக கற்றவர்களை விட மேலானவர்கள். 

வேதத்தின் அர்த்தம் புரிந்தவர்கள், நன்கு மனதில் பதிய வைத்தவர்களை விட மேலானவர்கள். 

வேதம் சொன்னபடி வாழ்க்கையில் நடந்து காட்டுபவர்கள், அர்த்தம் புரிந்தவர்களை விட மேலானவர்கள்.


तपो विद्या च विप्रस्य निःश्रेयसकरं परम् ।

तपसा किल्बिषं हन्ति विद्यया अमृतमश्नुते ॥

- மனு ஸ்ம்ருதி

தவமும், வேதமும் வேத ப்ராம்மணனுக்கு (விப்ரனுக்கு) மேன்மை கொடுக்கும். தவத்தால் விப்ரனின் பாபங்கள் தீரும். வேதத்தால் ப்ரம்மானந்ததை அனுபவிப்பான்.


प्रत्यक्षं चानुमानं च शास्त्रं च विविधाऽऽगमम् ।

त्रयं सुविदितं कार्यं धर्मशुद्धिमभीप्सता ॥

- மனு ஸ்ம்ருதி

தர்மத்தை அறிய 3 சாதனங்கள் உள்ளது. கண்ணால் பார்த்தும், அனுமானத்தாலும், சாஸ்திரம் என்ன சொல்கிறது என்றும் ஆராய்வதால் ஒருவன் தன்னை தர்ம வழியில் மேம்படுத்தி கொள்ள முடியும்.


आर्षं धर्मोपदेशं च वेदशास्त्रा अविरोधिना ।

यस् तर्केणा अनु सन्धत्ते स धर्मं वेद नैतरः ॥

- மனு ஸ்ம்ருதி

வேதத்தையும், தர்ம உபதேச ஸ்ம்ருதிகளையும், வேதத்துக்கு விரோதமில்லாத சாஸ்திரத்தையும் (உபநிஷத்), தர்க்க சாஸ்திரத்தையும் நன்கு படிப்பதால், தர்மங்கள் என்னென்ன என்று ஒருவன் நன்கு புரிந்து கொள்ள முடியும்.