Followers

Search Here...

Saturday, 23 October 2021

மெக்கா திசை பார்த்து முஸ்லீம்களில் ஒரு பகுதியினர் பிரார்த்தனை செய்கிறார்கள். ஹிந்துக்கள் இது போன்று திசை நோக்கி பிரார்த்தனை செய்கிறார்களா? செய்தால், அதன் நோக்கம் என்ன? அனுபவம் என்ன? ஸந்த்யாவந்தனத்தில் உள்ளதா? அதன் உள் அர்த்தம் என்ன? ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள...

ஹிந்து தர்மத்தில் இல்லாத விஷயங்கள் எதுவும் 2000 வருடங்களுக்கு முன் உருவான மற்ற மதங்களில் இல்லை.

ஹிந்து தர்மம் சொல்லும் பல விஷயங்களில், ஒரு சில விஷயங்களை மற்ற மதங்களும் சொல்கிறது.

உதாரணத்திற்கு, 

முஸ்லீம் மதத்தில் உள்ளவர்கள், எந்த திசையில் மெக்கா இருக்கிறதோ! அந்த திசையை பார்த்து பிரார்த்தனை செய்கிறார்கள். 

முஸ்லீம்களில் மற்றொரு பகுதியினர், மெக்காவை பார்த்து சொல்வதில்லை. இவர்கள் சூரியனுக்கு எதிர் திசையை பார்த்து பிரார்த்தனை செய்கின்றனர். 

ஒரு ஒழுங்குக்காக இவர்கள் இந்த பழக்கத்தை வைத்து இருக்கிறார்கள்.


திசையை பார்த்து ஹிந்துக்கள் பிரார்த்தனை செய்வதை  சாதாரணமாகவே பார்க்கலாம். 

கையை தூக்கி, மேலும் கீழும், நான்கு பக்கமும் சுற்றி ஹிந்துக்கள் பிரார்த்தனை செய்வதை சகஜமாகவே பார்க்கலாம்.




"பரமாத்மா ஒரு திசையில் இல்லை. அவர் எங்கும் இருக்கிறார்" என்ற தத்துவத்தில், ஹிந்துக்கள் அனைத்து திசையிலும் இருக்கும் பரமாத்மாவை வணங்குகின்றனர். 


இது மட்டும் ஒரு காரணமல்ல.. 

'பரமாத்மா எங்கும் இருக்கிறார், நம் அனைவருக்குள்ளும் ஆத்மாவாகவும் இருக்கிறார்' என்பதால் தான், ஹிந்துக்கள், உலகத்தில் உள்ள அனைவரையும், பரமாத்மாவாக நினைத்து வணங்குகின்றனர்.

நமக்குள் இருக்கும் ஆத்மா (ஜீவாத்மாக்கள்) மட்டுமா பரமாத்மா? 

'எங்கும் பரமாத்மா இருக்கிறார்' என்று சொல்லும் போது, பரமாத்மாவே பஞ்ச பூதமாகவும் இருக்கிறார் என்று வேதம் சொல்கிறது. 


அந்த பரமாத்மாவே "உலகங்களாகவும், அந்த பரமாத்மாவே அந்த உலகங்களில் கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களாகவும் நுழைந்து இயக்கி கொண்டு இருக்கிறார்" என்று வேதம் சொல்கிறது.

ஆதலால் தான், 

பிரளய காலத்தில் 'உலகங்கள், ஜீவாத்மாக்கள் அனைத்தையும் தனக்குள் அடக்கி விடுகிறார்' பரமாத்மா என்று வேதம் சொல்கிறது. 

14 உலகங்களை 'ஸ்ரீவத்ஸமாகவும்', கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களை 'கௌஸ்துபம்' என்ற மாலையாகவும் அணிந்து கொண்டு, பிரளய காலத்தில் பரவாசுதேவன் மட்டும் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

முஸ்லீம்கள் மெக்கா திசை நோக்கி வழிபடுகிறார்கள் என்று பார்த்தோம். 

ஹிந்து தர்மத்திலும் இந்த பழக்கத்தை காணலாம்.

ஸ்ரீரங்க நாதரின் மேல் பக்தி கொண்டவன், வேலை காரணமாக டெல்லி சென்றாலும், அங்கிருந்து கொண்டே ரங்கநாதர் கோவில் இருக்கும் திசை நோக்கி நமஸ்கரிக்கிறான்.


காசி விஸ்வநாதரின் மேல் பக்தி கொண்டவன், வேலை காரணமாக சென்னை வந்தாலும், அங்கிருந்து கொண்டே காசி விஸ்வநாதர் கோவில் இருக்கும் திசை நோக்கி நமஸ்கரிக்கிறான்.

ஹிந்துவாக பிறந்தவன், இந்திய (பாரத) தேசத்தை விட்டு, அமெரிக்கா சென்றாலும், உலகத்திற்கே கோவில் கோபுரம் போல இருக்கும் இந்திய தேசம் இருக்கும் திசை நோக்கி நமஸ்கரிக்கிறான். 




பாரத மண்ணில் ஆயிரக்கணக்கான மகாத்மாக்கள், யோகிகள், ரிஷிகள் பிறந்தார்கள், இருக்கிறார்கள்.. வர போகிறார்கள். 

இந்த பாரத மண்ணில் தேவர்களும், சிவபெருமானும், பெருமாளும் லீலைகள் செய்து இருக்கிறார்கள்

நம்மை படைத்த பரமாத்மா ராமராகவும், கண்ணனாகவும், நரசிம்மமாகவும், வாமனனாகவும் இந்த மண்ணில் வந்து காட்சி கொடுத்து இருக்கிறார்கள். 

ரிஷிகள், மகான்கள், சித்தர்களுக்கு காட்சி கொடுத்த தெய்வங்கள், பாரத மண் எங்கும் கோவிலில் இன்றும் பூஜை செய்யும் விதமாக கல் ரூபத்திலும், மர ரூபத்திலும், பஞ்சலோக ரூபத்திலும், நீர் ரூபத்திலும், ஆகாச ரூபத்திலும் இருக்கிறார்கள்

ரிஷிகளுக்கு காட்சி கொடுத்த அதே தெய்வங்கள், நமக்கும் கோவிலில் காட்சி கொடுக்கிறார்கள்.

நமக்காக தெய்வங்களை வரவழைத்து, நாம் கேட்கும் பிரார்த்தனையை கோவிலில் உள்ள அந்த தெய்வங்கள் நமக்கும் அருள பிரார்த்தனை செய்த அந்த மகாத்மாக்கள் நம்மை சுற்றி அவதரித்தார்கள்.

 

அந்த மகாத்மாக்களுக்கும், சித்தர்களுக்கும், யோகிகளுக்கும், ரிஷிகளுக்கும், தேவர்களுக்கும், பரமாத்மாவுக்கு எப்படி நன்றி சொல்வது? 

ஹிந்துக்கள் கையை தூக்கி, நான்கு புறமும் சுற்றி, மேலும் கீழும் நமஸ்காரம் செய்வது இந்த காரணம் தான்.


இந்த அனுபவத்தில் ஹிந்துக்கள் திசைகளை நமஸ்கரிக்கும் போது, அனைவரையும் தெய்வமாக பார்க்கும், அனைத்தையும் தெய்வமாக பார்க்கும் அனுபவம் ஏற்படும். 

நம்மை சுற்றி இருக்கும் அனைத்து கோவில்களில் உள்ள தெய்வங்களையும், அவதரித்த மகான்களையும், நமஸ்கரித்த புண்ணியம் கிடைக்கும்.

ஸந்த்யாவந்தனத்தில், இந்த பிரார்த்தனை உள்ளது.

இந்த அனுபவத்தில், நாம் நான்கு திசையை நமஸ்கரிக்கும் போது தான், எத்தனை அற்புதமான பிரார்த்தனை! எத்தனை அற்புதமான ஸந்த்யாவந்தனம்!  என்று புரியும். 

இந்த பிரார்த்தனை செய்ய மனிதனாக பிறந்தவனுக்கு கசக்குமா? 


"ப்ராச்யை  திசே நம:" (east)

"தக்ஷிணாயை திசே நம:" (south)

"ப்ரதீக்ஷ்யை திசே நம:" (west)

"உதீக்ஷ்யை திசே நம:" (north)

ஊர்த்வாய நம: (above) 

அதராய நம: (below) 

அந்தரீக்ஷாய நம: (straight) 

பூம்யை நம: (earth) 

ப்ரஹ்மணெ நம: (towards your heart)

விஷ்ணவே நம: (north - where ksheerapthi resides above 14 worlds)

ம்ருத்யுவே நம:  (south - where yama resides south direction of earth (bhuva lok))


சந்தியா வந்தனம் அர்த்தம் தெரிந்து சொல்ல:

காலை 

மதியம் 

மாலை 


Sandhyavandanam with English meaning:

Morning

Afternoon

Evening

Thursday, 21 October 2021

ராவணன் திராவிடனா? தமிழ் பழமை வாய்ந்த மொழியா? சமஸ்க்ரிதம் பழமை வாய்ந்த மொழியா? தெரிந்து கொள்வோம்.

 ராவணனை "திராவிடன்" என்று சொல்லி, சிலர் கொண்டாடுகிறார்கள்.

'ராவணன் என்று ஒருவன் இருந்தான்' என்று காட்டியதே, ஆரிய புத்தகம் என்று இவர்களால் சொல்லப்படும் வால்மீகி ராமயணத்தால் தான்.

ஆரிய புத்தகம் தான் திராவிடனை காட்டி கொடுத்தது என்று ஒத்து கொள்கிறார்களா இந்த மடையர்கள்?


ராவணன் "திராவிடன்" என்று சொல்கிறார்கள். 

சிலர் தனக்கே ராவணன் என்று பெயர் வைத்து கொள்கிறார்கள்.

ராவணன் ஒரு ராக்ஷஸன், நர மாமிசம் சாப்பிடுவான் என்கிறது வால்மீகி ராமாயணம். 

அப்படியென்றால்,

திராவிடன் எல்லோரும் ராக்ஷஸன் என்று ஒத்து கொள்வார்களா? இந்த மடையர்கள் !





ராவணன் "திராவிடன்" என்று சொல்கிறார்கள். 

வால்மீகி ராமாயணத்தில், ராவணன் போர்க்களத்தில் கொல்லப்பட்டு கிடக்க, மண்டோதரி அலறி அடித்து கொண்டு "ஆர்ய புத்ரா !.." என்று ராவணனை அழைக்கிறாள்.  "திராவிட புத்ரா" என்று அழைக்கவில்லை. 

आर्यपुत्रेति वादिन्यो हा नाथेति च सर्वशः |

ஆர்ய புத்ர இதி வாதின்யோ

ஹா நாதேதி ச சர்வஸ: |

- வால்மீகி ராமாயணம்


அடிப்படையிலேயே ராவணன் திராவிடன் இல்லை என்று மண்டோதரி கூப்பிடுவதிலேயே தெரிகிறது. 

ராவணன் என்று பெயர் வைத்து கொண்டு அலைபவர்கள்,/ராவணன் யார் என்று கூட தெரியாத மடையர்கள் என்று புரிந்து கொள்வார்களா?


தமிழ் பழமையா? சமஸ்கரிதம் பழமையா?

மற்ற அனைத்து மொழிகளையும் விட. இந்த இரண்டு மொழிகளும் மிகவும் பழமையான மொழி என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இந்த இரண்டில் எது பழமை?

தமிழுக்கு ஆதாரமாக 5 பெரும் காப்பியங்கள் சொல்லப்படுகிறது.

தொல்காப்பியம் 5:

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • வளையாபதி
  • குண்டலகேசி
  • சீவக சிந்தாமணி

தொல்காப்பியத்தில் உள்ள காப்பியம் என்ற சொல்லே "காவியம்" என்ற சமஸ்கரித சொல்லில் இருந்து வந்தது தான்.

சிலப்பதிகாரம் என்ற் பெயரில் உள்ள "அதிகாரம்" என்ற சொல்லே சமஸ்க்ரித சொல் தான்.

வளையாபதி என்பதே சமஸ்க்ரித சொல் தான்.  "பதி" என்ற சமஸ்கரித சொல்லையே அப்படியே பயன்படுத்தி இருக்கிறது.

குண்டலகேசி என்பதே சமஸ்க்ரித சொல் தான்.  கேசி, குண்டலம் என்ற சமஸ்கரித சொல்லை அப்படியே பயன்படுத்தி இருக்கிறது.

சிலப்பதிகாரத்தில் கூறப்படும் கோவலன் என்ற பெயரே "கோபாலன்' என்ற சமஸ்கரித பெயர் தான்.

"கண்ணகி' என்ற சொல்லே கிருஷ்ணன் என்ற பெயர் தான். 

மேலும் சிலப்பதிகாரத்தில் இவர்கள் தங்களை ஆயர் குடி என்று சொல்லிக்கொள்கிறாகள். மேலும் இந்திர விழா கொண்டாடுவதாக சொல்கிறது சிலப்பதிகாரம்.  

இது யாதவர்கள் பழக்கம். 





சீவக சிந்தாமணி என்ற பெயரே சமஸ்கரித சொல் தான். ஜீவகன் என்பதையே சீவகன் என்று தமிழ் சொல்கிறது. சிந்தாமணி என்ற சொல்லே சமஸ்கரித சொல் தான்.

சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று "பரிபாடல்" என்ற பெயரில் உள்ள "பரி' என்ற சொல்லே "பரிஷ்காரம்" என்ற சமஸ்கரித்தில் இருந்து தான் வந்துள்ளது. 


சமஸ்கரிதம் இல்லாமல் தமிழுக்கு ஆதாரமாக  சொல்லப்படும் காப்பியங்கள் கூட இல்லை என்று பார்க்கிறோம்.


தமிழே தெரியாத வடநாட்டு மக்களிடம், "சிந்தாமணி, கோபால், கேசி, குண்டல, இந்திர பூஜா, காவிய" என்று சொன்னால் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

இதுவே போதுமான அடிப்படை ஆதாரம்.

தமிழுக்கும் ஆதாரமாக சமஸ்கரிதம் உள்ளது என்று தமிழ் காப்பியங்களே காட்டி விடுகிறது.

சமஸ்கரித மொழியில் எழுதப்பட்ட ராமாயணம் தான், ராவணனை காட்டுகிறது

இன்று வரை தமிழர்கள் பேச்சில், பெயரில் தமிழோடு கலந்து இருப்பது சமஸ்கரித மொழி மட்டுமே.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று தமிழனாக சொல்லிக்கொள்ள பெருமை பட்டாலும், 

திராவிட என்ற சொல்லிலும் சமஸ்க்ரிதம், நாத்தீகம் என்ற சொல்லிலும் சமஸ்க்ரிதம், பிரார்த்தனை, சூரியன், நிதி என்று எங்கும்  சமஸ்க்ரிதம், எதிலும் சமஸ்க்ரிதமே இருக்கிறது என்று தெரிகிறது. 


தமிழுக்கும் ஆதாரமாக இருக்கும் சமஸ்க்ரிதம் பழமையான மொழி என்று தெரிகிறது.

தமிழ் தமிழ் என்று நெஞ்சில் அடித்து கொண்டாலும், தன் பெயரையே கருணா, நிதி, உதய, சூரிய, கிரி, ராஜா என்று தான் வைத்து கொண்டு அலைய வேண்டும் என்பதிலேயே, சமஸ்கரிதம் தமிழுக்கும் மேல் பழமையானது என்று தெரிகிறது.


வாழ்க தமிழ்

வாழ்க தமிழுக்கும் ஆதியான சமஸ்கரிதம்.


ஏன் தமிழ் மொழி தேசிய மொழியாக ஆகவே முடியாது? காரணங்கள் உள்ளது. தெரிந்து கொள்ளே இங்கே படிக்கவும்.


Tuesday, 12 October 2021

ராமபிரான் சொன்ன சொல் பொய் போனதா? தெரிந்து கொள்வோம் --- வால்மீகி ராமாயணம்

சீதையை ராவணன் கடத்தி சென்று விட்டான். 

ராமபிரான், 

மரமே சீதையை கண்டாயா?

நதியே சீதையை கண்டாயா?

என்று கதறினார்..


உண்மையில் மரத்துக்கு அதிபதியான , நதிக்கு அதிபதியான தேவதைகளை தான் ராமபிரான் கூப்பிட்டார்.

தேவதைகள், ராமபிரானுக்கு பதில் சொல்லவில்லை.


"தர்மத்தில் இருப்பவனை தர்மம் காக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது. தர்மத்தில் இருக்கும் எனக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்து இருக்கும் போது, தர்மத்தை காக்க வேண்டிய தேவதைகள் காப்பற்றாமல்,  அமைதியாக இருக்கிறார்களே!" என்று புலம்பினார்.


"தான் மனிதன் என்று நினைத்துத்தானே, தேவர்கள் பதில் சொல்லாமல் அலட்சியம் செய்கிறார்கள்" என்று கோபப்பட்டார்.

உடனே தன்னுடைய வில்லில் அம்பை பூட்டி, 

"இந்த உலகம் முழுவதையும் நான் தலைகீழாக மாற்றி விடுகிறேன்." என்று  ராமபிரான் சொல்ல, லக்ஷ்மணன் காலில் விழுந்து நமஸ்கரித்து சமாதானம் செய்து, மேலும் தேடி பார்க்கலாம் என்று அழைத்து கொண்டு சென்றார்.





स देव गन्धर्व मनुष्य पन्नगं 

जगत् सशैलम् परिवर्तयामि अहम्।।

ஸ தேவ கந்தர்வ மனுஷ்ய பன்னகம்

ஜகத் ஸ சைலம் பரிவர்தயாமி அஹம் ||

வால்மீகி ராமாயணம்


ராமபிரானுக்கு "ஒரு சொல். ஒரு வில்" என்று ஒரு பெருமை உண்டு.


"இந்த உலகை மாற்றி காட்டுகிறேன்" என்று சொல்லிவிட்டார்.

லக்ஷ்மணன் சமாதானம் செய்து விட்டார்.

இருந்தாலும், அவர் சொல் பொய் போனதாக ஆகி விட்டதா?


ராமபிரான் சொல் ஒரு போதும் பொய் போனதில்லை.


சீதாதேவியை தேடி வந்த ராமபிரான், ஜடாயு சீதாதேவிக்காக உயிரை தியாகம் செய்து விட்டார், என்றதும், 

"ஞானம் அடைந்தால் மட்டுமே மோக்ஷம். பறவை விலங்குகளை புதைப்பது தான் வழக்கம். தகனம் போன்றவை கிடையாது. போரிட்டு மரணம் அடைந்தால் வீர சுவர்க்கமே கிடைக்கும் மோக்ஷம் கிடைக்காது" என்ற கால சட்டத்தையே மாற்றி, 

தன் கையாலேயே ஜடாயுவுக்கு தகனம் செய்து, 

"என்னுடைய பூரண அனுமதியோடு நீ உத்தமமான லோகங்களுக்கு செல்" (मया त्वं समनुज्ञातो गच्छ लोकानन् उत्तमान्

என்று க்ரம முக்தி என்ற முறைப்படி மோக்ஷத்திற்கு செல்ல ஒரு சாதாரண பறவைக்கு, கால சட்டத்தையே மாற்றி, தன் விருப்பத்தால் கொடுத்து விட்டார். 


தான் சொன்ன சொல்லை, ஜடாயு மூலமாக நிரூபித்து காட்டினார் ராமபிரான். 

தர்மத்தில் இருப்பவனை தர்மம் காக்குமா? தெரிந்து கொள்வோம். ராமபிரானே இந்த கேள்வியை நமக்காக கேட்டு, தன் சரித்திரத்தில் பதிலும் காட்டுகிறார்.

தர்மத்தில் இருப்பவனை தர்மம் காக்குமா? 

ராமபிரானே இந்த கேள்வியை நமக்காக கேட்டு, தன் சரித்திரத்தில் பதிலும் காட்டுகிறார். 

சீதையை ராவணன் கடத்தி சென்று விட்டான். 


ராமபிரான், 

மரமே சீதையை கண்டாயா?

நதியே சீதையை கண்டாயா?

என்று கதறினார்..


உண்மையில் மரத்துக்கு அதிபதியான , நதிக்கு அதிபதியான தேவதைகளை தான் ராமபிரான் கூப்பிட்டார்.


தேவதைகள், ராமபிரானுக்கு பதில் சொல்லவில்லை.


"தர்மத்தில் இருப்பவனை தர்மம் காக்கும்" என்று சாஸ்திரம் சொல்கிறது.


"தர்மத்தில் இருக்கும் எனக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்து இருக்கும் போது, தர்மத்தை காக்க வேண்டிய தேவதைகள் காப்பாற்றாமல்,  அமைதியாக இருக்கிறார்களே!" என்று நம்மை போலவே புலம்புவது போல காட்டிக்கொண்டார்.

"தான் மனிதன் என்று நினைத்துத்தானே, தேவர்கள் பதில் சொல்லாமல் அலட்சியம் செய்கிறார்கள்" என்று கோபப்பட்டார்.





உடனே தன்னுடைய வில்லில் அம்பை பூட்டி, 

"இந்த உலகம் முழுவதையும் நான் தலைகீழாக மாற்றி காட்டுகிறேன் பார்!" என்று  ராமபிரான் சொல்ல, லக்ஷ்மணன் காலில் விழுந்து நமஸ்கரித்து சமாதானம் செய்து, மேலும் தேடி பார்க்கலாம் என்று அழைத்து கொண்டு சென்றார்.


स देव गन्धर्व मनुष्य पन्नगं 

जगत् सशैलम् परिवर्तयामि अहम्।।

ஸ தேவ கந்தர்வ மனுஷ்ய பன்னகம்

ஜகத் ஸ சைலம் பரிவர்தயாமி அஹம் ||

- வால்மீகி ராமாயணம் 


தர்மத்துக்கு கட்டுப்பட்டு தந்தை சொல் கேட்டார், 

தர்மத்துக்கு கட்டுப்பட்டு கிடைத்த ராஜ்யத்தை விட்டார்,

தர்மத்துக்கு கட்டுப்பட்டு மரவுரி அணிந்தார்,

தர்மத்துக்கு கட்டுப்பட்டு வனவாசம் 14 வருடம் சென்றார்,

தர்மத்துக்கு கட்டுப்பட்டு கிழங்கு, பழங்களை மட்டுமே உண்டார், 

இந்த கஷ்டங்களுக்கு மேல், ராமபிரானுக்கு, பெரும் சோகமாக தன் மனைவி சீதாதேவியையும் இழக்க நேரிட்டது.


"தர்மத்தில் இருப்பவனை தர்மமே காக்கும்" என்று சாஸ்திரம் சொல்கிறது.


ராமபிரான் கேட்டும் கூட தர்ம தேவதைகள் பதில் சொல்லவில்லையே? 

தர்மம் உண்மையில் காக்குமா? என்ற சந்தேகம் நமக்கு எழலாம்.


தர்மத்தில் இருப்பவர்களை நிச்சயமாக தர்மம் காக்கும்.  


ராமபிரான் "பகவான்" என்ற போதிலும், அவரால் நியமிக்கப்பட்ட தேவர்கள் (பிரம்மா உட்பட), உதவி கேட்டால், உதவி செய்வார்களே தவிர, 'நான் தான் செய்தேன்' என்று சொல்லிக்கொண்டு நேரே வர ஆசைப்பட மாட்டார்கள். 


இங்கு ராமபிரான் "தர்மத்தில் இருக்கிறேன். எனக்கு ஒரு இப்படி கஷ்டமா?" என்பது போல கேட்டார்.

தேவர்கள் நேரிடையாக பதில் சொல்லவில்லை.

ஆனால், அவருக்கு சேவை செய்ய தன் அம்சமாக ஏற்கனவே சுக்ரீவன் (சூரிய தேவன்), ஹனுமான் (வாயு தேவன்), மற்றும் கோடிக்கணக்கான வானர ரூபத்தில் முப்பது முக்கோடி தேவர்களும்  சீதையை மீட்க வந்து விட்டனர்.


சீதாதேவியை மீட்டு விட்டார் ராமபிரான்.

தர்மத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டம் வந்தாலும், சிறிது பொறுமையோடு இருந்தால், தர்மமே நம்மை காப்பதை உணர முடியும்.


இதை ராமபிரான், மனிதனாக இருந்து நமக்கு காட்டினார்.

சத்சங்கத்தில் என்ன கிடைக்கும்? சத்சங்கத்தின் மகிமைகள் என்ன? ஏன் சத்சங்கம் வேண்டும்? சத்சங்கத்தினால் என்ன பயன்?

சத்சங்கத்தில் என்ன கிடைக்கும்? சத்சங்கத்தின் மகிமைகள் என்ன? ஏன் சத்சங்கம் வேண்டும்? சத்சங்கத்தினால் என்ன பயன்?

1. ப்ரதமம் மஹதாம் சேவாம் 

சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். சாதுக்கள் வரும் வழியில் முள் இருக்கிறதே! அவர்கள் அமரும் இடம் சுத்தமாக இல்லையே! கொஞ்சம் சுத்தம் செய்வோமே, என்ற சேவை புத்தி ஏற்படும்.


2. தத் தயா பாத்ரதா தத:

நமக்காக இந்த இடத்தை சுத்தம் செய்தது யார்? யாரப்பா நீ? என்று அவர்கள் விசாரித்து கேட்க, சாதுக்களின் கருணைக்கு  பாத்திரமாகும் பாக்கியம் கிடைக்கும்.

3. தேஷாம் கைங்கர்ய லாபஸ்ச

அந்த சாதுக்களுக்கு நேரிடையாக அவர்களே சொல்லி, கைங்கர்யம் செய்யும் பாக்கியம் கிடைக்கும்


4. தத் உச்சிஷ்டா அன்ன போஜனம்

சாதுக்கள் சாப்பிட்டால் நமக்கு கொடுக்காமல் இருப்பார்களா? பழம் சாப்பிடு என்று தன் கையால் கொடுப்பார்கள். அவர்கள் கொடுக்கும் பிரசாதத்தை எடுத்துக்கொள்ள பாக்கியம் கிடைக்கும்.





5. தத் தர்மே அபிருசி: சாத:

உச்சிஷ்ட பிரசாதத்தை எடுத்துக்கொள்ள, எடுத்துக்கொள்ள, சாதுக்கள் அனுசரிக்கும் தர்மத்தில் நாமும் இருக்க வேண்டும் என்ற ருசி (ஆசை) ஏற்படும். 


6. தத்வ ஞானம்

தர்மத்தை நாமும் அனுசரிக்க அனுசரிக்க, உலக வாழ்க்கை மாயை, தற்காலிகம் தான் என்ற தத்துவ ஞானம் ஏற்படும்.

7. த்ருடா ரதி:

இந்த அனுபவத்தை கொடுத்த குருநாதன் மீது அசைக்க முடியாத அன்பு ஏற்படும்.


8. சாரித்ர ஸ்ரவணம் ஹரே:

அவர் சொல்லும் பகவத் கதைகளை கேட்க ஆசை ஏற்பட்டு, பெரும் சுகத்தை கிடைக்க செய்யும்.


9. பக்தி பாவோதய: சாத  

பகவானின் மீது பக்தி பாவம் உண்டாகும். அதற்கான சாதனை செய்ய தூண்டும்.


10. சம்சார தாப: நிஷ்சே

பகவானும், குருநாதருமே நெஞ்சில் எப்பொழுதும் இருக்க, சம்சார உலகில் ஏற்படும் தாபங்கள் அழிந்தே போய் விடும்.


11. பரமா சாந்தி: அப்யதே 

அழியவே அழியாத பரம சாந்தி நமக்கு வந்து விடும்.

சத்சங்காத் லபதே நூனம்

சத்சங்கத்தில் ஒருவன் சேருவதால், இந்த 11 பலன்கள் கிடைக்கிறது. 


காட்டுவாசியாக இருந்த சபரி, மதங்க முனிவரின் ஆசிரமத்தை கண்டாள்.


இந்த 11 பலன்களையும் பெற்றாள். 

கடைசியில்  குருவின் அணுகிரஹத்தால், ராமபிரானின் தரிசனமும் பெற்றாள்.