Followers

Search Here...

Thursday, 13 April 2017

தாலி கட்டுவதை விட, பாணிக்ரஹனம் தான் மிக முக்கியம் என்று சொல்லப்படுகிறது. தெரிந்து கொள்வோம்.- ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை, ஆசைக்கு ஒரு பெண்

இந்த வைதீக திருமணத்தில், பாணிக்ரஹனம் செய்து கொள்ளும் மணமகன், மணமகளை பார்த்து "ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தையும், ஆசைக்கு ஒரு பெண் குழந்தையும் நமக்கு கிடைக்கட்டும்" என்ற அர்த்தத்தில், மணப்பெண்ணின் 5 விரல்களை சேர்த்து பிடித்து மந்திரம் சொல்லுகிறான்.


ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை என்று கேட்பதற்கு உண்மையான அர்த்தம் :

இது முதலில் ஆஸ்தி அல்ல, அஸ்தி என்று நாம் அறிய வேண்டும்.
இங்கு, ஆண் மணப்பெண்ணின் 5 விரல்களை பிடித்து "என்னுடைய வம்ச பரம்பரை, அழிந்து விடாமல் "அஸ்தி" என்று சொல்லும்படியாக தொடர்ந்து இருக்க வேண்டும். அதற்கு நமக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும்" என்கிறான். கட்டை விரல் ஆண் என்பதை குறிக்கும்.

ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று சொல்வது கொஞ்சுவதற்காக அல்ல. குழந்தையாக இருக்கும் போது தான் கொஞ்சுவதெல்லாம்.  பையன் வளர்ந்த பின்னும் கொஞ்சுவதற்காக ஆண் குழந்தை வேண்டும் என்று இங்கு  கேட்கவில்லை.

பிற் காலத்தில் அவன் சம்பாதித்து பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் ஆண் குழந்தை வேண்டும் என்று கேட்கவில்லை.

என்னுடைய வம்சத்தில் என் வரை காத்து வந்த பழக்கவழக்கம், கலாச்சாரம், தெய்வ பக்தி, ஒரு ஆண் குழந்தை மூலம் மேலும் வளரட்டும் என்பதற்காகவே இப்படி ஒரு பிரார்த்தனை. சுயநலத்திற்காக அல்ல.


ஆசைக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று கேட்பதற்கு உண்மையான அர்த்தம் :

பெண் குழந்தை பிறந்தால் நம்மிடம் ஆசையாய் இருக்கும் என்பதற்காகவா? இல்லை.

நாம் (ஆண்) கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்த போது, யாரோ ஒருவர் (மாமனார்) தன் பெண் குழந்தையை குழந்தை பருவத்தில் இருந்து ஜாக்கிரதையாக வளர்த்து, வேறு கோத்திரத்தை சேர்ந்த நமக்கு, நம் குடும்பம் வ்ருத்தியாகட்டும் என்று தன் பணத்தையும் செலவழித்து, பெண்ணையும் தானமாக கொடுத்தாரே !!.
நாம் சுகமாக இருப்பதற்கும், நம் குடும்பம், நம் தர்மம் வ்ருத்தியாவதற்கும் வளர்த்த பெண்ணை அப்படியே கொடுத்து விட்டாரே !! இத்தனை வருடம் தன் பெண்ணை வளர்த்தது, கடைசி காலம் வரை இவள் என்னை காப்பாள் என்று இல்லாமல், அவளையும், அவள் திறன், சம்பாத்தியம் அனைத்தையும் நான் அனுபவிக்கலாம் என்று தானம் செய்து விட்டாரே !!  எத்தனை பெரிய மனிதன் அவர் !!
இப்படி ஒருவர் நமக்கு கொடுத்ததால் தானே நமக்கு குடும்பம் ஏற்படுகிறது.

எங்கிருந்தோ வந்த அவள், நமக்காக வாழ்நாள் முழுதும் இருந்து, நம் குடும்பத்தை பார்த்து கொள்வாள். இதை நினைக்கும் போது, நாமும் இதே போன்று ஒரு பெண் குழந்தை பெற்று, இன்னொரு சத் குடும்ப பையனுக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் என்று ஆண், மணப்பெண்ணின் 5 விரல்களை பிடித்து, "அஸ்திக்கு ஒரு ஆணும், ஆசைக்கு பெண்ணும்" நம் இல்லற வாழ்வில் பெற்றுக் கொள்வோம் என்கிறான்.


இந்த பாணிக்ரஹன நிகழ்ச்சி, அந்த மணபெண்ணுக்கு, அந்த மணமகனிடம் ஒரு நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. இவனிடம் ஏற்பட்ட பெண் குழந்தை ஆசை, தன் தந்தை செய்த "கன்னிகாதானம்" என்ற உயர்ந்த தானத்தை கண்டு தான் என்று அறிந்து கொள்கிறாள். தன் தந்தையின் இந்த "கன்னிகாதானம்" இவன் மனதிலும் தானம் செய்யும் ஆசையை உருவாக்கி உள்ளது. அதனால் தான், தனக்கும் ஒரு பெண் குழந்தை கேட்கிறான் என்று உணர்கிறாள்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka

தாலி கட்டுவது எதற்கு? தாலி 3 காரணங்களுக்காக ஆண், பெண்ணுக்கு கட்டுகிறான். தெரிந்து கொள்வோமே

தாலி கட்டுவது மட்டுமே திருமணம் அல்ல.
தாலி கட்டுவது, இந்த இருவரும் கணவன் மனைவி ஆவதற்கு முன் நடக்கும் ஒரு வைதீக சடங்கு.


இதையே திருமணம் முடிந்தது, கணவன் மனைவி ஆகிவிட்டனர் என்று நினைத்தால், அது தவறு. இவர்கள் இன்னும் கணவன் மனைவி ஆகவில்லை.

இதற்கு பின் இவர்கள் இருவரும், அக்னியை வலம் வந்து, சப்தபதி என்ற சடங்கு செய்த பின்பு தான், கணவன் மனைவி ஆகின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சரி, தாலி கட்டுவது எதற்கு ?
கணவன், மனைவி ஆவதற்கு முன், கணவன் இவளிடம் செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்தம் போன்றது (Setting up Expectation).

திருமணத்தில் திருமாங்கல்யம் (தாலி) கட்டுகிறான் மணமகன். தாலி 3 காரணங்களுக்காக ஆண் பெண்ணுக்கு கட்டுகிறான்.

1. மாங்கல்யம் என்பது பெண்களின் தற்காப்புக்காக ஏற்பட்டது. அவள் மணமானவள் என்பதைக் மற்றவர்களுக்கு காட்டும் அடையாளம். இந்த அடையாளம், இவளை தீய குணம் உள்ளவர்களிடம் இருந்து காக்கும். பலர் தாலி அணிந்த பெண் என்று பார்த்தவுடனேயே மரியாதையாய் பழகுவர்.
ஒரு ஆணின் வெளி தோற்றத்தை வைத்து எந்த பெண்ணும் ஆசைப்படுவதில்லை, அலைவதும் இல்லை.
பெண் இவன் நல்லவன், ஆறுதல் அளிப்பவன், காப்பாற்றும் திறன் உள்ளவன் என்று பழகும் போது அறிந்து கொண்டு, அதற்கு பின் அவன் பின்னே அலைவாள்.
பெண் மற்ற ஆணுடன் பழக பழக தவறான வழிக்கு போக வாய்ப்பு உள்ளது. அதனால் பெண்ணுக்கு ஒரு ஆணை பார்த்ததினால் மட்டுமே தீய எண்ணம் தோன்றாது. ஆனால், ஆண் என்றுமே நம்பத்தகுந்தவன் அல்ல.
ஆண் வண்டு போன்றவன், பெண் பூ போன்றவள் என்று சொல்வது இதனால் தான்.


ஒரு பெண்ணை பார்த்தே இவன் சபல புத்தி கொள்வான். இதனால் தான், பெண் தாலி அணிவது அவசியம். விவேகம் உள்ள ஆண், சபல புத்தி இருந்தாலும், தாலி கட்டிய ஒரு பெண்ணை நெருங்க தயங்குவான்.

தியானம், யோகம் எல்லாம் ஆணுக்கு விதிக்கப்பட்டது போல, பெண்ணுக்கு விதிக்கப்படவில்லை. காரணம், பெண்ணுக்கு அது தேவை இல்லை.

பெண் எப்பொழுது வேறு ஆணிடம் பழகுகிறாளோ, அப்பொழுது தான், இவள் மனம் கெட வாய்ப்பு உள்ளது, ஆனால், ஒரு ஆண் பழகாமல் இருந்தாலும், பெண் உருவமே சபலத்தை கொடுத்து இவன் மனம் கெட வாய்ப்பு உள்ளது. இதை எல்லாம் அறிந்து தான், தாலி என்பது பெண்ணுக்கு மிக மிக அவசியம் என்று விதித்தனர்.

2. தாலியை அடையாளமாக கட்டும் மணமகன், பெண்ணை பார்த்து சொல்கிறான் "இது மங்களசூத்திரம். நான் நீண்டகாலம் வாழவேண்டும் என்று இறைவனை வேண்டி உனக்கு அணிவிப்பது. சௌபாக்கியவதியே! நீ நூறாண்டுகள் சுமங்கலியாக, சுகமாக வாழ்ந்திருப்பாயாக!". இப்படி சொல்லும் ஆண், "நீ சுகமாக வாழ நான் எப்பொழுதும் இருப்பேன். நான் இறந்து, உன்னை தனியாக விட்டு விடாமல் இருக்க எனக்கும் நீண்ட ஆயுள் தேவை. அதனால், நான் 100 ஆண்டுகள் உன்னோடு வாழ, நீ இறைவனிடம் வேண்டி பிரசாதமாக தரும் இந்த தாலியை அணிந்து கொள்" என்று ஆசையாக இவளை கடைசி வரை காக்கும் எண்ணத்துடன் அணிவிக்கிறான்.
பாணிக்ரஹனம் செய்யும் போது, உன் தந்தை மிகவும் உயர்ந்தவர் என்று சொல்லும் போது, மணப்பெண்ணுக்கு இவனிடம் அன்பு உண்டாகிறது.
மாங்கல்யம் கட்டும் போது, தனக்கு நீண்ட ஆயுள் கேட்பது, உன்னை காப்பதற்கே என்று சொல்லும் இவனிடம், மணப்பெண்ணுக்கு மேலும் அன்பு உண்டாகிறது.
இந்த அன்பு மேலும் உறுதியாக சப்தபதி என்ற சடங்கில் இருவரும் பிரிக்க முடியாத கணவன் மனைவி ஆகின்றனர்.

3. தாலி கட்டும் ஆண் வெறுமனே கட்டுவதில்லை. அவள் அணிந்து இருக்கும் தாலியில் மூன்று முடிச்சு போடுவான். தாலி எப்பொழுதும் அணிந்து இருக்கும் பெண், இந்த மூன்று முடிச்சின் காரணத்தை தினமும் ஸ்மரிக்க (ஞாபகபடுத்தக் கொள்ள) வேண்டும் என்பதற்காக தான்.

- சௌபாக்கியவதியே ! நீ எந்த செயலை செய்தாலும், முக்காலமும் உணர்ந்து இல்லற தர்மத்தைப் பேணவும்.
நீ செய்யும் செயல், பிற்காலத்தில் ஏன் இப்படி அதர்மம் செய்தோம் என்று வருந்தும் படியாக இருக்க கூடாது.
நீ செய்யும் செயல், நிகழ் காலத்தில் அதர்மம் நடப்பதற்கும் காரணம் ஆகி விட கூடாது.
நீ செய்யும் செயல், இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பழக்கம், தர்மத்திற்கு எதிராகவும் இருந்து விட கூடாது.
சௌபாக்கியவதியே ! ஆதலால், நீ எந்த செயலை செய்தாலும், முக்காலமும் உணர்ந்து, இல்லற தர்மத்தைப் நீ பேணவும்.

- மும்மூர்த்திகளுக்கு இந்த மூன்று முடிச்சுகளை அர்ப்பணிப்பது தெய்விகமான அம்சம். சௌபாக்கியவதியே ! கண்ணுக்கு தெரியாத, வரப்போகும் எந்த ஒரு ஆபத்தும் உன்னை நெருங்கி விடாமல் இருக்க, அந்த ப்ரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகள் காக்கட்டும். அதற்காகவே மூன்று முடிச்சு. 3 தெய்வங்கள் உனக்கு துணை என்று தினமும் நினைத்து, தைரியமாக குடும்பத்தை நடத்து.

- சௌபாக்கியவதியே, உலகியல் ரீதியாக தெய்வம், பெற்றோர், கணவன் மூவரையும் நீ மதிக்க வேண்டும். அதற்காவும் மூன்று முடிச்சு.

- சௌபாக்கியவதியே ! நீ மனம் - வாக்கு - உடல் இவற்றின் புனிதத்தோடு திருமண பந்தத்தைக் கடைசி வரை காக்கவும். இந்த மூன்று முடிச்சு உனக்கு இதையும் ஞாபகப்படுத்தட்டும். எக்காலத்திலும் மனத்தாலோ, வாக்காலோ, உடலாலோ உன் புனிதத்தன்மையை கெடுத்துக் கொள்ளாமல், திருமண பந்தத்தைக் நீ காக்கவும்.

காரணம் இல்லாமல் பாணிக்ரஹனம் செய்ய வில்லை, தாலி கட்டவில்லை, சப்தபதி செய்வதில்லை.
ஹிந்துவாய் இருந்தால், பல ஆச்சர்ய விஷயங்கள் நமக்கு தெரிய வரும். மேலும், நாம் ஹிந்து குடும்பத்தில் பிறந்து இருக்கிறோம் என்ற சந்தோஷமும் நமக்கு உண்டாகும்.


ஏன் எதற்கு என்ற நியாயமான கேள்விகளுக்கு பதில் சரியான பெரியோர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டாலே, பல விடைகள் கிடைக்கும். ஹிந்துவாய் பிறந்ததற்கே நமக்கு பெருமிதம் அதிகரிக்கும்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 


ஸனாதன தர்மம், யாரையும் அயோக்கியன் என்று சொல்வதில்லை. ஆச்சர்யமான பரந்த எண்ணம் கொண்டது நம் தர்மம்.

நம் ஸனாதன தர்மம், யாரையும் "அயோக்கியன்" என்று சொல்வதில்லை.
உண்மையில் யாருமே இந்த உலகத்தில் அயோக்கியன் இல்லை என்று கூட சொல்கிறது.


இந்த ஸ்லோகம் படிக்கும் போதே, எப்படி மனிதனை உயர்த்தி சொல்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

अयोग्यः पुरुषो नास्ति योजकस्तत्र दुर्लभः॥

அயோக்கிய: புருஷோ நாஸ்தி |
யோஜக தத்ர துர்லப: ||
யாருமே இந்த உலகத்தில் அயோக்கியன் இல்லை. 
அந்த அயோக்கியனிடமும் ஒளிந்து உள்ள  ஈஸ்வரனை, நல்ல குணத்தை, வெளியே கொண்டு வர அவனுக்கு ஒரு குரு இல்லாததே இவன் அயோக்கியன் போல தென்படுவதற்கு காரணம் என்று சொல்கிறது.

தன்னிடம் ஒளிந்து உள்ள நல்ல எண்ணங்களை வெளிப்படுத்த உதவி செய்யும், ஞானிகள் (குரு) கிடைப்பதே அரிது என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது.

அப்படிப்பட்ட ஞானத்தில் உயர்ந்த ஒரு குரு, ஒரு அயோக்கியனை பார்க்கும் போது, அவனும் தான் புண்ணிய ஆத்மாவே என்று உணர்வான், திருந்துவான்.

அயோக்கியனுக்கு, அவனிடம் உள்ள நல்லதை எடுத்து காட்டும், உண்மையான குரு கிடைப்பதே அரிது.
வேடுவனாக கொலை கொள்ளை என்று வாழ்ந்த ருக்ஷன், நாரதரை தரிசித்த பின், வால்மீகி ரிஷி ஆனார் என்று பார்க்கிறோம்.

ஸனாதன தர்மம், யாரையும் அயோக்கியன் என்று சொல்வதில்லை. ஆச்சர்யமான பரந்த எண்ணம் கொண்டது நம் தர்மம்.


There no person who is worthless, but,
Rare indeed is the nourisher of talents.

Explained by சாரதா பீட புது ஆச்சர்யாள்.
sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka

சத்தியம் பேசுபவர்கள் வாழ்வில் நினைத்தது எல்லாம் நடக்கும். சத்யஸ்ய பரம் நிதானம் - முண்டகோ உபநிஷத்

ஒரு ஸமயம், சோழ அரசன், ராமானுஜ வழியில் வந்த சிஷ்யர்களிடம் தனக்குள் இருந்த சந்தேகத்தை ஒரு கேள்வியாக கேட்டார்.
பொதுவாக,
மனிதன் "தன்னை தெய்வம்" என்று சொல்லிக்கொள்ள பெருமைபடுவார்கள்.


பரந்தாமன் ஸ்ரீநாராயணன், "ஸ்ரீராமராக" அவதாரம் செய்தும், பகவான் "தன்னை மனிதன்" என்று சொல்லிக்கொண்டார்.

தன் அவதாரம் முழுவதும் மனிதனை போன்றே இருந்து, தன் தெய்வ ஆச்சர்யங்களை காட்டாமல் இருந்தார்.
குணத்தினால் மட்டுமே தெய்வ குணங்கள் தெரிந்தன.

இப்படி தன்னை மனிதனை போன்றே காட்டிக்கொண்டு, மனிதன் எப்படி தர்மபடி வாழ வேண்டும்? என்று நமக்கு காட்டினார்.

இப்படி இருக்க, ஜடாயு என்ற பறவைக்கு ப்ரம்ம ஸம்ஸ்காரம் செய்து, தன் ஆணை என்று சொல்லி "பரம் என்ற வைகுண்டம் செல்" என்று அனுப்பி வைத்தார் ஸ்ரீராமர் என்று பார்க்கிறோம்.


இங்கு இவர் "தன்னை நாராயணன் என்று காட்டுகிறார்".

இருந்தாலும், தன்னை மனிதன் என்று சொல்லிக்கொண்டு எந்த ஆச்சர்யங்களும் காட்டாத ஸ்ரீ ராமர் இந்த நிகழ்விலும் மனிதனுக்கு சொல்லும் தர்மம் என்ன ?

சிறுது நேரம், ராமானுஜர் இதற்கு என்ன சொல்லி இருக்கிறார்? என்று ஆலோசனை செய்த சிஷ்யர்கள் இவ்வாறு பதில் கூறினர்.


"சத்யஸ்ய பரம் நிதானம்" என்று முண்டகோ உபநிஷத் சொல்கிறது.
இதற்கு பொருள், "சத்தியத்தில் இருப்பவனுக்கு, பரம் என்ற வைகுண்டமும் கிடைக்கிறது"

ஸ்ரீராமர் சத்தியசீலன். சத்தியத்தை என்றும் மீறாதவர்.
தன் சத்தியத்தை கொண்டே, உபநிஷத் வாக்கின் படி, ஜடாயு என்ற பறவைக்கு பரம் என்ற வைகுண்டம் கிடைக்க செய்தார்.

இதே உபநிஷத் "சத்யம் ஏவ ஜயதே" (வாய்மையே வெல்லும்) என்றும் சொல்கிறது.
ஸ்ரீ ராமர் சத்தியத்தின் பெருமையை தன் சரித்திரத்தில் காட்டுகிறார்.

நாமும் ஸ்ரீ ராமரை போன்று சத்தியத்தில் முழுவதுமாக நிற்க முயற்சி செய்ய வேண்டும்.
நாம் முடிந்தவரை சத்தியத்தில் இருக்கவாவது முயற்சி செய்ய வேண்டும்.
முடிந்த வரை பொய் பேசாமலாவது இருக்க வேண்டும்.
காரணமே இல்லாமல், விளையாட்டாக கூட பொய் பேச கூடாது.
பொய் பேச, பொய் பேச நம் புண்ணியங்கள் பொசுங்கும்.
சத்தியம் பேச,  சத்தியம் பேச புண்ணியங்கள் சேர்ந்து வாழ்வில் நினைத்தது எல்லாம் நடக்கும், வைகுண்டமும் வசப்படும்
என்று ஸ்ரீ ராமரின் வாக்கில் இருந்து அறிய வேண்டும்.

மனிதன் சத்தியத்தில் இருக்க ஆசை பட வேண்டும்.
புண்ணியத்தை சேர்க்க வேண்டும்.
இதையே ஸ்ரீ ராமர் காட்டுகிறார்.
இவ்வாறு சொன்ன பதிலை கேட்டு ஆனந்தப்பட்டார் அரசன்.

சத்யஸ்ய பரமம் நிதானம்

Narrated by DA Joseph.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 

"தீர்க்கதரிசி" ஆபிரகாமின் வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவம். Genesis

ஆபிரகாம் தன்னிடம் எத்தனை விசுவாசமாக இருக்கிறார்?
என்று பார்க்க, ஒரு சமயம், "கடவுள்" அவர் மகனையே உயிர் பலி கொடுக்க கேட்டார்.

கடவுளின் சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்காமல், தன் மகன் தலையை வெட்ட துணிந்ததால், கடவுளின் விசுவாசத்துக்கு பாத்திரமானார் ஆபிரகாம்.




ஆபிரகாம் மகனுக்கு பதில், ஒரு ஆடு பலியாகுமாறு கடவுள் செய்தார். இவர் "தீர்க்கதரிசி" என்று கடவுளால் போற்றப்பட்டார்.

இந்த தியாகத்தை (குர்பானி) நினைவு கூறும் விதமாக இந்த ஒரு நாளில் மட்டும், வருடா வருடம் உலகத்தில், சுமார் 20 மில்லியன் ஆடு, மாடுகள், ஒட்டகம் கொல்லப்பட்டு,  கொண்டாடப்படுவதே பக்ர் ஈத்.
இது தியாகத்தின் பண்டிகை என்பது யாவரும் அறிந்ததே !!

ஆப்ராம் என்ற ஆபிரகாம், யூத (Judaism) மத போதகர் என்பதை நாம் அறிந்ததே !!
இவர் ஒரு தீர்க்கதரிசி (Prophet). 

இவர் ஊர் (Ur) என்னும் ஊரில் பிறந்தார்.
இது இப்போது ஈராக் தேசத்தில், அரேபியாவில் உள்ளது.
ஏசுவுக்கு, நபிக்கு முன் 2000 வருடம் முன் இருந்தவர் ஆப்ராம்.

யூத மதத்திற்கு பின்பு பிரிந்து, உருவான மதம் கிறிஸ்துவம்.
அதன் பின் உருவான மதம், இஸ்லாம். இதுவும் நாம் அறிந்ததே !!

ஆதலால், 'ஆபிரகாம்' இந்த மூன்று உருவான மதங்களிலும் போற்றப்படுகிறார். இவர் ஒரு தீர்க்கதரிசி.

ஆபிரகாமின் தந்தை பெயர் "தேராகு" (Terah).

"தேராகு"வுக்கு (Terah) மூன்று மகன்கள் :
1. "ஆபிரகாம்" (Abram)
2. "ஆரான்" (Haran) மற்றும்
3. "நாகோர்" (Nahor).

"தேராகு"வுக்கு (Terah) மற்றொரு மனைவி மூலம் ஒரு மகள் :
4. "சாரா" (Sarah or Sarai)

"ஆரான்" (Haran), தன் தந்தை "தேராகு"(Terah) இருக்கும் போதே, ஊர் (Ur), ஈராக்கில் இறந்து விட்டான். (genesis 11:28).

"ஆரான்" (Haran) இறக்கும் போது, இவனுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர்.

"ஆரான்"னின் (Haran) 2 மகள்கள்:
1. "மில்கா" (Milcah)
2. "இஸ்கா" (Iscah)

நாகோர், தன் சகோதரன் 'ஆரான்" மகள் "மில்கா"வை மணந்தான். (genesis 11:29).
மில்கா தன் சித்தப்பாவை ("நாகோர்" Nahor) மணந்தாள்.

"தீர்க்கதரிசி" ஆபிரகாம் தன் தந்தை "தேராகு"க்கும் (Terah), இன்னொரு தாய்க்கு பிறந்த "சாரா"வை மணந்தார்.

"தீர்க்கதரிசி" ஆபிரகாம் வயதோடு ஒப்பிடும் போது, "சாரா" வயதில் மிக சிறியவள். மிக அழகானாவள்.

"தீர்க்கதரிசி" ஆபிரகாமின் வாழ்வில் நடந்த மற்றொரு சுவாரஸ்ய சம்பவம்.
ஒரு சமயம்,
ஆபிரகாம், சாராவுடன் (சகோதரி முறை+ மனைவி முறை) கடவுளின் ஆணைப்படி, தங்கள் நாட்டில் இருந்து கிளம்பி, ஒரு ஊரை அடைந்தனர்.
எந்த ஊர்?

இரண்டு இடங்கள் இங்கு குறிப்பிடப்படுகிறது.
எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

* ஆபிரகாம், சாராவுடன் எகிப்து தேசத்தை அடைந்தான். (genesis 12:10). இந்த ஊரின் அரசன் "பார்வோன்" (Pharaoh).
Or
* ஆபிரகாம், சாராவுடன் இஸ்ரேல்
தேசத்தை அடைந்து, கேராரில் (gerar) தங்கினான். (genesis 20:1).
இந்த ஊரின் அரசன் "அபிமெலே" (Abimelech).

"தீர்க்கதரிசி" ஆபிரகாம், சாராவுடன் எகிப்து தேசத்தை அடைந்தார் என்ற நம்பிக்கையில் தொடர்வோம்.
இந்த சமயம், "தீர்க்கதரிசி" ஆபிரகாம் வயது 75.

"தீர்க்கதரிசி" ஆபிரகாம் சாராவை பார்த்து இவ்வாறு சொன்னார்,
"சாரா, நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று நான் அறிவேன். எகிப்தியர் உன்னை கண்டால், நான் உனக்கு கணவன் (75yr முதியவன்) என்று  தெரிந்தால் என்னை கொன்று போட்டு, உன்னை உயிரோடு வைப்பார்கள். ஆகையால், உன்னால் நான் உயிர் பிழைக்க யாரும் கேட்டால் 'நான் இவர் சகோதரி' என்று சொல்"
என்றார்.

எகிப்தியர்கள், தன் தலைவர் பார்வோன் (Pharaoh/Abimelech) முன் கொண்டு சென்றனர்.
பார்வோன் (Pharaoh) 'தீர்க்கதரிசி' ஆப்ரகாமிடம் "இவள் யார்?" என்று கேட்டார்.
'தீர்க்கதரிசி' ஆப்ரகாம் "இவள் என் சகோதரி" என்றார்.




அவளும் "ஆப்ரகாம் தன் சகோதரர்" என்று சம்மதிக்க, இவள் அழகின் காரணமாக இவளை தன் அரண்மனைக்கு கொண்டு சென்றனர்.

சகோதரியை தனக்கு தந்த உத்தமர் 'தீர்க்கதரிசி ஆப்ரகாமுக்கு பரிசாக - கழுதை, ஆடு, மாடு, ஒட்டகம், வேலைக்காரன், வேலைக்காரிகள் கொடுத்தான் பார்வோன் (Pharaoh).

ஆனால் அந்த இரவு, கடவுள், பார்வோன் (Pharaoh) கனவில் வந்து,
"நீ சாக வேண்டியவன். நீ எந்த பெண்ணை உன் அரண்மனையில் வைத்து உள்ளாயோ, அவள் மணமானவள்"
என்றார்.

பார்வோன் (Pharaoh) நிதானமாக கடவுளை பார்த்து
"நீ இப்படி தான் அப்பாவிகளை தண்டிப்பாயோ!!"
என்றார்.

மேலும் தொடர்ந்தான் பார்வோன் (Pharaoh),
"ஆப்ரகாம் தன் வாயாலேயே 'இவள் என் சகோதரி' என்றான். அவளும் 'ஆப்ரகாம் என் சகோதரன்' என்றாள். 
இப்படி இருக்க, இவளை என் அரண்மனைக்கு அழைத்து வந்த போது என் மனம் தவறு செய்ததாக சொல்லவில்லை. 
நான் குற்றம் செய்யாதவனே " 
என்றான்.

கடவுள்,
"எனக்கு தெரியும் நீ பாவம் செய்யவில்லை என்று. 
அதனால் தான் நீ இது வரை அவளை தொட்டு விடாதவாறு தடுத்து உள்ளேன். இவளை அவன் கணவனிடம் திருப்பி கொடுத்து வி்டு. 
அவர் ஒரு தீர்க்கதரிசி (Prophet). 
அவர் நீ செய்த இந்த காரியத்துக்கு உன் சார்பில்  மன்னிப்பு கேட்டு, உன் பாவத்திலிருந்து காப்பார். 
ஒரு வேளை நீ அவளை கொடுக்கவில்லை என்றால், நீயும், உன்னோடு உள்ள அனைவரும் இறந்து விடுவீர்கள்" 
என்று சொல்லி மறைந்தார்.

அடுத்த நாள் காலை, பார்வோன் (Pharaoh/Abimelech), 'தீர்க்கதரிசி' ஆப்ரகாமை அழைத்து
"என்ன காரியம் நீ எங்களுக்கு செய்து இருக்கிறாய்? இவள் உன் மனைவி என்று சொன்னால் என்ன? என்ன தவறு உனக்கு செய்தோம் என்று, இப்படி ஒரு தவறான செயலை நாங்கள் செய்ய தூண்டினாய்? 
உன்னுடைய நோக்கம் என்ன?"
என்று கேட்டான்.

'தீர்க்கதரிசி' ஆபிரகாம், பார்வோனை (Pharaoh) பார்த்து,
"உங்கள் நாட்டில், யாருக்குமே இறைவனை கண்டு பயமிருக்காது என்று நினைத்தேன். 
அதனால் என் மனைவியின் காரணமாக, என்னை கொன்றுவிடுவீர்கள் என்ற உயிர் பயத்தில் இப்படி சொன்னேன்" 
என்றார்.

மேலும் தொடர்ந்து தீர்க்கதரிசி "ஆபிரகாம்" இவ்வாறு பேசலானார், "உண்மையில் இவள் எனக்கு சகோதரி முறையும் தான். என் தந்தைக்கு இவள் மகள், ஆனால் வேறு தாய்க்கு பிறந்தவள். 
எனக்கு மனைவியும் தான். 
நான் தான் அவளிடம் யார் கேட்டாலும் என் சகோதரன் இவர் என்று சொல்ல சொன்னேன்" 
என்றார்.

தீர்க்கதரிசி "ஆபிரகாம்" பேச்சை கேட்ட, பார்வோன் (Pharaoh/Abimelech), இவருக்கு பரிசாக கொடுத்த - கழுதை, ஆடு, மாடு, ஒட்டகம், வேலைக்காரன், வேலைக்காரிகள் அனைத்தையும் திரும்ப பெற்றான்.

இவன் மனைவி & சகோதரி "சாரா"வை "தீர்க்கதரிசி" ஆபிரகாமிடம் திருப்பி கொடுத்தான்.

பார்வோன் (Pharaoh/Abimelech) சாராவை பார்த்து, "உன் சகோதரனுக்கு நான் ஆயிரம் வெள்ளி காசு தருகிறேன். இதை கொண்டு நீங்கள் வாழுங்கள்" என்றான்.




பார்வோன் (Pharaoh/Abimelech) தீர்க்கதரிசி ஆபிரகாமை பார்த்து,
"இதோ என் நாடு, நீங்கள் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம்" என்றான்.

தீர்க்கதரிசி "ஆபிரகாம்" வென்றார்.

திருவாசகம், ஆத்திச்சூடி போன்ற நூல்களில் கூட காண முடியாத தத்துவங்கள், இந்த நிகழ்ச்சியில் உள்ளது.

https://www.sefaria.org/Genesis.21?lang=bi