சீதாதேவி தன் மாமியார் கௌசல்யாவிடம் சொல்லும் வார்த்தை...
1.
मितम् ददाति हि पिता
मितम् माता मितम् सुतः |
अमितस्य हि दातारम्
भर्तारम् का न पूजयेत् ||
- वाल्मीकि रामायण
மிதம் ததாதி ஹி பிதா
மிதம் மாதா மிதம் சுத: |
அமிதஸ்ய ஹி தாதாரம்
பர்தாரம் கா ந பூஜயேத்? ||
- வால்மீகி ராமாயணம்
Father indeed gives a limited extent, a mother in a limited measure and a son in moderation. Which woman, then, would not adore her husband, the bestower of unlimitedness.
ஒரு பெண்ணுக்கு தகப்பனால் ஒரு அளவுக்கு தான் சுதந்திரம் கிடைக்கிறது. தாயாராலும் மிதமாக தான் கொடுக்கப்படுகிறது. பிள்ளைகளாலும் மிதமாக தான் கொடுக்கப்படுகிறது. எந்த பெண் தான் சுதந்திரம் அளவில்லாமல் தரும் தன் கணவனை வணங்காமல் இருப்பாள்?
2.
सा अहम् एवम् गता श्रेष्ठा
श्रुत धर्म पर अवरा |
आर्ये किम् अवमन्येयम्
स्त्रीणाम् भर्ता हि दैवतम् ||
- वाल्मीकि रामायण
சா அஹம் ஏவம் கதா ஸ்ரேஷ்ட
ஸ்ருத தர்ம பர அவரா |
ஆர்யே கிம் அவமன்யேயம்
ஸ்திரீணாம் பர்தா ஹி தைவதம் ||
- வால்மீகி ராமாயணம்
Having heard about the special and ordinary duties of a wife from the most excellent women, how can I, as such, leave my husband, Oh venerable lady? Husband is indeed a deity to women.
தர்மத்தில் வாழும், ஸ்ரேஷ்டமான ஒழுக்கமான பெண்கள், கணவனுக்கு சேவை செய்வதை பற்றி சொல்லி கேட்ட, நான் எப்படி என் கணவனை விட்டு விட முடியும்? மனைவிக்கு கணவனே கண் கண்ட தெய்வம் என்று அறிவேன்.
வனவாசம் புறப்படும் போது, இவ்வாறு சீதாதேவி சொன்னதும், கௌசல்யா துக்க சமயத்தில், சீதாதேவியின் உயர்ந்த குணத்தையும் நினைத்து கண்ணீர் விட்டாள்.