ஆத்மாவை (நம்மை ) தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எது? மனிதனின் நோக்கம் என்ன? ஆபஸ்த்மப ரிஷி சொல்கிறார்.. தெரிந்து கொள்வோமே..
பானி சம்க்சுப்தேன உதகேன ஏக பானி ஆவர்ஜிதேன ச ந ஆசாமேத் |
- ஆபஸ்தம்ப சூத்திரம்
கலக்கப்பட்ட வெறும் தண்ணீரை குடிக்க கூடாது. இரு கைகளால் எடுத்து தராமல், ஒரு கையால் தரும் தண்ணீரை குடிக்க கூடாது.
ந அசௌ மே சபத்ன இதி ப்ரூயாத் |
யதி அசௌ மே சபத்ன இதி ப்ரூயாத் |
த்விசந்தம் ப்ராத்ரவ்யம் ஜனயேத் |
- ஆபஸ்தம்ப சூத்திரம்
யாரை பார்த்தும் "இவன் என் எதிரி" என்று சொல்ல கூடாது. அப்படி சொல்ல ஆரம்பிக்கும் போது, அவனே உண்மையாகவே எதிரி ஆகி விடுவான்.
திஸ்டான் ஆசாமேத் ப்ரஹவோ வா |
ஆஸீனஸ் த்ரிர் ஆசாமேத் ஹ்ருதய அங்கம அபிர் அத்பி: |
- ஆபஸ்தம்ப சூத்திரம்
நின்று கொண்டோ அல்லது முன்னோக்கி வளைந்து கொண்டோ, தண்ணீர் குடிக்க கூடாது.
அமர்ந்து குடிக்க வேண்டும், மூன்று முறை தண்ணீர் நெஞ்சில் செல்லுமாறு தலைதூக்கி குடிக்க வேண்டும்.
குரு-தல்பகாமி ச வ்ருசனம் சிஷ்னம் பரிவாஸ்ய அஞ்சலாவ் ஆதாய தக்ஷிணம் திசம் அநாவ்ருத்திம் வ்ரஜேத் |
ஜ்வாலிதாம் வா சூர்மிம் பரிஸ்வஜ்ய சமாப்னுயாத் |
சுரா ஆபோ அக்னி ஸ்பர்ச சுராம் பிபேத் |
- ஆபஸ்தம்ப சூத்திரம்
யார் ஒருவன் தன் குருவின் மனைவியிடம் தகாது உறவு கொள்கிறானோ, அவன் செய்த பாவத்துக்கு, தன்னுடைய ஆண் உறுப்பை தானே முழுவதுமாக வெட்டி இரு கையில் எடுத்துக்கொண்டு, தெற்கு திசை நோக்கி, மரணம் வரும் வரை நடந்து கொண்டே இருக்க வேண்டும்..
அல்லது, பெண் உருவத்தை வடித்த இரும்பு சிலையை பழுக்க காய்ச்சி அதை கட்டி பிடித்து கொண்டே உயிர் விட வேண்டும்.
அல்லது, மயக்கம் தரும் மதுவை சுட சுட காய்ச்சி, அளவுக்கு மீறி கொதிக்க கொதிக்க வாயில் விட்டு குடித்து, உயிர் விட வேண்டும்.
புருஷன் ச உபயோர் தேவதானாம் ராஜனஸ் ச |
- ஆபஸ்தம்ப சூத்திரம்
தெய்வத்தையோ, அரசனையோ கீழ்த்தரமாக பேச கூடாது.
அனஸூயுர் துஷ்ப்ரளம்ப ஸ்யாத் குஹக சத நாஸ்திக பாலவாதேசு |
- ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)
நயவஞ்சகர்கள், முரட்டுத்தனமானவர்கள், நாத்தீகர்கள் மற்றும் முட்டாள்களின் பேச்சுக்களால் ஒருவர் எரிச்சல் அடைய கூடாது. ஏமாறவும் கூடாது..
சர்வஜனபதேஸ்வ் ஏகாந்த சமாஹிதம் ஆர்யானாம் வ்ருத்தானாம் சம்யக் விநீதானாம் வ்ருத்தானாம் ஆத்மாவதாம் அலொலுபானாம் அதாம்பிகாணாம் வ்ருத்த ஸாத்ருஷ்யம் பாஜேத |
- ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)
நம்முடைய செயல்களை, நம் நடத்தையின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.
பண்பு உள்ளவர்கள் நன்னடத்தை கொண்டவர்கள்.
அவர்களை பார்த்து, நம்முடைய செயல்களை கட்டுப்படுத்தி, நடத்தையை சரி செய்து கொள்ள வேண்டும்.
யார் பண்பு உள்ளவன் (ஆரியன்)?
நன்கு படித்த, முதிர்ச்சி உடைய, சுய கட்டுப்பாடு கொண்ட, பேராசையிலிருந்து விடுபட்ட, மற்றவர்களுக்காக பாசாங்கு செய்யாதவர்களே 'ஆரியன்' என்று அழைக்கப்படுகிறார்கள்.
அத்யாத்மிகான் யோகான் அனுதிஷ்தேன் ந்யாய சம்ஹிதான் அனைஸ்சாரிகான் |
ஆத்ம லாபான் ந பரம் வித்யதே |
- ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)
ஒவ்வொரு மனிதனின் நோக்கமும் 'ஆத்மா'வை (தன்னை) அறிந்து கொள்வதே.
ஆத்மாவை (உன்னை), நீ அறிந்து கொள்வதை விட பெரிய கல்வி கிடையாது.
அத பூத தாஹீயான் தோஷான் உதாஹரிஸ்யாம: |
க்ரோதோ ஹர்ஷோ ரோஷா லோபோ மோஹோ தம்போ த்ரோஹோ ம்ருசோத்யம் அத்யாசா, பரீவாத அவசூயா காம மன்யு அநாத்ம்யம் அயோகஸ் தேஷாம் யோக மூலோ நிர்காத: |
- ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)
ஆத்மாவை (நம்மை ) தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எது?
கோபம், மகிழ்ச்சி, ரோஷம், பேராசை, ஒட்டுதல், தற்பெருமை, துரோகம், பாசாங்கு, பொய், பெருந்தீனி, பொறாமை, சுயநல ஆசை, ரகசியமான வெறுப்பு, புலன்களை அடக்கி வைப்பதில் அலட்சியம், மனதை அடக்குவதில் அலட்சியம் ஆகியவை, ஆத்மாவை (தன்னையே) அறியவிடாமல் தடுக்கிறது.
இந்த ஆத்மா ஆனந்த ஸ்வரூபமானது.
தான் ஆனந்தமயமானவன் என்பதை உணர விடாமல் இவை தடுக்கிறது.
இந்த தடையை போக்க வழி சொல்வதே 'யோகம்'.