Followers

Search Here...

Showing posts with label 100 பாபங்கள். Show all posts
Showing posts with label 100 பாபங்கள். Show all posts

Saturday, 31 December 2022

100 பாபங்கள் அறிவோம்.

100 பாபங்கள் :

தர்ம சிந்தனை உடையவர்களாகவே ஹிந்துக்கள் இருக்கின்றனர். 


ஹிந்துக்கள் மற்ற நாட்டின் மீது படை எடுத்து, அந்த மக்களை அடிமை படுத்தி, அவர்கள் கலாச்சாரத்தை, செல்வத்தை கொள்ளை அடித்ததில்லை. 


தன் மதத்தவர்கள் மற்ற மதம் போனாலும் கண்டிப்பதில்லை. 


ஆள் சேர்க்க மற்றவர்களை போல பிரச்சாரம் செய்து இங்கே இழுப்பதும் இல்லை. 


ஹிந்துக்கள் "பாபங்களுக்கு பயந்ததே" இதற்கு காரணம்


100 பாபங்களுக்கு முக்கியமாக ஹிந்துக்கள் பயந்தனர்.

1.

ஐந்து மகா பாபங்கள் (Five greatest sin)

மதுபானம், சூதாட்டம், கொலை, பொய் சாட்சி, கற்பழித்தல் - பாபம்

2. 

உணவு கட்டுப்பாடின்றி, கண்ட இடத்தில், கண்ட பேர் கையால், கண்ட பொருளை சாப்பிடுவது - பாபம்.

3.

கடவுள் வழிபாடு இன்றி, கடவுள் நம்பிக்கை இன்றி, நன்றி இல்லாமல் சாப்பிடுவதும், தூங்குவதும் - பாபம்.


4.

உண்மையான பக்தி இல்லாமல், பக்தனை போல வேஷம்போட்டு பிறரை ஏமாற்றுவது - பாபம்


5. 

பிறர் நலத்தை கவனிக்காமல், சுயநலமாக இருப்பது - பாபம்


6.

மிருகத்திற்கு ஊசி போட்டு (செயற்கையாக) கரு உண்டாக்குவது - பாபம்


7.

பெண்ணுக்கு ஊசி போட்டு (செயற்கையாக) கரு உண்டாக்குவது - பாபம்


8.

கருவில் உள்ள குழந்தை வளர்வதை (ஸ்கேன்) பார்ப்பது - பாபம்


9.

பெண்களை, 'பிள்ளை பெறும் இயந்திரமாக' நினைப்பது - பாபம்.


10.

உருவான கருவை கலைத்து விடுவது (ப்ரூண ஹத்தி)  - பாபம்.


11.

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல், வளர்ப்பது - பாபம்


12. 

குழந்தை வேண்டாம் என்று கருத்தடை செய்வது - பாபம்.


13.

குழந்தை பிறப்பதை வேடிக்கை பார்ப்பது - பாபம்.


14.

கன்றுக்குட்டியை விற்று விட்டு, பசுமாட்டிடம் பால் கறப்பதும், குடிப்பதும் - பாபம்


15. 

பால் கறக்கும் வரை பசுவை காப்பாற்றி அதன் மூலம் பயன் அடைந்து, மலட்டு தன்மை வந்த பிறகு நன்றி கெட்டு விற்பது - பாபம்


16.

காளை கன்றுகளை கொலைகாரனுக்கு கொடுப்பது - பாபம்


17.

மீன், ஆடு, கோழி இவைகளை வளர்த்து, பின் தானே அவைகள் சாவதற்கு காரணமாக இருப்பது - பாபம்


18.

மாமிசம் சாப்பிடுவதும், மாமிசம் வியாபாரம் செய்வதும் - பாபம்


19.

காலத்தில் பெண்களை திருமணம் செய்து கொடுக்காமல் இருப்பது - பாபம்.


20.

ஆண் பிள்ளையை ஆன்மீகமாக வளர்த்து, பெண் பிள்ளையை கலாச்சாரம் தெரியாமல், அவர்கள் இஷ்டத்துக்கு வளர்ப்பது - பாபம்.


21.

படித்த பெண்களை வேலைக்கு அனுப்பி, பெற்றோர்கள் பணம் சேர்ப்பது - பாபம்


22. 

கலப்பு மணம், விதவா விவாகம், பெண்களுக்கு மறுமணம் செய்வது - பாபம்.


23.

பெண், தாலி கட்டிய கணவனை மீறுவதும், ஆண், தன் மனைவியை கைவிடுவதும் - பாபம்.


24.

விவாகரத்து எக்காரணம் கொண்டும் ஆணும், பெண்ணும் செய்து கொள்வது - பாபம்


25. 

படிக்கும் காலங்களில், ஜாதி வேற்றுமை பார்ப்பது - பாபம்


26.

வேலை பார்க்கும் இடங்களில், ஜாதி வேற்றுமை பார்ப்பது - பாபம்


27.

ஜாதியின் அடிப்படையில் சலுகை கொடுத்து, கல்வி, அதனால் ஏற்பட்ட அறிவு, திறமை, உழைப்பு ஆகிய நான்கை புறக்கணிப்பது - பாபம்


28.

ஒரு சமூகம் முன்னேற்றமடைய கொடுக்கப்பட்ட சலுகையை, காலத்துக்கு ஏற்றவாறு மாற்றாமல், முன்னேற்றம் அடைந்த பிறகும் அதே சலுகையை வைத்து சண்டை இடுவது - பாபம்


29.

நன்றாக படிக்கும் மாணவனுக்கு, மதிப்பெண் (mark) வேண்டுமென்றே குறைவாக போடுவது - பாபம்.


30.

நன்றாக உழைத்தவனுக்கு பதவி உயர்வு தராமல், உழைக்காதவனுக்கு பதவி உயர்வு தருவது - பாபம்.


31.

தான் செய்த தவறை, குற்றத்தை, பிறர் தலையில் கட்டுவது - பாபம்


32. 

வேலை பார்ப்பவனை, திடீரென்று வேலை இல்லை என்று சொல்லி, அனுப்பி விடுவது - பாபம்.


33.

சம்பள உயர்வுக்காக, பார்க்கும் வேலையை விட்டு, நன்றி கேட்டு, மற்ற வேலைக்கு தாவுவது - பாபம்.


34.

சொன்ன சம்பளம் ஒன்று, கொடுத்த சம்பளம் வேறு என்று ஏமாற்றுவது - பாபம்


35. 

வேலை நிறுத்தம் செய்து, பெரிய நிறுவனங்களை பாதிக்கப்பட செய்வது - பாபம்


36.

ஊழியர்களுக்கு ஊதியம் தராமல், அதிக லாபத்தை முதலாளி வைத்துக்கொள்வது - பாபம்


37.

குடி இருக்கும் வீட்டை, சொந்த வீடாக நினைப்பது - பாபம்


38.

ஜாதி வேற்றுமையை சொல்லி கேலி செய்வதோ, திட்டுவதோ - பாபம்


39.

அவரவர் தர்மப்படி செய்து கொள்ளும் ஆடை அலங்காரம், நடைமுறை பழக்கங்களை கேலி செய்வது - பாபம்.


40.

பெற்றோர்களை விட்டு விட்டு, வெளிநாடு சென்று பிழைப்பது - பாபம்.


41.

தன் நாட்டு நாகரீகத்தை விட்டு, பிற நாட்டு நாகரீகத்த்தில் நாட்டம் காட்டுவது - பாபம்


42. 

தாய் மொழியை மதிக்காமல், பிற மொழியை பேசுவதும், படிப்பதும் - பாபம்.


43.

தன் மதத்தை விட்டு, பிற மதத்தில் சேர்வது - பாபம்.


44.

உடலை விட்டு பிரிந்த பெற்றோர்களுக்கு ஈமக்கடன் செய்யாமல் இருப்பது - பாபம்


45. 

மறைந்த பெற்றோர்களுக்கு திதி (திவசம்), தர்ப்பணம் (தன் கையால் கொஞ்சம் ஜலம் விட்டு திருப்தி செய்வது) செய்யாமல் இருப்பது - பாபம்


46.

வருடம் ஒரு முறை, மறைந்த பெற்றோர்களுக்கு திதி (திவசம்) செய்யாமல், வெறும் தானம் மட்டும் செய்வது - பாபம்


47.

சகோதரர்கள் யாராவது ஒருவர் திதி செய்தால் போதும் என்று சும்மா இருப்பது - பாபம்


48.

ஒரே சமையல் செய்து, பல திவசங்களுக்கு பயன்படுத்துவது - பாபம்


49.

சமையல், பக்ஷணம் போன்றவை திவச நாளில் செய்யாமல், ஒரு நாள் முன்பே செய்து பயன்படுத்துவது - பாபம்.


50.

கணவன் மனைவி உறவு இல்லாமல் இருப்பது, கணவன் மனைவி உறவு அல்லாத ஆணும் பெண்ணும் சேர்ந்து வாகனத்தில் போவது - பாபம்.


51.

போதை பொருட்களை, சித்தத்தை கலக்கும் மாத்திரைகளை உட்கொள்வது - பாபம்


52. 

டாக்டர் அனுமதியின்றி தூக்க மாத்திரை சாப்பிடுவது - பாபம்.


53.

கண்ட வேளையில் தூங்குவதும், கண்ட வேளையில் சாப்பிடுவதும் - பாபம்.


54.

கடன் வாங்குவதும், வாங்கிய கடனை அடைக்காமல் ஏமாற்றுவதும் - பாபம்


55. 

தான தர்மம் செய்யாமல், கஞ்சனை போன்று சேர்த்து வைத்து கொள்வது - பாபம்


56.

பாவத்திற்கு பண உதவி செய்வது - பாபம்


57.

வரி கொடுக்காமல், பொய் கணக்கு போடுவது - பாபம்


58.

கோவில் சொத்தையும், தர்ம சொத்தையும் சேர்ப்பது - பாபம்


59.

ஆச்சார்யாளையும், பெரியோர்களையும் பற்றி அவதூறாக பேசுவது - பாபம்.


60.

நான்கு வேதத்தையும், இதிஹாசத்தை பற்றியும் குறை சொல்வது - பாபம்.


61.

ப்ராம்மணனாக பிறந்து, ஸ்நானம், சந்தியா வந்தனம் இரண்டும் செய்யாமல் உணவு உண்பது - பாபம்


62. 

ப்ராம்மணனாக பிறந்து, புகை பிடிப்பது - பாபம்


63.

தெய்வத்திற்கு உகந்த புண்ணிய காலங்களில்,  முன்னோர்களுக்கும் பெற்றோர்களுக்கும் திவசம் போன்ற காரியங்கள் செய்யும்  நாளில் சவரம் செய்து கொள்வது - பாபம்.


64.

தெய்வத்திற்கு உகந்த புண்ணிய காலங்களில்,  முன்னோர்களுக்கும் பெற்றோர்களுக்கும் திவசம் போன்ற காரியங்கள் செய்யும்  நாளில் உறவு கொள்வது - பாபம்.


65. 

ப்ராம்மணனாக பிறந்து, பூணல் போட்ட பிறகு, பூணல் இல்லாமல் இருப்பதும், கழற்றி வைப்பதும் - பாபம்


66.

ப்ராம்மணனாக பிறந்து, குடுமி, பஞ்சகஜம், பூணல் இல்லாமல் எதை செய்தாலும் - பாபம்


67.

பெண்கள் தங்கள் அவயவங்கள் தெரியுமாறு உடையணிவது - பாபம்


68.

ஆண்களும், பெண்களும் அரைகுறை ஆடையோடு கேளிக்கை செய்வது - பாபம்


69.

தம்பதிகளாக இல்லாத ஆணும், பெண்ணும் கை குலுக்குவதும், கட்டிபிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் - பாபம்.


70.

அட்டஹாசமாக சிரிப்பதும், அட்டஹாசமாக கூச்சல் போடுவதும், அட்டஹாசமாக சண்டைபோடுவதும், அழுவதும் - பாபம்.


71.

இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி கலகம் மூட்டுவதும், குடும்பத்தை பிரிப்பதும் - பாபம்


72. 

பெண்கள் மாத விலக்கு காலங்களில் விலகி இல்லாமல், சேர்ந்திருப்பது - பாபம்


73.

மாத விலக்கான பெண்கள் ஓய்வாக இல்லாமல், இவர்களுக்கு மற்றவர்கள் சமைத்து ஓய்வு அளிக்காமல், இவர்களை சமைக்க செய்வதும், அந்த உணவை பிறர் சாப்பிடுவதும் - பாபம்.


74.

தெய்வத்திற்கு உகந்த புண்ணிய காலங்களில்,  முன்னோர்களுக்கும் பெற்றோர்களுக்கும் திவசம் போன்ற காரியங்கள் செய்யும்  நாளில் மாத விலக்கான பெண்கள் கலந்து கொள்வது - பாபம்.


75. 

ஜனனம் ஆன சமயத்திலும், மரண சமயத்திலும் தேவ காரியங்கள் செய்வது - பாபம்


76.

மரணம், மாத விலக்கு போன்ற தீட்டு காலங்களில், கோவிலுக்குள் போவது - பாபம்


77.

பெண்கள் தன் கணவனை தவிர அன்ய புருஷனிடம் அளவுக்கு மீறி பேசுவது, பழகுவது - பாபம்


78.

கணவனை சொல்லை விட, அன்ய புருஷன் சொல்வதை கேட்டு நடப்பது - பாபம்


79.

கணவனை விட்டு, வேறு தேசம் சென்று வேலை பார்ப்பது - பாபம்.


80.

பெற்றோர்களை விட்டு, பெண் வேறு தேசம் சென்று படிப்பது, வேலை பார்ப்பது - பாபம்.


81.

மாமனார், மாமியாரை வீட்டை விட்டு போ, என்று மருமகள் சொல்வது - பாபம்


82. 

மருமகளை, மகனோடு வாழ விடாது மாமனார், மாமியார் செய்தால் - பாபம்


83.

கல்யாணம் ஆகியும், பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் இருந்தால் - பாபம்.


84.

கல்யாணம் ஆகியும், பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பாமல் பெண்ணை வைத்து கொண்டு, மாப்பிள்ளையிடம் பணம் வாங்குவது - பாபம்.


85. 

படுத்த படுக்கை ஆகிவிட்ட பெற்றோர்களை கவனிக்காமல், பெற்ற பிள்ளைகள் (ஆண்/பெண்) இருப்பது - பாபம்


86.

வியாதியினால் அவதிப்படும், அங்கஹீனம் ஆகி அவதிப்படும் எந்த உறவினரையும்  புறக்கணிப்பது, கவனிக்காமல் இருப்பது - பாபம்


87.

ஆபத்து, பேரழிவு காலங்களில் உறவினர்களை இழந்து, அகதிகள் ஆகி போனவர்களை புறக்கணிப்பது, கவனிக்காமல் இருப்பது - பாபம்


88.

அகதியாக இருப்பவன், கஷ்டப்படுபவன், காப்பாற்றப்பட்டு வாழ வழி காட்டப்பட்டவுடன், காப்பாற்றிய தேசத்துக்கே, மக்களுக்கே பாதகம் செய்வது. அகதியாக வாழும் இடத்தையே சொந்தம் கொண்டாடுவது - பாபம்


89.

சேர்ந்து இருந்து கொண்டே, கூட இருப்பவனுக்கு குழி பறிப்பது, ஏமாற்றுவது - பாபம்.


90.

தஞ்சம் என்று வந்தவரை, சமயத்தில் பிறரிடம் காட்டிக்கொடுப்பது - பாபம்.


91.

கொலைகாரனிடமிருந்து தப்பி ஓடும் விலங்கை, மனிதன் பிடித்து கொடுத்து கொலைக்கு தூண்டுவது - பாபம்


92. 

சம்பளம் கொடுக்காமல், வேலை வாங்குவது - பாபம்


93.

வியாபாரத்தில் வரும் லாபத்தை, அவ்வப்போது வேலை செய்வோருக்கு சம்பளம் போக, லாபத்தில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது - பாபம்.


94.

வேலைக்கு வரும் பெண்களிடம் தவறாக பேசுவது, பார்ப்பது, கற்பழிப்பது - பாபம்.


95. 

நம்பிக்கையோடு வந்த நோயாளி, தவறுதலான சிகிச்சையினால் மரணம் அடைந்தால் - பாபம்


96.

கர்ம வினையை அனுபவிக்காமல், ஒருவர் உறுப்பை மற்றவருக்கு வைப்பது  - பாபம்


97.

ரத்த தானம், மாமிச தானம், கண் தானம் செய்வதும் கூட - பாபம்


98.

தெய்வத்தின் பெயரால், கொலை செய்வது - பாபம்


99.

தற்கொலை செய்து கொண்டால் - பாபம்.


100.

பிறப்புக்கு தாய் தந்தை தான் காரணம் என்று, கடவுள் காரணமில்லை என்று சொல்லி, மரணம் எந்த வயதிலும், எந்த நிலையிலும் வரலாம் என்று அறிந்தும், பிறப்புக்கும், மரணத்திற்கும் பகவான் சூத்ரதாரியாக இருக்கிறார் என்று அறியாமல், நாதீகனாக நன்றி கெட்டு இருப்பது - பாபம்.


தெரிந்தோ, தெரியாமலோ இந்த பாபங்கள் நம் வாழ்வில் ஸம்பவித்தால், காரணமில்லாத துக்கங்கள் (நம் துர்மரணம் அல்லது நம் ப்ரியபட்டவர்கள் துர்மரணம், எல்லாம் இருந்தும் நிம்மதி இழந்த நிலை, நோய், கவலை) நம் வாழ்விலும், நம் சந்திதியினருக்கும் சேரும். 


பூஜையோ, தானமோ, தர்மமோ இந்த பாபங்களை எளிதில் போக்காது. இதை செய்ய நமக்கு நேரமும் கிடையாது.


தினமும் நடக்கும் போதும், உட்காரும் போதும், அமைதியாக இருக்கும் போதும், தூங்க செல்லும் போதும், எழுந்திருக்கும் போதும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், 

கோவிந்தனின் நாமத்தை சொல்லி கொண்டிருந்தால், செய்த பாபத்திற்கு அதுவே ப்ராயச்சித்தமாகும். 


நம் திறனையும் மீறி, பாபத்தால் ஏற்படும் துக்கங்கள், கோவிந்தனின் நாமத்தை சொல்வதால், நமக்கு ஏற்படாமல் இருக்கும்.


பெருமாள் "கோவிந்தா" என்ற இந்த சொல் ஒன்றை தான் நம்மிடம் எதிர்பார்க்கிறார். 


திரௌபதியை காப்பாற்றிய சொல்லும் "கோவிந்தா" என்ற நாமமே.


கலியில் யோகம், யாகம், பூஜை, தவம் எதையும் செய்ய சக்தியற்ற மனிதர்களுக்கு, "கோவிந்தா" என்ற நாமமே வழித்துணை.