ஸ்வாயம்பு மனு, பிரம்மாவின் படைப்பையும், உலக ஶ்ருஸ்டியை சொன்னார்..
மேலும் விஷயங்களை, பிருகு முனிவர் தன்னிடம் கற்று தெரிந்து இருப்பதால, மேலும் பல தர்மங்களை பிருகு முனிவர் சொல்வார் என்று நியமித்தார்.
பிருகு முனிவர், மிகவும் உற்சாகத்தோடு, ரிஷிகளுக்கு சொல்ல ஆரம்பித்தார்.
स्वायम्भुवस्यास्य मनोः षड्-वंश्या मनवोऽपरे ।
सृष्टवन्तः प्रजाः स्वाः स्वा महात्मानो महौजसः ॥
- மனு ஸ்மிருதி
ஸ்வாயம்பு மனு, ஸ்ருஷ்டி தொழிலை மேலும் செய்ய, தன் வம்சத்தில் 6 பேரை ஸ்ருஷ்டி செய்தார்.
स्वारोचिष: च: उत्तम: च तामसो रैवत: तथा ।
चाक्षुषश्च महातेजा विवस्वत् सुत एव च ॥
- மனு ஸ்மிருதி
ஸ்வாரோசிஷன், உத்தமன், தாமஸன், ரைவதன், சாக்ஷுஷன், மஹாதேஜஸ் உடைய வைவஸ்வதனின் அம்சமாக வைவஸ்வதன் என்ற 6 பேரை படைத்தார்.