குருக்ஷேத்ரத்துக்கு 'ஸமந்த-பஞ்சகம்' என்ற பெயர் எதனால் கிடைத்தது?
மஹாபாரத போரில், 18 அக்ஷௌணி சேனையில் எத்தனை போர் வீரர்கள் இருந்தனர்?
ரிஷிகள் ஸூதரிடம் "ஸமந்த-பஞ்சகம் என்ற இடத்தை பற்றி சொன்னீர்களே, அதை பற்றி மேலும் சொல்ல வேண்டும்" என்று பிரார்த்தித்தனர்.
ஸூதர் பேசலானார்...
"அந்தணர்களே! கேளுங்கள், சொல்கிறேன்.
ஸாதுக்களே ! ஸமந்த-பஞ்சகம் பற்றி சொல்கிறேன்.
த்ரேதா யுகமும், துவாபர யுகமும் சந்தித்த சமயத்தில், அஸ்திரங்களில் சிறந்த பரசுராமர் கோபத்தினால் தூண்டப்பட்டு, பூமியில் அரசாளும் க்ஷத்ரியர்களை அடிக்கடி வதம் செய்தார்.
शृणुध्वं मम भो विप्रा ब्रुवतश्च कथाः शुभाः।
समन्त-पञ्चक आख्यं च श्रोतुमर्हथ सत्तमाः।।
त्रेता-द्वापरयोः सन्धौ रामः शस्त्रभृतां वरः।
असकृत्पार्थिवं क्षत्रं जघानामर्षचोदितः।।
- மஹாபாரதம் (வியாசர்)
அக்னியை போன்று இருந்த பரசுராமர், தன் பராக்ரமத்தால் க்ஷத்ரியர்களை அழித்து, ஸமந்த-பஞ்சகம் என்ற இடத்தில 5 ரத்த மடுக்களை (பள்ளம்) அமைத்து, கோபத்தால் அந்த மடுக்களில் தண்ணீர் போல ரத்தத்தையே நிரப்பினார். க்ஷத்ரியர்களின் ரத்தத்தினாலேயே பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தார் என்று கேள்விப்படுகிறோம்.
இப்படி இவர் செய்வதை கண்ட ரிஷிகர் போன்ற பித்ருக்கள் சேர்ந்து, இவர் முன் தோன்றி, "ராமா! ராமா! ப்ருகு குலத்தில் தோன்றியவனே! உன்னுடைய இந்த அதீத சக்தியை கண்டும், உன் பித்ரு பக்தியை கண்டும் ஆனந்தப்படுகிறோம்.
अथर्चीकादयोऽभ्येत्य पितरो रामम् अब्रुवन्।
राम राम महाभाग प्रीताः स्म तव भार्गव।।
- மஹாபாரதம் (வியாசர்)
பெரியசக்தி உள்ளவனே! உனக்கு க்ஷேமம் உண்டாகட்டும். வேண்டிய வரத்தை கேட்டு கொள்" என்றனர்.
பரசுராமர், "பித்ருக்களாகிய நீங்கள் என்னை கண்டு ப்ரீதி அடைந்து அனுகிரகம் செய்ய ஆசைப்பட்டால், நான் இது வரை க்ஷத்ரியர்களை அழித்ததாகிய பாவத்திலிருந்து விடுபட வேண்டும். இதுவே நான் கேட்கும் வரம்." என்றார்.
यदि मे पितरः प्रीता यद्यनुग्राह्यता मयि।
यच्च रोषाभिभूतेन क्षत्रमुत्सादितं मया।।
अतश्च पापान्मुच्येऽहमेष मे प्रार्थितो वरः।
ह्रदाश्च तीर्थभूता मे भवेयुर्भुवि विश्रुताः।।
- மஹாபாரதம் (வியாசர்)
இதை கேட்ட பித்ருக்கள், "அப்படியே ஆகும். இனி நீ பொறுத்து கொள்ள வேண்டும்" என்று ஆசிர்வதித்தனர்.
இதை கேட்ட பிறகு, பரசுராமர் சாந்தமடைந்தார்.
ரத்தமே ஜலமாக இருந்த அந்த மடுக்கள் இருக்கும் இடமே "ஸமந்த-பஞ்சகம்" என்று பெயர் பெற்றது.
இதே இடத்தில், துவாபர யுகமும், கலி யுகமும் சந்தித்த சமயத்தில், கௌரவ சேனைக்கும், பாண்டவ சேனைக்கும் யுத்தம் உண்டாயிற்று.
अन्तरे चैव संप्राप्ते कलिद्वापरयोरभूत्।
समन्तपञ्चके युद्धं कुरुपाण्डवसेनयोः।।
- மஹாபாரதம் (வியாசர்)
தர்மத்தை நிலைநாட்டிய இந்த க்ஷேத்ரத்தில் யுத்தம் செய்வதற்காக 18 அக்ஷௌணிகள் சேர்ந்தனர்.
तस्मिन्परमधर्मिष्ठे देशे भूदोषवर्जिते।
अष्टादश समाजग्मुरक्षौहिण्यो युयुत्सया।।
- மஹாபாரதம் (வியாசர்)
ப்ராம்மணர்களே ! இந்த தர்ம க்ஷேத்ரத்திலேயே அனைத்து அக்ஷௌணிகளும் அழிந்தனர்.
இவ்வாறு இந்த க்ஷேத்ரம் 'ஸமந்த-பஞ்சகம்' என்று பெயர் பெற்றது." என்று சொன்னார்.
ரிஷிகள் அக்ஷௌணியின் எண்ணிக்கை பற்றி கேட்க, ஸூதர் மேலும் பேசலானார்..
"சேனை விதியில்,
1 தேர் (ரதம்), 1 யானை, 3 குதிரைகள், 5 காலாட்கள் சேர்ந்து - ஒரு பத்தி (1,1,3,5) என்று சொல்லப்படுகிறது.
एको रथो गज: च एको नराः पञ्च पदातयः।
त्रय: च तुरगा: तज्ज्ञैः पत्ति: इति अभिधीयते।।
- மஹாபாரதம் (வியாசர்)
3 பத்தி சேர்ந்து - ஒரு சேனாமுகம் (3,3,9,15) என்று சொல்லப்படுகிறது.
3 சேனாமுகம் சேர்ந்து - ஒரு குல்மம் (9,9,27,45) என்று சொல்லப்படுகிறது.
पत्तिं तु त्रि-गुणाम् एताम् आहुः सेनामुखं बुधाः।
त्रीणि सेनामुखान् एको गुल्म इति अभिधीयते।।
- மஹாபாரதம் (வியாசர்)
3 குல்மம் சேர்ந்து - ஒரு கணம் (27,27,81,135) என்று சொல்லப்படுகிறது.
3 கணம் சேர்ந்து - ஒரு வாஹினி (81,81,243,405) என்று சொல்லப்படுகிறது.
3 வாஹினி சேர்ந்து - ஒரு ப்ருதன் (243,243,729,1215) என்று சொல்லப்படுகிறது.
त्रयो गुल्मा गणो नाम वाहिनी तु गणा: त्रयः।
स्मृता: तिस्र: तु वाहिन्यः पृतनेति विचक्षणैः।।
- மஹாபாரதம் (வியாசர்)
3 ப்ருதன் சேர்ந்து - ஒரு சமு (729,729,2187,3645) என்று சொல்லப்படுகிறது.
3 சமு - ஒரு அனீகினீ (2187,2187,6561,10935) என்று சொல்லப்படுகிறது.
10 அனீகினீ - ஒரு அக்ஷௌணி (21870,21870,65610,109350) என்று சொல்லப்படுகிறது.
चमू: तु पृतन अस्ति स्रस्तिस्र: चमु अस्तु अनीकिनी।
अनीकिनीं दशगुणां प्राहु: अक्षौहिणीं बुधाः।।
- மஹாபாரதம் (வியாசர்)
ஒரு அக்ஷௌணியில், ஏறத்தாழ (ப்ரசங்க்யமாக) 20 ஆயிரத்துக்கும் மேல், ஆயிரத்துக்கும் மேல், நூற்றுக்கும் மேல் ரதங்களும், அதே எண்ணிக்கையில் யானைகளும், லட்சத்துக்கு மேல், ஆயிரத்துக்கும் மேல், காலாட் படையும், 50 ஆயிரத்துக்கும் மேல் முன்னூறுக்கும் மேல் குதிரைப்படைகளும் உள்ளனர்.
अक्षौहिण्याः प्रसंख्याता रथानां द्विजसत्तमाः।
संख्या गणित तत्त्वज्ञैः सहस्राणि एक विंशतिः।।
शतानि उपरि च एव अष्टौ तथा भूय: च सप्ततिः।
गजानां च परीमाणमेतदेव विनिर्दिशेत्।।
ज्ञेयं शतसहस्रं तु सहस्राणि नव एव तु नराणाम् अपि ।
पञ्च आशच्छ तानि त्रीणि च अनघाः।।
- மஹாபாரதம் (வியாசர்)
இவ்வாறு அக்ஷௌணியின் எண்ணிக்கையை மஹாபாரதத்தில் காண்கிறோம்.
சரியாக,
1 அக்ஷௌணி என்பது,
21,870 ரதங்களும்; 21,870 யானைகளும்; 65,610 குதிரைகளும்; 1,09,350 காலாட்படையும் சேர்ந்தது.
அது போல,
18 அக்ஷௌணி (2,18,700) என்பது, 3,93,660 ரதங்களும்; 3,93,660 யானைகளும்; 11,80,980 குதிரைகளும்; 19,68,300 காலாட்படையும் சேர்ந்தது.
(Nearly 39 lakh (39,36,600) mighty army men around the world, have died fighting each other in same place called kurukshetra @ samantha-panchakam in 18 days mahabharata War)
மஹாபாரத போரின் முடிவில், வெறும் 10 பேர் மட்டுமே இதில் உயிரோடு இருந்தனர் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஸாத்யகி, யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன், நகுலன், சஹதேவன், அஸ்வத்தாமன், க்ருதவர்மன், கிருபர்)