Which Tree is referred as Vanaspati (வனஸ்பதி) and Vruksha (வ்ருக்ஷம்)
अपुष्पाः फलवन्तो ये ते वनस्पतयः स्मृताः ।
पुष्पिणः फलिन: च एव वृक्षास्तूभयतः स्मृताः ॥
- Manu smriti (மனு ஸ்மிருதி)
எந்த மரம், பூக்கள் இல்லாமல் பழம் தருமோ, அந்த மரத்தை "வனஸ்பதி" என்று சொல்கிறோம்.
The tree which gives fruit without becoming flower, is referred as Vanaspati.
எந்த மரம், பூக்களை உண்டாக்கி, அதிலிருந்து பழம் தருமோ, அந்த மரத்தை "விருக்ஷம்" என்று சொல்கிறோம்.
The tree which gives fruit from flower, is referred as Vruksha.
பூவாதே காய்க்கும் மரமும் உள மக்கள் உளும் ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே
தூவா விரைத்தாலு நன்றாகா வித்தெனவே
பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு
—அவ்வையார் இயற்றிய நல்வழி
மனு ஸ்மிருதியின் வாக்கியத்தையே, அவ்வையும் பயன்படுத்துகிறாள்.
பூக்காது காய்க்கும் அத்தி மரம், ஆல மரம், அரச மரம், பலா மரம் முதலிய மரங்கள் உலகில் உண்டு. அது போல,
மக்கள் கூட்டத்தில், இதைச் செய் என்று சொல்லாமலேயே குறிப்பால் உணர்ந்து செயல்படும் நல்லோரும் உண்டு.
அதற்கு மாறாக,
விதைத்தாலும் முளைக்காத வித்து (விதை) போன்றும் சிலர் இருக்கிறார்கள்.
அவர்களுக்குச் சொன்னாலும் புரியாது- தெரியாது.
அதாவது விதைத்தாலும் முளைக்காது போன்று இப்படிப்பட்ட மூடர்களுக்குச் சொல்லும் அறிவுரையும் இப்படி பயனற்றதாக போகும்.