Followers

Search Here...

Showing posts with label வருவது. Show all posts
Showing posts with label வருவது. Show all posts

Wednesday, 24 July 2019

பரிகாரம் செய்தும், துன்பங்கள் வருவது ஏன்?

டாக்டரை பார்க்க சென்றான் ஒரு நோயாளி .

டாக்டரை பார்த்து
"நீங்கள் சௌக்கியமா? எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டான்.
தான் நலம் விசாரிக்க வேண்டி இருக்க, இவன் தன்னை நலம் விசாரிப்பதை பார்த்து, டாக்டருக்கே சிரிப்பு வந்து விட்டது.
இதற்கு பதில் சொல்ல முடியாமல் டாக்டரும் சங்கடப்பட்டார்.





யாரிடம் நலம் விஜாரிக்கிறோம் என்று கூட அறியாமல் கேட்கிறானே, 'பாவம்' என்று நினைத்தார் டாக்டர்.
உண்மையில்,
நாம் டாக்டரை பார்க்கும் போது, "டாக்டர், நான் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்" என்று கேட்டால்,
அந்த டாக்டரும், "சரி" என்று சுதந்திரமாக சிகிச்சையோ, சரியான ஆலோசனையோ சொல்வார்.

அதே போல,
நாம் தெய்வத்தையோ, மகானையோ, ஒரு ஞானியையோ பார்க்கும் போது,
"நீங்கள் சௌக்கியமா? எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டால், மகான்களும், தெய்வமும் அஞானத்தால் கேட்பவனை கண்டு மந்தஹாசம் செய்வார்கள்.
அஞானியாக இருக்கும் நாம், "நான் ஆரோக்கியமாக, நன்றாக இருக்க நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்" என்று கேட்டால், சுதந்திரமாக, நமக்கு உதவி செய்ய முன் வருவார்.

ஒருவன் டாக்டரிடம் சென்று தனக்கு உள்ள நோயை குணப்படுத்த கேட்டான்.

பரிசோதித்த டாக்டர்,
"ஒரு  ஆப்பரேஷன் செய்ய வேண்டும். ஆப்பரேஷன் நல்ல படியாக முடிந்தால் உயிர் பிழைக்கும், 
ஒருவேளை தவறானால், உயிர் போகவும் வாய்ப்பு உள்ளது. 
ஆப்பரேஷன் முடிந்து 3 மாதங்கள் படுத்த படுக்கையாக தான் இருக்க வேண்டி இருக்கும். அதற்கு பின் உடல் சரியாகி விடும்" என்று சொல்லி,
"சரி என்றால் கையெழுத்து போடு" என்று கேட்டார்.
அவனும், 'டாக்டர், நீங்கள் என் உடம்பை கிழித்து ஆப்பரேஷன் செய்யுங்கள். 
இதனால் ஏற்படும் வலியை பல மாதங்கள் ஆனாலும் நான் பொறுத்துக்கொள்கிறேன். 
நீங்கள் என் உடலை கிழித்து ஆப்பரேஷன் செய்வதற்கு, உங்களுக்கு பணமும் தருகிறேன். மேலும், 
ஆப்பரேஷன் fail ஆனால் கூட, நீங்கள் காரணமில்லை என்று  கையெழுத்து கூட போடுகிறேன். காரணம், 
உங்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை" என்றான்.


அதே போல,
நாமும் தெய்வத்திடம் அந்த அளவுக்கு நம்பிக்கை கொண்டு, கையெழுத்து போட்டு தன்னை ஒப்படைத்து விட வேண்டும்.
டாக்டர் செய்த ஆப்பரேஷன் கூட fail ஆகலாம் என்று சொல்ல வாய்ப்பு உண்டு.
ஆனால், பெருமாளிடம் தன்னை  ஒப்படைத்தவன் தோற்றதே கிடையாது.

ஆப்பரேஷன் செய்து நோய் குணமாகும் வரை, நமக்கு ஏற்படும் தற்காலிக சங்கடங்கள் போல,  
பெருமாளிடம் தன்னை  ஒப்படைத்த பின், நம் நன்மைக்காக அவர் செய்யும் ஆப்பரேஷனால் ஏற்படும் துன்பம் கூட, ஒரு காரணத்துக்காகவே, தற்காலிக துன்பமே என்று நாம் உணர வேண்டும். அவ்வப்போது வரும் கஷ்டங்கள் தானாகவே பனி போல விலகி விடும்.

மகான்களும் தங்கள் வாழ்வில் ஏற்படும் துன்ப காலத்தை இந்த ஞானத்தினால் உணர்ந்து, துன்ப காலத்தை தைரியம் இழக்காமல் கழிக்கின்றனர்.

"இன்பமும், துன்பமும் தெய்வ இஷ்டம்" என்று இருந்தால், ஸ்ரீக்ருஷ்ணரே நம் குடும்ப பொறுப்பை சேர்த்து நிர்வாகிப்பார்.

சம்சார சூழலில் சிக்கி நோய்வாய்ப்பட்டு இருக்கும் நாம், நாராயணன் (தன்வந்திரி) என்ற வைத்தியரிடம் தன்னை ஒப்படைத்து விட்டால், அந்த வைத்தியரே சரியான சிகிச்சை செய்து, மோக்ஷம் என்ற ஆனந்தம் வரை கிடைக்க செய்திடுவார்..


வாழ்க ஹிந்துக்கள்.. வாழ்க ஹிந்து தர்மம்..

குருவே துணை.