Followers

Search Here...

Showing posts with label ராம குணம். Show all posts
Showing posts with label ராம குணம். Show all posts

Saturday, 8 May 2021

What are the Qualities of Ram? ராமபிரானின் குணங்களை அறிந்த பிறகு, யார் தான் இவரை வழிபட மாட்டேன் என்பார்கள்? ராமபிரானின் குணங்களை அறிவோம்.. வால்மீகி ராமாயணம்.

ராமபிரானின் குணங்களை அறிந்த பிறகு, யார் தான் இவரை வழிபட மாட்டேன் என்பார்கள்?

ராமபிரானின் குணங்களை அறிவோம்.. வால்மீகி ராமாயணம்.


स हि रूपोपपन्नश्च वीर्यवाननसूयकः |

भूमावनुपमः सूनुर्गुणैर्दशरथोपमः ||


ச ஹி ரூபோபபன்னஸ் ச

வீர்யவான் அனசூயக: |

பூமாமௌ அனுபம:

ஸூனு: குணை: தசரதோபம: ||

 - வால்மீகி ராமாயணம்


ராமபிரான் பேரழுகு உடையவர். அதே சமயம் மஹாவீரனுமாக இருக்கிறார். பேரழகும், மஹாவீரமும் கொண்ட இவருக்கு யாரிடமும் அஸூயை கிடையாது. (குற்றம் செய்தவனிடத்தில் பிற திறமையோ, நல்ல குணமோ இருந்தால் அதையும் குறையாக சொல்லமாட்டார்) இவருடைய கல்யாண குணங்களை கண்டால், தசரதன் போல இருக்கிறார்.

இது போன்ற ஒரு பிள்ளை, தசரதரை தவிர, எந்த ஒரு தகப்பனுக்கும் இல்லை.


Rama is beautiful in form, a hero of valor and without envy. By virtues, he was like Dasaratha. In this way, he was an incomparable son on earth.




स च नित्यं प्रशान्तात्मा मृदुपूर्वं तु भाषते |

उच्यमानोऽपि परुषं नोत्तरं प्रतिपद्यते ||


ச ச நித்யம் ப்ரஸாந்த ஆத்மா

ம்ருது பூர்வம் து பாஷாதே |

உச்யமானோ அபி புருஷம்

ந உத்தரம் ப்ரதி பத்யதே ||

 - வால்மீகி ராமாயணம்


பேரழகுடையவர், மஹாவீரர், ஒருவர் செய்த குற்றத்தை பார்த்து அவர்களின் மற்ற திறனையும் குணத்தையும் தோஷமாக சொல்லாதவர் என்பது மட்டுமல்ல, எந்த சமயத்திலும் புன்சிரிப்புடனேயே ஸ்வபாவமாகவே இருக்கிறார். இவர் பேசினால் அத்தனை மிருதுவாக பேசுவார். ராமபிரானை யாராவது கடுமையான வார்த்தைகள் கொண்டு பேசினாலும், மஹாவீரனாக இருந்தும், பதிலுக்கு பதில் பேசாமல், எதிர்வாதம் செய்யாமல் இருப்பார்.


That Rama was always peaceful in mind and spoke softly. He did not react even to the harsh words spoken by others


कथञ्चिदुपकारेण कृतेनैकेन तुष्यति |

न स्मरत्यपकाराणां शतमप्यात्मवत्तया ||


கதஸ்சித் உபகாரேன

க்ருதேன ஏகேன துஷ்யதி |

ந ஸ்மரதி அபகாரானாம்

சதம் அபி ஆத்மவத்தயா ||

 - வால்மீகி ராமாயணம்


தனக்கு ஒருவன் எதிர்பாராவிதமாக அறியாமலேயே ஒரே ஒரு சிறு உபகாரம் செய்தாலும், அந்த உபகாரத்தையே நினைத்து பார்ப்பார் ராமபிரான். அவன் தனக்கு எத்தனை கெடுதல் செய்து இருந்தாலும் அதை நினைத்து கூட பார்க்க மாட்டார் ராமபிரான்.


That Rama, because of his good bent of mind, feels glad even by whatever way a good thing is done to him. He does not remember any number of bad things done to him.

शीलवृद्धैर्ज्ञानवृद्धैर्वयोवृद्धैश्च सज्जनैः |

कथयन्नास्त वै नित्यमस्त्रयोग्यान्तरेष्वपि ||


ஷீல வ்ருத்தை: ஞான வ்ருத்தை:

வயோ வ்ருத்தை: ச சஜ்-ஜனை: |

கதயன் ஆஸ்த வை நித்யம்

அஸ்த்ர யோக்ய அந்தரேஷு அபி ||

 - வால்மீகி ராமாயணம்


க்ஷத்ரிய குலத்தில் அவதரித்த ராமபிரான், அஸ்த்ர பயிற்சி செய்து கொண்டிருந்தாலும், எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்குமோ, அப்பொழுதெல்லாம், தன்னை விட ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களிடமோ, தன்னை விட ஞானத்தில் உயர்ந்தவர்களிடமோ, தன்னை விட வயதில் உயர்ந்தவர்களிடமோ, தன்னை விட குணத்தில் உயர்ந்தவர்களிடமோ, ஆசையோடு சகஜமாக பேசி பழகுவார். (அதாவது கீழ்த்தரமான சிந்தனை, கீழ்த்தரமான ஒழுக்கம், அறிவு உடையவர்களிடம் பேசி, தன்னுடைய நேரத்தை வீண் செய்யவே மாட்டார் ராமபிரான்)


Whenever he finds some time even while practising archery, Rama used to converse with elderly people, elder by way of conduct or wisdom or age or with good- natured people.





बुद्धिमान्मधुराभाषी पूर्वभाषी प्रियंवदः |

वीर्यवान्न च वीर्येण महता स्वेन विस्मितः || 


புத்திமான் மதுரா பாஷீ

பூர்வ பாஷீ ப்ரியம் வத: |

வீர்யவான் ச வீர்யேன

மஹதா ஸ்வேன விஸ்மித: ||

 - வால்மீகி ராமாயணம்


பேரழகு உடையவர், மகாவீரர், ம்ருதுவாக பழகுபவர் என்பது மட்டுமல்ல, மஹாபுத்திசாலியாகவும் இருப்பவர். ராமபிரானின் பேச்சு தேன் போல இனிக்கும். இப்படிப்பட்ட ராமபிரானை பார்ப்பவர்கள் பேச ஆசை இருந்தாலும் பிரமித்து போய் நின்று விடுவார்கள். ஆதலால், தன்னை பார்க்க யார் வந்தாலும், ராமபிரானே கர்வமில்லாமல் தானே முன் வந்து பேசி, மற்றவர் தயக்கத்தை போக்கி உரையாடுவார். மஹாவீரர்களுக்குள் மஹாவீரன் ராமபிரான். இத்தனை பெருமை இருந்தாலும் துளி கூட கர்வமே இல்லாதவர்.


Rama was a wise man. He used to speak sweetly. He was the first man to initiate a talk. His speech was compassionate. He was valorous. But he was not arrogant of his mighty valor


न चानृतकथो विद्वान् वृद्धानां प्रतिपूजकः |

अनुरक्तः प्रजाभिश्च प्रजाश्चाप्यनुरज्यते ||


ந ச அந்ருத கதோ வித்வான்

வ்ருத்தானாம் ப்ரதி பூஜக: |

அனுரக்த: ப்ரஜாபி: ச

ப்ரஜா: ச அபி அனுரஜ்யதே ||

 - வால்மீகி ராமாயணம்


ராமபிரான் உண்மைக்கு புறம்பாக பேசியதே இல்லை. நன்கு கற்று அறிந்தவர். தன்னை விட மூத்தவர்களை எத்தனை முறை பார்த்தாலும் பூஜித்து மரியாதை செய்பவர். தன்னுடைய மக்களிடம் பேரன்பு கொண்டவர். மக்களும் ராமபிரானை பெரிதும் நேசித்தனர்.


He did not speak untruth. He was all knowing. He used to be receptive and worshipful to the elders. People used to love him and he used to love the people.

सानुक्रोशो जितक्रोधो ब्राह्मणप्रतिपूजकः |

दीनानुकम्पी धर्मज्ञो नित्यं प्रग्रहवाञ्शुचिः ||


சானுக்ரோஸ: ஜிதக்ரோதோ

ப்ராஹ்மண ப்ரதி-பூஜக: |

தீனானுகம்பி தர்மஞோ

நித்யம் ப்ரக்ரஹவான் ஸுசி: ||

 - வால்மீகி ராமாயணம்


ராமபிரான் யாரை பார்த்தாலும் தன்னால் ஏதாவது உதவ முடியுமா? என்று பார்ப்பார். யாரிடத்திலும் பரிவு உடையவர். கோபத்தை ஜெயித்தவர். இவர் அனுமதி இல்லாமல் கோபம் இவரை நெருங்கவே முடியாது. ப்ராம்மணர்களை எப்பொழுது பார்த்தாலும், எத்தனை முறை பார்த்தாலும் பூஜித்து மரியாதை செய்வார்.  எந்த நிலையில் இருந்தாலும் தன்னையே நம்பி ஒருவன் வந்து விட்டால், அவர்களுக்கு கருணையை வர்ஷிப்பவர். தர்மம் தெரிந்தவர். சுய கட்டுப்பாடு என்றுமே உடையவர். எப்பொழுதும் எந்த நிலையிலும் தன் ஒழுக்கத்தை மீறாதவர் ராமபிரான்.


He had compassion. He conquered anger. He used to be receptive and worshipful to the wise. He had mercy towards the meek. He knew what was to be done. He had always self-control. He was clean (in conduct).


कुलोचितमतिः क्षात्रं धर्मं स्वं बहुमन्यते |

मन्यते परया कीर्त्या महत्स्वर्गफलं ततः ||


குலோ சித்தமதி: க்ஷாத்ரம்

தர்மம் ஸ்வம் பஹு மன்யதே |

மன்யதே பரயா கீர்த்யா

மஹத் ஸ்வர்க பலம் தத: ||

 - வால்மீகி ராமாயணம்


க்ஷத்ரிய குலத்தில் அவதரித்த ராமபிரான், 'தர்மத்தை மீறாமல், தன் வாழ்க்கையை நடத்தி காட்ட வேண்டும். இந்த வாழ்க்கை நெறியே தனக்கு அழியா புகழையும், புண்ணியத்தையும் தந்து விடும்' என்று உறுதி கொண்டவர். இதனாலேயே, ராமபிரானை தர்மத்தில் வாழ விரும்பும் மற்ற அரசர்களுக்கும் பிடிக்கும். க்ஷத்ரியர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார் ராமபிரான்.


That Rama, having an attitude suitable for his social rank, giving due respect to righteousness of warrior-class, believed that by following the righteousness he would attain great fame and through it the fruit of heaven





नाश्रेयसि रतो विद्वान्न विरुद्धकथारुचिः |

उत्तरोत्तरयुक्तीनां वक्ता वाचस्पतिर्यथा ||


ந அஸ்ரேயசி ரதோ வித்வான்

ந விருத்த கதா ருசி: |

உத்தரோத்தர யுக்தீனாம்

வக்தா வாசஸ்பதி: யதா ||

 - வால்மீகி ராமாயணம்


அனாவசியமான காரியங்கள், அசைவுகள் கூட ராமபிரானிடம் காண முடியாது. அதாவது காரணம் இல்லாமல் கைகளால் தாளம் போடுவது, கால் ஆட்டுவது என்று கூட செய்ய மாட்டார். காரணம் இல்லாமல் எந்த காரியமும் அனாவசியமாக செய்யவே மாட்டார். மஹா பண்டிதன். ஒழுக்கத்தை மீறும் வீண் பேச்சு கதைகளில் ராமபிரானுக்கு விருப்பமே கிடையாது. வாசஸ்பதி போல, ராமபிரான் பேசினால், அந்த பேச்சில் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும்? என்று தெளிவாக செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன? என்று புரியும்.


Rama was not interested in actions, which were not beneficial. He was a scholar. He had no taste in tales opposing righteousness. Like vachaspathi, his eloquent speech contained a series of strategies for action.

अरोगस्तरुणो वाग्मी वपुष्मान्देशकालवित् |

लोके पुरुषसारज्ञस्साधुरेको विनिर्मितः ||


அ-ரோக: தருணோ வாக்மீ

வபுஷ்மான் தேச காலவித் |

லோகே புருஷ சாரஞ

சாது: ஏகோ விநிர்மித: ||

 - வால்மீகி ராமாயணம்


ராமபிரான் ஒரு நோய் கூட இல்லாமல் ஆரோக்யமாக இருக்கிறார். பெரிய கூட்டத்திலும் அழகாக பேசக்கூடிய பேச்சாளர். அருமையான உடல் அமைப்பு உடையவர். காலம் எப்படி இருக்கிறது? நேரம் எப்படிப்பட்டது? என்று நன்கு உணர்ந்து செயல்பட கூடியவர். ஆண்களை பற்றி நன்கு அறிந்தவர். இந்த உலகத்தில் அவதரித்த ஒரே சாத்வீகர், நல்லவர்.


Rama was a young man without any disease. He was a good speaker. He had a good body. He knew both time and place. He could grasp the essence of men. He was the one gentleman born on earth.


स तु श्रेष्ठैर्गुणैर्युक्तः प्रजानां पार्थिवात्मजः |

बहिश्चर इव प्राणो बभूव गुणतः प्रियः ||


ச து ஸ்ரேஷ்டை: குணை: யுக்த:

ப்ரஜானாம் பார்திவ ஆத்மஜ: |

பஹிஸ்சர: இவ ப்ராணோ

பபூவ குணத: ப்ரிய: ||

 - வால்மீகி ராமாயணம்


இப்படிப்பட்ட உயர்ந்த குணங்களை உடைய ராமபிரானை மக்கள் பெரிதும் விரும்பினர். ராமபிரானை தன் உயிராகவே மதித்தனர்.


People loved the virtuous prince Rama and treated him as their spirit moving outside.


सम्यग्विद्याव्रतस्नातो यथावत्साङ्गवेदवित् |

इष्वस्त्रे च पितुः श्रेष्ठो बभूव भरताग्रजः ||


சமயக் வித்யா வ்ரத: நாதோ

யதாவத்ஸ அங்க வேதவித் |

இஷ்வஸ்த்ரே ச பிது: ஸ்ரேஷ்ட

பபூவ பரதா க்ரஜ: ||

 - வால்மீகி ராமாயணம்


வேதமும், வேதத்தின் அங்கங்களையும் நன்கு கற்று அறிந்து, கல்வியை முடித்த ராமபிரான், அவர் தந்தை தசரதரை விட வில்லையும், அம்பையும் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்று இருந்தார்.


After completing his education properly, Rama, after knowing the veda along with vedanga-s as prescribed, became better than his father in the use of bow and arrows.




कल्याणाभिजनः साधुरदीनः सत्यवागृजुः |

वृद्धैरभिविनीतश्च द्विजैर्धर्मार्थदर्शिभिः ||


கல்யாணபி ஜன: சாது:

அதீன: சத்ய வாக்ருஜூ: |

வ்ருத்தை: அபி விநீத: ச

த்விஜை: தர்மார்த தர்ஸிபி: ||

 - வால்மீகி ராமாயணம்


உயர்ந்த கல்யாண குணங்கள் நிரம்ப பெற்று இருந்த ராமபிரான் சாதுவாகவே இருக்கிறார். எந்த நிலையிலும் யாரிடமும் அடைக்கலம் கேட்காதவர். உண்மையே பேசுபவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் நேரடியாக பேசுபவர். வயதானவர்களிடம் கடிந்து பேசவே மாட்டார். வயதானவர்களிடம் விநயத்தோடு பழகுவார் ராமபிரான். வேதம் அறிந்த ராமபிரான் 'தர்மம் எது?' என்று நன்கு அறிந்தவர்.


Rama, having born in a good clan, was gentle minded. He was not feeble. He spoke truth. He was straightforward. He was properly trained by elderly brahmana-s those who knew righteousness.

धर्मकामार्थतत्त्वज्ञः स्मृतिमान्प्रतिभानवान् |

लौकिके समयाचारे कृतकल्पो विशारदः || 


தர்ம காமார்த தத்வஞ:

ஸ்ம்ருதிமான் ப்ரதி பானவான் |

லௌகிகே சமயாசாரே

க்ருத கல்போ விசாரத: ||

 - வால்மீகி ராமாயணம்


அறம், பொருள், இன்பம் என்பதின் உண்மையான  தத்துவத்தை நன்கு உணர்ந்தவர் ராமபிரான். எதையும் மறக்காமல் நினைவில் வைத்து இருப்பவர். எந்த சமயத்திலும் இவருடைய பேச்சில் தெளிவு இருக்கும். இவருடைய செயல்பாடுகள், அந்தந்த காலத்துக்கு, சூழ்நிலைக்கு, சமுதாயத்துக்கு ஏற்றதாகவே இருக்கும். அடடா! அவர்களிடம் இப்படி செய்து இருக்கலாமே! அந்த சமயத்தில் அப்படி செய்து இருக்கலாமே! என்று பிறகு வருந்தும் படியாக இவர் செயல்கள் இருந்ததே இல்லை.


Rama knew the real form of desire, wealth and righteousness. He had a good memory power. He had a spontaneous wisdom. He had skills in arranging customs useful to society prevalent at that time.





निभृतः संवृताकारो गुप्तमन्त्रः सहायवान् |

अमोघक्रोधहर्षश्च त्यागसंयमकालवित् || 


நிப்ருத: சம்வ்ருதாகாரோ

குப்தமந்த்ர: சஹாயவான் |

அமோக க்ரோத ஹர்ஷ: ச

த்யாக ஸம்யம காலவித் ||

 - வால்மீகி ராமாயணம்


யாரிடமும் பணிவாகவே இருப்பார் ராமபிரான். தன்னுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்டி கொள்ளவே மாட்டார். தன்னுடைய எண்ணங்களை, விருப்பத்தை தனக்குள்ளேயே வைத்து இருப்பார் ராமபிரான். எப்பொழுதும் எந்த நிலையிலும் மற்றவருக்கு உதவி செய்வார் ராமபிரான். அவர் கோபமும், மகிழ்ச்சியும் அமோகமானது. வீண் கோபம், வீண் சிரிப்பு, மகிழ்ச்சி இவரிடம் கிடையவே கிடையாது. ராமபிரானுக்கு ஒன்றை எப்பொழுது கொடுக்க வேண்டும்? எப்பொழுது கொடுக்க கூடாது? என்று நன்றாக தெரியும்.


Rama was humble. He did not let his feelings appear outwardly. He kept his thoughts to himself. He helped others. His anger and pleasure were not wasteful. He knew when to give and when not to give.


दृढभक्तिः स्थिरप्रज्ञो नासद्ग्राही न दुर्वचाः |

निस्तन्द्रिरप्रमत्तश्च स्वदोषपरदोषवित् ||


த்ருட பக்தி: ஸ்திர ப்ரஞோ

ந அஸத் க்ராஹீ ந துர்வசா: |

நிஸ்தந்த்ரி: அப்ரமத்த: ச

ஸ்வ-தோஷ பர-தோஷ வித் |

 - வால்மீகி ராமாயணம்


தர்மத்தை காப்பதில் உறுதி கொண்டவர். அதர்மம் செய்தால், நடு காட்டில் தனியாக இருந்தாலும் எதிர்த்து காட்டுவார். ஒன்று சொன்னால் பிறகு அதிலிருந்து மாறவே மாறாதவர். நிச்சய புத்தி கொண்டவர். தனக்கு  தர்மம் தெரியும், வீண்பிடிவாத குணமே இல்லாதவர் ராமபிரான். யாரை பற்றியும் குறையே சொல்ல மாட்டார். எந்த சமயத்திலும் காரியமே இல்லாமல் சும்மா உட்கார்ந்து இருக்கவே மாட்டார் ராமபிரான். எந்த காலத்திலும், எந்த நிலையிலும் விழிப்புடனேயே இருப்பார் ராமபிரான். தன்னுடைய தவறுகளையும் தெரிந்தவர், பிறருடைய தவறையும் நன்கு அறிந்து இருப்பவர் ராமபிரான். 


Rama had a firm devotion and steadfast mind. He was not stubborn nor did he speak evil words. He was free from idleness and was ever alert. He recognized his own errors and those of others.


शास्त्रज्ञश्च कृतज्ञश्च पुरुषान्तरकोविदः |

यः प्रग्रहानुग्रहयोर्यथान्यायं विचक्षणः || 


சாஸ்த்ரஞ க்ருதஞ: ச

புருஷாந்தர கோவித: |

ய: ப்ரக்ர: அனுக்ரஹயோ:

யதான்யாயம் விசக்ஷண: ||

 - வால்மீகி ராமாயணம்


பல சாஸ்திரத்தை படித்து ஞாபகத்தில் வைத்து மற்றவர் வியக்க பேசுபவர் மட்டுமல்ல, தானே சாஸ்திரம் சொன்னது போல நடந்து காட்டுபவர் ராமபிரான். பலர் கூடி விவாதங்கள் செய்யும் போது, ஒவ்வொருத்தரும் என்ன நினைக்கிறார்கள்? என்று தெளிவாக அறிந்து கொள்பவர் ராமபிரான். தர்மப்படி யாரை காக்க வேண்டும்? தர்மப்படி யாரை தண்டிக்க வேண்டும்? என்று தெளிவாக அறிந்தவர் ராமபிரான்.


Rama knew the theory and practice of sciences. He understood the differences among men. He could judiciously discriminate whom to protect and whom to punish.


सत्संग्रहप्रग्रहणे स्थानविन्निग्रहस्य च |

आयकर्मण्युपायज्ञः संदृष्टव्ययकर्मवित् || 


சத்சங் க்ரஹ ப்ரக்ரஹனே

ஸ்தானவித் நிக்ரஹஸ்ய ச |

ஆயகர்மணி உபாயஞ:

சம்-த்ருஷ்டவ்யய கர்மவித் ||

 - வால்மீகி ராமாயணம்


நல்லவர்களோடு அதிகம் பழகியவர் யார்? என்று கண்டுபிடிப்பதில் வல்லவர். அப்படிப்பட்டவர்களை காப்பதில் பெரும் விருப்பம் உடையவர் ராமபிரான். யார் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்? என்று தெளிவாக அறிந்தவர் ராமபிரான். எப்படி சம்பாத்தியம் செய்ய வேண்டும்? எப்படி செலவு செய்ய வேண்டும்? என்கிற அரசியல் அறிவு உடையவர் ராமபிரான்.


He identified good men and protected them. He knew the people worthy of reprimand. He knew the ways and means of getting income as well as the system of spending, as perceived by economic sciences.

श्रैष्ठ्यं शास्त्रसमूहेषु प्राप्तो व्यामिश्रकेषु च |

अर्थधर्मौ च संगृह्य सुखतन्त्रो न चालसः ||


ஸ்ரைஷ்டயம் சாஸ்த்ர சமூஹேஷு

ப்ராப்தோ வ்யாமிஸ்ரகேஷு ச |

அர்த தர்மௌ ச சம்க்ருஹ்ய

சுக தந்த்ரோ ந ச ஆலஸ: ||

- வால்மீகி ராமாயணம்


மஹா அறிவாளிகள் கூடும் சமூகத்தில், தன்னுடைய உயர்ந்த ஞானத்தை (மெய் அறிவு) வெளிபடுத்துபவர் ராமபிரான். சுகமாக இருப்பதற்காக அறத்தை மீறி, எந்த பொருளையும் ஏற்க மாட்டார் ராமபிரான். அறம், பொருள் காரணம் அறிந்தால் மட்டுமே, அதில் கிடைக்கும் சுகத்தை ஏற்பார். சோம்பேறியாக உட்கார்ந்து இருக்கவே மாட்டார்.


Rama could obtain great skill in the groups of sciences along with their subsidiaries. He was interested in enjoying comforts only after understanding the economy and virtues. He never remained inactive.




वैहारिकाणां शिल्पानां विज्ञातार्थविभागवित् |

आरोहे विनये चैव युक्तो वारणवाजिनाम् || 


வைஹாரிகாணாம் ஷில்பானாம்

விஞாத அர்த விபாகவித் |

ஆ-ரோஹே வினயே ச ஏவ

யுக்தோ வாரண வாஜினாம் ||

 - வால்மீகி ராமாயணம்


பலவித கலைகள் (பலவிதமாக பூ தொடுப்பது, பலவிதமாக கேசத்தை அலங்காரம் செய்வது...)  தெரிந்த ராமபிரான் பிறரை மகிழ்ச்சி குறையாமல் பார்த்து கொள்வதில் சாமர்த்தியம் கொண்டவர். தன்னுடைய சொத்தை எப்படி பகிர வேண்டும்? என்று நன்கு அறிந்தவர். க்ஷத்ரியனாக குதிரை சவாரி செய்வதில் வல்லவர். எந்த மிருகமானாலும் அதை பழக்குவதில் வல்லவர் ராமபிரான். 


Rama was acquainted with the fine arts useful for entertainment. He knew how to distribute the wealth. He was efficient in riding and also taming of elephants and horses.

धनुर्वेदविदां श्रेष्ठो लोकेऽतिरथसम्मतः |

अभियाता प्रहर्ता च सेनानयविशारदः || 


தனுர் வேத விதாம் ஸ்ரேஷ்டோ

லோகே அதிரத சம்மத: |

அபியாதா ப்ரஹர்தா ச

சேனாநய விசாரத: ||

 - வால்மீகி ராமாயணம்


உலகத்திலேயே இவரை போல வில்லை பயன்படுத்தும் சிறந்தவர்கள் கிடையாது. அம்பு எய்வதில் வல்லவர்கள் யாவரும் ராமபிரானை மதிப்பார்கள். தன்னுடைய பெரும் சேனையை வழிநடத்தி செல்வதில் வல்லவர். எதிரிகளை போர் களத்தில் நேருக்கு நேர் சந்தித்து வதம் செய்வதில் வல்லவர் ராமபிரான்.


Rama was the best of persons knowing the science of archery in the world; and was well appreciated by the champions of archery. He attained skills in marshalling the army. He faced and killed the enemies in battle.


अप्रधृष्यश्च संग्रामे क्रुद्धैरपि सुरासुरैः |

अनसूयो जितक्रोधो न दृप्तो न च मत्सरी |

न चावमन्ता भूतानां न च कालवशानुगः || 


அப்ர-த்ருஷ்ய: ச சங்க்ராமே

க்ருத்தை: அபி சுர: அசுரை: |

அனசூயோ ஜித-க்ரோதோ

ந த்ருப்தோ ந ச மத்சரீ |

ந ச அவமந்தா பூதானாம்

ந ச கால வசானுக: ||

 - வால்மீகி ராமாயணம்


தேவர்களும், அசுரர்களும் கூட ராமபிரானை போரில் தோற்கடிக்கவே முடியாது. ராமபிரானுக்கு யாரை பார்த்தாலும் பொறாமை ஏற்படுவதே கிடையாது. கோபத்தை ஜெயித்தவர். இத்தனை தகுதி இருந்தும், ராமபிரானுக்கு துளி கூட திமிரும் கிடையாது, மற்றவரை கண்டு எரிச்சலும் கிடையாது. மனிதனை மட்டுமல்ல, எந்த உயிரையும் அலட்சியம் செய்ய மாட்டார் ராமபிரான். அது சிறு அணிலாக இருந்தாலும் சரி, குதிரையாக இருந்தாலும் சரி.. அலட்சியம் செய்யவே மாட்டார். விதிக்கு கட்டுப்படாதவர் ராமபிரான். அதாவது தான் விரும்பியதை செயல்படுத்துவதில் வல்லவர். 


Even enraged celestials and demons could not defeat Rama in battle. He had no jealousy. He conquered anger. He had no arrogance and envy. He had not even humiliated any living being. He had not surrendered to time.


एवं श्रेष्ठगुणैर्युक्तः प्रजानां पार्थिवात्मजः |

सम्मतस्त्रिषु लोकेषु वसुधायाः क्षमागुणैः |

बुद्ध्या बृहस्पतेस्तुल्यो वीर्येणापि शचीपतेः ||


ஏவம் ஸ்ரேஷ்ட குணை: யுக்த:

ப்ரஜானாம் பார்திவ ஆத்மஜ: |

சம்மத: த்ரிஷு லோகேஷு

வசுதாயா: க்ஷமா குணை: |

புத்த்யா ப்ருஹஸ்பதே: துல்யோ

வீர்யேன் அபி ஸசி பதே: ||

 - வால்மீகி ராமாயணம்


இப்படி அபரிமிதமான குண கடலாக இருக்கும் ராமபிரான் மக்களிடம் நியாயமாக நடந்து கொண்டார். மூன்று உலகத்துக்கும் சம்மதமாக தர்மத்தை மீறாமல் இருக்கிறார் ராமபிரான். பூமாதேவிக்கு நிகரான பொறுமையை தன் ஒழுக்கத்தால் கடைபிடித்தார் ராமபிரான். ப்ருஹஸ்பதிக்கு நிகரான புத்திமானாக இருக்கிறார் ராமபிரான். வீரத்தில் இந்திரனை போல இருக்கிறார் ராமபிரான்.


That Prince Rama, with these good virtues, was fair to the people. He was agreeable to the three worlds. By patience and the related virtues, he was equal to earth, by wisdom to Brihaspathi and by valor to Devendra.





तथा सर्वप्रजाकान्तैः प्रीतिसञ्जननैः पितुः |

गुणैर्विरुरुचे रामो दीप्तः सूर्य इवांशुभिः ||


ததா சர்வ ப்ரஜா காந்தை:

ப்ரீதி சஜ்ஜனனை: பிது: |

குணை: விரு-ருசே ராமோ

தீப்த: சூர்ய இவாம் ஸுபி: ||

 - வால்மீகி ராமாயணம்


இவருடைய ஒழுக்கத்தால், அனைத்து மக்களும் இவரிடம் ஈர்க்கப்பட்டு இருக்கின்றனர். ராமபிரானை கண்டு பேரானந்தம் அடையும் மக்களை பார்த்து தசரதர் ஆனந்தப்பட்டார். சூரியன் தன் கிரணங்களை சிதறடித்து ப்ரகாசிப்பது போல, ராமபிரான் தன்னுடைய கடல் போன்ற கல்யாண குணங்களால் பிராகாசிக்கிறார்.


Rama, by his virtues, was a source of happiness to all the people and a spring of joy to his father. As the sun shines with his rays, Rama was shining, thus, with his virtues.


तमेवं व्रत्तसंपन्नमप्रधृष्यपराक्रमम् |

लोकपालोपमं नाथमकामयत मेदिनी ||


தமேவம் வ்ரக்த சம்பன்னம்

அப்ரத்ருஷ்ய பராக்ரமம் |

லோக-பாலோபமம் நாதம்

அகாமயத மேதிநீ ||

 - வால்மீகி ராமாயணம்


'சுய ஒழுக்கம், தர்மத்தை மீறாத செயல்பாடுகள், எதிர்க்க முடியாத பராக்ரமம் கொண்ட ராமபிரானே அரசாள வேண்டும்' என்று உலக மக்கள் ஆசைப்பட்டனர். 

 

The earth wished Rama to be her Lord as he was adorned with self -control and norms of behavior bearing undefeatable valor equal to that of universal lords like Indra.


एतैस्तु बहुभिर्युक्तं गुणैरनुपमैः सुतम् |

दृष्ट्वा दशरथो राजा चक्रे चिन्तां परन्तपः ||



ஏதை: து பஹுபி: யுக்தம்

குணை: அனுபமை: சுதம் |

த்ருஷ்ட்வா தசரதோ ராஜா

சக்ரே சிந்தாம் பரம் தப: ||

 - வால்மீகி ராமாயணம்


தன்னுடைய புத்திரனான ராமபிரானின் ஒப்பில்லா ஒழுக்கங்களையும், செயல்பாடுகளையும் கவனித்த தசரதர் தனக்குள் சிந்திக்கலானார்..


Dasaratha, who annihilates enemies, started thinking as follows after observing his son with his many incomparable virtues.


अथ राज्ञो बभूवैवं वृद्धस्य चिरजीविनः |

प्रीतिरेषा कथं रामो राजा स्यान्मयि जीवति ||


அத ராஞோ பபூவைவம்

வ்ருத்தஸ்ய சிர ஜீவின: |

ப்ரீதி: ஏஷா கதம் ராமோ

ராஜா ஸ்யான் மயி ஜீவதி ||

 - வால்மீகி ராமாயணம்


நீண்ட ஆயுளுடைய தசரதர் "நான் இருக்கும் போதே, ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்து விடலாமா? அந்த காட்சியை தான் இருக்கும் போதே பார்த்து ஆனந்தம் அடையலாமா?" என்று சிந்திக்கலானார்.


The long living and aged Dasaratha thought: "Will Rama become king while I am still alive? Shall I enjoy that happiness?"


एषा ह्यस्य परा प्रीतिर्हृदि सम्परिवर्तते |

कदा नाम सुतं द्रक्ष्याम्यभिषिक्तमहं प्रियम् ||


ஏஷா ஹி அஸ்ய பரா ப்ரீதி:

ஹ்ருதி சம்-பரிவர்ததே |

கதா நாம சுதம் த்ரக்ஷ்யாமி

அபிஷிக்தம் அஹம் ப்ரியம் ||

 - வால்மீகி ராமாயணம்


"எப்பொழுது தன் மகனை அரசனாக பார்க்கலாம்?" என்ற எண்ணம் தசரதர் மனதில் தோன்றி கொண்டே இருந்தது.


A great loving thought was ringing in his mind that when he would be able to see his beloved son Rama crowned as a king.


वृद्धिकामो हि लोकस्य सर्वभूतानुकम्पनः |

मत्तः प्रियतरो लोके पर्जन्य इव वृष्टिमान् ||


வ்ருத்த காமோ ஹி லோகஸ்ய

சர்வ பூத அனுகம்பன: |

மத்த: ப்ரியதரோ லோகே

பர்ஜன்ய இவ வ்ருஷ்டிமான் ||

 - வால்மீகி ராமாயணம்


மேகங்கள் தான் வைத்திருக்கும் மழைநீரை கொட்டி, உலகத்தை குளிர்விப்பது போல, என்னை காட்டிலும் ராமனை பார்த்து மக்கள் குளிர்ந்து இருக்கிறார்கள். இந்த உலக மக்களின் வளர்ச்சியில் பெரிதும் விருப்பம் கொண்டுள்ளான் என் ராமன். அனைத்து உயிரிடத்திலும் பரிவு கொண்டு இருக்கிறான், என் ராமன்" என்று பார்த்தார் தசரதர்.


"Is not Rama, as a raining cloud to the earth, better liked by people than me, as he desires the development of the world and has compassion towards all living beings."


यमशक्रसमो वीर्ये बृहस्पतिसमो मतौ |

महीधरसमो धृत्यां मत्तश्च गुणवत्तरः ||


யம சக்ர சமோ வீர்யே

ப்ருஹஸ்பதி சமோ மதொள |

மஹீதர சமோ த்ருத்யாம்

மத்த: ச குணவத்தர: ||

 - வால்மீகி ராமாயணம்


"எதிரிகளுக்கு யமனாக இருக்கிறான், என் ராமன். வீரத்தில் இந்திரனுக்கு நிகராக இருக்கிறான், என் ராமன். புத்தியில் ப்ருஹஸ்பதிக்கு நிகராக இருக்கிறான், என் ராமன். மலை போல தன் முடிவில் உறுதியாக இருக்கிறான், என் ராமன். என்னை விட குணத்தில் உயர்ந்து இருக்கிறான், என் ராமன்." என்று பார்த்தார் தசரதர்.


"Rama is equal to Yama and Devendra in valor, to Brihaspati in wisdom and to a mountain in courage. He is more virtuous also than me."




महीमहमिमां कृत्स्नामधितिष्ठन्तमात्मजम् |

अनेन वयसा दृष्ट्वा यथा स्वर्गमवाप्नुयाम् ||


மஹீமஹம் இமாம் க்ருத்ஸ்னாம்

அதி திஷ்டந்தம் ஆத்மஜம் |

அநேந வயசா த்ருஷ்ட்வா

யதா ஸ்வர்கம் அவாப்னுயாம் ||

 - வால்மீகி ராமாயணம்


"என் ராமன், இந்த உலகை ஆள்வதை பார்த்த பிறகு நாம் சொர்க்கம் சென்று விடலாமா?" என்று நினைத்தார் தசரதர்.


"Shall I attain heaven, after seeing in this age, my son ruling the entire earth?"



इत्येतैर्विविधैस्तैस्तैरन्यपार्थिवदुर्लभैः |

शिष्टैरपरिमेयैश्च लोके लोकोत्तरैर्गुणैः ||

तं समीक्ष्य महाराजो युक्तं समुदितैः शुभैः |

निश्चित्य सचिवैः सार्धं युवराजममन्यत ||


இத்யேதை: விவிதை: தை தை

அன்ய பார்திவ துர்லபை: |

சிஷ்டை: அபரிமேயை: ச

லோகே லோகோத்தரை: குணை: ||

தம் சமீக்ஷ்ய மஹாராஜோ

யுக்தம் சமுதிதை: சுபை: |

நிஸ்சித்ய ஸசிவை: சார்தம்

யுவராஜம் அமன்யத ||

 - வால்மீகி ராமாயணம்


இது வரை சொன்ன கல்யாண குணங்கள் மட்டும் தான் ராமபிரானிடம் இருந்தது என்றில்லாமல், இன்னும் யாரும் பார்க்காத இதையும் விட பல கல்யாண குணங்களை கொண்டிருந்தார் ராமபிரான். 

ராமருடைய கல்யாண குணங்களை கணக்கிடவே முடியாது. அவரிடம் உள்ள கல்யாண குணங்களே உலகில் சிறந்தவை. 

இப்படிப்பட்ட தன் மைந்தன் ராமனை அரியணை ஏற்ற தசரதரும் அவரது மந்திரிகளும் முடிவு செய்தனர்.


Rama had many other virtues beyond hitherto stated virtues not to be seen in other kings. His virtues cannot be counted and they are the best in the world. Seeing that type of virtuous Rama, Dasaratha along with his ministers, decided to make Rama the prince.


'தனி மனித ஒழுக்கமற்றவன்' மட்டுமே ராமரின் குணத்தை அறிந்த பிறகும், ராமபிரானை வெறுப்பான். 

ராமபிரானை வெறுப்பவர்களை, மனிதனாக மதிக்க கூடாது.


ஜெய் ஸ்ரீ ராம்...

Jai Sri Ram.