ராஜ தர்மம்:
ஆட்சி செய்பவன் எதை விட்டு விலகி இருக்க வேண்டும்? என்று பீஷ்மர் சொல்கிறார்.
व्यसनानि च सर्वाणि
त्यजेथा भूरिदक्षिण |
न चैव न प्रयुञ्जीत्
सङ्गं तु परिवर्जयेत ||
- வியாசர் மஹாபாரதம்
நிரம்ப தானம் அளிப்பவனே! யுதிஷ்டிரா !
அரசாட்சி செய்பவன், வ்யஸனங்களை (தீய விஷயங்கள்) விட்டு விலகி இருக்க வேண்டும்.
எந்த சமயத்திலும், வ்யசனங்களில் ஆசை கொண்டு, செயல் செய்ய கூடாது
नित्यं हि व्यसनी लॊके
परिभूतॊ भवत्य उत |
उद्वेजयति लॊकं चाप्य
अति द्वेषी महीपतिः ||
- வியாசர் மஹாபாரதம்
வ்யஸனமுள்ள (தீய செயல்களை செய்யும்) அரசன் உலகத்தில் அவமதிக்கப்படுவான்.
பிறரை கண்டு வெறுக்கும் குணமுள்ள அரசனாக இருந்தால், அவனை கண்டு உலகம் நடுங்கும்.
வ்யஸனங்கள் (தீய செயல்) மொத்தம் 18 என்று சொல்லப்படுகிறது:
- பொழுதுபோக்காக வேட்டை ஆடுவது
- பணயம் வைத்து பகடை ஆடுவது (gambling)
- பகலில் தூங்குவது
- மற்றவரை திட்டுவது
- பெண்களிடம் மோகம் கொள்வது
- மதம் கொள்வது (கர்வம்)
- பொழுதுபோக்க பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது
- கூத்து பார்ப்பது
- பொழுதுபோக்க வாத்தியங்கள் இசைக்க சொல்லி கேட்பது
- மது குடிப்பது
இந்த 10 வ்யஸனங்கள் காமத்தால் (உலக ஆசை) உண்டாகின்றன.
- தெரியாத குற்றத்தை வெளியிடுவது
- குற்றமில்லாதவனை தண்டிப்பது
- கபடமாக கொல்வது
- பிறர் பெருமையை கண்டு பொறாமை அடைவது
- பிறர் நற்குணங்களை, தோஷமாக சொல்வது
- பிறர் சொத்தை பிடுங்க முயற்சிப்பது
- கீழ்த்தரமாக பேசுவது
- நியாயமில்லாத தண்டனை கொடுப்பது
இந்த 8 வ்யஸனங்கள் கோபத்தால் உண்டாகின்றன.
கோபமும், காமமும் உள்ள அரசன், இந்த தீய செயல்களை செய்கிறான்.
காமத்தையும், கோபத்தையும் அடக்கி இருக்கும் அரசன், இந்த செயல்களில் ஈடுபடாமல் இருப்பான்.