"ஹிந்துக்கள் கடவுளை உருவம் செய்து வணங்குவதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?"
இது ரமணரிடம் ஒரு வெளிநாட்டவர் கேட்ட கேள்வி.
"இந்த தேகமே நான் என்று இருக்காமல், நாம் இந்த தேகத்தில் குடி இருக்கும் 'ஆத்மா' என்று ஹிந்துக்கள் உணர்ந்து இருப்பதால், இந்த ஜீவ ஆத்மாக்கள் பல விதமான உடம்பில் பிரவேசித்து செயல்பட முடியுமென்றால், ஜீவ ஆத்மாவுக்கு காரணமான, பரமாத்மா, பக்தனுக்காக, ஒரு சிலையில் தன்னை பிரவேசித்து அணுகிரஹம் செய்ய முடியும். பக்தி உள்ளவனுக்கு பரமாத்மா சிலையில் தன்னை பிரவேசித்து அணுகிரஹம் செய்கிறார்.
தான் இந்த உடம்பில் இருந்து விடு பட்ட பின், தான் ஆத்மா மட்டுமே என்று உணர்பவனுக்கு, உருவ வழிபாடு தேவை இல்லை. இதனால், ஹிந்துக்கள் உருவ வழிபாடு், அரூப வழிபாடு இரண்டையும் ஒப்புக்கொள்கின்றனர்.
எல்லாம் படைத்த கடவுளுக்கு இதை செய்ய முடியாது, இவருக்கு சக்தி கிடையாது, இப்படி வர மாட்டார் என்று மனித புத்தி கொண்டு சொல்வது, இறைவனின் மகத்துவத்தை குறைப்பதாகும்.
மனிதர்களால் எழுதப்பட்ட மதங்கள் இப்படி தான் இறைவனின் தரத்தை தாழ்த்தும்.
ஹிந்துக்கள் பரந்த மனம் கொண்டவர்கள். இறைவனின் மகத்துவத்தை குறைத்து அவமானப்படுத்துபவர்கள் அல்ல. உண்மையை உணர்ந்தவர்கள்.
இந்த காரணத்தினாலேயே, ஹிந்துக்கள் மட்டுமே பிறர் நம்பிக்கையை மடத்தனமாக இருந்தாலும் கேலி செய்ய பொதுவாக விரும்புவதில்லை.