Followers

Search Here...

Showing posts with label யார் பக்கம். Show all posts
Showing posts with label யார் பக்கம். Show all posts

Tuesday, 3 January 2023

துரியோதனின் சகோதரன் 'யுயுத்ஸு' யார் பக்கம் நின்று போரிட்டான்? அறிவோம் மகாபாரதம் (வியாசர்)

பகவத்கீதை உபதேசித்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை சோகத்தில் இருந்து விடுவித்தார்.

யுதிஷ்டிரர் போர்க்களத்தில் கௌரவ சேனைக்கு நடுவே சென்று, பீஷ்மர், துரோணர், கிருபர், மாத்ரியின் சகோதரரும் (மாதுலரும்/மாமா) மத்ர தேச அரசருமான சல்யன் போன்றவர்களிடம் போருக்கான அனுமதியும், அவர்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றார்.


सञ्जय उवाच। (சஞ்சயன் ஞான திருஷ்டியால் மேலும் சொல்கிறார்)

அப்பொழுது,

वासुदेवस्तु राधेयमाहवे अभिजगाम वै।

तत एनम् उवाचेदं पाण्डवार्थे गदाग्रजः ।।             

श्रुतं मे कर्ण भीष्मस्य द्वोषात्किल न योत्स्यसे।

अस्मान्वरय राधेय यावद्भीष्मो न हन्यते ।।

- மஹாபாரதம் (வியாசர்)

வாசுதேவ கிருஷ்ணர், கர்ணனை நோக்கி சென்றார். பாண்டவர்களுக்காக கர்ணனிடம் இவ்வாறு பேசலானார். "ராதையின் புதல்வனே! ராதேயா ! பீஷ்மரிடம் உனக்கு இருக்கும் த்வேஷத்தால், நீ யுத்தம் செய்யப்போவதில்லை என்று கேள்விப்பட்டேன். பீஷமர் இருக்கும் வரை நீ எங்களுடன் சேர்ந்து யுத்தம் செய்யலாமே!"

हते तु भीष्मे राधेय पुनरेष्यसि संयुगम् ।

धार्तराष्ट्रस्य साहाय्यं यदि पश्यसि चेत्समम् ।।

- மஹாபாரதம் (வியாசர்)

"ராதேயா ! பீஷமர் ஒருவேளை கொல்லப்பட்டால், அப்போது நீ தார்த்தராஷ்டிரனான துரியோதனனுக்கு உதவி செய்ய விரும்பினால் மறுபடியும் அவர்கள் பக்கம் இருந்து யுத்தம் செய்யலாமே!" என்று கேட்டார்.

कर्ण उवाच। (கர்ணன் சொன்னான்)

न विप्रियं करिष्यामि धार्तराष्ट्रस्य केशव ।

त्यक्तप्राणं हि मां विद्धि दुर्योधन हितैषिणम् ।।

- மஹாபாரதம் (வியாசர்)

"கேசவா! துரியோதனனுக்கு பிடிக்காத காரியத்தை நான் செய்ய  மாட்டேன். நான் துரியோதனுக்கு நன்மை செய்வதிலும், அவனுக்காக என் உயிரை கொடுப்பதிலும் விருப்பம் உள்ளவன் என்று நீங்கள் அறிவீர்கள்" என்று கூறினான்.


सञ्जय उवाच। (சஞ்சயன் ஞான திருஷ்டியால் மேலும் சொல்கிறார்)

तच्छ्रुत्वा वचनं कृष्णः संन्यवर्तत भारत ।

युधिष्ठिरपुरोगैश्च पाण्डवैः सह संगतः ।।            

- மஹாபாரதம் (வியாசர்)

கர்ணன் பதிலுரைத்த பிறகு, ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிரரும் பாண்டவர்களும் இருக்கும் பாண்டவ சேனை பக்கம் சென்றார்.


अथ सैन्यस्य मध्ये तु प्राक्रोशत् पाण्डवाग्रजः ।

योऽस्मान्वृणोति तमहं वरये साह्यकारणात् ।। 

- மஹாபாரதம் (வியாசர்)

பாண்டவ சேனையின் மத்தியில் இருந்த யுதிஷ்டிரர், "எங்களை எவர்கள் விரும்புகின்றார்களோ, அவர்களை நான் உதவிக்கு அழைக்கிறேன்" என்று இரைந்து கூறினார்.

अथ तान्समभिप्रेक्ष्य युयुत्सु:  इदमब्रवीत् ।

प्रीतात्मा धर्मराजानं कुन्तीपुत्रं युधिष्ठिरम् ।।

- மஹாபாரதம் (வியாசர்)

இப்படி யுதிஷ்டிரர் கூறியதை கேட்ட துரியோதனின் சகோதரனும், த்ருதராஷ்டிரனுக்கும் அவன் தாதிக்கும் பிறந்தவனான நல்ல மனமுடைய யுயுத்ஸு, தர்மராஜனும் குந்தி புத்ரனுமான யுதிஷ்டிரரை பார்த்து இவ்வாறு பேசலானான்.


अहं योत्स्यामि भवतः संयुगे धृतराष्ट्र-जान् ।

युष्मदर्थं महाराज यदि मां वृणुषेऽनघ ।।

- மஹாபாரதம் (வியாசர்)

"மஹாராஜரே! குற்றமற்றவரே! நீர் விரும்பினால் நான் உம்முடைய சேனையோடு இருந்து கொண்டு, த்ருதராஷ்டிர புத்ரர்களோடு போர் புரிவேன்." என்றான்.


युधिष्ठिर उवाच। (இதை கேட்ட யுதிஷ்டிரர் பதில் சொல்ல ஆரம்பித்தார்)

एह्येहि सर्वे योत्स्यामस्तव भ्रातॄनपण्डितान्।

युयुत्सो वासुदेवश्च वयं च ब्रूम सर्वशः ।।            

वृणोमि त्वां महाबाहो युध्यस्व मम कारणात्।

त्वयि पिण्डश्च तन्तुश्च धृतराष्ट्रस्य दृश्यते ।।

भजस्वास्मान्राजपुत्र भजमानान् महाद्युते ।

न भविष्यति दुर्बुद्धि: धार्तराष्ट्रोऽत्यमर्षणः ।।

- மஹாபாரதம் (வியாசர்)

"யுயுத்ஸு..  வா..  வா..  நாம் அனைவரும் உன்னுடைய சகோதர்களுடன் போர் புரிவோம். வாசுதேவ கிருஷ்ணரும் நாங்களும் சேர்ந்து சொல்கிறோம். உறுதியான புஜங்கள் கொண்டவனே! நான் உன்னை ஏற்கிறேன். எனக்காக நீ யுத்தம் செய். உன்னால் திருதராஷ்டிரரின் சந்ததியும், பித்ருகளுக்கு பிண்டமும் கிடைக்க போகிறது என்று பார்க்கிறேன். கெட்ட புத்தியுள்ளவனும், பொறாமை குணமுள்ளவனுமான துரியோதனன் இனி இருக்க போவதில்லை" என்றார்.


सञ्जय उवाच।  (சஞ்சயன் ஞான திருஷ்டியால் த்ருதராஷ்ட்ரிடம் மேலும் சொல்கிறார்)

ततो युयुत्सुः कौरव्यान् परित्यज्य सुतांस्तव।

जगाम पाण्डु पुत्राणां सेनां विश्राव्य दुन्दुभिं ।।

- மஹாபாரதம் (வியாசர்)

அரசே! இதற்கு பிறகு, யுயுத்சு கௌரவ சேனையுள்ள உன் புத்திரர்களை விட்டு விட்டு, துந்துபி வாத்யத்தை முழங்கி கொண்டே, பாண்டு புத்திரர்களின் சேனையை அடைந்தான்.


அதன் பிறகு,

மிகவும் உற்சாகத்துடன்  யுதிஷ்டிரர், தங்கத்தால் பிரகாசமாக இருக்கும் கவசத்தை மறுபடியும் அணிந்து கொண்டார்.


பாண்டவர்கள் அனைவரும் அவரவர்கள் தேரில் ஏறிக்கொண்டார்கள்.