யமன், ஏன் விதுரனாக பிறந்தார்?
वैशंपायन उवाच। வைசம்பாயனர் ஜனமேஜெயனுக்கு மஹாபாரத சரித்திரத்தை சொன்னார்..
பழமையான ஒரு காலத்தில், வேதத்தின் அர்த்தம் அறிந்த, பெரும் புகழுடைய மகிமையுள்ள ஒரு ப்ரம்ம ரிஷி, திருடாமல் இருந்த போது, திருடி விட்டார் என்று நினைத்து, அரசன் கழு மரத்தில் ஏற்றி விட்டான்.
वैदार्थविच्च भगवान् ऋषि: विप्रो महायशाः।
शूले प्रोतः पुराणर्षि: अचोर: चोर शङ्कया।।
ஆணீமாண்டவர் என்ற அறியப்பட்ட அந்த ரிஷி, யம லோகம் சென்று, தர்ம தேவனான யமதர்மனை பார்த்து இவ்வாறு சொன்னார்.
अणीमाण्डव्य इत्येवं विख्यातः स महायशाः।
स धर्ममाहूय पुरा महर्षि: इदमुक्तवान्।।
"தர்மனே! நான் சிறுவனாக இருந்த போது, ஒரு பறவையை இரும்பினால் குத்தி இருக்கிறேன். அந்த பாபம் தான் என் நினைவில் இருக்கிறது. வேறு பாபம் செய்யவில்லை. அந்த பாபத்தை நான் இதுவரை செய்த 1000 மடங்காக அளவற்று நான் செய்த தபசு எப்படி போக்காமல் இருந்தது? உயிர் கொலை பாபம் என்றால், பிராம்மணனை கொன்ற மஹாபாபம் உனக்கும் உண்டு. அந்த பாபத்தினால் நீ சூத்திரனின் யோனியில் பிறப்பாய்" என்று சபித்தார்.
इषीकया मया बाल्याद्विद्धा ह्येका शकुन्तिका।
तत्किल्बिषं स्मरे धर्म न अन्यत् पापम् अहं स्मरे।।
तन्मे सहस्रममितं कस्मान्नेहाजयत्तपः।
गरीयान् ब्राह्मणवधः सर्वभूतवधाद्यतः।।
तस्मात्त्वं किल्बिषाद् तस्मात् छूद्र योनौ जनिष्यसि।
இந்த சாபத்தின் காரணமாக, தர்ம தேவன், வித்வானாக, தர்மம் அறிந்தவனாக சூத்திர யோனியில் விதுரனாக பிறந்தார்.
तेन शापेन धर्मोऽपि शूद्रयोनावजायत।।
विद्वान् विदुर रूपेण धार्मिकः किल्बिषात् ततः।
- aadi parva (vyasa mahabharata)