மிலேச்சன் யார்?
यत्त्वं मे हृदयाज्जातो वयः स्वं न प्रयच्छसि।
तस्मात्प्रजा समुच्छेदं तुर्वसो तव यास्यति।।
संकीर्ण आचारधर्मेषु प्रतिलोमचरेषु च।
पिशिताशिषु चान्त्येषु मूढ राजा भविष्यसि।।
गुरुदारप्रसक्तेषु तिर्यग्योनिगतेषु च।
पशुधर्मेषु पापेषु म्लेच्छेषु त्वं भविष्यसि।।
- ஆதி பர்வம் (மஹாபாரதம்)
"உனக்கு பிறக்கும் சந்ததிகள், ஆசார தர்மங்களில் விலகியும், வர்ண கலப்பில் ஏற்கப்படாத மணம் புரிந்து கொண்டும், மாமிசம் சாப்பிடுவதில் பெரும் ஆர்வம் கொண்டும், குருவின் மனைவியை அடைய துணிபவனாகவும், திர்யக் ஜாதியின் நடையுள்ளவர்களும், மிருகத்தை போல (சாப்பிடுவதற்காக வாழ்வது) வாழ்பவர்களும், பாபத்தை செய்வதில் தயக்கம் இல்லாதவர்களுமான மிலேச்சர்களுக்கு நீ அரசனாக இருப்பாய்" என்று யயாதி தன் மகனான துர்வஸுவை சபித்தார்.