Followers

Search Here...

Showing posts with label மஹா பாரத. Show all posts
Showing posts with label மஹா பாரத. Show all posts

Sunday, 26 March 2023

மகாபாரதம் படிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன? வைசம்பாயணர் (வியாசரின் சிஷ்யர்) சொல்கிறார். அறிவோம் மஹாபாரதம்.

"சர்பயாகம் செய்கிறான்" என்று கேள்விப்பட்ட வியாசர்,

ஜனமேஜெயன் தீக்ஷை பெற்று அமர்ந்து இருக்கும் சர்ப யாகசாலையில் பிரவேசித்தார்.

श्रुत्वा तु सर्पसत्राय दीक्षितं जनमेजयम्।

अभ्यगच्छद् ऋषि: विद्वान् कृष्णद्वैपायन: तदा।।


ஜனமேஜெயன், யாக சாலைக்கு வந்த வியாச பகவானை நமஸ்கரித்து, பாத்யம், அர்க்ய தீர்த்தம் கொடுத்து வரவேற்று, ஆசனம் கொடுத்தார்.


மேலும்,

"வியாச பகவன்!கௌரவர்கள் பற்றியும் பாண்டவர்கள் பற்றியும் தாங்கள் நேரில் அறிவீர்கள். அவர்களுக்குள் எப்படி விரோதம் ஏற்பட்டது? நீங்கள் அந்த வரலாற்றை சொல்ல, அதை நான் கேட்க ஆசைப்படுகிறேன்.

எண்ணிலடங்கா உயிர்கள் மடிய காரணமான அந்தப் பெரும்போர், எனது பாட்டனார்களுக்குள் ஏன் நடந்தது? 

அவர்களின் தெளிந்த அறிவும் விதியால் மூடப்பட்டதோ? 

ஓ பிராமணர்களில் சிறந்தவரே ! 

அதை எனக்கு முழுமையாக, எவை எவை எவ்வாறு நடந்தனவோ அவற்றை அவ்வாறே சொல்ல வேண்டும். பகவன்! நீங்கள் நடந்தவற்றை அறிந்தவர் என்பதால் உங்களிடம் நடந்ததை கேட்க விரும்புகிறேன்" என்றார் ஜனமேஜயன்.

जनमेजय उवाच।

कुरूणां पाण्डवानां च भवान् प्रत्यक्ष दर्शिवान्।

तेषां चरितम् इच्छामि कथ्यमानं त्वया द्विज।।

कथं सम भवद् भेद: तेषाम् अक्लिष्ट कर्मणाम्।

तच्च युद्धं कथं वृत्तं भूतान्त करणं महत्।।

पितामहानां सर्वेषां दैवेनाविष्ट चेतसाम्।

कार्त्स्न्येनैतन्ममाचक्ष्व यथा वृत्तं द्विजोत्तम।

इच्छामि तत्त्वतः श्रोतुं भगवन् कुशलो ह्यसि।।


ஜனமேஜயனின் பிரார்த்தனையை கேட்ட கிருஷ்ண த்வைபாயனர் என்ற வியாசர், தனது அருகில் அமர்ந்திருந்த தமது சீடரான வைசம்பாயனரை பார்த்து இவ்வாறு பேசலானார்,

सौति: उवाच।

तस्य तद् वचनं श्रुत्वा कृष्णद्वैपायनस्श: तदा।

शशास शिष्यम् आसीनं वैशंपायनम् अन्तिके।।

"முன்பு கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் இருந்த பிரிவை, நீ என்னிடம் எவ்வாறு கேட்டறிந்தாயோ, அவ்வாறே, மன்னனுக்கு (ஜனமேஜயனுக்கு) முழுமையாக அப்படியே சொல்என்றார்.

व्यास उवाच।

कुरूणां पाण्डवानां च यथा भेदो अभवत्पुरा।

तद् अस्मै सर्वम् आचक्ष्व यन्मत्तः श्रुतवानसि।।

गुरो: वचनम् आज्ञाय स तु विप्रर्षभस: तदा।

आचचक्षे ततः सर्वम् इतिहासं पुरातनम्।।

राज्ञे तस्मै सदस्येभ्यः पार्थिवेभ्य: च सर्वशः।

भेदं सर्व विनाशं च कुरु पाण्डवयो स: तदा।।

Adi parva 60


வைசம்பாயணர் (வியாசரின் சிஷ்யர்) சுருக்கமாக மஹாபாரத சரித்திர நிகழ்வை ஜனமேஜெயனுக்கு சொன்னார்.

"தனக்கு விரிவாக சொல்ல வேண்டும்" என்று ஜனமேஜெயன் கேட்க, 

வைசம்பாயணர் பாரதத்தின் பெருமையை ஜனமேஜெயனுக்கு விரிவாக சொல்ல ஆரம்பிக்கிறார்.

அரசே! கொஞ்ச நேரம் (ஓய்வு) எடுத்து கொண்டு வாருங்கள். இந்த புண்ணியமான சரித்திரத்தை பற்றி எவ்வாறு கிருஷ்ண த்வைபாயணர் (வியாசர்) சொன்னாரோ, அப்படியே விவரமாக சொல்கிறேன்.

वैशंपायन उवाच।

क्षणं कुरु महाराज विपुलो अयमनुक्रमः।

पुण्याख्यानस्य वक्तव्यः कृष्णद्वैपायनेरितः।।

வியாச மஹரிஷி அனைத்து லோகங்களிலும் பூஜிக்க்கபடுகிறார். மகாத்மாவாகிய வியாசரின் அபிப்ராயத்தை அப்படியே விளக்க போகிறேன்.  

महर्षेः सर्व-लोकेषु पूजितस्य महात्मनः।

प्रवक्ष्यामि मतं कृत्स्नं व्यासस्य अमित तेजसः।।

சத்யவதி புத்ரனான  வியாச பகவான் புண்ய கர்மமான இந்த மகாபாரதத்தை, நூறு ஆயிரம் (100000) ஸ்லோகங்களாக இயற்றி உள்ளார். 

इदं शतसहस्रं हि श्लोकानां पुण्य कर्मणाम्।

सत्यवति आत्मजेनेह व्याख्यातम् अमितौजसा।।

இந்த மகாபாரதத்தை உபாக்யானங்கள் (பல உதாரணங்கள்) மூலமும் மேலும் விரிவாக அறிந்து கொள்ளலாம். இப்போது நான் உங்களுக்கு வியாசர் கொடுத்த கிரந்தபடியே அப்படியே சொல்லப்போகிறேன். 

उपाख्यानैः सह ज्ञेयं श्राव्यं भारतम् उत्तमम्।

संक्षेपेण तु वक्ष्यामि सर्वमेतन् नराधिप।।

200 (100*2) அத்தியாயங்களும், 100 (100*1) பர்வங்களும், நூறு ஆயிரம் (1,00,000) ஸ்லோகங்களும் உள்ளன. மகரிஷி வியாசர் 100 பர்வங்களையும் 18 (8+10) பெரும் பர்வங்களுக்குள் தொகுத்து கொடுத்துள்ளார்.

अध्यायानां सहस्रे-द्वे पर्वणां शतम्-एव च।

श्लोकानां तु सहस्राणि नवतिश्च दशैव च।

ततो अष्टा-दशभिः पर्वैः संगृहीतं महर्षिणा'।।

இந்த வியாச மஹாபாரதத்தை சொல்லும் மனிதனும், அதை கேட்கும் மனிதனும், பூலோக ஆயுசு முடிந்த பிறகு, ப்ரம்ம லோகமான சத்ய லோகம் சென்று, பிரம்மாவுக்கு நிகரான ஆனந்தத்தை பெறுவார்கள்.

य इदं श्रावयेद् विद्वान्ये चेदं शृणुयुः नराः।

ते ब्रह्मणः स्थानमेत्य प्राप्नुयुः देव-तुल्यताम्।।

மகாபாரதம் வேதத்திற்கு நிகரானது. புண்ணியங்களுக்குள் உத்தமமானது. கேட்கத்தக்கவைகளில் மிகவும் உத்தமமானது. இந்த புராணம் ரிஷிகளால் மிகவும் போற்றப்படுகிறது.

इदं हि वेदैः समितं पवित्रम् अपि च उत्तमम्।

श्राव्याणाम् उत्तमं च इदं पुराणम् ऋषि संस्तुतम्।।

இந்த மஹாபுண்யமான இதிகாசத்தில் பொருள், இன்பம் போன்ற புருஷார்த்தங்கள் விரிவாக உபதேசிக்கப்பட்டுள்ளது 

अस्मिन् अर्थ: च काम: च निखिलेन: उपदेक्ष्यते।

इतिहासे महापुण्ये बुद्धिश्च परिनैष्ठिकी।।

உயர்ந்த குணம் உடையவர்களிடமோ, சுயநலமின்றி மற்றவருக்கு கொடுப்பதில் ஆர்வம் உள்ளவரிடமோ, உண்மையிலிருந்து விலகாதவரிடமோ, கடவுளை நம்பாத நாஸ்தீகனாக இல்லாமல் இருப்பவரிடமோ, வேதமாகிய இந்த மகாபாரதத்தை சொல்லி, அதன் மூலம் அர்த்தம் (பொருள்) சம்பாதிக்கலாம். 

अक्षुद्रान् दानशीलांश्च सत्यशीलान् अ-नास्तिकान्।

कार्ष्णं वेदम् इमं विद्वान् छ्रावयित्वा अर्थम् अश्नुते।।

ப்ரூண ஹத்தி (கருவில் இருக்கும் குழந்தையை தெரிந்தே கொல்லுதல்) செய்வதால் ஏற்படும் பாபத்தை, வியாச மஹாபாரதம் கேட்பதாலேயே நிச்சயமாக போக்கி கொள்ள முடியும். 

भ्रूणहत्या कृतं च अपि पापं जह्याद् असंशयम्।

इतिहासम् इमं श्रुत्वा पुरुष: अपि सुदारुणः।।

வியாச மகாபாரதத்தை படிப்பவர்கள், ராகுவால் விழுங்கபட்ட சந்திரன் எப்படி கிரகணம் முடிந்து பிரகாசமாக வெளிப்படுகிறானோ அது போல, பாபங்கள் அனைத்தும் விலகி, புண்ணிய ஆத்மாவாக ஆகிறார்கள் 

मुच्यते सर्व पापेभ्यो राहुणा चन्द्रमा यथा।

இந்த வியாச மஹாபாரதம் வெற்றிக்கான இதிகாசம். வெற்றி அடைய ஆசைப்படுபவர்கள், இந்த இதிஹாசத்தை கேட்க வேண்டும்.

जयो नाम इतिहासो अयं श्रोतव्यो विजिगीषुणा।।

நாட்டை ஆள ஆசைபடுபவன், வியாச மகாபாரதத்தை கேட்டால் எதிரிகளை ஜெயித்து பூமியை தன் வசப்படுத்தி கொள்வான்.

महीं विजयते राजा शत्रूं च अपि पराजयेत्।

வியாச மகாபாரதத்தை கேட்டால், நிச்சயம் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்.

इदं पुंसवनं श्रेष्ठम् इदं स्वस्त्ययनं महत्।।

தேசத்தின் அரசியும், யுவராஜனும் அவசியம் கேட்க வேண்டியது வியாச மஹாபாரதம். இதை கேட்பதால், தேசத்தின் அரசி வீரமிகுந்த புத்திரனையோ, ராஜ்யத்தை நடத்தும் திறன் படைத்த பெண்ணையோ பெற்றெடுப்பாள். 

महिषी युवराजाभ्यां श्रोतव्यं बहुशस्तथा।

वीरं जनयते पुत्रं कन्यां वा राज्य भागिनीम्।।

வ்யாசரால் கொடுக்கப்பட்ட இந்த மஹாபாரதத்தில், புண்ணியங்களை கொடுக்கும் தர்ம சாஸ்திரமும் (அறம்), அர்த சாஸ்திரமும் (பொருள்), மோக்ஷ சாஸ்திரமும் (வீடு) நிரம்ப கிடக்கிறது.

धर्म-शास्त्रम् इदं पुण्यम् अर्थ-शास्त्रम् इदं परम्।

मोक्ष-शास्त्रम् इदं प्रोक्तं व्यासेनामित बुद्धिना।

அறம், பொருள், இன்பம், வீடு போன்றவற்றை பற்றி இந்த இதிகாசத்தில் என்னென்ன சொல்லப்பட்டு இருக்கிறதோ, அது தான் மற்ற தர்ம சாஸ்திரங்களில் உள்ளது. இதில் இல்லாதது என்று ஏதுமில்லை.

धर्मे च अर्थे च कामे च मोक्षे च भरतर्षभ।

यदिहास्ति तद् अन्यत्र यन्नेहास्ति न कुत्रचित्।

இந்த வியாச மகாபாரதத்தை பிராம்மணர்கள் கேட்டு கொண்டும், சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இனியும் சொல்லிகொண்டே இருப்பார்கள். இனியும் கேட்டு கொண்டே இருப்பார்கள்.

इदं हि ब्राह्मणै: लोके आख्यातं ब्राह्मणेषु इह'।

संप्रत्याचक्षते चेदं तथा श्रोष्यन्ति चापरे।।

வியாச மகாபாரதத்தை கேட்பதால், பிள்ளைகள் தாய் தந்தையை கைவிடாதவர்களாக இருப்பார்கள். கொடுத்த வேலையை செய்பவர்கள் (employee) இதை கேட்பதால், எஜமானனுக்கு (employer) விருப்பபட்டதை செய்பவர்களாக இருப்பார்கள். பரத வம்சத்தில் பிறந்தவர்களை பற்றி பொறாமை இல்லாமல் கேட்பவர்களுக்கு வியாதியை கண்டு பயம் ஏற்படாது. அவர்களுக்கு பரலோகத்தை கண்டு பயமில்லை என்று சொல்லவும் வேண்டுமா?

पुत्राः शुश्रूषवः सन्ति प्रेष्या: च प्रियकारिणः।

भरतानां महज्जन्म शृण्वताम् अनसूयताम्।

न अस्ति व्याधि-भयं तेषां परलोकभयं कुतः।।

வியாச மஹாபாரதத்தை கேட்கும் மனிதன், உடலால், பேச்சினால், மனதால் செய்த பாபத்தை அழித்து கொள்கிறான்.

शरीरेण कृतं पापं वाचा च मनसैव च।

सर्वं संत्यजति क्षिप्रं य इदं शृणुयान् नरः।।

செல்வத்தையும், புகழையும், நீண்ட ஆயுளையும், புண்ணியத்தையும், ஸ்வர்க்கத்தையும் கொடுக்கக்கூடிய இந்த மகாபாரதம் என்ற புண்ணிய கிரந்தம், கிருஷ்ண த்வைபாயனரால் கொடுக்கப்பட்டது.

धन्यं यशस्यम् आयुष्यं पुण्यं स्वर्ग्यं तथैव च।

कृष्णद्वैपायनेनेदं कृतं पुण्य चिकीर्षुणा।।

இந்த மஹாபாரதத்தில், பாண்டவர்களின் புகழை உலகிற்கு காட்டினார். மேலும் இந்த பூலோகத்தில் ஆண்டு கொண்டிருந்த பல பொலிவுள்ள க்ஷத்ரியர்கள் பற்றியும் சொல்கிறார். 

कीर्तिं प्रथयता लोके पाण्डवानां महात्मनाम्।

अन्येषां क्षत्रियाणां च भूरिद्रविण तेजसाम्।।

அனைத்து கல்வியும் தரக்கூடிய, உலகத்திற்கு சம்மதமான இந்த இதிஹாசத்தை, உலகத்தில் எந்த மனிதன் புண்ணியத்தை விரும்பி பிராம்மணர்களுக்கு சொல்வானோ, அவன் அழியா புகழுடன் இருப்பான்.

सर्व विद्या वदातानां लोके प्रथित कर्मणाम्।

य इदं मानवो लोके पुण्यार्थे ब्राह्मणाञ्छुचीन्।।

மகாபுண்யத்தை தரும், சனாதனமான தர்மத்தை சொல்லும், குரு வம்சத்தின் சரித்திரத்தை யார் கேட்கிறார்களோ அவர்களுடைய வம்சம் பெரிய வளர்ச்சி அடையும். உலகத்தில் மிகவும் கொண்டாடப்படுவார்கள். 

श्रावयेत महापुण्यं तस्य धर्मः सनातनः।

कुरूणां प्रथितं वंशं कीर्तयन् सततं शुचिः।

वंशम् आप्नोति विपुलं लोके पूज्यतमो भवेत्।।

எந்த பிராம்மணன் நியமம் தவறாமல், வருடத்தில் 4 மாதங்கள் தொடர்ந்து வியாச மகாபாரதத்தை படிப்பானோ, அவன் செய்த அனைத்து பாபங்களும் அழிந்து போகும்.

योऽधीते भारतं पुम्यं ब्राह्मणो नियत व्रतः।

चतुरो वार्षिकान् मासान् सर्वपापैः प्रमुच्यते।।

வியாச மகாபாரதத்தை படித்தவன், வேதம் முழுவதும் கற்றவன் என்று அறியலாம்.

विज्ञेयः स च वेदानां पारगो भारतं पठन्।।

இந்த வியாச மகாபாரதத்தில், தேவர்கள், ராஜரிஷிகள், முனிவர்கள், தோஷமற்ற கேசவன் {கிருஷ்ணன்},(33) தேவாதி தேவனான விஷ்ணு, அவருடைய தேவி, பல தாயாரால் வளர்க்கப்பட்ட கார்த்திகேயன் {முருகன்} பிறப்பும், பிராம்மணர்கள் மற்றும் பசுக்களின் பெருமையும், விரிவாக சொல்லப்பட்டு இருக்கிறது.

देवा राजर्षयो ह्यत्र पुण्या ब्रह्मर्षय: तथा।

कीर्त्यन्ते धूतपाप्मानः कीर्त्यते केशव: तथा।।

भगवां च अपि देवेशो यत्र देवी च कीर्त्यते।

अनेक जननो यत्र कार्तिकेयस्य संभवः।।

ब्राह्मणानां गवां च एव माहात्म्यं यत्र कीर्त्यते।

அனைத்து வேதமந்திரங்களின் தொகுப்பாக இருக்கும் இந்த வியாச மஹாபாரதத்தை, அறத்தில் (தர்மத்தில்) நாட்டமுள்ள அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்.

सर्व श्रुति समूहोऽयं श्रोतव्यो धर्म बुद्धिभिः।।

எந்த வித்வான், புண்ணியமான காலங்களில், பிராம்மணர்களுக்கு, 18 மஹாபர்வங்கள் கொண்ட வியாச மகாபாரதத்தை சொல்வார்களோ, அவர்கள் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு, சொர்க்கத்தையும் லட்சியம் செய்யாமல், பிரம்மத்துடன் நிலையாக மோக்ஷமடைவார்கள்.

य इदं श्रावयेद् विद्वान् ब्राह्मणान् इह पर्वसु।

धूतपाप्मा जित स्वर्गो ब्रह्म गच्छति शाश्वतम्।।

மறைந்த பெற்றோர்களுக்கு ஈடுபாட்டுடன் (ஸ்ரார்த்தம்) திவசம் செய்யும் போது, வியாச மஹாபாரதத்தில் உள்ள ஒரு ஸ்லோகதின் ஓர் அடியையாவது, வந்த பிராம்மணர்களை கேட்க செய்தால், அந்த ஸ்ரார்த்தம் அழியாத பயனுள்ளதாக வளர்ந்து, பித்ருக்களை போய் சேரும். பித்ருக்கள் மனநிறைவு பெற்று இருப்பர்.

श्रावयेद् ब्राह्मणान् श्राद्धे यश्चेमं पादम् अन्ततः।

अक्षय्यं तस्य तच्छ्राद्धम् उपावर्तेत् पितॄन् इह।।

ஒரு மனிதன் தெரிந்தோ, தெரியாமலோ உடலாலோ மனதாலோ செய்யும் பாபங்கள், வியாச மகாபாரதத்தை கேட்பதாலேயே அழிந்து போகும்.

अह्ना यदेनः क्रियते इन्द्रियै: मनसा अपि वा।

ज्ञानाद् अज्ञानतो व अपि प्रकरोति नर: च यत्।

तत् महाभारत आख्यानं श्रुत्वैव प्रविलीयते।।

மகத்தான பரத வம்ச இளவரசர்களின் வரலாறே "மஹாபாரதம்" என்றழைக்கப்படுகிறது.

இந்த பெயர் காரணத்தை அறிகிறவனை எல்லா பாபங்களும் விட்டு விடுகின்றன.

निरुक्तम् अस्य यो वेद सर्वपापैः प्रमुच्यते।

भरतानां महत् जन्म महाभारतम् उच्यते।।

இந்த பாரத வம்சத்தின் வரலாறு மிகவும் அற்புதமானது. இந்த வியாச மகாபாரதத்தை சொல்லும்போது, மரணத்தை தவிர்க்க முடியாத மனிதர்களின் (அநித்யமானவர்கள்) பாவங்கள் உறுதியாக அழிந்து போகும்.

महतो ह्येनसो मर्त्यान् मोचयेद् अनुकीर्तितः।

சிறந்த பெருமைகள் உடைய, சாமர்த்தியம் அறிந்த கிருஷ்ண த்வைபாயனர் என்ற வியாச பகவான், 3 வருட காலம் தூங்காமல், சுத்தமாக ஆசாரத்தோடு இருந்து, மகாபாரதத்தை முடித்தார். கடுமையான தவம் மற்றும் நியமத்துடன் இருந்து, வியாச மஹரிஷியான எங்கள் குரு இந்த மகாபாரதத்தை முடித்தார்.

त्रिभिः वर्षैः महाभागः कृष्णद्वैपायनो अब्रवीत्।।

नित्योत्थितः शुचिः शक्तो महाभारतम् आदितः।

तपो नियमम् आस्थाय कृतम् एतत् महर्षिणा।।

ஆதலால், இந்த வியாச மஹாபாரதத்தை, அனைத்து பிராம்மணர்களும் உறுதியான நியமத்தில் இருந்து கொண்டு கேட்க வேண்டும்.  

तस्मात् नियम संयुक्तैः श्रोतव्यं ब्राह्मणै: इदम्।

कृष्णप्रोक्ताम् इमां पुण्यां भारतीम् उत्तमां कथाम्।।

கிருஷ்ண த்வைபாயனர் {வியாசர்} கொடுத்த இந்த மகாபாரதத்தை எந்த பிராம்மணன் சொல்கிறாரோ, அவருக்கும், அவர் சொல்லிக் கேட்கும் மற்றவர்களுக்கும் அவர்கள் எந்நிலையில் இருந்தாலும் அவர்கள் செய்ததால், செய்யாமல் இருந்ததால் ஏற்பட போகும் கர்மங்கள் பலன்கள் நினைத்து கவலை அடைய அவசியம் இருக்காது.

श्रावयिष्यन्ति ये विप्रा ये च श्रोष्यन्ति मानवाः।

सर्वथा वर्तमाना वै न ते शोच्याः कृत अकृतैः।।

அறத்தில் (தர்மத்தில்), பொருளில் (அர்தத்தில்) விருப்பமுள்ள மனிதன், இந்த வியாச மகாபாரதத்தை முழுவதும் விடாமல் படிக்க வேண்டும். இப்படி செய்வதால், அவன் நினைத்த காரியங்கள் அனைத்தும் (தர்மமான ஆசைகள்) தானாக கைகூடும்

नरेण धर्म-कामेन सर्वः श्रोतव्य इति अपि।

निखिलेन इतिहासो अयं ततः सिद्धिम् अवाप्नुयात्।।

மஹாபுண்யத்தை தரும் வியாச மகாபாரதத்தை கேட்பதால் ஒரு மனிதன் அடைய போகும் சுகத்திற்கு நிகராக, சொர்க்கம் லோக சுகங்கள் கூட கிடையாது. 

न तां स्वर्गगतिं प्राप्य तुष्टिं प्राप्नोति मानवः।

यां श्रुत्वैवं महापुण्यम् इतिहासम् उपाश्नुते।।

ஈடுபாட்டுடன் இந்த வியாச மகாபாரதத்தை கேட்பவரும், இந்த அத்புதமான இதிகாசத்தை கேட்பிக்க செய்தவரும், ராஜசூய யாகம் செய்த பலனையும், அஸ்வமேத யாகம் செய்த பலனையும் அடைவார்கள். 

शृण्वञ्श्राद्धः पुण्यशीलः श्रावयं च इदम् अद्भुतम्।

नरः फलम् अवाप्नोति राजसूय अश्वमेधयोः।।

எப்படி கடலும், மேரு என்ற பெரிய மலையும் பல வகையான ரத்தினங்களை நிதியாக கொண்டுள்ளதோ, அது போல, இந்த வியாச மகாபாரதமும்  ரத்ன குவியல் போல பல தர்மங்களை நிதி போல வைத்து இருக்கிறது.

यथा समुद्रो भगवान् यथा मेरु: महा-गिरिः।

उभौ ख्यातौ रत्न-निधी तथा भारतम् उच्यते।।

இந்த வியாச மஹாபாரதம் வேதத்திற்கு சமமாக உள்ளது. இது, அனைத்தையும் காட்டிலும் உத்தமமான மங்களத்தை தரவல்லது. இதன் ஸ்லோகங்களை காதால் கேட்டாலேயே சுகத்தை தர வல்லது. செவிக்கு இனியது. மனதை பரிசுத்தமாக ஆக்க வல்லது. நல்ல ஒழுக்கத்தை வளர செய்ய வல்லது.

इदं हि वेदैः समितं पवित्रमषि च: उत्तमम्।

श्राव्यं श्रुति-सुखं च एव पावनं शील वर्धनम्।।

வியாசரின் மகாபாரதத்தை அனைவரும் அவசியம் கேட்க வேண்டும். ஜனமேஜெயா! அரசே! இந்த வியாச மகாபாரதத்தை படிப்பவனுக்கு, யார் தானம் கொடுக்கிறானோ அவன் சமுத்திரம் சூழ்ந்த இந்த பூமியையே தானம் செய்த புண்ணியத்தை அடைவான்.

य इदं भारतं राजन् वाचकाय प्रयच्छति।

तेन सर्वा मही दत्ता भवेत् सागरमेखला।।

பரிக்ஷித்தின் பிள்ளையே! புண்ணியத்தை அடைவதற்காகவும், வெற்றியையே அடைவதற்காகவும், நான் சொல்லப்போகும் இந்த உயர்ந்த இதிகாசத்தின் கதையை முழுவதுமாக கேளும். 

पारिक्षित कथां दिव्यां पुण्याय विजयाय च।

कथ्यमानां मया कृत्स्नां शृणु हर्षकरीम् इमाम्।।

ரிஷியான கிருஷ்ண த்வைபாயனர் 3 வருடங்கள் தூக்கத்தை விட்டு, அத்புதமான இந்த மகாபாரதத்தை கொடுத்தார். அதை அப்படியே நான் (வைசம்பாயானர்) உனக்கு சொல்ல போகிறேன். 

त्रिभि: वर्षैः सद उत्थायी कृष्णद्वैपायनो मुनिः।

महाभारतम् आख्यानं कृतवान् इदम् अद्भुतम्।।

शृणु कीर्तयतस्तन्म इतिहासं पुरातनम्।।

Adi parva 62 (Vyasa Mahabharata)

Tuesday, 5 December 2017

மஹா பாரத சமயத்தில், வங்காள தேசம்: (West Bengal, Bangladesh)

மஹா பாரத சமயத்தில், வங்காள தேசம்: (West Bengal, Bangladesh)


அங்க தேசம், வங்க தேசம் ஆகிய தேசங்கள் இந்தியாவில் உள்ள "வங்காள தேசத்தில்" (West Bengal)உள்ளது.

பௌண்ட்ரக தேசம், சுஹ்மா தேசம் இன்றைய வங்காள நாடு (Bangladesh).

அங்க தேசம் என்ற தேசம், இன்றைய வங்காள தேசத்தின் (West Bengal) மேற்கு திசையில் உள்ள ஒரு பகுதி.

வங்க தேசம் என்ற தேசம், இன்றைய வங்காள தேசத்தின் (West Bengal) கிழக்கு பகுதியையும், வங்காளத்தின் (bangladesh) மேற்கு பகுதியையும் சேர்த்த பகுதி.

பாண்டவர்களை அரக்கு மாளிகையில் வைத்து கொலை செய்ய நினைத்த துரியோதனனிடம் இருந்து தப்பித்து, சில காலம் மறைந்து வாழ்ந்தனர்.

புலிந்த தேசம் சென்று, பின்பு அங்கிருந்து பல இடங்கள் சென்று, இறுதியாக வங்க தேசத்தில் உள்ள 'ஏகசக்ரம்' என்ற ஊரில், ஒரு பிராம்மண குடும்பத்தில் தங்கினர்.
இந்த வங்க தேசத்தில், பகாசுரன் என்ற அரக்கன் மனித மாமிசம் சாப்பிட்டு அங்கிருந்தவர்களை பயமுறித்திக்கொண்டிருந்தான்.
ஊர் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.
பகாசுரனை பீமன் கொன்றான்.

இந்த அங்க தேசத்தில் ஒரு சமயம், மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான், தன் நெற்றி கண்ணால் காமதேவனை பொசுக்கிய பொழுது, அவன் அங்கம் சிதறிய இடம் என்பதால், அங்க தேசம் என்ற பெயர் பெற்றது.

இந்த அங்க தேசத்தை, பல சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர்.

பீஹார் என்று இன்று அழைக்கப்படும் தேசம், அன்று மகத தேசம் என்று அழைக்கப்பட்டது.
ஜராசந்தன் மகத தேச (பீஹார்) நாட்டு அரசன்.

ஜராசந்தன், அங்க தேசத்தின் பல பகுதியையும் கைப்பற்றி இருந்தான்.

ஜராசந்தன், துரியோதனன் இருவரும் நட்பு உள்ளவர்கள்.

துரியோதனனின் நட்புக்காக, ஜராசந்தன் "அங்க தேசத்தை" கர்ணனுக்கு கொடுத்து, அவனை சிற்றரசன் ஆக்கினான்.

அங்க தேச அரசர்கள் யாவரும்,
யுதிஷ்டிரர் நடத்திய ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டனர்.

யாகத்திற்கு ஆகும் வரவு-செலவு, யாகத்திற்கு வந்த அனைவருக்கும் வசதி, உணவு ஆகும் வரவு-செலவு பார்க்க தன் கஜானாவின் சாவியை, யுதிஷ்டிரர், அங்க அரசன் கர்ணனிடம் கொடுத்தார்.

கர்ணன் துரியோதனின் பக்கம், மேலும் இவன் தானம் உலகம் அறிந்தது, என்று தெரிந்தும், தன் கஜானாவை காலி செய்தாலும் பரவாயில்லை, யாகமும், வந்த அனைவரும் குறை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில், கர்ணனை நியமித்தார் யுதிஷ்டிரர்.
கர்ணனை விட உதார குணம் உடையவர் "யுதிஷ்டிரர்" என்ற உண்மையை, இந்த நிகழ்ச்சியில் நாம் அறியலாம்.
பௌண்ட்ரக தேச அரசன், ஸ்ரீ கிருஷ்ணரின் புகழில் காழ்ப்புணர்ச்சி கொண்டவன்.
இதன் காரணமாக, ஸ்ரீ கிருஷ்ணன் போலவே உடை உடுத்தி, கிருஷ்ணனை போலவே தானும் பலசாலி, மாயம் தெரிந்தவன் என்று சொல்லி, தன் பெயரையும் "வாசுதேவ கிருஷ்ணன்" என்று வைத்துக் கொண்டான். பௌண்ட்ரக வாசுதேவன் என்றும் அழைத்தனர்.


பௌண்ட்ரக வாசுதேவன் வங்க தேசத்தின் கிழக்கு பகுதியை கைப்பற்றினான்.

அங்க தேச அரசன் 'கர்ணன்' வங்க தேசத்தின் மேற்கு பகுதியை கைப்பற்றினான்.

ப்ரகஜ்யோதிச (அசாம்) தேச அரசன் 'பகதத்தா' வங்க தேசத்தின் வடக்கு பகுதியை கைப்பற்றினான்.

பௌண்ட்ரக வாசுதேவன், மகத அரசன் (பீஹார்) ஜராசந்தனிடம் நட்பு கொண்டவன்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்காக திக்விஜயம் புறப்பட்ட பீமன், சுஹ்ம தேசம், மற்றும் பௌண்ட்ரக தேசத்து அரசர்களையும் தோற்கடித்தான்.

பௌண்ட்ரக வாசுதேவனை போரில் தோற்கடித்து அவன் வைத்து இருந்த பெரிய சங்கை பீமன் எடுத்துக்கொண்டு சென்றான்.

பௌண்ட்ரக வாசுதேவன் யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டான்.

ஒரு சமயம், பௌண்ட்ரக வாசுதேவன் துவாரகைக்கு கடிதம் அனுப்பி, ஸ்ரீ கிருஷ்ணரை போருக்கு அழைத்தான்.
"நீ வாசுதேவனா? இல்லை நானா? என்று பார்த்துவிடலாம்" என்றான்.

சிரித்துக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணர், "அப்படி போர் புரிந்து இறக்க ஆசையிருந்தால், சரி" என்றார்.

பௌண்ட்ரக வாசுதேவனுக்கு துணையாக காசி ராஜனும் துணைக்கு வந்து போரிட்டான்.
போரில் பௌண்ட்ரக வாசுதேவன் ஸ்ரீ கிருஷ்ணரை போன்று நீல நிறத்தில் இருப்பதற்காக, சாயம் பூசிக்கொண்டு வந்திருந்தான்.
இதை பார்த்த ஸ்ரீ கிருஷ்ணருக்கு சிரிப்பு தாளவில்லை.

"இப்படி ஒரு கணவனுடன், உன் மனைவி எப்படி குடும்பம் நடத்துகிறாள்?" என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
இதனை புரிந்து கொள்ளாமல் மேலும் சண்டைக்கு இழுத்தான்.
ஸ்ரீ கிருஷ்ணர் தன் சுதர்சன சக்கரத்தின் மூலம் காசி ராஜன் தலையையும், பௌண்ட்ரக வாசுதேவன் தலையையும் கொய்து எறிந்தார்.

அங்க தேச, வங்க தேச, பௌண்ட்ரக தேச அரசர்கள் யாவரும் துரியோதனின் பக்கம் நின்று போர் புரிந்தனர்.
இந்த "பௌண்ட்ரம்" என்ற சங்கை, மஹா பாரத போரில், பீமன் விண்ணை பிளக்கும் வகையில் ஊதி, எதிரிகளை கலங்கடித்து, தான் போருக்கு தயார் என்று ஊர்ஜிதப்படுத்தினான்.

போரில் பௌண்ட்ரக வாசுதேவன் இல்லாது இருந்தாலும், அவன் படைகள் துரியோதனின் பக்கம் நின்று, அர்ஜுனனுக்கு எதிராக கடும் போர் புரிந்தனர்.

மஹா பாரத போரில், பீஷ்மர், துரோணர் வீழ்ந்த பின், அங்க அரசன் கர்ணன் தலைமை ஏற்றான்.

கர்ணனுக்கு, தேர் ஓட்ட மாத்ர அரசர் - சல்லியன் (punjab in today's pakistan) நியமிக்கப்பட்டார்.
இது சல்லியனை அவமானம் படுத்துவதாக இருந்தது. இருந்தாலும் சம்மதித்தார்.


போர் புரியும் சமயத்தில், இருவருக்கும் பல வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் கொண்ட கர்ணன், ஓரு சமயம், த்ரிதராஷ்டிரன் சபையில், வேதம் கற்ற ப்ராம்மணர்கள், 'எந்த ஒரு காலத்திலும் வாலிகர்களுடனும், அதே போன்ற செயல்களில் ஈடுபடும் மாத்ர தேசத்தவர்களுடனும் சகவாசம் வைத்துக் கொள்ள கூடாது' என்று கூறியதை நினைவு கூறி, 'நீ அந்த தேச அரசன் தானே?' என்றான்.

வேத மார்க்க வழியில் நடப்பவனை, 'நீ ஒரு வாலிகன்' என்று சொன்னால், அது ஒரு பெருத்த அவமானம்.
சல்லியன் பெரும் அவமானம் கொண்டார்.
இப்படிப்பட்ட வாக்குவாதங்களின் காரணமாக, இக்கட்டான சமயத்தில், தேர் குழியில் சிக்கி கொண்ட சமயத்தில், சல்லிய அரசர், தேரை விட்டு இறங்கி சென்று விட்டார். அங்க அரசன், கர்ணன் அர்ஜுனன் பொழிந்த அம்பு மழையில் மடிந்தான்.

போர் முடிந்த பின், அஸ்வமேத யாகத்திற்காக திக் விஜயம் செய்த அர்ஜுனன், பௌண்ட்ரக தேச நகரத்து சிற்றரசர்களையும் தோற்கடித்து, திரும்பினான்.