"யுதிஷ்டிரா! மரணத்தை பற்றியும், முதுமை பற்றியும் ஜனகருக்கு, அஸ்மர் என்ற பிராம்மணர் ஒரு சமயம் சொன்னதை, இப்பொழுது உனக்கு சொல்கிறேன்" என்று வியாசர் ஆரம்பித்தார்.
जनक उवाच
आगमे यदि वाऽपाये
ज्ञातीनां द्रविणस्य च |
नरेण प्रतिपत्तव्यं
कल्याणं कथमिच्छता ||
- வியாசர் மஹாபாரதம்
"சொந்தங்கள், செல்வங்கள் நம்மிடம் சேரும் போதும், சுகமாக இருக்கிறது. ஒருநாள் சொந்தங்களை இழக்கும் போது, சேர்த்த செல்வங்களை இழக்கும் போது, துக்கம் பீடிக்கிறது. சுகத்தையே விரும்பும் மனிதன் இந்த இரண்டு நிலையையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?" என்று ஜனகர் கேட்டார்.
अश्म उवाच (அஸ்மர் பேசலானார்)
उत्पन्नमिममात्मानं
नरस्यानन्तरं ततः |
तानितान्यनुवर्तन्ते
दुःखानि च सुखानि च ||
- வியாசர் மஹாபாரதம்
ஜனக ராஜன்! எப்பொழுது இந்த ஆத்மா சரீரம் பெற்றதோ, அன்றிலிருந்தே பல துன்பங்கள், பல இன்பங்கள் உண்டாகி விடுகிறது.
तेषामन्यतरापत्तौ
यद्यदेवोपसेवते |
तदस्य चेतनामाशु
हरत्यभ्रमिवानिलः ||
- வியாசர் மஹாபாரதம்
எப்படி காற்று மேகத்தை இழுத்துக்கொண்டு செல்லுமோ, அதுபோல, மனம் எதை (சுகம்/துக்கம்) அதிகம் பற்றிக்கொள்கிறதோ, அதை புத்தியும் இழுத்துக்கொண்டு சென்று விடும்.
मानसानां पुनर्योनि
दुःखानां चित्तविभ्रमः |
अनिष्टोपनिपातो वा
तृतीयं नोपपद्यते ||
- வியாசர் மஹாபாரதம்
மனதில் துக்கம் ஏற்பட இரண்டே இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும்.
ஒன்று, மனதில் ஏற்படும் எண்ணங்கள்.
இரண்டு, இருக்கும் துன்பத்தை மேலும் மேலும் தானே வளர்த்து கொள்வது.
இதை தவிர மூன்றாவது காரணம் ஏதுமில்லை.
एवमेतानि दुःखानि
तानि तानीह मानवम् |
विविधान्युपवर्तन्ते
तथा संस्पर्शजान्यपि ||
- வியாசர் மஹாபாரதம்
உலக விஷயங்களில் அதிக ஓட்டுதல் உடைய மனிதனுக்கு மனம் கட்டுப்படாது. ஆதலால், அவன் மனதே அவனை இது போன்ற துக்கங்களில் விழ செய்கிறது.
जरामृत्यू हि भूतानां
खादितारौ वृकाविव |
बलिनां दुर्बलानां च
ह्रस्वानां महतामपि ||
- வியாசர் மஹாபாரதம்
பலமானவனோ, பலமில்லாதவனோ, உயர்ந்தவனோ, தாழ்ந்தவனோ, யாரையும் பாரபட்சம் பார்க்காமல், உலகில் உள்ள அனைவரையும், இரண்டு ஓநாய் (செந்நாய்) போல முதுமையும், மரணமும் விழுங்கி விடுகிறது.
न कश्चिज्जात्वतिक्रामेज्
जरामृत्यू हि मानवः |
अपि सागरपर्यन्तां
विजित्येमां वसुंधराम् ||
- வியாசர் மஹாபாரதம்
கடல் சூழ்ந்த இந்த உலகையே ஒருவன் ஜெயித்து ஆண்டாளும், முதுமையையும், மரணத்தையும் ஒருபோதும் ஜெயிக்க முடியாது.
सुखं वा यदि वा दुःखं
भूतानां पर्युपस्थितम् |
प्राप्तव्यमवशैः सर्वं
परिहारो न विद्यते ||
- வியாசர் மஹாபாரதம்
அரசே! இந்த சரீரத்தோடு சேர்ந்து வந்தது சுகமும், துக்கமும். ஆதலால், சுகம் வருவதையும், துக்கம் ஏற்படுவதையும் தடுக்க முடியாது. அவ்வப்போது வரும் சுகத்தையும், துக்கத்தையும் அந்த சமயத்தில் அனுபவிக்க வேண்டுமே அன்றி, விலக்க முடியாது.
पूर्वे वयसि मध्ये वा
ऽप्युत्तरे वा नराधिप |
अवर्जनीयास्तेऽर्था वै
काङ्क्षिता ये ततोऽन्यथा ||
- வியாசர் மஹாபாரதம்
ராஜன்! மனிதனுக்கு இளமையிலோ, நடுத்தர வயதிலோ, முதுமையிலோ எந்த சமயம் வேண்டுமானாலும் துக்கம் ஸம்பவிக்கலாம். இதை தடுக்கவே முடியாது. துக்கம் மட்டுமல்ல, சுகமும் அப்படித்தான்.
अप्रियैः सह संयोगो
विप्रयोगश्च सुप्रियैः |
अर्थानर्थौ सुखं दुःखं
विधानमनुवर्तते ||
- வியாசர் மஹாபாரதம்
நாம் ஆசைப்பட்டது நடக்காமல் போவதும், ஆசைப்படாதது கண் முன்னே நடப்பதும், நல்லதும், கெட்டதும், அனுகிரஹமும், சாபமும் எல்லாம் அதிர்ஷ்ட விஷயம் (முன் ஜென்மங்களில் செய்த செயலுக்கு கிடைத்தவை) என்று புரிந்து, ஒரு வெளி மனிதனை போல பார்த்து கொண்டு இருக்க வேண்டும்.
प्रादुर्भावश्च भूतानां
देहत्यागस्तथैव च |
प्राप्तिव्यायामयोगश्च
सर्वमेतत्प्रतिष्ठितम् ||
- வியாசர் மஹாபாரதம்
அந்த அதிர்ஷ்ட விஷயத்தின் (முன் செய்த செயல் (கர்மா)) காரணமாகவே, ஒருவனுக்கு பிறப்பு ஏற்படுகிறது, மரணம் ஏற்படுகிறது, பல விஷயங்களை அடைய வாய்ப்பு கிடைக்கிறது, பல வித முயற்சிகளில் ஈடுபட வைக்கிறது.
गन्धवर्णरसस्पर्शा
निवर्तन्ते स्वभावतः |
तथैव सुखदुःखानि
विधानमनुवर्तते ||
- வியாசர் மஹாபாரதம்
வாசனை, வண்ணம், சுவை, தொடு உணர்ச்சி. இவையெல்லாம், அவ்வப்போது இயற்கையாக வருவது போல, அந்தந்த சமயத்தில் சுகமும், துக்கமும், அதிர்ஷ்ட விஷயத்தை (முன் செய்த செயல் (கர்மா)) பொறுத்து வரும்.
आसनं शयनं यानमुत्थानं पानभोजनम् |
नियतं सर्वभूतानां
कालेनैव भवत्युत ||
- வியாசர் மஹாபாரதம்
காலமே இந்த உலகில் உள்ள அனைவருக்கும் சில காலம் உட்காரவும், படுக்கவும், நடக்கவும், எழுந்திரிக்கவும், குடிக்கவும், சாப்பிடவும் அனுமதிக்கிறது,
वैद्याश्चाप्यातुराः सन्ति
बलवन्तश्च दुर्बलाः |
स्त्रीमन्तश्चापरे षण्ढा
विचित्रः कालपर्ययः ||
- வியாசர் மஹாபாரதம்
வைத்தியனே நோய்வாய்ப்படுவதை பார்க்கும் போது, பெரிய பலசாலி பலமிழந்து போகும் போது, ஒரு ஆண் பிள்ளை, நபும்ஸகனாக (அலி) ஆகி விடும் போது, காலத்தின் வலிமை புரிகிறது.
कुले जन्म तथा
वीर्यमारोग्यं रूपमेव च |
सौभाग्यमुपभोगश्च
भवितव्येन लभ्यते ||
- வியாசர் மஹாபாரதம்
நல்ல குடும்பத்தில் பிறப்பதும், நோய் இல்லாமல் வாழ்வதும், அழகும், வீரியமும், நல்ல உடல் அமைப்பும், சுகமான வாழ்க்கையும் அவனவன் அதிர்ஷடத்தை (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) கொண்டே நடக்கும்.
सन्ति पुत्राः सुबहवो
दरिद्राणामनिच्छताम् |
नास्ति पुत्रः समृद्धानां
विचित्रं विधिचेष्टितम् ||
- வியாசர் மஹாபாரதம்
தரித்திரனுக்கு விருப்பமில்லாவிட்டாலும் பல பிள்ளைகள் பிறந்து விடுகிறது. ஏராளமான சொத்து வைத்து இருப்பவனுக்கு குழந்தையே பிறக்காமல் இருக்கிறது. அதிர்ஷ்டத்தின் (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) செயல் அற்புதமானது.
व्याधिरग्निर्जलं शस्त्रं
बुभुक्षाश्चापदो विषम |
ज्वरश्च मरणं
जन्तोरुच्चाच्च पतनं तथा ||
- வியாசர் மஹாபாரதம்
நோயாலும், அக்னியாலும், நீராலும், ஆயுதத்தாலும், பசியாலும், விஷத்தாலும், காய்ச்சலாலும், மேலிருந்து விழுந்தும், பல வித மரணம் ஏற்படுகிறது.
யாருக்கு எந்த அபாய வழியை, காலம் வகுத்துள்ளதோ அதன் வழியில் தான் அவரவர்கள் மரணம் அடைய போகிறார்கள்.
निर्याणे यस्य यद्दिष्टं तेन गच्छति सेतुना |
दृश्यते नाप्यतिक्रामन्न निष्क्रान्तोऽथवा पुनः |
दृश्यते चाप्यतिक्रामन्न निग्राह्योऽथवा पुनः ||
- வியாசர் மஹாபாரதம்
காலத்தை தாண்டி எவனும் வாழ்ந்ததில்லை. காலத்தால் அகப்படாதவனும் இல்லை. அதிர்ஷ்டத்தின் (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) செயல் அற்புதமானது.
दृश्यते हि युवैवेह विनश्यन्वसुमान्नरः |
दरिद्रश्च परिक्लिष्टः शतवर्षो जरान्वितः ||
- வியாசர் மஹாபாரதம்
பெரும் சொத்துக்கு சொந்தக்காரன், ஆனால் இளமையிலேயே மரணமடைந்து விடுகிறான்.
மஹா ஏழை. ஒன்றுமே இல்லாதவன். ஆனால் 100 வயது காலம் வாழ்கிறான. அதிர்ஷ்டத்தின் (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) செயல் அற்புதமானது.
अकिञ्चनाश्च दृश्यन्ते पुरुषाश्चिरजीविनः |
समृद्धे च कुले जाता विनश्यन्ति पतङ्गवत् ||
- வியாசர் மஹாபாரதம்
கையில் ஒரு காசு இல்லாத வாழ்க்கை. ஆனால் சிரஞ்சீவியாக நெடுநாள் வாழ்கிறான்.
பெரும் சொத்துடன் , சிறந்த குலத்தில், சிறந்த ஜாதகத்தோடு பிறக்கிறான். விட்டிற்பூச்சி போல சிறிது காலத்தில் மரணிக்கிறான். அதிர்ஷ்டத்தின் (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) செயல் அற்புதமானது.
प्रायेण श्रीमतां लोके
भोक्तुं शक्तिर्न विद्यते |
दरिद्राणां तु भूयिष्ठं
काष्ठमश्मा हि जीर्यते ||
- வியாசர் மஹாபாரதம்
பெரும்பாலான செல்வந்தர்களுக்கு, எதுவும் ஜீரணம் ஆகாமல், சாப்பிட தகுந்த உணவையும் உண்ண முடிவதில்லை.
ஏழைக்கோ, மரக்கட்டையையோ, கல்லையோ உண்டால் கூட ஜீரணித்து விடுகிறது. அதிர்ஷ்டத்தின் (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) செயல் அற்புதமானது.
अहमेतत्करोमीति
मन्यते कालनोदितः |
यद्यदिष्टमसंतोषाहुरात्मा पापमाचरेत् ||
- வியாசர் மஹாபாரதம்
செய்யக்கூடாத காரியத்தை, செய்யக்கூடிய காரணமாக நினைத்து, செய்து முடித்து, "நான் தான் இதை செய்கிறேன்" என்று கர்வத்தோடு பேசுகிறான். உண்மையில் காலம் தான் ((முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா))) இவனை செய்ய வைத்து, அழிக்கிறது.
मृगयाक्षाः स्त्रियः पानं
प्रसङ्गा निन्दिता बुधैः |
दृश्यन्ते पुरुषाश्चात्र
संप्रयुक्ता बहुश्रुताः ||
- வியாசர் மஹாபாரதம்
வேட்டையாடியும், சூதாடியும், பெண் ஆசையாலும், குடியாலும், நிந்தனை செய்தும், காலத்தின் (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) பிடியில், தர்மம் தெரிந்தவர்கள் கூட சில சமயம் அகப்பட்டு விடுகிறார்கள்.
इति कालेन सर्वार्थानीप्सितानीप्सितानिह |
स्पृशन्ति सर्वभूतानि निमित्तं नोपलभ्यते ||
- வியாசர் மஹாபாரதம்
இதையெல்லாம் கவனிக்கும் போது, உலகில் அனைவருக்கும் கிடைக்கும் சுகமும், துக்கமும், காலத்தால் தான் ஏற்படுகிறது என்று புலப்படுகிறது. வேறு காரணம் காணப்படவில்லை.
वायुमाकाशमग्निं च
चन्द्रादित्यावहः क्षपे |
ज्योतींषि सरितः शैलान्कः
करोति बिभतिं च ||
- வியாசர் மஹாபாரதம்
காற்று, ஆகாசம், அக்னி, சந்திரன், சூரியன், பகல், இரவு, நக்ஷத்திரங்கள், ஆறுகள், மலைகள் இவையனைத்தையும் யார் படைத்தானோ, அவனே அனைத்தையும் நடத்துகிறான்.
शीतमुष्णं तथा वर्षं
कालेन परिवर्तते |
एवमेव मनुष्याणां
सुखदुःखे नरर्षभ ||
- வியாசர் மஹாபாரதம்
குளிரும், வெயிலும், மழையும் காலத்தால் தான் உருவாகிறது. மனிதர்களில் உத்தமரே! அது போல சுகமும், துக்கமும் காலத்தால் தான் உண்டாகிறது.
नौषधानि न शस्त्राणि
न होमा न पुनर्जपाः |
त्रायन्ते मृत्युनोपेतं
जरया चापि मानवम् ||
- வியாசர் மஹாபாரதம்
எந்த மருந்தும், எந்த ஆயுதமும், எந்த ஹோமமும், எந்த ஜபமும், முதுமையையோ, மரணத்தையோ தடுக்க முடியாது.
यथा काष्ठं च काष्ठं च समेयातां महोदधौ |
समेत्य च व्यपेयातां तद्वद्भूतसमागमः ||
- வியாசர் மஹாபாரதம்
பெருங்கடலில் மிதக்கும் இரண்டு மரக் கட்டைகள், எப்படி ஒரு சமயம் ஒன்றாக சேர்ந்து பயணித்து, பிறகு மீண்டும் (நேரம் வரும்போது) பிரிந்து செல்லுமோ, அது போல, சம்சாரம் என்ற பெரிய கடலில் மிதக்கும் நம்மோடு மற்ற உயிர்கள் (உறவாக, நண்பனாக, கணவன் மனைவியாக, தாய்-தந்தையாக, மகன் மகளாக, பேரன்-பேத்தியாக, தெரிந்தவனாக) சில காலம் சேர்ந்து பயணித்து, அவரவர்கள் காலம் வரும் பொழுது, அந்த காலத்தால் பிரிக்கப்படுகின்றனர்.
As two logs of wood floating on the great ocean, come together and are again (when the time comes) separated, even so creatures come together and are again (when the time comes) separated.
ये च निष्परुषैरुक्त
गीतवाद्यैरुपस्थिताः |
ये चानाथाः परान्नादाः
कालस्तेषु समक्रियः ||
- வியாசர் மஹாபாரதம்
இனிமையான கீதத்தோடு, வாத்தியத்தோடு உபசரிக்கப்படும் அரசனிடமும், எப்பொழுதும் மற்றவர் கொடுக்கும் உணவையே உண்ணும் நிலையில் உள்ளவனிடமும், காலம் சமமாகவே செயல்படுகிறது.
मातापितृसहस्राणि पुत्रदारशतानि च |
संसारेष्वनुभूतानि
कस्य ते कस्य वा वयम् ||
नैवास्य कश्चिद्भविता
नायं भवति कस्यचित् |
पथि संगतमेवेदं दारबन्धुसुहृज्जनैः ||
- வியாசர் மஹாபாரதம்
இந்த உலகில் ஆயிரக்கணக்கான தாய், தந்தை, பிள்ளைகள், மனைவிகள் என்ற உறவுகளில் அனைவரும் பயணிக்கின்றனர்.
நிஜத்தில் நாம் யாருடையவர்கள்? அவர்கள் யாருடையவர்கள்?
யாரும் யாரையும் உரிமை கொள்ள முடியாதபடி, யாருக்கும் யாரும் சொந்தம் ஆக முடியாதபடி காலம் கொண்டு சென்று விடுகிறதே !
क्वासे क्व च गमिष्यामि कोऽन्वहं किमिहास्थितः |
कस्मात्किमनुशोचेयमित्येवं स्थापयेन्मनः ||
- வியாசர் மஹாபாரதம்
நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போக போகிறோம்? நாம் யார்? எப்படி இங்கே வந்தோம்? எதற்காக, யாருக்காக கவலைப்பட வேண்டும்? இந்த கேள்விகளை தியானிக்க தியானிக்க, மனதில் அமைதி ஏற்பட்டு விடும்.
अनित्ये प्रियसंवासे संसारे चक्रवद्गतौ |
पथि संगतमेवैतद्धाता माता पिता सखा ||
- வியாசர் மஹாபாரதம்
வாழ்க்கை ஒரு சக்கரம் போல தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கிறது, இதில் நமக்கு கிடைக்கும் அன்பானவர்களின் நட்பு அனைத்தும் தற்காலிகமானதே ! அண்ணன், அம்மா, அப்பா, நண்பன் ஆகியோருடன் இருக்கும் சங்கமம் ஒரு சத்திரத்தில் பயணிப்பதைப் போன்றது தான்.
இப்படி பலவித தர்ம உபதேசங்கள் ப்ராம்மணரான அஸ்மர், ஜனகருக்கு சொன்னார்.
இந்த உரையாடலை, வியாசர், துக்கத்தில் மூழ்கி கிடக்கும் யுதிஷ்டிரருக்கு சொல்லி, சமாதானம் செய்தார்.
மிகவும் நெருக்கமான ஒருவர் மரணிக்கும் போது, சொல்ல முடியாத மன துயரை அடைகிறார்கள்..
தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள்...
அவர்களால் சில காலங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் போகிறது.
சிலருக்கு ஆயுள் முழுக்க சிலரது மரணம் முடக்கி போடுகிறது...
இழப்பை நினைத்து துக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
தலைவர்கள், அரசர்கள்
மிகவும் நெருக்கமான ஒருவர் மரணிக்கும் போது, மன துயர் அடைந்தாலும், சோர்ந்து விடுவதில்லை.
இவர்களுக்கு ஒரு சிலரல்ல, மிகவும் நெருக்கமானவர்கள் பல ஆயிரம் பேர் இருப்பதால்,
நெருக்கமான ஒரு இழப்பை பார்த்தாலும்,
இன்னும் பல நெருக்கமானவர்கள் இருப்பதால், உற்சாகத்தை இவர்கள் இழப்பதில்லை.
தன்னம்பிக்கையை இழப்பதில்லை. சோர்ந்து விடுவதில்லை.
அவர்களால் காரியங்கள் தடைப்படுவதில்லை. "மரணம் தவிர்க்க முடியாத ஒன்று" என்று புரிந்து கொள்கிறார்கள்..
இன்னும் பல ஆயிரம் நெருக்கமானவர்களை பார்த்து, உற்சாகம் அடைகின்றனர்.. அவர்களுக்காக ஓடுகின்றனர்.
இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ரகசியம்:
நம்மால் ஒரு நெருக்கமானவர் இழப்பை தாங்கி கொள்ளும் சக்தி, பக்குவம் இல்லாது இருந்தால், நம் வட்டத்தை பெரிது படுத்த முயற்சிக்க வேண்டும். "அன்பினால், உதவியால், தனி மனித ஒழுக்கத்தால்" மனித உள்ளங்களை தன் அருகில் சேர்த்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
எத்தனைக்கு எத்தனை நம் உறவுகள் பரந்து விரிகிறதோ!! அத்தனைக்கு அத்தனை, நம்மால் இது போன்ற தவிர்க்க முடியாத இழப்புகளில் இருந்து விரைவில் வெளி வர முடியும்..
மகான்கள், ஞானிகள்
மிகவும் நெருக்கமான ஒருவர் மரணிக்கும் போது, மன துயர் அடைந்தாலும், 'ஆத்மா அழிவற்றது, உடல் அழிய கூடியது' என்ற உண்மையை தெளிவாக புரிந்து கொள்கிறார்கள்.
தன்னுடன் இது நாள் வரை, நெருக்கமாக இருந்த ஜீவன் இந்த உடலை விட்டு சென்று விட்டான், 'அவ்வளவு தான்' என்று அறிகிறாகள்.
'அந்த ஜீவன் நற்கதி அடைய"பாகவதம், நாம சங்கீர்த்தனம்" போன்றவை சொல்லி, ஜீவனை கேட்க செய்து புண்ணிய லோகங்களுக்கு செல்ல வழி செய்கின்றனர்'மகான்கள்.
நெருக்கமாக பழகிய மகாத்மா தன் உடலைவிட்டு பிரிந்தாலும், மகான்கள் தன்னம்பிக்கையை இழந்து விடுவதில்லை.. பேரிழப்பையும் ஞானத்தால் எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் ஆனந்த ஸ்வரூபத்தை மறப்பதில்லை.
அவர்கள் செயலில் மாறுபடும் தெரிவதில்லை. உண்மையான அறிவை பெற்றவர்களாகவே (ஞானியாகவே) இருக்கின்றனர், மகான்கள்.
அத்தகைய மகான்களை, "கண்ணால் கண்டவர்கள் கூட" அந்த மனப்பக்குவத்தை பெற்று விடுகிறார்கள்.
பாரத மண்ணில் மட்டுமே, அத்தகைய மகான்கள் அவதரிக்கிறார்கள் என்பது இந்த பாரத மண்ணின் சிறப்பு.
மிகவும் நெருக்கமான ஒருவர் மரணிக்கும் போது, மன துயர் அடைந்தாலும், 'ஆத்மா அழிவற்றது, உடல் அழிய கூடியது' என்ற உண்மையை மகான்கள் சாதாரணமாகவே புரிந்து கொள்கிறார்கள்.
இந்த ஞானத்தாலேயே அவர்கள் துக்கப்படுவதில்லை.
இது தவிர, குருவாக இருக்கும் போது, பல ஆயிரம் பக்தர்கள் அவரை குருவாக ஏற்று இருப்பார்கள்.
தன் ஞானத்தாலேயே மனப்பக்குவம் கொண்ட மகான்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில்,
சில நெருக்கமான பக்தர்கள் காலகதி (மரணம்) அடைவதை, தவிர்க்க முடியாத ஒன்று என்றும் ஏற்க முடிகிறது.
ஞானியே மரணத்தை கண்டு துக்கப்படமாட்டார் என்று சொல்லும் போது,
ஞானியாக இருந்து, ஆயிரக்கணக்கான நெருக்கமான பக்தர்களை தன்னிடம் சேர்த்து வைத்துள்ள குருவாகிய ஞானிக்கு துக்கம் ஏற்படுவதே இல்லை.
அப்படிப்பட்ட "ஞானியாகிய குரு" நமக்கு கிடைத்து விட்டால், அதுவே பாக்கியம்.
அவர் நினைவே, நமக்கு அனைத்து நல்லதையும் கிடைக்க செய்யும்.
அவர் நினைவே, நமக்கு பக்குவத்தை தரும்.
அவர் நினைவே, வரப்போகும் பெரும் சவால்களை பனி போல விலக செய்யும். 'சத்குருவை' அடைந்தவன், கோடி கோடி ஜென்மங்கள் புண்ணியம் செய்தவன்.
பகவான் நாராயணன்
மிகவும் நெருக்கமான ஒரு பக்தன் மரணிக்கும் போது, நாராயணனே மன துயர் அடைந்தாலும், ஆத்மா அழிவற்றது, உடல் அழிய கூடியது என்ற உண்மையை அறிந்தவர்.
அந்த ஜீவனை தன்னுள் சேர்த்து கொண்டு "மோக்ஷம் என்ற பரமபத்தை" கொடுத்து விடுகிறார்.
அவர் பார்வையில் ஞானியின் மரணம், ஒரு ஆனந்தம்.
அந்த ஜீவனை "தன்னிடம் கூட்டி செல்ல போகிறேன்" என்று ஆனந்த படுகிறார்.
மோக்ஷத்துக்கு தகுதி இல்லாத பக்தனாக இருந்தாலும், அந்த ஜீவனுக்கு அதை விட அற்புதமான மற்றொரு பிறவியை கொடுத்து, மேலும் தன்னிடம் பக்தி செய்ய, வாழ்க்கையை அமைத்து கொடுத்து, ஒரு ஜென்மத்தில் தன்னிடம் சேர்த்து கொண்டு விடுகிறார்..
தன்னிடம் சேர்த்து கொண்ட பின், பகவான் அந்த ஜீவனை மீண்டும் பிறக்க வைப்பதில்லை.
பூலோகத்தில் அந்த ஜீவன் தனக்கு என்னென்ன சேவை செய்ய ஆசைப்பட்டானோ, அதை, பரமபதத்தில் எப்பொழுதும் செய்து கொண்டே ஆனந்தமாகவே இருக்க செய்கிறார்.
மோக்ஷம் அடைந்தவர்கள், "திவ்ய பார்ஷத" ரூபத்துடன் வைகுண்டத்திலேயே இருக்கிறார்கள்.
ப்ரம்ம தேவன் ஆயுசு முடிந்து. ப்ரம்ம லோகம் உட்பட 14 லோகங்களும் அழிந்தாலும், வைகுண்டம் அழிவதில்லை.
மோக்ஷம் அடைந்தவர்கள், எப்பொழுதுமே பரமாத்மாவுடன் இருக்கின்றனர். "திவ்ய பார்ஷத ரூபம்" பெற்று மோக்ஷம் அடைந்தவர்கள், பரவாசுதேவனை போலவே அழகான ரூபத்தை பெறுகிறார்கள். தன்னிடம் உள்ள அனைத்தையும், அவர்களுக்கும் கொடுத்து விடுகிறார்.
மோக்ஷம் அடைந்த இவர்களும் நான்கு கைகள் கொண்டு, நாராயணன் போலவே அவர்களும் சங்கு சக்கரம் வைத்து இருக்கிறார்கள்.
மோக்ஷம் அடைந்த இவர்கள் இஷ்டப்பட்டால், 14 லோகங்களுக்கும் செல்ல முடியும், தானே அருள் செய்யவும் முடியும்.
ஆதி சேஷனின் அவதாரமான ராமானுஜர் (1017AD-1137AD),தன் உடலை விட்டு மோக்ஷம் சென்று விட்டார். "ராமானுஜ தாசனாக" இன்றும் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்.
ராமானுஜரை பக்தியுடன் தியானித்து ஒரு காரியம் செய்தால், இன்றும் அவர் அருள் கிடைக்கிறது பக்தர்களுக்கு.
பரமாதமா நாராயணன், "மோக்ஷம் அடைந்த" தன் பக்தர்களுக்கு, தன்னை போலவே அவர்களும் அணுகிரஹம் செய்யும் பலத்தை கொடுக்கிறார்.
"நாராயணன் வேண்டாம், ராமானுஜரே போதும்" என்று சொன்னாலும், ராமானுஜ தாசனுக்கும் மோக்ஷ வாசலை திறந்து விடுகிறார். கருணையே வடிவானவர் 'ஸ்ரீமந் நாராயணன்'.
சாகும் தருவாயில் அஜாமிளன் "நாராயணா" என்று கதற,
எம பாசத்தை எம கிங்கரர்கள் வந்து போட்டு, ஜீவனை உடலை விட்டு வெளியே எடுத்து எம லோகம் இழுத்து செல்ல முயற்சிக்கும் போது,
மோக்ஷம் அடைந்த "திவ்ய பார்ஷதர்கள்" அங்கு வந்து, எம கிங்கரர்களை மிரட்டி, "இந்த ஜீவன் மோக்ஷத்துக்கு செல்ல தகுதி பெற்றவன்" என்று அவன் மரணத்தை தடுத்தார்கள் என்று பார்க்கிறோம்.
பயந்து போன எம கிங்கரர்கள், ஓடி சென்று, "நாராயணா.. என்று சாகும் போது சொல்லி விட்டான்" என்று எம தர்மனிடம் சொல்ல, "இனி அந்த ஜீவனை தொடாதீர்கள்..." என்று எம தர்மன் கட்டளை இட்டு விட்டான்.
அங்கு திவ்ய பார்ஷத ரூபத்தில் வந்த மோக்ஷம் அடைந்தவர்களும், நாராயணனுக்கு நிகராக 'அழகையும், நான்கு கைகளில் சங்கு சக்கரம் வாள் ஏந்தி இருந்தார்கள்' என்று கவனிக்கும் போது தான், மோக்ஷம் அடைந்தவர்கள் எத்தனை ஆனந்த நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது புரியும்.
மரண வாயிலை பார்த்த அஜாமிளன், "நாராயணா" என்று தன் மகனை நினைத்து கூப்பிட்டதற்கே, இப்படி திவ்ய பார்ஷதார்கள் வந்து "அஜாமிளன் மோக்ஷம் அழைத்து செல்ல தகுதி பெற்றவன்" என்று சொன்னதை கேட்டதும், சில காலங்கள் பூமியிலேயே நாராயணனையே தியானம் செய்து கொண்டு இருந்து, கடைசியில், அஜாமிளனும் மோக்ஷம் என்ற வைகுண்டத்தை அடைந்தான்.
அஜாமிளனும் திவ்ய பார்ஷத ரூபம் பெற்று விட்டான்.
நாராயணன் தன்னிடம் உள்ள அனைத்து "ஐஸ்வர்ய"த்தையும், "அணுகிரஹம் செய்யும் உரிமை"யையும், மோக்ஷம் அடைந்தவர்களுக்கு கொடுத்து விடுகிறார்.
அனைத்தையும் மோக்ஷம் அடைந்தவர்களுக்கு கொடுத்து விட்டாரே!! அனைத்தையும் மோக்ஷம் அடைந்தவர்களும் "சர்வ சக்தியுள்ளவர்கள்" என்றால், 'பல பரமாத்மா வைகுண்டத்தில் உண்டு என்று ஆகி விடுமே?'
என்ற கேள்வி நமக்கு எழலாம்.
அவர்களும் பரமாத்மாவா? என்ற கேள்வி நமக்கு எழலாம்...
தன்னிடம் உள்ள அனைத்து ஐஸ்வர்யத்தையும்,
தன்னை போன்றே திவ்ய ரூபத்தையும்,
அணுகிரஹம் செய்யும் சக்தியையும்,
எங்கும் தடையில்லாமல் செல்ல சக்தியையும், உரிமையையும், மோக்ஷம் அடைந்தவர்களுக்கு கொடுத்த பரவாசுதேவன், 'இரண்டு ஐஸ்வர்யங்களை' மட்டும் தன்னிடம் மட்டுமே வைத்துள்ளார்.
தன்னிடம் உள்ள அனைத்தையும், மோக்ஷம் அடைந்த ஜீவனுக்கு கொடுத்தாலும்,
'கௌஸ்துபம்' என்ற மாலையையும்,
'ஸ்ரீவத்ச'த்தையும் மட்டும்
யாருக்கும் தருவதில்லை, பரவாசுதேவன்.
"இந்த இரண்டைமட்டும், தன்னிடம் மட்டுமே வைத்துள்ளார்" பரமாத்மா நாராயணன்.
ஜீவாத்மாக்கள் கோடி ஜென்ம புண்ணியத்தால், மனித (நர) பிறவி எடுத்து, பக்தி செய்து கடைசியில், பிறவா நிலை அடைய, பரவாசுதேவனை அடைக்கலம் (அயணம்) அடைவதால்,
பரவாசுதேவனுக்கு "நாராயணன்" என்று பெயர் உண்டு. 'நர'ர்கள் பரவாசுதேவனை அடைக்கலம்(அயணம்) புகுந்து மோக்ஷத்தை பெறுவதால், பரமாத்மாவுக்கு 'நாராயணன்' என்றும் பெயர்.
'நாராயணன்' பரவாசுதேவனுக்கு காரண பெயர்.
"ஸ்ரீவத்சம்" என்பது மஹாலக்ஷ்மியை குறிக்கும்.
பரமாத்மா படைத்த, இந்த அனைத்து உலகங்கள், மனித உடல்கள், பறவைகள், மிருகங்கள், அதில் காணப்படும் வித விதமான 'அழகுகள்', அனைத்தும் மஹாலக்ஷ்மியிடம் கடாக்ஷத்தால் வெளிப்படுகிறது.
"கௌஸ்துபம்" அணிந்தவராக, "ஸ்ரீவத்சம்" கொண்டவராக, பரமாத்மா ஒருவரே இருக்கிறார்.
ஆதலால், பரமபதத்தில், பரமாத்மாவின் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுக்கொண்டு, ஆனந்தமாக பரவாசுதேவனை தரிசித்து கொண்டே இருக்கிறார்கள் "மோக்ஷம் அடைந்தவர்கள்".
பரமாத்மா, ஆனந்த ஸ்வரூபனாக இருந்தாலும், உலக நிர்வாகம் என்ற பெரும் பொறுப்பை தான் ஒருவனே செய்கிறார்.
கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களுக்கு "ஆதாரமாக" இருந்து கொண்டு, உலகை படைத்து,
ப்ரம்ம தேவனை நியமித்து,
தானே விஷ்ணுவாக உலகை காத்து,
தானே ருத்ரனாக அந்தந்த காலங்களில் உலகை அழித்து,
உலகில் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தை கிடைக்க செய்து,
இஷ்டப்படும் போதெல்லாம் தானே அவதரித்து கொண்டு,
ஜீவாத்மாக்கள் அனைத்தும் தன்னிடம் பக்தி செய்து மோக்ஷம் அடையும் வரை, முடிவில்லா 'லீலையை' தன் சங்கல்பத்தாலேயே செய்து கொண்டே இருக்கிறார்.
நமது உடலில் உள்ள 'நாடிகள்' சரியான நிலையில் ஓடும் வரை,
நமது 'மனம்' திடமாக இருக்கும் வரை,
நம்முடைய வாழ்க்கை ஒழுங்காக ஓடுகிறது.
ஒழுங்காக ஓடும் வரை, 'அதை வாங்குவேன், இதை சாதிப்பேன், அவனை ஒழிப்பேன்' என்று அலைகிறோம்.
நமக்கு உடம்பு சரியில்லை என்றால், டாக்டரை பார்க்க ஒடுகிறோம்.
அவர் நம் கையை பிடித்து, நாடி ஒழுங்காக ஒடுகிறதா? என்று பார்க்கிறார்.
நாடி ஒழுங்காக ஓடினால் 'பயமில்லை' என்கிறார்.
நாடி தாறுமாறாக ஓடினால்?
மனம் பேதலித்து போனால்?
நமக்கு உண்மையான பிரச்சனை அங்கு தான் ஆரம்பிக்கிறது.
மரண சமயத்தில், உடம்பில் உள்ள நாடிகளும், மனமும் தாறுமாறாகி விடும். எதற்கும் கட்டுப்படாமல் போகும்.
மனம் தாறுமாறாக போன நிலையில்,
எதுவுமே புரியாத நிலையை ஏற்பட்டு விடும்.
மரண படுக்கையில் கிடக்கும் போது, யார் யாரோ மனதுக்குள், வந்து வந்து நிற்பார்கள்.
இத்தனை காலம் மனதில் எழுந்த தோற்றங்கள், எண்ணங்கள், விஸ்வரூபம் எடுத்து, தாறுமாறாக நம் மனதில் வந்து நிற்கும்.
பலரின் நினைவு ஒரே சமயத்தில் வருவதால், குழப்பத்தை ஏற்படுத்தி, 'யார்? யார்? யார்?' என்று கேட்க வைத்து, கண்கள் அகன்று பேய் முழி முழிக்க வைக்கும்.
மனமும், நாடிகளும் கட்டுப்பாட்டை இழந்து, மரண சமயத்தில் சிலருக்கு, யார் தன்னை பார்க்க வந்து இருக்கிறார்? என்று தெரியும். ஆனால் பேச விடாமல் வாய் இழுத்து விடும்.
'பேரன்' தான் வந்து இருக்கிறான் என்று தெரியும்.
பேசலாம் என்று தோன்றும். ஆனால் வாக்குக்கான நாடி செயல்படாமல் இழுத்து விடும். வாக்கு எழாது.
வாக்கு இழுத்த நிலையில், மனமும் தாறுமாறாக போன நிலையில், பேச முடியாமல் செய்வதறியாது கண்கள் அகன்று முழிக்க வைக்கும்.
சில பேருக்கு, மரண சமயத்தில் யார் வந்து இருக்கிறார்? என்பது கூட தெரியாமல் போய் விடும்.
தன் மகனே வந்தாலும், யார் வந்தார்கள்? என்று புரிந்து கொள்ள முடியாமல், மனது அலை பாயும். "யாரு? யாரு?..." என்று கேட்டுக்கொண்டே செய்வதறியாது முழிப்பார்கள்.
இது மரண காலத்தில் அனைவருக்கும் ஏற்பட போகும் அவஸ்தை. மறுக்க முடியாத உண்மை.
இப்படி ஒரு மரண வேதனையை, ஒவ்வொரு ஜீவனும் கட்டாயம் அனுபவிக்கிறார்கள். அனுபவிக்க போகிறார்கள்.
யோகிகளுக்கும் இந்த மரண வேதனை உண்டு.
மரண சமயத்தில், மனமும் நாடியும் தாறுமாறாக போவதால், வாய் இழுத்து விடும், கண்களை போட்டு சுழற்றும், உடம்பே வீங்கி விடும், வயிற் உப்பி விடும்.
மனம் கட்டுப்பாட்டை இழந்ததால், நாடிகள் தாறுமாறாக வேலை செய்ய ஆரம்பிக்க, படுத்த படுக்கையிலேயே மலம் மூத்திரம் தானாகவே வெளியேறி விடுகிறது.
மரண சமயத்தில் இவன் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறான்? என்று சொந்தங்களையே பேச வைக்கும்.
மரண வாசலில் படுத்து இருக்கும் போது, உடம்பில் ஈ மொய்க்கும். எறும்பு கடிக்கும்.
தன் மேல் கடிக்கும் எறும்பை, தன் கையால் எடுத்து ஏறிய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
ஒரு கல்லை போன்று, கட்டையை போன்று, போட்டது போட்டபடி மரண சமயத்தில் கிடக்கிறான்.
ஆரோக்கியமாக இருந்த காலத்தில், ஒரு கொசு கடித்தால் கூட தாங்க முடியாமல் புரண்டு புரண்டு படுப்பவன், தன் மரண சமயத்தில்,100 தேள் ஒரே சமயத்தில் கடித்தால் ஏற்படும் தாங்க முடியாத வலியை ஒருசேர, உடல் முழுவதும் அனுபவிக்கிறான்.
மரண காலத்தில் என்ன அனுபவம் பெறுகிறோம்? என்று கருட புராணத்திலும் காட்டப்படுகிறது.
இப்படி ஒரு மரண வேதனை நமக்கு முன்னால் இருப்பது தெரிந்தும், அந்த மரண வேதனையில் இருந்து தப்பிக்க வழி தேடிக்கொள்ளாமல் இருப்பானா ஒரு விவேகி?
மரண வேதனையில் இருந்து தப்பிக்க, இன்றே "நாராயணனிடம் பக்தி செய்" என்று நமக்கு பாசுரங்கள் அருளி இருக்கிறார்கள் ஆழ்வார்கள்.
இப்படிப்பட்ட மரண வேதனையை அனுபவித்து கொண்டு, நம் சொந்தங்கள் 'எப்போ இவன் உயிர் போகுமோ?' என்று கேட்கும் அவமானத்தை கேட்டு கொண்டு, "கொர்... கொர்..." என்று இழுத்துக்கொண்டு, உயிர் ஊசலாடி கொண்டு இருக்கும்.
இந்த நிலையை பார்த்து விட்டு, நம்முடைய சொந்தங்கள் எல்லோரும் "இன்னும் பத்து நிமிடத்தில் உயிர் போய் விடும்" என்று சொல்லிக்கொண்டு, செய்வதறியாமல் கையை பிசக்கிக்கொண்டு சுற்றி உட்கார்ந்து இருப்பார்கள்.
இப்படி ஒரு நிலை நமக்கும் உண்டே.. மறுக்க முடியுமா?...
தர்மபுத்திரரான யுதிஷ்டிரரிடம், யக்ஷ ராஜன் (யமன்) "எது ஆச்சர்யம் ?"
என்று கேட்ட பொழுது, தர்மபுத்திரர் அற்புதமான பதிலை சொன்னார் என்று பார்க்கிறோம். "இந்த சரீரத்தில் ஒன்பது த்வாரங்கள் இருந்தும், ஆத்மா வெளியே செல்லாமல் இருக்கிறதே!! இதுவே ஆச்சர்யம்."
என்றார்.
இதை கேட்ட யக்ஷன், "இதையும் விட ஆச்சர்யம் எது?"
என்று மேலும் கேட்க, "உலகில், பலர் தினமும் இறந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதை கண் கூடாக பார்த்தும், தான் மட்டும் ஏதோ சாகாமல், சாஸ்வதமாக (நிரந்தரமாக) இருந்துகொண்டே இருக்கப்போவதாக நினைத்து வாழ்கிறார்களே!! இவர்களே மிகப் பெரிய ஆச்சர்யம்"
என்று பதில் சொன்னார் என்று பார்க்கிறோம்.
மரண வேதனை நம் அனைவர் முன்னாலும் காத்து கொண்டு நிற்கிறது. மரண வேதனை தவிர்க்க முடியாதது.
'மோக்ஷம் என்ற வைகுண்டம்' அடையாது போனால், நமக்கு மறுபிறவி உண்டு. ஒவ்வொரு பிறவியிலும் இந்த மரண வேதனை நம்மை விடாது.
மரண வேதனைக்கு பயந்தாவது, நாராயணனை பற்றி கொள் என்கிறார்கள் ஆழ்வார்கள்.
நாம் செய்த புண்ணியங்களுக்கு, சொர்க்கத்தில் சில நிமிடங்கள் இருந்து விட்டு,
நாம் செய்த பாவங்களுக்கு நரகத்தில் தண்டிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் பூமிக்கு அனுப்பப்பட்டு, பிறந்து கொண்டே இருக்கிறோம்.
கடைசி மூச்சு விடும் சமயத்தில், என்ன நினைவு ஏற்படுகிறதோ? அது சம்பந்தமாகவே அடுத்த பிறவி எடுக்கிறான் என்று வேத சாஸ்திரம் 'மறுபிறவி ஏற்படுவதற்கான காரணத்தை' சொல்கிறது.
பகவத்கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் ,
யம் யம் வாபி ஸ்மரண் பாவம்
த்யஜத் யந்தே கலேவரம் !
தம் தமேவைத்தி கௌந்தேய
சதா தத் பாவ பாவித !!
(Chapter 8, Sloka 8)
என்று சொல்லும்போது, "எவனெவன் சாகிற காலத்தில், எதை எதை நினைத்து சாகிறானோ, அது சம்பந்தமாகவே அடுத்த பிறவி எடுத்து விடுகிறான்." என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, வேத வாக்கை ஊர்ஜிதப்படுத்துக்கிறார்.
'கடைசி மூச்சு விடும் சமயத்தில், நாராயணனை ஸ்மரணம் செய்து கொண்டே உயிர் பிரிந்தால் மட்டுமே மோக்ஷம் கிடைக்கும்' என்று வேத சாஸ்திரம் சொல்கிறது.
ராமாயண காலத்தில் சபரியும், சரபங்க ரிஷியும் யோகிகளாக வாழ்ந்தனர்.
தன் யோக வலிமையால் ஸ்ரீ ராமரை தரிசித்துக்கொண்டே, வேறு நினைவுகள் ஏற்படாத வண்ணம் மனதை நிலை நிறுத்தி, ஜீவன் உடலை விட்டு பிரிவதை தைரியமாக எதிர்கொண்டு, மோக்ஷம் அடைந்தார்கள்.
அதே போல, கடைசி நிமிடத்தில், ஸ்ரீ கிருஷ்ணனை தரிசித்து கொண்டே, விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி, கிருஷ்ண த்யானத்தோடு, தைரியமாக உயிரை பிரித்து கொண்டார் பீஷ்மர்.
யோகீஸ்வரர்களான இவர்களால், உயிர் பிரிவதை, ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மரண சமயத்தில் இருந்தது. பகவானை எதிரில் நிறுத்தி, அவர் த்யானத்துடன் உயிரை பிரித்துக்கொள்ளும் சாமர்த்தியம் கொண்டிருந்தனர்.
யோகிகள் எல்லோரும் மோக்ஷம் அடைவார்களா? என்று கேட்டால், 'இல்லை' என்றும் தெரிகிறது.
யோகீஸ்வரரான பரத முனிக்கே மோக்ஷம் அந்த ஜென்மத்தில் கிடைக்கவில்லையே !!
பரத யோகீஸ்வரருக்கு, அவருடைய மரண சமயத்தில் "ஐயோ நான் வளர்த்த மான் என்ன ஆகுமோ?"
என்று மான் நினைவு ஏற்பட்டு விட்டது. தன் வாழ்நாள் முழுவதும், தன் யோக பலத்தால், பகவத் தியானமே செய்தார் பரத யோகி.
கடைசி காலத்தில்,
பகவான் நாராயணன் நினைவு அவருக்கே வரவில்லை.
அத்தனை கடும்முயற்சி செய்து யோகீஸ்வரரான பரதர், மரண சமயத்தில் மான் நினைவோடு உயிரை விட்டதால், மறு ஜென்மத்தில் மானாகவே பிறந்து விட்டார். யோக பயிற்சிகள் அவரை கைவிட்டு விட்டதே !!
அப்யாச 'யோக'த்தால் செய்த தியானம் அவரை கைவிட்டது.
ஒரு மானிடம் ஏற்பட்ட 'ஆசை' அவரை கவிழ்த்து விட்டதே!!
யோகத்தால் தியான ஸித்தி ஏற்படலாம்.
8 ஸித்திகளும் கை கூடலாம். கடைசி நிமிடத்தில் பகவத் தியானம் ஏற்படுமா? என்பது சந்தேகம் என்று பரத ரிஷி வாழ்க்கையை பார்த்தாலே தெரிகிறதே!!
மோக்ஷம் அடைய, யோக சாதனைகள் ப்ரயோஜனப்படாது என்று தெரிகிறதே.
யோக சாதனைகளை, மோக்ஷம் அடையும் வழியாக நம்ப இயலவில்லை.
கடைசி நிமிடத்தில் யோகிகள் கூட பகவத் தியானம் செய்ய முடியாமல் போகுமென்றால், சாதாரண ஜனங்களான நம்மை போன்ற மனிதர்கள், யோக சாதனைகளை செய்து, மோக்ஷம் அடைவது என்பது நடக்காத காரியமே.
கடைசி மூச்சு விடும் சமயத்தில் 'ஹரி' நாமம் வராது போனால், மோக்ஷம் கிடைக்காது.
மோக்ஷம் அடையாது போனால், நமக்கு மறுபிறவி நிச்சயம்.
மறுபிறவி இருப்பதாலேயே, மரண வேதனையும் நிச்சயம்.
இன்றைய பொழுதில் நமக்கு உடலும் அனுகூலமாக உள்ளது. மனதும் விகாரப்படாமல் அடங்கி இருக்கிறது.
இந்த நல்ல நிலையில் கூட, நம் வாயில் "ராம ராம ராம..." என்று பகவன் நாமா வரவில்லையே !!
காபி சாப்பிடவும்,
புரளி பேசவும்,
சினிமா பார்க்கவும்
அங்கும் இங்கும் அலைய ஆசை இருக்கிறதே தவிர,
வரப்போகும் மரணத்தை பற்றிய எண்ணமில்லையே !! மறுபிறவி கூடாது, மோக்ஷம் வேண்டும் என்ற முயற்சி இல்லையே!!
உடலும், மனமும் நன்றாக இருக்கும் இன்றைய நிலையிலேயே "நாராயணா" என்று வாயில் வராத போது,
மரகட்டை போல கிடக்கும் நிலையில், உடலும் மனமும் கட்டுப்பாட்டை இழந்த நிலையில்,
100 தேள் ஒரே சமயத்தில் கொட்டும் வேதனையை தரும் மரண காலத்திலா,
நமக்கு "நாராயணா..." என்று வர போகிறது?
மரண காலத்திற்கு இப்பொழுதே தயார் செய்து கொள்ள வேண்டாமா? மரண வேதனை ஏற்படாமல் இருக்க வேண்டிய முயற்சி செய்து கொள்ள வேண்டாமா?
யோகிகளும் ஜெயிக்க முடியாத மரண வேதனையை, சாதாரண ஜனங்கள் ஜெயிக்க முடியுமா?
மரண வேதனையை மறந்தால் தானே, பகவத் தியானம் செய்ய முடியும்?
பகவான் நாராயணனோ, கடைசி மூச்சு விடும் சமயத்தில் 'யார் என்னை நினைக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே மோக்ஷம் கொடுக்கிறேன். மற்றவர்களுக்கு அவர்கள் செய்த புண்ணியத்துக்கு ஏற்ற சொர்க்க வாசமோ, ப்ரம்ம லோக வாசமோ, கைலாய வாசமோ, அதல, சுதல, பாதாள லோகங்களில் வாசமோ செய்ய செய்து, பாவத்துக்கு நரக லோகத்தில் ஏற்ற தண்டனை கொடுக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் பூ உலகில் மரமாகவோ, விலங்காகவோ, பறவையாகவோ, மனிதனாகவோ பிறக்க செய்கிறேன்' என்கிறார் !!
மரண வேதனையை சாதாரண ஜனங்களால் ஜெயிக்கவே முடியாதே!! ஒரு கொசு கடித்தாலேயே, உடலை துச்சம் என்று நம்மால் நினைக்க முடிவதில்லை.
மரண வேதனையை அனுபவிக்கும் சமயத்தில், உடலை மறந்து, சாதாரண ஜனங்களால் பகவத் தியானம் செய்யவே முடியாதே!! அவர்களுக்கு மோக்ஷமே கிடையாதா??
இந்த கவலை ஒரு முறை ஸ்ரீ ராமனுஜருக்கே வந்து விட்டது!!
எய்ப்பு என்னை வந்து நலியும் போது
அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப்பள்ளியானே !!
இது பெரியாழ்வார் அருளிய 'திருமொழி'
'ரங்கப்ரபோ... உடலும் மனதும் கட்டுப்பாட்டை இழந்து, 100 தேள் ஒரே சமயத்தில் கொட்டும் மரண வேதனையை அனுபவிக்கும் சமயத்தில், அந்த மரண வேதனையை தாங்க முடியாமல் "ஐயோ... அம்மா.." என்று கதறும் என்னிடம் போய், 'என்னை மரண சமயத்தில் தியானம் செய்தாயா?' என்று கேட்காதீர்கள். மரண வேதனையை அனுபவிக்கும் நான், அந்த சமயத்தில், உறுதியாக உங்களை நினைக்கவே மாட்டேன்.
மரண காலத்தில் உங்களை நினைக்க துப்பு இல்லாதவன் என்பதை உணர்வதால், குழந்தையாக இருக்கும் போதே, இளமையுடன், ஆரோக்கியத்துடன் இருக்கும் இப்போதே 'ரங்கப்ரபோ.. ரங்கப்ரபோ..." என்று இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப்பள்ளியானே'
என்று திருமொழியில் பெரியாழ்வாரே இந்த பாசுரத்தில், உறுதியாக சொல்கிறார்.
பகவானோ 'மரண சமயத்தில் என் தியானம் வராவிட்டால், மோக்ஷம் கிடையாது' என்று உறுதியாக, தீர்மானமாக சொல்கிறார்.
பெரியாழ்வாரோ 'மரண சமயத்தில் மரண வேதனை எழும்பி, பகவத் தியானம் வரவே வராது' என்று உறுதியாக சொல்கிறார்.
இளமை காலத்திலேயே, உடலும் மனமும் நம் சொல்பேச்சு கேட்கும் சமயத்திலேயே, பகவத் பக்தி செய்து பழகி விட்டோம் என்றால், அந்த பழக்கமே, நம் கடைசி காலத்தில் பகவத் தியானத்தை சுலபத்தில் கொடுக்கும் என்று நம்பினால், ஆழ்வார் அதற்கும் உத்திரவாதம் இல்லை என்கிறார்..
மேலும்,
பெரியாழ்வாரே "அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்" என்று 'கடைசி நிமிடத்தில் பகவத் தியானம் நான் செய்ய மாட்டேன்' என்று வேறு சொல்கிறார்.
எப்படிப்பட்ட எண்ணங்களுடன் ஒருவன் தன் வாழ்நாளை செலவழிக்கிறானோ, அப்படிப்பட்ட எண்ணங்களே மரண சமயத்தில் எழும்பி, அந்த எண்ணங்களே காரணமாக ஆகி மறுபிறவி அமைந்து விடுகிறது.
உலக எண்ணங்களுடனேயே ஒருவன் தன் வாழ்நாளை செலவழித்தால், அது சம்பந்தமான எண்ணங்களே மரண சமயத்தில் எழும்பி, அந்த எண்ணங்களே காரணமாக ஆகி மறுபிறவி அமைந்து விடுகிறது.
எப்படிப்பட்ட எண்ணங்களுடன் வாழ்கிறோமோ, அது சம்பந்தமான எண்ணங்களே மரண சமயத்தில் எழும்புவதால், 'மோக்ஷம் அடைய வேண்டும்' என்று ஆசைப்படுபவர்கள் (முமுக்ஷுக்கள்),
தன் வாழ்நாளை பகவத் தியானம், பகவத் கைகர்யம் செய்து கொண்டே கழிக்கின்ற்னர்.
அது சம்பந்தமான பகவத் எண்ணங்கள் மட்டுமே மரண காலத்திலும் அவர்களுக்கு ஏற்பட்டு, மோக்ஷத்திற்கு வழி செய்யும் என்று புரிந்து இருந்தார் ராமானுஜர்.
யோகிகள் கூட, மரண வேதனையை ஜெயிக்க முடியாமல், மனதின் எண்ணத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர்.. பகவத் தியானமே தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்த பரத யோகீஸ்வரருக்கு, கடைசி நொடியில் பகவத் தியானம் மறந்து போய், எங்கேயோ மனதில் ஒட்டியிருந்த மானின் எண்ணம் ஏற்பட்டு, உயிர் பிரிந்து விட்டது. அந்த ஜென்மத்தில் அவருக்கு மோக்ஷம் கிடைக்கவில்லை. அடுத்த பிறவி அமைந்து மானாகவே பிறந்து விட்டார்.
யோகிகள் கூட மோக்ஷம் கிடைக்காமல் தோற்று போனார்கள் என்பதால், பெரியாழ்வார் 'இளமையிலேயே பகவத் பக்தி செய்து, பகவத் பக்தி செய்து, வாழ்ந்தாலும், மரண சமயத்தில் மரண வேதனையை மீறி, பகவத் சிந்தனை நமக்கு ஏற்படும் என்று சொல்வதற்கில்லை' என்று சொல்ல, ஸ்ரீ ராமானுஜருக்கே ஒரு சமயம் கலக்கம் ஏற்பட்டு விட்டது.
நன்றாக இருக்கும் காலத்திலேயே பகவத் தியானம் இந்த ஜனங்களுக்கு வரவில்லையே !! மரண வேதனையை அனுபவிக்கும் சமயத்திலா சாதாரண ஜனங்களுக்கு 'நாராயணன்' நினைவு வரப்போகிறது?
மரண வேதனை நிச்சயமாக நமக்கும் இருக்கிறது, என்று தெரிந்து கொண்டே,
வீண் பொழுது போக்கி,
நன்றாக இருந்த சமயத்தில்
தூங்கியும், சாப்பிட்டும்,
தூங்கியும், சாப்பிட்டும்,
தூங்கியும் தானே பொழுது போனது...
இப்படி வாழ்க்கை வாழ்ந்தால், கடைசி நிமிடத்தில் எப்படி பகவத் தியானம் ஏற்படும்?
பெரியாழ்வார் சொன்னபடி, இளமை காலத்திலேயே பக்தி செய்தோம் என்றாலும், கடைசி மூச்சு விடும் சமயத்தில் பகவத் தியானம் ஏற்படுவது சுலபம் இல்லை என்கிறாரே?
தாங்க முடியாத மரண வேதனையை மீறி, பகவத் தியானம் ஏற்படுமா?.. சாத்தியமில்லையே..
'பகவத் தியானம் செய்தால் தான் மோக்ஷம் தருவேன்' என்று பெருமாள் சொல்கிறாரே!!
பெரியாழ்வார் 'சொன்ன சொல்லும் பொய் போகாது'.
பெருமாள் 'சொன்ன சொல்லும் பொய் போகாது'.
"இளமை காலத்திலிருந்தே பகவத் கைகர்யம் செய்கிறேன். அதனால் மரண காலத்தில் பகவத் தியானத்தை எதிர்பார்க்காதீர்கள்" என்று ஆழ்வார் சொல்கிறாரே? "மரண காலத்தில் பகவத் தியானம் செய்தவர்களுக்கு மட்டுமே மோக்ஷம்" என்று பெருமாள் சொல்கிறாரே?
இருவர் வாக்கும் பொய் போகாது என்று புரிந்தாலும், இருவர் சொல்வதும் எதிர் எதிராக இருப்பது போல தெரிய, ஸ்ரீ ராமனுஜருக்கு மனதில் கலக்கம் ஏற்பட்டது.
பெருமாளோ ஸ்ரீ ராமானுஜரிடம் அர்ச்ச மூர்த்தியாகவே (சிலையாகவே) பேசுவார்.
தன் வருத்தத்தை காஞ்சி வரதராஜ பெருமாளிடமே விண்ணப்பித்து கொண்டார் ஸ்ரீராமானுஜர்.
(இன்று காஞ்சிபுரம் போனாலும் ராமனுஜரிடம் பேசிய வரதராஜ பெருமாளை, பேரருளாளனை நாமும் நம் கண்ணால் தரிசித்து ஆனந்த படலாம்)
வராஹ அவதாரம் செய்த போது பூமி தேவியுடன் பேசிய அதே பதிலை, இப்பொழுது காஞ்சி வரதன், ஸ்ரீ ராமனுஜருக்கு ஞாபகப்படுத்தினார்.
காஞ்சி வரதன் என்ற பேரருளாளன், ஸ்ரீ ராமானுஜரை பார்த்து, அர்ச்ச அவதாரமாக இருந்து கொண்டே பேசினார், "என்னுடைய அடியாருக்கு, அந்திம காலத்தில் என்னுடைய நினைவு வர தேவையில்லை" என்றார்.
'இது என்ன தேவரீர், இப்படி சொல்லிவீர்டீர்கள்! சாஸ்திரம் அந்திம காலத்தில் உங்கள் ஸ்மரணம் வேண்டும் என்று சொல்கிறதே?'
என்று ராமானுஜர் கேட்க, 'என்னை சரணம் அடையாத யோகீஸ்வரர்களுக்கு அப்படி ஒரு விதி சொல்லப்பட்டது. யோக அப்யாசத்தால் சுய முயற்சியால் மனதை நிறுத்தி, மரண காலத்தில் என்னை தியானிக்க சக்தி உள்ளவர்களுக்கு 'என்னை தியானம் செய்தால்' மோக்ஷம் கொடுக்கிறேன் என்றேன். ஆனால், என் அடியார்களுக்கு இத்தனை கடும் முயற்சிகள் தேவையில்லை. என் அடியார்கள், அந்திம காலத்தில் 'ஐயோ அம்மா..' என்று மரண வேதனையில் அலறிக்கொண்டு இருந்தாலும் மோக்ஷம் கிடைக்க செய்கிறேன். காஷ்டபாசமாக (கல்லும் கட்டையும் போல) மரண வாசலில் என் பக்தன் கிடக்கும் போது, அவனால் என்னை நினைக்க முடியாது என்று அறிவேன். மனமும், உடலும் தாறுமாறாக போன நிலையில் அவனால் என்னை தியானிக்க முடியாது என்று அறிவேன். என் பக்தன் என்னை அப்பொழுது தியானிக்க முடியாது போனாலும், அவனை நான் நினைக்கிறேன்.
அவன் 'கால்' நன்றாக இருக்கும் பொழுது, ஓடி ஓடி வந்து 'என் சன்னதி' முன் நிற்பானே!! 'இன்று ரங்கநாதன் புறப்பாடு, இன்று திருவெங்கடமுடையான் புறப்பாடு', என்று வந்து வந்து நிற்பானே!!
'கண்' நன்றாக தெரியும் போது, ஓடி ஓடி வந்து 'பெருமாள் சேவை இன்று எப்படி அழகாக இருந்தது!!', என்று பார்த்து கொண்டு ரசிப்பானே!! 'காது' நன்றாக கேட்கும் பொழுது, ஓடி வந்து ஓடி வந்து 'அங்கு பாகவத உபன்யாசமாம்', 'அங்கு ராமாயண உபன்யாசமாம்' என்று காது குளிர கேட்டு ஆனந்த படுவானே!!
'வாய்' நன்றாக இருக்கும் காலத்தில், 'நாராயணா...கோவிந்தா... ராமா...ரங்கப்ரபோ...வரதா' என்று என் திருநாமத்தை எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பானே!! 'கை' நன்றாக இருந்த காலத்தில், என் அடியார்களுக்கு வேண்டிய தொண்டுகள் அலுக்காமல் சலிக்காமல் செய்வானே!! ஒரு மனிதன், தனக்கு அன்பு காட்டியவனிடத்தில் நன்றி கெட்டு நடந்து கொள்ள வாய்ப்பு உண்டு.
ஆனால் எனக்கு, ஒரு ஜீவன் ஒரு 'துளசி' சமர்ப்பித்தால் கூட வீண் போகாது. ஒரு பிடி 'அவல்' கொடுத்தாலும் கூட, குபேரன் ஆக்கி விடுவேன் என் பக்தனை.
ஒன்றுமே கொடுக்கவில்லை, வாயால் 'கோவிந்தா...' என்று ஒரு முறை சொன்னால் கூட அபயம் தருவேன். திரௌபதி 'கோவிந்தா' என்று கூப்பிட்ட ஒரு சொல்லுக்கு அவள் குடும்பத்துக்கே அடிமையாக கூட இருந்து காப்பேன் என்று தானே, அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினேன். என்னையே சரணம் அடைந்து, என்னையே சுற்றி சுற்றி வந்தவனுக்கு நான் அல்லவோ உண்மையான ஆதம் உறவு. இன்று மரண வாசலில் என் பக்தன் கிடக்கிறானே... அவனுடைய சரீர பந்துக்கள் எல்லோரும் வந்து போகிறார்களே. நான் அவனுடைய ஆத்ம பந்துவாயிற்றே.. நாம் சென்று பார்க்க வேண்டாமா.. என் பக்தன் மரண படுக்கையில் கிடக்கும் போது, மரண வேதனையில் தவிக்கும் போது, நான் அவனுக்கு மரண வேதனையை மறைத்து, என் தியானத்தை கொடுப்பேன்.
சரீர பந்துக்கள் 'அப்பா... அப்பா.. என்னை தெரிகிறதா?....', 'அண்ணா.. என்னை தெரிகிறதா?...', என்று கேட்டுக்கொண்டிருக்கும் போது,
ஆத்ம பந்துவான நான், என் அபய ஹஸ்தத்தை காட்டி, பிரசன்னமான முகத்துடன் 'என்னை தெரிகிறதா?...' என்று கேட்க, சரீர பந்துக்கள் அழைப்பது எல்லாம் என் பக்தனுக்கு மறந்தே போய் விடும். மரண வேதனையும் மறைந்து விடும். நானே வலிய வந்து, என் பக்தனுக்கு, என் நினைவை கொடுப்பேன். தரிசனம் பெற்ற என் பக்தனுக்கு வேறு நினைவு ஏற்படாத வண்ணம் செய்து, என் பக்தன் கடைசி மூச்சு விடும் சமயத்தில் 'என்னை நினைத்து விட்டான்' என்று வேத சாஸ்திரத்தையும் மீறாமல் இருக்க செய்து, நானே அவனை மோக்ஷத்திற்கு அழைத்து சென்று விடுவேன்"
என்றார் அர்ச்ச அவதாரமாக இருந்த காஞ்சி வரதன். ஸ்ரீ ராமானுஜர் பேரருளாளன் பதிலால், பேரானந்தம் அடைந்தார்.
இளமை காலத்திலேயே பகவத் பக்தி நிறைய செய்து வந்தால், பகவான் நம்மை கண்டு பிரியம் கொள்கிறார். 'என் பக்தன்' என்று கவனிக்கிறார்.
மரண காலத்தில், மரண வேதனை அனுபவித்தாலும்,
நம்மால் பெருமாளை தியானிக்க முடியாமல் போனாலும்,
நாம் அவரிடம் காட்டிய 'பக்தி என்ற அன்பு'க்கு வசமாகி, நமக்கும் திவ்ய காட்சி கொடுத்து, பகவத் தியானத்தை தானே கொடுத்து, மோக்ஷம் கிடைக்க செய்கிறார். பெருமாள் தன் கருணையின் காரணமாக தன் பக்தன், பிறவி கடலை கடக்க செய்கிறார்.
காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு 'பேரருளாளன்' என்ற சொல்வதன் மகத்துவம் ஸ்ரீ ராமனுஜருக்கே புரியக்கூடியது.
உலகம் பிரளய ஜலத்தில் மூழ்கி விட, பூமா தேவி, பெருமாளிடம் பிரார்த்தனை செய்தாள்.
பூமியை வராஹ அவதாரம் செய்து தூக்கி, அதன் நிலையில் நிறுத்தினார் பெருமாள்.
அப்பொழுது, நம்மை எல்லாம் பெற்று, தாங்கி கொண்டு இருக்கும் பூமி தாயார், தன் கணவனான, நம் தகப்பனாரான பெருமாளிடம், 'இப்படி நம் குழந்தைகள் (ஜீவன்கள்) பிறந்து இறந்து, பிறந்து இறந்து கொண்டே இருக்கிறார்களே!! இவர்களுக்கும் மோக்ஷம் கிடைக்க வழி சொல்லுங்கள்' என்று கேட்க,
வராஹ அவதாரத்துடன் இருந்த பெருமாள், பிற்காலத்தில் 1037AD சமயத்தில், காஞ்சி வரதனாக ஸ்ரீராமனுஜருக்கு உபதேசித்ததை, அன்று பூமா தேவிக்கு உபதேசம் செய்தார்.
பெற்றோருக்கு, தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டுமே என்ற கவலை எப்பொழுதும் உண்டு.
நாம் அனைவருக்கும் தாயான பூமா தேவியும், பூமா தேவியின் கணவனும், நம் தந்தையுமான நாராயணனும், நம் நலத்திற்காக பேசிக்கொள்ளும் அற்புதமான புராணம் வராஹ புராணம்.
நாம் மோக்ஷம் அடைய,
சக்கரவர்த்தியான 'ராமபிரான்' சொல்லாத ஆறுதல் வார்த்தையை,
கீதாச்சாரியன் 'ஸ்ரீ கிருஷ்ணர்' சொல்லாத ஆறுதல் வார்த்தையை,
'வராஹ பெருமாள்' நமக்கு சொல்கிறார்.
ஒவ்வொரு அவதாரமும் ஒரு காரணத்திற்காக பெருமாள் செய்தார்.
வராஹ அவதாரம் செய்து பூமியை மீட்டு, நாம் வாழ இடமும் கொடுத்து, மோக்ஷமும் கிடைக்க வழியை சொல்லி, வைகுண்டம் அழைத்து கொண்டு போவேன்' என்று சொல்லும் அவதாரமாக உள்ளது வராஹ அவதாரம்.
ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த பெருமாள், "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்று சொல்லும்போது, "என்னை சரணம் அடை. மோக்ஷமும் கொடுக்கிறேன்." என்கிறார்.
ஸ்ரீ ராமராக அவதாரம் செய்த பெருமாள், "குற்றமே செய்தாலும், என்னை சரணம் அடைந்தவனை காப்பேன்" என்கிறார்.
ராம, கிருஷ்ண அவதாரத்தில் "சரணம் அடை" என்று உத்தரவு போடுகிறார் பகவான்.
ஆனால், பகவான் வராஹ அவதாரம் செய்த போது, 'என்னை சரணம் அடை. மோக்ஷம் கொடுக்கிறேன் என்று மட்டும் சொல்லவில்லை. வைகுண்டதுக்கு நானே அழைத்து கொண்டே போவேன்' என்று ராம, கிருஷ்ண அவதாரத்தில் சொல்லாத ஆறுதல் வார்த்தையை சொல்கிறார்.
நமக்கு மோக்ஷம் கிடைப்பதற்கு, நம்மை சுமக்கும் தாயான பூமி தேவி, நமக்கு தந்தையான நாராயணனிடம் மோக்ஷத்திற்கான வழியை கேட்டாள்.
தாயும் தந்தையும் தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டுமே..என்று பேசிக்கொண்ட அருமையான உரையாடல் வராஹ புராணம்.
"யார் ஒருவன், தன்னுடைய நாடிகள் ஒழுங்காக ஓடிக்கொண்டு இருக்கும் போதும், மனதும் திடமாக இருக்கும் போதும், என்னை பஜிக்கிறானோ, அவனின் மரண கால சமயத்தில், அவன் நாடிகள் தாறுமாறாக போன நிலையில், மனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், என்னை நினைக்க முடியாத சமயத்தில், நான் அவனை நினைத்து கொள்வேன்.
சம்சார சூழலில் இருந்து அந்த ஜீவனை மீட்டு, மீண்டும் பிறக்க விடாமல், அந்த ஜீவனை வைகுண்டம் கூட்டி செல்வேன்"
என்று நமக்கு ஆறுதல் வாரத்தையை சொன்னார் வராஹ மூர்த்தியாக இருந்த நாராயணன்.
பூமி தேவி, நாராயணனை பஜிக்கும் ஜீவனான நம்மை கண்டு பேரானந்தம் அடைகிறாள். ஒரு ஜீவன் மோக்ஷத்திற்கு செல்ல போகிறது என்று ஆனந்தம் அடைகிறாள்.
நாராயணனை துவேசிக்கும், வெறுக்கும் ஜீவனை கண்டு வெறுப்பு கொள்கிறாள்.
'இப்படியும் ஒரு பிள்ளையை பெற்றோமே' என்று வெறுப்பு கொள்கிறாள் பூமா தேவி.
ஒரு தாய்க்கு நல்ல குழந்தையும் பிறக்கும், கெட்ட குணங்கள் கொண்ட குழந்தையும் பிறக்கும்.
தாய்க்கு இரண்டு குழந்தைகளிடமும் பாசம் உண்டாகும். கெட்ட குணம் கொண்ட குழந்தையாக இருந்தாலும், விட்டு விட மாட்டாள்.
தன்னை அடித்தால் கூட பொறுத்துக்கொள்வாள் தாய்.
ஆனால்,
தன் கணவனை கேலி பேசும், திட்டும் பிள்ளையை அடியோடு வெறுப்பாள் தாய்.
இது இயற்கையான தாயுள்ளம்.
இந்த குணம் பூமி தாயாருக்கும் உண்டு.
பூமியில் நல்லவர்கள், கெட்டவர்கள் பிறக்கிறார்கள். அனைவரையும் அணைத்து கொண்டு பூமி தேவி இடம் கொடுக்கிறாள். உணவு தருகிறாள்.
தன்னையே மிதித்தாலும், வெட்டினாலும் பொறுமை காக்கிறாள்.
எதையும் பொறுத்து கொள்வதாலேயே பூமிக்கு 'க்ஷமா' என்றும் பெயர் சொல்வதுண்டு.
இப்படிப்பட்ட பூமா தேவியும், நம்மை கண்டு கோபம் கொள்வது ஒரேயொரு சமயத்தில் தான்.
தன் கணவனான நாராயணனை வெறுப்பவர்களை, அடியோடு வெறுக்கிறாள்.
வராஹ அவதாரம் செய்து பூமியை நிலை நிறுத்தினார் பகவான் நாராயணன்.
க்ருத, த்ரேதா யுகம் முடிந்து, துவாபர யுகம் முடியும் சமயத்தில், பூமி பாரம் தாங்க முடியாமல் பூமா தேவி நாராயணனை சரணம் அடைந்தாள்.
எத்தனை கோடி ஜனங்கள் இருந்தாலும் தாங்க கூடிய பூமா தேவி, பாரம் தாங்க முடியாமல் தவித்தாள் என்று சொல்லப்படும் போது, பூமாதேவியே அதற்கு விளக்கம் தருகிறாள்.
துவாபர யுகம் முடியும் சமயத்தில், பூமா தேவியும் மனம் வெறுக்கும் அளவிற்கு, திடீரென்று நாராயணனை துவேசிக்கும் அசுரர்கள் உலகெங்கும் பிறந்து விட்டனர்.
தன் பிள்ளைகள் தான் என்றாலும், கணவனை வெறுக்கும் பிள்ளைகளை வெறுத்தாள் பூமா தேவி.
இவர்கள் அனைவரையும் ஒடுக்கி, தன் வேதனையை போக்க வேண்டும் என்று பிரார்த்திக்க, ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்து, பிறந்த நாள் முதலேயே சம்ஹார மூர்த்தியாக, ஆனால் கோபமே இல்லாத ஆனந்த மூர்த்தியாக இருந்து, உலகில் இருந்த ஒட்டு மொத்த நாராயண விரோதிகளையும் ஒரே இடத்தில் போர் என்று இழுத்து வேரோடு சாய்த்து, பூமா தேவிக்கு நிம்மதி வழங்கினார் ஸ்ரீ கிருஷ்ணர்.
ஸ்ரீ கிருஷ்ண, ஸ்ரீ ராம அவதாரங்களில் கூட ராஜஸ (போர்) குணங்கள் வெளிப்படுகிறது.
மோக்ஷம் மட்டுமே குறிக்கோள் என்று நினைப்பவர்கள், ராஜஸ குணம் துளியும் சேர கூடாது என்று நினைப்பார்கள். வராஹ அவதாரம் சுத்தமான சாத்வீக புராணம் என்று பெரியோர்கள் அறிகிறார்கள். மோக்ஷ்ம் மட்டுமே வாழ்நாள் லட்சியம் என்று நினைப்பவர்கள், சாத்வீக கிரந்தமான வராஹ புராணம் படிப்பதை தான் விரும்புவார்கள். அல்லது சாத்வீக கிரந்தமான பாகவதம் படிக்க விரும்புவார்கள்.
மஹாபாரதம் எழுதிய பின் வ்யாஸருக்கே மனம் சஞ்சலமாக போய் விட்டது. அதற்கு பின், ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தையும், அதற்கு முன் செய்த அவதாரத்தையும் மட்டுமே 'பாகவதம்' என்ற சாத்வீக கிரந்தமாக எழுதி மன சாந்தி அடைந்தார் வியாசர்.
ஹிந்துவாக பிறப்பதே புண்ணியம்.
சொர்க்கம், நரகம் என்று நிறுத்திக்கொண்டு விட்டன உருவாக்கப்பட்ட பொய் மதங்கள். சொர்க்கத்துக்கும் மேல், மகர லோகம், ஜன லோகம், தப லோகம், ப்ரம்ம லோகம், பாற்கடல், கைலாயம் என்று சொல்லிக்கொண்டே போகிறது நம் ஹிந்து வேத தர்மம்.
இவை அனைத்தும் அழிய கூடியது என்று சொல்லி, வைகுண்டம் என்ற மோக்ஷத்தை பற்றியும் சொல்கிறது ஹிந்து வேத தர்மம். அந்த வைகுண்டநாத பெருமாள், மோக்ஷத்திற்கான வழியாக என்ன சொன்னார் என்று சொல்லி தருகிறது..
ஹிந்துவாக பிறப்பதே மகா புண்ணியம்... போலி மதங்களில் தவறி போனாலும், போலி மதங்களில் பிறந்து விட்டாலும், நாராயணா பக்தி அனைவரும் செய்யலாம். ஹிந்துவாக வாழ்வதாலேயே நமக்கு பல வாழ்க்கை ரகசியங்கள் தானாக விளங்கி விடும்.
வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க ஹிந்து வேத தர்மம்.