ப்ரம்மாவின் ஒரு பகல், பூமியில் எத்தனை வருடங்கள்? தேவலோகத்தில் எத்தனை வருடங்கள்?
பூ: புவ: ஸுவ: மஹ: ஜன: தப: சத்ய:
பூ: என்ற நமது பூலோகத்திற்கு மேல் புவர் (நக்ஷத்ரம்) லோகங்களுக்கு மேல், தேவர்கள் ஸுவ என்ற சொர்க்க லோகத்தில் வசிக்கின்றனர்.
அதற்கும் மேல் மஹ, ஜன, தப லோகங்களுக்கு மேல் ப்ரம்ம தேவன் சத்ய லோகத்தில் வசிக்கிறார்.
இப்பொழுது சத்ய லோகத்தில் இருக்கும் ப்ரம்ம தேவன் 50 வயது முடிந்து, 51வது வயதின் முதல் நாள் பகலை கழித்து கொண்டு இருக்கிறார்.
ப்ரம்மா, தன் ஒவ்வொரு நாளும் 71 சதுர் யுகங்களை ஆளும் 14 மனுக்களை பார்க்கிறார் .
அவருடைய இன்றைய பொழுதில், 27 சதுர் யுகங்கள் முடிந்து விட்டது.
இப்பொழுது இவர் 28வது சதுர் யுகத்தை பார்த்து கொண்டு இருக்கிறார்.
இந்த சதுர் யுகத்தில் 3 யுகங்கள் (சத்ய, த்ரேதா, த்வாபர) முடிந்து விட்டது.
4வது யுகம் "கலி யுகம்" நடந்து கொண்டு இருக்கிறது மனிதர்களுக்கு 5000 பூலோக வருடங்கள் கலியுகத்தில் முடிந்து விட்டது.
पित्र्ये रात्र्यहनी मासः प्रविभागस्तु पक्षयोः ।
कर्मचेष्टास्वहः कृष्णः शुक्लः स्वप्नाय शर्वरी ॥
- மனு ஸ்மிருதி (manu smriti)
பித்ருக்கள் வாழும் உலகத்தில் ஒரு நாள் என்பது, பூலோகத்தில் ஒரு மாத காலமாகும்.
இந்த 1 மாதத்தில்,
15 நாட்கள் கொண்ட தேய்பிறை கால சமயத்தில் (அமாவாசை வரை), பித்ருக்கள் கர்மானுஷ்டங்கள் செய்கின்றனர். இது அவர்களுக்கு பகல் பொழுது.
அடுத்த 15 நாட்கள் கொண்ட வளர்பிறை கால சமயத்தில் (பௌர்ணமி வரை), இரவு பொழுதாக இருப்பதால், உறங்குகின்றனர்.
ஒவ்வொரு மனிதனும், தன் பெற்றோரை நினைத்து கொண்டு, பித்ருக்கள் உறங்க போகும் முன், தன் கையால் எள், ஜலம் கொடுத்து தன் பெற்றோரை நினைத்து கொண்டு தர்ப்பணம் (திருப்தி) செய்கிறான்.
दैवे रात्र्यहनी वर्षं प्रविभाग: तयोः पुनः ।
अह: तत्रोदगयनं रात्रिः स्याद् दक्षिणायनम् ॥
- மனு ஸ்ம்ருதி (Manu Smriti)
(மனிதர்கள் வாழும்) பூலோகத்தில் ஒரு வருடம் என்பது, (சொர்க்க லோகத்தில் உள்ள) தேவர்களுக்கு பகலும், இரவும் சேர்ந்த ஒரு நாள் மட்டுமே.
தேவ லோகத்தில்:
தை (6-8AM), மாசி (8-10AM), பங்குனி (10AM-12Noon),
சித்திரை (12Noon -2PM), வைகாசி (2PM -4PM), ஆனி (4PM -6PM)
என்ற 6 மாதங்கள் தேவலோகத்தில் ஒரு பகலாக உள்ளது. இதற்கு உத்தராயணம் என்று பெயர்.
ஆடி (6PM -8PM), ஆவணி (8PM -10PM), புரட்டாசி (10PM -12AM),
என்ற மற்றொரு 6 மாதங்கள், தேவ லோகத்தில் ஒரு இரவாக உள்ளது. இதற்கு தக்ஷிணாயணம் என்று பெயர்.
மார்கழி மாத காலத்தில் 18 நாள் மஹாபாரத யுத்தம் நடந்தது.
யுத்தத்தில் 10வது நாள் பீஷ்மர் வீழ்ந்தார்.
உத்தராயணம் வரும் வரை உயிரை விட்டு விடாமல், யோகத்தில் இருந்து, தை மாதம் வந்ததும் (உத்தராயண காலம்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து "1000 நாமங்களால்" ஸ்துதி செய்து, அவர் முன்பாக தேகத்தை துறந்து மேலுலகம் சென்றார்.
ब्राह्मस्य तु क्षपाहस्य यत् प्रमाणं समासतः ।
एकैकशो युगानां तु क्रमशस्तन् निबोधत ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
(சத்ய லோகத்தில் இருக்கும்) பிரம்மாவுடைய பகல், இரவு கால கணக்கை, யுக அளவை சொல்கிறேன். கேளுங்கள்.
चत्वार्याहुः सहस्राणि वर्षाणां तत् कृतं युगम् ।
तस्य तावत् शती सन्ध्या सन्ध्यांशश्च तथाविधः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
4000 தேவ வருடங்கள் மேலும் 400 தேவ வருடங்கள் காலை, 400 தேவ வருடங்கள் மாலை சந்தியா காலங்களாக, மொத்தம் 4800 தேவ வருடங்கள் ஒரு க்ருத-யுகம் காலம்
इतरेषु ससन्ध्येषु ससन्ध्यांशेषु च त्रिषु ।
एकापायेन वर्तन्ते सहस्राणि शतानि च ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
இதில் 1000 வருடங்கள் குறைத்து, 100 வருடங்கள் ஒவ்வொரு சந்தியிலும் படிப்படியாக குறைய, மற்ற மூன்று யுகங்கள் காலத்தை அறியலாம். அதாவது,
3600 தேவவருடங்கள்ஒருத்ரேதா-யுகம்காலம் = பூமியில்3*4,32,000 வருடம்
2400 தேவவருடங்கள்ஒருதுவாபர-யுகம்காலம் = பூமியில்2*4,32,000 வருடம்
1200 தேவவருடங்கள்ஒருகலி-யுகம்காலம் = பூமியில்4,32,000 வருடம்
பூமியில் 360 நாட்கள் = பூமியில்1 வருடம் = தேவலோகத்தில்1 தேவ நாள்
பூமியில் 360 வருடம் = தேவலோகத்தில்360 தேவநாள் = தேவலோகத்தில்1 தேவவருடம்
பூமியில் 36,000 வருடம் = தேவலோகத்தில்36,000 தேவ நாள்= தேவலோகத்தில்100 தேவவருடம் (ஒருஇந்திரனின்ஆயுள்)
பூலோகத்தில்ஒருகலியுகம் = பூமியில் 4,32,000 வருடம் = தேவலோகத்தில்4,32,000 தேவ நாள் = தேவலோகத்தில்1200 தேவவருடம்= 12 இந்திரர்கள்ஆயுட்காலம்
பூலோகத்தில் 4 யுகம்சேர்த்து = பூமியில்43,20,000 வருடம் = தேவலோகத்தில்43,20,000 தேவ நாள் = தேவலோகத்தில்12,000 தேவவருடம் = தேவ லோகத்தில் 1தேவயுகம் = 120 இந்திரர்கள்ஆயுட்காலம்
இந்த 4 யுகங்கள் சேர்ந்தால், மொத்தம் 12000 (4800,3600,2400,1200) தேவ வருடங்கள் ஆகிறது. (அதாவது 120 இந்திரர்கள் ஒரு சதுர் யுகத்தில் பதவிக்கு வருகின்றனர்)
दैविकानां युगानां तु सहस्रं परि-सङ्ख्यया ।
ब्राह्मम एकम् अहर्ज्ञेयं तावतीं रात्रिम् एव च ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
1000 முறை இப்படிப்பட்ட 12000 தேவ வருடங்கள் முடியும் போது (1,20,00,000 Deva Yug), அது சத்ய லோகத்தில் பிரம்மாவுக்கு ஒரு பகலாக இருக்கிறது. அதே கால அளவுக்கு பிரம்மாவுக்கு ஒரு இரவும் இருக்கிறது.
ப்ரம்மாவின் இந்த பகல் பொழுது "புண்ய காலம்" என்று சொல்கிறோம். ப்ரம்மாவின் இரவு பொழுதும் "புண்ய இரவு" என்று சொல்கிறோம். ப்ரம்மாவின் இரவு பொழுதிலும் அழியாமல் இருப்பவர்கள் "அஹோ ராத்திரிகள்" என்று செல்லப்படுகிறார்கள்.
तस्य सो अहर्निशस्यान्ते प्रसुप्तः प्रतिबुध्यते ।
प्रतिबुद्ध: च सृजति मनः सद् असद् आत्मकम् ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ப்ரம்மா தன்னுடைய இரவு காலத்தில் தூங்குவார். முடியும் தருவாயில் எழுந்திருப்பார். எழுந்த பிறகு, "ஸத் (soul) அஸத்தில் (nature) பிரவேசித்தபடியான ரூபமான படைப்பை" மீண்டும் தொடங்குகிறார்.
ஜோதியிலிருந்து (அக்னி) தண்ணீரை படைத்தார். தண்ணீரில் "ரசத்தை" (சுவை) கூடுதல் குணமாக அமைத்தார்.
यद् प्राग् द्वादश साहस्रम् उदितं दैविकं युगम् ।
तदेक सप्ततिगुणं मन्वन्तरम् इह उच्यते ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
12,000 தேவ வருடங்கள் "ஒரு சதுர் யுகம்" என்று முன்பே சொல்லப்பட்டது. தேவ லோகத்தை பொறுத்தவரை "12,000 தேவ வருடங்கள், ஒரு தேவ யுகம்" என்று சொல்லப்படுகிறது.
71 தேவ யுகங்கள் (71 சதுர் யுகம் சேர்த்து), ஒரு மனுவின் ஆயுட் காலம் (மன்வந்தரம்) என்று சொல்லப்படுகிறது.
मन्वन्तराण्य सङ्ख्यानि सर्गः संहार एव च ।
क्रीडन् इव एतत् कुरुते परमेष्ठी पुनः पुनः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
எப்படி படைப்பும், சம்ஹாரமும் எண்ண முடியாததோ, அது போல, மன்வந்திரங்களும் எத்தனை முடிந்தது? எத்தனை நடக்க போகிறது? என்று எண்ண முடியாதபடி விளையாட்டாக ( லீலையாக) மீண்டும் மீண்டும் படைப்பு தொழிலை செய்து கொண்டே இருக்கிறார்