புத்திரன் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன ? அறிவோம் மஹாபாரதம்
யயாதியின் மூத்த பிள்ளை "யது". இருந்தாலும், தன்னுடைய கடைசி புத்திரனான "புரு"வுக்கு பட்டாபிஷேகம் செய்ய தீர்மானித்தார்.
ஏன் யதுவை அரசனாக்கவில்லை? என்று கேட்க, இவ்வாறு யயாதி சொன்னார்.
प्रतिकूलः पितुर्यश्च न स पुत्रः सतां मतः।
मातापित्रोर्वचनकृद्धितः पथ्यश्च यः सुतः।
स पुत्रः पुत्रवद्यश्च वर्तते पितृमातृषु।।
पुद् इति नरकस्य आख्या दुःखं च नरकं विदुः।
पुतस्त्राणात्ततः पुत्त्रमिहेच्छन्ति परत्र च।।
- ஆதி பர்வம்
தந்தைக்கு விரோதமாக நடக்கும் பிள்ளையை, சான்றோர்கள் புத்திரனாக ஏற்பதில்லை.
தாயும் தந்தையும் சொல்வதை கேட்பவன், அவர்கள் சொன்னபடி நடப்பவன் எவனோ, அவனே புத்திரன் என்று சொல்லப்படுகிறான்.
புத்திரன் என்ற சொல்லில் உள்ள "புத்" என்ற சொல் "நரகத்தை" குறிக்கிறது. துக்கமயமானது நரகம். அந்த துக்கத்திலிருந்து இக லோகத்திலும், பர லோகத்திலும் பிள்ளை காப்பாற்றுவதால், இவனை "புத்திரன்" என்று சொல்கிறோம்.
இவ்வாறு யயாதி, வந்திருந்த பிராம்மண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்திரர்களிடம் சொல்லி, தன் கடைசி இளைய புத்திரனான புருவுக்கு பட்டாபிஷேகம் செய்ய அழைத்தார்.