நானும் பிராம்மணத்துவம் பெற முடியுமா?
'முடியும்' என்று சொல்கிறார் யுதிஷ்டிரர். அறிவோம் வியாசரின் மஹாபாரதம்.
ऋषीणां समयं शश्वद्ये रक्षन्ति धनञ्जय |
आश्रिताः सर्वधर्मज्ञा देवास्तान् ब्राह्मणान्विदुः ||
स्वाध्याय निष्ठान्हि ऋषीञ्ज्ञान निष्ठांस्तथाऽपरान्
- வியாசர் மஹாபாரதம்
தனஞ்சயா!, மெய் ஞானத்தில் ஈடுபாடும், மெய் ஞானத்தை அடைவதில் பிடிவாதமும் உடையவர்கள் ரிஷிகள். எவன் ஒருவன் ரிஷிகளை போல தவ வாழ்க்கை கடைபிடிக்கிறானோ! பிரம்மச்சரியத்தில் இருந்து கொண்டு அனைத்து தர்மத்தையும் அறிந்து, தானும் தர்மத்தில் இருக்கிறானோ! அவனை தேவர்களும் பிராம்மணர்களாக கருதுகின்றனர்.
யுதிஷ்டிரர் சொன்னது போல, க்ருத யுகத்திலேயே விஸ்வாமித்திரர் வாழ்ந்து காட்டினார் என்று பார்க்கிறோம்.
விஸ்வாமித்திரர் க்ஷத்திரியனாக (போர் வீரன்) இருந்தும், ப்ராம்மணன் என்ற தகுதியை பெறுவதற்கு கடும்தவம் செய்ய சென்றார்.
க்ஷத்ரியனாக இருந்ததால், காமத்தை அடக்க முடியாமல், கோபத்தை அடக்க முடியாமல் கஷ்டப்பட்டாலும், இறுதியில் கோபம், காமம், லோபம் அனைத்தையும் விலக்கினார்.
தேவர்களையும் படைத்த ப்ரம்ம தேவன் தரிசனம் கொடுத்தது, "நீ பிராம்மணன். நீ ப்ரம்ம ரிஷி" என்று அங்கீகரித்தார்.
பிறகு ப்ராம்மணரான வசிஷ்டரிடம் வந்த போது, அவரும் அங்கீகரித்தார்.
விசுவாமித்திரர் ஆகாசத்தில் என்றுமே இருக்கும் வேத ஒலியை ஆழ்ந்த தியானத்தால் கவனித்து,வேத மாதாவான "காயத்ரி" மந்திரத்தை உலகுக்கு கொடுத்தார்.
மேலும் யுதிஷ்டிரர், யயாதி சொன்னதை சொல்கிறார்.
संतोषो वै स्वर्गतमः
संतोषः परमं सुखम् |
- வியாசர் மஹாபாரதம்
பார்த்தா! சந்தோஷம் சொர்க்கத்தை விட சுகமானது. சந்தோஷத்தை காட்டிலும் பெரிய சுகம் ஒன்றுமில்லை.
तुष्टेर्न किंचित्परमं सा सम्यक् प्रतितिष्ठति |
विनीत क्रोध हर्षस्य, सततं सिद्धि: उत्तमा ||
- வியாசர் மஹாபாரதம்
கோபத்தையும், ஆசையையும் விட்டவனுக்கு, சந்தோஷம் நிலைத்து இருக்கும்.
अत्रापि उदाहरन्ति इमां
गाथां गीतां ययातिना |
योऽभिप्रेत्याहरेत् कामान्
कूर्मो अङ्गानीव सर्वशः||
यदा चायं न बिभेति
यदा चास्मान्न बिभ्यति |
नेच्छति न द्वेष्टि
ब्रह्म संपद्यते तदा ||
भावं कुरुते सर्वभूतेषु पापकम् |
कर्मणा मनसा वाचा ब्रह्म संपद्यते तदा ||
- வியாசர் மஹாபாரதம்
மன்னர் யயாதி ஒரு சமயம், இது சம்பந்தமாக சொன்ன விஷயத்தை சொல்கிறேன் கேள்.
ஆமையானது (கூர்ம) தன் அங்கங்களை அடக்கி கொள்வது போல, எந்த மனிதன் தனது நீண்ட வெளி ஆசைகள் அனைத்தையும் உள் அடக்குகிறானோ, பயமில்லாமல் இருக்கிறானோ, பிறர் பயப்படுவதற்கு காரணமாகவும் இல்லாமல் இருக்கிறானோ, தனிப்பட்ட பகையோ, நட்போ இல்லாமல் இருக்கிறானோ, மனதாலும், சொல்லாலும், செயலாலும் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்கிறானோ, அவன் ப்ராம்மணத்துவம் அடைகிறான் என்று யயாதி சொன்னார்.
இவ்வாறு யுதிஷ்டிர மஹாராஜன், அர்ஜுனனை பார்த்து சொன்னார்.