பிரேதங்கள், பிசாசுகள், பித்ருக்கள் யார்?
காலத்தில் மரணம் அடைந்து, ஸம்ஸ்காரம் செய்யப்படாதபடி அல்லது ஸம்ஸ்காரம் ஆகும் வரை அலைந்து கொண்டிருப்பவர்கள் - "பிரேதங்கள்".
அகாலத்தில் தற்கொலையோ அல்லது ஆயுதம், தீ, விஷம் முதலியவைகளாலோ துர்மரணம் அடைந்து அலைந்து கொண்டு இருப்பவர்கள் - "பிசாசுகள்".
தாங்கள் செய்த புண்யத்தாலும், புத்ரன் செய்யும் ஸம்ஸ்கார பலத்தாலும், தெய்வத்தன்மையை அடைந்து விட்டவர்கள் - "பித்ருக்கள்".
இவர்கள் யாவருக்கும் யம தர்மராஜா தலைவராவார்.
பித்ரு லோகம் என்பது ஸூவர்கத்துக்கு கீழே, பூமிக்கு மேலே தென் திசையில் இருக்கிறது.
நாம் சிரார்த்தம் செய்யும் போது, 8 வஸூ, 11 ருத்ர, 12 ஆதித்யர்கள் என்ற 3 தேவகணங்கள் மூலமாக பித்ருக்களை போய் அடைகிறது.
பித்ருக்கள், தேவர்களை விட கிருபை அதிகம் உள்ளவர்கள்.
பித்ருக்கள் அனுக்ரஹம் செய்யவும், நிக்ரஹம் செய்யவும் சக்தி உள்ளவர்கள்.
பித்ருக்களுக்கு, நாம் செய்யும் சிராத்தத்தாலோ, பிண்டத்தினாலோ, தில தர்பணத்தாலோ ஆகவேண்டியது ஏதுமில்லை.
இவைகளை நாம் அளித்தாலும் முகர்ந்து விட்டு த்ருப்தி அடைகின்றனர்.
ஆயினும்,
நம் கையால் ஏதாவது ஏதாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அனுக்ரஹம் செய்ய வேண்டுமென்றும் இந்த ரீதியில் பரலோகம் சென்ற பிறகு கூட நம்முடன் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.
அவர்களை நாம் மறந்து விட்டால் பித்ரு த்ரோஹிகள் ஆகிவிடுகிறோம்.