ஏன் உலகம் படைக்கப்பட்டது?
நாம் ஏன் படைக்கப்பட்டோம்?
உலகில் ஏன் இவ்வளவு வேறுபாடுகள்?
மனிதனின் குறிக்கோள் என்ன?
மனிதர்கள் துன்பத்தில் இருந்து விடுபட்டு விடுதலை அடைய வழி என்ன?
இப்படி பல கேள்விகள் நமக்கு எழலாம்..
இந்த கேள்விக்கு பதிலை பகவான் மட்டுமே சொல்லமுடியும்.
பகவான் இதயத்தில் என்ன நினைக்கிறார்? என்று தெரிந்து கொண்டு விட்டால், இந்த கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைத்து விடும்.
அடுத்தவர் என்ன நினைக்கிறார்? என்றே நம்மால் கண்டுபிடிக்க முடியாத போது,
பகவானின் இதயத்தில் என்ன உள்ளது, என்று கண்டுபிடிக்க முடியுமா?
முடியும்.. என்கிறது நம் சனாதன தர்மம்.
பரமாத்மாவின் இதயமே "வேதம்".
4 வேதத்தையும் உண்மையான அர்த்தத்தோடு நாம் புரிந்து கொண்டு விட்டால், பகவான் என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம்...
கேள்விகள் அனைத்துக்கும் பதில் கிடைத்து விடும்.
வேதத்தை நன்கு தெரிந்து கொண்டால், நாம் கேட்கும் பல கேள்விகளுக்கு பகவான் என்ன பதில் சொல்கிறார்? என்று தெரிந்து விடும்.
ப்ரம்மமே பரமாத்மா.
ப்ரம்மமே பகவான்.
ப்ரம்மமே நாம (ஒலி) ரூபத்தில் ப்ரணவமாக இருக்கிறார்.
ப்ரம்மமே ரூபத்துடன் (அ என்ற விஷ்ணுவாக) இருக்கிறார்.