Followers

Search Here...

Showing posts with label நோய். Show all posts
Showing posts with label நோய். Show all posts

Tuesday, 23 April 2019

அகால மரணம் ஏற்படக்கூடாது என்று ஆசையா? பெருமாள் கோவிலில் தீர்த்தம் கொடுப்பதன் நோக்கம் என்ன?.. பிறப்புக்கும், நோய்க்கும் காரணம் என்ன?

"யாருக்குமே அகால மரணம் ஏற்பட கூடாது"
என்ற அக்கறை நம் ஹிந்து மதத்துக்கு எப்பொழுதுமே உண்டு.
'பிற மதத்தவர்கள் சாக வேண்டும், மகாத்மா காந்தியாக இருந்தாலும், பில் கேட்ஸாக இருந்தாலும், என் மதத்தில் இல்லையென்றால், அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும், எல்லோரும் நரகம் போவார்கள்' 
என்று உளராத, உன்னத தர்மம் கொண்டது சனாதன ஹிந்து தர்மம்.


'மோக்ஷம் அடையும் வரை, பிறந்து கொண்டே இருக்கிறான்' என்று மறுபிறவியை காட்டும் தர்மம், நம்முடைய ஹிந்து தர்மம்.

'அப்துல் கலாமும், அன்னை தெரசாவும், பிற மதத்தில் பிறந்தாலும், அவர்கள் செய்த புண்ணிய செயல்களுக்கு சொர்க்கம் தான் போவார்கள், பின் மீண்டும் மண்ணில் ஹிந்து குடும்பத்தில் பிறந்து, மோக்ஷத்தை (பிறவாநிலை) அடைய, பெருமாள் பக்தி செய்வார்கள்'
என்று சொல்லி, 'யாருமே நாசமாக மாட்டார்கள், யாவரும் ஹிந்துக்களே!' என்று சொல்லி, மற்றவர்களை வெறுக்காத உயர்ந்த தர்மம் நம்முடையது.

சில கோவிலுக்கு சென்று வழிபட்டால், அங்கு ரிஷிகளுக்கு ப்ரத்யக்ஷமான தெய்வங்கள், 'நமக்கு அகால மரணம் ஏற்படாமல் இருக்க' அணுகிரஹம் செய்வார்கள், என்று பலனாக சொல்லப்படுகிறது.
உதாரணத்திற்கு, 'திருவெள்ளக்குளம்' என்றும் 'அண்ணன் பெருமாள் கோவில்' என்று அழைக்கப்படும் திவ்ய தேசத்துக்கு சென்று (சீர்காழி அருகில் உள்ளது), அங்கு உள்ள 'ஸ்ரீநிவாச பெருமாளை பக்தியுடன் வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், அகால மரணம் ஏற்படாது' என்று பலன்.

வட இந்தியாவில், வெளி நாட்டில், வெகு தொலைவில் இருப்பவர்களால், வயதானவர்களால், இது போன்ற பிரத்யேகமான கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராட முடியாமல் போகலாம்.
'யாருமே அகால மரணம் அடைய கூடாது' என்று வேதம் ஆசைபடுகிறது.
கோவிலுக்கு போக முடியாதவர்களுக்கும், ஒரு வழி சொல்கிறது நம் சனாதன ஹிந்து தர்மம்.

சீர்காழி அருகில் இருக்கும் திருவெள்ளக்குளம் சென்று பெருமாளை தரிசித்து, அங்குள்ள குளத்தில் நீராட முடியாதவர்கள், பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை,
சாளக்கிராம மூர்த்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, எடுத்து கொண்டால் கூட 'அகால மரணம் ஏற்படாது' என்று பலனை வேதமே சொல்கிறது.
இதனால் தான், பெருமாள் கோவிலில், தீர்த்தம் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.
எத்தனை அற்புதமானது நம் ஹிந்து தர்மம்!!

'நமக்கு அகால மரணம் ஏற்பட கூடாது' என்று பெருமாள் ஆசைப்படுகிறார்.
'நீண்ட நாள் வாழ்ந்து கிருஷ்ண பக்தி இவன் செய்ய வேண்டும்' என்று பெருமாள் ஆசைப்பட்டு நமக்கு நீண்ட ஆயுளை அருளிகிறார்.


கோவிலுக்குள் வரும் நம் அனைவருக்கும், தீர்த்தம் கொடுத்து, கருணையை வர்ஷிக்கிறார்.
அவர் செய்யும் கருணையை நாம் சிறிது நேரமாவது, நினைத்து பார்க்க வேண்டும்.

ஹிந்துக்கள் செய்யும் எந்த காரியத்திலும் ஒரு உன்னத நோக்கம் உண்டு.
ஹிந்துவாக பிறந்ததே நாம் செய்த மஹா புண்ணியம் அல்லவா!
இந்திய பூமியை தவிர எங்கு பிறந்து இருந்தாலும், ஹிந்து தர்மத்தின் மகிமையை, அழகை உணர்ந்து இருக்க முடியுமா?
இந்திய மண்ணில் பிறந்தும், ஹிந்துவாக வாழாதவர்கள் இந்த ஜென்மத்தில் துரத்ரிஷ்டசாலிகள்.
ஹிந்து தர்மத்தில் வாழும் அனைவரும் பாக்கியாசாலிகள்.

கோவிலில் உள்ள பெருமாள், 'ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள், மகாத்மாக்களால் வழிபட்டவர்கள்' என்பதை நாம் மறந்து விட கூடாது.
'இவர் பேச மாட்டார், வெறும் கல் தானே' என்று நினைத்து விட கூடாது. இழப்பு நமக்குத்தான்.
திருமலையப்பன் பேசும் தெய்வம். நாம் நினைத்ததை நிறைவேற்றி தருவார் திருமலையப்பன்.
இல்லையென்றால், கல்லை பார்க்கவா 6 அறிவுள்ள கோடிக்கணக்கான ஜனங்கள், இந்த நவீன உலகத்திலும், தினமும் மலையேறி மலையேறி, கால் கடுக்க காத்து இருந்து தரிசனம் செய்து கொண்டு இருக்கிறார்கள்?
தெய்வத்திடம் அன்பு (பக்தி) உள்ள நமக்கு, ஸ்ரத்தை (திடநம்பிக்கை) குறைவாக இருப்பதால், நம்மிடம் மறைமுகமாகவும், மனதோடும் பெருமாள் பேசுகிறார்.
மனதில் தோன்றும் பிரார்த்தனைகளுக்கு செவி சாய்க்கிறார்.

தெய்வங்கள் ஆழ்வார்களிடம் பேசியது போல, நம்மிடம் பேச, நமக்கு அசைக்க முடியாத 'ஸ்ரத்தையும், பக்தியும்' தேவைப்படுகிறது.
சிவபெருமானும், விஷ்ணுவும் உண்மையான பக்தியுடைய இவர்களிடம் பேசியுள்ளார்கள் என்பதற்கு இவர்களின் "தெய்வ பாசுரங்களே" சான்று.
இன்றும், ஒவ்வொரு கோவிலிலும், பெருமாள் தன் சாநித்யத்தை குறைத்து கொள்ளாமல், ஆழ்வார்கள், மகாத்மாக்களின்  பிரார்த்தனைக்காகவும், ரிஷிகளின் பிரார்த்தனைக்காகவும், இன்று பிரசன்னமாக இருக்கிறார்.




நம் வீட்டில் உள்ள ராம, கிருஷ்ண விக்ரஹங்களுக்கும், சாளக்கிராம மூர்த்திக்கும், உண்மையான பக்தியுடன் (அன்புடன்) அபிஷேகம் செய்து,
அந்த அபிஷேக தீர்த்தத்தையும் நாம் மரியாதையோடு எடுத்து கொண்டால் கூட, அகால மரணம் ஏற்படாது.
தீர்க்க ஆயுசு பெருமாள் அருளால் கிடைக்கும்.
ஒவ்வொரு ஹிந்துக்கள் வீட்டிலும் தெய்வ விக்ரஹங்கள் உண்டு. இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்களுக்கு அபிஷேகம் செய்து வந்தனர். செய்து வருகின்றனர்.
அந்த அபிஷேக தீர்த்தத்தை பக்தியுடன் எடுத்து கொண்டனர்.
இதனால், ஹிந்துக்கள் மனதில் தெய்வ சிந்தனையும் வளர்ந்தது. அகால மரணம் ஏற்படாமல், தெய்வங்கள் அணுகிரஹத்தால், ஆரோக்கியமாக 90 வயது வரை ஆஸ்பத்திரி கால் வைக்காமல் வாழ்ந்தனர்.


கடந்த சில பத்தாண்டுகளாக தான், ஹிந்துக்கள் தடம் புரண்டு ஒடுகிறோம்.
ஒருவரும் தன் வீட்டில் அபிஷேகம் செய்து தெய்வ வழிபாடு செய்வதில்லை.
வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்கள் மரியாதை அற்று இருக்கிறது. இப்படிப்பட்ட செயல்களால், இன்று உள்ள ஹிந்துக்களுக்கு மனதில் தெய்வ சிந்தனையை விட, கீழ் தரமான சிந்தனைகள் பல எழும்புகிறது.
அகால மரணத்தை நோக்கி, பல நோய்கள் இளம் வயதிலேயே வருகிறது.
ஹிந்துக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். தெய்வ பக்தி வளர நாம் முயற்சி செய்ய வேண்டும்.
அகால ம்ருத்யு ஹரணம்,
சர்வ வியாதி நிவாரணம்,
சமஸ்த பாபக்ஷய ஹரம்,
விஷ்ணு பாதோதகம் சுபம்
என்று வேத வாக்கு.
அகால மரணத்தை நீக்க கூடியது,
அனைத்து வியாதியும் போக்க கூடியது,
அனைத்து பாபத்தையும் போக்க கூடியது,
விஷ்ணுவின் பாதத்தில் பட்ட தீர்த்தம் - என்று வேதமே சொல்கிறது.
மஹா விஷ்ணுவின் கால் நகத்தில் பட்டு ஓடி வந்ததால் தான், கங்கை நதிக்கே 'புண்ணியநதி' என்று பெயர் கிடைத்தது என்றால்,
நாம் செய்யும் அபிஷேகம் தீர்த்தம்,
நாம் கோவிலில் பெறும் அபிஷேக தீர்த்தம்,
எத்தனை மகத்துவம் வாய்ந்தது!! என்று புரிந்து கொள்ள முடியும்.

கோவிலில் பெருமாள் தீர்த்தத்தை வாங்கும் போது, 
இடது கையில் துணியை வைத்துக்கொண்டு, அதன் மேல் வலது கையால், ஜாக்கிரதையாக அபிஷேக தீர்த்தத்தை வாங்கி கொள்ள வேண்டும்.
நம்முடைய காலிலேயே தீர்த்தம் சிந்தி விடாமல், பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து வாங்கிக்கொள்ள வேண்டும்.


பெருமாள் அபிஷேக தீர்த்தத்தை, கொடுப்பவரும் ஜாக்கிரதையாக கொடுக்க வேண்டும்.
அகால மரணத்தை தடுக்கும் அருமருந்து என்ற ஞாபகத்துடன், 
கங்கை நதியே இவர் கால் நகம் பட்டதால் தான், புண்ணிய நதியாக ஒடுகிறாள் என்ற ஞானத்துடனும், அபிஷேக தீர்த்தத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவன் 'அல்ப ஆயுசாக போக மாட்டான்'.
"சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)" இருந்தால், நீண்ட ஆயுசு உண்டாகும், எந்த நோயும் சரியாகும்.

'நோய்' வருவதற்கு காரணம் - நாம் செய்த 'பாபங்களே',
'ஆயுள்' குறைவுக்கு காரணமும் - நாம் செய்த 'பாபங்களே'.
'சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)' இருந்து, பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவனுக்கு, 
அவனிடம் உள்ள பாபங்களும் பொசுங்கி போகும் 
என்று வேதமே சொல்கிறது.
அகால ம்ருத்யு ஹரணம்,
சர்வ வியாதி நிவாரணம்,
சமஸ்த பாபக்ஷய ஹரம்,
விஷ்ணு பாதோதகம் சுபம்
என்று வேத வாக்கு.

கோவிலில் நாம் பெற்றுக்கொள்ளும் பெருமாள் 'தீர்த்ததுக்கு' இத்தனை மகத்துவம் உண்டென்றால்,  பெருமாளிடம் சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு) வைக்க நமக்கு என்ன தடை இருக்க முடியும்?


பெருமாளின் பாத தீர்த்ததுக்கு அத்தனை பெருமை உண்டு என்று அறிந்து, "நம் பெருமாள்" என்று ஆசையுடன், நாம் அனைவரும் பக்தி செய்வோம்.
அதே சமயம் மரியாதையுடன் தெய்வ சந்நிதியில், பெருமாள் நம்மை பார்க்கிறார் என்ற கவனத்துடன் செயல்படுவோம்.

வாழ்க ஹிந்துக்கள். கோவில்களே நமக்கு உயிர்.
நம்முடைய பெருமாளை (நம்பெருமாள்) வணங்குவோம்.
நீண்ட ஆயுளுடன் ஹிந்து தர்மத்தில் இருந்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்து கொடுப்போம்.
பொய் மதங்களை துரத்துவோம்.
பொய் மதங்களில் உழலும் அனைவரையும் கிருஷ்ண பக்தி செய்ய அழைப்போம்.

Hare Rama, Hare Krishna - Bhajan 

Sandhya Vandanam - Evening (With Meaning)

Sandhya Vandanam - Afternoon  (With Meaning)



Sandhya Vandanam - Morning (With Meaning)