Followers

Search Here...

Showing posts with label தூண்டும். Show all posts
Showing posts with label தூண்டும். Show all posts

Saturday, 6 July 2019

கோவில்கள் எதற்கு? கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது? ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..

"தியானம் செய்வது, ஜபம் செய்வது" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது.
.


மாதா கோவில்களில் "ஜபம்" முக்கியம் என்று சொல்கிறார்கள்.
ஏதோ அவர்களுக்கு தெரிந்த ஜபம் செய்கிறார்கள். அவர்கள் அவர்கள் மதத்தில் இருக்கிறார்கள்.

மசூதிகளில் "தியானம்" முக்கியம் என்று சொல்கிறார்கள்.
ஏதோ அவர்களுக்கு தெரிந்த தியானம் செய்கிறார்கள். அவர்கள் அவர்கள் மதத்தில் இருக்கிறார்கள்.
"கோவில்களில் உத்சவங்கள் நடத்துவது தான்" ஹிந்துக்களுக்கு முக்கிய கடமையாக சொல்லப்படுகிறது.

  • கோவில்  உத்சவங்கள் நடந்த வரை, 
  • கோவில் உத்சவங்களில் நாம் கலந்து கொண்டு இருந்த வரை,

ஹிந்துக்கள் ஹிந்துக்களாகவே இருந்தோம்.
இன்று,

  • கோவில் உத்சவங்களில் நாம் கலந்து கொள்ளாமல் இருப்பதாலும்,
  • கோவிலில் உத்சவங்கள் நடக்காமல் இருந்தால், அதை நடத்த முயற்சி செய்யாமல் இருப்பதாலும்,

ஹிந்துக்கள் அழிந்து கொண்டு இருக்கின்றோம். இது ஹிந்துக்களுக்கு பேராபத்து.

ஹிந்துக்கள் "ஹிந்துக்களாக இருக்க வேண்டும்" என்றால், நாம் கோவிலில் உத்சவங்கள் நடக்க செய்ய வேண்டும்.

"உத்சவங்கள் நடத்துவதற்காக" தான், ஹிந்து கோவில்கள் அரசர்களால் அமைக்கப்பட்டன.
"தியானம்", "ஜபம்" செய்வதற்காக கோவில்கள் அமைக்கப்படவில்லை.

ஹிந்து தர்மத்தின் நோக்கம், நம் அனைவருக்கும் "தெய்வ சிந்தனையை" ஏற்பட செய்வது தான்.

தெய்வ சிந்தனை ஏற்பட, நமக்கு 'ஜபமும்' சொல்லப்படுகிறது.
தெய்வ சிந்தனை ஏற்பட, நமக்கு 'தியானமும்' சொல்லப்படுகிறது.
தெய்வ சிந்தனை ஏற்பட, நமக்கு 'புராணங்கள், இதிகாசங்கள், பகவத் கீதை, பாசுரங்கள், பிரபந்தங்கள்' உள்ளது.
ஆனால் இவை அனைத்துக்கும், சில தகுதிகள் தேவைப்படுகிறது.

தியானம் செய்து தெய்வ அனுபவம் ஏற்பட, நமக்கு "வைராக்யம்" வேண்டும்.

உலக ஆசையில் வெறுப்பும், தெய்வத்தை அடைவதில் ஆர்வமும் இருந்தால், தியானம் ஸித்திக்கும்.

யோகத்தை உலகுக்கு கற்றுக்கொடுத்து,
தியானம் எப்படி செய்ய வேண்டும்? என்று சொல்லி கொடுத்து, கூடவே "ஓம்" என்று ஜபமும் 'செய்'
என்று சொல்லி கொடுத்ததே, ஹிந்துக்கள் தானே.


நம்மிடம் இல்லாத விஷயங்கள் பிறரிடம் இல்லை.
நம்மிடம் பிச்சை வாங்கித்தான் அனைவரும் பிழைக்கின்றனர்.
இல்லாதவர்கள் பொறாமைப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.  அவ்வளவு தான்.
ஹிந்துக்களின் பெருமையை ஹிந்துக்கள் உணர வேண்டும்.

தியானம் செய்ய சக்தி உள்ளவர்களுக்கு, தியானத்தின் மூலம் தெய்வ சிந்தனை ஏற்படுகிறது.

தியானம் மூலம், பெருமாளை தன் இதயத்தில் தரிசனம் செய்யும் திறன் உள்ளவர்களுக்கு, கோவில் கூட தேவைப்படவில்லை..
ஆழ்வார்களில், நம்மாழ்வார் கோவிலுக்கு சென்றதே இல்லை.
நம்மாழ்வார் தியானத்திலேயே ஒவ்வொரு திவ்ய தேச பெருமாளையும் தரிசனம் பெற்று இருந்தார்.
ஒவ்வொரு திவ்ய தேச பெருமாளும் இவர் இதயத்துக்குள் வந்து தரிசனம் தந்தனர். நமக்கு திவ்ய தேச பாசுரங்கள் கிடைத்தது.
தியானம் செய்ய சக்தி உள்ளவர்களுக்கு, தியானத்தின் மூலம் தெய்வ சிந்தனை ஏற்படுகிறது.

தியானம் மூலம், பெருமாளை தன் இதயத்தில் தரிசனம் செய்யும் திறன் உள்ளவர்களுக்கு, கோவில் தேவை இல்லை.
தியானம் செய்ய கோவில்கள் கட்டப்படவில்லை. தியான மண்டபம் தனியாக உள்ளது.

புலன்கள் அடங்காதவர்கள் தியானம் செய்தும், ஜபம் செய்தும், புராணங்கள் படித்தும் தெய்வ சிந்தனை எளிதில் ஏற்படாது.

கோடிக்கணக்கான மக்களுக்கு, புலன் அடக்கம் கிடையாது. உலக நாட்டமும் அதிகம்.
இவர்களுக்கும் வழி காட்டுவதே நம் "ஹிந்து மதத்தின் நோக்கம்". 
இவர்களுக்கும் தெய்வ சிந்தனை ஏற்பட வழி காட்டுவதே நம் ஹிந்து மதத்தின் நோக்கம்.

புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களுக்கு,

  • வித விதமாக சாப்பிடுவதில் ஆர்வம் (நாக்கு) உள்ளது,
  • வித விதமான காட்சிகளை பார்ப்பதில் ஆர்வம் (கண்) உள்ளது,
  • வித விதமான நறுமணங்கள் நுகர்வதில் ஆர்வம் (மூக்கு) உள்ளது,
  • வித விதமான இசைகளை கேட்க ஆர்வம் (காது) உள்ளது,

இப்படி புலன்களில் வீழ்ந்து கிடைக்கும் கோடிக்கணக்கான மக்களை பார்த்து, 'நம்மாழவார் போல தியானம் செய்' என்று சொன்னாலும், செய்ய மாட்டார்கள்.

இப்படி புலன்களில் வீழ்ந்து கிடைக்கும் கோடிக்கணக்கான மக்களை பார்த்து, "கோடி ராம ஜபம் செய்" என்று சொன்னாலும், செய்ய மாட்டார்கள்.

புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களுக்கும், தெய்வ சிந்தனை ஏற்பட செய்வற்கே 'கோவில் உத்சவங்கள்'.

தியானம் செய்ய கோவில்கள் இல்லை.






முனிவர்களும், ரிஷிகளும், தியானம் செய்ய காட்டிற்கு தான் சென்றனர். தனிமையை தான் விரும்பினர். கோவிலுக்கு செல்லவில்லை.
தியானத்திற்கு தனிமை அவசியம். 

இத்தனை பெரிய கோவில்கள் நம் அரசர்கள் கட்டி, 
நான்கு வீதிகள் அமைத்தது, தியானம் செய்ய இல்லை. 
கோவிலில் உத்சவங்கள் செய்வதற்கே.
இதை ஹிந்துக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களுக்கும், தன் தரிசனத்தை எப்படியாவது கொடுத்து, தெய்வ பக்தியை கொடுப்பதற்காக தான், நம் தெய்வங்கள் கோவிலில் வீற்று இருக்கிறார்கள்.

புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களுக்கு தன் தரிசனத்திதை  கொடுக்க நம் ஹிந்து தெய்வங்கள் காத்து இருந்தாலும், இவர்கள் கோவிலுக்கு வர  வேண்டுமே?
தான் கோவில் கர்பக்ரஹத்திலேயே இருந்தால் சரி வராது என்று தான், அம்மன் வீதி உலா, பெருமாள் புறப்பாடு, சிவபெருமான் புறப்பாடு, கந்தன் புறப்பாடு என்று, நம் தெய்வங்கள், கோவிலை விட்டு தானே வெளியே வந்து, புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களுக்கு தன் தரிசனத்திதை கிடைக்க செய்கின்றனர்.

வீதியில் வரும் பெருமாளை, நாத்தீகனும் பார்க்கிறான், புலன் அடங்காதவனும் பார்க்கிறான்.

வீதியில் உலா வரும் தெய்வத்தை நாம் பார்க்கிறாமோ இல்லையோ, தெய்வங்கள் நம் அனைவரையும் பார்த்து விடுவதால், நம்மை அறியாமலேயே நமக்கு தெய்வ சிந்தனை விதைக்கப்படுகிறது.

ஹிந்து மதத்தின் நோக்கமே நம் அனைவருக்கும் தெய்வ சிந்தனை ஏற்பட செய்வது தான்.

தன் தரிசனத்தை கொடுத்து, நம் மன அழுக்கை நீக்கி, புலன்களில் வீழ்ந்து கிடைக்கும் நமக்கும் தெய்வ சிந்தனை கொடுக்கவே, கோவிலில் தெய்வங்கள் குடி கொண்டு உள்ளனர்.
தியானத்திலும், ஜபத்திலும் ஸித்தி அடைந்த ரிஷிகளும், முனிகளும், மகான்களும், ஞானிகளும்,
நமக்காக பகவானை பிரார்த்தனை செய்து, அவரை சாநித்யம் குறையாமல் தான் தரிசித்த இடத்திலேயே இருக்க செய்து, அங்கு ஒரு கோவில் அமைத்து, அந்த பெருமாளுக்கு உத்சவங்கள் செய்ய சொல்லி, நமக்கு தந்து விட்டு சென்றனர்.


புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களை, கோவிலுக்குள் வரவழைத்து தன் தரிசனத்தை எப்படி தருவார் பெருமாள்?
கோவிலுக்கு வந்தால் தானே, சிவனோ, பெருமாளோ, அம்மனோ  தன் தரிசனத்தை தர முடியும் !!

தெய்வ தரிசனம் பெற்றால் தானே நம் மன அழுக்குகள் நீங்கும்..
தெய்வ சிந்தனை ஏற்படும்...சித்தம் சுத்தி ஆகும்.. ஞானம் கிடைக்கும் !

இவர்களையும் இழுப்பதற்கே, கோவில் உத்சவங்கள்.. 
கோவிலில் தெய்வ விக்ரகங்களுக்கு செய்யப்படும் ஆராதனைகள், பூஜை, அபிஷேகம், தேர் இழுத்தல், வான வேடிக்கை, இசை, நடனம், நாட்டியம், சிற்பம், யாகங்கள், பிரசாத விநியோகம் எல்லாம், புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களையும் இழுத்து, தெய்வத்தின் முன் நிறுத்தத்தான்.

யோகாவினால் சேர்க்க முடியாத மக்கள் கூட்டத்தை,
தியானத்தால் சேர்க்க முடியாத மக்கள் கூட்டத்தை,
ஜபத்தினால் சேர்க்க முடியாத மக்கள் கூட்டத்தை,
ப்ரவசனங்களால், உபன்யாசங்களால் சேர்க்க முடியாத மக்கள் கூட்டத்தை,
ஒரே ஒரு கோவில் திருவிழா மூலம் கோடிக்கணக்கான மக்களை கூட்ட முடிகிறது.
ஹிந்துக்களை ஹிந்துக்களாக வைத்து இருப்பது கோவில் உத்சவங்களே என்பதை யாரும் மறுக்க முடியாது.

மீனாக்ஷி திருக்கல்யாணம் என்றால், எத்தனை  கோடிக்கணக்கான மக்களை, மீனாக்ஷி இழுக்கிறாள் என்று கண்கூடாக பார்க்கிறோம்..

அண்ணாமலை தீபம் என்றால், எத்தனை  கோடிக்கணக்கான மக்களை, சிவபெருமான் இழுக்கிறார் என்று கண்கூடாக பார்க்கிறோம்..

அழகர் ஆற்றில் இறங்குகிறார் என்றால், எத்தனை  கோடிக்கணக்கான மக்களை இழுக்கிறார் என்று கண்கூடாக பார்க்கிறோம்..

சமயபுர மாரியம்மனுக்கு திருவிழா என்றால், எத்தனை  கோடிக்கணக்கான மக்களை இழுக்கிறாள் என்று கண்கூடாக பார்க்கிறோம்..

ஹிந்துக்களை ஹிந்துக்களாக வைத்து இருப்பது கோவில் உத்சவங்களே என்பதை யாரும் மறக்க கூடாது.

புலன்களை அடக்க முடியாமல் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்காக தான், கோவில் திருவிழாக்கள், ஆராதனைகள் எல்லாம் நடத்தப்படுகிறது.

இவர்கள் அனைவரையும் எப்படியாவது கோவிலுக்குள் இழுத்து, தன் தரிசனத்தை கொடுத்து, பக்தியை ஊட்டி, ஞானத்தை கொடுக்க நம் தெய்வங்கள் காத்து இருக்கிறார்கள்.
நம் தெய்வங்கள் எத்தனை கருணை கொண்டு இருக்கிறார்கள் என்று, நாம் உணர்ந்து கொண்டாலே போதும்.


"'காதுக்கு நல்ல பாட்டு கச்சேரி கேட்க தான், எனக்கு ரொம்ப பிடிக்கும்'
என்று ஒலியில் (சப்தம்) மயக்கமுற்று இருக்கிறாயா?
கவலையே இல்லை. கோவிலுக்கு வா.
கோவிலில் கச்சேரி வைக்கிறேன். இங்கேயே வந்து கேள்.
பல வித வாத்தியங்கள், பல அற்புதமான பாடகர்கள் எல்லோரும் வந்து கோவிலில் கச்சேரி செய்வார்கள்.
இங்கேயே உட்கார்ந்து கேட்டு கொண்டிரு."
என்று இழுக்கிறது நம் கோவில்கள்.
யாரோ பெரிய பாடகர் வந்து பாடுகிறாராம் என்று, பாட்டு கேட்கும் ஆசையில் வருபவன், "சரி அப்படியே கர்பக்ரஹத்தில் உள்ள ஸ்வாமியையும் பார்த்து விட்டு செல்வோம்" என்று தரிசனம் செய்து விடுவான்.

புலனிகளில் விழுந்து கிடைக்கும் இவனுக்கு,
நல்ல கச்சேரி கேட்க செய்வது போல செய்து, கோவிலுக்கு வர செய்து, தன் தரிசனத்தை கொடுத்து, தன் தரிசனத்தாலேயே அவனுக்குள் இருந்த மன அழுக்குகளை நீங்க செய்து, தெய்வ சிந்தனை கிடைக்க செய்து, ஞானத்தை கொடுத்து, தன் பக்தனாக்கி, சகல சுகங்களும் கிடைக்க அருள் செய்து விடுகிறார்கள் நம் தெய்வங்கள்.

அதே போல,
"'எனக்கு சாப்பிட பிடிக்கும்' என்று சுவையில் (ரஸம்) மயக்கமுற்று இருக்கிறாயா?
கவலையே இல்லை. கோவிலுக்கு வா.
கோவிலில் அருமையான நெய் சொட்ட சொட்ட உனக்கு சாப்பிட பிரசாதங்கள் கிடைக்க செய்கிறேன்.
கோவில் விழா சமயத்தில் பல விதமான பானங்கள் (மோர், பானகம்), கல்யாண விருந்து போட்டு சாப்பிட செய்கிறேன்.
இங்கேயே உட்கார்ந்து கொண்டிரு."
என்று நம்மை நம் போக்கிலேயே சென்று, கோவிலுக்கு இழுத்து, தன் தரிசனத்தை கொடுத்து விடுகிறார்கள் நம் தெய்வங்கள்.

அதே போல,
"'எனக்கு பார்க்க அழகான காட்சிகள் தான் பிடிக்கும்'
என்று பார்வையில் (ரூபம்) மயக்கமுற்று இருக்கிறாயா?
கட்டாயம் கோவிலுக்கு வா.
தினசரி பெருமாளுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்கிறேன். பார்.
கண்ணுக்கு வித வித அலங்காரம் பார்க்க கிடைக்கும்.
கோவிலில் உத்சவங்கள் நடக்கும் போது, கோவிலே அலங்கார விளக்குகளால், பூக்களால் நிரப்பப்பட்டு, கண்ணுக்கு ஆனந்தம் தரும்.
இங்கேயே உட்கார்ந்து கொண்டிரு."
என்று நம்மை நம் போக்கிலேயே சென்று, கோவிலுக்கு இழுத்து, தன் தரிசனத்தை கொடுத்து விடுகிறார்கள் நம் தெய்வங்கள்.

அதே போல,
'எனக்கு நல்ல வாசனை பிடிக்கும்' என்று நுகருதலுக்கு (கந்தம்) மயக்கமுற்று இருக்கிறாயா?
கவலையே இல்லை.
கோவிலில் தூபம், ஊதுபத்தி என்று வாசனை பொருட்களை ஏற்றி வைக்கிறேன்.
பூக்களின் சுகந்தமும் சேர்ந்து கோவிலே கமகமக்க செய்கிறேன். கோவிலுக்கு வா. இங்கேயே நீ அதை அனுபவிக்கலாம்."
என்று நம்மை நம் போக்கிலேயே சென்று, கோவிலுக்கு இழுத்து, தன் தரிசனத்தை கொடுத்து விடுகிறார்கள் நம் தெய்வங்கள்.

புலன் அடக்கம் இன்றி, காமத்தை அடக்க முடியாதவர்களையும் நம் ஹிந்து மதம் விட்டு விடுவதில்லை.
அவர்களுக்காக கோவில் கோபுரங்களில் கேளிக்கை நிறைந்த சிலைகள், சில ஆபாசமான சிலைகள் கூட கோபுரங்களில் செதுக்கி வைத்து இருப்பார்கள்.
காம சுகத்திலேயே சிக்கி உள்ள இது போன்ற மனிதர்களும், இது போன்ற சிலைகளை பார்ப்பதற்கென்றே கோவிலுக்கு வருவார்கள்.
"ஹாய்.. ஒய்" என்று கோவில் கோபுரத்தில் இருக்கும் சிலைகளை பார்த்து சிரித்து கொண்டே புலன்கள் அடங்காத இவர்கள், கோவிலுக்கு உள்ளேயும் இப்படி தான் இருக்குமோ? என்று நினைத்து வந்து, கடைசியில் பெருமாளை தரிசித்து விட்டு சென்று விடுவார்கள்.

"தன் தரிசனத்தை இது போன்ற ஆசாமிகளுக்கும் கொடுத்து", நாளடைவில் இவர்களுக்கும் தெய்வ சிந்தனை ஏற்பட செய்து, கடைசியில் மோக்ஷத்திற்கான சாவியை கொடுத்து விடுகிறார் பெருமாள்.
தெய்வ சிந்தனை ஏற்பட,
தியானம் செய்பவர்கள் தனியாக செய்யட்டும், ஜபம் செய்பவர்கள் தனியாக செய்யட்டும்.. புராணங்கள் படிப்பவர்கள் தனியாக படிக்கட்டும்,,,

நம் ஹிந்துக்களுக்கு, தெய்வ சிந்தனை ஏற்பட, நமக்கு கொடுக்கப்பட்ட கடமை "கோவிலில் உத்சவங்கள் நடக்க செய்து, நாம் கலந்து கொள்வதே.."

'கோவில் திருவிழாக்களில் கலந்து கொண்டு, கோவிலில் உள்ள தெய்வத்தை நாம் தரிசித்து கொண்டு இருந்தாலே' நமக்கு எல்லா நன்மைகளும் தெய்வ அருளாலேயே ஏற்படும்.

காஞ்சியில் அத்தி வரதர் 40 வருடங்களுக்கு பிறகு வருகிறார்  என்று கேள்விப்பட்டதும், ஹிந்துக்கள் கூடியதை பாருங்கள்.. இதை விட சான்று வேண்டுமா, ஹிந்துக்களை கோவில்களே காக்கிறது என்பதை...




ஹிந்துக்கள் மறக்க கூடாத சில விஷயங்கள் :

  1. "கோவில்களில் உத்சவங்கள் நடத்துவது தான்" ஹிந்துக்களுக்கு முக்கிய கடமை.
  2. கோவில் உத்சவங்கள் நடந்த வரை, கோவில் உத்சவங்களில் நாம் கலந்து கொண்டு இருந்த வரை, ஹிந்துக்கள் ஹிந்துக்களாகவே இருந்தோம்.
  3. கோவில் திருவிழாக்கள் ஒவ்வொரு மாதமும் நடக்க செய்ய வேண்டும்.
  4. கோவில் திருவிழாக்கள் நின்று போன கோவில்களை, ஹிந்துக்கள் சேர்ந்து கொண்டு முயற்சி செய்து மீண்டும் விழாக்களை நடத்த வேண்டும். பணம் படைத்தவர்கள் பொருள் உதவி செய்ய வேண்டும்.  உடலாலும்  தன்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும்.
  5. கோவிலை சுற்றி உள்ள நான்கு வீதிகள் வரை, நிலங்களையோ, வீடுகளையோ, ஹிந்துக்களுக்கு மட்டுமே விற்க வேண்டும். பணத்திற்காக ஆசைப்பட்டு, பிற மதத்தினருக்கு விற்றால், கோவில் உத்சவங்கள் நின்று போகும். நம் தெய்வங்கள் மீது பொறாமை கொண்டு விழாக்கள் நடக்க விடாமல் செய்து விடுவார்கள். நம்மால் கோவில்கள் அழிந்த பாவத்தை நாம் சுமக்க கூடாது.
  6. ஹிந்துக்கள் ஹிந்துக்களாக வாழ, ஹிந்துக்கள் கோவில் திரு விழாக்கள், பண்டிகைகள் அனைத்திலும் கலந்து கொள்ள வேண்டும்.


வாழ்க ஹிந்துக்கள்