Followers

Search Here...

Showing posts with label துறை. Show all posts
Showing posts with label துறை. Show all posts

Wednesday, 11 March 2020

ஆன்மீக பூமியாக நம் தேசத்தை மாற்றுவது எப்படி? பொருளாதார சுதந்திரம் கிடைக்குமா? ஒரு அலசல்...


இன்ரைய உலகில்,
120 கோடி இந்திய மக்களும், "பணம் அதிகம் தரும் ஒரே வேலையை நோக்கியே" போட்டி போட்டு ஓடுகிறோம்.
பல அற்புதமான வேலைகள்,
பல அற்புதமான ஆராய்ச்சிகள்,
பல அற்புதமான தொழில் சிந்தனைகள் இருந்தும்,
ஒரே வேலையை நோக்கி ஓடும் காரணத்தால், 120 மக்களின் மனதில் இருந்து இந்த சிந்தனைகள் அழிந்து விட்டது...




சுய தொழிலை விட்டதால், திறன் இல்லாத சமுதாயமாக, 
வேலை இல்லா திண்டாட்டம், பொருளாதார சரிவு, மக்கள் தொகை, 1000 வருட இந்திய சரித்திரத்தை மட்டுமே பார்த்து கொண்டு, ஹிந்துக்கள் இந்த காலங்களில் அந்நியர்களால் ஆக்ரமிப்பு பட்டு இருந்தார்கள் என்ற அறிவே இல்லாமல், ஹிந்துக்களையே அழிக்க நினைக்கும் மதவாத போக்கு, பொறாமை, அறியாமை, இவையெல்லாம் சேர்த்து கொண்டு, 
பெரும் அபாயத்தை நோக்கி 120 கோடி இந்திய மக்களும் சென்று கொண்டு இருக்கிறோம்.

"நிம்மதி" என்பது ஒருவர் நெஞ்சிலும் இல்லை.
நம் தெய்வங்கள் தான் ஆங்காங்கு நிம்மதியை தந்து கொண்டு இருக்கின்றனர்.

அரசாங்கம், இதை சரி செய்ய பெரும் முயற்சிகள் செய்கிறது.. 
ஆனால்!!
இவர்கள் எடுக்கும் எதுவும் இதை சரி செய்ய போவதில்லை.

அரசாங்கம், "நம் பாரத நாடே, உலகத்துக்கு கோபுரம் போல இருப்பதை" அறிய வேண்டும்.
ஒவ்வொரு தேசத்துக்கும் சில குணங்கள் உண்டு. 
உலகத்துக்கு நடு பகுதியில், 'உலகத்துக்கே கோவிலாக' இருக்கும் இந்த தேசத்தை, வணிக தேசமாக ஆக்கி முன்னேற்றுவது!! மஹா முட்டாளத்தனம்.

தேசத்துக்கு, வணிகம் தேவைதான்..  
ஆனால், நம்முடைய பொருளாதாரத்தை வலுப்படைய செய்யும் சக்தியாக, அந்நிய தேச வணிகமே இருக்கும் படி செய்து விட கூடாது.

அந்த வணிக பாதையை நோக்கியே, கடந்த 20 ஆண்டுகளாக நடை போட்ட நம் பாரத நாடு, 
இன்று "உலக பொருளாதாரம் வீழ்ந்தால், இந்திய பொருளாதாரமும் வீழும்"
என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

மற்ற நாடுகளில் "பொருளாதாரம் வீழும் போது",
மக்கள் தொகை அதிகம் இல்லாத அந்த நாட்டினர் பெரிதும் அச்சம் கொள்வதில்லை.
நம் பாரத நாட்டிலோ 120 கோடி மக்கள்!!
"அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் உணவு"
என்பது இது போன்ற உலக பொருளாதாரத்தை ஒட்டி அமைக்கப்படுவது பேராபத்து. 

மற்ற நாட்டில் உள்ளவனுக்கு, இந்தியன் வேலை செய்து, வேலை செய்து, பலரது தூக்கமும், சொந்தமும் பறிக்கப்பட்டு விட்டது.
இன்று,
ஒவ்வொரு இந்தியர்கள் நெஞ்சிலும் வேலை பதட்டமும், அச்சமும் கொன்று தின்கிறது.
இதை சரி செய்ய வழி உண்டா? கட்டாயம் உண்டு...

பாரத நாட்டை தேடிக்கொண்டு கொலம்பஸ் அலைந்தான். 
அவன் காணாத வெற்றியை,

வாஸ்கோடகாமா என்ற கிறிஸ்தவ வணிகன் பெற்றான் என்று ஐரோப்பா கண்டமே அவனை புகழ்ந்தது.

"ஒரு கொள்ளையன் அடுத்தவன் வீடு புகுந்ததை மற்ற கொள்ளையர்கள் கொண்டாடுவது போல", ஐரோப்பா கண்டமே அவனை புகழ்ந்தது.

இவனை தொடர்ந்து, பிரெஞ்சு, ட்ச், பிரிட்டிஷ் நாடுகளில் இருந்து ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் முழுவதுமாக 600 வருடங்கள் ஆக்ரமித்தனர் நம் பாரத நாட்டை.

"அறிவியல் கண்டுபிடுப்புகள் செய்தோம்!!" 
என்று இன்று மார்தட்டும் கிறிஸ்தவர்கள், 947ADக்கு முன்,
உலகத்திற்கு பயனாக என்ன அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்தார்கள்? ஒன்றுமே இல்லையே!!
இந்தியாவுக்கு நுழைவதற்கு முன், உலகத்திற்கு பயனாக ஒரு கண்டுபிடிப்பு கூட இவர்களிடம் காண முடியவில்லையே ஏன்?

947ADல் அமீர் சூரி (Amir Suri) என்ற புத்தனாக மாறி இருந்த ஹிந்து அரச குடும்பத்தை சேர்ந்தவன் (அசோக மன்னனின் பௌத்த மத பிரச்சாரத்தால் ஏற்பட்ட வினை),
பாரசீக (இன்று Iran) நாட்டை கைப்பற்றி இருந்த சபாரித்து இஸ்லாமிய அரசனிடம் (Saffarid dynasty) தோற்று இஸ்லாமிய மதத்தை ஏற்றான்.

அவன் சந்ததி, கோரி (Ghori) என்ற இஸ்லாமிய வம்சத்தை பாரத மண்ணில் கொண்டு வந்தது. 
பாரத நாடாக இருந்த ஆப்கான், சிந்து (பாகிஸ்தான்), வங்கம் (பங்களாதேஷ்) இன்று இஸ்லாமிய நாடாக கொடுக்கப்பட்டு விட்டது.
பாலைவனத்தையே பார்த்து இருந்த அந்நிய தேச இஸ்லாமியர்கள், பாரத நாட்டில் நுழைந்தனர்.  நம் பாரத நாட்டை முழுவதுமாக 1000 வருடங்கள் ஆக்ரமித்தனர்.




1498ADல் "ஆடும், தேனும், ரொட்டியுமே பார்த்த கிறிஸ்தவ ஐரோப்பியர்கள்" இந்தியாவில் காலடி வைத்தனர்.
தங்கத்தில் புரண்டுகொண்டிருந்த கோழிக்கோடு சமுத்திர கரையை ஆண்ட கேரள மன்னனிடம், "மஞ்சள், மிளகு" போன்ற தானியத்துக்கு பதிலாக "தொப்பி, ஆட்டின் தோலால் செய்யப்பட்ட துணியை" பண்டமாற்றம் செய்ய கேட்டான்,
வாஸ்கோடகாமா என்ற கொள்ளையன்.
தங்கத்துடன் பண்டை மாற்ற வியாபாரம் செய் என்று அரசன் சொல்ல, இந்த திருடன், ஐரோப்பா தேசம் சென்று படைகள் திரட்டி வரலாம் என்று திரும்பும் போது, அங்கு இருந்த நகரையே கொளுத்தி விட்டு ஓடினான்.


என்ன கண்டுபிடித்து இருந்தார்கள் கிறிஸ்தவர்கள், நம் நாட்டிற்கு வருவதற்கு முன்? 
ஒரு உலகத்துக்கு நன்மை தரும் கண்டுபிடுப்பும் ஒன்று கூட இவர்கள் செய்யவில்லையே!!
தையல் தெய்க்கும் ஊசி கூட, இந்தியாவுக்கு நுழைந்த பின்னர் தானே இவர்கள் மூளையில் உதித்தது?  
யோசித்து பார்க்க வேண்டாமா நாம்?

அந்நிய இஸ்லாமியர்கள் நுழைவுக்கு முன், 947ADக்கு முன், நம் பாரத நாட்டின் சரித்திரம் எப்படி இருந்தது? என்று கவனிக்கும் போது,
இந்திய பொருளாதாரம், இந்தியாவின் தனித்தன்மையை மீண்டும் பெற வழிகள் தெரிகிறது.
*** அரசாங்கம், கோவில்களை தன் கட்டுப்பாட்டில் இருந்து விட வேண்டும்.

**** தெய்வங்களை வைத்து நிர்வாகம் (கமிட்டி) அமைக்கப்பட வேண்டும். கோவிலை வைத்து நிர்வாகம் (கமிட்டி) அமைக்கப்பட கூடாது.

*** ஒவ்வொரு கோவிலையும் அந்த கோவிலின் பக்தர்கள் கவனித்து கொள்ளட்டும் என்று விட்டு விட கூடாது.
காரணம்,
சிதம்பரம் கோவிலை பார்த்து கொள்ளும் சிவ பக்தர்கள், வைத்தீஸ்வரன் கோவில் சிதிலமடைந்தால் கவனிக்க மாட்டார்கள்.

*** ஒரு மாநிலத்தில் இருக்கும் பெருமாள் கோவில் அனைத்துமே ஜீயர் போன்ற மடாதிபதிகள் தலைமையாக கொண்டு, கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.
*** ஒரு மாநிலத்தில் இருக்கும் சிவபெருமான் கோவில் அனைத்துமே காஞ்சி, மற்றும் பிற சைவ மடங்கள் தலைமையாக கொண்டு, கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.

*** எந்த தெய்வத்தின் மேல் பக்தி உண்டோ, அந்த பக்தர்களை கொண்டு கமிட்டி அமைத்து, மாநிலம் (ஸ்டேட்) அளவில் உள்ள அனைத்து கோவிலுக்கும் உரிய பொறுப்பை கொடுக்க வேண்டும் அமைக்க வேண்டும்.

இதற்கு மடாதிபதிகள், ஜீயர்கள், அடிகளார் ஏற்கனவே உள்ளனர்.
இதை ஒழுங்கு படுத்தி அரசாங்கம் இவர்களிடம் ஒப்படைத்தாலே போதுமானது.

*** அந்தந்த பக்தர்களை கொண்டு தமிழகம் முழுவதும் கமிட்டி அமைக்க வேண்டும்.

*** பெருமாள் கோவில்கள் அனைத்தும், பெருமாள் கோவிலுக்காக அமைத்த கமிட்டி நிர்வகிக்க வேண்டும்.
*** அது போலவே முருகனுக்கு, சிவனுக்கு, சக்திக்கு என்று அமைக்க பட வேண்டும்.

*** பெருமாள் பக்தனை, "சிவன் கோவிலையையும் பார்த்து கொள்!" என்று செய்ய கூடாது..   
பக்தி இல்லாத பூஜை நடக்கும் படியாக அமைந்து விட கூடாது.

*** எந்த தெய்வத்திடம் அதிக ஈடுபாடோ! அந்த கோவில் கமிட்டியில் மட்டுமே இருக்குமாறு செய்ய வேண்டும்.

இது 2 பெரிய லாபத்தை நமக்கு தரும்:
1.
வேதத்தை விட்டு, பிழைப்புக்கு ஓடிய பிராம்மணன், "தன் பிள்ளை பூஜை செய்வான்" என்று நம்புவான்.

"கோவிலில் பூஜை செய்வோம்" என்ற இந்த நம்பிக்கை தன் மகனை வேதம் படிக்க வைக்க செய்யும்.
பிராம்மணன் முதலில் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலைக்கு திரும்ப இது வழி செய்யும்.




2.
பிராம்மணன் உலக படிப்பை விட்டு விலகும் போது, வேலை வாய்ப்பு அடுத்த சமுதாய மக்களுக்கு அதிகரிக்கும்.
பிராம்மணன் உலக கல்வி கற்றாலும், "கோவில் பூஜை கட்டாயம் செய்ய வேண்டும்" என்ற நிலை வந்தால்,
தான் கற்ற கல்வியை இலவசமாக சொல்லி கொடுக்கவும் ஆரம்பிப்பான்.

இந்த 2 நன்மையை தவிர,
3.
சிவ பக்தர்களால் ஏற்பட்ட கமிட்டி, 
பெருமாள் பக்தர்கள் மூலம் பெருமாளுக்கு நடக்கும் உத்சவங்களை பார்த்து, 
தாங்களும் சிவன் கோவில் திருப்பணி, உற்சவம் என்று ஆரம்பிப்பார்கள்.. பக்தியில் போட்டி ஏற்படும்

4.
பெருமாள் பக்தன் பாசுரங்கள் வாசித்து கொண்டு போனால்,
நடராஜருக்கு முன்னால் பதிகங்கள் பாடி செல்வார்கள்.

பக்தியில் போட்டி ஏற்படும்.
கோவில் திருப்பணிகள் ஏற்படும்.
தமிழ் மொழி "பாசுரங்கள், பதிகங்கள், கந்த புராணம்" போன்றவைகளால் உயிர்த்து ஏழும்.

5.
கோவில் திருப்பணியான கோவில்களை காண, தெய்வங்களை தரிசிக்க, பக்தர்கள் வருவார்கள்.
பக்தர்கள் வருகையால், அந்த ஊரில் வியாபாரங்கள் செழிக்கும்.

நாடு எளிதாக சுய சார்புள்ள நாடாக ஆகும்.

"என் பெருமாளுக்கு பெரிய கோவில் அமைப்பேன்" என்று ஒரு கோடீஸ்வரன் நினைத்தால்,
மற்றொரு கோடீஸ்வரன்
"முருகனுக்கு அதை விட பெரிய கோவில் கட்டுவேன்" என்று ஆசைப்படுவான்.
கலைகள் தானாகே வளரும். 
வேலைகள் நம் ஊரிலேயே மீண்டும் உற்பத்தி ஆகும்.

"ஒரு திருப்பதி, ஒரு பழனி" - ஊர் மக்களுக்கே சோறு போடுகிறது என்பதை நாம் மறந்து விட கூடாது.

நம் தெருவில் உள்ள கோவில் தெய்வங்களுக்கு சரியான காலத்தில் பூஜைகளும், திருவிழாவும், தேரும் இழுத்தாலேயே, தானாக பணம் வந்து கொட்டும்.
தெய்வத்தை மதித்தால், நமக்கு சோறு போடும்.
அன்ன தானம் பிறருக்கு போட, தெய்வமே நமக்கு செய்ய சக்தியும்  அளிக்கும்.




தெய்வங்களை நாம் பார்த்துக்கொண்டால், தெய்வங்கள் ஊருக்கே சோறு போடும்.  கோவில்கள் எதற்கு?. தெரிந்து கொள்ள இங்கே படியுங்கள்.

பாரத நாட்டில், "தெருவுக்கு தெரு கோவிலை வைத்து கொண்டு, பிச்சை எடுப்பது" துரதிருஷ்டம் அல்லவா!!..

தெய்வங்களை அலட்சியம் செய்து, பூஜைகள், மாதா மாதம் உற்சவங்கள் செய்யாமல் விட்டதால், இன்று பிச்சை எடுக்கிறோம் வெளிநாட்டிடம்.

நம் கலாச்சாரத்தை வெளிநாட்டவன் புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்க, சோற்றுக்காக, அவனுடைய  கீழ்த்தரமான கலாச்சாரத்தை நமக்கு சொல்லி தருகிறார்கள். 
வெட்கக்கேடு அல்லவா!

நம் நாடே சுற்றுலா நகரமாக ஆக்க முடியுமே?

சிறப்பாக நிர்வகிப்படும் கோவிலை பார்க்க வராத மக்கள் உண்டா? 

சரியாக தெய்வங்களை வைத்து கொண்டால், நம் தெய்வங்கள் எத்தனை பேருக்கு அன்னதானம் செய்யும் தெரியுமா? 
போய் பாருங்கள், திருப்பதியை.
போய் பாருங்கள் பழனி முருகனை .

தெய்வத்தை நாம் போற்றினால், தெய்வம் நம்மை நொடிப்பொழுதில் காத்து விடும்.
கோவிலை சுற்றியே வேலையும் கொடுப்பார். 

வேதத்தில் சொன்ன தெய்வங்கள் கற்பனை தெய்வங்கள் அல்ல. 
இதை புரிந்து கொள்ள வேண்டும் ஹிந்துக்கள்.

போற்றி பாருங்கள் நம் தெய்வங்களை. 
கூரையை பிய்த்து கொண்டு செல்வத்தை நமக்கு கொட்டி விடும்.

முருகன் பழனியில் மட்டும் தான் அருள் புரிகிறார் என்று நினைப்பா?
பெருமாள் திருப்பதியில் மட்டும் தான் அருள் புரிகிறார் என்று நினைப்பா?

உங்கள் தெருவில் உள்ள பெருமாள் கோவிலை அலங்கரியுங்கள்..  அதிசயம் நடக்கும்.  

உற்சவங்கள் மாதம் தோறும் செய்யுங்கள்... வியாபாரம் கிடைக்கும்.. 
ப்ராம்மணனை வேதம் படிக்க செய்யுங்கள்..
ப்ராம்மணனை பூஜை, கோவில் உத்சவங்கள் செய்ய சொல்லி,
உங்கள் வியாபாரத்தை, கோவிலை சுற்றி தொடங்குங்கள்..
பணமும் கொட்டும்... ப்ராம்மணான்னும் உங்கள் வேலையை தேட மாட்டான். 

947க்கு முன் இப்படி சுய சார்புள்ள இருந்த இந்தியாவை பார்த்து தானே, கிறிஸ்தவன் ஓடி வந்தான்? இஸ்லாமியன் ஓடி வந்தான்? 
யோசிப்போம் ஹிந்துக்களே ! யோசியுங்கள்..

சக்தியுள்ள "கந்தனை, பெருமாளை, சக்தியை, சிவபெருமானை, கணேசனை" மதிக்க தெரியாதாதால், நாம் பலரிடம் பிச்சை எடுக்கிறோம்.

மேல் மருவத்தூர் போய் பாருங்கள். 
ஒரே கோவில் தானே அங்கு உள்ளது.
ஆனால்,
அந்த ஆதிபராசக்தியை ஒரு உண்மையான பக்தன் பார்த்து கொள்ளும் போது, அந்த ஊரே பிரபலமாகி இருக்கிறது.

அந்த ஆதிபராசக்தி, எத்தனை பேருக்கு அன்னதானம் போடுகிறாள் பாருங்கள்.
அந்த ஆதிபராசக்தி, எத்தனை பேருக்கு அங்கேயே வியாபாரம் செய்ய தொழில் தருகிறாள் பாருங்கள்.




இந்த ரகசியம் எங்கெல்லாம் நடைமுறையில் உள்ளதோ, அங்கெல்லாம், மக்கள் நிம்மதியாக அங்கேயே தொழில் செய்து கொண்டு, நிம்மதியாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் இந்தியாவை கோவில் நகரமாக ஆக்கினால், கோடிக்கணக்கான மக்கள், அந்நிய தேசத்தில் இருந்து வருவார்கள். 

இவர்கள் வருகையை நமக்கு பல கோடி வர்த்தகத்தை தரும். 

"யோசிக்க்க வேண்டும்" நம் அரசாங்கம்.
நம் நாடு வணிக நாடல்ல. விவசாய நாடல்ல..
இது ஒரு ஆன்மீக பூமி.

ஆன்மீக ஈடுபாடு வளர வளர, தெய்வங்கள் நம்மை காக்கும்,

இன்று கோவிலுக்கு நடுவில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட அடிபோடும் மதம் மாறி போன ஹிந்து,
"பௌத்த மதத்தை தூக்கி எறிந்து விட்டு வந்தது போல" திரும்பி ஓடி வருவான்.

பெரும் புரட்சி நடக்கும் இந்த மாற்றத்தை,
அந்தந்த தெய்வத்தை விரும்பும் பக்தர்களை கொண்டு, அந்தந்த தெய்வத்தை நிர்வகிக்க செய்து விட்டால்,
பொருளாதாரம் உலகில் வீழ்ந்தாலும்,
சக்தி வாய்ந்த கோவில் தெய்வங்கள், தன்னை காக்கும் நம்மை, 'ரக்ஷிக்கும், சோறு போடும்'.

அரசாங்கம் கோவிலை விட்டால் மட்டும் இது சாத்தியமில்லை..
அந்தந்த தெய்வத்தை விரும்பும் பக்தர்களை கொண்டு, அந்தந்த தெய்வத்தை நிர்வகிக்க செய்ய கமிட்டி அமைக்க வேண்டும்.

இதை செய்து விட்டால், பெரும் மாற்றங்கள் 5 வருடங்களில் நடந்து விடும்.

"ஆன்மீக பூமி" தன்னை தானே சரி செய்து கொள்ளும்.