தர்மத்தின் 8 குணங்கள் என்ன? தர்மத்தில் இருப்பவனின் குணங்கள் என்னென்ன? வியாசர் சொல்கிறார். அறிவோம் மஹாபாரதம்
வியாசர் யுதிஷ்டிரனுக்கு சொல்ல ஆரம்பித்தார்.
अदत्तस्यानुपादानं
दानम् अध्ययनं तपः |
अहिंसा सत्यम् अक्रोधं
क्षमा धर्मस्य लक्षणम् ||
- வியாசர் மஹாபாரதம்
- பிறர் கொடுக்காத பொருள், கண் எதிரே இருந்தாலும் எடுக்கும் விருப்பமில்லாதவனாகவும்,
- தன் சக்திக்கு ஏற்ப தானம் செய்பவனாகவும்,
- ரிஷிகள், தேவர்கள், பரமாத்மா சம்பந்தமான வேத, இதிகாச புராணங்கள், ஸ்தோத்திரங்களை தினமும் படிப்பவனாகவும்,
- தெய்வத்தை பற்றிய சிந்தனை, தவம் உள்ளவனாகவும்
- எந்த உயிருக்கும் ஹிம்சை செய்ய விரும்பாதவனாகவும்
- சத்தியத்தில் வாழ விருப்பமுள்ளவனாகவும்,
- கோபமில்லாதவனாகவும்,
- பொறுமை உடையவனாகவும்
எவன் இருக்கிறானோ! அவனை தர்மத்தில் இருப்பவன் என்று அறிந்து கொள்ளலாம்.
இந்த குணங்களே, தர்மத்தின் லக்ஷணங்கள் என்று அறிவாய்.
இவ்வாறு வியாசர் யுதிஷ்டிர மகாராஜனுக்கு உபதேசித்தார்