மிச்சமாகிய எச்சில் உணவை என்ன செய்ய வேண்டும்? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்... தெரிந்து கொள்வோமே..
அசக்தொள பூமௌ நிகனேத் |
- ஆபஸ்த்மப சூத்திரம்
மிச்சமாகிய எச்சில் உணவை மண்ணில் புதைக்க வேண்டும்.
அப்சு வா பிரவேசயேத் |
- ஆபஸ்த்மப சூத்திரம்
அல்லது, மிச்சமாகிய எச்சில் உணவை நீரில் விட்டு விடலாம்.
ஆர்யாய வா பர்யவதத்யாத் |
- ஆபஸ்த்மப சூத்திரம்
பண்பு உள்ள (ஆர்யா) வேதம் இன்னும் கற்று கொள்ளாத (8 வயது குறைந்த) குழந்தைக்கு உச்சிஷ்டமாக கொடுக்கலாம். அந்த குழந்தை, அந்த இலையில் தனக்கு இஷ்டப்பட்ட பழமோ, இனிப்போ எது வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடலாம்.
அந்தர்தினே வா சூத்ராய |
- ஆபஸ்த்மப சூத்திரம்
அல்லது, 'தன் வீட்டுக்கு வேலை செய்யும் வேலையாட்களுக்கு' (employee) கொடுக்கலாம்.
நாரதர் பிரம்மாவுக்கு புத்திரனாக தோன்றிய காரணம், அவர் பூர்வ ஜென்மத்தில் சாப்பிட்ட இந்த உச்சிஷ்டம் தான்.
குருவுக்கு முன் அவரை குருவாக ஏற்ற அனைவருமே வேலையாட்கள் தான். குரு சாப்பிட்ட உச்சிஷ்டம் பவித்ரமானது என்று சொல்லப்படுகிறது. அவரது ஞானம் நமக்கு சேரும். அவர் வைகுண்டம் சென்றால், நமக்கும் வைகுண்டம் தானே கிடைக்கும்..
கணவனுக்கு மனைவி வேலை செய்கிறாள். ஆதலால், அவளும் கணவன் இலையில் சாப்பிடுகிறாள். அவன் புண்ணியத்தை தானும் எடுத்து கொள்கிறாள்.
இது எதுவுமே முடியாது என்ற பட்சத்தில், மிச்சம் வைக்காமல் சாப்பிடுவது நல்லது..
மிச்சப்பட்ட உணவை ரிஷி சொன்னது போல செய்து, மாடும் இல்லாத பட்சத்தில், இலையை நீரில் கழுவி விட்டு, இலையை குப்பை தொட்டியில் போட்டு விடலாம்..