Followers

Search Here...

Showing posts with label சூத்திரன். Show all posts
Showing posts with label சூத்திரன். Show all posts

Thursday, 25 May 2023

பிராம்மணனின் கடமைகள் என்ன? சூத்திரனின் கடமை என்ன? மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது?.. அறிவோம்..

பிராம்மணனின் கடமைகள் என்ன? சூத்திரனின் கடமை என்ன? மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது?..  அறிவோம்..

अध्यापनम् अध्ययनं यजनं याजनं तथा ।
दानं प्रतिग्रहं चैव ब्राह्मणानामकल्पयत् ॥ 
- Manu Smriti (Rule Book)
  1. வேதத்தை கற்றுக்கொடுத்தல்,
  2. வேதத்தை ஓதுதல்
  3. ஸமிதாதானம் ஆரம்பித்து யாகங்கள் செய்தல்
  4. யாகம் செய்வித்தல்
  5. தானம் கொடுத்தல்
  6. தானம் வாங்குதல்
இந்த 6ம் பிராம்மண வர்ணத்தில் இருப்பவனின் கடமையாகும்.
(இன்று பிராம்மண வர்ணத்தில் இருந்து க்ஷத்ரியர்களை (police) தனக்கு கீழ் வைத்து மக்களை வழிநடத்துபவர்கள் - முதலமைச்சர், மந்திரிகள். இவர்கள் வாழ வேண்டிய வாழ்க்கை முறை இது)

प्रजानां रक्षणं दानमिज्या अध्ययनमेव च ।
विषयेष्वप्रसक्तिश्च क्षत्रियस्य समासतः ॥ 
- Manu Smriti (Rule Book)

  1. மக்களை காப்பாற்றுதல்,  
  2. தானம் அளித்தல்
  3. யாகம் செய்தல்,
  4. வேதத்தை ஓதுதல்
  5. விஷய சுகங்களில் மூழ்காமல் இருத்தல்.
இந்த 5ம் க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவனின் கடமையாக இருக்கிறது.
(இன்று க்ஷத்ரிய வர்ணத்தில் இருந்து ப்ராம்மண வர்ணத்தில்  (MLA/CM) சொல்படி மக்களை வழிநடத்துபவர்கள் - POLICE. இவர்கள் வாழ வேண்டிய வாழ்க்கை முறை இது)
3
पशूनां रक्षणं दानमिज्याऽध्ययनमेव च ।
वणिक्पथं कुसीदं च वैश्यस्य कृषिमेव च ॥ 
- Manu Smriti (Rule Book)

  1. பசுக்களை காப்பாற்றுதல்
  2. யாகங்கள் செய்தல்
  3. வேதத்தை ஓதுதல்
  4. வாணிபம் செய்தல்
  5. வட்டிக்கு பணம் கொடுத்து வாழ்க்கையை நடத்துதல்
  6. விவசாயம் செய்தல்
இந்த 6ம் வைஸ்ய  வர்ணத்தில் இருப்பவனின் கடமையாக இருக்கிறது.
(இன்று வைசிய வர்ணத்தில் இருந்து வாழ்க்கை வழிநடத்துபவர்கள் - EMPLOYER/FARMER. இவர்கள் வாழ வேண்டிய வாழ்க்கை முறை இது)

"வேதம் ஓதுதல்" இந்த மூன்று வர்ணத்தில் இருப்பவருக்கும் கொடுக்கப்பட்ட பொதுவான கடமைகளில் ஒன்று.

வேதத்தில், பிரம்மத்தை பற்றிய ஞான விஷயங்கள் மட்டுமின்றி, தர்ம (சட்டம்) சொல்லப்பட்டு இருக்கிறது. 

ஆட்சி முறைகள், தனுர் வேதம், விவசாயம் என்று அனைத்தும் இருக்கிறது. 

அவரவர்களுக்கு தேவையான படிப்பை கற்று, அதை தினமும் மேலும் மேலும் படித்து மெருகேற்றவே "வேதம் ஓதுதல்" தினசரி கடமையாக சொல்லப்பட்டு இருக்கிறது.

சிற்ப கலையின் அற்புதத்தை இன்றும் கோவில்களில் நாம் பார்க்கும் போது, வைசிய வர்ணத்தில் இருந்த சிற்பிகள் எத்தனை வேத அறிவோடு இருந்தார்கள் என்று தெரிகிறது.
4.
एकमेव तु शूद्रस्य प्रभुः कर्म समादिशत् ।
एतेषामेव वर्णानां शुश्रूषामनसूयया ॥ 
- Manu Smriti (Rule Book)

மற்ற வர்ணத்தில் இருப்பவர்களுக்கு சொல்லப்பட்ட எந்த ஒரு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாமல், சுகமாக சூத்திரர்கள் (EMPLOYEE) வாழ அனுமதிக்கப்படுகின்றனர். 

மற்ற வர்ணத்தில் இருப்பவர்கள் (Police, MP/MLA/Employer) கொடுக்கும் வேலையை, வேலை கொடுப்பவனை கண்டு பொறாமை இல்லாமல் இருப்பது ஒன்றே, இவர்களின் ஒரே கடமையாக இருக்கிறது.

Tuesday, 27 December 2022

மனு ஸ்மிருதி அறிவோம் - பாகம் 12

மனு ஸ்மிருதி அறிவோம் - பாகம் 12

चातुर्वर्ण्यस्य कृत्स्नो अयमुक्तो धर्मस्त्वया अनघः ।

कर्मणां फलनिर्वृत्तिं शंस नस्तत्त्वतः पराम् ॥

மனு ஸ்மிருதி

நான்கு வர்ணத்தில் இருப்பவர்களின் விதிமுறையை சொன்னீர்கள். இனி எங்களுக்கு செயல்களால் (கர்மா/action) விளையும் பலனை (கர்மவினை/reaction) பற்றி விவரிக்க வேண்டும்.

स तानुवाच धर्मात्मा महर्षीन् मानवो भृगुः ।

अस्य सर्वस्य शृणुत कर्मयोगस्य निर्णयम् ॥

மனு ஸ்மிருதி

மனுவின் புத்ரனான ப்ருகு ரிஷிகளை பார்த்து "அனைத்து கர்மாவுக்கும் ஏற்படும் பலனை விவரிக்கிறேன்" என்றார்.


शुभ: अशुभ फलं कर्म मनो-वाग्-देह सम्भवम् ।

कर्मजा गतयो नॄणाम् उत्तम अधम मध्यमः ॥

நாம் மனதினாலும், சொல்லினாலும், உடலாலும் செய்யும் செயலை பொறுத்து, நல்லதும் கெட்டதும் நடக்கிறது. இந்த செயல்களை பொறுத்தே, ஒருவனுக்கு உத்தம வாழ்க்கையும், கீழ்த்தரமான வாழ்க்கையும், நடுத்தரமான வாழ்க்கையும் அமைகிறது.


तस्यैह त्रिविधस्यापि त्र्यधिष्ठानस्य देहिनः ।

दश-लक्षण युक्तस्य मनो विद्यात् प्रवर्तकम् ॥

மனம், வாக்கு, தேகம் இந்த மூன்றினாலும் 10 வகையான வினைகள் உண்டாகின்றன. மனமே எந்த செயலுக்கும் மூல காரணமாக இருக்கிறது.


परद्रव्येष्वभिध्यानं मनसा अनिष्ट चिन्तनम् ।

वितथा अभिनिवेशश्च त्रिविधं कर्म मानसम् ॥

பிறர் பொருளை பார்த்து ஆசைப்படும் போது, மனம் 3 விதமான பாவ காரியங்களை செய்ய தூண்டும்.

पारुष्यम् अनृतं चैव 

पैशुन्यं चापि सर्वशः ।

असम् बद्ध-प्रलापश्च 

वाङ्मयं स्याच् चतुर्विधम् ॥

- மனு ஸ்மிருதி

கடுமையாக பேசுதல், பொய் பேசுதல், பழி சுமத்துதல், ஊர்வம்பு பேசுதல். இந்த 4ம் வாக்கினால் செய்யப்படும் பாவ செயல்கள்.


अदत्तानामुपा आदानं हिंसा चैव अविधानतः ।

परदारोपसेवा च शारीरं त्रिविधं स्मृतम् ॥

பிறர் சொத்தை பறித்து அனுபவித்தல், ஹிம்சை செய்தல், பிறர் மனைவியை அடைதல், இந்த 3ம் உடலால் செய்யப்படும் பாவ செயல்கள்.


मानसं मनसेवा अयमुपभुङ्क्ते शुभाशुभम् ।

वाचा वाचा कृतं कर्म कायेनेव च कायिकम् ॥

மனத்தால் செய்த நல்ல செயல்களின் பலனையும், கெட்ட செயல்களின் பலனையும், மனத்தினால் அனுபவித்தாக வேண்டும்.

பேசியதால் செய்த நல்ல செயல்களின் பலனையும், கெட்ட செயல்களின் பலனையும், வாக்கிலேயே அனுபவித்தாக வேண்டும்.

शरीरजैः कर्मदोषैः

याति स्थावरतां नरः ।

वाचिकैः पक्षिमृगतां 

मानसैः अन्त्य जातिताम् ॥

- மனு ஸ்மிருதி

மனிதன் உடலால் செய்யும் பாவ செயல்களுக்கு, மரம், செடியாக அடுத்த பிறவி எடுப்பான்.

பேசியதால் செய்த பாவ செயல்களுக்கு, மனிதன் அடுத்த பிறவியில் மிருகமாகவும், பறவையாகவும் பிறவி எடுப்பான்.

மனதால் செய்த பாவ செயல்களுக்கு, மனிதன் அடுத்த பிறவியில் மிகவும் இகழ தக்க ஜாதிகளில் பிறப்பான்.

वाग्दण्डोऽथ मनोदण्डः कायदण्डस्तथैव च ।

यस्यैते निहिता बुद्धौ त्रिदण्डीति स उच्यते ॥

வாக்கையும், மனதையும், தேகத்தையும் கட்டுப்படுத்தி வைத்து இருப்பவனே த்ரிதண்டி (சந்நியாசி) என்று பெருமையை அடைகிறான்.


त्रिदण्डमेतन्निक्षिप्य सर्वभूतेषु मानवः ।

कामक्रोधौ तु संयम्य ततः सिद्धिं नियच्छति ॥

இப்படி த்ரிதண்டியாக சொல், மனம், தேகம் மூன்றையும் கட்டுப்படுத்தி, எந்த உயிரிடத்திலும் வெறுப்பு காட்டாமல், ஆசையும், கோபமும் தன்னை நெருங்க விடாமல் பார்த்து கொள்பவன், "ஸித்தி" அடைகிறான்.


य: अस्य आत्मनः कारयिता तं क्षेत्रज्ञं प्रचक्षते ।

यः करोति तु कर्माणि स भूतात्म: उच्यते बुधैः ॥

உள்ளிருக்கும் ஆத்மா, உடலை (க்ஷேத்ரம்) காரியங்கள் செய்ய வைப்பதால், அதற்கு "க்ஷேத்ரஞன்" என்று பெயர். இந்த உடல் 5 பூதங்களால் ஆனது. காரியங்கள் செய்வதால், உடலுக்கு "பூதாத்மா" என்றும் பெயர்.


जीवसञ्ज्ञो अन्तरात्मा अन्यः सहजः सर्वदेहिनाम् ।

येन वेदयते सर्वं सुखं दुःखं च जन्मसु ॥

இந்த உடலுக்குள் வசித்து கொண்டிருக்கும் ஆத்மா அலாதியானது. பிறவியில் சுக துக்க அனுபவம் இந்த ஆத்மா இருப்பதாலேயே ஏற்படுகிறது.


तावुभौ भूतसम्पृक्तौ महान् क्षेत्रज्ञ एव च ।

उच्चावचेषु भूतेषु स्थितं तं व्याप्य तिष्ठतः ॥

பூதாத்மாவில் இருக்கும் க்ஷேத்ரஞனும் (soul),  பூதாத்மாவும் (nature/body), எங்கும் வியாபித்து, அனைத்துக்கும் அப்பாற்ப்பட்டு இருக்கும் பரமாத்மாவிடம் அடங்கி இருக்கிறது.



असङ्ख्या मूर्तयः तस्य 

निष्पतन्ति शरीरतः ।

उच्चावचानि भूतानि 

सततं चेष्टयन्ति याः ॥

- மனு ஸ்மிருதி

பரமாத்மாவிடமிருந்து கணக்கற்ற ஆத்மாக்கள் (க்ஷேத்ரஞர்கள்), அக்னியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி போல நூற்றுக்கணக்காக வெளிப்பட்டு, பல சரீரங்களில் புகுந்து கொண்டு, இயங்குகிறது.


पञ्चभ्य एव मात्राभ्यः प्रेत्य दुष्कृतिनां नृणाम् ।

शरीरं यातनार्थीय मन्यदुत्पद्यते ध्रुवम् ॥

- மனு ஸ்மிருதி

பஞ்ச பூதங்களால் ஆன மனிதன் பாவ காரியங்கள் செய்தால், மனித உடலை விட்ட (மரணித்த) பிறகு, நரகங்களில் கொடுக்கப்படும் தண்டனையை தாங்கும் படியான  சரீரமான "யாதனா" என்ற சரீரத்தை பெறுகிறான்.


तेनानुभूय ता यामीः शरीरेणैह यातनाः ।

तास्वेव भूतमात्रासु प्रलीयन्ते विभागशः ॥

- மனு ஸ்மிருதி

தான் செய்த பாவ காரியங்களுக்கு தண்டனையை அனுபவித்த ஜீவன், தண்டிக்கப்பட்ட பிறகு, யாதனா சரீரத்தை பஞ்ச பூதங்களில் இழந்து விடுவான்.


सो अनुभूय असुखोदर्कान् दोषान् विषयसङ्गजान् ।

व्यपेत कल्मषो अभ्येति तावेवोभौ महौ जसौ ॥

- மனு ஸ்மிருதி

விஷய சுகங்களில் ஈடுபட்டதற்காக தண்டனை பெற்று, பாபம் நீங்கிய பிறகு, மீண்டும் மஹத் (பஞ்ச பூதங்கள்) மற்றும் பரமாத்மாவுடன் சேர்ந்து பயணிக்கிறான்.


तौ धर्मं पश्यतस्तस्य पापं चातन्द्रितौ सह ।

याभ्यां प्राप्नोति सम्पृक्तः प्रेत्येह च सुखासुखम् ॥

- மனு ஸ்மிருதி

எங்கும் இருக்கும் மஹத்தும், பரமாத்மாவும், இந்த ஜீவன் இந்த உடலை கொண்டு செய்யும் தர்மம், அதர்மம், அதனால் இந்த ஜீவன் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை சாட்சியாக பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.


यद्याचरति धर्मं स प्रायशोऽधर्ममल्पशः ।

तैरेव चावृतो भूतैः स्वर्गे सुखमुपाश्नुते ॥

- மனு ஸ்மிருதி

பஞ்ச பூதங்களால் ஆன மனித உடலை கொண்டு ஜீவன் தர்மத்தை அதிகமாகவும், அதர்மத்தை கொஞ்சமாகவும் செய்து இருந்தால், ஸ்வர்க லோகத்தை அடைந்து சுகத்தை அனுபவிப்பான்.

यदि तु प्रायशोऽधर्मं सेवते धर्ममल्पशः ।

तैर्भूतैः स परित्यक्तो यामीः प्राप्नोति यातनाः ॥

- மனு ஸ்மிருதி

பஞ்ச பூதங்களால் ஆன மனித உடலை கொண்டு ஜீவன் அதர்மத்தை அதிகமாகவும், தர்மத்தை கொஞ்சமாகவும் செய்து இருந்தால், யாதனா சரீரத்தை பெற்று நரக லோகத்தை அடைந்து தண்டனைகளை அனுபவிப்பான்.


यामीस्ता यातनाः प्राप्य स जीवो वीतकल्मषः ।

तान्येव पञ्च भूतानि पुनरप्येति भागशः ॥

- மனு ஸ்மிருதி

இப்படி ஜீவன் நரகத்தில் தண்டனை அனுபவித்து, பாபங்கள் கழிந்த பிறகு, மீண்டும் பஞ்ச பூதங்களோடு சேருகிறான்.


एता दृष्ट्वाऽस्य जीवस्य गतीः स्वेनैव चेतसा ।

धर्मतोऽधर्मतश्चैव धर्मे दध्यात् सदा मनः ॥

- மனு ஸ்மிருதி

'தர்ம காரியங்கள் மூலம் சுகங்களையும், அதர்ம காரியங்களால் துக்கத்தையும் ஜீவன் பெறுகிறான்' என்ற கதியை உணர்ந்து, மனதை எப்பொழுதும் தர்ம காரியங்கள் செய்வதிலேயே ஈடுபடுத்த வேண்டும்.


सत्त्वं रजस्तमश्चैव त्रीन् विद्यादात्मनो गुणान् ।

यैर्व्याप्यैमान् स्थितो भावान् महान् सर्वानशेषतः ॥

- மனு ஸ்மிருதி

இனி, ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற 3 குணங்களின் தன்மைகளை சொல்கிறேன். இந்த மூன்றும் அனைத்து உயிரிடத்திலும் வியாபித்து இருக்கிறது.


यो यदेषां गुणो देहे साकल्येनातिरिच्यते ।

स तदा तद्गुणप्रायं तं करोति शरीरिणम् ॥

- மனு ஸ்மிருதி

ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற 3 குணங்களும் அனைவரிடத்திலும் இருந்தாலும், யாருக்கு எந்த குணம் அதிகம் நிரம்பி உள்ளதோ, அவனை அந்த குணம் கொண்டவனாக பார்க்க வேண்டும்.


सत्त्वं ज्ञानं तमो अज्ञानं 

रागद्वेषौ रजः स्मृतम् ।

एतद् व्याप्तिमदेतेषां 

सर्वभूताश्रितं वपुः ॥

- மனு ஸ்மிருதி

ஸத்வ குணம் அதிகமாக இருக்கும் போது, ஞானம் (மெய் அறிவு) உண்டாகும். தமஸ் என்ற குணம் அதிகமாக இருக்கும் போது, அஞ்ஞானம் உண்டாகும். ரஜோ குணம் அதிகமாகும் போது, விருப்பு வெறுப்பு உண்டாகும். இந்த மூன்றுமே அனைத்து உயிரிடத்திலும் பரவி இருக்கிறது.

तत्र यत् प्रीतिसंयुक्तं किं चिदात्मनि लक्षयेत् ।

प्रशान्तमिव शुद्धाभं सत्त्वं तदुपधारयेत् ॥

- மனு ஸ்மிருதி

பரமாத்மாவை நினைத்து  கொண்டும்,  ப்ரஸன்னமாகவும், தூய்மையாகவும் இருக்கும் ஜீவன், ஸத்வ குணத்தில் இருக்கிறான் என்று அறியலாம்.


यत् तु दुःख समायुक्तम् 

अप्रीतिकरमात्मनः ।

तद् रजो प्रतीपं विद्यात् 

सततं हारि देहिनाम् ॥

- மனு ஸ்மிருதி

எப்பொழுதும் துக்கப்பட்டு கொண்டும், ப்ரியமில்லாமலும், விஷய சுகங்களிலேயே ஈடுபடும்  ஜீவன், ரஜோ குணத்தில் இருக்கிறான் என்று அறியலாம்.


यत् तु स्यान् मोहसं युक्तम् 

अव्यक्तं विषय आत्मकम् ।

अप्रतर्क्यम् अविज्ञेयं 

तमस्तदुपधारयेत् ॥

- மனு ஸ்மிருதி

மோகம் கொண்டும், நல்லது கெட்டது அறியும் விவேகமில்லாமலும், புலன்களை பற்றிய அறியாமையோடும் இருக்கும்  ஜீவன், தமோ குணத்தில் இருக்கிறான் என்று அறியலாம்.


त्रयाणामपि चैतेषां गुणानां यः फलोदयः ।

अग्र्यो मध्यो जघन्यश्च तं प्रवक्ष्याम्यशेषतः ॥

- மனு ஸ்மிருதி

இந்த மூன்று குணங்களும் (ஸத்வ, ரஜோ, தமஸ்) உயர்ந்த பலனையும், மத்யமான பலனையும், கீழான பலனையும் தருகிறது. அதை பற்றி சொல்கிறேன்.


वेदाभ्यासस्तपो ज्ञानं शौचमिन्द्रियनिग्रहः ।

धर्मक्रियाऽत्मचिन्ता च सात्त्विकं गुणलक्षणम् ॥

- மனு ஸ்மிருதி

வேத மந்திரங்கள் ஜபம் செய்வதில் ஈடுபாடும், புலன்களை அடக்கி தவம் செய்வதில் (விரதங்களில்) ஈடுபாடும், ஆத்மா நான் என்ற அறிவோடும், உள்ளும் புறமும் தூய்மையோடும், புலனடக்கத்தோடும், தர்மமான செயல்கள் செய்து கொண்டும், ஆத்மாவை பற்றி சிந்தித்து கொண்டும் இருக்கும் ஜீவன் ஸத்வ குணத்தில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம்.

आरम्भरुचिता अधैर्यम् 

असत्कार्य परिग्रहः ।

विषयोपसेवा चाजस्रं 

राजसं गुण-लक्षणम् ॥

- மனு ஸ்மிருதி

பலனை எதிர்பார்த்தே காரியங்கள் செய்து கொண்டும், நினைத்தது நடக்காத பட்சத்தில் அதைரியம் அடைந்தும், செய்ய கூடாத செயல்கள் செய்தும், விஷய சுகங்களில் நாட்டம் கொண்டும், இருக்கும் ஜீவன், ரஜோ குணத்தில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம்.

लोभः स्वप्नोऽधृतिः क्रौर्यं 

नास्तिक्यं भिन्नवृत्तिता ।

याचिष्णुता प्रमादश्च 

तामसं गुणलक्षणम् ॥

- மனு ஸ்மிருதி

பேராசை கொண்டும், அதிகம் தூங்கி கொண்டும், கோழையாகவும், குறை சொல்லி கொண்டும், தெய்வத்தை பழித்து கொண்டும், ஒழுக்கமான வாழ்க்கையில் நாட்டமில்லாமலும், பிறர் பொருளை வாங்கி கொள்வதிலும், போதையோடு இருப்பதிலும் நாட்டம் கொண்டும் இருக்கும் ஜீவன், தமோ குணத்தில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம்.


यत् कर्म कृत्वा कुर्वंश्च करिष्यंश्चैव लज्जति ।

तज् ज्ञेयं विदुषा सर्वं तामसं गुणलक्षणम्

- மனு ஸ்மிருதி

ஒரு காரியத்தை செய்த பிறகும், செய்யும் போதும், செய்ய போகும் போதும், மனம் வெட்கப்படுமானால், அந்த காரியங்கள் தமோ குணத்தின் லக்ஷணம் என்று அறிய வேண்டும்.

येनास्मिन् कर्मणा लोके ख्यातिमिच्छति पुष्कलाम् ।

न च शोचत्यसम्पत्तौ तद् विज्ञेयं तु राजसम् ॥

- மனு ஸ்மிருதி

பரலோகத்தில் சௌக்கியம் கொடுக்காத காரியமாக இருந்தாலும், இந்த உலகில் பெரும் புகழை பெறுவதற்காக செய்யப்படும் காரியங்கள், ரஜோ குணத்தின் லக்ஷணம் என்று அறிய வேண்டும்.


यत् सर्वेणेच्छति ज्ञातुं यन्न लज्जति चाचरन् ।

येन तुष्यति चात्माऽस्य तत् सत्त्वगुणलक्षणम् ॥

- மனு ஸ்மிருதி

ஒரு காரியத்தை செய்த பிறகும், செய்யும் போதும், செய்ய போகும் போதும், மனம் சுகப்படுமானால், அந்த காரியங்கள் ஸத்வ குணத்தின் லக்ஷணம் என்று அறிய வேண்டும்.


तमसो लक्षणं कामो रजसस्त्वर्थ उच्यते ।

सत्त्वस्य लक्षणं धर्मः श्रैष्ठ्यमेषां यथोत्तरम् ॥

- மனு ஸ்மிருதி

தமோ குணத்தில், காமமே முக்கியமான லக்ஷணமாக இருக்கும். ரஜோ குணத்தில், பொருளே முக்கியமான லக்ஷணமாக இருக்கும். ஸத்வ குணத்தில், அறமே (தர்மமே) முக்கியமான லக்ஷணமாக இருக்கும். தமோ குணத்தை விட ரஜோ குணம் சிறந்தது. ரஜோ குணத்தை விட ஸத்வ குணம் சிறந்தது.


येन यस्तु गुणेनैषां संसरान् प्रतिपद्यते ।

तान् समासेन वक्ष्यामि सर्वस्यास्य यथाक्रमम् ॥

- மனு ஸ்மிருதி

இந்த குணங்களால் ஜீவன் எத்தகைய நிலைகளை அடைகிறான் என்பதை பற்றி முழுமையாக வரிசைப்படி கூறுகிறேன். கேளுங்கள்.


देवत्वं सात्त्विका यान्ति मनुष्यत्वं च राजसाः ।

तिर्यक्त्वं तामसा नित्यमित्येषा त्रिविधा गतिः ॥

- மனு ஸ்மிருதி

ஸத்வ குணத்திலேயே (அறத்தில் விருப்பம்) இருப்பவன், தேவனாகிறான். ரஜோ குணத்திலேயே (பொருளில் விருப்பம்) இருப்பவன் மனித பிறவியே மீண்டும் எடுக்கிறான். தமோ குணத்திலேயே (காமத்தில் விருப்பம்) இருப்பவன் பறவை மிருகம் போன்ற கீழ் பிறவிகளை எடுக்கிறான்.


त्रिविधा त्रिविधैषा तु विज्ञेया गौणिकी गतिः ।

अधमा मध्यमाग्र्या च कर्मविद्याविशेषतः

- மனு ஸ்மிருதி

3 குணங்களால் (ஸத்வ, ரஜோ, தமோ)  கிடைக்கும் இந்த 3 பிறவிகளும் (தேவ, மனித, மிருக), அந்தந்த ஜீவன் செய்த காரியத்தை பொறுத்து, மேல் நிலை, நடுநிலை, கீழ் நிலை என்ற விதிப்படி பிறவிகளை பெறுகிறார்கள். 


स्थावराः कृमिकीटाश्च 

मत्स्याः सर्पाः सकच्छपाः ।

पशवश्च मृगाश्चैव 

जघन्या तामसी गतिः ॥

- மனு ஸ்மிருதி

தமோ குணத்தின் அளவை பொறுத்து, கீழ் நிலையான அசையாத செடிகளாகவும், மரங்களாகவும், புழு, பூச்சி, மீன், பாம்பு, ஆமை, வளர்ப்பு மிருகங்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்


हस्तिनश्च तुरङ्गाश्च शूद्रा म्लेच्छाश्च गर्हिताः ।

सिंहा व्याघ्रा वराहाश्च मध्यमा तामसी गतिः ॥

- மனு ஸ்மிருதி

தமோ குணத்தின் அளவை பொறுத்து, நடு நிலையான யானை, குதிரை, சிங்கம், புலி  போன்ற பிறவிகள் ஏற்படும். ஒருவன் சூத்திரனாக (employee), மிலேச்சனாக (வேத சாஸ்திரம் அறியாதவனாக) பிறப்பதும் முன் ஜென்மத்தில் அந்த ஜீவனுக்கு இருந்த தமோ குணமே காரணம்.  சூத்திரனாக (employee), மிலேச்சனாக பிறப்பதும் நடு நிலையான பிறவிகளே.

चारणाश्च सुपर्णाश्च पुरुषाश्चैव दाम्भिकाः ।

रक्षांसि च पिशाचाश्च तामसीषूत्तमा गतिः

- மனு ஸ்மிருதி

தமோ குணத்தின் அளவை பொறுத்து, மேல் நிலையான சாரணர்கள், கருடன் போன்ற பறவைகள், கர்வம் பிடித்த மனிதர்கள், ராக்ஷஸர்கள்  போன்ற பிறவிகள் ஏற்படும்


झल्ला मल्ला नटाश्चैव पुरुषाः शस्त्रवृत्तयः ।

द्यूतपानप्रसक्ताश्च जघन्या राजसी गतिः ॥ 

- மனு ஸ்மிருதி

ரஜோ குணத்தின் அளவை பொறுத்து, கீழ் நிலையான இரும்பை வைத்து கொண்டு சண்டை செய்பவர்கள், மல் யுத்தம் செய்பவர்கள்,   நடிகர்கள், ஆயுதம் செய்பவர்கள், சூதாடிகள், குடிகாரர்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்


राजानः क्षत्रियाश्चैव राज्ञां चैव पुरोहिताः ।

वादयुद्धप्रधानाश्च मध्यमा राजसी गतिः ॥

- மனு ஸ்மிருதி

ரஜோ குணத்தின் அளவை பொறுத்து, நடு நிலையான அரசர்கள், க்ஷத்ரியனாக பிறந்தவர்கள், அரச புரோகிதர்கள், வாதம்-விவாதம் நடத்துபவர்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்


गन्धर्वा गुह्यका यक्षा विबुधानुचराश्च ये ।

तथैवाप्सरसः सर्वा राजसीषूत्तमा गतिः ॥

- மனு ஸ்மிருதி

ரஜோ குணத்தின் அளவை பொறுத்து, மேல் நிலையான கந்தர்வர்கள், குஹ்யர்கள், யக்ஷர்கள், விபுதர்கள், அப்சரஸ்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்


तापसा यतयो विप्रा ये च वैमानिका गणाः ।

नक्षत्राणि च दैत्याश्च प्रथमा सात्त्विकी गतिः ॥

- மனு ஸ்மிருதி

ஸத்வ குணத்தின் அளவை பொறுத்து, கீழ் நிலையான தபஸ்விகள், சந்யாசிகள், வேத விற்பன்னர்கள், விமானத்தில் பறக்கும் கல்விமான்கள், தைத்யர்கள், நக்ஷத்திரங்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்


यज्वान ऋषयो देवा वेदा ज्योतींषि वत्सराः ।

पितरश्चैव साध्याश्च द्वितीया सात्त्विकी गतिः ॥

- மனு ஸ்மிருதி

ஸத்வ குணத்தின் அளவை பொறுத்து, நடு நிலையான யக்ஞம் செய்பவர்கள், ரிஷிகள், தேவர்கள், வேதரூபமான தெய்வங்கள், கிரக தெய்வங்கள், பித்ரு தெய்வங்கள், சாத்யர்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்


ब्रह्मा विश्वसृजो धर्मो महानव्यक्तमेव च ।

उत्तमां सात्त्विकीमेतां गतिमाहुर्मनीषिणः ॥

- மனு ஸ்மிருதி

ஸத்வ குணத்தின் அளவை பொறுத்து, மேல் நிலையான ப்ரம்ம தேவன், பிரஜாபதி, தர்ம தேவன், மஹத் (ப்ரக்ருதி), அவ்யக்தம் போன்ற பிறவிகள் ஏற்படும்

एष सर्वः समुद्दिष्टस्त्रिप्रकारस्य कर्मणः ।

त्रिविधस्त्रिविधः कृत्स्नः संसारः सार्वभौतिकः ॥

- மனு ஸ்மிருதி

இவ்வாறு மூன்றினால் (வாக்கு, செயல், மனம்) செய்யப்படும் காரியங்களால் மூன்று விதமான குணங்களால், பல விதமான பிறவிகள் எவ்வாறு ஏற்படுகிறது என்று கூறினேன். இதில் சில பிறவிகளை கூறினேன். மற்ற பிறவிகளை இதை அனுசரித்து ஊகித்து கொள்ள வேண்டும்.


इन्द्रियाणां प्रसङ्गेन धर्मस्यासेवनेन च ।

पापान् संयान्ति संसारानविद्वांसो नराधमाः ॥

- மனு ஸ்மிருதி

எந்த மனிதன் புலன்களை அடக்காமலும், அந்த புலன்கள் வழியே சென்று விஷய சுகங்களிலேயே வாழ்ந்து, தர்ம வழியிலும் நடக்காமலும், செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளாமலும் வாழ்கிறானோ, அவன் அடுத்த பிறவியில் கீழ்த்தரமான நிலையை பெறுவான்.


यां यां योनिं तु जीवोऽयं येन येनैह कर्मणा ।

क्रमशो याति लोकेऽस्मिंस्तत् तत् सर्वं निबोधत ॥

- மனு ஸ்மிருதி

ஜீவன் எந்த எந்த கர்ம வினைகளை செய்து எந்தெந்த உலகத்தை அடைகிறான். எந்தெந்த பிறவியை அடைகிறான் என்பதை முழுவதும் கூறுகிறேன். கேளுங்கள்.


बहून् वर्षगणान् घोरान्नरकान् प्राप्य तत्क्षयात् ।

संसारान् प्रतिपद्यन्ते महापातकिनस्त्विमान् ॥

- மனு ஸ்மிருதி

மிக கொடிய பாபம் செய்தவர்கள், பல்லாயிரம் வருடங்கள் பயங்கரமான நரகங்களில் வேதனையை அனுபவிப்பார்கள். அதற்கு பிறகு மிஞ்சிய பாபங்களை எந்த பிறவிகள் எடுத்து அனுபவிப்பார்கள் என்று கூறுகிறேன்.


श्वसूकरखरोष्ट्राणां गोऽजाविमृगपक्षिणाम् ।

चण्डालपुक्कसानां च ब्रह्महा योनिमृच्छति ॥

- மனு ஸ்மிருதி

ப்ராம்மணனை கொன்றவன் கொடிய நரகத்தை அனுபவித்த பிறகு, நாய், பன்றி, கழுதை ஒட்டகம், ஆடு நாடாகவும், பறவையாகவும்  பிறப்பார்கள். மனிதனாக நாயை தின்று வாழும் சண்டாளனாகவும், புக்கஸர்களாகவும் தாழ்ந்த பிறவிகளை எடுப்பார்கள்.

कृमिकीट पतङ्गानां 

विड्भुजां चैव पक्षिणाम् ।

हिंस्राणां चैव सत्त्वानां 

सुरापो ब्राह्मणो व्रजेत् ॥

- மனு ஸ்மிருதி

மதுபானம் (சுராபானம்) செய்த பிராம்மணன், கொடிய நரகத்தை அனுபவித்த பிறகு, புழு பூச்சியாகவும், அணில், மலம் உண்ணும் ஜந்துவாகவும், புலி முதலிய கொடிய மிருகமாகவும் பிறவிகளை எடுப்பார்கள்.


लूताऽहिसरटानां च तिरश्चां चाम्बुचारिणाम् ।

हिंस्राणां च पिशाचानां स्तेनो विप्रः सहस्रशः ॥

- மனு ஸ்மிருதி

தங்கத்தை திருடிய விப்ரன் , சிலந்தியாகவும், பாம்பு, ஓணான், நீரில் வாழும் உயிரினமாகவும், கொடிய மிருகமாகவும், பிசாசாகவும் பிறவிகளை எடுப்பார்கள்.


तृणगुल्मलतानां च क्रव्यादां दंष्ट्रिणामपि ।

क्रूरकर्मकृतां चैव शतशो गुरुतल्पगः ॥

- மனு ஸ்மிருதி

தன் குருவின் பத்னியை அடைய நினைத்தவன், புல்லாகவும், புதராகவும், கொடியாகவும், மாமிசம் உண்ணும் மிருகங்களாகவும் பிறவிகளை பலமுறை அடைவான்.


हिंस्रा भवन्ति क्रव्यादाः कृमयोऽमेध्यभक्षिणः ।

परस्परादिनः स्तेनाः प्रेत्यान्त्यस्त्रीनिषेविणः ॥

- மனு ஸ்மிருதி

விலங்குகளை கொல்வதையே தங்கள் வேலையாக கொண்டிருப்பவர்கள், மிருகங்களை உண்ணும் விலங்காகவும், மலத்தை உண்ணும் புழுக்களாகவும், திருடர்களாகவும், தம் இனத்தையே உண்ணும் பிராணிகளாகவும் பிறப்பார்கள். சண்டாள பெண்ணுடன் உறவு கொண்டவர்கள் ப்ரேத சரீரத்தோடு அலைவார்கள்.


संयोगं पतितैर्गत्वा परस्यैव च योषितम् ।

अपहृत्य च विप्रस्वं भवति ब्रह्मराक्षसः ॥

- மனு ஸ்மிருதி

நாடு கடத்தப்பட்டவனோடு உறவு கொண்டவனும், பிறர் மனைவியை அடைந்தவனும், ப்ராம்மணனின் பொருளை திருடியவனும், அடுத்த பிறவியில் ப்ரம்ம-ராக்ஷஸனாகவும் அலைவார்கள்.


मणिमुक्ताप्रवालानि हृत्वा लोभेन मानवः ।

विविधाणि च रत्नानि जायते हेमकर्तृषु ॥

- மனு ஸ்மிருதி

ரத்தினங்கள், முத்துக்கள், பவழங்கள் பல வகையான உயர்ந்த ரத்தின கற்கள் முதலியவனற்றை திருடியவன், அடுத்த பிறவியில் பொற்கொல்லனாக பிறப்பான்.


धान्यं हृत्वा भवत्याखुः कांस्यं हंसो जलं प्लवः ।

मधु दंशः पयः काको रसं श्वा नकुलो घृतम् ॥

- மனு ஸ்மிருதி

தானியங்களை திருடியவன் எலியாக பிறப்பான். வெண்கலத்தை திருடியவன் அன்னமாக பிறப்பான். தண்ணீர் திருடியவன் தவளையாக பிறப்பான். பால் திருடியவன் காக்கையாக பிறப்பான். தேன் திருடியவன் ஈயாக பிறப்பான். ரசமான (சுவையான) பொருட்களை திருடியவன் நாயாக பிறப்பான்.


मांसं गृध्रो वपां मद्गुस्तैलं तैलपकः खगः ।

चीरीवाकस्तु लवणं बलाका शकुनिर्दधि ॥

- மனு ஸ்மிருதி

மாமிசத்தை திருடியவன் கழுகாக பிறப்பான். மாமிச கொழுப்பை (வபை) திருடியவன் நீர்காக்கையாக பிறப்பான். எண்ணெய் திருடியவன் வௌவாலாக பிறப்பான். உப்பை திருடியவன் சுவர்க்கோழியாக பிறப்பான். தயிரை திருடியவன் ராஜாளியாக பிறப்பான்.


कौशेयं तित्तिरिर्हृत्वा क्षौमं हृत्वा तु दर्दुरः ।

कार्पासतान्तवं क्रौञ्चो गोधा गां वाग्गुदो गुडम् ॥

- மனு ஸ்மிருதி

பட்டு வஸ்திரங்களை திருடியவன் தித்திரி பறவையாக பிறப்பான். கைத்தறியை திருடியவனும் தவளையாக பிறப்பான். பசுவை திருடியவன் உடும்பாக பிறப்பான். வெல்லப்பாகை திருடியவன் வாக்குத பறவையாக பிறப்பான்.


छुच्छुन्दरिः शुभान् गन्धान् पत्रशाकं तु बर्हिणः ।

श्वावित् कृतान्नं विविधमकृतान्नं तु शल्यकः ॥

- மனு ஸ்மிருதி

வாசனை திரவியங்களை திருடியவன் மூஞ்சூராக பிறப்பான். கீரை காய் கறிகளை திருடியவன் மயிலாக பிறப்பான். சமைத்த அன்னத்தை திருடி தின்றவன் முள்ளம் பன்றியாக பிறப்பான். சமைக்காத அரிசி பருப்பை திருடியவன் சல்ய மிருகமாக (முள்ளம்பன்றி) பிறப்பான்.


बको भवति हृत्वाऽग्निं गृहकारी ह्युपस्करम् ।

रक्तानि हृत्वा वासांसि जायते जीवजीवकः ॥

- மனு ஸ்மிருதி

நெருப்பை திருடியவன் நாரையாக பிறப்பான். முறம், உரல் போன்ற  வீட்டுக்கு தேவையான பொருளை திருடியவன் குளவியாக பிறப்பான். சிவப்பு நிறமுள்ள துணிகளை திருடியவன் சகோர பறவையாக பிறப்பான்.


वृको मृगैभं व्याघ्रोऽश्वं फलमूलं तु मर्कटः ।

स्त्रीं ऋक्षः स्तोकको वारि यानान्युष्ट्रः पशूनजः ॥

- மனு ஸ்மிருதி

மானை திருடியவன் ஓநாயாக பிறப்பான். குதிரையை திருடியவன் புலியாக பிறப்பான். பழங்களையும் மூலிகைகளையும் திருடியவன் குரங்காக பிறப்பான். பெண்ணை திருடியவன் கரடியாக பிறப்பான். தண்ணீரை திருடியவன் சாதக பறவையாக பிறப்பான். வாகனங்களை திருடியவன் ஒட்டகமாக பிறப்பான். ஆடு மாடுகளை திருடியவன் வெள்ளாடாக பிறப்பான்.


यद् वा तद् वा परद्रव्यमपहृत्य बलान्नरः ।

अवश्यं याति तिर्यक्त्वं जग्ध्वा चैवाहुतं हविः ॥

- மனு ஸ்மிருதி

பிறருடைய பொருளை திருடியவனும், ஹோமம் செய்யப்பட்ட ஹவிஸை திருடியவன், அடுத்த பிறவியில் மிருகமாக பிறப்பான்.


स्त्रियोऽप्येतेन कल्पेन हृत्वा दोषमवाप्नुयुः ।

एतेषामेव जन्तूनां भार्यात्वमुपयान्ति ताः ॥

- மனு ஸ்மிருதி

இந்த பாவங்களை புரிந்த பெண்களும், அடுத்த பிறவியில் மிருகமாக பிறந்த இவர்களுக்கு மனைவியாக பிறப்பார்கள்.


स्वेभ्यः स्वेभ्यस्तु कर्मभ्यश्च्युता वर्णा ह्यनापदि ।

पापान् संसृत्य संसारान् 

प्रेष्यतां यान्ति शत्रुषु ॥

- மனு ஸ்மிருதி

நான்கு வர்ணத்தில் இருப்பவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை செய்யாமல் வாழ்ந்தால், அடுத்த பிறவியில் தன்னை ஒழிக்க நினைக்கும் எதிரியை எதிர்க்க முடியாமல், அவன் சொல்படி நடக்கும் படியான பிறவியை அடைவார்கள்.


वान्ताश्युल्कामुखः प्रेतो 

विप्रो धर्मात् स्वकाच्च्युतः ।

अमेध्यकुणपाशी च क्षत्रियः कटपूतनः ॥

- மனு ஸ்மிருதி

பிராம்மண வர்ணத்தில் (MLA, MP, Advocate, Judiciary) இருந்தும்,  தன் தர்மத்தை விட்டால், அடுத்த பிறவியில் கொள்ளிவாய் பிசாசாக பிரேத சரீரத்தோடு இருந்து, மனிதர்களின் வாந்தியை சாப்பிடும் ஜென்மத்தை அடைவான். க்ஷத்ரிய வர்ணத்தில் (army, police, defence) இருந்தும், தன் தர்மத்தை விட்டவன், மலத்தையும், பிணத்தையும் தின்னும் கடபூதமாக அலைவான்.


मैत्राक्षज्योतिकः प्रेतो वैश्यो भवति पूयभुक् ।

चैलाशकश्च भवति शूद्रो धर्मात् स्वकाच्च्युतः ॥

- மனு ஸ்மிருதி

வைஸ்ய வர்ணத்தில் (employer, business, self-employed) இருந்தும், தன் தர்மத்தை விட்டவன், புண்ணில் வழிகின்ற சீழை உண்ணும் மைத்ராஷ ஜோதி என்னும் பிரேத ஜென்மாவை எடுப்பான்.

சூத்திர வர்ணத்தில் (employee) இருந்தும், தன் தர்மத்தை விட்டவன், பேன்களை தின்னும் சைலாஷகம் என்னும் பிரேத ஜென்மாவை எடுப்பான்.


यथा यथा निषेवन्ते विषयान् विषयात्मकाः ।

तथा तथा कुशलता तेषां तेषूपजायते ॥

- மனு ஸ்மிருதி

உலக விஷயங்களில் மூழ்கி எத்தனைக்கு எத்தனை சுகங்களை அனுபவிக்கிறானோ, அத்தனைக்கு அத்தனை அதிலேயே மூழ்கி கிடப்பான்.


तेऽभ्यासात् कर्मणां तेषां पापानामल्पबुद्धयः ।

सम्प्राप्नुवन्ति दुःखानि तासु तास्विह योनिषु ॥

- மனு ஸ்மிருதி

தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை மீறி,  பாவச் செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யும் மனிதர்கள், அடுத்த பிறவியில், அதன் தன்மையை பொறுத்து, கீழான, மிகவும் கீழான பிறவிகளை பெற்று பலவிதமான துன்பங்களை அனுபவிப்பார்கள்


तामिस्रादिषु चोग्रेषु नरकेषु विवर्तनम् ।

असिपत्रवनादीनि बन्धनछेदनानि च ॥

- மனு ஸ்மிருதி

தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை மீறி,  பாவச் செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யும் மனிதர்கள், அடுத்த பிறவியில், தாமிஸ்ரம் போன்ற கொடிய நரகங்களுக்கு சென்று நரக வேதனை அனுபவிப்பார்கள். அசிபத்ர வனம் (இலைகளே முள் போல இருக்கும் ஈச்ச மரம் போன்றவை இருக்கும் காடு) கொண்ட நரகங்களை அடைந்து, கட்டப்பட்டும், வெட்டப்பட்டும், பல வேதனைகளை அனுபவிப்பார்கள்.


विविधाश्चैव सम्पीडाः काकोलूकैश्च भक्षणम् ।

करम्भवालुकातापान् कुम्भीपाकांश्च दारुणान् ॥

- மனு ஸ்மிருதி

தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை மீறி,  பாவச் செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யும் மனிதர்கள், அடுத்த பிறவியில், காக்கை கோட்டான் போன்றவற்றால் கொத்தி தின்னப்பட்டு, எரியும் மணலில் புரட்டப்பட்டு, பெரிய பாத்திரத்தில் வேக வைத்து கொடிய நரகத்தில் சித்ரவதை செய்யப்படுவார்கள்.


सम्भवांश्च वियोनीषु दुःखप्रायासु नित्यशः ।

शीतातपाभिघातांश्च विविधानि भयानि च ॥

- மனு ஸ்மிருதி

தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை மீறி,  பாவச் செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யும் மனிதர்கள், அடுத்த பிறவியில், கீழ்தரமான வாழ்க்கையில் பிறந்தும், பெரும் துன்பங்களை அனுபவித்து கொண்டும், வெப்பம் குளிரினால் துன்பப்பட்டும், பல்வேறு வகையான பயங்களோடு வாழும்படியாக பிறப்பான்.


असकृद् गर्भवासेषु वासं जन्म च दारुणम् ।

बन्धनानि च काष्ठानि परप्रेष्यत्वमेव च ॥

- மனு ஸ்மிருதி

தன் தர்மத்தை மீறி பாபம் செய்பவர்கள்,  மீண்டும் மீண்டும் கர்ப வாசம் செய்து பிறந்து, உலக விஷயங்களில் பந்தப்பட்டு, துன்பங்களை அனுபவித்து, பிறருக்கு அடிமையாகவே வாழ்வார்கள்.


बन्धु-प्रिय वियोगांश्च 

संवासं चैव दुर्जनैः ।

द्रव्यार्जनं च नाशं च 

मित्र अमित्रस्य चार्जनम् ॥

- மனு ஸ்மிருதி

தன் தர்மத்தை மீறி பாபம் செய்பவர்கள், அடுத்த பிறவியில் உறவினர்கள், பிரியப்பட்டவர்கள் பிரிவதை கண்டும், தீயவர்களோடு சேர்ந்து வாழும் நிலையையும், பணத்தை சேர்ப்பதில்- பெரும் துன்பத்தை அனுபவித்தும், சேர்த்த செல்வம் செலவழிந்து போவதையும், நண்பர்கள் பகைவர்களாக ஆவது போன்ற துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.


जरां चैवाप्रतीकारां व्याधिभिश्चोपपीडनम् ।

क्लेशांश्च विविधांस्तांस्तान् मृत्युमेव च दुर्जयम् ॥

- மனு ஸ்மிருதி

தன் தர்மத்தை மீறி பாபம் செய்பவர்கள், முதுமையால் தளர்ந்தும், தீராத வியாதிகளால் பீடிக்கப்பட்டும், பலவகையான மன கலக்கத்துடன் வாழும்படியாகவும், தவிர்க்க முடியாத மரணத்தையும் அடைவார்கள்.


यादृशेन तु भावेन यद् यत् कर्म निषेवते ।

तादृशेन शरीरेण तत् तत् फलमुपाश्नुते ॥

- மனு ஸ்மிருதி

எந்த எண்ணத்தோடு எந்த காரியத்தை ஒருவன் செய்கிறானோ, அதற்கு ஏற்ற தேகத்தோடு பிறவிகள் எடுத்து அதற்கான பலனை அடைகிறான்.


एष सर्वः समुद्दिष्टः कर्मणां वः फलोदयः ।

नैःश्रेयसकरं कर्म विप्रस्येदं निबोधत ॥

- மனு ஸ்மிருதி

இது வரை, சாஸ்திரம் சொல்லும் முறையையும், அதற்கு விரோதமான காரியங்கள் செய்வதால் ஏற்படும் துன்பங்களை பற்றியும் சொன்னேன். இனி, விப்ரன் என்று சொல்லப்படும் வேதமோதுபவன் செய்ய வேண்டிய காரியங்களை பற்றி சொல்கிறேன்.


वेद अभ्यास: तपो ज्ञानम् इन्द्रियाणां च संयमः ।

अहिंसा गुरु-सेवा च निःश्रेयसकरं परम् ॥

- மனு ஸ்மிருதி

வேதத்தை கற்று கொள்ளுதல், அதை பற்றிய நினைவுடனேயே தபஸில் இருத்தல், ப்ரம்ம ஞானத்தை அடைதல், புலன் அடக்கதோடு இருத்தல், அஹிம்சையாகவே இருத்தல், குரு சேவை செய்தல். இந்த  6 காரியங்களை, வேதமோதும் விப்ரன் செய்தால் மோக்ஷத்தை அடைவான்.


सर्वेषाम् अपि चैतेषां शुभानाम् इह कर्मणाम् ।

किंचित् श्रेयस्करतरं कर्मोक्तं पुरुषं प्रति ॥

- மனு ஸ்மிருதி

இப்போது கூறிய இவற்றில் மிக மிக உயர்ந்தது என்று பார்ப்போம்.


सर्वेषाम् अपि चैतेषाम् आत्मज्ञानं परं स्मृतम् ।

तद् ह्यग्र्यं सर्वविद्यानां प्राप्यते ह्यमृतं ततः ॥

- மனு ஸ்மிருதி

இந்த அனைத்திலும் ப்ரம்ம ஞானத்தை அடைவதே மிக மிக உயர்ந்தது. பகவானை அறியும் ஞானமே ப்ரம்மஞானம். இந்த ப்ரம்ம ஞானமே மோக்ஷத்திற்கு முக்கிய காரணம்.


षण्णामेषां तु सर्वेषां कर्मणां प्रेत्य चैह च ।

श्रेयस्करतरं ज्ञेयं सर्वदा कर्म वैदिकम् ॥

- மனு ஸ்மிருதி

வேதத்தை கற்று கொள்ளுதல், அதை பற்றிய நினைவுடனேயே தபஸில் இருத்தல், ப்ரம்ம ஞானத்தை அடைதல், அஹிம்சையாகவே இருத்தல், குரு சேவை செய்தல். இந்த 6 காரியங்களை கடைபிடிக்கும் வைதீகன் (விப்ரன்) செய்யும் வைதீக காரியங்கள் இக லோகத்திலும் பலன் தரும், பரலோகத்திலும் பலன் தரும்.


वैदिके कर्मयोगे तु सर्वाण्येतान्यशेषतः ।

अन्तर्भवन्ति क्रमश तस्मिं तस्मिन् क्रियाविधौ ॥

- மனு ஸ்மிருதி

வைதீக கர்மாக்கள் விடாமல் செய்வதால், விப்ரனின் (வைதீக பிராம்மணன்) 6 கடமைகளும் பெரும்  பலன்களை அளித்திடும்.


सुखाभ्युदयिकं चैव नैःश्रेयसिकमेव च ।

प्रवृत्तं च निवृत्तं च द्विविधं कर्म वैदिकम् ॥

- மனு ஸ்மிருதி

வைதீக கர்மாக்கள் ப்ரவ்ருத்தி (இக உலக, சொர்க்கம் முதலிய) பயன்களை தரும். நிவ்ருத்தி (மோக்ஷம்) பயன்களையும் தரும்.


इह चामुत्र वा काम्यं प्रवृत्तं कर्म कीर्त्यते ।

निष्कामं ज्ञातपूर्वं तु निवृत्तमुपदिश्यते ॥

- மனு ஸ்மிருதி

இந்த உலகத்தில் சுகமாக இருப்பதற்காகவும், மேல் உலக சுகங்களை அனுபவிப்பதற்காகவும் செய்யப்படும் காரியங்கள் "ப்ரவ்ருத்தி" வைதீக கர்மா என்று சொல்கிறோம்.  எந்த பலனையும் எதிர்பார்க்காமல், இறந்த பிறகும் வேறு பலனை எதிர்பார்க்காமல் செய்யப்படும்  காரியங்கள் "நிவ்ருத்தி" வைதீக கர்மா என்று சொல்கிறோம்.


प्रवृत्तं कर्म संसेव्यं देवानामेति साम्यताम् ।

निवृत्तं सेवमानस्तु भूतान्यत्येति पञ्च वै ॥

- மனு ஸ்மிருதி

ப்ரவ்ருத்தி மார்க்க வைதீக கர்மாக்கள் செய்வதன் மூலம், தேவனாகவும், தேவனை போல சில காலங்கள் சொர்க்க லோகங்களில் வாசம் செய்யும் பலன்களை கூட அடையலாம்.

நிவ்ருத்தி மார்க்க வைதீக கர்மாக்கள் செய்வதன் மூலம், பஞ்சபூதங்களும் விலகி, மோக்ஷத்தை அடையலாம்.


सर्वभूतेषु चात्मानं सर्वभूतानि चात्मनि ।

समं पश्यन्नात्मयाजी स्वाराज्यमधिगच्छति ॥

- மனு ஸ்மிருதி

சர்வ சரீரங்களிலும் ஆத்மா உள்ளது. ஒவ்வொரு சரீரங்களில் இருக்கும் இந்த ஆத்மாக்கள் பரமாத்மாவிடம் உரைகிறது. அந்த பரமாத்மா அனைத்து ஆத்மாவுக்கும் உறைவிடமாக இருக்கிறார் என்ற சம புத்தியோடு பார்க்க தெரிந்தவன், மோக்ஷம் (வீடு) செல்கிறான்.


यथोक्तान्यपि कर्माणि परिहाय द्विजोत्तमः ।

आत्मज्ञाने शमे च स्याद् वेदाभ्यासे च यत्नवान् ॥

- மனு ஸ்மிருதி

த்விஜோத்மர்கள் (பிராம்மண, வைசிய, க்ஷத்ரிய) தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை விட்டாவது, ஆத்ம ஞானத்தை அடைய முயற்சிக்க வேண்டும். வேதத்தை ஓதுவதில் முயற்சியோடு இருக்க ஆத்ம ஞானம் ஏற்படும்.


एतद् हि जन्मसाफल्यं ब्राह्मणस्य विशेषतः ।

प्राप्यैतत् कृतकृत्यो हि द्विजो भवति नान्यथा ॥

- மனு ஸ்மிருதி

பிறவி எடுத்த பலனை அடைய, ப்ராம்மண வர்ணத்தில் இருப்பவனுக்கு வேதம் ஓதுவதே வழி. இதுவே மற்ற த்விஜர்களான க்ஷத்ரியர்களுக்கும், வைஸ்யர்களுக்கும்.


पितृदेव मनुष्याणां वेदश्चक्षुः सनातनम् ।

अशक्यं च अप्रमेयं च वेदशास्त्रमिति स्थितिः ॥

- மனு ஸ்ம்ருதி

பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் வேதம் கண் போன்று இருக்கிறது. அதாவது, மனிதன் வேதம் என்ற கண் கொண்டு தர்மம் எது? என்று அறிகிறான்.காலத்திற்கு அப்பாற்பட்ட வேதத்தின் சக்தி எல்லையற்றது. வேதத்தின் தன்மை 'இது தான்' என்று எவராலும் அளவிட முடியாது.


या वेदबाह्याः स्मृतयो याश्च काश्च कुदृष्टयः ।

सर्वास्ता निष्फलाः प्रेत्य तमोनिष्ठा हि ताः स्मृताः ॥

- மனு ஸ்ம்ருதி

வேதம் சொல்வதற்கு விரோதமாக இயற்றப்பட்ட நூல்களும், தவறான கோட்பாடுகளும், திறம்பட ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தாலும், அவை அனைத்தையும், அஞானம் என்ற இருளில் இயற்றப்பட்டது என்றே தள்ள வேண்டும்.


उत्पद्यन्ते च्यवन्ते च यान्यतोऽन्यानि कानि चित् ।

तान्यर्वाक्कालिकतया निष्फलान्यनृतानि च ॥

- மனு ஸ்ம்ருதி

வேதத்தை ஆதாரமாக கொள்ளாத எந்த நூலாக இருந்தாலும், வேகமாக தானே அழிந்து போகும். பொய்யை கற்பிக்கும் இதை கற்பதால் நற்பலன் எதுவும் ஏற்பட போவதில்லை.


चातुर्वर्ण्यं त्रयो लोकाश्चत्वारश्चाश्रमाः पृथक् ।

भूतं भव्यं भविष्यं च सर्वं वेदात् प्रसिध्यति ॥

நான்கு வர்ணத்தை பற்றியும், மூவுலகங்கள் பற்றியும், நான்கு ஆசிரமங்களை பற்றியும் வேதம் சொல்கிறது. நடந்ததும், நடப்பதும், நடக்க போவதை பற்றியும் வேதம் சொல்கிறது.


शब्दः स्पर्शश्च रूपं च रसो गन्धश्च पञ्चमः ।

वेदादेव प्रसूयन्ते प्रसूतिर्गुणकर्मतः ॥

- மனு ஸ்ம்ருதி

சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் (சுவை), கந்தம் (சுகந்தம்) என்னும் 5ம் வேதத்திலிருந்தே தோன்றின. இவைகளின் குணமும் செயல்களும் வேதத்திலேயே விளக்கப்பட்டுள்ளன.


बिभर्ति सर्वभूतानि वेदशास्त्रं सनातनम् ।

तस्मादेतत् परं मन्ये यत्जन्तोरस्य साधनम् ॥

- மனு ஸ்ம்ருதி

காலத்தை கடந்த வேத சாஸ்திரமே சகல பூதங்களையும் (நம்மை) தாங்குகிறது. மேலான நிலையை மனிதன் அடைய வேதமே சாதனமாகும்.


सेनापत्यं च राज्यं च दण्डनेतृत्वमेव च ।

सर्वलोकाधिपत्यं च वेदशास्त्रविदर्हति ॥

- மனு ஸ்ம்ருதி

வேத சாஸ்திரம் முழுவதும் எவன் அறிந்து கொள்கிறானோ, அவனால் பெரும் படையை சேனாபதியாக வழிநடத்த முடியும். ராஜ்யத்தை ஆளும் திறன் இருக்கும். இவ்வளவு ஏன், சகல உலகங்களையும் ஆட்சி செய்யும் தகுதியும் இருக்கும்.

यथा जातबलो वह्निः

दहत्यार्द्रानपि द्रुमान् ।

तथा दहति वेदज्ञः 

कर्मजं दोषम् आत्मनः ॥

- மனு ஸ்ம்ருதி

கொழுந்து விட்டு எரியும் அக்னியானது, எப்படி பசுமையான மரங்களையும் எரித்து விடுமோ, அப்படியே வேதம் முழுவதும் கற்று 'அறிந்தவன்' கர்மாவினால் ஏற்படும் தோஷங்களை கூட எரித்து அழித்து விடும் சக்தி கொண்டிருப்பான்.



वेदशास्त्र अर्थ तत्त्वज्ञो यत्र तत्रा आश्रमे वसन् ।

इहैव लोके तिष्ठन् स ब्रह्म भूयाय कल्पते ॥

- மனு ஸ்ம்ருதி

வேத சாஸ்திரத்தின் அர்த்தத்தை உணர்ந்த தத்வ ஞானி, பிரம்மச்சாரியாக இருந்தாலும், க்ருஹஸ்தனாகவே இருந்தாலும், வானப்ரஸ்தனாக இருந்தாலும், உலகில் வாழ்ந்தபடியே ப்ரம்ம ஞானத்தை பெற்று இருப்பான்.

अज्ञेभ्यो ग्रन्थिनः श्रेष्ठा 

ग्रन्थिभ्यो धारिणो वराः ।

धारिभ्यो ज्ञानिनः श्रेष्ठा 

ज्ञानिभ्यो व्यवसायिनः ॥

- மனு ஸ்ம்ருதி

ஏதோ சிறிது வேத மந்திரங்களை கற்றவர்களை விட, முழுமையாக வேதத்தை கற்றவர்கள் மேலானவர்கள். அதை நன்கு மனதில் பதிய வைத்து கொண்டவர்கள், முழுமையாக கற்றவர்களை விட மேலானவர்கள். அர்த்தம் புரிந்தவர்கள், நன்கு மனதில் பதிய வைத்தவர்களை விட மேலானவர்கள். வேதம் சொன்னபடி வாழ்க்கையில் நடந்து காட்டுபவர்கள், அர்த்தம் புரிந்தவர்களை விட மேலானவர்கள்.


तपो विद्या च विप्रस्य निःश्रेयसकरं परम् ।

तपसा किल्बिषं हन्ति विद्यया अमृतमश्नुते ॥

- மனு ஸ்ம்ருதி

தவமும், வேதமும் வேத ப்ராம்மணனுக்கு (விப்ரனுக்கு) மேன்மை கொடுக்கும். தவத்தால் விப்ரனின் பாபங்கள் தீரும். வேதத்தால் ப்ரம்மானந்ததை அனுபவிப்பான்.


प्रत्यक्षं चानुमानं च शास्त्रं च विविधाऽऽगमम् ।

त्रयं सुविदितं कार्यं धर्मशुद्धिमभीप्सता ॥

- மனு ஸ்ம்ருதி

3 சாதனங்கள் உள்ளது. கண்ணால் பார்த்தும், அனுமானத்தாலும், சாஸ்திரம் என்ன சொல்கிறது என்றும் ஆராய்வதால் ஒருவன் தன்னை தர்ம வழியில் மேம்படுத்தி கொள்ள முடியும்.


आर्षं धर्मोपदेशं च वेदशास्त्रा अविरोधिना ।

यस् तर्केणा अनु सन्धत्ते स धर्मं वेद नैतरः ॥

- மனு ஸ்ம்ருதி

வேதத்தையும், தர்ம உபதேச ஸ்ம்ருதிகளையும், வேதத்துக்கு விரோதமில்லாத சாஸ்திரத்தையும் (உபநிஷத்), தர்க்க சாஸ்திரத்தையும் நன்கு படிப்பதால், தர்மங்கள் என்னென்ன என்று ஒருவன் புரிந்து கொள்ள முடியும்.


नैःश्रेयसमिदं कर्म यथोदितमशेषतः ।

मानवस्यास्य शास्त्रस्य रहस्यमुपदिश्यते ॥

- மனு ஸ்ம்ருதி

இதுவரை மோக்ஷத்திற்கு சாதனமான விஷயங்கள் சொல்லப்பட்டது.  இனி, மனிதர்களுக்கு இக வாழ்வில் தேவையான தர்மத்தை சொல்கிறேன்.


अनाम्नातेषु धर्मेषु कथं स्यादिति चेद् भवेत् ।

यं शिष्टा ब्राह्मणा ब्रूयुः स धर्मः स्यादशङ्कितः ॥

- மனு ஸ்ம்ருதி

படித்த தர்ம சாஸ்திரத்தில் சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். நான் கூறப்போகும் லக்ஷணங்கள் பொருந்திய ப்ராம்மணர்களிடம் சந்தேகத்தை கேட்க வேண்டும். அதுவே தர்மம் என்று ஏற்று கொள்ள வேண்டும்.


धर्मेणाधिगतो यैस्तु वेदः सपरिबृंहणः ।

ते शिष्टा ब्राह्मणा ज्ञेयाः श्रुतिप्रत्यक्षहेतवः ॥

- மனு ஸ்ம்ருதி

வேதங்கள், வேத-அங்கங்கள் (உபநிஷத்), தர்ம சாஸ்திரங்கள் (ஸ்ம்ருதிகள்), புராணங்கள், மீமாம்ஸை, தர்க்கம் அனைத்தும் படித்தவரும், அவற்றின் பொருளை முழுமையாக அறிந்தவருமாக இருக்கின்ற ப்ராம்மணரிடம், கேட்டு, அவர் சொல்படி நடக்க வேண்டும்.


दशावरा वा परिषद्यं धर्मं परिकल्पयेत् ।

त्र्य्ऽवरा वाऽपि वृत्तस्था तं धर्मं न विचालयेत् ॥

- மனு ஸ்ம்ருதி

ஆசாரத்தில் இருக்கும் 10 பேர் சேர்ந்திருக்கும் சபையில், அவர்கள் எதை தர்மம் என்று நிர்ணயித்து சொல்கிறார்களோ, அதையே தர்மமாக ஏற்கலாம்.

10 பேர் கிடைக்காத பட்சத்தில் 3 பேர் சேர்ந்து சொன்னாலும், அதையே தர்மமாக ஏற்கலாம்.


त्रैविद्यो हेतुकस्तर्की नैरुक्तो धर्मपाठकः ।

त्रयश्चाश्रमिणः पूर्वे परिषत् स्याद् दशावरा ॥

- மனு ஸ்ம்ருதி

வேதங்களில் 3 சாகை ஓதியவன், தர்க்கம் மீமாம்சை போன்ற சாஸ்திரங்களை  படித்தவன், தர்மசாஸ்திரங்கள் (ஸ்ம்ருதி) அறிந்தவன், பிரம்மச்சாரி, க்ருஹஸ்தன், சந்நியாசி போன்றவர்கள் சேர்ந்த 10 பேருக்கு குறையாமல் இருக்கும் சபைக்கு  "பரிஷத்" என்று பெயர்.


ऋग्वेदविद् यजुर्विद्च सामवेदविदेव च ।

त्र्य्ऽवरा परिषद्ज्ञेया धर्मसंशयनिर्णये ॥

- மனு ஸ்ம்ருதி

ரிக் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், யஜுர் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், ஸாம வேதத்தை நன்கு அறிந்தவர்கள் சேர்ந்து இருக்கும் சபைக்கும் "பரிஷத்" என்று பெயர். படித்த தர்ம சாஸ்திரத்தில் சந்தேகம் ஏற்பட்டால், இவர்களின் பரிக்ஷித்தில் கேட்டு தெளிவு பெறலாம்.


एकोऽपि वेदविद् धर्मं यं व्यवस्येद् द्विजोत्तमः ।

स विज्ञेयः परो धर्मो न अज्ञानामुदितोऽयुतैः ॥

- மனு ஸ்ம்ருதி

வேதத்தை நன்கு அறிந்த ஒருவன் மட்டுமே இருந்தாலும், அந்த த்விஜனிடமே தர்மம் எது என்று கேட்டு சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம். வேதமோ, சாஸ்திரமோ அறியாத பல பேர் சேர்ந்து கொண்டு "இது தான் தர்மம்" என்று சொன்னாலும் ஏற்கக்கூடாது.


अव्रतानाममन्त्राणां जातिमात्रोपजीविनाम् ।

सहस्रशः समेतानां परिषत्त्वं न विद्यते ॥

- மனு ஸ்ம்ருதி

பிரம்மச்சர்யம், ஏகாதசி போன்ற விரதங்கள் இல்லாமல், ஜாதியை மட்டுமே வைத்து கொண்டு ஆயிரம் பேர் கூடி தர்ம எது என்று பேசினாலும், அதை "பரிஷத்" என்று ஏற்க முடியாது.


यं वदन्ति तमोभूता मूर्खा धर्ममतद्विदः ।

तत्पापं शतधा भूत्वा तद्वक्तॄननुगच्छति ॥

- மனு ஸ்ம்ருதி

தர்மம் தெரியாமல், வேத அர்த்தம் தெரியாமல், தமோ குணம் கொண்டவர்கள் "இது தான் தர்மம்" என்று சொன்னால், இதை கேட்டவன் கொண்டுள்ள பாபங்கள், 100 மடங்காக சொன்னவனை அடையும்.


एतद् वोऽभिहितं सर्वं निःश्रेयसकरं परम् ।

अस्मादप्रच्युतो विप्रः प्राप्नोति परमां गतिम् ॥

- மனு ஸ்ம்ருதி

இதுவரை சர்வ நிச்சயமாக நன்மையை தரும் விஷயங்களை சொன்னேன். நான் சொன்னபடி வாழ்க்கையை நடத்துபவர்கள் பரமபதத்தை நிச்சயம் அடைவார்கள்.


एवं स भगवान् देवो लोकानां हितकाम्यया ।

धर्मस्य परमं गुह्यं ममेदं सर्वमुक्तवान् ॥ 

- மனு ஸ்ம்ருதி

உலகத்தாருக்கு நன்மை கிடைக்கவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட இந்த பரம ரகசியமான தர்மத்தை. பகவான் மனு ரிஷிகளாகிய எங்களுக்கு சொன்னார்.


सर्वमात्मनि सम्पश्येत् सत् च असत् च समाहितः ।

सर्वं ह्यात्मनि सम्पश्यन्नाधर्मे कुरुते मनः ॥

- மனு ஸ்ம்ருதி

ஸத் (இருக்கிறார்), அஸத் (இல்லாதது போல இருக்கிறார்) இரண்டுமாகவும் பரமாத்மா இருக்கிறார். ஒவ்வொருவர் உடம்பிற்குள்ளும் இருக்கிறார் என்ற சத்யத்தை உணர்ந்து, தன் ஆத்ம ஸ்வரூபத்திலேயே இருப்பவன் மனது எப்பொழுதுமே அதர்மத்தில் செல்லாது.


आत्मैव देवताः सर्वाः सर्वमात्मन्यवस्थितम् ।

आत्मा हि जनयत्येषां कर्मयोगं शरीरिणाम् ॥ 

- மனு ஸ்ம்ருதி

சகல தேவர்களுக்குள்ளும் பரமாத்மாவே இருக்கிறார். உடலெடுத்த அனைவருக்கும் கர்ம பலனை தருவதும் அந்த பரமாத்மாவே 


खं संनिवेशयेत् खेषु चेष्टनस्पर्शनेऽनिलम् ।

पक्तिदृष्ट्योः परं तेजः स्नेहेऽपो गां च मूर्तिषु ॥ 

- மனு ஸ்ம்ருதி

வெளியிலுள்ள ஆகாசத்தை, தன் உடம்பில் இருக்கும் ஆகாசமாக  (இடைவெளி) தியானிக்க வேண்டும். வெளியிலுள்ள காற்றை (வாயு), தன் உடம்பில் இருக்கும் காற்றாக தியானிக்க வேண்டும். இவ்வாறே, வெளியில் உள்ள அக்னியை, தன் உடம்பில் இருக்கும் அக்னியாக தியானிக்க வேண்டும். இவ்வாறே, வெளியில் உள்ள நீரை, தன் உடம்பில் இருக்கும் நீரோடு தியானிக்க வேண்டும். இவ்வாறே, வெளியில் உள்ள மண்ணை (பூமி), தன் மாமிச உடம்பாகவே தியானிக்க வேண்டும்.


मनसीन्दुं दिशः श्रोत्रे क्रान्ते विष्णुं बले हरम् ।

वाच्यग्निं मित्रमुत्सर्गे प्रजने च प्रजापतिम् ॥

வெளியிலுள்ள சந்திரனை, தன் மனதாக தியானிக்க வேண்டும். வெளியிலுள்ள திசைகளை காதுகளாக தியானிக்க வேண்டும். மஹாவிஷ்ணுவை தன் கால்களாக தியானிக்க வேண்டும். சிவபெருமானை தன்னிடம் உள்ள பலமாக தியானிக்க வேண்டும். அக்னி பகவானே தன்னுடைய நாக்காக தியானிக்க வேண்டும். மித்ரன் என்ற தேவதையே ஆசன பாகமாக தியானிக்க வேண்டும். பிறப்புறுப்பை ப்ரஜாபதியாக தியானிக்க வேண்டும். 


प्रशासितारं सर्वेषामणीयांस मणोरपि ।

रुक्माभं स्वप्नधीगम्यं विद्यात् तं पुरुषं परम् ॥

- மனு ஸ்மிருதி

இப்படி தியானம் செய்து, அனைத்தையும் ஆள்பவரும், அணுவுக்கும் அணுவாக இருப்பவரும், தங்கம் போன்று ப்ரகாசமானவரும், ஞானகண்ணால் மட்டுமே காணக்கூடியவருமான பரமாத்மாவை மெய் அறிவை (ஞானம்) கொண்டு காண வேண்டும்.


एतमेके वदन्त्यग्निं मनुमन्ये प्रजापतिम् ।

इन्द्रमेके परे प्राणमपरे ब्रह्म शाश्वतम् ॥

- மனு ஸ்மிருதி

சிலர், பரமாத்மாவை அக்னி ஸ்வரூபமாக உபாசனை செய்கிறார்கள். சிலர் பரமாத்மாவை பிராஜாபதிகளாக உபாசனை செய்கிறார்கள். சிலர் தேவேந்திரனாக உபாசனை செய்கிறார்கள். சிலர் தன்னுள் இருக்கும் ப்ராணனாக உபாசனை செய்கிறார்கள். சிலர் ப்ரம்ம ஸ்வரூபமாக உபாசனை செய்கிறார்கள்.



एष सर्वाणि भूतानि पञ्चभिर्व्याप्य मूर्तिभिः ।

जन्मवृद्धिक्षयैर्नित्यं संसारयति चक्रवत् ॥

- மனு ஸ்மிருதி

பரமாத்மா, உயிர்களை பஞ்ச பூதங்களோடு சேர்த்து பிறப்பு, வளர்ச்சி, மறைவு என்று சக்கரம் போல சுழற்றி இயங்க வைக்கிறார். 


एवं यः सर्वभूतेषु पश्यत्यात्मानमात्मना ।

स सर्वसमतामेत्य ब्रह्माभ्येति परं पदम् ॥

- மனு ஸ்மிருதி

எவன் எல்லா பூதங்களுக்கும் உள்ளே இருக்கும் ஆத்மாவையே பார்க்கிறானோ, அவனே ப்ரம்ம ஞானத்தை அடைகிறான். அவன் மேலான பரப்ரம்மத்தின் பதமான பரமபதத்தை அடைகிறான்.


இவ்வாறு ஸ்வாயம்னு மனு தர்ம சாஸ்திரமான "மனு ஸ்ம்ருதி"யை ரிஷிகளுக்கு உபதேசம் செய்தார்.



Friday, 30 September 2022

மனு ஸ்மிருதி அறிவோம் - பாகம் 2

மனு ஸ்மிருதி அறிவோம் - பாகம் 2

सङ्कल्प-मूलः कामो वै यज्ञाः सङ्कल्प-सम्भवाः ।

व्रतानि यम धर्माश्च सर्वे सङ्कल्पजाः स्मृताः ॥

- மனு ஸ்ம்ருதி 

நான் விரதத்தில் இருக்க வேண்டும், நான் நியமத்தோடு (ஒழுக்கத்தோடு) வாழ வேண்டும், நான் யாகம் செய்ய வேண்டும் என்று ஒருவன் நினைப்பதற்கு காரணம் (வேர் போல) அவனுடைய எண்ணமே. 

अकामस्य क्रिया का-चिद् 

दृश्यते नैह कर्हि-चित् ।

यद् यद् हि कुरुते किं चित् 

तत् तत् कामस्य चेष्टितम् ॥ 

- மனு ஸ்ம்ருதி 

எந்த காரியமும், எண்ணமில்லாமல் செய்யப்படுவதில்லை. மனிதர்கள் செய்யும் அனைத்து காரியத்துக்கும், காரணமாக இருப்பது அவரவர் எண்ணமே.

तेषु सम्यग् वर्तमानो 

गच्छति अमर लोकताम् ।

यथा सङ्कल्पितांश्चैह 

सर्वान् कामान् समश्नुते ॥

- மனு ஸ்ம்ருதி 

தன் எண்ணத்தை நிறைவேற்றி கொள்ள, தர்மப்படி (நியாயப்படி) தன் காரியங்களை செய்பவன், அமர லோகங்களுக்கு செல்கிறான். மேலுலகம் மட்டுமல்ல, இந்த பூலோக வாழ்விலும், தன்னுடைய அனைத்து ஆசையையும் நிறைவேற்றி கொள்கிறான்.

वेदो अखिलो धर्ममूलं 

स्मृति शीले च तद्विदाम् ।

आचारश्चैव साधूनाम् 

आत्मन: तुष्टि: एव च ॥

- மனு ஸ்ம்ருதி 

தர்மம் என்றால் என்ன? என்று சொல்வதற்கே வேதம். தர்மத்துக்கு மூலமாக வேதம் இருக்கிறது. வேதத்தில் உள்ள ஸ்ம்ருதிகளை, தன் வாழ்க்கையில் கடைபிடிக்கும் சாதுக்களின் ஒழுக்கமுமே தர்மத்துக்கு உதாரணங்கள் (பிரமாணம்). இப்படிப்பட்ட சாதுக்கள் தங்கள் வாழ்வில் காட்டும் ஒழுக்கமும், அவர்கள் அனுபவிக்கும் ஆனந்தமே, தர்மத்துக்கு சாட்சிகள்.


यः कश्चित् कस्य चिद् धर्मो मनुना परिकीर्तितः ।

स सर्वो अभिहितो वेदे सर्वज्ञानमयो हि सः ॥

- மனு ஸ்ம்ருதி 

மனு ஒவ்வொருத்தருக்கும் அவரவருக்குரிய தர்மத்தை சொல்கிறார். மனு சொன்ன அனைத்து தர்மமும் வேதத்தில் சொல்லப்பட்டவையே. வேதத்தின் அறிவை நன்கு உணர்ந்தவர் மனு. வேதம் கூறியதையே மனுவும் கூறுகிறார்.


सर्वं तु समवेक्ष्य इदं निखिलं ज्ञान चक्षुषा ।

श्रुति प्रामाण्यतो विद्वान् स्वधर्मे निविशेत वै ॥

- மனு ஸ்ம்ருதி 

மனு தன்னுடைய திவ்ய ஞானத்தால், வேதம் அறிந்து, அதன் சாஸ்திரத்தை மனு நீதியாக நமக்கு சொல்கிறார். வேதம் சொல்லி இருக்கிறது என்ற நிதானத்துடன், விவேகத்துடன் அதன் படி தங்களுக்கு சொல்லப்பட்ட தர்மத்தை (ஸ்வதர்மம்) அவரவர்கள் கடைபிடிக்க வேண்டும்.


श्रुति स्मृति उदितं धर्मम् अतिष्ठन् हि मानवः ।

इह कीर्तिम् अवाप्नोति प्रेत्य चान् उत्तमं सुखम् ॥

- மனு ஸ்ம்ருதி 

மனிதன், வேதத்தில் உள்ள ஸ்ருதிகளையும், அது காட்டும் தர்மத்தையும் தன் வாழ்க்கையில் கடைபிடித்தால், இவ்வுலகில் மதிப்போடு (கீர்த்தியோடு) வாழ்வான். மேலுலகம் செல்லும் போது உத்தம லோகங்களுக்கும் செல்வான்.


श्रुतिस्तु वेदो विज्ञेयो धर्मशास्त्रं तु वै स्मृतिः ।

ते सर्वार्थेष्वमीमांस्ये ताभ्यां धर्मो हि निर्बभौ ॥ 

- மனு ஸ்ம்ருதி 

ஸ்ருதிகளே (மந்திரங்களே) "வேதங்கள்". ஸ்ம்ருதிகளே "தர்ம சாஸ்திரங்கள்". தர்மம் இந்த இரண்டினாலும் பிரகாசிக்கிறது. தர்மம் எது? என்று நமக்கு காட்டும் ஸ்ருதிகளை பற்றியோ, ஸ்ம்ருதிகளை பற்றியோ எதிர்மறையான விவாதங்கள் செய்ய கூடாது.


यो अवमन्येत ते मूले हेतुशास्त्र आश्रयाद् द्विजः

स साधुभि: बहिष्कार्यो नास्तिको वेद-निन्दकः ॥

- மனு ஸ்ம்ருதி 

மனித தர்மம் எது? என்று நமக்கு காட்டும் ஸ்ருதிகளையும் (வேதம்), ஸ்ம்ருதிகளையும் (தர்ம சாஸ்திரம்) எந்த இரட்டை பிறப்பாளன் (வைசியன், க்ஷத்ரியன்,பிராம்மணன்) (த்விஜன்) அவமானப்படுத்தி பேசுகிறானோ, அப்படிப்பட்ட நாத்தீகனை சாதுக்களாகிய மற்றவர்கள் அருகில் சேர்த்து கொள்ள கூடாது.


वेदः स्मृतिः सदाचारः स्वस्य च प्रियम् आत्मनः ।

एतत् चतुर्विधं प्राहुः साक्षाद् धर्मस्य लक्षणम् ॥ 

- மனு ஸ்ம்ருதி 

வேதம் (ஸ்ருதி), ஸ்ம்ருதி (தர்ம சாஸ்திரங்கள்), நன் நடத்தை, உலகத்தில் சுகமோ துக்கமோ எது ஏற்பட்டாலும், ப்ரேமிகனாக ஆனந்தமாக இருக்க வேண்டும். 

யார் வேதமும் அறிந்து, ஸ்ம்ருதிகளும் அறிந்து, நன் நடத்தையோடு வாழ்ந்து, ப்ரேமிகனாக ஆனந்தமாகவே  வாழ்கிறார்களோ, அவர்களே தர்மத்தின் லக்ஷணத்தோடு இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.

अर्थ कामेषु असक्तानां 

धर्मज्ञानं विधीयते ।

धर्मं जिज्ञा समानानां 

प्रमाणं परमं श्रुतिः ॥ 

- மனு ஸ்ம்ருதி 

பொருளிலும், காமத்திலும் விருப்பம் இல்லாதவனுக்கே தர்மத்தை அறியவேண்டும் என்ற ஆசை ஏற்படும். அப்படிபட்டவன்  தர்மத்தை அறிய ஆசை கொண்டால், அவனுக்கு வழி காட்டவே ஸ்ருதிகள் (வேதம்) உள்ளது.


ஸ்ம்ருதிகள் (தர்ம சாஸ்திரங்கள்) பல. 

நாம் இப்பொழுது படிக்கும் தர்ம சாஸ்திரம் "மனு ஸ்ம்ருதி".

இது போல, பல தர்ம சாஸ்திரங்கள் (ஸ்ம்ருதிகள்) பல ரிஷிகள் நமக்கு கொடுத்துள்ளனர்.

ஆபஸ்தம்ப ஸ்ம்ருதி, அத்ரி ஸ்ம்ருதி, விஷ்ணு ஸ்ம்ருதி, ஹாரிதர் ஸ்ம்ருதி, யாக்ஞவல்க்யர் ஸ்ம்ருதி, அங்கீரஸ ஸ்ம்ருதி, யம ஸ்ம்ருதி, ஸம்வர்த்த ஸ்ம்ருதி, காத்யாயன ஸ்ம்ருதி, ப்ருஹஸ்பதி ஸ்ம்ருதி, பராசர ஸ்ம்ருதி, வ்யாஸ ஸ்ம்ருதி, சங்க ஸ்ம்ருதி, ஔசன ஸ்ம்ருதி, லிகித ஸ்ம்ருதி, கௌதம ஸ்ம்ருதி, தக்ஷ ஸ்ம்ருதி, சாதாதப ஸ்ம்ருதி, வசிஷ்ட ஸ்ம்ருதி

இப்படி ரிஷிகள், பல தர்ம சாஸ்திரங்களை (ஸ்ம்ருதிகளை) நமக்கு கொடுத்து இருக்கிறார்கள்.

ரிஷிகள் கொடுத்த இந்த ஸ்ம்ருதிகள் (தர்ம சாஸ்திரங்கள்) அனைத்தும் வேதத்தை (ஸ்ருதிகள்) கொண்டே எழுதப்பட்டது.

ஒரு ரிஷி சொன்ன ஸ்ம்ருதிக்கும் (தர்ம சாஸ்திரம்), மற்றொரு ரிஷி சொன்ன ஸ்ம்ருதிக்கும் வேறுபாடு காணப்பட்டால் எப்படி கையாள வேண்டும்?

இந்த கேள்விக்கு, மனுவே தன் ஸ்ம்ருதியில் (தர்ம சாஸ்திரத்தில்) நமக்கு பதிலை சொல்கிறார்.

श्रुतिद्वैधं तु यत्र स्यात् तत्र धर्मावुभौ स्मृतौ ।
उभावपि हि तौ धर्मौ सम्यगुक्तौ मनीषिभिः ॥

- மனு ஸ்ம்ருதி
ஒரு தர்ம சாஸ்திரத்தில் (ஸ்ம்ருதியில்) சொல்லப்பட்ட தர்மத்துக்கும், மற்றொரு தர்ம சாஸ்திரத்தில் (ஸ்ம்ருதியில்) சொல்லப்பட்ட தர்மத்துக்கும் முரண்பாடான தர்மம் காணப்பட்டால், வேதத்தில் (ஸ்ருதியில்) இரண்டு விதமான தர்மமும் உள்ளது என்று அறிந்து கொள்ள வேண்டும். இரண்டு ரிஷிகள் சொல்லும் தர்ம சாஸ்திரமும் அறிந்து இருந்தால், அந்த மனிதன் இரண்டு தர்மத்தையும் கடைபிடிக்கலாம். ஆனால் வேதத்தை அடிப்படையாக கொண்டு ரிஷிகள் சொன்ன ஸ்ம்ருதி வாக்கியத்தை விவாதம் செய்ய கூடாது.


उदिते अनुदिते चैव 

समयाध्युषिते तथा ।

सर्वथा वर्तते यज्ञ 

इतीयं वैदिकी श्रुतिः ॥

- மனு ஸ்ம்ருதி

சூரியன் உதயமான பிறகு யாகம் செய்யலாம் என்று ஒரு வேத மந்திரம் (ஸ்ருதி) சொல்கிறது. சூரியன் உதிப்பதற்கு முன், நக்ஷத்திரம் தெரியும் அருணோதய காலத்தில் ஹோமம் செய்யலாம் என்றும் வேத மந்திரம் (ஸ்ருதி) சொல்கிறது. இரண்டும் முரண்பாடு என்று நினைக்க தேவையில்லை. வேதம் இரண்டு விதமாகவும் செய்ய அனுமதிக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.


निषेक आदि श्मशान अन्तो मन्त्रैर्यस्योदितो विधिः ।

तस्य शास्त्रे अधिकारो अस्मिन् ज्ञेयो न अन्यस्य कस्य चित् ॥ 

- மனு ஸ்ம்ருதி

தாயின் கர்ப்பத்தில் இருந்த காலத்திலிருந்தே (பும்ஸவனம் முதல்...) மரணம் வரை எவன் வேத மந்திரங்கள் (ஸ்ருதிகள்) கேட்டு பிறந்து விதிப்படி வாழ்கிறானோ, அவனே இந்த மனு ஸ்ம்ருதியை படிக்க ஏற்றவன். மற்றவர்கள் படித்தும் இதன் ஆழத்தை அறிய மாட்டார்கள். 


सरस्वती दृशद्वत्यो: देवनद्योर्यदन्तरम् ।

तं देवनिर्मितं देशं ब्रह्मावर्तं प्रचक्षते ॥

- மனு ஸ்ம்ருதி

சரஸ்வதி நதிக்கும், த்ருஷத்வதீ என்ற நதிக்கும் இடையில் உள்ள பிரதேசத்திற்கு "தேவ-நிர்மிதம்" என்றும் "ப்ரம்ம-வர்தம்" என்றும் பெயர்.  


तस्मिन् देशे य आचारः पारम्पर्यक्रमागतः ।

वर्णानां सान्तरालानां स सदाचार उच्यते ॥

- மனு ஸ்ம்ருதி

இந்த தேசத்தில் (மனு காலத்தில்), பரம்பரை பரம்பரையாக கலப்பு இல்லாமல் வாழ்ந்து வரும் நான்கு வர்ணத்தார்களின் (In Today's world, MP&MLAs are in Brahmin Varna, Defence people are in kshatriya Varna, Employers are in Vaisya Varna, Employees are in Sudra Varna) வாழ்க்கை முறையையே /ஆசாரத்தையே "தாசாரம்" (நல்ல ஆசாரம்) என்று சொல்கிறோம்.


कुरुक्षेत्रं च मत्स्याश्च पञ्चालाः शूरसेनकाः ।

एष ब्रह्मर्षि देशो वै ब्रह्मावर्तादनन्तरः ॥

- மனு ஸ்ம்ருதி

குருக்ஷேத்ரம்(UP), மத்ஸ்ய தேசம், பாஞ்சாலம் (punjab), சூரசேனகம் போன்ற தேசங்களுக்கு "ப்ரம்ம ரிஷி" தேசம் என்று பெயர்.


एतद् देश प्रसूतस्य सकाशादग्र जन्मनः ।

स्वं स्वं चरित्रं शिक्षेरन् पृथिव्यां सर्व मानवाः ॥

- மனு ஸ்ம்ருதி

இந்த தேசங்களில் பிறந்த பிராம்மண வர்ணத்தாரை (Today, MP&MLAs are in Brahmin Varna) பார்த்து, உலகத்தில் உள்ளவர்கள் எது எது ஆசாரம் (வாழ்க்கை முறை) என்று அறிந்து கொள்ளவேண்டும்.


हिमवद् विन्ध्ययो: मध्यं यत् प्राग् विनशनादपि ।

प्रत्यगेव प्रयागाच्च मध्यदेशः प्रकीर्तितः ॥

- மனு ஸ்ம்ருதி

வடக்கில் உள்ள இமய மலைக்கும், தெற்கே உள்ள விந்திய மலைக்கும் இடை பகுதியான, சரஸ்வதி நதி மறைந்த தேசத்துக்கும் ப்ரயாகைக்கும் இடை பகுதியான பிரதேசத்தை "மத்ய தேசம்" என்று பெயர்.


आ समुद्रात् तु वै पूर्वादा समुद्राच्च पश्चिमात् ।

तयोरेवान्तरं गिर्यो: आर्यावर्तं विदुर्बुधाः ॥

- மனு ஸ்ம்ருதி

கிழக்கு கடலுக்கும் (வங்காள), மேற்கு கடலுக்கும் இடையிலுள்ள பிரதேசத்தை "ஆர்யா-வர்தம்" என்று பெயர்.


பிறப்பால் அனைவருமே சூத்திரன் (In Today's world, All Employees are in Sudra Varna) தான். 

நாம் பிராம்மண வர்ணத்தையோ, க்ஷத்ரிய வர்ணத்தையோ, வைஸ்ய வர்ணத்தையோ அடையும் போது, "அந்த வர்ணத்தின் தர்மங்களை கடைபிடிக்க வேண்டும்" என்பதால், மற்ற மூன்று வர்ணத்தில் இருப்பவர்களை "இரு பிறப்பாளர்கள்" என்று அழைக்கிறோம்.


புரியும்படியாக சொல்ல வேண்டுமென்றால்,

ஒருவன் ஆபீசுக்கு வேலைக்கு சென்று, சம்பளம் வாங்கி வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தான். (சூத்திர வர்ணம்)

ஒருநாள், அவன் மந்திரியாகி விட்டான் (பிராம்மண வர்ணம்). 

மந்திரி ஆன பிறகு, அவனுக்கு கடமைகள் மாறுகின்றன.  

மந்திரிக்கு தேவையான தகுதியையும், அதன் கோட்பாடுகளையும்வாழ்க்கை முறையையும் கற்று, அதன் படி வாழ ஆரம்பிக்கிறான்.


சூத்திர வர்ணத்தில் இருந்து பிராம்மண வர்ணத்துக்கு வந்து அதன் படி வாழ்வதால், அப்போது அவனை "இரு பிறப்பாளன்" (த்விஜன்) என்று வேதம் அழைக்கிறது.


कृष्ण सारस्तु चरति मृगो यत्र स्वभावतः ।

स ज्ञेयो यज्ञियो देशो म्लेच्छ देशस्त्वतः परः ॥   

- மனு ஸ்ம்ருதி

கருப்பு கோடுகள் கொண்ட மான்கள் பிறந்து சஞ்சரிக்கும் பிரதேசமே "யாகங்கள்" செய்வதற்கு ஏற்ற இடம். சாதுவான இந்த மான்கள் சஞ்சரிக்காத இடங்கள் மிலேச்ச தேசமாக கருத வேண்டும். மிலேச்ச இடங்கள் யாகம் செய்ய தகுதி அற்றது.


एतान् द्विजातयो देशान् संश्रयेरन् प्रयत्नतः ।

शूद्रस्तु यस्मिन् कस्मिन् वा निवसेद् वृत्तिकर्शितः ॥

- மனு ஸ்ம்ருதி

பிராம்மண வர்ணத்தில் இருக்கும் (In Today's world, MP&MLAs are in Brahmin Varna), க்ஷத்ரிய வர்ணத்தில் இருக்கும் (In Today's world, Defence people are in kshatriya Varna), வைஸ்ய வர்ணத்தில் இருக்கும் (In Today's world, Employers are in Vaisya Varna) இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள், முயற்சி செய்து யாகம் செய்வதற்கு ஏற்ற மான்கள் சஞ்சரிக்கும் இந்த பிரதேசங்களில் வாழ வேண்டும். சூத்திர வர்ணத்தில் இருப்பவர்கள் (In Today's world, Employees are in Sudra Varna) வேலையில் இருப்பதால், தொழில் நிமித்தமாக எந்த தேசத்திலும் வசிக்கலாம்.


एषा धर्मस्य वो योनिः समासेन प्रकीर्तिता ।

सम्भव: च अस्य सर्वस्य वर्ण धर्मान् निबोधत ॥

- மனு ஸ்ம்ருதி

தர்ம சாஸ்திரம் (ஸ்ம்ருதி) எவ்வாறு தோன்றியது என்றும், இந்த உலகம் எவ்வாறு தோன்றியது என்றும் சொல்லப்பட்டது. இனி, ஒவ்வொரு வர்ணத்துக்கும் உள்ள தர்மங்களையும், ஆஸ்ரம தர்மங்களையும் சொல்கிறேன். கேளுங்கள் என்கிறார்.


वैदिकैः कर्मभिः पुण्यै: निषेकादि: द्विज जन्मनाम् ।

कार्यः शरीर संस्कारः पावनः प्रेत्य चैह च ॥

- மனு ஸ்ம்ருதி

பிராம்மண வர்ணத்தில் இருக்கும்க்ஷத்ரிய வர்ணத்தில் இருக்கும்வைஸ்ய வர்ணத்தில் இருக்கும் இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள், தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதிலிருந்தே வேத முறைப்படி (பும்ஸவனம் முதல்...) வைதீக காரியங்களை செய்ய வேண்டும். இப்படி செய்வதால், ஒருவன் மனத்தூய்மை அடைகிறார்கள். பரலோக வாழ்வுக்கு தேவையான புண்ணியத்தையும் அடைகிறார்கள்.


गार्भै: होमै: जातकर्म चौड मौञ्जी निबन्धनैः ।

बैजिकं गार्भिकं चैनं द्विजानाम् अमृज्यते ॥

- மனு ஸ்ம்ருதி

கர்ப்பத்தில் இருக்கும் போதே செய்ய வேண்டிய ஹோமங்கள் (பும்ஸவனம்) ஆரம்பித்து, பிறகு ஜாதகர்மா, சவுலம், மௌஞ்ஜீ-பந்தனம், உபநயனம் (பூணூல்) போன்ற சடங்குகள் செய்து கொள்ள வேண்டும். பெற்றோரால் ஏற்பட்ட பீஜ-தோஷம், கர்ப்பவாஸ தோஷம் போன்றவைகள், இதன் மூலம்  பிராம்மண வர்ணத்தாருக்கும், க்ஷத்ரிய வர்ணத்தாருக்கும், வைஸ்ய வர்ணத்தாருக்கும் நீங்கி விடுகிறது,


स्वाध्यायेन व्रतै: होमै: त्रैविध्ये  नेज्यया सुतैः ।

महायज्ञैश्च यज्ञैश्च ब्राह्मीयं क्रियते तनुः ॥

- மனு ஸ்ம்ருதி

வேத மந்திரங்களை (ஸ்ருதி) தானே சொல்லி சொல்லி அபிவிருத்தி செய்து கொண்டும், விரதம் போன்ற நியமங்களை (கட்டுப்பாடுகளை) அனுசரித்து கொண்டும், காலை மாலை ஒளபாஸனம், ஸமிதாதானம் போன்ற ஹோமங்களை செய்து கொண்டும், மூன்று வேதங்களில் நன்கு தேர்ச்சி பெறுவதில் முயற்சித்து கொண்டும், தனக்கு பிறகு இந்த தர்ம காரியங்க செய்ய பிள்ளைகளை பெற்று கொண்டும், தர்ப்பணம் மற்றும் மஹாயாகங்களாலும், மற்ற யாகங்கள் அனைத்தும் செய்தும் கொண்டும் வாழ்பவன் உடலானது, பிரம்மத்தை அடைவதற்கு ஏற்றதாகி விடுகிறது.


प्राङ् नाभि वर्धनात् पुंसो जातकर्म विधीयते ।

मन्त्रवत् प्राशनं चास्य हिरण्य मधु सर्पिषाम् ॥

- மனு ஸ்ம்ருதி

தொப்புள் கொடி அறுப்பதற்கு முன்பேயே ஜாதகர்மா என்னும் சடங்கு செய்ய வேண்டும். தங்கம், தேன், நெய் இவைகளை வேதமந்திரங்கள் சொல்லி நாவில் தடவ வேண்டும்.


தொப்புள் கொடி அறுப்பதற்கு முன் தீட்டு இல்லை. அறுத்த பிறகு, 10 நாட்கள் தீட்டு ஏற்படுகிறது. ஆதலால், மனு தொப்புள் கொடி அறுப்பதற்கு முன், தகப்பன் நடு இரவாக இருந்தாலும் குழந்தை பிறந்த உடனேயே குளித்து, நாந்தி ஸ்ரார்த்தமும், தானமும் உடனே செய்ய வேண்டும் என்கிறார். 

இன்றைய காலத்தில் ஆஸ்பத்திரியில் குழந்தை பிறப்பதால், தொப்புள் கொடி அறுத்த பிறகு தான் குழந்தையை கொடுப்பதால், 10 நாட்கள் கழித்து, இதே ஜாதகர்ம காரியங்களை, பெயர் வைப்பதோடு சேர்த்து தகப்பன் செய்கிறான்

 

नामधेयं दशम्यां तु द्वादश्यां वाऽस्य कारयेत् ।

पुण्ये तिथौ मुहूर्ते वा नक्षत्रे वा गुणान्विते ॥

- மனு ஸ்ம்ருதி

10வது நாளுக்கு பிறகு, 11வது அல்லது 12ஆம் நாளில் அல்லது ஏதாவது ஒரு நல்ல நாளில், நல்ல முகூர்த்தத்தில், நல்ல நக்ஷத்திரத்தில், பிராம்மண வர்ணத்தில் இருப்பவனுக்கு, க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவனுக்கு, வைஸ்ய வர்ணத்தில் இருப்பவனுக்கு பிறந்த அவரவர் பிள்ளைக்கு, பெயர் (நாமகரணம்) வைக்க வேண்டும். 


मङ्गल्यं ब्राह्मणस्य स्यात् क्षत्रियस्य बलान्वितम् ।

वैश्यस्य धनसंयुक्तं शूद्रस्य तु जुगुप्सितम् ॥

- மனு ஸ்ம்ருதி

பிராம்மண வர்ணத்தில் உள்ளவன், தனக்கு பிறக்கும் குழந்தைக்கு மங்களமான பெயர்களை வைக்க வேண்டும். 

க்ஷத்ரிய வர்ணத்தில் உள்ளவன், தனக்கு பிறக்கும் குழந்தைக்கு பலத்துக்கு சம்பந்தமான பெயர்களை வைக்க வேண்டும். 

வைஸ்ய வர்ணத்தில் உள்ளவன், தனக்கு பிறக்கும் குழந்தைக்கு செல்வம் சம்பந்தமான பெயர்களை வைக்க வேண்டும். 

சூத்திர வர்ணத்தில் உள்ளவன், தனக்கு பிறக்கும் குழந்தைக்கு தாஸ குணத்தை (நன்றியுணர்வு) காட்டும் (மோகன்தாஸ், சூர தாஸ்) பெயர்களை வைக்க வேண்டும்.


शर्मवद् ब्राह्मणस्य स्याद् राज्ञो रक्षा समन्वितम् ।

वैश्यस्य पुष्टि संयुक्तं शूद्रस्य प्रेष्यसंयुतम् ॥

- மனு ஸ்ம்ருதி

பிராம்மண வர்ணத்தில் இருப்பவன் தன் பிள்ளைக்கு சர்மா (ரோஹித் சர்மா) என்ற பதம் கூடியதாக பெயர் வைக்க வேண்டும்.

க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவன் தன் பிள்ளைக்கு காப்பதற்கு சம்பந்தமான (வீர, விக்ரம, ராஜ, வர்மன்) பெயரை சேர்த்து கொள்ள வேண்டும்.

வைசிய வர்ணத்தில் இருப்பவன், தன் பிள்ளைக்கு செல்வத்தோடு கூடியதாக (குப்தா, பால) பெயரை வைக்க வேண்டும்.

சூத்திர வர்ணத்தில் இருப்பவன், தன் பிள்ளைக்கு தாஸ என்ற பதத்தோடு பெயர் வைத்து கொள்ள வேண்டும்.


स्त्रीणां सुखौद्यम् अक्रूरं विस्पष्टार्थं मनोहरम् ।

मङ्गल्यं दीर्घवर्णान्तम् आशीर्वाद अभिधानवत् ॥

- மனு ஸ்ம்ருதி

பெண் குழந்தைக்கு, சுகமாக அழைக்கும் படியாகவும், கெட்ட அர்த்தம் இல்லாதபடியாகவும், அர்த்தமில்லாத பெயராக இல்லாமலும், மனதுக்கு ஆனந்தம் கொடுக்கும் படியாகவும், மங்களமான சொல்லாகவும், பெயரின் கடைசி அக்ஷரம் நீட்டி தீர்க்கமாக முடியும்படியாகவும் (ரமா, கீதா, உமா, தேவீ, சீதா, ராதா, ருக்மிணீ), ஆசிகள் வழங்க கூடிய பெயராகவும் இருக்க வேண்டும். 

(மனு ஸ்ம்ருதியை ஏற்க மறுப்பவர்கள், இதற்கு எதிர்மறையாக தங்கள் பெண் குழந்தைகளுக்கு "சொறி, சிரங்கு…" என்று பெயர் வைத்து கொள்ளலாமே ?)


चतुर्थे मासि कर्तव्यं शिशोर्निष्क्रमणं गृहात् ।

षष्ठे अन्नप्राशनं मासि यद् वैष्टं मङ्गलं कुले ॥

- மனு ஸ்ம்ருதி

4வது மாதத்தில் குழந்தையை வீட்டிலிருந்து வெளியே கொண்டு வந்து, சூரியனை தரிசிக்க வைக்க வேண்டும்.

6வது மாதம் அல்லது அவரவர் குல வழக்கப்படி விக்னேஸ்வர பூஜை செய்து, புண்யாஹவாச ஜாலத்தால் குழந்தையையும், அன்னத்தையும் தெளித்து சுத்தமாக்கி, 9 இழைகள் கொண்ட கங்கணம் கையில் கட்டிவிட்டு (பிரதிசரம்), சடங்குகளை நல்ல சுப-தினத்தில் அன்ன ப்ராஸனம் (அன்னத்தோடு தேன், நெய், தயிர் கலந்து) ஊட்ட வேண்டும்


चूडाकर्म द्विज जातीनां सर्वेषामेव धर्मतः ।

प्रथमेऽब्दे तृतीये वा कर्तव्यं श्रुतिचोदनात् ॥

- மனு ஸ்ம்ருதி

"சூடா-கர்மா" என்ற குடுமி வைக்கும் சடங்கை இரு பிறப்பாளர்களான (பிராம்மண வர்ணத்தில் இருப்பவர்கள், வைஸ்ய வர்ணத்தில் இருப்பவர்கள், க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவர்கள்) மூன்று வர்ணத்தாரும் முதல் ஆண்டோ, அல்லது 3ஆம் ஆண்டிலோ செய்ய வேண்டும் அல்லது அவரவர் வழக்கப்படி செய்து கொள்ள வேண்டும்.

गर्भा अष्टमे अब्दे कुर्वीत

ब्राह्मणस्य उपनायनम् ।

गर्भादे् एकादशे राज्ञो 

गर्भात् तु द्वादशे विशः ॥

- மனு ஸ்ம்ருதி

பிராம்மண வர்ணத்தில் (MLA/MP) இருப்பவர்கள் 8வது வயதிலும், க்ஷத்ரிய வர்ணத்தில் (defence) இருப்பவர்கள் 11வது வயதிலும், வைஸ்ய வர்ணத்தில் (businessman) இருப்பவர்கள் 12வது வயதிலும், உபநயனம் /பூணூல் அணிந்து கொள்ள வேண்டும்.


ब्रह्मवर्चस कामस्य 

कार्यो विप्रस्य पञ्चमे ।

राज्ञो बलार्थिनः षष्ठे 

वैश्यस्यैहार्थिनो अष्टमे ॥

- மனு ஸ்ம்ருதி

ப்ரம்ம தேஜஸ் விரும்பினால், பிராம்மண வர்ணத்தில் இருக்கும் வேதியன் என்ற விப்ரன் 5வது வயதிலும், பலத்தை விரும்பும்  க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவர்கள் 6வது வயதிலும், வியாபாரத்தை விரும்பினால், வைஸ்ய வர்ணத்தில் இருப்பவர்கள் 8வது வயதிலும் உபநயனம் (பூணூல்) செய்து கொள்ள வேண்டும். 


आ षोदशाद् ब्राह्मणस्य 

सावित्री नातिवर्तते ।

आ द्वाविंशात् क्षत्रबन्धोरा 

चतुर्विंशतेः विशः ॥

- மனு ஸ்ம்ருதி

பிராம்மண வர்ணத்தில் இருப்பவர்கள் தன்  பிள்ளைக்கு 16வது வயதுக்குள்ளாவது, க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவர்கள் தன்  பிள்ளைக்கு  22வது வயதுக்குள்ளாவது, வைஸ்ய வர்ணத்தில் இருப்பவர்கள் தன்  பிள்ளைக்கு 24வது வயதுக்குள்ளாவது, உபநயனம் (பூணூல்) செய்து விட வேண்டும். அதுவரை தான் காயத்ரீ மந்திரம் இவனிடத்தில் அழியாமல் இருக்கும்.


अत ऊर्ध्वं त्रयो अप्येते यथाकालम् अस्कृताः ।

सावित्री पतिता व्रात्या भवन्ति आर्यविगर्हिताः ॥ 

- மனு ஸ்ம்ருதி

இந்த வயதையும் தாண்டியவர்கள், காயத்ரீ உபதேசம் பெறும் தகுதியை இழக்கிறார்கள். சான்றோர்கள் இப்படி செய்யும் உபநயனத்தை திகழ்வார்கள். சான்றோர்கள் இவர்களை வைதீக காரியங்களுக்கு சேர்த்து கொள்ள மாட்டார்கள்.


नैतैरपूतैः विधिवदापद्यपि हि कर्हि चित् ।

ब्राह्मान् यौनांश्च सम्बन्धान्नाचरेद् ब्राह्मणः सह ॥

- மனு ஸ்ம்ருதி

தூய்மை இழந்த இவர்கள், பிராயச்சித்தம் செய்து கொள்ளாமல் இருந்தால், அவர்களை யாகத்துக்கு அழைக்க கூடாது. அவனுக்கு பெண் கொடுக்க கூடாது. அவனிடம் பிராம்மண வர்ணத்தில் சரியான காலத்தில் உபநயனம் செய்து கொண்டவர்கள் பழக கூடாது.


कार्ष्णरौरवबास्तानि चर्माणि ब्रह्मचारिणः ।

वसीरन्नानुपूर्व्येण शाणक्षौमाविकानि च ॥

- மனு ஸ்ம்ருதி

பிரம்மச்சாரியாக பிராம்மண வர்ணத்தில் இருப்பவன், மான் தோலால் ஆன மேலாடையாக அணிய வேண்டும். 

பிரம்மச்சாரியாக க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவன், ருரு என்ற ஜாதி மான் தோலால் ஆன மேலாடையாக அணிய வேண்டும். 

பிரம்மச்சாரியாக வைஸ்ய வர்ணத்தில் இருப்பவன், ஆட்டு தோலால் ஆன மேலாடையாக அணிய வேண்டும்.

பிரம்மச்சாரியாக பிராம்மண வர்ணத்தில் இருப்பவன், நார் கொண்டு செய்யப்பட்ட ஆடையை அரையாடையாக அணிய வேண்டும். 

பிரம்மச்சாரியாக க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவன், பட்டினால் செய்யப்பட்ட ஆடையை அரையாடையாக அணிய வேண்டும். 

பிரம்மச்சாரியாக வைஸ்ய வர்ணத்தில் இருப்பவன், சணல் செய்யப்பட்ட ஆடையை அரையாடையாக அணிய வேண்டும்.


मौञ्जी त्रिवृत् समा श्लक्ष्णा कार्या विप्रस्य मेखला ।

क्षत्रियस्य तु मौर्वी ज्या वैश्यस्य शणतान्तवी ॥

- மனு ஸ்ம்ருதி

பிரம்மச்சாரியாக பிராம்மண வர்ணத்தில் இருக்கும் வேதியன் என்ற விப்ரன்,  வழுவழுப்பான 3 இழைகள் கொண்ட முஞ்சி புல்லால் திரிக்கப்பட்ட அரை ஞாணை அணிய வேண்டும்.

பிரம்மச்சாரியாக க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவன்,  வழுவழுப்பான 3 இழைகள் கொண்ட மூர்வா புல்லால் திரிக்கப்பட்ட அரை ஞாணை அணிய வேண்டும்.

பிரம்மச்சாரியாக வைஸ்ய வர்ணத்தில் இருப்பவன்,  வழுவழுப்பான 3 இழைகள் கொண்ட சணல் கொண்டு திரிக்கப்பட்ட அரை ஞாணை அணிய வேண்டும்.


मौञ्जी त्रिवृत् समा श्लक्ष्णा कार्या विप्रस्य मेखला ।

क्षत्रियस्य तु मौर्वी ज्या वैश्यस्य शणतान्तवी ॥

- மனு ஸ்ம்ருதி

பிரம்மச்சாரியாக பிராம்மண வர்ணத்தில் இருக்கும் வேதியன் என்ற விப்ரன்,  வழுவழுப்பான 3 இழைகள் கொண்ட முஞ்சி புல்லால் திரிக்கப்பட்ட அரை ஞாணை அணிய வேண்டும்.

பிரம்மச்சாரியாக க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவன்,  வழுவழுப்பான 3 இழைகள் கொண்ட மூர்வா புல்லால் திரிக்கப்பட்ட அரை ஞாணை அணிய வேண்டும்.

பிரம்மச்சாரியாக வைஸ்ய வர்ணத்தில் இருப்பவன்,  வழுவழுப்பான 3 இழைகள் கொண்ட சணல் கொண்டு திரிக்கப்பட்ட அரை ஞாணை அணிய வேண்டும்.


मुञ्जालाभे तु कर्तव्याः कुशाश्मन्तकबल्वजैः ।

त्रिवृता ग्रन्थिनैकेन त्रिभिः पञ्चभिरेव वा ॥

- மனு ஸ்ம்ருதி

முஞ்சிபுல் போன்ற மேற் சொன்னவை கிடைக்காத போது, தர்ப்பை, நாணல், கோரை போன்றவற்றை மூன்றாக திரித்து, அதை 1 முடிச்சாக போட்டு பிரம்மச்சாரியாக பிராம்மண வர்ணத்தில் இருக்கும் வேதியன் என்ற விப்ரன், 3 முடிச்சாக போட்டு பிரம்மச்சாரியாக க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவனும், 5 முடிச்சாக போட்டு பிரம்மச்சாரியாக வைஸ்ய வர்ணத்தில் இருப்பவனும், அரைஞாணாக அணிய வேண்டும். 

कार्पासमुपवीतं स्याद् विप्रस्यौर्ध्ववृतं त्रिवृत् ।

शणसूत्रमयं राज्ञो वैश्यस्याविकसौत्रिकम् ॥

- மனு ஸ்ம்ருதி

வலதுபுறமாக மூன்று முறை சுற்றப்பட்ட பூணூலை, 

பிராம்மண வர்ணத்தில் இருக்கும் வேதியன் என்ற விப்ரன், பஞ்சினால் செய்தும், 

க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவன் சணலால் செய்தும், 

வைஸ்ய வர்ணத்தில் இருப்பவன் வெள்ளாட்டு முடியினால் செய்தும், அணிந்து கொள்ள வேண்டும்.


ब्राह्मणो बैल्वपालाशौ क्षत्रियो वाटखादिरौ ।

पैलवौदुम्बरौ वैश्यो दण्डानर्हन्ति धर्मतः ॥

- மனு ஸ்ம்ருதி

பிரம்மச்சாரியாக பிராம்மண வர்ணத்தில் இருப்பவன் வில்வம் அல்லது புரச (பலாஸ) மரத்தின் குச்சியை, தனக்கு தண்டமாக வைத்து கொள்ள வேண்டும்

பிரம்மச்சாரியாக க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவன் ஆல் அல்லது கருங்காலி மரத்தின் குச்சியை, தனக்கு தண்டமாக வைத்து கொள்ள வேண்டும்

பிரம்மச்சாரியாக வைஸ்ய வர்ணத்தில் இருப்பவன் அத்தி அல்லது பைலம் மரத்தின் குச்சியை, தனக்கு தண்டமாக வைத்து கொள்ள வேண்டும்


केशान्तिको ब्राह्मणस्य दण्डः कार्यः प्रमाणतः ।

ललाटसम्मितो राज्ञः स्यात् तु नासान्तिको विशः ॥

- மனு ஸ்ம்ருதி

பிரம்மச்சாரியாக பிராம்மண வர்ணத்தில் இருப்பவன், தண்டம் அவனுடைய தலை உச்சி வரை உயரமுடியதாக இருக்க வேண்டும்.

பிரம்மச்சாரியாக க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவன், தண்டம் அவனுடைய நெற்றி வரை உயரமுடியதாக இருக்க வேண்டும்.

பிரம்மச்சாரியாக வைஸ்ய வர்ணத்தில் இருப்பவன், தண்டம் அவனுடைய மூக்கு வரை உயரமுடியதாக இருக்க வேண்டும்.


ऋजवस्ते तु सर्वे स्युरव्रणाः सौम्यदर्शनाः ।

अनुद्वेगकरा नॄणां सत्वचोऽनग्निदूषिताः ॥ 

- மனு ஸ்ம்ருதி

இவர்கள் தரித்திருக்கும் தண்டம் கோணலாக இருக்க கூடாது. வெட்டுப்பட்ட வடுக்கள் இல்லாமல், பார்க்க அழகாக இருக்க வேண்டும். பார்ப்பவர்களுக்கு அச்சம் தர கூடியதாக இருக்க கூடாது. மேல் பட்டையோடு இருக்க வேண்டும். நெருப்பு பட்டு இருக்க கூடாது.

 

प्रतिगृह्येप्सितं दण्डमुपस्थाय च भास्करम् ।

प्रदक्षिणं परीत्याग्निं चरेद् भैक्षं यथाविधि ॥

- மனு ஸ்ம்ருதி

தினமும் ப்ரம்மச்சாரிகளாக இருக்கும் இந்த த்விஜர்கள் தண்டத்தை ஏந்தி கொண்டு, சூரிய நமஸ்காரம் செய்து, அக்னியை வலம் வந்து, பிறகு முறைப்படி பிக்ஷை ஏற்க செல்ல வேண்டும்.


भवत्पूर्वं चरेद् भैक्षमुपनीतो द्विजोत्तमः ।

भवन्मध्यं तु राजन्यो वैश्यस्तु भवदुत्तरम् ॥

- மனு ஸ்ம்ருதி

பிரம்மச்சாரியாக பிராம்மண வர்ணத்தில் இருப்பவன், "பவதி பிக்ஷாம் தேஹி" என்று கூறி பிக்ஷை கேட்க வேண்டும்.

பிரம்மச்சாரியாக க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவன், "பிக்ஷாம் பவதி தேஹி" என்று கூறி பிக்ஷை கேட்க வேண்டும்.

பிரம்மச்சாரியாக வைஸ்ய வர்ணத்தில் இருப்பவன், "பிக்ஷாம் தேஹி பவதி" என்று கூறி பிக்ஷை கேட்க வேண்டும்.


मातरं वा स्वसारं वा मातुर्वा भगिनीं निजाम् ।

भिक्षेत भिक्षां प्रथमं या चैनं नावमानयेत् ॥

- மனு ஸ்ம்ருதி

முதலில் தன் தாயிடமோ, தனது சகோதரியிடமோ அல்லது தன் தாயின் சகோதரியிடமோ அல்லது யார் இவனை அவமானம் செய்ய மாட்டார்களோ அந்த பெண்ணிடம் பிக்ஷை ஏற்க வேண்டும்.


समाहृत्य तु तद् भैक्षं यावदन्नममायया ।

निवेद्य गुरवेऽश्नीयादाचम्य प्राङ्मुखः शुचिः ॥

- மனு ஸ்ம்ருதி

இப்படி கிடைத்த பிக்ஷை அரிசியை குருவிடம் கொடுத்து, அவரது அனுமதியை பெற்றுக்கொண்டு, அவர் கொடுத்த மிகுதி அன்னத்தை, ஆசமனம் செய்து விட்டு, கிழக்கு நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.

आयुष्यं प्राङ्मुखो भुङ्क्ते यशस्यं दक्षिणामुखः ।

श्रियं प्रत्यङ्मुखो भुङ्क्ते ऋतं भुङ्क्ते ह्युदङ्मुखः ॥

- மனு ஸ்ம்ருதி

தீர்க்கமான ஆயுள் வேண்டும் என்று ஆசைப்படும் பிரம்மச்சாரி, கிழக்கு நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும். 

புகழோடு வாழ வேண்டும் என்று  ஆசைப்படும் பிரம்மச்சாரி, தெற்கு நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.

செல்வத்தோடு வாழ வேண்டும் என்று  ஆசைப்படும் பிரம்மச்சாரி, மேற்கு நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.

மனதால் கூட பொய் பேச கூடாது என்று  ஆசைப்படும் பிரம்மச்சாரி, வடக்கு நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.


उपस्पृश्य द्विजो नित्यमन्नमद्यात् समाहितः ।

भुक्त्वा चौपस्पृशेत् सम्यगद्भिः खानि च संस्पृशेत् ॥

- மனு ஸ்ம்ருதி

ஆசமனம் செய்த பிறகு கிழக்கு பார்த்து அமர்ந்து, வேறு நினைவின்றி உண்ண வேண்டும். உண்ட பிறகு, கை கால்களை அலம்பி கொள்ள வேண்டும். முறைப்படி ஆசமனம் செய்து, ஜலத்தால் இந்திரியங்களை துடைத்து கொள்ள வேண்டும்.

पूजयेदशनं नित्यम् 

अद्याच्चैतदकुत्सयन् ।

दृष्ट्वा हृष्येत् प्रसीदेच्च 

प्रतिनन्देच्च सर्वशः ॥

- மனு ஸ்ம்ருதி

சாப்பிட போகும் உணவை பூஜிக்க வேண்டும். அன்னத்தை திட்டாமல் சாப்பிட வேண்டும். மனதில் உள்ள கலக்கங்கள் அனைத்தையும் விட்டு விட்டு, வேறு நினைவின்றி சாப்பிட அமர வேண்டும். வேறு நினைவின்றி சாப்பிட வேண்டும். "இந்த அன்னம் எனக்கு எப்போதும் கிடைக்க வேண்டும்" என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.


पूजितं ह्यशनं नित्यं 

बलमूर्जं च यच्छति ।

अपूजितं तु तद् भुक्तम् 

उभयं नाशयेद् इदम् ॥

- மனு ஸ்ம்ருதி

இவ்வாறு பூஜிக்கப்பட்ட உணவு, சாப்பிடுபவனுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும். மாறாக வேறு சிந்தனைகளோடும், நிந்திக்கப்பட்ட உணவு, சாப்பிடுபவனின் பலத்தையும், வீரியத்தையும் அழிக்கும்.

नौच्छिष्टं कस्य चिद् दद्यान्नाद्यादेतत् तथाऽन्तरा ।

न चैवात्यशनं कुर्यान्न चौच्छिष्टः क्व चिद् व्रजेत् ॥

- மனு ஸ்ம்ருதி

எச்சில் பட்ட உணவை யாருக்கும் கொடுக்க கூடாது. மத்யானமும், இரவும் உணவு உண்ண வேண்டும். அதை தவிர நடுநடுவே சாப்பிட கூடாது. மத்யானமும், இரவும் கூட அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. எச்சில் கையோடு அலைய கூடாது.


अनारोग्यम् अनायुष्यम् 

अस्वर्ग्यं च अतिभोजनम् ।

अपुण्यं लोकविद्विष्टं 

तस्मात् तत् परिवर्जयेत् ॥

- மனு ஸ்ம்ருதி

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு கேடு. அதனால் ஆயுள் குறையும். புண்ணியமான  மேல் லோகங்களுக்கு இந்த ஆத்மா செல்ல எதிரியாக இது இருக்கும். அதுபோல, நற்காரியங்கள் செய்யவும் இது தடை செய்யும். மேலும், உலகத்தார் தூற்றுதலையும் இது உண்டாக்கும். எனவே அதிக உணவு கூடாது.


ब्राह्मेण विप्रस्तीर्थेन नित्यकालमुपस्पृशेत् ।

कायत्रैदशिकाभ्यां वा न पित्र्येण कदा चन ॥

- மனு ஸ்ம்ருதி

பிராம்மண வர்ணத்தில் இருப்பவன், ப்ரம்ம தீர்த்தத்தால், ரிஷி தீர்த்தத்தால், தேவ தீர்த்தத்தால் ஆசமனம் செய்து கொள்ளலாம். ஆனால், பித்ருவுக்கு விட்ட தீர்த்தத்தால் ஆசமனம் செய்ய கூடாது.


अङ्गुष्ठ मूलस्य तले ब्राह्मं तीर्थं प्रचक्षते ।

कायमङ्गुलिमूलेऽग्रे देवं पित्र्यं तयोरधः ॥

- மனு ஸ்ம்ருதி

பெருவிரலின் (கட்டைவிரலின்) அடி பாகத்தில் ப்ரம்ம தீர்த்தம் உள்ளதாகவும், சுண்டு விரலின் அடி பாகத்தில் ப்ரஜாபதி(காய) தீர்த்தம் உள்ளதாகவும், விரல் நுனிகளில் தேவ தீர்த்தம் உள்ளதாகவும், கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்கும் (ஆள் காட்டி விரல்) இடையே பித்ரு தீர்த்தம் உள்ளதாக கூறப்படுகிறது.


त्रिराचामेदपः पूर्वं द्विः प्रमृज्यात् ततो मुखम् ।

खानि चैव स्पृशेदद्भिरात्मानं शिर एव च ॥

- மனு ஸ்ம்ருதி

முதலில் 3 முறை ஆசமனம் செய்ய வேண்டும். உதடுகளை மூடிக்கொண்டு நீரினால் இரண்டு முறை வாயை துடைத்து கொள்ள வேண்டும். பிறகு ஜலத்தால் கண், காது, மூக்கு மேலும் மார்பை, தலையை துடைத்து கொள்ள வேண்டும்.


अनुष्णाभिरफेनाभिरद्भिस्तीर्थेन धर्मवित् ।

शौचेप्सुः सर्वदाऽचामेदेकान्ते प्रागुदङ्मुखः ॥

- மனு ஸ்ம்ருதி

தூய்மையை விரும்பும், தர்மமறிந்தவன், யாரும் இல்லாத இடத்தில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து, காய்ச்சாத, நுரை இல்லாத நீரினால் ஆசமனம் செய்ய வேண்டும்.


हृद्गाभिः पूयते विप्रः 

कण्ठगाभिस्तु भूमिपः ।

वैश्योऽद्भिः प्राशिताभिस्तु 

शूद्रः स्पृष्टाभिरन्ततः ॥

- மனு ஸ்ம்ருதி

இப்படி ஆசமனம் செய்யும்போது,

பிராம்மண வர்ணத்தில் இருப்பவன், ஜலம் இதயத்துக்கு செல்லும் அளவுக்கு ஜலத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவன், கழுத்துக்கு செல்லும் அளவுக்கு ஜலத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

வைஸ்ய வர்ணத்தில் இருப்பவன், வாய்க்குள் போகும் அளவுக்கு ஜலத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

சூத்திர வர்ணத்தில் இருப்பவன், ஜலத்தை தொடுவதே போதுமானது.

இப்படி செய்யும் போது, அவரவர்கள் பரிசுத்தமாகிறார்கள்.


उद्धृते दक्षिणे पाणावुपवीत्यौच्यते द्विजः ।

सव्ये प्राचीनावीती निवीती कण्ठसज्जने ॥

- மனு ஸ்ம்ருதி

பூணூலானது வலது தோளின் மீது இருக்கும் போது "உபவீதம்" என்று பெயர். இடது தோளின் மீது போட்டு கொண்டிருக்கும் போது "ப்ராசீனாவீதீ" என்று பெயர். கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டால், "நிவீதி" என்று பெயர்.


मेखलामजिनं दण्डमुपवीतं कमण्डलुम् ।

अप्सु प्रास्य विनष्टानि गृह्णीतान्यानि मन्त्रवत् ॥

- மனு ஸ்ம்ருதி

அரைஞாண் (மேகலை), மான் தோல், கமண்டலம் ஒரு வேளை நஷ்டமானால் (கிழிந்து போனால்/உடைந்து போனால்), தண்ணீரில் போட்டு விட்டு, புதியதை மந்திர பூர்வமாக ஏற்க வேண்டும்.


अङ्गुष्ठ मूलस्य तले ब्राह्मं तीर्थं प्रचक्षते ।

कायमङ्गुलिमूलेऽग्रे देवं पित्र्यं तयोरधः ॥

- மனு ஸ்ம்ருதி

பெருவிரலின் (கட்டைவிரலின்) அடி பாகத்தில் ப்ரம்ம தீர்த்தம் உள்ளதாகவும், சுண்டு விரலின் அடி பாகத்தில் ப்ரஜாபதி(காய) தீர்த்தம் உள்ளதாகவும், விரல் நுனிகளில் தேவ தீர்த்தம் உள்ளதாகவும், கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்கும் (ஆள் காட்டி விரல்) இடையே பித்ரு தீர்த்தம் உள்ளதாக கூறப்படுகிறது.


त्रिराचामेदपः पूर्वं द्विः प्रमृज्यात् ततो मुखम् ।

खानि चैव स्पृशेदद्भिरात्मानं शिर एव च ॥

- மனு ஸ்ம்ருதி

முதலில் 3 முறை ஆசமனம் செய்ய வேண்டும். உதடுகளை மூடிக்கொண்டு நீரினால் இரண்டு முறை வாயை துடைத்து கொள்ள வேண்டும். பிறகு ஜாலத்தால் கண், காது, மூக்கு மேலும் மார்பை, தலையை துடைத்து கொள்ள வேண்டும்.


अनुष्णाभिरफेनाभिरद्भिस्तीर्थेन धर्मवित् ।

शौचेप्सुः सर्वदाऽचामेदेकान्ते प्रागुदङ्मुखः ॥

- மனு ஸ்ம்ருதி

தூய்மையை விரும்பும், தர்மமறிந்தவன், யாரும் இல்லாத இடத்தில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து, காய்ச்சாத, நுரை இல்லாத நீரினால் ஆசமனம் செய்ய வேண்டும்.


हृद्गाभिः पूयते विप्रः कण्ठगाभिस्तु भूमिपः ।

वैश्योऽद्भिः प्राशिताभिस्तु शूद्रः स्पृष्टाभिरन्ततः ॥

- மனு ஸ்ம்ருதி

இப்படி ஆசமனம் செய்யும்போது,

பிராம்மண வர்ணத்தில் இருப்பவன், ஜலம் இதயத்துக்கு செல்லும் அளவுக்கு ஜலத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவன், கழுத்துக்கு செல்லும் அளவுக்கு ஜலத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

வைஸ்ய வர்ணத்தில் இருப்பவன், வாய்க்குள் போகும் அளவுக்கு ஜலத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

சூத்திர வர்ணத்தில் இருப்பவன், ஜலத்தை தொடுவதே போதுமானது.

இப்படி செய்யும் போது, அவரவர்கள் பரிசுத்தமாகிறார்கள்.


उद्धृते दक्षिणे पाणावुपवीत्यौच्यते द्विजः ।

सव्ये प्राचीनावीती निवीती कण्ठसज्जने ॥

- மனு ஸ்ம்ருதி

பூணூலானது வலது தோளின் மீது இருக்கும் போது "உபவீதம்" என்று பெயர். இடது தோளின் மீது போட்டு கொண்டிருக்கும் போது "ப்ராசீனாவீதீ" என்று பெயர். கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டால், "நிவீதி" என்று பெயர்.


मेखलामजिनं दण्डमुपवीतं कमण्डलुम् ।

अप्सु प्रास्य विनष्टानि गृह्णीतान्यानि मन्त्रवत् ॥

- மனு ஸ்ம்ருதி

அரைஞாண் (மேகலை), மான் தோல், கமண்டலம் ஒரு வேளை நஷ்டமானால் (கிழிந்து போனால்/உடைந்து போனால்), தண்ணீரில் போட்டு விட்டு, புதியதை மந்திர பூர்வமாக ஏற்க வேண்டும்.

केशान्तः षोडशे वर्षे 

ब्राह्मणस्य विधीयते ।

राजन्यबन्धोर्द्वाविंशे 

वैश्यस्य द्व्यधिके मतः ॥

- மனு ஸ்ம்ருதி

துளி குடுமி கூட வைத்து கொள்ளாமல் முழுமொட்டை போடுவதை பிராம்மண வர்ணத்தில் இருப்பவன், கர்ப்ப காலம் தொடங்கி 16 வயது வரை செய்து கொள்ளலாம்.

க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவன், கர்ப்ப காலம் தொடங்கி 22 வயது வரை செய்து கொள்ளலாம்.

வைஸ்ய வர்ணத்தில் இருப்பவன், கர்ப்ப காலம் தொடங்கி 24 வயது வரை செய்து கொள்ளலாம்.


अमन्त्रिका तु कार्यैयं  

स्त्रीणाम् आवृदशेषतः ।

संस्कारार्थं शरीरस्य 

यथा-कालं यथा-क्रमम् ॥

- மனு ஸ்ம்ருதி

உடல் சுத்திக்காக பெண்களுக்கு குறிப்பிட்ட காலங்களில் சாஸ்திர முறைப்படி எல்லா காரியங்களும் செய்ய வேண்டும். வேத மந்திரங்கள் தேவையில்லை, சாஸ்திர முறைப்படி செய்தாலே போதுமானது.

वैवाहिको विधिः स्त्रीणां  

संस्कारो वैदिकः स्मृतः ।

पतिसेवा गुरौ वासो 

गृहार्थः अग्निपरिक्रिया ॥

- மனு ஸ்ம்ருதி

எப்படி ஆண் உபநயனம் ஆன பிறகு, தன் குருவுடன் வசித்து, அவருக்கே சேவை செய்கிறானோ, அது போல, பெண் விவாகம் ஆன பிறகு, தன் கணவனுக்கு சேவை செய்கிறாள். ஒரு ஆண் தினமும் அக்னி ஹோத்ரம் செய்வதற்கு இது ஈடாகும்.


एष प्रोक्तो द्वि-जातीनाम् उपनायनिको विधिः ।

उत्पत्ति व्यञ्जकः पुण्यः कर्मयोगं निबोधत ॥

- மனு ஸ்ம்ருதி

இரு பிறப்பாளர்கள் (பிராம்மணன், வைசியன், க்ஷத்ரியன்) உபநயனம் எப்படி அவரவர்கள் செய்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. இனி இவர்கள் கடைபிடிக்க வேண்டிய தர்மங்கள் (விதிமுறைகள்) என்ன என்று பார்க்கலாம்.


उपनीयं गुरुः शिष्यं शिक्षयेत्शौचमादितः ।

चारमग्निकार्यं च सन्ध्यौपासनमेव च ॥

- மனு ஸ்ம்ருதி

பூணூல் அணிந்து உபநயனம் ஆன பிறகு, குரு, 'ஆசாரம்' என்றால் என்ன? காலை மாலை அக்னி ஹோத்ரம், சாந்தியோபாஸனம் (சந்தியா வந்தனம்) முதலியவற்றை கற்று கொடுக்க வேண்டும்


अध्येष्यमाणस्त्वाचान्तो यथाशास्त्रमुदङ्मुखः ।

ब्रह्माञ्जलिकृतोऽध्याप्यो लघुवासा जितैन्द्रियः ॥

- மனு ஸ்ம்ருதி

வேத அத்யயனம் (வேத படிப்பு) ஆரம்பிக்க போகும் சிஷ்யன் நல்ல சுத்தமான ஆடை அணிந்து கொண்டு, ஆசமனம் செய்து விட்டு, புலன்களை அடக்கியவனாக குருவுக்கு ப்ரம்மாஞ்சலி செய்து நிற்க வேண்டும். குரு அந்த சிஷ்யனை உட்கார வைத்து அவனுக்கு வேத அத்யயனம் சொல்லி வைக்க வேண்டும்.


ब्रह्मारम्भेऽवसाने च पादौ ग्राह्यौ गुरोः सदा ।

संहत्य हस्तावध्येयं स हि ब्रह्माञ्जलिः स्मृतः ॥

- மனு ஸ்ம்ருதி

வேத அத்யயனம்  ஆரம்பிக்கும் போதும், முடித்த பிறகும், தவறாமல், குருவின் பாதத்தை பற்றி கொண்டு வணங்க வேண்டும். கைகளை கட்டி கொண்டு படிக்க வேண்டும். இது ப்ரம்மாஞ்சலி எனப்படும்.


व्यत्यस्तपाणिना कार्यमुपसङ्ग्रहणं गुरोः ।

सव्येन सव्यः स्प्रष्टव्यो दक्षिणेन च दक्षिणः ॥

- மனு ஸ்ம்ருதி

குருவின் பாதத்தை பற்றி கொள்ளும் போது, வலது கையால் குருவின் வலது பாதத்தையும், இடது கையால் குருவின் இடது பாதத்தையும் தொட்டு நமஸ்கரிக்க வேண்டும்.


अध्येष्यमाणं तु गुरुर्नित्यकालमतन्द्रितः ।

अधीष्व भो इति ब्रूयाद् विरामोऽस्त्विति चारमेत् ॥

- மனு ஸ்ம்ருதி

சோம்பலின்றி வேத அத்யயனம் செய்ய போகும் சிஷ்யனை பார்த்து, குரு "ஆரம்பி" என்று சொல்லி ஆரம்பித்து வைக்க வேண்டும். முடிக்கும் போது "நிறுத்து" என்று சொல்லி நிறுத்த வேண்டும்.

ब्रह्मणः प्रणवं कुर्यादादावन्ते च सर्वदा ।

स्रवत्यनोङ्कृतं पूर्वं परस्ताच्च विशीर्यति ॥

 - மனு ஸ்ம்ருதி

வேத அத்யயனம் ஆரம்பிக்கும் போது, முதலிலும் முடிவிலும் எப்போதும் "அஉம்" (ஓம்) என்ற ஓங்காரத்தை உச்சரிக்க வேண்டும்.

வேத அத்யயனம் ஆரம்பிக்கும் போது, ஓங்காரத்தை உச்சரிக்காமல் போனால், படித்தது சிறிது சிறிதாக மறந்து போகும்.

வேத அத்யயனம் முடிக்கும் போது, ஓங்காரத்தை உச்சரிக்காமல் போனால், படித்தது எதுவும் மனதில் தங்காது.


प्राक्कूलान् पर्युपासीनः पवित्रैश्चैव पावितः ।

प्राणायामैस्त्रिभिः पूतस्तत ओं।कारमर्हति ॥

- மனு ஸ்ம்ருதி

நுனிகள் கொண்ட தர்ப்பை புல்லில், கிழக்கு முகமாக அமர்ந்து, இரண்டு கைகளிலும் தர்ப்பைகளை வைத்து கொள்வதால், பரிசுத்தமாகிறான். 3 முறை பிராணாயாமம் செய்து, பிறகு ஓங்காரத்தை உச்சரித்து, அதன் பிறகு வேத அத்யயனம் ஆரம்பிக்க வேண்டும்.


अकारं च अपि उकारं च 

मकारं च प्रजापतिः ।

वेदत्रयान्निरदुहद् 

भूर्भुवः स्वः इतीति च ॥ 

- மனு ஸ்ம்ருதி

ப்ரம்ம தேவன் முதன்முதலில் அ, உ, ம என்ற ஓங்காரத்தை க்ரஹித்தார். பிறகு பூ, புவ: ஸுவ என்ற பரப்ரம்மத்தின் விராட் ஸ்வரூபமாக க்ரஹித்தார். பிறகு மூன்று வேதங்களை அதிலிருந்து  க்ரஹித்தார்.

(அதாவது, வேதங்கள் பூ புவ ஸுவ என்ற ப்ரம்மத்தின் (பரமாத்மாவின்) விராட் ஸ்வரூபத்தில் அடக்கம். விராட் ஸ்வரூபம் ஓங்காரத்தில் அடக்கம். அதனால் தான் ஓம் பூ புவ ஸுவ என்று சொல்லி விட்டு காயத்ரீ மந்திரம் சொல்கிறோம்)


त्रिभ्य एव तु वेदेभ्यः 

पादं पादमदूदुहत् ।

तदित्यर्चोऽस्याः सावित्र्याः 

परमेष्ठी प्रजापतिः ॥

- மனு ஸ்ம்ருதி

பிறகு, ப்ரம்மதேவன் மூன்று வேதங்களுக்கும் (ரிக், யஜு, ஸாம) தாயான காயத்ரீ மந்திரம், காரணமான அந்த பரப்ரம்மத்தை (தத் ஸவிது) காட்டுதை க்ரஹித்தார்.

(வேதங்களுக்கு தாயாக  காயத்ரீ இருப்பதால் தான், முதலில் காயத்ரீ உபதேசம் செய்யப்பட்டு, பிறகு வேத அத்யயனம் செய்கிறோம். வேத மந்திரங்கள் அனைத்தும் அந்த ஒரே பரப்ரம்மத்தை (தத் ஸவிது) தான் சொல்கிறது என்று வேத மாதாவாக இருந்து காயத்ரீ "தகப்பன் ஒருவனே" என்று காட்டுகிறது) 

(இதன் காரணமாகவே, ப்ரம்ம தேவன் காஞ்சிபுரம் வந்து யாகம் செய்த போது, அவர் வாக்கால் வேத மந்திரங்கள் சொன்ன போது, அந்த காரண ப்ரம்மத்தையே துதித்தார். அதன் பலனாக, இந்திரனோ, அக்னியோ காட்சி கொடுக்காமல், பரப்ரம்மமா நாராயணன் "அத்தி வரதனாக" அக்னியில் இருந்து அத்தி ரூபத்தோடு காஞ்சியிலே இந்த ரூபத்தில் இருக்க சங்கல்பித்து கொண்டு வெளிப்பட்டார்.  இன்றும் அந்த அத்தி வரதர், காஞ்சியில் குளத்தின் நீருக்கு அடியில் இஸ்லாமிய காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியால் ஏற்பட்ட நடைமுறையை பின்பற்றி, இன்றுவரை புரியாத காரணங்களுக்காக வைக்கப்பட்டு இருக்கிறார்)


एतद् अक्षरम् एतां च जपन् 

व्याहृति पूर्विकाम् ।

सन्ध्ययोः वेदविद् विप्रो 

वेदपुण्येन युज्यते ॥

- மனு ஸ்ம்ருதி

ஸந்த்யாவந்தன காலத்தில் ஓங்காரம் (ஓம்), பிறகு வ்யாஹ்ருதி (பூ புவ ஸுவ) சொல்லி, அதனோடு காயத்ரீ மந்திரத்தை சொல்லும் இரட்டை பிறப்பாளன் (பிராம்மணன், க்ஷத்ரியன், வைஸ்யன் வர்ணத்தில் இருப்பவன்) புண்ணியத்தை அடைகிறான்.


सहस्र कृत्वस्त्वभ्यस्य 

बहि: एतत् त्रिकं द्विजः ।

महतो अपि एनसो मासात् 

त्वचैवाहि: विमुच्यते ॥

- மனு ஸ்ம்ருதி

இரட்டை பிறப்பாளன் (பிராம்மணன், க்ஷத்ரியன், வைஸ்யன் வர்ணத்தில் இருப்பவன்) சந்தியா காலத்திலும், மற்ற சமயங்களிலும் கிராமத்துக்கு வெளியே தனிமையில் இருந்து, ஓம் என்ற ஓங்காரம், வ்யாஹ்ருதியோடு (பூ புவ ஸுவ), காயத்ரீ மந்திரத்தை ஒரு மாத காலம் தினமும் 1000 முறை சொல்லி வந்தால், பாம்பு தன் சட்டையை கழட்டி போடுவது போல, மஹா பாபங்களிலிருந்து விடுபடுவான்


एतयाऋचा विसंयुक्तः काले च क्रियया स्वया ।

ब्रह्म क्षत्रिय विद्यो निर्गर्हणां याति साधुषु ॥ 

- மனு ஸ்ம்ருதி

சந்தியா காலத்திலும், மற்ற சமயங்களிலும் இந்த காயத்ரீ மந்திரத்தை  ஜெபிக்காமல், காலை மாலை செய்ய வேண்டிய ஹோமங்களை செய்யாமல் இருக்கும் இரட்டை பிறப்பாளனை (பிராம்மணன், க்ஷத்ரியன், வைஸ்யன் வர்ணத்தில் இருப்பவன்) சான்றோர்கள் நிந்திப்பார்கள்.

ओङ्कार पूर्विकास्तिस्रो 

महा-व्याहृतयो अव्ययाः ।

त्रिपदा चैव सावित्री 

विज्ञेयं ब्रह्मणो मुखम् ॥ 

- மனு ஸ்ம்ருதி

ஓம் என்ற ஓங்காரத்துக்குள் வ்யாஹ்ருதி (பூ புவ ஸுவ) என்ற பிரம்மத்தின் விராட் ஸ்வரூபம் அடக்கம். வ்யாஹ்ருதி ஸ்வரூபத்துக்குள் வேத மாதாவான காயத்ரீ மந்திரம் அடக்கம். காயத்ரீ  ப்ரம்மத்துக்கு முகமாக இருக்கிறாள்.


योऽधीतेऽहन्यहन्येतां 

त्रीणि वर्षाण्यतन्द्रितः ।

स ब्रह्म परमभ्येति 

वायुभूतः खमूर्तिमान् ॥

- மனு ஸ்ம்ருதி

சோம்பலின்றி இந்த முறையில் (ஓம் பூ புவ ஸுவ சொல்லி, பிறகு காயத்ரீ மந்திரத்தை ஜபிப்பது) ஒருவன் 3 வருட காலம் ஒரு நாளும் விடாமல், ஜபித்து வந்தால், அவன் காற்றை போல எங்கும் செல்லக்கூடிய சக்தியை அடைவான். உடலை விட்டு பிரிந்த பிறகு (இறந்த பிறகு) ப்ரம்மலோகத்தை அடைவான்.

एकाक्षरं परं ब्रह्म 

प्राणायामः परं तपः ।

सावित्रि अस्तु परं नास्ति 

मौनात् सत्यं विशिष्यते ॥

- மனு ஸ்ம்ருதி

ஓம் என்ற இந்த ஒரு அக்ஷரமே ப்ரம்மம் என்று தியானிக்க வேண்டும். பிராணாயாமம் செய்வதே சிறந்த தவம். காயத்ரீக்கு மேலான வேத மந்திரம் இல்லை. மெளனமாக இருப்பதை விட, சத்தியத்தை பேசுவது சிறந்தது.


क्षरन्ति सर्वा वैदिक्यो जुहोतियजतिक्रियाः ।

अक्षरं दुष्करं ज्ञेयं ब्रह्म चैव प्रजापतिः ॥

- மனு ஸ்ம்ருதி

வேதங்கள் காட்டும் பற்பல யாகங்கள், முறைகள் கூட மறையலாம். ஆனால், ப்ரம்ம ஸ்வரூபமாகவே இருக்கும் ஓம் என்ற இந்த ஒரு அக்ஷரம், அழியாமல் என்றுமே பயன்பாட்டில் இருக்கும்.


विधियज्ञाज् जपयज्ञो विशिष्टो दशभिर्गुणैः ।

उपांशुः स्यात्शतगुणः साहस्रो मानसः स्मृतः ॥ 

- மனு ஸ்ம்ருதி

யாகங்கள், ஹோமங்கள் செய்வதை விட, ஓம் என்ற ஓங்காரத்தோடு, பூ புவ ஸுவ என்ற வ்யாஹ்ருதியை சேர்த்து காயத்ரீ மந்திரத்தை  சொல்வது 10 மடங்கு மேன்மை தரும்.  அருகில் இருப்பவருக்கு கேட்காமல் சொன்னால், 100 மடங்கு மேன்மை தரும்.  அருகில் இருப்பவருக்கு கேட்காமல், மனதோடு சொன்னால், 1000 மடங்கு மேன்மை தரும். 


ये पाकयज्ञाः चत्वारो विधियज्ञसमन्विताः ।

सर्वे ते जपयज्ञस्य कलां नार्हन्ति षोडशीम् ॥

- மனு ஸ்ம்ருதி

வைஸ்துதேவம், பலிகர்மா, நித்ய ஸ்ரார்த்தம், அதிதி போஜனம் (நேரம் சொல்லாமல் திடீரன்று வரும் விருந்தினர்), மற்றும் 5 மஹா யக்ஞங்களில் "ப்ரம்ம யக்ஞம்" தவிர்த்து மற்றவை, இவை எல்லாம் செய்தால் "பாக யக்ஞம்" என்று பெயர். இந்த பாக யக்ஞமும், பௌர்ணமி அமாவாசை போன்ற நாட்களில் செய்யப்படும் மற்ற விதி யக்ஞங்களும் சேர்த்து செய்தால் கூட, காயத்ரீ மந்திர ஜெபத்தில் 16ல் ஒரு பங்குக்கு கூட ஈடாகாது.


जप्येनैव तु संसिध्येद् ब्राह्मणो नात्र संशयः ।

कुर्यादन्यन्न वा कुर्यान् मैत्रो ब्राह्मण उच्यते ॥

- மனு ஸ்ம்ருதி

பிராம்மண வர்ணத்தில் இருப்பவன், இந்த காயத்ரீ மந்திரத்தை ஓம் பூ புவ ஸுவ முன் சேர்த்து சொல்லிக்கொண்டு இருந்தாலே, மோக்ஷத்தை அடைந்து விடுவான். இதில் சந்தேகமில்லை.

பிராம்மண வர்ணத்தில் இப்படி வாழ்பவன், அனைத்து உயிர்களுக்கும் நண்பனாவான்.


इन्द्रियाणां विचरतां

विषयेष्वपहारिषु ।

संयमे यत्नमातिष्ठेद् 

विद्वान् यन्तैव वाजिनाम् ॥

- மனு ஸ்ம்ருதி

தேர் ஓட்டுபவன் எப்படி அடங்காத குதிரைகளை அடக்கி வைத்திருப்பானோ, அது போல, படிக்கும் காலத்தில், விஷய சுகங்களிலேயே விழ ஆசைப்படும் புலன்களை அடக்கி வைத்து இருக்க வேண்டும்.


एकादशेन्द्रियाण्याहुर्यानि पूर्वे मनीषिणः ।

तानि सम्यक् प्रवक्ष्यामि यथावदनुपूर्वशः ॥

- மனு ஸ்ம்ருதி

புராணத்தில் (போன கல்பம்) இருந்த மனிதர்கள் சொன்ன 11 இந்திரியங்களை (புலன்களை) பற்றி சொல்கிறேன். கேளுங்கள்


श्रोत्रं त्वक् चक्षुषी जिह्वा नासिका चैव पञ्चमी ।

पायूपस्थं हस्तपादं वाक् चैव दशमी स्मृता ॥ 

- மனு ஸ்ம்ருதி

கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு, தோல் என்று 5 இந்திரியங்கள் உள்ளன. ஆசனவாய், ஆண்/பெண் குறி, கால்கள், கைகள், வாக்கு இவை இன்னொரு 5 இந்திரியங்கள். மொத்தம் 10.


बुद्धीन्द्रियाणि पञ्चैषां श्रोत्रादीन्यनुपूर्वशः ।

कर्मेन्द्रियाणि पञ्चैषां पाय्वादीनि प्रचक्षते ॥

- மனு ஸ்ம்ருதி

அறிவுக்கான புலன்களாக (ஞான இந்திரியங்கள்) கண், காது, மூக்கு, நாக்கு, தோல் உள்ளன. செயலுக்கான புலன்களாக (கர்ம இந்திரியங்கள்) மற்ற 5உம் உள்ளன.


एकादशं मनो ज्ञेयं स्वगुणेनौभयात्मकम् ।

यस्मिन् जिते जितावेतौ भवतः पञ्चकौ गणौ ॥

- மனு ஸ்ம்ருதி

11வது இந்திரியமாக மனம் உள்ளது. மனம் ஞான இந்திரியமாகவும், கர்ம இந்திரியமாகவும் உள்ளது. யார் மனதை வெல்கிறானோ, அவன் 5 ஞான இந்திரியங்களையும், கர்ம இந்திரியங்களையும் வென்றவனாகிறான்.

(குரங்குக்கு மனம் கட்டுப்பட்டு இருக்காது. வாழை பழத்தை பார்த்தால், மனம் கட்டுப்படாத காரணத்தால், பூனை போல திருட்டுதனமாக கூட எடுக்க காத்து இருக்க கூட முடியாமல், வெளிப்படையாக பிடுங்கி விடும். மனிதன் மனதை கட்டுப்பாடு இல்லாமல் ஆக்கி கொள்ளவும் முடியும். மனதை கட்டுப்படுத்தி மதிப்போடு வாழவும் முடியும்).


इन्द्रियाणां प्रसङ्गेन दोषं ऋच्छत्यसंशयम् ।

संनियम्य तु तान्येव ततः सिद्धिं निगच्छति ॥

- மனு ஸ்ம்ருதி

புலன்கள் விஷய சுகங்களிலேயே சேர ஆசைப்படும். விஷய சுகத்தில் ஈடுபடுவதாலேயே மனிதன் இந்த பூவுலகில் துன்பத்தையும், மேலுலத்திற்கு சென்றாலும் பாவத்தையே சுமந்து செல்கிறான். புலன்களை கட்டுப்படுத்தினால் தான் "ஸித்தி" உண்டாகும். ஆகையால் புலன்களை அடக்க வேண்டும்.


न जातु कामः कामानामुपभोगेन शाम्यति ।

हविषा कृष्णवर्त्मैव भूय एवाभिवर्धते ॥

- மனு ஸ்ம்ருதி

ஆசையானது அனுபவித்ததால் அடங்கிவிடுவதில்லை. அக்னியில் நெய்யை ஊற்ற ஊற்ற மேலும் மேலும் தீ வளருமே தவிர அடங்காது. அது போல, ஆசை அனுபவித்தாலும், மேலும் மேலும் ஆசை ஓங்கும்.


यश्चैतान् प्राप्नुयात् सर्वान् यश्चैतान् केवलांस्त्यजेत् ।

प्रापणात् सर्वकामानां परित्यागो विशिष्यते ॥ 

- மனு ஸ்ம்ருதி

எவன் தனக்கு கிடைத்ததை எல்லாம், அனுபவிக்கிறானோ, எவன் கிடைத்தாலும் ஆசைப்படாமல் வெறுத்து இருக்கிறானோ, இந்த இருவரில் ஆசைகளை துறக்கிறவனே மேலானவன்.


न तथैतानि शक्यन्ते संनियन्तुमसेवया ।

विषयेषु प्रजुष्टानि यथा ज्ञानेन नित्यशः ॥

- மனு ஸ்ம்ருதி

விஷய சுகங்களில் ஈடுபடும் இந்த புலன்களை திருப்புவது என்பது இயலாத காரியம். விஷய சுகங்களை விட வேண்டும் என்ற ஞானத்தை (அறிவை) அடைய ஆசைப்பட வேண்டும்.


वेदास्त्यागश्च यज्ञाश्च 

नियमाश्च तपांसि च ।

न विप्रदुष्टभावस्य 

सिद्धिं गच्छति कर्हि चित् ॥

- மனு ஸ்ம்ருதி

புலன்களை அடக்க முடியாத மனம் கொண்டவன், வேதத்தையே அத்யயனம் செய்தாலும், தானங்களே செய்தாலும், யாகங்கள் செய்தாலும், நியமங்களோடு வாழ்ந்தாலும், தவ வாழ்க்கை வாழ்ந்தாலும், பலன் தராது ("ஸித்தி" என்ற பலன் கிடைக்காது)


श्रुत्वा स्पृष्ट्वा च दृष्ट्वा च 

भुक्त्वा घ्रात्वा च यो नरः ।

न हृष्यति ग्लायति वा 

स विज्ञेयो जितैन्द्रियः ॥ 

- மனு ஸ்ம்ருதி

எவன் உலக விஷயங்களை கேட்டும், தொட்டும், பார்த்தும், முகர்ந்தும் கூட, இன்பத்தையும் அடையாமல், துன்பத்தையும் அடையாமல் இருக்கிறானோ, அவனே "ஜிதேந்த்ரியன்" (புலன்களை ஜெயித்தவன்).


इन्द्रियाणां तु सर्वेषां यद्येकं क्षरतीन्द्रियम् ।

तेनास्य क्षरति प्रज्ञा दृतेः पादादिवोदकम् ॥

- மனு ஸ்ம்ருதி

11 புலன்களில், 10ஐ அடக்கி, ஒரு புலன் மட்டும் விஷய சுகங்களில் ஆட்பட்டு இருந்தால் கூட, அப்படிப்பட்டவனுடைய ஞானம் (அறிவு), ஓட்டை விழுந்த தோல் பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீர் போல வீணாகி விடும்.


वशे कृत्वेन्द्रियग्रामं संयम्य च मनस्तथा ।

सर्वान् संसाधयेदर्थानक्षिण्वन् योगतस्तनुम् ॥

- மனு ஸ்ம்ருதி

ஆகையால், 10 புலன்களையும் வென்று, மனதை கட்டுப்படுத்தி, இவை இந்த உடலை இழுத்து கொண்டு செல்ல விடாமல், தான் ஆசைப்பட்டதை சாதிக்க வேண்டும். அவ்வாறு சாதித்த பிறகு, இந்த உடலை முறையாக விட வேண்டும்.


पूर्वां सन्ध्यां जपंस्तिष्ठेत् 

सावित्रीमाऽर्क दर्शनात् ।

पश्चिमां तु समासीनः 

सम्यग् ऋक्षविभावनात् ॥

- மனு ஸ்ம்ருதி

சூரிய உதய நேரத்தில் சூரியன் உதிக்கும் வரை நின்றபடி காயத்ரீ மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். மாலையில் நக்ஷத்திரங்கள் கண்ணில் தென்படும் வரை அமர்ந்தபடி காயத்ரீ மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

पूर्वां सन्ध्यां जपंस्तिष्ठन्नैशमेनो व्यपोहति ।

पश्चिमां तु समासीनो मलं हन्ति दिवाकृतम् ॥

- மனு ஸ்ம்ருதி

சூரிய உதய காலத்தில் நின்று கொண்டு இப்படி காயத்ரீ மந்த்ர ஜபம் செய்பவன், முதல் நாள் இரவு செய்த பாபத்தை போக்கி கொள்கிறான். 

மாலையில் அமர்ந்தபடி காயத்ரீ மந்த்ர ஜபம் செய்பவன், அன்று பகலில் செய்த பாபத்தை போக்கிக்கொள்கிறான்.


न तिष्ठति तु यः पूर्वां नौपास्ते यश्च पश्चिमाम् ।

स शूद्रवद् बहिष्कार्यः सर्वस्माद् द्विजकर्मणः ॥ 

- மனு ஸ்ம்ருதி

இரட்டை பிறப்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட  காரியங்கள் எதுவும் சூத்திரனுக்கு (employee)  கிடையாது. காலையில் சந்தியாவந்தனம், மாலையில் சந்தியாவந்தனம் செய்யாத இரட்டை பிறப்பாளர்களை (பிராம்மண வர்ணம் (MLA/MA), க்ஷத்ரிய வர்ணம் (defence person), வைசிய வர்ணம் (businessman/employer), இரட்டை பிறப்பாளர்களுக்கு என்று விதிக்கப்பட்ட  காரியங்களிலிருந்து விலக்க வேண்டும்,


अपां समीपे नियतो नैत्यकं विधिमास्थितः ।

सावित्रीमप्यधीयीत गत्वाऽरण्यं समाहितः ॥

- மனு ஸ்ம்ருதி

காட்டில், அல்லது நதிக்கரையில் அலையாத ஒருமுகப்பட்ட மனதுடன், புலன்களை அடக்கி, சந்தியா வந்தனம் முதலிய தினமும் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை முடித்து, காயத்ரீ ஜபம் செய்ய தொடங்க வேண்டும்.


वेदौपकरणे चैव स्वाध्याये चैव नैत्यके ।

नानुरोधोऽस्त्यनध्याये होममन्त्रेषु चैव हि ॥

- மனு ஸ்ம்ருதி

வேத அங்கமாக இருக்கும் சிக்ஷை, வேதம் ஓதுதல், ஹோம மந்திரங்கள், போன்றவைகளை படிக்க (அத்யயனம் செய்ய),  தகாத நாட்கள்/காலம் என்று ஒன்று கிடையாது. 

नैत्यके नास्त्यनध्यायो 

ब्रह्मसत्रं हि तत् स्मृतम् ।

ब्रह्माहुतिहुतं पुण्यम्

अनध्यायवषट् कृतम्  ॥ 

- மனு ஸ்ம்ருதி

எப்பொழுதுமே இருக்கும் வேதத்தில். அநத்யயன (தகாத காலம்) தோஷம் இல்லை. வேதத்தை அநத்யயனத்தில் (அகாலத்தில்) படித்தாலும் (அத்யயனம் செய்தாலும்), புண்யமேயன்றி  அநத்யயன தோஷம் ஏற்படாது.


यः स्वाध्यायमधीतेऽब्दं 

विधिना नियतः शुचिः ।

तस्य नित्यं क्षरत्येष 

पयो दधि घृतं मधु ॥

- மனு ஸ்ம்ருதி

எவன் புலன்களை அடக்கி, ஒரு வருட காலம் நியமத்தோடு (நெறியோடு), தொடர்ந்து வேத அத்யயனம் செய்வானோ, அவனுக்கு இவன் செய்த நித்ய அத்யயனமே, கடைசி காலம் வரை பால், தயிர், நெய், தேன் கிடைக்க செய்யும்.


अग्नीन्धनं भैक्षचर्यामधःशय्यां गुरोर्हितम् ।

आ समावर्तनात् कुर्यात् कृतोपनयनो द्विजः ॥

- மனு ஸ்ம்ருதி

பூணூல் அணிந்து கொண்ட இரட்டை பிறப்பாளன் (பிராம்மண வர்ணத்தில் இருப்பவன், க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவன், வைஸ்ய வர்ணத்தில் இருப்பவன்), ஸமாவர்த்தனம் ஆகும் வரை, அக்னி ஹோத்திரம் செய்து கொண்டு, பிக்ஷை வாங்கி சாப்பிட்டு, உயரமான படுக்கையில் படுக்காமல், குருவுக்கு நன்மை தரும் செயல்களே செய்து கொண்டு இருக்க வேண்டும் 

(குருகுலத்தில் பாடம் படித்து விட்டு, அவருக்கு தக்ஷிணை கொடுத்து விட்டு, திரும்பி வந்து, விவாகம் செய்து கொள்ளும் போது, முதல் நாளோ, விவாக நாளன்றோ ஸமாவர்த்தனம் என்ற வேதோக்தமான ஸ்நான காரியங்கள் செய்ய வேண்டும்.  இப்படி சமாவர்த்தனம்  ஆன பிறகு, அன்றிலிருந்து பஞ்சகஜம் கட்டி கொண்டு, இரண்டு பூணூல் அணிந்து கொள்ள வேண்டும். ஸமாவர்த்தனம் என்பது ஒரு "ஸ்நான கிரியை". ஸமாவர்த்தனம் ஆன பிறகு, அவனுக்கு "ஸ்நான-தகன்" என்று பெயர்.)


आचार्यपुत्रः शुश्रूषु: ज्ञानदो-धार्मिकः शुचिः ।

आप्तः शक्तोऽर्थदः साधुः स्वोऽध्याप्या दश धर्मतः ॥ 

- மனு ஸ்ம்ருதி

இப்படி படித்து முடித்து குருகுல வாசம் முடிந்து வீடு திரும்பியவன், தன் குருவின் புத்ரன், கைங்கர்யம் செய்ய ஆவலோடு இருப்பவன், தர்மத்தோடு வாழ்ந்து, தான் கற்ற கல்வியை பதிலாக கற்றுக்கொடுப்பவன், சுத்தமாகவே இருப்பவன், நெருங்கிய உறவினன், சொல்வதை மனதில் பதிய வைத்து கொண்டு, ஞாபக சக்தி அதிகம் உள்ளவன், தானாக பொருளை கொடுப்பவன், நன்மை செய்ய ஆசைப்படுபவன், தன் சொந்த மகன் - ஆகிய 10 பேரிடமும் தக்ஷிணை வாங்கிக்கொள்ளாமல் தான் கற்ற வித்யையை கற்று தர வேண்டும்.


नापृष्टः कस्य चिद् ब्रूयान्न चान्यायेन पृच्छतः ।

जानन्नपि हि मेधावी जडवल्लोक आचरेत् ॥ 

- மனு ஸ்ம்ருதி

தான் சொல்வதை கேட்க இஷ்டமில்லாதவனுக்கு எதையும் கூற கூடாது. ஈடுபாடும் (ஸ்ரத்தை), குருவிடம் அன்பும் (பக்தியும்) இல்லாமல் விதண்டாவாதமாக கேட்பவனுக்கும் எதையும் கூற கூடாது. கற்ற கல்வியால் புத்திசாலியாக இருந்தாலும், எல்லாம் அறிந்தவனாக இருந்தாலும், ஊமையை போல உலகத்தில் வாழ வேண்டும். 


अधर्मेण च यः प्राह यश्चाधर्मेण पृच्छति ।

तयोरन्यतरः प्रैति विद्वेषं वाऽधिगच्छति ॥ 

- மனு ஸ்ம்ருதி

தர்மமாக கேட்கப்பட்ட கேள்விக்கு, அதர்மமாக பதில் சொல்பவன், கேள்வியையே அதர்மமாக கேட்பவன், சீக்கிரத்தில் மரணிப்பான் அல்லது விரோதத்தை அடைவான்.


धर्मार्थौ यत्र न स्यातां शुश्रूषा वाऽपि तद्विधा ।

तत्र विद्या न वप्तव्या शुभं बीजमिवौषरे ॥ 

- மனு ஸ்ம்ருதி

எவனிடம் அறமும் (தர்மம்) இல்லை, பொருளும் (அர்த்தம்) இல்லையோ, சேவை செய்யும் (கைங்கர்யம்) செய்யும் குணமும் இல்லையோ, இந்த மூன்றும் இல்லாதவனுக்கு தான் கற்ற கல்வியை சொல்லி தர கூடாது. தர்ம சிந்தனையும் இல்லாத, பொருளும் இல்லாத, சேவா புத்தியும் இல்லாத இவனுக்கு சொல்லி தருவது, களர் நிலத்தில் விதை விதைத்தது போல வீணாகும்.


विद्ययैव समं कामं मर्तव्यं ब्रह्मवादिना ।

आपद्यपि हि घोरायां न त्वेनामिरिणे वपेत् ॥

- மனு ஸ்ம்ருதி

தகுந்த சிஷ்யன் கிடைக்காது கடைசிகாலம் வரை போனால் கூட, தான் கற்ற கல்வியோடு இறப்பது மேல். எத்தகைய கோரமான நிலையில் வாழ நேரிட்டாலும், தகுதி இல்லாதவனுக்கு (தர்மம் இல்லை, பொருள் இல்லை, சேவா புத்தியும் இல்லை) தான் கற்ற கல்வியை சொல்லி தர கூடாது.


विद्या ब्राह्मणमेत्याह शेवधिस्तेऽस्मि रक्ष माम् ।

असूयकाय मां मादास्तथा स्यां वीर्यवत्तमा ॥ 

- மனு ஸ்ம்ருதி

பிராம்மண வர்ணத்தில் இருப்பவனை பார்த்து வித்யைக்குரிய தேவதை "என்னை காப்பாற்று. அஸூயை (குணத்தையும் தோஷமாக பார்ப்பவன்) போன்ற துர்குணங்கள் கொண்டவனிடம் என்னை கொடுக்காதே. அப்படி செய்வாயானால், உன்னிடம் வீரியத்தோடு இருப்பேன்" என்கிறாள்.


यमेव तु शुचिं विद्यान्नियतं ब्रह्मचारिणम् 

तस्मै मां ब्रूहि विप्राय निधिपायाप्रमादिने ॥  

- மனு ஸ்ம்ருதி

சத்தியம் பேசுதல், பிற உயிருக்கு தீங்கு செய்யாமல் இருத்தல், , பொறுமையாக இருத்தல். இதற்கு யமம் என்று பெயர். "யமத்தோடும், உடல் மனம் இரண்டிலும் சுத்தமாகவும், கற்ற கல்வியை காப்பாற்றும் பிரம்மச்சாரி எவனோ அவனிடம் என்னை கொடுப்பாயாக" என்று வித்யா தேவதை கேட்கிறாள்.,  


ब्रह्म यस्त्वननुज्ञातमधीयानादवाप्नुयात् ।

स ब्रह्मस्तेयसंयुक्तो नरकं प्रतिपद्यते ॥ 

- மனு ஸ்ம்ருதி

எவன் குருவுக்கு தெரியாமல் அவரது அனுமதியின்றி அவரிடமிருந்து கல்வியை திருடுகிறானோ (ஏகலைவன் போன்றவன்), அவன் வேதத்தை திருடிய பாவத்தை அடைந்து நரகத்தில் வீழ்வான்.


लौकिकं वैदिकं वाऽपि तथाऽध्यात्मिकमेव वा ।

आददीत यतो ज्ञानं तं पूर्वम् अभिवादयेत् ॥

- மனு ஸ்ம்ருதி

உலகியல் சாஸ்திரம், வேதார்த்த சாஸ்திரம், ப்ரம்ம ஞானம் போன்றவற்றை யாரிடத்தில் கற்கிறோமோ, அவரையே முதலில் வணங்க வேண்டும். 


सावित्री मात्रसारो अपि वरं विप्रः सुयन्त्रितः ।

नायन्त्रित स्त्रि वेदोऽपि सर्वाशी सर्व विक्रयी ॥

- மனு ஸ்ம்ருதி

காயத்ரீ மந்திரத்தை மட்டும் ஜபித்து கொண்டு, புலன் அடக்கத்தோடு இருக்கும் இரட்டை பிறப்பாளன் (க்ஷத்திரியன், பிராம்மணன், வைசியன்), மூன்று வேதமும் அறிந்த, புலன் அடக்கமில்லாத, அனைத்தையும் உண்ணும், எதையும் விற்கும் இரட்டை பிறப்பாளனை விட மேலானவன்.


शय्याऽऽसनेऽध्याचरिते श्रेयसा न समाविशेत् ।

शय्याऽऽसनस्थश्चैवेनं प्रत्युत्थायाभिवादयेत् ॥

- மனு ஸ்ம்ருதி

தன்னை விட சிறந்தவருக்கு தயார் செய்யப்பட்ட படுக்கையிலோ அல்லது இருக்கையிலோ அமரக் கூடாது. தன்னை விட உயர்ந்தவர் வரும் போது, படுக்கையிலோ அல்லது இருக்கையிலோ இருந்தால், உடனே எழுந்து அவரை வரவேற்று வணங்க வேண்டும்.


ऊर्ध्वं प्राणा ह्युत्क्रमन्ति 

यूनः स्थविर आयति ।

प्रत्युत्थानाभिवादाभ्यां 

पुनस्तान् प्रतिपद्यते ॥

- மனு ஸ்ம்ருதி

ஞானத்தாலும், வயதாலும் பெரியவராக இருப்பவர் வந்தால், சிறியவர்களின் ப்ராணன் மேல் எழும்பும். எனவே பெரியவர்கள் வந்தால், எழுந்து வணங்குவதால், ப்ராணன் போகாமல் நிறுத்தி கொள்ள முடியும்


अभिवादन शीलस्य नित्यं वृद्धोपसेविनः ।

चत्वारि तस्य वर्धन्ते आयु: धर्मो यशो बलम् ॥

- மனு ஸ்ம்ருதி

பெரியவர்கள் (ஞானத்தால்/வயதால்) வரும் போது, எழுந்து அவரை வரவேற்று வணங்குபவனுக்கு, ஆயுள் கல்வி, புகழ், பலம் இந்த 4ம் வளர்ச்சி அடையும்.


अभिवादात् परं विप्रो ज्यायां समभिवादयन् ।

असौ नामाहम् अस्मीति स्वं नाम परिकीर्तयेत् ॥

- மனு ஸ்ம்ருதி

இரட்டை பிறப்பாளன் (க்ஷத்திரியன், பிராம்மணன், வைசியன்) தன்னை விட பெரியவரை (ஞானத்தால்/வயதால்) கண்டால், அவருக்கு அபிவாதனம் செய்து, தன் பெயர், குலம், கோத்திரம் கூறி வணங்க வேண்டும்.


नामधेयस्य ये के चिदभिवादं न जानते ।

तान् प्राज्ञोऽहमिति ब्रूयात् स्त्रियः सर्वास्तथैव च ॥

- மனு ஸ்ம்ருதி

யாருக்கு அபிவாதனத்தின் பொருள் தெரியாதோ (குலம், கோத்திரம், ப்ரவரம்...) அந்த பெரியவரிடம் (ஞானத்தால்/வயதால்) பெயரை மட்டும் சொல்லி வணங்க வேண்டும். பெண்களை வணங்கும் போதும் பெயரை மட்டும் சொல்லி வணங்க வேண்டும்.


भोःशब्दं कीर्तयेदन्ते स्वस्य नाम्नो अभिवादने ।

नाम्नां स्वरूप भावो हि भोभाव ऋषिभिः स्मृतः ॥

- மனு ஸ்ம்ருதி

இரட்டை பிறப்பாளன் (க்ஷத்திரியன், பிராம்மணன், வைசியன்) தன்னை விட பெரியவரை (ஞானத்தால்/வயதால்) வணங்கி தன் பெயரை சொன்ன பிறகு "போ:" என்ற சப்தத்துடன் முடிக்க வேண்டும். பெயர்களுக்கு ஸ்வரூபம் "போ" என்ற சப்தத்தால் உண்டாகிறது என்று ரிஷிகள் நிர்ணயித்து சொல்லி இருக்கிறார்கள். (வேங்கட சர்மா அஹம் அஸ்மி போ)


आयुष्मान् भव सौम्यैति वाच्यो विप्रोऽभिवादने ।

अकारश्चास्य नाम्नोऽन्ते वाच्यः पूर्वाक्षरः प्लुतः ॥ 

- மனு ஸ்ம்ருதி

"ஆயுஷ்மான் பவ ஸௌம்யா" (நீடூழி வாழ் நல்ல பிள்ளாய்) என்று, அபிவாதனம் செய்பவனை பார்த்து சொல்ல வேண்டும். அபிவாதனம் செய்தவன் பெயர் "அ"காரத்தில் முடிந்தால், இதையே நீட்டி சொல்ல வேண்டும்.


यो न वेत्ति अभिवादस्य विप्रः प्रति अभिवादनम् ।

न अभिवाद्यः स विदुषा यथा शूद्रस्तथैव सः ॥ 

- மனு ஸ்ம்ருதி

எந்த இரட்டை பிறப்பாளன் (க்ஷத்திரியன் (defence), பிராம்மணன் (MLA/MP), வைசியன் (businessman)) அபிவாதனம் செய்தவனுக்கு பதில் சொல்ல அறியாமல் இருக்கிறானோ, அவனை சூத்திரனாக (employee) கருத வேண்டும். அவனுக்கு அபிவாதனம் செய்ய அவசியமில்லை. 

ब्राह्मणं कुशलं पृच्छेत्

क्षत्रबन्धुम् अनामयम् ।

वैश्यं क्षेमं समागम्य 

शूद्रम् आरोग्यमेव च ॥ 

- மனு ஸ்ம்ருதி

தன்னை அபிவாதனம் செய்தவன் பிராம்மண வர்ணத்தில் (MLA/MP) இருந்தால், “மங்களமாக இருக்கிறீரா?” (குசலமா) என்று விசாரிக்க வேண்டும். க்ஷத்திரிய வர்ணத்தில் (defence) இருந்தால், “கவலை இல்லாமல் இருக்கிறீரா?” (அநாமயமா) என்று விசாரிக்க வேண்டும். வைசிய வர்ணத்தில் இருந்தால், “செழிப்போடு இருக்கிறீரா?”(க்ஷேமமா) என்றும், சூத்திர வர்ணத்தில் (Employee) இருந்தால், "ஆரோக்யமாக இருக்கிறீரா?" (ஆரோக்யமா) என்று விசாரிக்க வேண்டும். 


अवाच्यो दीक्षितो नाम्ना यवीयानपि यो भवेत् ।

भोभवत्पूर्वकं त्वेनमभिभाषेत धर्मवित् ॥ 

- மனு ஸ்ம்ருதி

தீக்ஷை (சந்யாசி/கோவில் கும்பாபிஷேகம் செய்பவர்) பெற்று இருப்பவர் தன்னை விட சிறியவனாக இருந்தாலும், பெயர் சொல்லி அழைக்க கூடாது. போ: அல்லது பவ என்ற சப்தத்தை சொல்லியே அவர்களிடம் பேச வேண்டும். (பவ தீக்ஷித, பவான் தீக்ஷித)


परपत्नी तु या स्त्री स्यादसम्बन्धा च योनितः ।

तां ब्रूयाद् भवतीत्येवं सुभगे भगिनीति च ॥

- மனு ஸ்ம்ருதி

பிறர் மனைவிகளிடம், பிற பெண்களிடம் (மணமாகாத) பேச நேர்ந்தால் "ஸுபகே" (மங்களமான பெண்ணே), "பகினீ" (சதோதரியே) என்று தான் அழைக்க வேண்டும்.


मातुलांश्च पितृव्यांश्च श्वशुरान् ऋत्विजो गुरून् ।

असावहमिति ब्रूयात् प्रत्युत्थाय यवीयसः ॥

- மனு ஸ்ம்ருதி

தாய் மாமன் (மாதுலன்), சித்தப்பா, பெண் கொடுத்த மாமனார் (ஸ்வஸுரான்), யாகம் செய்யும் புரோகிதர்கள், அஞானத்தை அகற்றும் குரு போன்றவர்கள் வந்தால், அவர்கள் தன்னை விட சிறியவனாக இருக்க நேர்ந்தால், தன் பெயரை சொல்லி, அவர்களை வரவேற்க வேண்டும்.


मातृश्वसा मातुलानी 

श्वश्रूरथ पितृश्वसा ।

सम्पूज्या गुरुपत्नीवत् 

समास्ता गुरुभार्यया ॥ 

- மனு ஸ்ம்ருதி

தாயின் சகோதரிகள் (மாத்ருஸ்வஸா), தாய் மாமனின் மனைவி (மாதுலானி), பெண் கொடுத்த மாமியார் (ஸ்வஸுரத), தந்தையின்  சகோதரிகள் (பித்ருஸ்வஸா) இவர்கள் யாவரையும் குருவின் பத்னிக்கு சமமாக மதிக்க வேண்டும். 


भ्रातुर्भार्यौपसङ्ग्राह्या सवर्णाऽहन्यहन्यपि ।

विप्रोष्य तूपसङ्ग्राह्या ज्ञातिसम्बन्धियोषितः ॥

- மனு ஸ்ம்ருதி

தன் வர்ணத்திலேயே மணம் புரிந்து கொண்ட அண்ணன் மனைவியின் காலில் தினமும் விழுந்து வணங்க வேண்டும். சித்தப்பாவின், தாய்மாமனின், மாமனாரின் மனைவிமார்களை அவர்கள் வெளியூர் செல்லும் போது மட்டும் வணங்க வேண்டும்.


पितुर्भगिन्यां मातुश्च ज्यायस्यां च स्वसर्यपि ।

मातृवद् वृत्तिमातिष्ठेन् माता ताभ्यो गरीयसी ॥

- மனு ஸ்ம்ருதி

தந்தையோடு பிறந்தவள், தாயோடு பிறந்தவள், அக்கா (தமக்கை) இவர்களுக்கு, தாய்க்கு கொடுக்கும் கௌரவத்தை கொடுக்க வேண்டும். இருந்தாலும், தாயை இவர்களை விட மேலாக பூஜிக்க வேண்டும்.


दशाब्दाख्यं पौरसख्यं पञ्चाब्दाख्यं कलाभृताम् ।

त्र्यब्दपूर्वं श्रोत्रियाणां स्वल्पेनापि स्वयोनिषु ॥

- மனு ஸ்ம்ருதி

10 வயது வித்யாசத்துக்குள் ஊரில் இருப்பவனை தன் நண்பனாக ஏற்று கொள்ளலாம். 5 வயது வித்யாசத்துக்குள் கலைத்துறையில் இருப்பவனை தன் நண்பனாக ஏற்று கொள்ளலாம். 3 வயது வித்யாசத்துக்குள் வேதம் படித்தவனை தன் நண்பனாக ஏற்று கொள்ளலாம். ரத்த சம்பந்தமாக இருந்தால், சிறிது வித்யாசம் இருந்தால், தன் நண்பனாக ஏற்று கொள்ளலாம்.


ब्राह्मणं दशवर्षं तु शतवर्षं तु भूमिपम् ।

पितापुत्रौ विजानीयाद् ब्राह्मणस्तु तयोः पिता ॥

- மனு ஸ்ம்ருதி

10 வயது பிராம்மண வர்ணத்தில் இருப்பவன், 100 வயது க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவன், சமுதாயத்தின் தந்தை மகன் போல இருக்கிறார்கள். 10 வயதே ஆனாலும், தர்மத்தை அறிந்த பிராம்மண வர்ணத்தில் இருப்பவனே சமுதாயத்துக்கு தந்தை போன்றவன்.


वित्तं बन्धुर्वयः कर्म विद्या भवति पञ्चमी ।

एतानि मान्यस्थानानि गरीयो यद् यदुत्तरम् ॥

- மனு ஸ்ம்ருதி

செல்வந்தன், உறவுக்காரன், வயதில் மூத்தவன், அனுஷ்டானம் தவறாதவன், கல்விமான் இவர்கள் 5 பேரும் போற்றத்தக்கவர்கள். இதில் செல்வந்தனை விட உறவுக்காரனை போற்ற வேண்டும். உறவுக்காரனை விட வயதில் மூத்தவர்களை போற்ற வேண்டும். வயதில் மூத்தவர்களை விட அனுஷ்டானம் தவறாதவனை போற்ற வேண்டும். அனுஷ்டானம் தவறாதவனை விட கல்விமானை போற்ற வேண்டும்.


पञ्चानां त्रिषु वर्णेषु भूयांसि गुणवन्ति च ।

यत्र स्युः सोऽत्र मानार्हः शूद्रोऽपि दशमीं गतः ॥

- மனு ஸ்ம்ருதி

மூன்று வர்ணத்தில் (க்ஷத்ரிய, பிராம்மண, வைஸ்ய) இருப்பவன், இந்த 5ஐ (செல்வந்தன், உறவுக்காரன், வயதில் மூத்தவன், அனுஷ்டானம் தவறாதவன், கல்விமான்) பொறுத்தே போற்றப்படுவார்கள். சூத்திர வர்ணத்தில் (Employee) இருப்பவன், வயதை வைத்து போற்றப்படுவான்.


चक्रिणो दशमीस्थस्य 

रोगिणो भारिणः स्त्रियाः ।

स्नातकस्य च राज्ञश्च 

पन्था देयो वरस्य च ॥

- மனு ஸ்ம்ருதி

வண்டியில் ஏற வருபவருக்கும், 90 வயது தாண்டியவருக்கும், நோயாளிக்கும், சுமை தூக்கி வருபவனுக்கும், பெண்களுக்கும், படித்து பட்டம் பெற வருபவனுக்கும், அரசனுக்கும், கல்யாண மாப்பிள்ளைக்கும் வழி விட வேண்டும்.


तेषां तु समवेतानां मान्यौ स्नातकपार्थिवौ ।

राजस्नातकयोश्चैव स्नातको नृपमानभाक् ॥

- மனு ஸ்ம்ருதி

இவர்கள் 5 பெரும் ஒரே இடத்தில இருந்தால், படித்து பட்டம் பெற வருபவனுக்கும், அரசனுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவர்கள் இருவர் மட்டும் இருக்கும் போது, படித்து பட்டம் பெற வருபவனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


उपनीय तु यः शिष्यं वेदम् अध्यापयेद् द्विजः ।

सकल्पं सरहस्यं च तमाचार्यं प्रचक्षते ॥

- மனு ஸ்ம்ருதி

இரட்டை பிறப்பாளனுக்கு (க்ஷத்திரியன் (defence), பிராம்மணன் (MLA/MP), வைசியன் (businessman)) உபநயனம் செய்து வைத்து, வேதங்களை அத்யயனம் செய்து வைத்து தானும் அந்த ஒழுக்கத்தில் வாழ்பவரை  "ஆசார்யன்" என்று சொல்ல வேண்டும்.


एकदेशं तु वेदस्य वेदाङ्गान्यपि वा पुनः ।

योऽध्यापयति वृत्त्यर्थमुपाध्यायः स उच्यते ॥

- மனு ஸ்ம்ருதி

வேதத்தில் ஒரு சிறிய பாகத்தை (சூக்தங்கள்), அல்லது வேதாந்தங்களில் சிறிது பாகத்தை ஜீவனுத்துக்காக சொல்லி கொடுப்பவரே "உபாத்யாயர்" என்று அழைக்கப்படுகிறார்.


निषेकादीनि कर्माणि यः करोति यथाविधि ।

सम्भावयति चान्नेन स विप्रो गुरुरुच्यते ॥

- மனு ஸ்ம்ருதி

எந்த இரட்டை பிறப்பாளன் (க்ஷத்திரியன் (defence), பிராம்மணன் (MLA/MP), வைசியன் (businessman)) கர்ப்ப காலங்களில் செய்யப்படும் பும்ஸவனம் போன்ற ஸம்ஸ்காரங்களை செய்து வைத்து, சம்பாவனையாக காய் கறி உணவாக வாங்கி கொள்கிறாரோ, அவர் "குரு" என்று  அழைக்கப்படுகிறார். பாவங்களை அழித்து தான் வாங்கி கொள்பவர், குரு. 


अग्न्याधेयं पाकयज्ञानग्निष्टोमादिकान् मखान् ।

यः करोति वृतो यस्य स तस्यर्त्विगिहोच्यते ॥

- மனு ஸ்ம்ருதி

அக்னி ஆதேயம் போன்ற பாக யக்ஞயங்களை, அக்னி ஹோமம் போன்ற  யக்ஞயங்களை செய்து வைப்பவனுக்கு "ரித்விக்" என்று பெயர்.


य आवृणोत्यवितथं 

ब्रह्मणा श्रवणावुभौ ।

स माता स पिता ज्ञेयस्तं 

न द्रुह्येत् कदा चन ॥ 

- மனு ஸ்ம்ருதி

எவன் நம்முடைய காதை வேத மந்திரங்களால் நிரப்புகிறானோ, அவனே நமக்கு தாய், அவனே நமக்கு தந்தை. வேதம் ஓதுபவனுக்கு எப்போதும் துரோகம் செய்ய கூடாது.


उपाध्यायान् दशाचार्य आचार्याणां शतं पिता ।

सहस्रं तु पितॄन् माता गौरवेणातिरिच्यते ॥

- மனு ஸ்ம்ருதி

உபாத்யனை விட ஆசார்யன் 10 மடங்கு உயர்ந்தவர். ஆசார்யனை விட உபநயனம் முதல் அனைத்து சடங்குகளையும் நமக்கு செய்து வாய்த்த தந்தை 100 மடங்கு உயர்ந்தவர்.  தந்தையை விட தாய் 1000 மடங்கு உயர்ந்தவள்.


उत्पादक ब्रह्मदात्रोर्गरीयान् ब्रह्मदः पिता ।

ब्रह्मजन्म हि विप्रस्य प्रेत्य चैह च शाश्वतम् ॥ 

- மனு ஸ்ம்ருதி

இரண்டாவது பிறப்பு என்பதை கொடுப்பது உபநயனம். அதை செய்து வைத்தவ ஆசாரியர் தந்தையை விட உயர்ந்தவர். இரண்டாவது பிறப்பு (க்ஷத்ரிய/வைஸ்ய/பிராம்மண) இந்த உலகத்திலும், மேல் உலகத்திலும் நிரந்தரமான ப்ரம்ம பதத்தை தரும்.


कामान् माता पिता चैनं यदुत्पादयतो मिथः ।

सम्भूतिं तस्य तां विद्याद् यद् योनावभिजायते ॥

- மனு ஸ்ம்ருதி

தாயும் தந்தையும் காமத்தால் குழந்தையை பெற்றெடுக்கிறாள். அவர்களால் பிறந்ததால், "அவர்களது உற்பத்தியே இந்த உடல்" என்று உணர வேண்டும்


आचार्यस्त्वस्य यां जातिं विधिवद् वेदपारगः ।

उत्पादयति सावित्र्या सा सत्या साऽजराऽमरा ॥ 

- மனு ஸ்ம்ருதி

வேதத்தை நன்கு உணர்ந்த ஆசார்யர், தன் சிஷ்யனுக்கு "காயத்ரீ" மந்த்ர உபதேசம் செய்த பிறகே, அது அவனுக்கு ப்ரம்ம பதத்தை கொடுக்கும். ஆதலால் ஆசாரியரே ஸ்ரேஷ்டர்.


अल्पं वा बहु वा यस्य श्रुतस्यौपकरोति यः ।

तमपीह गुरुं विद्यात्श्रुतौपक्रियया तया ॥

- மனு ஸ்ம்ருதி

வேதத்தை கொஞ்சமோ, அதிகமாகவோ யார் சொல்லிக்கொடுத்தாலும், அதனால் நமக்கு கிடைத்த வித்யையின் பயனால், அவரையும் "குருவாக" எண்ண வேண்டும்.


ब्राह्मस्य जन्मनः कर्ता स्वधर्मस्य च शासिता ।

बालोऽपि विप्रो वृद्धस्य पिता भवति धर्मतः ॥ 

- மனு ஸ்ம்ருதி

தனக்கு உபநயனம் செய்து வைத்தவர், வேதத்தின் அர்த்தத்தை சொல்லி கொடுத்தவர் தன்னை விட வயது குறைந்தவராக இருந்தாலும், தர்மப்படி, அவரும் தந்தைக்கு நிகரானவராக கருத வேண்டும்.


अध्यापयामास पितॄन् शिशुराङ्गिरसः कविः ।

पुत्रका इति हौवाच ज्ञानेन परिगृह्य तान् ॥

- மனு ஸ்ம்ருதி

அங்கீரஸ ரிஷி, தன் சிறிய தந்தை (சித்தப்பா) முதலானோருக்கு வேதத்தை கற்பிக்கும் போது, ஞானத்தின் அடிப்படையில், தன்னை அந்த இடத்தில் தன்னை குருவாகவும், கற்றுக்கொள்பவர்களை சிஷ்யர்களாகவும் பார்த்தார். "என் பிள்ளைகளே" என்று சொல்லி அழைத்தார்.


ते तमर्थमपृच्छन्त देवानागतमन्यवः ।

देवाश्चैतान् समेत्यौचुर्न्याय्यं वः शिशुरुक्तवान् ॥ 

- மனு ஸ்ம்ருதி

இதை கண்டு கோபம் கொண்ட பித்ருக்கள் இது விஷயமாக தேவேந்திரனிடம் முறையிடடார்கள். தேவர்கள் அங்கீரஸன் "பிள்ளைகளே" என்று குரு ஸ்தானத்தில் கூப்பிட்டது சரியே என்று கூறினார்கள்.


अज्ञो भवति वै बालः पिता भवति मन्त्रदः ।

अज्ञं हि बालमित्याहुः पितेत्येव तु मन्त्रदम् ॥

- மனு ஸ்ம்ருதி

ஞானம் (கல்வி அறிவு) இல்லாதவன் சிறுவனே. வேத மந்த்ரங்களை அறிந்தவன் தந்தை ஸ்தானத்தில் இருக்கிறான். வேதம் அறியாதவனை வயதில் மூத்தவனாக இருந்தாலும் "பிள்ளாய்" என்றே குரு ஸ்தானத்தில் இருப்பவன் கூற வேண்டும். 


न हायनैर्न पलितैर्न वित्तेन न बन्धुभिः ।

ऋषयश्चक्रिरे धर्मं योऽनूचानः स नो महान् ॥

- மனு ஸ்ம்ருதி

வயதில் மூத்தவன் என்பதாலோ, முடி நரைத்து இருப்பதாலோ, பணக்காரன் என்பதாலோ, உறவினன் என்பதாலோ, ஒருவன் உயர்ந்தவன் என்று சொல்ல அவசியமில்லை. தர்மத்தை அறிந்து தன் வாழ்க்கையில் அதன் படி வாழ்பவனே உயர்ந்தவன் என்பது ரிஷிகளின் வாக்கு.


विप्राणां ज्ञानतो ज्यैष्ठ्यं क्षत्रियाणां तु वीर्यतः ।

वैश्यानां धान्यधनतः शूद्राणामेव जन्मतः ॥

- மனு ஸ்ம்ருதி

பிராம்மண வர்ணத்தில் இருப்பவனுக்கு வேத ஞானத்தால் உயர்வு. 

க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவனுக்கு வீர்யத்தால் உயர்வு.

வைஸ்ய வர்ணத்தில் இருப்பவனுக்கு தன-தானியங்கள் பெருகுவதால் உயர்வு.

சூத்திர வர்ணத்தில் (employee) இருப்பவனுக்கு வயது முதிர்ச்சியால் உயர்வு.


न तेन वृद्धो भवति 

येनास्य पलितं शिरः ।

यो वै युवाऽप्यधीयानस्तं 

देवाः स्थविरं विदुः ॥

- மனு ஸ்ம்ருதி

தலை நரைத்து விட்டதால் மட்டும் பிராம்மண வர்ணத்தில் இருப்பவன் மதிக்கப்பட வேண்டும் என்று இல்லை. சிறியவனாக இருந்தாலும் வேதம் கற்றவனே உயர்ந்தவன் என்று கருத வேண்டும் என்று தேவர்கள் பித்ருக்களுக்கு கூறினார்கள்.


यथा काष्ठमयो हस्ती यथा चर्ममयो मृगः ।

यश्च विप्रो अनधीयानस्त्रयस्ते नाम बिभ्रति ॥ 

- மனு ஸ்ம்ருதி

மரத்தால் செய்யப்பட்ட யானை, தோலால் செய்யப்பட்ட மான் பொம்மை, வேதத்தை கற்காத பிராம்மணன் மூவரும் பெயர் அளவில் யானை, மான், பிராம்மணன் என்று சொல்லிக்கொள்ளலாமே தவிர, வேறொன்றுமில்லை.


यथा षण्ढोऽफलः स्त्रीषु 

यथा गौर्गवि चाफला ।

यथा चाज्ञेऽफलं दानं 

तथा विप्रोऽनृचोऽफलः ॥

- மனு ஸ்ம்ருதி

நபும்ஸகன் (ஆண்மை அற்றவன்) பெண்கள் விஷயத்தில் எப்படி பயனற்றவனோ, பசுவிடம் பசு எப்படி பயனற்றதோ, தகுதி இல்லாதவனுக்கு கொடுக்கப்பட்ட தானம் எப்படி பயனற்றதோ, அது போல, வேதத்தை கற்காத பிராம்மணனும் பயனற்றவனே !


अहिंसयैव भूतानां कार्यं श्रेयोऽनुशासनम् ।

वाक् चैव मधुरा श्लक्ष्णा प्रयोज्या धर्ममिच्छता ॥  

- மனு ஸ்ம்ருதி

தர்மம் அறிந்த ஆசாரியன், தன் சிஷ்யனை காயப்படுத்தாமல், அன்போடும் இனிமையாகவும் பேசி சொல்லி தர வேண்டும்.


यस्य वाङ्मनसी शुद्धे सम्यग् गुप्ते च सर्वदा ।

स वै सर्वमवाप्नोति वेदान्तोपगतं फलम् ॥ 

- மனு ஸ்ம்ருதி

யார் தன்னுடைய வாக்கு, மனம் இரண்டையும் சுத்தமாகவும், கட்டுப்படுத்தியும் எப்பொழுதும் வைத்து இருக்கிறானோ, அவன் வேதத்தில் சொல்லப்பட்ட அனைத்து பலனையும் அடைகிறான்.


नारुन्तुदः स्यादार्तोऽपि 

न परद्रोहकर्मधीः ।

ययाऽस्योद्विजते वाचा 

नालोक्यां तामुदीरयेत् ॥ 

- மனு ஸ்ம்ருதி

தான் கஷ்டத்தில் இருந்தாலும், பிறர் மனம் நோக பேச கூடாது. பிறருக்கு துரோகம் விளைவிக்க கூடிய காரியத்தை நினைக்ககூட கூடாது. எந்த வார்த்தை பேசினால் அது மற்றவருக்கு பயத்தை தருமோ, அதை பேச கூடாது.


सम्मानाद् ब्राह्मणो

नित्यमुद्विजेत विषादिव ।

अमृतस्येव चाकाङ्क्षेद्

अवमानस्य सर्वदा ॥

- மனு ஸ்ம்ருதி

ப்ராம்மண வர்ணத்தில் (MLA/MP) இருப்பவன், பிறர் தன்னை போற்றினால், விஷம் என்று ஒதுக்கி விட வேண்டும். பிறர் தன்னை அவமானம் செய்தால், அதை அம்ருதம் என்று போல ஏற்று கொள்ள வேண்டும்.

सुखं ह्यवमतः शेते 

सुखं च प्रतिबुध्यते ।

सुखं चरति लोके'स्मिन्

अवमन्ता विनश्यति ॥

- மனு ஸ்ம்ருதி

எவன் தன்னை அவமானப்படுத்தியவனை கூட பகையாக பார்க்காமல் இருக்க பழகுகிறானோ, அவன் சுகமாக உறங்குவான். சுகமாக விழித்தெழுவான். சுகமாக சஞ்சரிப்பான். இவனை அவமானப்படுத்தியவன் தான் செய்த பாபத்தால் நாசத்தை அடைவான்.


अनेन क्रमयोगेन संस्कृतात्मा द्विजः शनैः ।

गुरौ वसन् सञ्चिनुयाद् ब्रह्माधिगमिकं तपः ॥

- மனு ஸ்மிருதி

இதுவரை சொல்லப்பட்ட பல விஷயங்களை, ஒரு கர்ம யோகி போல த்விஜன் (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) தன் குருவிடம் வசிக்கும் போது கடைபிடித்து கொண்டு இருக்க  வேண்டும்.


तपोविशेषै: विविधै: वृत्तैश्च विधिचोदितैः ।

वेदः कृत्स्नो अधिगन्तव्यः सरहस्यो द्विजन्मना ॥

- மனு ஸ்மிருதி

பிரம்மச்சாரியாக இருக்கும் த்விஜன் (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) இங்கு சொல்லப்பட்ட நியமங்களோடு (தபம்), விரதங்களை எல்லாம் கடைபிடித்துக்கொண்டு, வேதங்களை, உபநிஷத்துக்களை கற்க வேண்டும்.


वेदमेव सदा अभ्यस्येत् तपस्तप्यन् द्विजोत्तमः ।

वेद अभ्यासो हि विप्रस्य तपः परमिहौच्यते ॥

- மனு ஸ்மிருதி

தபஸ்வியாக இருக்க ஆசைப்படும் த்விஜன் (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) எப்போதும் வேதத்தை அத்யயனம் செய்ய வேண்டும். பிரம்மச்சாரியாக இருக்கும் விப்ரனுக்கு (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) வேதம் ஓதுதலே முதல் கடமை.


आ हैव स नखाग्रेभ्यः परमं तप्यते तपः ।

यः स्रग्व्यपि द्विजोऽधीते स्वाध्यायं शक्तितोऽन्वहम् ॥

- மனு ஸ்மிருதி

பிரம்மச்சர்ய வ்ரதம் முடிந்த பிறகும் வேதத்தை தினமும் ஓதுபவன், தலை முதல் கால் வரை தவம் செய்தவனாகிறான்.


योऽनधीत्य द्विजो वेदमन्यत्र कुरुते श्रमम् ।

स जीवन्नेव शूद्रत्वमाशु गच्छति सान्वयः ॥

- மனு ஸ்மிருதி

வேதம் ஓதாமல் மற்ற சாஸ்திரங்களை படிக்கும் த்விஜன் (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) சூத்திரனாகிறான் (employee). மேலும் அவன் வம்சத்தில் உள்ளவரையும் சூத்திரனாக்குகிறான்.


मातु: अग्रे अधिजननं द्वितीयं मौञ्जि-बन्धने ।

तृतीयं यज्ञ-दीक्षायां द्विजस्य श्रुतिचोदनात् ॥

- மனு ஸ்மிருதி

த்விஜனுக்கு (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) 3 பிறப்புகள் ஏற்படுகிறது. தாயிடமிருந்து பிறந்த போது ஒரு பிறப்பு. உபநயம் ஆன பிறகு, 2வது பிறப்பு. யக்ஞம் செய்யும் போது 3வது பிறப்பு ஏற்படுகிறது.


तत्र यद् ब्रह्म जन्म अस्य मौञ्जी बन्धन चिह्नितम् ।

तत्र अस्य माता सावित्री पिता त्व आचार्य उच्यते ॥

- மனு ஸ்மிருதி

பிராம்மண ஜென்மத்தை மவுஞ்ஜீ பந்தனமே நிர்ணயிக்கிறது. இந்த த்விஜனுக்கு (பிராம்மணன்) ஸாவித்ரீயே தாயாகிறாள். ஆசார்யனே தந்தையாகிறார்.


वेद प्रदानाद आचार्यं पितरं परिचक्षते ।

न ह्यस्मिन् युज्यते कर्म किञ्चिदा मौञ्जि बन्धनात् ॥

- மனு ஸ்மிருதி

வேதத்தை அளிப்பதால், ஆசார்யன் நமக்கு தந்தையாகிறார். மவுஞ்ஜீ பந்தனத்திற்கு முன், எந்த சாஸ்திர சடங்குகளும் செய்ய அதிகாரமில்லை.


नाभि व्याहारयेद् ब्रह्म स्वधानिनयनाद् ऋते ।

शूद्रेण हि समस्तावद् यावद् वेदे न जायते ॥

- மனு ஸ்மிருதி

உபநயனம் ஆவதற்கு முன், ஸ்ரார்த்த விஷய  மந்திரங்களை மட்டும் சொல்லலாம். மற்றபடி எந்த மந்திரமும் சொல்ல கூடாது. உபநயனம் ஆகும் வரை அனைவரும் சூத்திரனே (employee)


कृतौपनयनस्यास्य व्रतादेशनमिष्यते ।

ब्रह्मणो ग्रहणं चैव क्रमेण विधिपूर्वकम् ॥

- மனு ஸ்மிருதி

உபநயனம் ஆன பிறகு, சாஸ்திரம் சொல்லும் விரதங்களை கடைபிடிக்க வேண்டும். வேத ஓத வேண்டும்.


यद्यस्य विहितं चर्म यत् सूत्रं या च मेखला ।

यो दण्डो यत्च वसनं तत् तदस्य व्रतेष्वपि ॥

- மனு ஸ்மிருதி

மேலாடை, அரைஞாண், பூணூல், தண்டம், வஸ்திரம் போன்றவை முன்பு சொல்லப்பட்டபடி, அவரவர் வர்ணப்படி உபநயன காலத்தில் பிரம்மச்சாரி அணிந்து கொள்ள வேண்டும். கோ-தானம் போன்ற வ்ரத காலங்களிலும் புதிதாக அணிந்து கொள்ள வேண்டும்.


सेवेतैमांस्तु नियमान् ब्रह्मचारी गुरौ वसन् ।

सन्नियम्यैन्द्रियग्रामं तपोवृद्ध्यर्थमात्मनः ॥

- மனு ஸ்மிருதி

குருகுல வாசம் செய்யும் போது, பிரம்மச்சாரி புலன்களை நன்கு அடக்கியவனாக, நியமங்களை கடைபிடித்து கொண்டு இருக்க வேண்டும்.


नित्यं स्नात्वा शुचिः कुर्याद् देवर्षिपितृतर्पणम् ।

देवताभ्यर्चनं चैव समिदाधानमेव च ॥

- மனு ஸ்மிருதி

பிரம்மச்சாரி தினமும் நீராடி தூய்மையோடு, தேவ, ரிஷி, பித்ரு தர்ப்பணங்கள் கொடுக்க வேண்டும். பிறகு தெய்வ பூஜை செய்ய வேண்டும். ஸமிதா தானம் செய்ய வேண்டும்.


वर्जयेन् मधु मांसं च गन्धं माल्यं रसान् स्त्रियः ।

शुक्तानि यानि सर्वाणि प्राणिनां चैव हिंसनम् ॥

- மனு ஸ்மிருதி

பிரம்மச்சாரி தேன், மாமிசம் உண்ண கூடாது. சந்தனம் முதலான வாசனை திரவியங்களை பூசிக்கொள்ள கூடாது. மலர் மாலைகளை அணிய கூடாது. ஸ்ருங்காரம் போன்ற எந்த ரசமான விஷயங்களிலும் ஈடுபட கூடாது. பெண்களுடன் எந்த தொடர்பும் கூடாது. எந்த உயிரையும் கொல்ல கூடாது.


अभ्यङ्गमञ्जनं चाक्ष्णोरुपानच्छत्रधारणम् ।

कामं क्रोधं च लोभं च नर्तनं गीतवादनम् ॥

- மனு ஸ்மிருதி

எண்ணெய் தேய்த்து குளித்தல், கண்ணனுக்கு மை இடுதல், காலணி அணிதல், குடை பிடித்து கொள்ளுதல், காமம், கோபம், லோபம், நடனம், பாட்டு, வாத்தியம் வாசித்தல் என்ற செயல்களில் பிரம்மச்சாரி ஈடுபட கூடாது.


द्यूतं च जनवादं च परिवादं तथाऽनृतम् ।

स्त्रीणां च प्रेक्षणालम्भमुपघातं परस्य च ॥

- மனு ஸ்மிருதி

சூதாடுவது, பிறருடன் தேவை இல்லாமல் விவாதம் செய்வது, வம்பு பேச்சு, பிறரை திட்டுவது, பொய் பேசுவது, பெண்களை ஆசையோடு பார்ப்பது - அணைப்பது, பிறருக்கு தீங்கு இழைப்பது - இவை எதுவும் பிரம்மச்சாரி செய்ய கூடாது.


एकः शयीत सर्वत्र न रेतः स्कन्दयेत् क्व चित् ।

कामाद् हि स्कन्दयन् रेतो हिनस्ति व्रतमात्मनः ॥

- மனு ஸ்மிருதி

பிரம்மச்சாரி எங்கும் தனியாகவே படுக்க வேண்டும். காமத்தால் ரேதஸை விடுபவன், பிரம்மச்சர்யத்தை இழக்கிறான். இது நேர்ந்தால், பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும்.


स्वप्ने सिक्त्वा ब्रह्मचारी द्विजः शुक्रमकामतः ।

स्नात्वाऽर्कमर्चयित्वा त्रिः पुनर्मामित्यृचं जपेत् ॥

- மனு ஸ்மிருதி

காம எண்ணம் இல்லாமல், கனவினால் எதேச்சையாக ரேதஸ் வெளிப்பட்டால், மறுநாள் பிரம்மச்சாரி காலையில் நீராடி, சூரிய பகவானை பூஜித்து, "புனர்மா" என்ற ரிக்கை (வேத மந்திரம்) 3 முறை ஜபிக்க வேண்டும்.


उदकुम्भं सुमनसो गोशकृत्मृत्तिकाकुशान् ।

आहरेद् यावदर्थानि भैक्षं चाहरहश्चरेत् ॥

- மனு ஸ்மிருதி

குருவுக்கு தேவையான தண்ணீர், பூஜைக்கு தேவையான மலர்கள், பசுஞ்சாணம், மண், தர்ப்பை போன்றவற்றை கொண்டு வந்து தர வேண்டும். தினமும் பிக்ஷைக்கு செல்ல வேண்டும்.


वेदयज्ञैरहीनानां प्रशस्तानां स्वकर्मसु ।

ब्रह्मचार्याहरेद् भैक्षं गृहेभ्यः प्रयतोऽन्वहम् ॥

- மனு ஸ்மிருதி

குளித்து விட்ட பிறகு பிக்ஷைக்கு செல்ல வேண்டும். வேத அத்யயனம், பஞ்ச மஹா யக்ஞங்களை செய்யும் இல்லங்களுக்கு சென்று அந்த இல்லத்தாரிடம் பிக்ஷை பெற்று வர வேண்டும்.


गुरोः कुले न भिक्षेत न ज्ञातिकुलबन्धुषु ।

अलाभे त्वन्यगेहानां पूर्वं पूर्वं विवर्जयेत् ॥

- மனு ஸ்மிருதி

குருவினுடைய உறவினர் இல்லத்துக்கோ, குருவின் பங்காளிகளிடமோ சென்று பிக்ஷை கேட்க கூடாது. வேறு வழியே இல்லாத போது, குருவின் உறவினர் இல்லத்தில் பிக்ஷை ஏற்கலாம். அதற்கும் வழி இல்லாத போது, குருவின் பங்காளிகள் இல்லத்தில் பிக்ஷை ஏற்கலாம். அதுவும் இல்லாத போது, குருகுலத்திலேயே கொடுக்கப்படும் பிக்ஷையை ஏற்கலாம்.


सर्वं वापि चरेद् ग्रामं पूर्वौक्तानामसम्भवे ।

नियम्य प्रयतो वाचमभिशस्तांस्तु वर्जयेत् ॥

- மனு ஸ்மிருதி

முன்பு சொன்ன எங்கும் பிக்ஷை இல்லாத போது, பரிசுத்த மனதோடு, புலன்கள் அடங்கியவனாக கிராமத்துக்கு சென்று மெளனமாக நின்று பிக்ஷை கொடுத்தால் ஏற்க வேண்டும். பாபிகள் என்று கருதப்படும் இல்லங்களுக்கு சென்று பிக்ஷை ஏற்க கூடாது.


दूरादाहृत्य समिधः सन्निदध्याद् विहायसि ।

सायं।प्रातश्च जुहुयात् ताभिरग्निमतन्द्रितः ॥

- மனு ஸ்மிருதி

காட்டிலிருந்து ஸமித் (ஆலங்குச்சி), தர்ப்பைகளை கொண்டு வர வேண்டும்.வெற்று நிலத்தில் வைக்காமல், எதன் மீதாவது வைத்து உலர வைக்க வேண்டும். அவற்றை கொண்டே, பிரம்மச்சாரிகள் தினமும் ஸமிதா தானம் செய்ய வேண்டும்.


अकृत्वा भैक्षचरणमसमिध्य च पावकम् ।

अनातुरः सप्तरात्रम् अवकीर्णि-व्रतं चरेत् ॥

- மனு ஸ்மிருதி

உடம்பு சரியில்லாமல், பிக்ஷை அன்னத்தை சாப்பிடாமல், காலை மாலை ஸமிதா தானமும் செய்யாமல் 7 இரவுகள் கழித்தால், "அவ-கீர்ண" வ்ரதம் இருந்து பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும்.


भैक्षेण वर्तयेन्नित्यं नैकान्नादी भवेद् व्रती ।

भैक्षेण व्रतिनो वृत्तिरुपवाससमा स्मृता ॥

- மனு ஸ்மிருதி

பிரம்மச்சாரி ஒரே வீட்டுக்கு சென்று பிக்ஷை வாங்கி உண்ண கூடாது. வேறு வேறு இல்லங்களுக்கு சென்றே பிக்ஷை ஏற்க வேண்டும். இப்படி பிக்ஷை ஏற்பதே ஒரு உபவாசமாக கருதப்படும் என்று சான்றோர் கூறுவர்.


व्रतवद् देवदैवत्ये पित्र्ये कर्मण्यथर्षिवत् ।

काममभ्यर्थितोऽश्नीयाद् व्रतमस्य न लुप्यते ॥

- மனு ஸ்மிருதி

யாகத்திற்கு, ஸ்ரார்த்தங்களுக்கோ செல்லும் பிரம்மச்சாரி, தனது விரதத்துக்கு பங்கம் ஏற்படாத படி, சாப்பிட கூடாதவற்றை தவிர்த்து விட்டு மற்றதை உண்ணலாம். இதனால் விரத பங்கம் ஏற்படாது.


ब्राह्मणस्यैव कर्मैतदुपदिष्टं मनीषिभिः ।

राजन्यवैश्ययोस्त्वेवं नैतत् कर्म विधीयते ॥

- மனு ஸ்மிருதி

ஒரே வீட்டிற்கு சென்று பிக்ஷை ஏற்க கூடாது என்பது பிராம்மண வர்ணத்தில் இருக்கும் ப்ரம்மச்சாரிக்கே விதி. க்ஷத்ரிய மற்றும் வைஸ்ய வர்ணத்தில் இருக்கும் ப்ரம்மச்சாரிகளுக்கு இந்த விதி இல்லை.


चोदितो गुरुणा नित्यमप्रचोदित एव वा ।

कुर्यादध्ययने यत्नमाचार्यस्य हितेषु च ॥

- மனு ஸ்மிருதி

குரு சொன்னாலும், சொல்லாவிட்டாலும் வேத அத்யயனம் தினமும் செய்ய வேண்டும். குருவுக்கு தேவையான பணிவிடைகள் ப்ரம்மச்சாரி செய்ய வேண்டும்.


शरीरं चैव वाचं च बुद्धीन्द्रियमनांसि च ।

नियम्य प्राञ्जलिस्तिष्ठेद् वीक्षमाणो गुरोर्मुखम् ॥

- மனு ஸ்மிருதி

உடல், புத்தி, புலன்கள், மனம் இவை அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு, குரு எந்த நேரம் என்ன உபதேசம் செய்வாரோ என்று அவர் முகத்தையே பார்த்து கொண்டு இருக்க வேண்டும்.


नित्यमुद्धृतपाणिः स्यात् साध्वाचारः सुसंवृतः ।

आस्यतामिति चौक्तः सन्नासीताभिमुखं गुरोः ॥

- மனு ஸ்மிருதி

ஆடையால் உடலை மறைத்து கொண்டு, தனது வலது தோள் வெளியே தெரியும் படியாக மேலாடையை போர்த்தி கொண்டு தூய்மையுடையவனாக குரு உட்கார சொன்ன பிறகு, அவர் எதிரே அமர வேண்டும்.


हीनान्न वस्त्रवेषः स्यात् सर्वदा गुरुसन्निधौ ।

उत्तिष्ठेत् प्रथमं चास्य चरमं चैव संविशेत् ॥

- மனு ஸ்மிருதி

குறைவான சாப்பாடு, சாதாரண ஆடை அலங்காரத்துடன் இருக்க வேண்டும். குருவுக்கு முன் எழுந்து விட வேண்டும். அவர் உறங்கிய பின் தான் உறங்க செல்ல வேண்டும்.


प्रतिश्रावणसम्भाषे शयानो न समाचरेत् ।

नासीनो न च भुञ्जानो न तिष्ठन्न पराङ्मुखः ॥

- மனு ஸ்மிருதி

படுத்தபடியோ, உட்கார்ந்து கொண்டோ, சாப்பிட்டு கொண்டோ, பாராமுகமாகவோ குருவின் சொல்லுக்கு  பதில் அளிக்க கூடாது.


आसीनस्य स्थितः कुर्यादभिगच्छंस्तु तिष्ठतः ।

प्रत्युद्गम्य त्वाव्रजतः पश्चाद् धावंस्तु धावतः ॥

- மனு ஸ்மிருதி

குரு ஆசனத்தில் இருந்து பேசும் போது, சிஷ்யன் நின்று கொண்டும், குரு நின்றபடி பேசினால், அவர் எதிரே சென்றும், நடந்து வரும் போது பேசினால், அவரை எதிர்கொண்டு சென்றும், விரைந்தபடி பேசினால் ஓடி சென்று அவரை பின்பற்றியும், அவர் சொன்னதற்கு காரியத்தை செய்யவோ, பதிலளிக்கவோ வேண்டும்.


पराङ्मुखस्याभिमुखो दूरस्थस्येत्य चान्तिकम् ।

प्रणम्य तु शयानस्य निदेशे चैव तिष्ठतः ॥

- மனு ஸ்மிருதி

குரு வேறு விஷயத்தில் கவனம் செலுத்தும் போது, சிஷ்யன் அவர் எதிரில் சென்று நின்று கொண்டும், குரு தூரத்தில் இருந்தால் அருகில் சென்று நின்று கொண்டும், குரு படுத்து கொண்டு இருக்கும் போது, அவரை வணங்கியபடியும், நின்று கொண்டிருக்கும் போது சற்று தள்ளி நின்று கொண்டும், அவருடைய கட்டளையை செய்யவும், பதிலளிக்கவும் காத்து இருக்க வேண்டும்.


नीचं शय्याऽऽसनं चास्य नित्यं स्याद् गुरुसन्निधौ ।

गुरोस्तु चक्षुर्विषये न यथेष्टासनो भवेत् ॥

- மனு ஸ்மிருதி

குருவின் ஆசனம், படுக்கையை விட, சிஷ்யனின் ஆசனம், படுக்கை தாழ்ந்து இருக்க வேண்டும். குருவின் கண் எதிரில் தன் இஷ்டத்துக்கு உட்கார கூடாது.


नौदाहरेदस्य नाम परोक्षमपि केवलम् ।

न चैवास्यानुकुर्वीत गतिभाषितचेष्टितम् ॥ 

- மனு ஸ்மிருதி

குரு எதிரில் இல்லாத போதும், அவர் பெயரை கூற கூடாது. குரு இல்லாத போது அவரை போன்று பேசியும், நடந்தும் அவரை போலவே செய்தும் பரிகாசம் செய்ய கூடாது.


गुरोर्यत्र परिवादो निन्दा 

वाऽपि प्रवर्तते ।

कर्णौ तत्र पिधातव्यौ 

गन्तव्यं वा ततोऽन्यतः ॥

- மனு ஸ்மிருதி

தன் குருவை பற்றி பிறர் கெட்டதாகவோ, திட்டியோ பேசுவதை கேட்க நேர்ந்தால், உடனே தன் காதுகளை மூடிக்கொண்டு விட வேண்டும். அல்லது, உடனே அந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்கு சென்று விட வேண்டும்.


परीवादात् खरो भवति 

श्वा वै भवति निन्दकः ।

परिभोक्ता कृमिर्भवति 

कीटो भवति मत्सरी ॥

- மனு ஸ்மிருதி

தன் குருவின் மீது பழி சுமத்தினால், அடுத்த ஜென்மத்தில் கழுதையாக பிறப்பான். குருவை நிந்தனை செய்தால், நாயாக பிறப்பான். குருவின் செல்வத்தை எடுத்து வாழ்பவன், அடுத்த ஜென்மத்தில் புழுவாக பிறப்பான். குருவை கண்டு பொறாமைப்படுபவன், அடுத்த ஜென்மத்தில் பூச்சியாக பிறப்பான்.


दूरस्थो नार्चयेदेनं न क्रुद्धो नान्तिके स्त्रियाः ।

यानासनस्थश्चैवैनमवरुह्याभिवादयेत् ॥

- மனு ஸ்மிருதி

குரு எட்டி இருக்கும் போதும், கோபத்தில் இருக்கும் போதும், தன் மனைவியிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதும், வணங்க  கூடாது. குரு அமர்ந்த பிறகு, அருகில் சென்று நமஸ்கரிக்க வேண்டும்.


प्रतिवातेऽनुवाते च नासीत गुरुणा सह ।

असंश्रवे चैव गुरोर्न किंचिदपि कीर्तयेत् ॥

- மனு ஸ்மிருதி

எதிர்காற்று வீசும்படியாகவோ, பின்னிருந்து காற்று வீசும்படியோ, குருநாதர் எதிரில் அமர கூடாது. குருநாதர் கவனிக்காத போது, எதையும் அவரிடம் பேச கூடாது.


गोऽश्वौष्ट्रयानप्रासादप्रस्तरेषु कटेषु च ।

आसीत गुरुणा सार्धं शिलाफलकनौषु च ॥

- மனு ஸ்மிருதி

மாட்டு வண்டி, குதிரை வண்டி, ஒட்டகம் பூட்டிய வண்டி, மேடை, பாறை, பாய், கல், பலகை, படகு போன்றவற்றில் அமர நேர்ந்தால் மட்டும், குருவோடு சமமாக அமரலாம்.


गुरोर्गुरौ सन्निहिते गुरुवद् वृत्तिमाचरेत् ।

न चानिसृष्टो गुरुणा स्वान् गुरूनभिवादयेत् ॥ 

- மனு ஸ்மிருதி

குருவினுடைய குரு வந்தால், குருவுக்கு மரியாதை செய்வதை போலவே வணங்க வேண்டும். தான் குருகுலத்தில் இருக்கும் போது, தாய் தந்தையர் வந்தால், குரு அனுமதி இல்லாமல், அபிவாதனம் செய்ய கூடாது.


विद्यागुरुष्वेवमेव नित्या वृत्तिः स्वयोनिषु ।

प्रतिषेधत्सु चाधर्माद् हितं चोपदिशत्स्वपि ॥ 

- மனு ஸ்மிருதி

தன் குருவை தவிர்த்து, பிற உபாத்யாயர்கள், பெரியப்பா, சித்தப்பா, பாவம் செய்யாமல் தர்மத்தை சொல்லி தடுத்தவர், நல்லதை போதிப்பவர் போன்றோர் வந்தாலும், குரு அனுமதித்த பிறகே அபிவாதனம் செய்ய வேண்டும்.


श्रेयःसु गुरुवद् वृत्तिं नित्यमेव समाचरेत् ।

गुरुपुत्रेषु चार्येषु गुरोश्चैव स्वबन्धुषु ॥

- மனு ஸ்மிருதி

தவம் கல்வி இவைகளில் உயர்ந்தவர்களிடமும், தன்னை விட வயதில் மூத்த குருபுத்ரர்களிடமும், குருவின் சுற்றத்தாரிடமும், தன் சுற்றத்தாரிடமும், குருவிடம் காட்டும் மரியாதை போலவே மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.


बालः समानजन्मा वा शिष्यो वा यज्ञकर्मणि ।

अध्यापयन् गुरुसुतो गुरुवत्मानमर्हति ॥

- மனு ஸ்மிருதி

தன்னை விட வயதில் சிறியவனாகவே இருந்தாலும், தன் வயதுக்கு ஒத்தவனாகவே இருந்தாலும், தன் சிஷ்யனாகவே இருந்தாலும், குருவின் புத்திரன் யாகம் செய்ய வந்தால், குருவை போல கௌரவிக்க வேண்டும்.


उत्सादनं च गात्राणां स्नापनौच्छिष्टभोजने ।

न कुर्याद् गुरुपुत्रस्य पादयोश्चावनेजनम् ॥

- மனு ஸ்மிருதி

குரு புத்ரன் யாகம் செய்ய வந்தால், அவருக்கு சந்தனம் பூசியோ, குளிக்க ஏற்பாடுகள் செய்தோ, அவருடைய உச்சிஷ்டத்தை எடுத்து கொள்ளவோ, பாதங்களுக்கு பூஜை செய்யவோ அவசியமில்லை.


गुरुवत् प्रतिपूज्याः स्युः सवर्णा गुरुयोषितः ।

असवर्णास्तु सम्पूज्याः प्रत्युत्थानाभिवादनैः ॥

- மனு ஸ்மிருதி

தன் வர்ணத்தை சேர்ந்த குரு பத்தினியாக இருந்தால், அவரையும் குருவை போல பூஜிக்க வேண்டும். மாற்று வர்ணமாக குரு பத்னி இருந்தால், எதிர்கொண்டு அழைப்பது, அபிவாதனம் செய்தல் இவற்றை மட்டும் செய்ய வேண்டும்.


अभ्यञ्जनं स्नापनं च गात्रोत्सादनमेव च ।

गुरुपत्न्या न कार्याणि केशानां च प्रसाधनम् ॥ 

- மனு ஸ்மிருதி

குரு பத்னிக்கு தலைக்கு எண்ணெய் தேய்த்து விடுதல், நீராட்டுதல், சந்தனம் பூசுதல், தலை சீவுதல், செய்ய கூடாது.


गुरुपत्नी तु युवतिर्नाभिवाद्यैह पादयोः ।

पूर्णविंशतिवर्षेण गुणदोषौ विजानता ॥

- மனு ஸ்மிருதி

குரு பத்னி இளம் பெண்ணாக இருந்தால், 20 வயது கடந்த குண தோஷங்கள் அறிந்த சிஷ்யன் அபிவாதனம் செய்யும் போது, குருபத்னியின் காலை தொட்டு வணங்க கூடாது.


स्वभाव एष नारीणां 

नराणाम् इह दूषणम् ।

अतोऽर्थान्न प्रमाद्यन्ति 

प्रमदासु विपश्चितः ॥

- மனு ஸ்மிருதி

ஆண்களை தடுமாற செய்யும் தன்மை பெண்களுக்கு உண்டு. இதை உணர்ந்து, பெண்கள் விஷயத்தில் எந்த நிலையிலும் தடுமாறாமல் இருக்க வேண்டும்.


अविद्वांसम् अलं लोके 

विद्वांसम् अपि वा पुनः ।

प्रमदा ह्युत्पथं नेतुं 

कामक्रोध वश अनुगम् ॥ 

- மனு ஸ்மிருதி

படித்தவனையும்,  படிக்காதவனையும் காமத்திலும் கோபத்திலும் விழ வைக்கும் சக்தி பெண்களிடம் இயற்கையாகவே உண்டு.

मात्रा स्वस्रा दुहित्रा वा 
न विविक्तासनो भवेत् ।
बलवान् इन्द्रियग्रामो 
विद्वांसम् अपि कर्षति ॥ 
- மனு ஸ்மிருதி
புலன்கள் மிகவும் பலம் வாய்ந்தது. நல்லது கெட்டது அறிந்த விவேகியையும், புலன்கள் தவறான வழிக்கு கொண்டு சென்று விடும். எனவே புலன்கள் பலம் பெற்றவன், தாய், சகோதரி, மகள் இவர்களிடம் கூட தனித்து இருக்க கூடாது.

कामं तु गुरुपत्नीनां युवतीनां युवा भुवि ।
विधिवद् वन्दनं कुर्यादसावहमिति ब्रुवन् ॥
- மனு ஸ்மிருதி
குருவின் பத்னி இளம் வயதாக இருந்தால், வாலிப வயதில் இருக்கும் சிஷ்யன், கால்களை தொடாமல், விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். 

विप्रोष्य पादग्रहणमन्वहं चाभिवादनम् ।
गुरुदारेषु कुर्वीत सतां धर्ममनुस्मरन् ॥
- மனு ஸ்மிருதி
குருவின் பத்னி வயது முதிர்ந்தவராக இருந்தால், சிஷ்யன் காலை தொட்டு அபிவாதனம் செய்ய வேண்டும்.

यथा खनन् खनित्रेण नरो वार्यधिगच्छति ।
तथा गुरुगतां विद्यां शुश्रूषुरधिगच्छति ॥
- மனு ஸ்மிருதி
மண்வெட்டியால் பூமியை தோண்டுபவன், தண்ணீரை பெறுவதை போல, குருவுக்கு சேவை செய்பவன், கல்வியை பெறுகிறான்.

मुण्डो वा जटिलो वा स्यादथ वा स्यात्शिखाजटः ।
नैनं ग्रामेऽभिनिम्लोचेत् सूर्यो नाभ्युदियात् क्व चित् ॥
- மனு ஸ்மிருதி
பிரம்மச்சாரி மொட்டை தலையோடு இருக்கலாம். அல்லது குடுமி  வைத்து இருக்கலாம். அல்லது சிறிது முடியை வைத்து கொண்டு அதை பின்னிக்கொண்டு மற்ற இடத்தை மொட்டையடித்து கொண்டும் இருக்கலாம். பிரம்மச்சாரி பார்க்காமல் சூரியன் உதிக்கவும் கூடாது, அஸ்தமிக்கவும் கூடாது. அதாவது, பிரம்மச்சாரி இந்த சமயங்களில் தூங்கிக்கொண்டு இருக்க கூடாது என்று பொருள்.


तं चेदभ्युदियात् सूर्यः शयानं कामचारतः ।

निम्लोचेद् वाऽप्यविज्ञानाज् जपन्नुपवसेद् दिनम् ॥  

- மனு ஸ்மிருதி

சூரிய உதய சமயத்தில் பிரம்மச்சாரி தூங்கினான் என்றால், பகல் முழுவதும் உண்ணாமல், காயத்ரீ மந்திரத்தை ஜபித்து கொண்டு இருக்க வேண்டும். சூரியன் மறையும் சந்தி வேளையில் பிரம்மச்சாரி தூங்கினால், அடுத்த நாள் முழுவதும் உண்ணாமல் இருந்து, காயத்ரீ மந்திரத்தை ஜபித்து கொண்டு இருக்க வேண்டும்


सूर्येण ह्यभिनिर्मुक्तः शयानोऽभ्युदितश्च यः ।

प्रायश्चित्तमकुर्वाणो युक्तः स्यान् महतेनसा ॥ 

- மனு ஸ்மிருதி

சூரிய உதய காலத்திலும், சூரிய அஸ்தமன காலத்திலும் தூங்கும் பிரம்மச்சாரி , பெரும் பாதகத்தை ஏற்கிறான். அதற்கு பிராயச்சித்தம் செய்யாது போனால், அவன் மகாபாபம் செய்தவனாகிறான்.


आचम्य प्रयतो नित्यमुभे सन्ध्ये समाहितः ।

शुचौ देशे जपञ्जप्यमुपासीत यथाविधि ॥

- மனு ஸ்மிருதி

சூரிய உதய காலத்திலும், சூரிய அஸ்தமன காலத்திலும், ஆசமனம் செய்து சுத்தமாக்கி கொண்டு, தூய்மையான இடத்தில அமர்ந்து, வேறு சிந்தனைகள் இல்லாமல், முறையாக காயத்ரீ மஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.


यदि स्त्री यद्यवरजः श्रेयः किं चित् समाचरेत् ।

तत् सर्वमाचरेद् युक्तो यत्र चास्य रमेन् मनः ॥

- மனு ஸ்மிருதி

பெண்ணாக இருந்தாலும், சூத்திரனாக இருந்தாலும், அவர்கள் நல்ல காரியங்கள் செய்தால், அந்த செயலை நன்கு ஆராய்ந்த பிறகு, தன் மனதுக்கும் ஏற்று, சாஸ்திரத்துக்கு விரோதமில்லாமல் இருந்தால், அந்த காரியங்களை தானும் செய்யலாம்.


धर्मार्थावुच्यते श्रेयः कामार्थौ धर्म एव च ।

अर्थ एवैह वा श्रेयस्त्रिवर्ग इति तु स्थितिः ॥ 

- மனு ஸ்மிருதி

அறம் பொருள் இரண்டே உயர்ந்தது என்பார்கள் சிலர். இன்பமும் அறமுமே உயர்ந்தது என்பார்கள் சிலர். பொருளே சிறந்தது என்பார்கள் சிலர். மூன்றுமே உயர்ந்தது தான் என்பது எனது தீர்மானம்.

आचार्यश्च पिता चैव 

माता भ्राता च पूर्वजः ।

नार्तेनापि अवमन्तव्या 

ब्राह्मणेन विशेषतः ॥

- மனு ஸ்மிருதி

எந்த ஒரு கஷ்ட நிலை ஏற்பட்டாலும், தனது குருவையோ, தந்தையையோ, தாயையோ, சகோதரனையோ அவமானப்படுத்த கூடாது. அதிலும் பிராம்மண வர்ணத்தில் இருப்பவன் இதை செய்யவே கூடாது.


आचार्यो ब्रह्मणो मूर्तिः 

पिता मूर्तिः प्रजापतेः ।

माता पृथिव्या मूर्तिस्तु 

भ्राता स्वो मूर्तिः आत्मनः ॥

- மனு ஸ்மிருதி

ஆசார்யனை பரமாத்மாவாக (அறிவை கொடுத்தவர்) பார்க்க வேண்டும். தந்தையை ப்ரம்ம தேவனாக (நம்மை படைத்தவர்) பார்க்க வேண்டும். தாயை பூமாதேவியாக (கருவில் தாங்கியவள்) பார்க்க வேண்டும். சகோதரனை தன்னுடைய ஆத்ம ஸ்வரூபமாக பார்க்க வேண்டும்.


यं माता-पितरौ क्लेशं 

सहेते सम्भवे नृणाम् ।

न तस्य निष्कृतिः शक्या 

कर्तुं वर्ष-शतैः अपि ॥ 

- மனு ஸ்மிருதி

தாயும் தந்தையும் பிள்ளையை பெற்று, வளர்த்து, கல்வி கற்கும் வரை பட்ட பாடுகளுக்கு, பிள்ளை எத்தனை  பிறவி எடுத்தாலும், இந்த நன்றி கடனை தீர்க்க முடியாது.


तयोर्नित्यं प्रियं कुर्यादाचार्यस्य च सर्वदा ।

तेष्वेव त्रिषु तुष्टेषु तपः सर्वं समाप्यते ॥

- மனு ஸ்மிருதி

தாய் தந்தை ஆசார்யன் இந்த மூவருக்கும் நம்மிடம் ப்ரியம் ஏற்படுமாறு  நடந்து கொள்ள வேண்டும். இவர்கள் ப்ரீதி அடைந்தால், இவன் செய்யும் அனைத்து தவமும் பலன் கொடுக்க ஆரம்பிக்கும்.


तेषां त्रयाणां शुश्रूषा 

परमं तप उच्यते ।

न तैरनभ्यनुज्ञातो 

धर्ममन्यं समाचरेत् ॥

- மனு ஸ்மிருதி

இந்த மூவருக்கு (தாய், தந்தை, குரு) பணிவிடை செய்வதே மேலான தவம். அவர்கள் அனுமதி கொடுக்காத பட்சத்தில் எந்த புண்ணிய கர்மாவும் செய்யலாகாது.


त एव हि त्रयो लोकास्त एव त्रय आश्रमाः ।

त एव हि त्रयो वेदास्त एवौक्तास्त्रयोऽग्नयः ॥ 

- மனு ஸ்மிருதி

தாய் தந்தை ஆசார்யன் - இவர்களே மூன்று உலகங்கள். இவர்களே மூன்று ஆஸ்ரமங்கள் (பிரம்மச்சர்ய, கிருஹஸ்த, வானப்ரஸ்த), இவர்களே மூன்று வேதங்கள், இவர்களே மூன்று அக்னிகள் (முத்தீ) என்று பார்க்க வேண்டும்.


पिता वै गार्हपत्योऽग्निर्माताऽग्निर्दक्षिणः स्मृतः ।

गुरुराहवनीयस्तु साऽग्नित्रेता गरीयसी ॥ 

- மனு ஸ்மிருதி

தந்தையே கார்ஹ-பத்யம் என்ற அக்னி, தாயே தக்ஷிண அக்னி, குருவே ஆஹவநீய அக்னி. இப்படி அக்னி ஸ்வரூபமாக இவர்களை பார்க்க வணங்க வேண்டும்.


त्रिष्वप्रमाद्यन्नेतेषु त्रीन् लोकान् विजयेद् गृही ।

दीप्यमानः स्ववपुषा देववद् दिवि मोदते ॥ 

- மனு ஸ்மிருதி

இந்த மூவரிடமும் (குரு, தந்தை, தாய்) மனம் கோணாமல் நடப்பவனே, மூவுலகங்களிலும் உயர்ந்தவன். இவன் மேலுலகம் செல்லும் போது, திவ்ய சரீரத்தை பெற்று சூரியன் முதலான தேவர்களை போல, விண்ணுலகிலும் ஒளிர்வான்.


इमं लोकं मातृ-भक्त्या 

पितृ-भक्त्या तु मध्यमम् ।

गुरु-शुश्रूषया त्वेवं 

ब्रह्मलोकं समश्नुते ॥

- மனு ஸ்மிருதி

தாயிடம் கொண்ட பக்தியால் இந்த உலகத்தையும், தந்தையிடம் கொண்ட பக்தியால் தேவ உலகத்தையும், குருவுக்கு சேவை செய்வதால், ப்ரம்ம லோகத்தையும் நிச்சயம் அடைவான்.

सर्वे तस्यादृता धर्मा 

यस्यैते त्रय आदृताः ।

अनादृतास्तु यस्यैते

सर्वास्तस्याफलाः क्रियाः ॥

- மனு ஸ்மிருதி

தாய், தந்தை, குரு மூவரையும் ஆதரிப்பவனுக்கு, அவன் படித்த சகல தர்மமும், சாஸ்திர காரியங்களும் பலனை தரும். ஆதரிக்காதவனுக்கு, அவன் செய்யும் தர்மமும், சாஸ்திர காரியங்களும் பலனை தராது.


यावत् त्रयस्ते जीवेयुः

तावत्नान्यं समाचरेत् ।

तेष्वेव नित्यं शुश्रूषां 

कुर्यात् प्रियहिते रतः ॥ 

- மனு ஸ்மிருதி

தாய், தந்தை, குரு - மூவரும் ஜீவித்து இருக்கும் காலம் வரை, அவர்கள் அனுமதி இல்லாமல் எந்த தர்ம காரியமும் செய்ய கூடாது. தினமும் அவர்களுக்கு பிடித்தபடி நன்மையான காரியங்களை செய்து கொண்டு சேவை செய்ய வேண்டும்.


तेषामनुपरोधेन पारत्र्यं यद् यदाचरेत् ।

तत् तन्निवेदयेत् तेभ्यो मनोवचनकर्मभिः ॥ 

- மனு ஸ்மிருதி

தாய், தந்தை, குரு - மூவருக்கும் செய்ய வேண்டிய சேவைகளை செய்து கொண்டே, தான் நல்லுலகை பெறுவதற்கான காரியங்களை செய்ய வேண்டும். அதை அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.


त्रिष्वेतेष्वितिकृत्यं हि पुरुषस्य समाप्यते ।

एष धर्मः परः साक्षादुपधर्मोऽन्य उच्यते ॥

- மனு ஸ்மிருதி

தாய், தந்தை, குரு - மூவருக்கும் சேவை செய்வதே முக்கிய தர்மம். மற்ற தர்மங்கள் அனைத்தும் அடுத்தபடி தான்.


श्रद्दधानः शुभां विद्यामाददीतावरादपि ।

अन्यादपि परं धर्मं स्त्रीरत्नं दुष्कुलादपि ॥

- மனு ஸ்மிருதி

ஈடுபாடு (ஸ்ரத்தை) இருந்தால், தன்னை விட கீழானவனாக இருந்தாலும், அவனிடமிருந்து கல்வி கற்கலாம். தீய குலத்தில் பிறந்தவளானாலும் (வர்ணத்தை சொல்லவில்லை), தர்மம் தெரிந்தவளாக இருந்தால், அந்த பெண்ணை மணம் செய்து கொள்ளலாம்.


विषादप्यमृतं ग्राह्यं बालादपि सुभाषितम् ।

अमित्रादपि सद्वृत्तममेध्यादपि काञ्चनम् ॥ 

- மனு ஸ்மிருதி

விஷத்தில் அம்ருதம் கிடைக்குமென்றால் அதை ஏற்கலாம். சிறுவனிடத்தில் நீதி இருந்தாலும் அதை ஏற்கலாம். நல்லொழுக்கத்தை பகைவன் சொன்னாலும் ஏற்கலாம். அசுத்தத்தில் தங்கம் இருந்தாலும் ஏற்கலாம்.


स्त्रियो रत्नान्यथो विद्या धर्मः शौचं सुभाषितम् ।

विविधानि च शिल्पानि समादेयानि सर्वतः ॥ 

- மனு ஸ்மிருதி

தர்மத்திற்கு விரோதமில்லாத பெண், ரத்தினம், கல்வி, தர்மம், ஒழுக்கம், நீதி போதனைகள், பற்பல கலைகள் - எங்கிருந்து கிடைத்தாலும் ஏற்கலாம்.


अब्राह्मण अदध्यायनम्

आपत्काले विधीयते ।

अनुव्रज्या च शुश्रूषा 

यावदध्यायनं गुरोः ॥

- மனு ஸ்மிருதி

பிராம்மண வர்ணத்தில் ஆசார்யன் கிடைக்காத போது, க்ஷத்ரிய வர்ணத்தில் அல்லது வைஸ்ய வர்ணத்தில் இருக்கும் ஆசார்யனிடமும் வேதம் கற்றுக்கொள்ளலாம். கற்கின்ற வரை அந்த குருவுக்கு பணிவிடை செய்ய வேண்டும்.


नाब्राह्मणे गुरौ शिष्यो वासमात्यन्तिकं वसेत् ।

ब्राह्मणे वाऽननूचाने काङ्क्षन् गतिमनुत्तमाम् ॥

- மனு ஸ்மிருதி

த்விஜனாக இருக்கும் பிரம்மச்சாரி மோக்ஷத்தை விரும்பினால், தன்னுடைய குரு பிராம்மண வர்ணத்தில் இல்லாதவராக இருக்கும் பட்சத்தில், அல்லது பிராம்மண வர்ணத்தில் இருந்தும் அனுஷ்டானங்கள் இல்லாத குருவாக இருக்கும் பட்சத்தில், படித்து முடித்த பிறகும் அவர் கூடவே இருந்து பணிவிடைகள் செய்ய கூடாது. 


यदि त्वात्यन्तिकं वासं रोचयेत गुरोः कुले ।

युक्तः परिचरेदेनमा शरीरविमोक्षणात् ॥

- மனு ஸ்மிருதி

உயிருள்ளவரை ப்ரம்மச்சாரியாகவே இருப்பேன் என்று நினைக்கும் பிரம்மச்சாரி, குருகுலத்தில் வசித்தபடியே, புலன் அடக்கத்தோடு, குருவுக்கு சேவை செய்து கொண்டு இருக்கலாம்.


आ समाप्तेः शरीरस्य यस्तु शुश्रूषते गुरुम् ।

स गच्छत्यञ्जसा विप्रो ब्रह्मणः सद्म शाश्वतम् ॥

- மனு ஸ்மிருதி

உடல் பூமியில் விழும் வரை குருவுக்கு சேவை செய்தே வாழ்பவன், நிரந்தரமாக பிரம்மத்தை (மோக்ஷம்) அடைவான்.


न पूर्वं गुरवे किं चिदुपकुर्वीत धर्मवित् ।

स्नास्यंस्तु गुरुणाऽज्ञप्तः शक्त्या गुर्व्र्थमाहरेत् ॥

- மனு ஸ்மிருதி

வேதம் படிப்பதற்கு முன், குருவுக்கு சிஷ்யன் சிறிதளவும் கூட குரு தக்ஷிணை கொடுக்க கூடாது. வேத அத்யயனம் முடிந்த பிறகு, பிரம்மச்சர்யத்தை விட்டு கிருஹஸ்த தர்மத்தை ஏற்க விரும்பி, குருவிடம் அனுமதி கேட்கும் பொழுது, குரு கேட்பதை கொடுக்க வேண்டும்.


क्षेत्रं हिरण्यं गामश्वं छत्रौपानहमासनम् ।

धान्यं शाकं च वासांसि गुरवे प्रीतिमावहेत् ॥

- மனு ஸ்மிருதி

பூமி தானம், தங்கம், பசுக்கள், குதிரைகள் (வாகனம்), குடை, பாதுகை, ஆசனம், தானியங்கள், காய்கனிகள், ஆடைகள் குருவுக்கு கொடுத்தால், அவர் ப்ரீதி அடைவார்.


आचार्ये तु खलु प्रेते गुरुपुत्रे गुणान्विते ।

गुरुदारे सपिण्डे वा गुरुवद् वृत्तिमाचरेत् ॥ 

- மனு ஸ்மிருதி

ப்ரம்மச்சாரியாகவே இருப்பேன் என்று இருக்கும் சிஷ்யன், ஒரு வேலை குரு மறைந்து விட்டால், அவர் குணத்தை போலவே உள்ள அவர் மகனிடமோ, குரு பத்னிக்கோ, அல்லது குருவின் தாயாருக்கோ உயிருள்ள வரை சேவை செய்து கொண்டு இருக்கலாம்.


एतेष्वविद्यमानेषु स्थानासनविहारवान् ।

प्रयुञ्जानोऽग्निशुश्रूषां साधयेद् देहमात्मनः ॥

- மனு ஸ்மிருதி

குருவும் இல்லை, அவர் மகனோ, பத்னியோ, தாயோ, இவர்கள் யாருமே இல்லாத பட்சத்தில், ப்ரம்மச்சாரியாகவே இருப்பேன் என்று இருக்கும் சிஷ்யன், குரு ஹோமம் செய்து கொண்டிருந்த அக்னி குண்டத்தில் அமர்ந்து தினமும் அக்னி மூட்டி ஹோமம் செய்து கொண்டே வாழ்நாளை கழிக்க வேண்டும்.


एवं चरति यो विप्रो ब्रह्मचर्यमविप्लुतः ।

स गच्छत्युत्तमस्थानं न चैह जायते पुनः ॥

- மனு ஸ்மிருதி

ப்ரம்மச்சாரியாகவே இருப்பேன் என்று வாழும் பிரம்மச்சாரி, இது போன்ற வாழ்க்கை வாழ்ந்தால், அவனும் நித்யமான ப்ரம்மத்தை அடைவான். அவனுக்கு மறுஜென்மம் கிடையாது.