Followers

Search Here...

Showing posts with label சங்கத்தமிழ். Show all posts
Showing posts with label சங்கத்தமிழ். Show all posts

Monday, 13 March 2023

ஆதி தமிழன் யார்? யார் ஆதிகுடி தமிழன்? தமிழன் வேத வழிபாடு செய்தானா? தெரிந்து கொள்வோம்.. பரிபாடல், திருமுருகாற்றுப்படை, புறநானூறு, மதுரை காஞ்சி, பதிற்றுபத்து, பெரும்பாணாற்றுப்படை என்ன சொல்கிறது?

தமிழன் வேத வழிபாடு செய்தானா? ஆதி தமிழன் யார்? யார் ஆதிகுடி தமிழன்?

சங்கத்தமிழும், வேதமும்.

"பரிபாடல்திருமுருகாற்றுப்படை, புறநானூறு, மதுரை காஞ்சி, பதிற்றுபத்து, பெரும்பாணாற்றுப்படை" போன்ற 6 தமிழ் இலக்கியங்களில் இதற்கான பதில் நமக்கு கிடைக்கிறது.

வேதத்தில் 'இடைச்சொறுகுகள் இருக்ககூடாது' என்பதாலும், 'உச்சரிப்பு ஸ்வரம் மாற கூடாது' என்பதாலும், குரு தன் வாயால் சொல்ல, அதை கேட்டு, சிஷ்யர்கள் திரும்ப திரும்ப சொல்லி மனப்பாடம் செய்தனர்.

'வாய்மொழி'யாகவே வேதம் ஓதப்பட்டது.

அந்த வேதத்தையே, "மாயா வாய்மொழி" என்று தமிழில் 'பரிபாடல்' சொல்கிறது.

திருமாலிடமிருந்து தோன்றிப் பரந்த பொருள்கள்

மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்
மாயா வாய்மொழி உரைதர வலந்து:

'வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
நீ' என மொழியுமால், அந்தணர் அரு மறை

- பரிபாடல்

சங்க தமிழான பரிபாடல் சொல்லும் அர்த்தம் இதோ:
"வாய்மொழி (4 வேதம்) நூல் தந்தவன்.
வாய்மொழி என்னும் ஓடையில் மலர்ந்தது தாமரை.
தாமரையில் பிறந்தவன் பிரம்ம தேவன்.
பிரம்மனின் தந்தை நீ என்று அந்தணர் வேதம் சொல்கிறது
" என்று பரிபாடல் வேதத்தை பற்றியும், பிரம்ம தேவன் தாமரையில் உண்டானதை பற்றியும் சொல்கிறது.

வேதம் - எழுத்து வடிவில் இல்லாமல், குரு சொல்ல, அதை  சிஷ்யர்கள் கவனத்துடன் காதால் கேட்டே மனப்பாடம் செய்ததால், "கேள்வி" என்றும் வேதத்தை பரிபாடல் தமிழில் சொல்கிறது.


வேதத்தை, "கேள்வி"க்கு ஈடாக "ஸ்ருதி" என்று சமஸ்கிருதமும், சொல்கிறது.

தோஷமற்ற நூல் வேதம் ("கெடு இல் கேள்வி") என்று வேதத்துக்கு மேலும் சான்றிதழ் கொடுக்கிறது பரிபாடல்.

ரிக் வேதம், "நித்யா வாக்" (இறப்பற்ற வேதம்) என்றும் வேதத்தை சொல்கிறது.

"அழியாத வேதம், வெளியோட்டமாக கர்மாவை செய்ய சொல்வது போல தோன்றினாலும், பரமாத்மாவையே துதிக்கிறது" என்று அறிகிறோம்.

எப்படி மரியாதை தெரிந்த பெண், அன்புள்ள தன் கணவன் பெயரையோ, அவரை பற்றியோ தயங்கி தயங்கி பேசுவாளோ, அப்படியே நேரடியாக பரமாத்மாவை பற்றி பேச தயங்கும் வேதம், பரமாத்மாவை மறைத்து மறைத்து பேசுவதால், வேதத்தை "மறை" என்றும் சொல்கிறது தமிழ் மொழி.

தத்துவங்களை மறைத்து பேசுவதால், வேதத்தை "மறை" என்று அழகாக அழைக்கிறது தமிழ் மொழி.

பரிபாடல், வேதம் என்ற சொல்லுக்கு ஈடான "மறை" என்ற சொல்லையும் பயன்படுத்துகிறது.

"வேதத்தில் வேள்விகள் சொல்லப்பட்டு இருக்கிறது" என்று புறநானூறு சொல்கிறது.

வேத வேள்வி

தொழில் முடித்ததுவும்

புறநானூறு

"வேதத்தில் சொல்லப்பட்ட விதிப்படி வேள்வியை செய்ய வேண்டும்என்று 'புறநானூறு' சொல்கிறது

அதேபோல, "வேதத்தை அந்தணர்கள் எப்படி ஓதுவார்கள்?" என்று 'மதுரைகாஞ்சி' சொல்கிறது.

தாதுண் தும்பி போது
முரன்றாங்கு ஒதல் 
அந்தணர் வேதம் பாட 
மதுரைகாஞ்சி

 "வண்டு ரீங்காரம் செய்வது போல (in resonance), அந்தணர்கள் வேதம் ஓதுகிறார்கள்" என்று சொல்கிறது மதுரை காஞ்சி

சங்க இலக்கியமான மதுரை காஞ்சி சொல்வதை போல தான், "பல ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகியும், இன்றும் தமிழ் அந்தணர்கள் வேதத்தை ஓதுகிறார்கள்" என்று பார்க்கிறோம். 

இன்று இருக்கும் வைதீக அந்தணர்கள், சங்க இலக்கியத்தில் சொல்வது போலவே இன்றுவரை உள்ளனர் என்று பார்க்கிறோம்..

வாழ்க தமிழ் பழங்குடி அந்தணர்கள்.

"உலக வாழ்க்கை, சம்பாத்தியம் போன்றவற்றில் ஈடுபடாமல், வேதத்தை ஓதும் பெரும் பொறுப்பை அந்தண சமூகம் ஏற்று இருந்தது" என்ற தொடர்பை சங்க இலக்கியங்கள் 'அந்தணர் அருமறை', 'அந்தணர் வேதம்' போன்ற வாக்குகள் மூலம், நமக்கு  சொல்கிறது.

அந்தணர்கள் யார்?
அந்தணர்கள் பண்பாடு எப்படி இருந்தது?

என்று சங்க இலக்கியமே சொல்கிறது.


இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது 

இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி

அறு நான்கு இரட்டி இளைமைநல் யாண்டு

ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை

மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல

ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்

புலராக் காழகம் புலர் உடீஇ

உச்சிக்கூப்பிய கையினர் தற்புகழ்ந்து

ஆறுஎழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி

நாஇயல் மருங்கில் நவிலப் பாடி

விரைஉறு நறுமலர் ஏந்தி பெரிது உவந்து

ஏரகத்து உறைதலும் உரியன், அதான்று

திருமுருகாற்றுப்படை

சங்க இலக்கியமான, திருமுருகாற்றுப்படையில் இதற்கான பதில் வருகிறது…

இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது…

- திருமுருகாற்றுப்படை
என்று தொடங்கும் பாடலில், 'அந்தணர்களுக்கு 6 கடமைகள் உண்டு' என்று சொல்கிறது.

வேதத்தில் உள்ள தர்ம சாஸ்திரம் அந்தணர்களுக்கு (ப்ராம்மணர்களுக்கு) சொல்லும் அதே 6 கடமைகளை, சங்க இலக்கியமான, திருமுருகாற்றுப்படையும் சொல்கிறது.

ந்தணர்களின் 6 கடமைகள் என்ன?:

  • ஓதல் (அத்யயனம் - வேதத்தை கற்பது),
  • ஓதுவித்தல் (அத்யாபனம் - வேதத்தை கற்று வைத்தல்) , 
  • வேட்டல் (யஜனம் - வேள்வியை நடத்துதல்) ,
  • வேட்பித்தல் (யாஜனம் -வேள்வியை மற்றவருக்கு நடப்பித்தல்),
  • ஏற்றல் (ப்ரதிகிரஹம் - தானத்தை ஏற்றுக்கொள்ளுதல்),
  • ஈதல் (தானம் - தானம் கொடுத்தல்),
ஆகிய "6ம்  அந்தணர்கள் விடக்கூடாத கடமைகள்" என்று சங்க இலக்கியம், தர்ம சாஸ்திரம் சொன்னபடியே சொல்கிறது.

சங்க இலக்கியமான, திருமுருகாற்றுப்படையில்
'6 கடமைகள் என்று தானே சொல்லி உள்ளது.  அது தர்ம சாஸ்திரம் சொன்ன இந்த 6 கடமையை தான் சொல்கிறது என்று எப்படி சொல்ல முடியும்?'
என்ற கேள்விக்கு பதிலை, மற்றொரு சங்க இலக்கியமான, பதிற்றுபத்து சொல்கிறது.

ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், எற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம் புரி அந்தணர்
பதிற்றுபத்து

இதில் தெளிவாக அந்தணர்களின் 6 கடமைகள் என்னென்ன? என்று பதில் சொல்கிறது.

மேலும்,
"இருவர் சுட்டிய" என்ற பதம் மூலம், 'இந்த அந்தணனை, பெற்ற தாய்-தந்தையர்கள் தூய்மையான நடத்தை உடையவர்களாக இருந்தார்கள்' என்று கொண்டாடுகிறது 
திருமுருகாற்றுப்படை

பழங்குடியினருக்கு பல சலுகைகளை இன்று அரசாங்கம் கொடுக்கிறது.

ஆனால், உண்மையான தமிழ் பழங்குடியான பிராம்மணர்களுக்கு பழங்குடியினருக்கான சலுகைகள் இன்றைய அரசாங்கம் கொடுக்கவில்லை. 

சங்க இலக்கியங்களை இவர்கள் படித்ததாக தெரியவில்லை.

சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை, "அந்தணர்களே தமிழகத்தில் இருந்த பழங்குடியினர் (தொல்குடி)" என்று தெளிவாக சொல்கிறது. 

அதிலும்,
இந்த அந்தணர்கள் பல ரகங்களில் இருக்கிறார்கள். (ஸாம வேதம் அறிந்தவர், ரிக் வேதம் அறிந்தவர், யஜுர் வேதம் அறிந்தவர், அதர்வண வேதம் அறிந்தவர், இரண்டு வேதங்கள் (த்விவேதி) அறிந்தவர், மூன்று வேதங்கள் ஒரு சேர அறிந்தவர் (த்ரிவேதி), நான்கு வேதமும் அறிந்தவர் (சதுர்வேதி)) என்று சொல்கிறது.

சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை,  “பலவேறு தொல்குடி அந்தணர்கள் இருந்தார்கள்” என்று தெளிவாக சொல்கிறது.

இருமூன்று எய்திய இயல்பினில் வழாஅது

இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி

- திருமுருகாற்றுப்படை

இந்த பாடலில்,
"அந்தணர்களுக்கு 6 கடமைகள் உண்டு.
அவர்கள் பெற்றோர்கள் உயர்ந்த பண்புகள் கொண்டு இருந்தார்கள்.
இந்த அந்தணர்கள் ஆதியில் இருந்தே இந்த தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தொல்குடியினர்"
என்று சான்றிதழ் கொடுக்கிறது.

வாழ்க திருமுருகாற்றுப்படை..


இதிலிருந்தே ஆதி தமிழன் யார்? யார் ஆதிகுடி? என்று கேள்விகளுக்கு பதில் கிடைத்து விடுகிறது.

மேலும், "முத்தீ" என்று சொல்லுமிடத்தில், இந்த அந்தணர்கள், 'மூன்று அக்னிகுண்டத்தில் வேள்வி தீயை வளர்ப்பவர்கள்' என்றும் திருமுருகாற்றுப்படை சொல்கிறது.

யாகம் செய்ய நாற்சதுரம், முக்கோணம், வில் வடிவம் என்ற அமைப்பில் அக்னிகுண்டங்கள் அமைத்து, கார்ஹ-பத்தியம், ஆகவனீயம், தக்ஷிணாக்னியம் என்ற மூன்று வேள்வி தீ, அக்னிஹோத்ரியான  பிராம்மணர்கள் வீட்டில் எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கும். இதையே 'முத்தீ' என்று திருமுருகாற்றுப்படையில் சொல்லப்படுகிறது.

இதே சொல்லை, "மூத்தீ மறையாவான்" என்று இரண்டாம் திருவந்தாதியில், பூதத்தாழ்வார் பயன்படுத்துகிறார் என்று பார்க்கலாம்.


மேலும், சங்க இலக்கியமான "திருமுருகாற்றுப்படை", "இருபிறப்பாளர்" என்று சொல்லுமிடத்தில், 'அந்தணர்கள், இரு முறை பிறக்கிறார்கள்' என்றும் சொல்கிறது.

பிராம்மண குழந்தைகள், "காயத்ரி மந்த்ர" உபதேசம் பெறும் போது, "இரண்டாவது பிறவி கொள்கிறார்கள்" என்று சொல்வதுண்டு.
இதையே சங்க இலக்கியமும் நமக்கு ஊர்ஜித படுத்துகிறது.

இது மட்டுமல்ல,
சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை, "மூன்று புரி நுண்ஞாண்" என்று சொல்லும் போது, "இந்த அந்தணர்கள், மூன்று நூல்கள் சேர்ந்த பூணூலை அணிந்து உள்ளார்கள்" என்று அந்தணர்களின் அடையாளத்தை காட்டுகிறது.

மேலும், சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை, "உச்சிக்கூப்பிய கையினர்" என்று சொல்லுமிடத்தில், "இந்த அந்தணர்கள், சுவாமிமலையில் (ஏரகத்து) வீற்று இருக்கும் முருகப்பெருமான் சந்நிதியில் கையை தலைக்கு மேல் உயர்த்தி நமஸ்கரித்து நிற்கின்றனர்" என்று அவர்களின் முருக பக்தியை காட்டுகிறது.

அந்தணர்கள் கையை தலைக்கு மேலே உயர்த்தி, முருகப்பெருமானை நமஸ்கரித்து கொண்டு மேலும்,

வேத மந்திரங்களை (அருமறைக் கேள்வி) மிகவும் சத்தமாக சொல்லாமல் நாக்கும் வாயும் அசைய, ஜபம் செய்வது போல அழகாக முருகப்பெருமானை நோக்கி பாடினார்கள், என்று "அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கில் நவிலப் பாடி" என்று திருமுருகாற்றுப்படை பாடுகிறது.

மேலும்,

  • அந்தணர்கள் எப்படி வாழ்ந்தார்கள்?
  • அவர்கள் வீடு எப்படி  இருந்தது?
என்று மற்றொரு சங்க இலக்கியமான "பெரும்பாணாற்றுப்படை" நமக்கு சொல்கிறது.

செழுங் கன்று யாத்த சிறுதாட் பந்தர்

என்று சொல்லும் போது, "இந்த அந்தணர்கள் வீட்டில் புஷ்டியான கன்றுகள் வீட்டின் வாசலில் சிறு பந்தல் போட்டு நின்று கொண்டிருக்கிறது" என்று  பெரும்பாணாற்றுப்படை நமக்கு தெளிவாக  காட்டுகிறது.

மேலும்,
பைஞ்சேறு மெழுகிய 

என்று சொல்லும் போது, "அந்தணர்கள் வீடே, பசுஞ்சாணியால் மெழுகப்பட்டு இருக்கிறது" என்று  பெரும்பாணாற்றுப்படை நமக்கு தெளிவாக  காட்டுகிறது.

மேலும்,
படிவ நல்நகர்

என்று சொல்லும் போது, "தெய்வத்துக்கு பூஜைகள் செய்ய ஒரு அறை வைத்து இருக்கிறார்கள்என்று  பெரும்பாணாற்றுப்படை நமக்கு தெளிவாக  காட்டுகிறது.

மேலும்,

மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது

என்று சொல்லும் போது, "அந்தணர்கள், கோழி, நாய் வளர்க்க மாட்டார்கள்" என்றும்,

மேலும்
வளைவாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும்

என்று சொல்லும் போது,, "அந்த வீட்டில் உள்ள அந்தணர்கள் வேதம் சொல்லி சொல்லி, அந்த வீட்டில் உள்ள கிளிகள் கூட திரும்ப சொல்கிறது" என்று  பெரும்பாணாற்றுப்படை நமக்கு தெளிவாக  காட்டுகிறது.

மேலும்,
மறை காப்பாளர் உறைபதிச் சேப்பின்

என்று சொல்லும் போது, "வேதத்தை காப்பாற்றி வரும் இந்த அந்தணர்களின் வீட்டுக்கு சென்று பார்த்தால்...."

பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்
வளைக்கை மகடூஉ வயின்அறிந்து அட்ட
சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம்

என்று சொல்லும் போது, "மிக பெரிய வானத்தில் ஜொலிக்கும் அருந்ததி நக்ஷத்திரம் போன்ற கற்புக்கரசியான அந்தண பெண், கைகளில் வலைகள் குலுங்க, ராஜ ஹம்சம் என்ற அன்னபறவை பெயர் கொண்ட ராசான்னம் என்ற ஆஹுதிக்கு ஏற்றதான அரிசியை மட்டுமே, பதம் அறிந்து சோறு சமைத்து வைத்து இருக்கிறாள்" என்று  பெரும்பாணாற்றுப்படை நமக்கு தெளிவாக  காட்டுகிறது.

மேலும்,
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து
கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர்

என்று சொல்லும் போது, "கருவேப்பிலை, மிளகு கலந்து சமைக்கப்பட்ட காய்கறியோடு, மாவடு ஊறுகாய் தொட்டு கொண்டு, மாதுளம் பழம் சேர்த்த மோர் சாதத்தை அந்தணர்கள் சாப்பிடுகிறார்கள்என்று பெரும்பாணாற்றுப்படை நமக்கு தெளிவாக  காட்டுகிறது..

இவ்வாறு, அந்தணர் வீடு எப்படி இருந்தது? அந்தணர் உணவு முறையும் எப்படி இருந்தது? என்ற வர்ணனையை சங்க இலக்கியமான "பெரும்பாணாற்றுப்படை" நமக்கு தெளிவாக  காட்டுகிறது. 

இன்றுவரை பிராம்மணர்களை  "தயிர் சாதம்" என்று கிண்டலாக பேசுகிறார்கள்.
சங்க காலத்தில் ஆரம்பித்து, இன்று வரை இந்த பழக்கத்தை கொண்ட பிராம்மண சமுதாயமே "ஆதிகுடி (பழங்குடி)" என்ற தெரிகிறது.

தமிழ்நாட்டின் "ஆதி குடிமகன் யார்?" என்ற கேள்விக்கு "பிராம்மணனே ஆதிகுடி" என்று சான்று கொடுக்கிறது சங்க இலக்கியங்கள்.

இதை பற்றி மேலும் பல விஷயங்கள் அறிய..  pls Listen to Speech of Sri Ranganji -  வேதம் நிறைந்த தமிழ்நாடு....

மேலும்,

"காலையில் கோவிலுக்கு சென்று, எப்படி பக்தியோடு மக்கள் இருந்தார்கள்?" என்று மாணிக்கவாசகர் சொல்கிறார்.

பாடல்:

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் 

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

- திருவெம்பாவை (மாணிக்கவாசக பெருமான்)

அர்த்தம்:

"ஒரு பக்கம் பக்தர்கள், வீணை கொண்டும், யாழ் கொண்டும் இனிய இசை இசைகிறார்கள்

ஒரு பக்கம் பக்தர்கள், ருக் வேத மந்திரங்களை ஓதிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் பக்தர்கள், நிறைய மலர்களை பறித்து, மாலை தொடுத்து கொண்டு காத்து கொண்டு இருக்கிறார்கள்

ஒரு பக்கம் பக்தர்கள், நமஸ்காரம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.  மேலும் சிலர் அன்பின் மிகுதியால் உங்களை தரிசிக்க போகும் ஆனந்தத்தில் கண்ணீர் வடிக்கிறார்கள்.

ஒரு பக்கம் பக்தர்கள், தலை மேல் கை கூப்பி நமஸ்கரித்து கொண்டே காத்து இருக்கிறார்கள்.

திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே ! 

(இவர்களோடு) ஒன்றுமே செய்யாது இருக்கும்,  மாணிக்கவாசகனான  என்னையும் சேர்த்து (ஆண்டு) கொண்டு, இனிய அருள் செய்கின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்வாய்  !"

என்று பக்தி சொட்ட பாடுகிறார், மாணிக்கவாசகர்.

இதன் அர்த்தத்தையும், மேலும் ராமாயணம் பற்றி கேட்கவும், pls Listen to - the explanation: