Followers

Search Here...

Showing posts with label கௌசல்யா. Show all posts
Showing posts with label கௌசல்யா. Show all posts

Saturday, 5 September 2020

சீதை மருமகளாக எப்படி இருக்கிறாள்? என்று பாருங்கள்... மாமியார் மருமகள் உறவு. சீதா தேவி காட்டுகிறாள்.

கீழ்த்தரமான ராவணன் "ராமர் இறந்து விட்டதாக" சீதையிடம் இரண்டு இடத்தில் சொல்கிறான்.
'அனாதையாகி போன சீதை தன்னை மணக்க வேண்டும்" என்று அழைத்தும் பார்த்தான்.

தாளாத சீதை பலவாறு புலம்புகிறாள். 



'ஐயோ! நான் விதவையாகி விட்டேனே!
என்று கூட புலம்புகிறாள். 

தான் படும் இந்த வேதனை நிலையிலும், ராமபிரானை பெற்ற மாதா கோசலையின் துக்கத்தை நினைத்து சீதை அழுகிறாள்.

'மாமியார் துக்கப்படுவாளே! அவள் மனம் வாடுமே
என்று அந்த துக்கத்திலும் நினைக்கிறாள் உத்தமியான சீதை.

1.
ராமபிரான் கடலை கடந்து, சுவேல மலை அருகில், வானர படைகளுடன் வந்து விட்டார் என்றதும், 'எப்படியாவது சீதையை சம்மதிக்க வைக்க வேண்டும்' என்று நினைத்தான். 

'வித்யுஜிஹ்வா' என்ற மாயாவியை அழைத்து, மாயாரூபமான வெட்டப்பட்ட  ராமபிரான் தலையையும், அவர் வைத்து இருந்த வில்லையும் உருவாக்க சொன்னான்.
வெட்டப்பட்ட மாயா ராமபிரான் தலையை காட்டி, 
"கலங்கி இருக்கும் சீதா, இனி நீ என்னுடைய மனைவியாக ஆக போகிறாய்.
(வ்யசனே ஆத்மன: சீதே மம பார்யா பவிஷ்யசி - வால்மீகி ராமாயணம்)

சொல்கிறேன் கேள்! உன் கணவன் ராமன் கொடூரமாக கொல்லப்பட்டு விட்டான்.
(ஸ்ருணு பர்த்ரு வதம் சீதே கோரம் வ்ருத்ர வதம் யதா! - வால்மீகி ராமாயணம்)" 
என்று பேசி அவளை சம்மதிக்க முயற்சித்தான்...

அப்போது புலம்பி அழும் சீதா தேவி, அந்த நிலையிலும் கூட, தன் மாமியாரை நினைத்து அழுகிறாள்,
"என்னுடைய சோகத்திலிருந்து இனி என்னை மரணம் மட்டுமே மீட்க முடியும்..



ஐயோ! கன்றை இழந்த தாய் பசு போல, என் மாமியார் கௌசல்யா தவிப்பாளே!
(சா ஸ்வஸ்ரூர் மம கௌசல்யா த்வயா புத்ரேன ராகவ! வத்ஸேன் ஏவ யதா தேனுர் விவத்ஸா வத்சலா க்ருதா!! - வால்மீகி ராமாயணம்)
என்று அழுகிறாள்.

சீதையின் மென்மையான குணம் இங்கு நமக்கு தெரிகிறது.

2.
வானர சேனைக்கும், ராக்ஷஸர்களுக்கும் கடுமையான யுத்தம் இரவு பகலாக ஓய்வில்லாமல் நடந்து கொண்டிருந்தது.
இந்திரஜித் போர் புரிய வந்தான்.

இவனை அம்பு மழைகளால் சிதறடித்தார் ராமபிரான்.

மாய போர் புரியும் இந்திரஜித் தன்னை மறைத்து கொண்டு, நாக அஸ்திரத்தை ஏவி, ராமபிரானையும், லக்ஷ்மணரையும் கீழே சாய்த்தான்.

விழுந்த இவர்கள் மீது பல அம்புகளை ஏவினான். 
ரத்த வெள்ளத்தில் கிடந்த ராம லக்ஷ்மணரை பார்த்து, ஹனுமான், சுக்ரீவன், நீலன், மைந்தன், த்விவிதன், சுசேனன், குமுதன், அங்கதன் சூழ்ந்தனர்.
வானர சேனைகள் கண் கலங்கி அழ ஆரம்பித்தனர்.

இப்படி அழுது கொண்டிருந்த வானரர்களை மறைந்து இருந்து பார்த்து கொண்டிருந்த இந்திரஜித், 
இந்த வானரர்களையும் கொன்று விடும் எண்ணத்தில், 
ஒன்பது முறை அம்புகளை 'நீலன்' மீது ஏவினான்.
ஆறு முறை 'மைந்தன், த்விவிதன்' மீது ஏவினான்.
பத்து முறை 'ஹனுமான்' மீது ஏவினான்.
இரண்டு இரண்டு முறை, 'ஜாம்பவான், கவாக்சன், சரபன்' மீது ஏவினான்.
'அங்கதன்' மீது கணக்கில்லா அம்புகளை ஏவினான்.
'எங்கிருந்து அம்புகள் வருகிறது?' 
என்று தெரியாமல் வானரர்கள் நிலை குலைய, 
அட்டகாச சிரிப்புடன், வெகு நேரமாக மூச்சு பேச்சு இல்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் 'ராம லக்ஷ்மணர்கள் இறந்து விட்டார்கள்' என்று தீர்மானித்து, இலங்கை நகரத்துக்குள் சென்று, வெற்றி செய்தியை ராவணனிடம் சொன்னான்.

பெரும் மகிழ்ச்சி அடைந்த ராவணன் தன் மகனை உச்சி முகர்ந்து பாராட்டினான்.

பிறகு, மகனை அனுப்பி விட்டு, அசோக வனத்தில் இருக்கும் ராக்ஷஸிகளை அழைத்தான்.



த்ரிஜடை தலைமையில் அனைவரும் வர, ராவணன் அவர்களை பார்த்து,
"இந்திரஜித்தால் ராம லக்ஷ்மண இருவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று சீதையிடம் சொல். 

அவளை புஷ்பக விமானத்தில் ஏற்றி கொண்டு, ராமனும், லக்ஷ்மணனும் விழுந்து கிடக்கும் இடத்தை காட்டு.

என்னை லட்சியம் செய்யாமல் இருக்கும் சீதை, போர் களத்தில் விழுந்து கிடக்கும் இவர்கள் சடலத்தை பார்க்கட்டும்.
இதை பார்த்த பிறகாவது, சந்தேகமில்லாமல், பயமில்லாமல் நகைகளை அணிந்து அலங்காரம் செய்து கொண்டு என்னை மணக்க தயாராகட்டும்.

மரண காலத்தில் கட்டப்பட்டு கிடக்கும் ராமனையும், லக்ஷ்மணனையும், அகன்ற கண்கள் உடைய சீதை (விசாலக்ஷி) பார்த்து, தன் நம்பிக்கையை இழக்கட்டும். 

இனி யாரும் இவளுக்கு துணை இல்லை என்கிற நிலையில், இவள் என்னிடம் சரண் அடைவாள்"
என்றான்.

ராவணன் சொன்னதை ஏற்று, ராக்ஷஸிகள் சீதையை புஷ்பக விமானத்தில் ஏற்றி கொண்டு, ராமர், லக்ஷ்மணர் விழுந்து கிடக்கும் இடத்தை அடைந்தனர்.

அசைவில்லாமல் கிடக்கும் இவர்களை சூழ்ந்து கொண்டு, வானரர்கள், விபீஷணன் சோகத்தில் இருப்பதை பார்த்து விட்டு, சீதை மயங்கி விழுந்தாள்.

சிறிது நேரத்தில் விழித்த சீதை, பலவாறு புலம்புகிறாள்.

அந்த சமயத்தில் கூட, தன் மாமியாரை நினைத்து அழுகிறாள்,
"காலத்தை யாராலும் வெல்ல முடியாது என்று ஆகிவிட்டதே! வீழ்த்தவே முடியாத என் ராகவனும், அவர் தம்பி லக்ஷ்மணன் கூட போர்க்களத்தில் வீழ்ந்து விட்டார்களே!

ஐயோ! ராகவனும், அவர் தம்பி லக்ஷ்மணனும் வீழ்ந்த சோகத்தை காட்டிலும், 
எப்பொழுதும் தெய்வ சிந்தனையுடன் விரதம் இருக்கும் என் மாமியாரை (கௌசல்யா) நினைத்து என் மனம் வருந்துகிறதே!!"
(ந ஸோசாமி ததா ராமம் லக்ஷ்மணம் ச மஹாபலம்! ந ஆத்மானம் ஜனனீம் வாபி யதா ஸ்வஸ்ரூம் தபஸ்வினீம்!! - வால்மீகி ராமாயணம்)
இந்த வனவாசம் என்ற விரதம் எப்பொழுது முடியுமோ என்று அனுதினமும் நினைத்து கொண்டு இருப்பாளே!

எப்பொழுது நான் ராமனை, லக்ஷ்மணனை, சீதையை பார்ப்பேன்? என்று எங்கள் வருகைக்காக காத்து கிடப்பாளே"
(சா அனுசிந்தயேத் நித்யம் சமாப்த வ்ரதம் ஆகதம்! கதா த்ரஷ்யாமி சீதாம் ச லக்ஷ்மணம் ச ச ராகவம்!! - வால்மீகி ராமாயணம்)
என்று அழ ஆரம்பிக்கிறாள்.

த்ரிஜடை "கவலைப்படாதே! வானர்களை முகத்தில் இன்னும் உற்சாகமும், கோபமும் அடங்கவில்லை. 
உன் கணவன் உயிர் பிரிந்த பின், இப்படி இவர்கள் இருக்க வாய்ப்பில்லை. 
மேலும் திவ்யமான இந்த புஷ்பக விமானம் கணவனை இழந்த பெண்களை சுமந்து பறக்காது..." என்று பல காரணங்களை காட்டி, சீதையை சமாதானம் செய்கிறாள். 

வால்மீகி ராமாயணம் அறிவோம்.

மாமியார் துக்கப்படுவாளே! என்று நினைக்கும் மென்மையான சீதையை போன்ற மருமகளாக இருக்க, அனைத்து பெண்களும் ஆசைப்பட வேண்டும்.

வால்மீகி "வேடுவனாக" இருந்தவர்.
அவர் அவதரித்த ஊர் "அன்பில்".
ராம அவதார காலம் முழுவதும் உத்திர பிரதேசம் சென்று வசித்தார்.

ராம அவதாரம் முடிந்த பிறகும், 'விபீஷணன், வால்மீகி, ஹனுமான்' பூலோகத்தில் இருந்தனர்.

ராம அவதாரம் முடிந்த பின், மீண்டும் தமிழகம் வந்து, "திருநீர்மலை" என்ற இடத்தில் ராம தியானத்தில் இருந்து, முக்தி பெற்றார்.

தமிழன் எழுதிய ராமாயணம் உலகமே படிக்கிறது. 
இது தமிழனுக்கு பெருமை.

Wednesday, 27 December 2017

மஹாபாரத சமயத்தில் பீஹார் : Bihar. யார் இந்த ஊரில் பிறந்தார்கள்? எப்படி இருந்தது?

மஹாபாரத சமயத்தில் பீஹார் : Bihar.

மகத தேசம் என்று பீஹார் அழைக்கப்பட்டது.




ராமாயண காலத்தில், ஸ்ரீ ராமரின் தாய் கௌசல்யா இந்த தேசத்தில் பிறந்து, பின் கோசல அரசன் தசரதனை திருமணம் செய்து கொண்டாள்.
தசரதர் தன் காலத்திற்கு பிறகு, தன் பிள்ளைகள் ஒருவராவது, பீகாரில் உள்ள கயை என்ற நகருக்கு சென்று, விஷ்ணு பாதத்தில் பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

பிற் காலத்தில், ஸ்ரீ ராமர் கயை சென்று, தன் தகப்பனாருக்கு விஷ்ணு பாதத்தில் பிண்ட ப்ரதானம் செய்தார்.

குடும்பத்திலேயே மதம் மாறி இறந்து போனவர்கள், பிள்ளைகள் இருந்தும் திவசம் செய்யப்படாமல் இறந்து போனவர்கள், அனாதையாக இறந்தவர்கள், கர்பத்திலேயே இறந்தவர்கள், அடிபட்டு இறந்தவர்கள், காணாமல் போய் பல காலம் ஆகியும் இறந்தார்களா இல்லை இருக்கிறார்களா என்று நிலைக்கு ஆனவர்கள், இறந்தவர்கள் இப்படி எவருக்காகவும் இந்த விஷ்ணு பாதத்தில், யாவரும் தான் இருக்கும் சமயத்தில் வந்து, தன் நினைவில் உள்ள இறந்தவர்கள் அனைவருக்கும் பிண்ட ப்ரதானம் செய்யலாம், செய்ய வேண்டும். திவசம் செய்யாததால் அலையும் பித்ருக்கள் அனைவரும் திருப்தி அடைவார்கள்.

இனி,
மஹாபாரத சமயத்தில், ஜராசந்தன் மகத அரசனாக ஆண்டு வந்தான்.
யாதவர்களை தன் எதிரிகளாக நினைத்தான்.

ஜராசந்தன் பிறந்த ஊர் இன்றைய டாடாநகர் (TataNagar,Jamshedpur,Jharkhand). இது ஜாம்ஷெட்பூர் என்ற மாநிலத்தில் உள்ளது. இது பீகார் மாநிலத்தில் இருந்தது. Nov 15, 2000 ஆண்டு தெற்கு பகுதியில் இருந்த இந்த பிரதேசம் (ஜாம்ஷெட்பூர்) பிரிந்து தனி மாநிலம் ஆக்கப்பட்டது.

நரகாசுரன் (ப்ரக்ஜ்யோதிச தேசம் என்ற அசாம்), பௌண்ட்ரக வாசுதேவன் (பௌண்ட்ரக தேசம் என்ற பங்களாதேஷ்), சிசுபாலன் (சேடி தேசம் என்ற மத்யபிரதேசம்), வ்ருஷ்னி குல கம்சன் (மதுராவை ஆண்ட, ஸ்ரீ கிருஷ்ணரின் மாமா), துரியோதனன் (குரு தேசம் என்ற உத்திரபிரதேச இளவரசன்) ஆகியோர் ஜராசந்தனிடம் நட்பு கொண்டவர்கள்.




கம்சன் யாதவர்களை விரட்டி, மதுராவை கைப்பற்றியதால், கம்சனிடன் நட்பு கரம் நீட்டினான். தன் 2 மகள்களையும், கம்சனுக்கே மணம் செய்து கொடுத்தான்.

ஸ்ரீ கிருஷ்ணரின் மாமா கம்சன். தன் தங்கை என்றும் பாராமல், மதுராவில் ஜெயிலில் தள்ளினான். ஸ்ரீ கிருஷ்ணர் ஜெயிலில் அவதாரம் செய்து, கோகுலத்தில் வளர்ந்து, தன் 11 வயதில், மதுரா வந்து ஒரே குத்தில் கம்சனை பரலோகம் அனுப்பினார்.
தன் மகள்கள் விதவை ஆனதற்கு இந்த ஸ்ரீ கிருஷ்ணரும், யாதவர்களுமே காரணம் என்று, 17 முறை மதுராவை தாக்கினான். 
ஒவ்வொரு தடவையும் ஸ்ரீ கிருஷ்ணர் தோற்கடித்து விரட்டினார்.

இந்த முறை ஸ்ரீ கிருஷ்ணரை யவன தேசத்து (கிரீஸ் போன்ற மேற்கு தேசங்கள்) மிலேச்சனான "காலயவனன்" துணையுடன் எதிர்த்தான்.
ஸ்ரீ கிருஷ்ணர் காலயவனனிடன் போர் புரிந்து சாமர்த்தியமாக அவனை கொன்றார்.
இந்த சமயத்தில் மதுராவை முற்றுகையிட்டான் ஜராசந்தன். யாதவர்களுக்கு ஏற்பட போகும் ஆபத்தை உணர்நத ஸ்ரீ கிருஷ்ணர், மதுரா நகர 5 லட்சம் யாதவ மக்களை மாய ஸ்ருஷ்டி மூலம், துவாரகை என்ற நகரை கடலில் அமைத்து, அனைத்து மக்களையும் ஒரே ராத்திரியில் இடம் மாற்றினார்.
இந்த மாயை புரியாத ஜராசந்தன் மீண்டும் படை எடுக்க வந்த போது மதுரா நகரமே காலி ஆகி போயிருந்ததை கண்டு தேடி கொண்டே இருந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் ஆணைப்படி, தேவலோகத்தில் இருக்கும் விஸ்வகர்மா ஒரே நாளில், துவாரகை என்ற நகரை கடலில் அமைத்து கொடுத்தார்.

ஸ்ரீ கிருஷ்ணரையும், யாதவர்களையும் தோற்க அடிக்க முடியாத ஜராசந்தன், சிவனை குறித்து தவம் செய்து, 100 க்ஷத்ரிய அரசர்கள் பலியிட்டு தன் பலத்தை கூட்ட எண்ணினான். இதற்காக பல தேசங்களை கைப்பற்றி அதன் 95 க்ஷத்ரிய அரசர்களை ஜெயிலில் போட்டான்.

யுதிஷ்டிரர் ராஜசுய யாகம் நடத்த திட்டமிட்டு கொண்டிருந்தார். இதற்கு ஜராசந்தன் போன்றவர்கள் தடையாக இருந்தனர். ஸ்ரீ கிருஷ்ணர் ஜராசந்தனை பீமனோடு மல்யுத்த போருக்கு அழைத்தார். பீமன் ஜராசந்தனை மல்யுத்தத்தில் இரண்டாக கிழித்து போட்டு விட்டான்.
ஜராசந்தன் மகன் சகதேவன் மகத தேச அரசனானான்.



சகதேவன் மஹா பாரத போரில் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டான்.

3000 வருடங்களுக்கு பிறகு கௌதம புத்தர், லும்பினி என்ற நகரில் நேபாள தேசத்தில் பிறந்தார். மகத தேசத்தில் (பீஹார்) உள்ள போத் கயா என்ற ஊரில், புத்தர் ஞானம் அடைந்தார் என்று அவரின் சரித்திரம் சொல்கிறது.