Followers

Search Here...

Showing posts with label கேள்விகள். Show all posts
Showing posts with label கேள்விகள். Show all posts

Wednesday, 12 April 2023

யக்ஷன் கேள்விகள், தர்மபுத்திரர் யுதிஷ்டிரர் பதில்கள் - ஆதி பர்வா. அறிவோம் வியாசர் மஹாபாரதம்

யக்ஷன் கேள்விகள், தர்மபுத்திரர் யுதிஷ்டிரர் பதில்கள்… வியாசர் மஹாபாரதம்

किंस्विद् आदित्यम् उन्नयति के च तस्य अभित: चराः।

कश्चैनम् अस्तं नयति कस्मिंश्च प्रति-तिष्ठति ॥ Adi Parva

யார் சூரியனை உதிக்க செய்கிறார்?

சூரியனுக்கு பக்கத்தில் யார் போகிறார்கள்?

யார் சூரியனை அஸ்தமிக்க செய்கிறார்?

எதில் சூரியன் நிலை பெற்று இருக்கிறார்?

ब्रह्म आदित्यम् उन्नयति देवा: तस्य अभित: चराः।

धर्म: चा अस्तं नयति च सत्ये च प्रति-तिष्ठति ॥

பரமாத்மா (ப்ரம்மம்) சூரியனை (ஜீவனை) உதிக்க செய்கிறார்.

தேவர்கள் (மனமும், புலனும்) சூரியனுக்கு (ஜீவனுக்கு) பக்கத்தில் போகிறார்கள்.

பரமாத்மாவின் சட்டம் என்ற தர்மமே (பக்தியால்) சூரியனை (ஜீவன்) அஸ்தமிக்க செய்கிறது (மோக்ஷம் அடைகிறான்)

சத்தியத்தில்  (பரமாத்மாவின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு) சூரியன் (ஜீவன்) நிலை பெற்று இருக்கிறான்.

 केनस्विद् श्रोत्रियः भवति केनस्विद् विन्दते महत्।

केनस्विद्  द्वितीयवान् भवति राजन् केन च बुद्धिमान् ॥

எதனால் மனிதன் ஸ்ரோத்ரியனாகிறான் (வேதம் படித்தவன்)?

எதனால் மனிதன் மகத்தை (பெருமை) அடைகிறான்?

எதனால் மனிதன் துணை உள்ளவனாகிறான்?

எதனால் மனிதன் புத்திமானாகிறான்?

श्रुतेन श्रोत्रियो भवति तपसा विन्दते महत्।

धृत्या द्वितीयवान् भवति बुद्धिमान् वृद्ध सेवया ॥

வேதம் ஓதுவதால் மட்டுமே மனிதன்  ஸ்ரோத்ரியனாகிறான்.

தவத்தால் (action without giveup) மனிதன் மகத்தை (பெருமை) அடைகிறான்

தைரியத்தினால் மனிதன் துணை உள்ளவனாகிறான்.

வயதானவர்களை கைவிடாமல் அவர்களுக்கு சேவை செய்யும் மனிதன் புத்திமானாகிறான்.

किं ब्राह्मणानां देवत्वं क: च धर्मः सतामिव।

क: च एषां मानुषो भावः किम् एषां सतामिव ॥

ப்ராம்மணன் (MLA, MP) தேவ தன்மையை (ஸத்வ குணத்தை/சாஸ்திரத்தை மீறாத குணத்தை) எப்போது பெறுகிறான்?

ப்ராம்மணனிடம் (MLA, MP) இருக்க வேண்டிய சாது தர்மம் எது?

பிராம்மணன் (MLA, MP) எப்போது மனித தனமையை அடைகிறான்?

ப்ராம்மணனிடம் (MLA, MP) இருக்க கூடாத அசட்டு குணம் எது?

स्वाध्याय एषां देवत्वं तप एषां सतामिव।

मरणं मानुषो भावः परिवाद: असतामिव ॥

ப்ராம்மணன் வேதம் அத்யயனம் செய்வதால் தேவ தன்மை பெறுகிறான். (வேதம் படிக்க படிக்க சமம்-தமம் (மன அடக்கம், புலன் அடக்கம்) உண்டாகும், ஆத்மாவே நான் என்று அறிகிறான்)

ப்ராம்மணனிடம் இருக்க வேண்டிய குணம் - தவமே (வேதத்தின் அர்த்தத்தை நினைத்து கொண்டே இருப்பதே)

‘ஆத்மா நான்’ என்பதை மறந்து, தேகம் அழியும் மரணத்தை கண்டு பயப்படும்  பிராம்மணன் மனித தனமையை அடைகிறான்

ப்ராம்மணனிடம் இருக்க கூடாத குணம் - பரநிந்தை (பிறரை பற்றி குறை சொல்வது)

किं क्षत्रियाणां देवत्वं क: च धर्मः सतामिव।

क: च एषां मानुषो भावः किं एषाम् सतामिव ॥

க்ஷத்ரியன் (Police/Army) தேவ தன்மையை (சாஸ்திரத்தை மீறாத குணம்) எப்போது பெறுகிறான்?

க்ஷத்திரியனிடம் இருக்க வேண்டிய சாது தர்மம் எது?

க்ஷத்திரியன் எப்போது மனித தனமையை அடைகிறான்?

க்ஷத்திரியனிடம் இருக்க கூடாத அசட்டு தர்மம் எது?

इषु अस्त्रम् एषां देवत्वं यज्ञ एषां सतामिव।

भयं वै मानुषो भावः परित्यागो असतामिव ॥

க்ஷத்திரியன் பாணங்களாலும், அஸ்திரங்களாலும் தேவத்தன்மையை பெறுகிறான்.

உலக நன்மைக்காக யாகங்கள் செய்வதே,  க்ஷத்திரியனிடம் இருக்க வேண்டிய சாது தர்மம்

பயப்படும் போது க்ஷத்திரியன்  மனித தன்மையை அடைகிறான்.

நம்பியவனை கைவிடுவதே க்ஷத்திரியனிடம் இருக்க கூடாத அசட்டு தர்மம்

किम् एकं यज्ञियं साम किम् एकं यज्ञियं यजुः।

का च: एषां वृणुते यज्ञं कां यज्ञो नातिवर्तते ॥

யாகத்திற்கு முக்கியமான ஸாமம் எது? 

யாகத்திற்கு முக்கியமான யஜுஸ் எது? 

யாகத்தை எது தாங்குகிறது? 

யாகம் எதை மீறாமல் இருக்கிறது?

प्राणो वै यज्ञियं साम मनो वै यज्ञियं यजुः।

ऋग् एका वृणुते यज्ञं तां यज्ञो नातिवर्तते ॥

இதயத்தில் இருக்கும் பிராணனே யாகத்திற்கு முக்கியமான ஸாமம்.

மனமே யாகத்திற்கு முக்கியமான யஜுஸ். 

ரிக் மந்திரங்களே யாகத்தை தரிக்கிறது.

யாகம் ரிக் மந்திரங்களை மீறாமல் இருக்கிறது.

யாகம் செய்யும் போது, ரிக் மந்திரங்கள் சொல்லி பெருமாளை அழைக்கிறோம். பிறகு யஜுர் மந்திரங்கள் மன ஈடுபாட்டுடன் சொல்லி, பெருமாளுக்கு அக்னியின் வழியாக நெய்வேத்யம் செய்கிறோம். இதை ஏற்று கொண்ட பெருமாளை ஸாம கானம் பாடி ஆனந்தப்படுத்துகிறோம். உலகத்தில் ஏதாவது அடைய ஆசை இருந்தால், கடைசியாக, அதர்வண மந்திரங்கள் சொல்லி, நமக்கு தேவையான ஆசைகளை சொல்லி, அவரிடம் வரம் வாங்குகிறோம்.

किंस्वित् आवपतां श्रेष्ठं किंस्विन् निवपतां वरम्।

किंस्वित् प्रतिष्ठमानानां किस्वित् प्रसवतां वरम् ॥

பயிர் செய்பவனுக்கு சிறந்தது எது?

விதைப்பவனுக்கு எது சிறந்தது?

தன்னை நிலைநிறுத்தி கொள்ள விரும்புபவர்களுக்கு எது சிறந்தது?

சந்ததிக்கு எது சிறந்த வரம்?

वर्षम् आवपतां श्रेष्ठं बीजं निवपतां वरम्।

गावः प्रतिष्ठमानानां पुत्रः प्रसवतां वरः ॥

மழையே பயிர் செய்பவனுக்கு சிறந்தது.

நல்ல விதையே விதைப்பவனுக்கு சிறந்தது.

தன்னை நிலைநிறுத்தி கொள்ள விரும்புபவர்களுக்கு பசுக்களே சிறந்தது.(பசுக்களை காப்பவனை, பசுக்கள் காக்கும்)

புத்ர பாக்கியமே சிறந்த வரம்.

इन्द्रियार्थान् अनुभवन् बुद्धिमान् लोकपूजितः।

संमतः सर्वभूतानाम् उच्छ्वसन् को  न जीवति ॥

கண் காது மூக்கு, நாக்கு, தோல் போன்ற 5 புலன்களால் விஷயங்களை அனுபவிக்கிறான்.

சிறந்த புத்தி உள்ளவனாகவும் இருக்கிறான்.

உலகத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாகவும் இருக்கிறான்.

அனைத்து உயிர்களுக்கும் சம்மதமாகவும் இருக்கிறான்.

மூச்சு விட்டுக்கொண்டும் இருக்கிறான்.

ஆனால் உயிரில்லாதவனாக இருக்கிறான். அவன் யார்?

देवता अतिथि भृत्यानां पितॄणाम् आत्मनश्च यः।

न निर्वपति पञ्चानाम् उच्छ्वसन्न स जीवति ॥

எவன் தெய்வங்களுக்கும், அதிதிகளுக்கும் (வீட்டிற்கு திடீரென்று வந்தவர்களுக்கும்), தனக்கு வேலை செய்பவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், தனக்கும் எவன் பூஜை (உணவு/மரியாதை) செய்வதில்லையோ, அப்படிப்பட்டவன், மூச்சு விட்டு கொண்டிருந்தாலும், அவன் உயிரில்லாதவனாகவே இருக்கிறான்.

किंस्विद् गुरुतरं भूमेः किंस्विद् उच्चतरं च खात्।

किंस्विद् शीघ्रतरं वायोः किंस्विद् बहुतरं तृणात् ॥

பூமியை காட்டிலும் கனமானது எது?

ஆகாயத்தை காட்டிலும் உயர்ந்தது எது?

காற்றை விட வேகமானது எது?

புல்லை காட்டிலும் வேகமாக வளர்வது எது?

माता गुरुतरा भूमेः खात्पित: उच्चतर: तथा।

मनः शीघ्रतरं वाता:

चिन्ता बहुतरी तृणात् ॥

பிள்ளை மதித்தாலும், மிதித்தாலும் பொறுமையாக இருப்பவள் தாய். பூமியை காட்டிலும் தாய் கனமானவள்.

தந்தை ஆகாயத்தை காட்டிலும் உயர்ந்தவர்

பெரிய பெருமாள் என்று நினைத்த மாத்திரம் மனம் ஶ்ரீரங்கம் சென்று விடும். மனம் காற்றை விட வேகமானது.

கவலை புல்லை காட்டிலும் வேகமாக வளரும்.

किंस्वित् सुप्तं न निमिषति किंस्वित् जातं न च इङ्गते।

किंस्वित् हृदयं न अस्ति किंस्वित् वेगेन वर्धते ॥

எது தூங்கும்போதும் கண் மூடாமல் இருக்கிறது?

எது பிறந்தும் அசைவில்லாமல் இருக்கிறது?

யாருக்கு இதயம் இல்லை?

எது வேகத்தால் வளர்கிறது?

मत्स्यः सुप्तो न निमिषति अण्डं जातं न च इङ्गते।

अश्मनो हृदयं न अस्ति नदी वेगेन वर्धते ॥

மீன் (ஆத்மா) தூங்கும்போதும் (தமஸ்) கண் மூடாமல் இருக்கிறது.

முட்டை (14 லோகங்கள்) பிறந்தும் அசைவில்லாமல் இருக்கிறது. 

கல்லுக்கு (யோகிகளுக்கு) இதயம் இல்லை. (யோகிக்கு சுக-துக்கம் அனுபவிக்க இதயம் இல்லை)

நதி (மனம்வேகத்தால் வளர்கிறது.

किंस्वित् प्रवसतो मित्रं किंस्वित् मित्रं गृहे सतः।

आतुरस् च किं मित्रं किंस्वित् मित्रं मरिष्यतः ॥

வெளியூரில் யார் நண்பன்?

வீட்டில் இருப்பவனுக்கு யார் நண்பன்?

நோயாளிக்கு யார் நண்பன்?

சாகப்போகிறவனுக்கு யார் நண்பன்?

विद्या प्रवसतो मित्रं भार्या मित्रं गृहे सतः।

आतुरस्य भिषङ्मित्रं दानं मित्रं मरिष्यतः ॥

வெளியூரில் செல்பவனுக்கு படித்த கல்வியே நண்பன்.

வீட்டில் இருப்பவனுக்கு மனைவியே தோழி.

நோயாளிக்கு வைத்தியனே நண்பன்.

சாகப்போகிறவனுக்கு செய்த தானமே நண்பன்.

को अतिथिः सर्वभूतानां किंस्विद् धर्मं सनातनम्।

अमृतं किंस्विद् राजेन्द्र किंस्वित् सर्वमिदं जगत् ॥

அனைத்து உயிர்களுக்கும் யார் அதிதி?

எந்த தர்மம் மிகவும் தொன்மையானது?

ராஜேந்திரா! எது அம்ருதம்?

இந்த உலகம் அனைத்தும் எதனால் மூடப்பட்டு இருக்கிறது?

अतिथिः सर्वभूतानाम् अग्निः सोमो गवामृतम्।

सनातनो अमृतो धर्मो वायुः सर्वमिदं जगत् ॥

அனைத்து உயிர்களுக்கும் அதிதியாக (விருந்தாளி) அக்னியே வருகிறார். அவருக்கு தேவையான உபசாரத்தை கட்டாயம் செய்து விட வேண்டும். (வயிற்றில் உள்ள அக்னியும் ஒரு அதிதியே)

மோக்ஷத்தை பற்றி சொல்லும் தர்மமே மிகவும் தொன்மையானது.

வெண்மையான பசும்பால் (மஞ்சள் கலந்தால் மருந்தாகவும் இருக்கும், பாயாசமாகி விருந்தாகவும் இருக்கும்) அம்ருதமாகும்.

இந்த உலகம் அனைத்தும் வாயுவால் மூடப்பட்டு இருக்கிறது.

किंस्विद् एको विचरते जातः को जायते पुनः।

किंस्विद् धिमस्य भैषज्यं किंस्विद् आवपनं महत् ॥

யார் ஒருவர் தனித்து திரிந்து கொண்டு இருக்கிறார்?

பிறந்த பிறகு மீண்டும் எவன் பிறக்கிறான்?

பனிக்கு எது மருந்து?

எல்லாவற்றையும் அடக்கி வைத்துள்ள பெரிய பாத்திரம் எது?

सूर्य एको विचरते चन्द्रमा जायते पुनः।

अग्नि: हिमस्य भैषज्यं भूमि: आवपनं महत् ॥

சூரியன் (ஆத்மா) ஒருவரே தனித்து திரிந்து கொண்டு இருக்கிறார்.

சந்திரன் (மனம்) தேய்ந்து பிறகு மறுபடி பிறக்கிறான்.

அக்னி (வேதவாக்கை புரிந்து கொள்ளும் போது) பனிக்கு (அஞானம்) மருந்து.

பூமியானது (உடல்) எல்லாவற்றையும் (வித்யை, அவித்யை) அடக்கி வைத்துள்ள பெரிய பாத்திரம்.

किंस्विद् एकपदं धर्म्यं किंस्विद् एकपदं यशः।

किंस्विद् एकपदं स्वर्ग्यं किंस्विद् एकपदं सुखम् ॥

தர்மம் எதில் நிலைபெறுகிறது?

புகழ் எதில் நிலைபெறுகிறது?

ஸ்வர்க்கம் எதில் நிலைபெறுகிறது?

சுகம் எதில் நிலைபெறுகிறது?

दाक्ष्यम् एकपदं धर्म्यं दानम् एकपदं यशः।

सत्यम् एकपदं स्वर्ग्यं शीलम् एकपदं सुखम् ॥

தர்மம் (அவரவர் கடமை) முயற்சியில் நிலைபெறுகிறது. (தர்மத்தை முயற்சியில்  நிலைநாட்ட வேண்டும். தர்மம் தானாக அமையாது)

தானம் செய்ய செய்ய, புகழ் நிலைபெறுகிறது.

சத்தியத்தில் (உள்ளும் புறமும் உண்மையாக இருத்தல்) இருக்க இருக்க, ஸ்வர்க்கம் நிலைபெறுகிறது.

நல்லொழுக்கம் பெருக பெருக, சுகம் நிலைபெறுகிறது.

किंस्विद् आत्मा मनुष्यस्य किंस्विद् दैवकृतः सखा।

उपजीवनं किस्विद् अस्य किंस्विद् अस्य परायणम् ॥

மனிதனுக்கு ஆத்மா எது?

தெய்வத்தால் ஏற்படுத்தப்பட்ட துணை யார்?

மனிதனுடைய பிழைப்புக்கு ஸாதனம் எது?

மனிதனுக்கு முக்கியமான கதி (அடையவேண்டியது) என்ன?

पुत्र आत्मा मनुष्यस्य भार्या दैवकृतः सखा।

उपजीवनं च पर्जन्यो दानमस्य परायणम् ॥

மனிதனுக்கு ஆத்மாவாக (விருப்பமாக) இருப்பவன் "புத்திரனே".

தெய்வத்தால் ஏற்படுத்தப்பட்ட துணை "மனைவியே"

மனிதனுடைய பிழைப்புக்கு சாதனம் "மேகமே".

மனிதனுக்கு முக்கியமான கதி தானமே (அனைத்தையும் சரணாகதி செய்வதே)

धन्यानाम् उत्तमं किंस्विद् धनानां स्यात्किम् उत्तमम्। 

लाभानाम् उत्तमं किंस्यात् सुखानां स्यात्किम् उत्तमं ॥

செல்வத்தை ஏற்படுத்தி கொடுப்பவற்றுள் சிறந்தது எது?

செல்வத்தில் சிறந்த செல்வம் எது?

லாபங்களுள் எது சிறந்த லாபம்?

சுகங்களுள் எது சிறந்த சுகம்?

धन्यानामुत्तमं दाक्ष्यं धनानामुत्तमं श्रुतम्।

लाभानां श्रेय आरोग्यं सुखानां तुष्टि: त्तमा ॥

செல்வத்தை ஏற்படுத்தி கொடுப்பவற்றுள் சிறந்தது  ஊக்கமே.

செல்வத்தில் சிறந்த செல்வம் - சாஸ்திர ஞானமே (வேதத்தை உண்மையாக அறிந்து கொள்வதே)

லாபங்களுள் சிறந்த லாபம் - நோயற்ற வாழ்வே.

சுகங்களுள் சிறந்த சுகம் - திருப்தியே.

किंस्विद् धर्मपरं लोके कश्च धर्मः सदाफलः।

किं नियम्य न शोचन्ति कैश् सन्धिर्न जीर्यते ॥

உலகத்தில் சிறந்த தர்மம் எது?

எந்த தர்மம் எப்பொழுதுமே பலன் கொடுக்கும்?

எதை அடக்கினால், மனிதன் துயரம் அடையமாட்டான்.

எவர்களோடு ஏற்படும் நட்பு, குறையாமல் இருக்கும்?

आनृशंस्यं परं धर्मो त्रेताधर्मः सदाफलः।

मनो यम्य न शोचन्ति सन्धिः सद्भिर्न जीर्यते ॥

உலகத்தில் சிறந்த தர்மம் "அஹிம்ஸையே" (கொல்லாமை)

மோக்ஷத்தை தரக்கூடிய (அ உ ம - ஓம்) பிரணவம் ஜப தர்மம் எப்பொழுதுமே பலன் கொடுக்கும்.

மனதை அடக்கும் மனிதன், துயரம் அடைய மாட்டான்.

ஸாதுக்களோடு ஏற்படும் நட்பு, குறையாமல் இருக்கும்.

किं नु हित्वा प्रियो भवति किंनु हित्वा न शोचति।

किंनु हित्वा अर्थवान् भवति किंनु हित्वा सुखी भवेत् ॥

எதை விட்டால், மனிதன் அனைவருக்கும் ப்ரியமானவன் ஆகிறான்?

எதை விட்டால், மனிதன் துயரத்தை அடைவதில்லை?

எதை விட்டால், மனிதன் பொருள் உள்ளவன் ஆகிறான்?

எதை விட்டால், மனிதன் சுகம் பெறுகிறான்?

मानं हित्वा प्रियो भवति क्रोधं हित्वा न शोचति।

कामं हित्वा अर्थवान् भवति लोभं हित्वा सुखी भवेत् ॥

கர்வத்தை (தன்னை பற்றி ஒரு அபிமானம்) விட்டால், மனிதன் அனைவருக்கும் ப்ரியமாகிறான்.

கோபத்தை விட்டால், மனிதன் துயரத்தை அடைவதில்லை.

தர்மத்துக்கு எதிரான ஆசைகளை விட்டால், மனிதன் பொருள் உள்ளவன் ஆகிறான்.

பேராசையை மனிதன் விட்டு விட்டால், மனிதன் சுகம் பெறுகிறான்.

किम् अर्थं ब्राह्मणे दानं किम् अर्थं नटनर्तके।

किम् अर्थं चैव भृत्येषु किम् अर्थं चैव राजसु ॥

ப்ராம்மணனுக்கு தானம் எதற்கு கொடுக்கிறோம்?

நடனம், நாட்டியம் ஆடுபவர்களுக்கு தானம் எதற்கு கொடுக்கிறோம்?

வேலைக்காரனுக்கு தானம் எதற்கு கொடுக்கிறோம்?

அரசனுக்கு தானம் எதற்கு கொடுக்கிறோம்?

धर्मार्थं ब्राह्मणे दानं यशोर्थं नटनर्तके।

भृत्येषु सङ्ग्रहार्थं च भयार्थं चैव राजसु ॥

தர்மத்துக்காக ப்ராம்மணனுக்கு தானம் கொடுக்கிறோம்.

புகழுக்காக நடனம், நாட்டியம் ஆடுபவர்களுக்கு தானம் கொடுக்கிறோம்.

வசப்படுத்துவதற்காக வேலைக்காரனுக்கு தானம் கொடுக்கிறோம்.

பயத்தை போக்கி கொள்ள, அரசனுக்கு தானம் கொடுக்கிறோம்.

केनस्विद् आवृतो लोकः केनस्विन्  प्रकाशते ।

केन त्यजति मित्राणि केन स्वर्गं न गच्छति ॥

எதனால் உலகம் மூடப்பட்டு இருக்கிறது?

எதனால் உலகம் பிரகாசிக்கவில்லை?

எந்த காரணத்தால், மனிதன் தன் நண்பனை இழக்கிறான்?

எந்த மனிதன் ஸ்வர்க்கத்தை அடையாமல் இருக்கிறான்?

अज्ञानेनावृतो लोक: मसा न प्रकाशते।

लोभात्त्यजति मित्राणि सङ्गात्स्वर्गं न गच्छति ॥

உலகம் (ஆத்மா) அஞானத்தால் மூடப்பட்டு இருக்கிறது.

தமோ குணத்தால் உலகம் (ஆத்மா) பிரகாசிக்கவில்லை.

லோபத்தினால் (பேராசை), மனிதன் தன் நண்பனை இழக்கிறான்.

(உலக) பற்றுதல் உடைய மனிதன் ஸ்வர்க்கத்தை அடையாமல் இருக்கிறான்.

मृतः कथं स्यात्पुरुषः कथं राष्ट्रं मृतं भवत्।

श्राद्धं मृतंकथं वा स्यात्कथं यज्ञा मृतो भवेत् ॥

எப்போது மனிதன் இறந்தவனுக்கு சமமாகிறான்?

அரசாங்கம் எப்பொழுது இறந்ததற்கு சமமாகிறது?

ஸ்ரார்த்தம் எப்போது அழிந்ததாகும்?

யாகம் எப்போது அழிந்ததாகும்?

मृतो दरिद्रः पुरुषो मृतं राष्ट्रमराजकम्।

मृतम् अश्रोत्रियं श्राद्धं मृतो यज्ञस्त्व दक्षिणः ॥

தரித்திரம் ஏற்படும் போது, மனிதன் இறந்தவனுக்கு சமமாகிறான்.

அரசன் இல்லாத அரசாங்கம் இறந்ததற்கு சமமாகிறது

வேதத்தை அத்யயனம் செய்யாத ப்ராம்மணன் செய்து வைக்கும் ஸ்ரார்த்தம் பயனில்லாது போகும்.

தக்ஷிணை இல்லாத யாகம், பயனற்றதாக போகும்.

का दिग्  किं उदकं पार्थ किम् अन्नं किंच वै विषम्।

श्राद्धस्य कालम् ख्याहि ततः पिब हरस्व च ॥

எது பாதை (திக்கு)?

பரத குலத்தவனே ! எது ஜலம்?

எது அன்னம்?

எது விஷம்?

சிரத்தையோடு இதற்கு பதில் சொல்லி விட்டு, தண்ணீர் எடுத்து கொள்.

सन्तो दिग् जलम् आकाशं गौ: अन्नं ब्राह्मणं विषम्।

श्राद्धस्य ब्राह्मणः कालः कथं वा यक्ष मन्यसे ॥

சாதுக்கள் செல்லும் பாதையே நமக்கும் பாதை (திக்கு).

ஆகாசத்திலிருந்து ஜலம் உண்டாகிறது. ஆகையால், ஆகாசமே ஜலம்.

பசுவின் பால் இல்லாமல் உலகம் இல்லை. பசுவே நமக்கு உணவு தருகிறது.

ப்ராம்மணனுடைய பொருள் விஷம். பிராம்மணன் பொருளை அபகரிப்பதால், விஷத்தை குடித்தது போல ஆகும்.

तपः किंलक्षणं प्रोक्तं को दमश्च प्रकीर्तितः।

क्षमा च का परा प्रोक्ता का च ह्रीः परिकीर्तिता ॥

எது தவம் என்று சொல்லப்படுகிறது?

எது தமம் என்று சொல்லப்படுகிறது?

எது பொறுமை என்று சொல்லப்படுகிறது?

எது வெட்கமென்று சொல்லப்படுகிறது?

तपः स्वधर्मवर्तित्वं मनसो दमनं दमः।

क्षमा द्वन्द्व सहिष्णुत्वं ह्रीर कार्य निवर्तनम् ॥

அவரவர் தர்மத்தை (கடமையை)  கடைப்பிடிப்பதே தவம்.

மனதை அடக்குவதே, சிறந்த தமம் என்று சொல்லப்படுகிறது.

ஸுகம் துக்கம் போன்ற இரட்டைகளை (த்வந்தம்) பொறுப்பதே, பொறுமை என்று சொல்லப்படுகிறது.

செய்ய கூடாத காரியத்திலிருந்து விலகி திரும்பி வருவதே, வெட்கம் என்று சொல்லப்படுகிறது.

किं ज्ञानं प्रोच्यते राजन् क: शमश्च प्रकीर्तितः।

दया च का परा प्रोक्ता किं च: आर्जवम् उदाहृतम् ॥

அரசே! ஞானம் எப்படி  உண்டாகும்?

எது சமமென்று என்று சொல்லப்படுகிறது?

எது கருணை (தயை) என்று சொல்லப்படுகிறது?

எது ஆர்ஜவம் என்று சொல்லப்படுகிறது?

ज्ञानं तत्त्वार्थ सम्बोधः शमश्चित्त प्रशान्तता।

दया सर्वसुखैषित्वम् आर्जवं सम-चित्तता ॥

உண்மையை அறியும் போது, ஞானம் (அறிவு) உண்டாகும்

சித்தத்தில் சாந்தி (அமைதி) இருப்பதே சமமென்று என்று சொல்லப்படுகிறது.

அனைவரும் சுகமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதே, கருணை (தயை) என்று சொல்லப்படுகிறது.

எங்கும் சமமான எண்ணமே ஆர்ஜவம் என்று சொல்லப்படுகிறது. (அதாவது, உள்ளும் (மனம்) புறமும் (வாக்கு) ஒரே போல இருத்தல்)

कः शत्रु: दुर्जयः पुंसां कश्च व्याधि: अनन्तकः।

कीदृशश्च स्मृतः साधु: असाधुः कीदृशः स्मृतः ॥

மனிதனால் எளிதில் வெல்லமுடியாத பகைவன் யார்?

எது முடிவில்லாத வியாதி?

எப்படி இருந்தால், மனிதன் ஸாது என்று அழைக்கப்படுகிறான்?

யார் அஸாது என்று அழைக்கப்படுகிறான்?

क्रोधः सुदुर्जयः शत्रु: लोभो व्याधि: अनन्तकः।

सर्व भूत हितः साधु: असाधु: निर्दयः स्मृतः ॥

கோபமே மனிதனால் எளிதில் வெல்லமுடியாத பகைவன்.

பேராசையே  முடிவில்லாத வியாதி

அனைத்து உயிருக்கும் நன்மை செய்ய நினைப்பவனே, ஸாது என்று அழைக்கப்படுகிறான்

பிற உயிரிடத்தில் கருணை (தயை) அற்றவன், அஸாது என்று அழைக்கப்படுகிறான்

को मोहः प्रोच्यते राजन् कश्च मानः प्रकीर्तितः।

किं आलस्यं च विज्ञेयं कश्च शोकः प्रकीर्तितः ॥

அரசே! எது மோகம் என்று சொல்லப்படுகிறது?

எது மானம் என்று சொல்லப்படுகிறது?

எது சோம்பேறித்தனம் (ஆலஸ்யம்) என்று சொல்லப்படுகிறது.

எது சோகம் என்று சொல்லப்படுகிறது?

मोहो हि धर्म मूढ्तवं मान: त्व आत्मा अभिमानिता।

धर्म निष्क्रियता लस्यं शोकस्त्वज्ञानम् च्यते ॥

தர்மத்தை (கடமை) அறியாமல் இருப்பதே, மோகம் என்று சொல்லப்படுகிறது

'நான்' என்ற அஹங்காரமே, மானம் என்று சொல்லப்படுகிறது

தர்மத்தை (கடமையை) செய்யாமல் இருப்பதே சோம்பேறித்தனம் (ஆலஸ்யம்) என்று சொல்லப்படுகிறது.

உண்மையை அறியாமல் இருப்பதே (அஞானமே), சோகம் என்று சொல்லப்படுகிறது.

किं स्थैर्यम् ऋषिभिः प्रोक्तं किं च धैर्यम् उदाहृतम्।

स्नानं च किं परं प्रोक्तं दानं च किमिहोच्यते ॥

உறுதியான நிலை என்று ரிஷிகள் எதை சொல்கிறார்கள்?

எது தைரியம் என்று சொல்லப்படுகிறது?

எது சிறந்த ஸ்நானம் (குளியல்) என்று சொல்லப்படுகிறது?

எது தானம் என்று இந்த உலகில் சொல்லப்படுகிறது?

स्वधर्मे स्थिरता स्थैर्यं धैर्यम् इन्द्रिय निग्रहः।

स्नानं मनो मल त्यागो दानं वै भूत रक्षणम् ॥

அவரவர் தர்மத்தில் (கடமையில்) நிலைத்து இருப்பது, உறுதியான நிலை என்று ரிஷிகள் சொல்கிறார்கள்.

புலன்களால் உண்டாகும் உணர்ச்சிகளை அடக்குதல், தைரியம் என்று சொல்லப்படுகிறது.

மனதில் உள்ள அழுக்கை கலைவதே, சிறந்த ஸ்நானம் (குளியல்) என்று சொல்லப்படுகிறது.

உயிர்களை காப்பதே, தானம் என்று இந்த உலகில் சொல்லப்படுகிறது. (பிராணிகள் கொலை செய்யப்படாமல், உயிர் தானம் செய்வதே)

कः पण्डितः पुमान्ज्ञेयो नास्तिकः कश्च उच्यते।

को मूर्खः कश्च कामः स्यात्को मत्सर इति स्मृतः ॥

யார் பண்டிதன் என்று அறியப்படுகிறான்?

யார் நாஸ்திகன் என்று சொல்லப்படுகிறான்?

யார் மூர்க்கன் என்று சொல்லப்படுகிறான்?

எது காமம் (இச்சை) ஆகும்?

எது மாத்ஸர்யம் என்று சொல்லப்படுகிறது?

धर्मज्ञः पण्डितो ज्ञेयो नास्तिको मूर्ख उच्यते।

कामः संसारहेतु: च हृत्तापो मत्सरः स्मृतः ॥

அனைத்து தர்மங்களையும் (கடமைகளை) அறிந்தவன் பண்டிதன் என்று சொல்லப்படுகிறான்.

மூர்க்கனே நாஸ்திகன் என்று சொல்லப்படுகிறான்.

சம்சாரம் என்ற பிறப்பே, காமம் ஆகும்.

மனக்கொதிப்பே மாத்ஸர்யம் என்று சொல்லப்படுகிறது

को अहंकार इति प्रोक्तः कश्च दम्भः प्रकीर्तितः।

किं तद् दैवं परं प्रोक्तं किं तत् पैशुन्यं उच्यते ॥

எது அஹங்காரம் என்று சொல்லப்படுகிறது?

எது டம்பம் என்று சொல்லப்படுகிறது?

தெய்வம் (விதி) என்பது என்ன?

எது பைசூன்யம் என்று சொல்லப்படுகிறது?

महा ज्ञानम् हंकारो दम्भो धर्मो ध्वजोच्छ्रयः।

दैवं दानफलं प्रोक्तं पैशुन्यं परदूषणम् ॥

பெரிய அஞானமே (உண்மையை அறிய இயலாத நிலையே), அஹங்காரம் என்று சொல்லப்படுகிறது.

'தர்மத்தை அனுஷ்டிக்கிறேன்' என்று பிறருக்கு தெரிவித்தலே, டம்பம் என்று சொல்லப்படுகிறது.

தானம் செய்ததால் ஏற்படும் பலனே விதி.

பிறரை திட்டுவதே, பைசூன்யம் என்று சொல்லப்படுகிறது.

धर्म: च अर्थ: च काम: च परस्पर विरोधिनः।

एषां नित्य विरुद्धानां कथम् एकत्र संगमः ॥

அறம், பொருள், இன்பம் மூன்றும் ஒன்றோடொன்று விரோதமுள்ளவை. எப்பொழுதும் விரோதமுள்ள இவை மூன்றும், ஓரிடத்தில் எப்போது சேரும்?

यदा धर्म: भार्या च परस्पर वशानुगौ।

तदा धर्म अर्थ कामानां त्रयाणामपि संगमः ॥

எப்பொழுது தர்மமும் (கடமையும்), மனைவியும் சேர்ந்து நடப்பார்களோ, அப்பொழுது அறம், பொருள், இன்பம் மூன்றும் சேரும்.

अक्षयो नरकः केन प्राप्यते भरतर्षभ।

एतन्मे पृच्छतः प्रश्नं तच्छीघ्रं वक्तुमर्हसि ॥

நீண்ட நரகத்தை யார் அடைவார்கள்?

இதற்கு விடை அளிப்பாயாக..

ब्राह्मणं स्वयमाहूय याचमानम् अकिंचनम्।

पश्चान्नास्तीति यो ब्रूयात्सो अक्षयं नरकं व्रजेत् ॥

பொருள் இல்லாத நிலையில், யாசகம் செய்யும் ப்ராம்மணனை தானே கூப்பிட்டு, பிறகு கொடுப்பதற்கு இல்லையென்று எந்த மனிதன் சொல்வானோ, அவன் நீண்ட நரகத்தை அடைவான்.

वेदेषु धर्मशास्त्रेषु मिथ्या यो वै द्विजातिषु।

देवेषु पितृधर्मेषु सो अक्षयं नरकं व्रजेत् ॥

எவன் வேதத்தை பற்றி பொய் சொல்வானோ, தர்மத்தை பற்றி பொய் சொல்வானோ, ப்ராம்மணனிடத்தில் பொய் சொல்வானோ, தேவர்களிடத்தில் பொய் சொல்வானோ, பித்ரு காரியங்களில் பொய் சொல்வானோ, அவனும் நீண்ட நரகத்தை அடைவான்.

विद्यमाने धने लोभाद् दानभोग विवर्जितः।

पश्चान् नास्ति इति यो ब्रूयात्सो अक्षयं नरकं व्रजेत् ॥

தனம் இருக்கும் போதே, பேராசை காரணமாக பிறருக்கு கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் "இல்லை" என்று சொல்வானோ, அவனும் நீண்ட நரகத்தை அடைவான்.

राजन् कुलेन वृत्तेन स्वाध्यायेन श्रुतेन वा।

ब्राह्मण्यं केन भवति प्रब्रूह्येतत् सुनिश्चितम् ॥

அரசனே! ஒருவன் குலத்தால் ப்ராம்மணனாகிறானா? ஒழுக்கத்தால் ப்ராம்மணனாகிறானா? வேதம் ஓதுவதால் ப்ராம்மணனாகிறானா? சாஸ்திர அறிவினால் ப்ராம்மணனாகிறானா?

இதனை நன்றாக யோசித்து பதில் சொல்வாயாக?

शृणु यक्ष कुलं तात न स्वाध्यायो न च श्रुतम्।

कारणं हि द्विजत्वे च वृत्तमेव न संशयः ॥

யக்ஷனே ! கேள். குலத்தாலோ, வேதம் ஓதுவதாலோ, சாஸ்திர அறிவினாலோ ஒருவன் ப்ராம்மணன் ஆவதில்லை. ஒழுக்கத்தால் மட்டுமே ஒருவன்  ப்ராம்மணன் ஆகிறான். இதில் சந்தேகம் இல்லை.

वृत्तं यत्नेन संरक्ष्यं ब्राह्मणेन विशेषतः।

अक्षीणवृत्तो न क्षीणो वृत्ततस्तु हतो हतः ॥

ஆதலால், பிராம்மணன் தன் ஒழுக்கத்தை பெரும் முயற்சி செய்து பாதுகாத்து கொள்ள வேண்டும். ஒழுக்க குறையற்ற பிராம்மணன் எந்த குறையும் இல்லாமல் மதிக்கப்படுவான். ஒழுக்கத்தை தொலைத்தவன் கெட்டு போனவனே !

पठकाः पाठकाश्चैव ये चान्ये शास्त्रचिन्तकाः।

सर्वे व्यसनिनो मूर्खा यः क्रियावान्स पण्डितः ॥

படிப்பவர்கள், படிப்பை சொல்லி தருபவர்கள், மேலும் பல சாஸ்திரங்களை சிந்தனை செய்பவர்கள், யாராக இருந்தாலும், தெரிந்து கொண்டதே பரம பிரயோஜனம் என்று நினைப்பார்களென்றால், அவர்களே மூடர்கள். எவன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுவானோ , அவனே பண்டிதன்.

चतुर्वेदोऽपि दुर्वृत्तः स शूद्रादतिरिच्यते।

यो अग्निहोत्र परो दान्तः स ब्राह्मण इति स्मृतः ॥

நான்கு வேதத்தை அத்யயனம் செய்தவனே என்றாலும், ஒழுக்கமில்லாவிட்டால், அந்த பிராம்மணன் (MLA/MP) சூத்திரனுக்கும் (employee) கீழானவன்.

அக்னி ஹோத்திரத்தில் பற்றுதலும், புலன்களை (காமத்தை கோபத்தை வளர்க்கும் விஷயங்களை பார்ப்பது, பேசுவது, முகர்வது, தொடுவது, கேட்பது) அடக்கி வைத்து இருப்பவன் ப்ராம்மணாக கருதப்படுகிறான்.

प्रियवचनवादी किं लभते

विमृशित कार्यकरः किं लभते।

बहु-मित्रकरः किं लभते

धर्मे रतः किं लभते कथय ॥

பிரியமாக பேசுபவன் எதை அடைகிறான்?

ஆலோசித்து காரியத்தை செய்பவன் எதை அடைகிறான்?

பல நண்பர்களை கொண்டிருப்பவன் எதை அடைகிறான்?

தர்மத்தின் வழியில் இருப்பவன் எதை அடைகிறான்?

प्रियवचनवादी प्रीयो भवति

विमृशितकार्यकरोऽधिकं जयति।

बहुमित्रकरः सुखं वसते

यश्च धर्मरतः स गतिं लभते ॥

பிரியமாக பேசுபவன் அனைவர்க்கும் பிரயமானவனாகிறான்.

ஆலோசித்து காரியத்தை செய்பவன் வெற்றி அடைகிறான்.

பல நண்பர்களை கொண்டிருப்பவன் சுகமாக இருக்கிறான்.

தர்மத்தின் வழியில் இருப்பவன் நற்கதியை அடைகிறான்

को मोदते किम् श्चर्यं कः पन्थाः का च वार्तिका।

वद मे चतुरः प्रश्नान्मृता जीवन्तु बान्धवाः ॥

எவன் சந்தோஷமாக இருக்கிறான்?

எது ஆச்சர்யம்?

எது வழி?

எது தினமும் நடக்கும் நிகழ்ச்சி?

இந்த 4 கேள்விக்கும் பதில் அளிப்பாயாக.

पञ्चमेऽहनि षष्ठे वा शाकं पचति स्वे गृहे।

अनृणी चाप्रवासी च स वारिचर मोदते ॥

ஜலத்தில் சஞ்சரிக்கும் யக்ஷனே!

எந்த மனிதனால் பகலில் 5வது அல்லது 6வது காலத்தில், (12-4PM) (ஒரு பகலை 8ஆக பிரிப்பார்கள்) குறைந்தது ஒரு கீரையாவது தன் வீட்டில் சமைத்து சாப்பிட முடிகிறதோ! கடனில்லாதவனாகவும், வெளியூர் பயணம் செல்லவேண்டிய அவசியமில்லாதவனாகவும் எவன் இருக்கிறானோ, அவனே சந்தோஷமாக இருக்கிறான்.

अहन्यहनि भूतानि गच्छन्तीह यमालयम्।

शेषाः स्थावरमिच्छन्ति किमाश्चर्यमतः परम् ॥

இந்த உலகில் தினமும் எண்ணிலடங்கா உயிர்கள் யமலோகம் சென்று கொண்டே இருக்கிறது. மிச்சப்பட்டு இருக்கும் உயிர்கள் (மனிதர்கள்) தாங்கள் மட்டும் நிலையாக இருக்க போகிறோம் என்று நினைக்கிறார்கள். இதை காட்டிலும் ஆச்சர்யம் வேறு என்ன இருக்கிறது?

तर्को प्रतिष्ठः श्रुतयो विभिन्ना

नैको मुनिर्यस्य मतं प्रमाणम्।

धर्मस्य तत्त्वं निहितं गुहायां

महाजनो येन गतः स पन्था ॥

விவாதத்தால் தர்மத்தை நிர்ணயிக்க முடியாது (பேசுபவன் சாமர்த்தியமே ஜெயிக்கும்)

வேதத்திலோ ஒரு மந்திரம் பல அர்த்தங்களை கொண்டு இருக்கிறது.

அதை கொண்டும் உண்மையான தர்மத்தை நிர்ணயிக்க முடியவில்லை.

ஒரு முனிவர் சொல்லும் சாஸ்திரம் மற்றொரு முனிவர் சொல்வதற்கு  மாறாக இருக்கிறது.

எது தர்மம் என்று அறிவது உண்மையில் ரகசியமாக தான் வைக்கப்பட்டுள்ளது.

ஆதலால்,

எந்த வழியில் பல பெரியோர்கள் சென்றார்களோ, அது தான் நாம் பின்பற்ற வேண்டிய தர்ம வழி.

पृथ्वी विभाण्डं गगनं पिघानं

सूर्याग्निना रात्रिदिवेन्धनेन।

मास: तु दर्वी परिघट्टनेन

भूतानि कालः पचतीति वार्ता ॥

பூமியே ஒரு பாண்டம் போல உள்ளது. ஆகாயம் அதற்கு மூடி போல இருக்கிறது. இந்த பூமி என்ற பாண்டத்தில், இரவு பகல் என்ற விறகுகளை வைத்து, சூரியன் என்ற அக்னி மூட்டி, மாதங்கள், காலங்கள் (ருதுக்கள்) என்ற கரண்டியை கொண்டு பூத உடல்களை கிளறி, பக்குவம் செய்து கொண்டே இருக்கிறது காலம். இதுவே தினமும் நடந்து வருகின்ற நிகழ்வு.

व्याख्याता मे त्वया प्रश्ना यथातत्वं परंतप।

पुरुषं त्विदानीं व्याख्याहि यश्च सर्वधनी नरः ॥

எதிரிகளை கொளுத்துபவனே! நான் கேட்ட கேள்விகளுக்கு உள்ளது உள்ளபடி விடை அளித்தாய்.

யார் புருஷன்?

யார் அனைத்து செல்வமும் உடைய மனிதன் என்று கருதப்படுகிறான்?

இதை விரிவாக கூறு.

दिवं स्पृशति भूमिं च शब्दः पुण्येन कर्मणा।

यावत्स शब्दो भवति तावत्पुरुष उच्यते ॥

புண்ணியங்கள் (நல்வினை) செய்வதால், பேரும் புகழும் பூமியில் மட்டுமல்லாது சொர்க்க லோகம் வரை பரவுகிறது. அந்த புகழ் சொல் எதுநாள் ஒருவனுக்கு இருக்கிறதோ, அது வரை "புருஷன்" என்று மதிக்கப்படுகிறான்.

तुल्ये प्रियाप्रिये यस् सुखदुःखे तथैव च।

अतीतानागते चोभे सवै पुरुष उच्येत ॥

எந்த மனிதன் விருப்பு-வெறுப்பு, சுக-துக்கம், வருமானம்-நஷ்டம் போன்ற இரட்டைகளை கண்டும் சமமாக இருக்கின்றானோ, அவனும் "புருஷன்" என்று மதிக்கப்படுகிறான்.

समत्वं यस्य सर्वेषु निस्पृहः शान्त मानसः।

सुप्रसन्नः सदा योगी स वै सर्वधनी नरः ॥

எந்த மனிதன் எந்த பொருளை கண்டாலும் சலனமில்லாமல், சம புத்தியோடு, ஆசை அற்றவனாக, சாந்தமான மனநிலையுடன், தெளிவுள்ளவனாக, எப்போதும் ப்ரம்மத்தையே தியானித்து கொண்டு இருக்கிறானோ, அந்த மனிதனே, எல்லா செல்வமும் உடையவன் என்று கருதப்படுகிறான்.