காந்தாரி 'யாதவ வீரர்கள் அழிந்து, அவர்களின் பெண்கள் கதறி அழ வேண்டும், ஸ்ரீ கிருஷ்ணர் வனத்தில் மறைய வேண்டும்' என்று சபிக்கிறாள்... மஹாபாரதம் பேசுகிறது..
पाण्डवा धार्तराष्ट्रा: च द्रुग्धाः कृष्ण परस्परम् |
उपेक्षिता विनश्यन्त: त्वया कस्माज जनार्दन ||
- வியாசர் மஹாபாரதம்
கிருஷ்ணா! பாண்டவர்களும், கௌரவர்களும் ஒருவருக்கொருவர் பகை கொண்டிருந்தனரே. ஜனார்தனா ! இவர்கள் இருவருமே அழிந்து போகட்டும் என்று ஏன் இருவரையுமே புறக்கணித்தாய்?
शक्तेन बहु भृत्येन विपुले तिष्ठता बले |
उभयत्र समर्थेन श्रुतवाक्येन चैव ह ||
- வியாசர் மஹாபாரதம்
கிருஷ்ணா! உனக்கு சக்தி இருந்தும், உனக்காக போர் செய்ய மகா பராக்கிரமசாலிகளான யாதவ வீரர்கள் இருந்தும், இப்படி ஒரு பெரு நாசத்தை தடுக்காமல் இருந்து விட்டாயே!
इच्छतॊपेक्षितॊ नाशः कुरूणां मधुसूदन |
यस्मात् त्वया महाबाहॊ फलं तस्माद् अवाप्नुहि ||
- வியாசர் மஹாபாரதம்
மதுசூதனா! நீ விருப்பப்பட்டு தான் இவர்களை உபேக்ஷித்து, குரு வம்சத்தின் நாசத்தை ஏற்படுத்தி இருக்கிறாய். இப்படி ஒரு குலநாசத்தை ஏற்படுத்தியதன் பலனை நீ அடைந்தே தீர வேண்டும்.
पतिशुश्रूषया यन् मे तपः किं चिद् उपार्जितम् |
तेन त्वां दुरवापात्मञ शप्स्ये चक्रगदाधर ||
- வியாசர் மஹாபாரதம்
என்னுடைய கணவனுக்கு இதுநாள் வரை பணிவிடை செய்த தவத்தின் பயனை கொண்டு, சக்கரமும், கதையும் தரித்து இருக்கும் உன்னை சபிக்கிறேன்.
यस्मात् परस्परं घ्नन्तॊ ज्ञातयः कुरुपाण्डवाः |
उपेक्षितास ते गॊविन्द तस्माज् ज्ञातीन वधिष्यसि ||
- வியாசர் மஹாபாரதம்
எப்படி உறவுக்காரர்களான பாண்டவர்களும், கௌரவர்களும் தங்களுக்குள் அடித்து கொண்டு இருக்கும் போது, அவர்களை பார்த்து கொண்டே இருந்தாயோ, அது போல, உன்னுடைய உறவுகள் தங்களுக்குள் அடித்து கொண்டு மடிவதை காண்பாய். நீயே உன்னுடையவர்களை வதமும் செய்வாய்.
त्वम् अप्य उपस्थिते वर्षे षट्त्रिंशे मधुसूदन |
हतज्ञाति: हतामात्यॊ हतपुत्रॊ वनेचरः |
कुत्सितेनाभ्युपायेन निधनं समवाप्स्यसि ||
- வியாசர் மஹாபாரதம்
மதுசூதனா! இன்றிலிருந்து 36வது வருடம் வரும் போது, உன்னுடைய உறவுகளும், மந்திரிகளும், புத்ரர்களும் மடிந்து போவார்கள். நீயும் அனாதை போன்று வனத்தில் சஞ்சரித்து மறைவாய்.
तवाप्य एवं हतसुता निहतज्ञातिबान्धवाः |
स्त्रियः परिपतिष्यन्ति यथैता भरत स्त्रियः ||
- வியாசர் மஹாபாரதம்
எப்படி பரத குல பெண்கள் இப்பொழுது கண்ணீர் வடித்து அழுகிறார்களோ, அது போல, உன் குல பெண்களும், தங்கள் கணவனை, பிள்ளையை, சொந்தங்களை இழந்து அழுவார்கள்.
இவ்வாறு, 100 புத்ரர்களை இழந்த சோகத்தில், தன்னையும் மீறி காந்தாரி இப்படி பேசிவிட்டாள்.
மஹாபாரத சரித்திரத்தை, மன்னன் ஜனமேஜெயனுக்கு சொல்லிக்கொண்டு வந்த வைசம்பாயனர் மேலும் சொல்கிறார்.
तच छ्रुत्वा वचनं घॊरं वासुदेवॊ महामनाः |
उवाच देवीं गान्धारीम् ईषद अभ्युत्स्मयन्न इव ||
- வியாசர் மஹாபாரதம்
உதார குணம் கொண்ட வாசுதேவன், இப்படி கடுமையான சாபத்தை வழங்கிய காந்தாரியை பார்த்து, புன்சிரிப்புடன் பேசலானார்..
संहर्ता वृष्णिचक्रस्य नान्यॊ मद् विद्यते शुभे |
जाने ऽहम् एतद् अप्य एवं चीर्णं चरसि क्षत्रिये ||
- வியாசர் மஹாபாரதம்
க்ஷத்ரிய ஸ்திரீயே! நான் இவ்வாறு நடக்கப்போவதை அறிவேன். என்னுடைய சங்கல்பத்தையே, நீ இப்பொழுது சொன்னாய். இப்படி ஒரு சாபத்தை ஏன் கொடுத்தோம் என்று நீ உன்னையே சந்தேகிக்க அவசியமில்லை.
अवध्यास् ते नरैर् अन्यैर् अपि वा देवदानवैः |
परस्परकृतं नाशम् अतः प्राप्स्यन्ति यादवाः ||
- வியாசர் மஹாபாரதம்
என்னை தவிர வேறொருவனால் யாதவ (வ்ருஷணீ வீரர்கள்) கூட்டத்தை அழிக்க முடியாது. என்னுடைய யாதவ வீரர்களை மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்களாலும், தானவர்களாலும் கூட அழிக்க முடியாது. யாராலும் கொல்லப்படாதவர்கள். யாதவர்கள் தங்களுக்குள் அடித்து கொண்டு தான் மடிவார்கள்
इत्य उक्तवति दाशार्हे पाण्डवा: त्रस्तचेतसः |
बभूवु: भृशसंविग्ना निराशा: चापि जीविते ||
- வியாசர் மஹாபாரதம்
இவ்வாறு தாஸார்ஹன் (கிருஷ்ணர்) கூறியவுடன், பாண்டவர்கள் மனதில் நடுக்கமும், பெரும் துயரும் கொண்டனர். உலகில் உயிர் வாழ ஆசையில்லாதவர்களாகவும் ஆகினர்.
'தன் பக்கம் நிறைய ஆள் சேர்த்து கொள்ளவேண்டும்' என்பதற்காக பலமில்லாதவன், திறமையில்லாதவன், பேச தெரியாதவன், படிக்க தெரியாதவனை எல்லாம் சேர்த்து கொண்டு, தானும் பெரும் கூட்டத்திற்கு 'தலைவன்' என்று தன்னை சொல்லிக்கொள்பவர்கள் உண்டு.
பெருமாளோ, தன்னுடைய சேனையில், ஒவ்வொரு வீரனும் தோற்கடிக்க முடியாத சூரர்களாகவே வைத்து இருக்கிறார்.
பொதுவாக எந்த அரசனும், தன்னுடைய சேனையில் இருப்பவர்களிடையே, பலம் குறைந்தவரையே தூதுக்கு அனுப்புவார்கள்.
மலையையே ஒரு கையால் தூக்கும், சாதிக்க முடியாத (அஸாத்ய) காரியங்கள் அனைத்தையும் சாதிக்க கூடியவரான ஹனுமானை தூதுக்கு அனுப்புகிறார், ராமபிரான்.
இலங்கைக்குள் ராவணன் அனுமதி இல்லாமல் கால் வைக்க இந்திரனும், சூரியனும் பயந்து கொண்டு எல்லையில் நிற்க, ஹனுமான் சீதாதேவியை அசோகவனம் வரை சென்று பார்த்து விட்டார்.
சீதாதேவியிடம் "ராமபிரான் வைத்திருக்கும் கோடிக்கணக்கான வானர சேனையில் கடைசி வரிசையில் நிற்கும் ஒரு சாதாரண வானரன் நான். என்னை விட பலசாலிகளான வானரர்களை கோடிக்கணக்கில் அழைத்து கொண்டு பிரபு ஸ்ரீராமர் உங்களை மீட்க வந்து கொண்டு இருக்கிறார்" என்று சொல்கிறார்.
யாராலும் தோற்கடிக்க முடியாத சூரர்களையே தன் சேனையில் வைத்து கொண்டு இருப்பவர் என்பதால் பெருமாளுக்கு "ஸூரஸேன:" என்று பெயர் உண்டு.
ராம அவதாரத்தில் தான் அப்படி ஒரு சூரசேனையை வைத்து இருந்தார் என்று நாம் நினைத்து விட கூடாது.
கிருஷ்ண அவதாரத்திலும் இவருடைய யாதவ சேனை அழிக்கவே முடியாத சேனையாக இருந்தது.
பாரத போர் முடிந்த பிறகு உலகத்தில் இருந்த அனைத்து க்ஷத்ரிய வீரர்களும் அழிந்து போன நிலையில், யாதவ சேனை மட்டும் அப்படியே இருந்தனர்.
கிருஷ்ணரோடு இருந்த சாத்யகியும் போரில் மடியவில்லை..
கௌரவர்களுக்காக போர் செய்த ஸ்ரீ கிருஷ்ணரின் யாதவ சேனையும் அழியவில்லை. கௌரவர்கள் பக்கம் நின்று போர் செய்த க்ருதவர்மனும் போரில் மடியவில்லை.
இப்படிப்பட்ட அழிக்கவே முடியாத, அடக்க முடியாத யாதவ வீரர்கள், கிருஷ்ணருக்கு கட்டுப்பட்டு இருந்தார்கள் என்றால், கிருஷ்ணனின் பலம் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்? என்று நாம் அனுமானிக்கலாம்.
அவதார காரியம் முடிந்து விட்டதால், தான் வைகுண்டம் செல்ல முடிவு செய்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.
யாராலும் அழிக்க முடியாத யாதவ வ்ருஷ்ணீ சேனையை பூலோகத்தில் விட்டு விட்டு சென்றால், உலகம் தாங்காது என்பதால், தனக்கு முன்னால் இவர்கள் அனைவரையும் முதலில் அனுப்ப முடிவு செய்தார்.
இவர்களே தங்களுக்குள் அடித்து கொண்டு அழிந்து போகும் படியாக சங்கல்பித்து, போர் முடிந்த சமயத்திலேயே காந்தாரியை சாபமிடும் படி செய்வித்து, தன் கையாலேயே மிச்சமிருந்த யாதவ சேனையையும் காலம் வந்தபோது அழித்தார்.
மஹாபாரத நிகழ்வை அறிய.. இங்கே படிக்கவும்..
மற்றவர்கள் தோற்கடிக்க முடியாத சேனையை தனக்கு கீழ் வைத்து கொண்டு ஆட்சி செய்பவர் என்பதாலேயே, இவருக்கு, ஸூரஸேனன் என்று பெயர்.
(ஸூரஸேன:)
सद्गतिः सत्कृतिः सत्ता सद्भूतिः सत्परायणः ।
शूरसेनो यदुश्रेष्ठः सन्निवासः सुयामुनः ॥
ஸத்கதி: ஸத்க்ருதி: ஸத்தா
ஸத்பூதி: ஸத்-பராயண: |
ஸூரஸேனோ யது-ஸ்ரேஷ்ட:
ஸந்நிவாஸ: ஸுயாமுன: ||