யயாதி வம்சத்தில் பிறந்த அரசன் "துஷ்யந்தன்" கண்வ ரிஷியின் ஆஸ்ரமத்தில் சகுந்தலை இருப்பதை கண்டார்.
சகுந்தலை விச்வாமித்ரருக்கு தேவலோக மேனகையால் பிறந்தவள். அவளை கண்வ ரிஷி, தந்தை போல வளர்த்து வந்தார்.
கண்வ ரிஷி மலர்கள் எடுக்க சென்று இருந்த போது, துஷ்யந்தன் அந்த காட்டின் பக்கம் வேட்டைக்காக வந்த போது, அந்த ஆஸ்ரமத்தை கண்டார்.
துஷ்யந்தன், சகுந்தலையை பார்த்து, "காந்தர்வ முறைப்படி மணம் செய்து கொள்ள இஷ்டமா?" என்று கேட்டார்.
"எனக்கு இப்போது தந்தையே முக்கியமான தெய்வம். அவர் என்னை யாருக்கு கொடுப்பாரோ, அவரே எனக்கு கணவர் ஆவார்" என்றாள்.
மேலும் சொன்னாள்,
पिता रक्षति कौमारे भर्ता रक्षति यौवने।
पुत्रस्तु स्थाविरे भावे न स्त्री स्वातन्त्र्यमर्हति ।।
- வ்யாஸ மஹாபாரதம்
"இளமை காலத்தில் தந்தை ஒரு பெண்ணை காப்பாற்றுகிறார். பருவ காலத்தில் கணவன் ஒரு பெண்ணை காப்பாற்றுகிறார். முதிர்ந்த காலத்தில் அவள் பிள்ளை அவளை காப்பாற்றுகிறான். எந்த நிலையிலும் பெண் சுதந்திரமாக செயல் படுவது கூடாது" என்றாள்.
"இளமை பருவத்தில் இருக்கும் என்னை இப்போது என் தந்தை காக்கும் பொழுது, அவரை மதிக்காமல், நானாக எப்படி ஒருவரை அடைய நினைக்கலாம்?" என்று கேட்டாள்.
இவ்வாறு சகுந்தலை துஷ்யந்தனுக்கு பெண் சுதந்திரமானவளாக செயல் பட கூடாது என்று தர்மத்தை சொன்னாள்.