Followers

Search Here...

Showing posts with label ஓரிக்கை. Show all posts
Showing posts with label ஓரிக்கை. Show all posts

Thursday, 16 September 2021

வயோதிகம் (முதுமை) சாபமா?

வயோதிகம் நமக்கு கொடுக்கப்பட்ட சாபமா?

பகவான் நம்மை 'குழந்தையாக' பிறக்க செய்கிறான்.

விளையாடி மகிழ்கிறோம். 

"பகவான் கருணை உள்ளவன்" என்று சொல்கிறோம்.

பகவான் நமக்கு பிறகு நல்ல 'இளமையான உடல், அழகு' கொடுக்கிறார்.

அங்கும் இங்கும் ஓடி பொருள் சேர்க்கிறோம். 

கல்யாணம் செய்து கொண்டு, காமத்தில் ஈடுபட்டு குழந்தை பெற்று, குடும்பமாக மகிழ்கிறோம்.

"பகவான் கருணை உள்ளவன்" என்று சொல்கிறோம்.





பிறகு, பகவான் நமக்கு உடலை இளைக்க செய்து, உடலால் எதையும் செய்ய முடியாதவனாக ஆக்கி 'வயோதிகம்' கொடுக்கிறார்.

ஓடி ஆட முடியாமல், காமத்திற்கு உடல் ஒத்துழைக்காமல், உடல் சோர்ந்து விட, குடும்பத்தில் உள்ளவர்களும் நம் தேவையை அதிகம் பொருட்படுத்தாமல் இருக்க, 'இந்த நிலை வந்ததே!' என்று புலம்பி, "பகவான் கருணை இல்லாதவன்" என்று சொல்லி விடுறோம்.

"வார்தக்யே முனி வர்தீனாம்" என்று மஹாகவி காளிதாசன் 'பகவானை தியானம் செய்யத்தான், வ்யோதிகமே வருகிறது" என்று சொல்கிறார்.

பகவான் என்ன நினைத்து நமக்கு இந்த வயோதிகம் கொடுக்கிறார்?

"போதும் நீ மற்றவருக்காக, உலகத்துக்காக உழைத்தது.  போதும் உனக்கு இந்த உலக ஆசைகள். 

இனியாவது என்னோடு வந்து விட கடு முயற்சி செய்.

என் கோவிலே கதியாக இரு. என்னை பற்றி பஜனையோ, சத்சங்கமோ நடந்தால், அங்கு சென்று கேள்.

இளமை காலத்தில் கோவிலுக்கு சென்றால், சத்சங்கத்தில் ஈடுபட்டால் "வீட்டில் வேலை இல்லையா? குடும்பம் இல்லையா?" என்று கேள்வி கேட்டு கொண்டே இருப்பார்கள்.

இதோ தானாக கிடைத்தது வயோதிகம்.  

இனி நீ கோவிலுக்கு போனாலும், "ஏன் கோவிலுக்கு போனாய்?" என்று யாரும் கேட்க மாட்டார்கள். "எப்படியோ நிம்மதியாக இருந்தால் சரி. நம்மை தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி" என்று தான் நினைப்பார்கள். 

பாகவதம், பகவத் கீதை, ராமாயணம், 4000 பாசுரங்கள், சிவபக்தனாக இருந்தால் பதிகங்கள், கந்த புராணம், முக்தி தரும் வராஹ அவதாரம் படித்து கொண்டே இருக்கலாமே! நடக்க முடிந்தால், கோவில் வாசலில் சென்று அமர்ந்து, பகவத்தியானம் செய்யலாமே! 




அருமையாக வயோதிகம் தானாக கிடைத்தும், மீண்டும் உலக விஷயத்தில் செலவு செய்வானா ஒருவன்?

இளமை காலம் வரை தெய்வத்துக்கு நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலையில், தானாக வரும் வயோதிகம் வரமல்லவா?"

வயோதிகம் "பகவத் பக்தி செய்ய தானாக கிடைத்த வரம்

என்று உணர வேண்டும். 


திருமழிசை ஆழ்வாரின் அணுகிரஹத்தால், அரசனின் பட்டத்துமஹிஷிக்கு இளமை திரும்பிவிட்டது. 

காஞ்சியை ஆண்டு வந்த அரசன், சிஷ்யரான கணிகண்ணனை அழைத்து, 'தனக்கும் இளமை கிடைக்க வேண்டும்" என்று கேட்க, இப்படி ஒரு ஞான உபதேசம் செய்தார்.

"இளமை தர முடியாது என்றால் காஞ்சியில் இருக்க கூடாது" என்று அரசன் சொல்ல, 

கணிகண்ணன் தன் குருவிடம் சொல்லிவிட்டு கிளம்ப, 'தானும் வருகிறேன்' என்று திருமழிசை ஆழ்வாரும் கிளம்ப, வேகாசேது என்ற பெருமாள் திருவெஃகாவில்  பள்ளி கொண்டு இருக்க, பாம்பு பையை சுருட்டி கொண்டு என்னோடு வாருங்கள் என்று ஆழ்வார் அழைக்க, பெருமாள் கல் ரூபத்தோடு எழுந்து ஆழ்வாரோடு நடக்க ஆரம்பித்தார்.

காஞ்சியை விட்டு, சுமார் 4 km தள்ளி இருக்கும் ஓரிருக்கை என்ற இடம் வர, சாயங்காலம் ஆனதால், அந்த இரவை அங்கு கழிக்க ஆழ்வார் நினைக்க, பெருமாள் அங்கேயே படுத்து விட்டார். 

ஒரு நாள் அங்கு பெருமாள் தங்கியதால், இந்த ஊருக்கு "ஓரிருக்கை" என்ற பெயர் ஏற்பட்டது.

பெருமாளே சென்று விட்டதால், காஞ்சியை விட்டு சகல தேவதைகளும் கிளம்பி விட, திடீரென்று காஞ்சியே சூன்யமாக காட்சி அளித்தது.

அரசன் 'ஆழ்வாருக்கு செய்த அபசாரம் தான் காரணம்' என்று உணர்ந்து, அந்த இரவே ஓடி சென்று ஆழ்வாரை மீண்டும் காஞ்சி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார் அரசன்.




துவேஷம் இல்லாத ஆழ்வார், "கிளம்பு என்று சொன்னதால் கிளம்பினோம். வர சொன்னால் வருகிறோம்" என்று கிளம்ப, கனிகண்ணனோடு பெருமாளும் பின் தொடர்ந்து வந்து மீண்டும் காஞ்சிக்கு வந்து படுத்துக்கொண்டார்.

குரு சொன்னால், சிஷ்யன் கேட்க வேண்டும்.

பகவான் சொன்னால், நாம் அனைவரும் கேட்க வேண்டும்.

அது மட்டுமல்ல, 

"உத்தம பக்தன் எது சொன்னாலும், மறுக்காமல் பகவானும் கேட்பார்" என்று காட்ட, பெருமாள் இப்படி ஒரு லீலை செய்தார். 

வேகாசேது என்ற பெருமாள், அன்றிலிருந்து யதோக்தகாரி என்றும், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்றும் பெயர் பெற்றார்.