Followers

Search Here...

Showing posts with label ஏற்பாடு. Show all posts
Showing posts with label ஏற்பாடு. Show all posts

Friday, 26 July 2019

அத்தி வரதரை மீண்டும் குளத்தில் வைக்காமல் - நிரந்தரமாக ஒரு மண்டபம் ஏற்பாடு செய்து பூஜை செய்ய ஆரம்பிக்கலாம்...

ப்ரம்மா யாகத்தை "விஷ்ணுவுக்கு ஒரு ஆராதனையாக" செய்ததால், அதன் பலனாக, அக்னி குண்டத்தில் இருந்து, அதி ஆச்சர்யமாக "வரதராஜ பெருமாள்" தாருமூர்த்தியாக ஆவிர்பவித்தார்.
ஸ்ரீ காஞ்சிபுர மஹாத்மியத்தில், 'காஞ்சிபுரம் வரதர் கோவில் மூலவர் தாருமூர்த்தி' (மரத்தால் ஆன மூர்த்தி) என்று தெளிவாக கூறியுள்ளது.


ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அவர்களும், "ஆதி அத்திகிரி வரதர் மூலவர், காப்பிடு திருமேனி" என்று தனது கிரந்தத்தில் கூறியுள்ளார்.

"காப்பிடு திருமேனி" என்றால், "தைலம் சாற்றப்பட்ட மர திருமேனி" என்று அர்த்தம்.
கஜேந்திரன் என்ற யானை (ஹஸ்தி) தன் உடலை விட்டு வைகுண்டம் செல்லும் போது, தன் உடம்பை விட்டு விட்டு சென்றார்.
அதுவே காலத்தில் சிறு மலையாக ஆனது.
பிரம்மாவுக்காக யாகத்தில் இருந்து சுயமாக ஆவிர்பவித் வரதராஜ பெருமாள், இந்த ஹஸ்தி கிரியில் தன்னை பிரதிஷ்டை செய்யுமாறு ப்ரம்மாவிடம் சொன்னார்.

எம்பெருமான் வரதராஜ பெருமாள் காஞ்சியிலேயே தங்கி விட்டார்.
வரதராஜ பெருமாளுக்கு அன்று முதல் உத்ஸவத்தை ப்ரம்மாவே தொடங்கி வைத்தார்.
18 லட்ச வருடங்கள் (சத்ய யுகத்தில்) முன் நடந்த சரித்திரம்

தமிழ்நாடு 1311ADல் ஆரம்பித்து 1486AD வரை இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் சிக்கியது.

1311ADல் கில்ஜி படையை தலைமை தாங்கிய "மாலிக் காபூர்" மதுரையை தாக்கினான். 
"மீனாட்சி கோவிலை தாக்க போகிறான்" என்றவுடன் மூலவராக உள்ள சுந்தரேஸ்வரரை சுவர் எழுப்பி மறைத்து, வேறு ஒரு சிவ லிங்கத்தை வைத்தனர்.

ஒரு லட்சம் போர் வீரர்களுடன் மீனாட்சி கோவிலில் செருப்பு காலுடன் நுழைந்து, நேராக மூலவர் இருக்கும் இடம் சென்று அங்கு இருந்த சிவ லிங்கத்தை ஈட்டிகளால் குத்தி அடியோடு சாய்த்து விட்டனர். 

மதுரை மக்கள் நிலையை நினைத்து பார்க்க முடியாத காலம் அது. பாண்டிய அரசாட்சி முடிவுக்கு வந்த காலம். 
இன்றும் அவன் "குத்தி சாய்த்த அந்த சிவ லிங்கம்" கோவிலில் வைக்கப்பட்டு கதை சொல்கிறது.
அதை தொடர்ந்து ஸ்ரீரங்கம் சென்று, அங்கு இருந்த 10000 வைஷ்னவர்களை தலை சீவி, ஸ்ரீ ரங்கம் ரத்த காடானது. 



1378AD வரை பாண்டிய தேசம் முழுவதும் "கில்ஜி" (Khilji) ஆக்கிரமிப்பில் சிக்கியது. 

அதை தொடர்ந்து, 

"முகமது பின் துக்ளக்" ஆட்சி வரை இஸ்லாமிய ஆக்ரமிப்பு தமிழகத்தில் தொடர்ந்தது.
விஜயநகர பேரரசு வீறு கொண்டு எழுந்த சமயம் அது. 

"கம்பண்ணா" என்ற விஜயநகர இளவரசன் கர்நாடக தேசத்தில் இருந்து புறப்பட்டு, இஸ்லாமிய ஆட்சியை 1378ADல் முடிவுக்கு கொண்டு வந்தார்.

மீண்டும் மதுரை மீனாட்சி கோவிலிலும், ஸ்ரீ ரங்க கோவிலிலும் தீபம் எரிந்தது. 
சுவற்றுக்கு பின் இருந்த "சிவ பெருமான்" மீண்டும் வெளி வந்தார். 

70 ஆண்டுகள் ஸ்ரீ ரங்கநாதர் மதுரை, கேரளா, மேல்கோட்டை, திருப்பதி போன்ற ஊர்களில் இருந்து விட்டு, மீண்டும் ஸ்ரீ ரங்கம் வந்து சேர்ந்தார். 

இஸ்லாமிய படையெடுப்பின் காலத்தில், உற்சவர் ஸ்ரீ ரங்கநாதர் இல்லாத சமயத்தில், மாற்றாக வேறு ஒரு மூர்த்தியை ஆராதனை செய்து வந்தனர். 
இதற்கு உதாரணமாக, 


இன்றும், ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சன்னதியில், ஆதி ரங்கநாயகி தாயாரும், தாயார் இல்லாது இருந்த அந்த சமயத்தில் மாற்று தாயாராக ஆராதனத்தில் இருந்த தாயார் என்று "இரண்டு தாயார்கள்" இன்றும் ஸ்ரீ ரங்கத்தில் ஆராதனத்தில் உள்ளனர்.

ஸ்ரீ ரங்கம், நம்பெருமாள் தான் ஆதியில் இருந்தவர். 

அவர் இல்லாத சமயத்தில் மாற்றாக வழிபட்ட பெருமாளும் இன்றும் இருக்கிறார். 
"ஆதி பெருமாள்" வந்துவிட்டார் என்றவுடன், இரண்டு மூர்த்திகளுக்கும் ஆராதனைகள் செய்யப்பட்டன. 
புதிதாக பெருமாள் உள்ளாரே என்று, பழைய ஆதி பெருமாளை பூட்டி வைக்கவில்லை. 
பழைய மூலவர் மீண்டும் கிடைத்தால், அந்த மூர்த்தியையும் தரிசனத்திற்கு வைக்கும் பழக்கம் உள்ளது. 

இன்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சன்னதியில், "இரு தாயாரும்" தரிசனம் தருகிறார்கள்.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் பாண்டிய தேசம் சிக்கியது போல, 

1404ADல் காஞ்சி நகரம் துக்ளக் ஆட்சிக்கு பின் டெல்லியை தலைமையாக ஆட்சி செய்த "சையத்" ஆட்சியாலும், ஆந்திர தேசத்தை ஆக்ரமித்து இருந்த "பாமினி" சுல்தான்களாலும் பெரும் ஆபத்தில் சிக்கியது

1291AD முதல் 1403AD வரை காஞ்சி வரதர் கோவிலில், கல்வெட்டுகள் கிடைக்கிறது. 


1404AD முதல் 1486AD வரை காஞ்சிபுரம் வரதர் கோவிலில் கல்வெட்டு குறிப்புகள் இல்லை. 
இந்த 84 வருட காலங்கள் இக்கோவிலின் இருண்ட காலம் என்று கருதப்படுகிறது.

அதற்கு பிறகு,

மீண்டும் 1486ADல் ஆரம்பித்து கல்வெட்டுகள் கிடைக்கிறது.

1404AD சமயத்தில், இஸ்லாமிய படையெடுப்பால், நமது கோவிலில் மூலவராக, ஆராதனத்தில் இருந்த "ஆதி அத்திகிரி வரதர்", பாதுகாப்புக்காக திருக்கோவில் வளாகத்தில் உள்ள திரு அனந்த புஷ்கரணி குளத்தில் மறைக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தார்.  
வரதனுக்காக, எத்தனை லட்ச பாரத ஜனங்கள் அன்று உயிர் தியாகம் செய்தார்களோ...!! 



1487AD சமயத்தில், படையெடுப்பு காலம் முடியும் சமயத்தில், உடையார் பாளையம் ஜமீன் குடும்பத்தினர் முன் வந்து,
"அத்தி மரத்தால் ஆன மூலவர் 83 வருடங்களாக நீரில் மூழ்கி இருப்பதால், வலுவாக இருக்க மாட்டார்" என்ற ஐயத்தின் காரணமாகவோ,  இல்லை "மீண்டும் படையெடுப்பு வந்தால் என்ன செய்வது?" என்ற பயத்தாலோ, 
மூலவரை குளத்தில் இருந்து வெளியே எடுக்காமல், 
காஞ்சிபுரம் அருகில் உள்ள பழைய சீவரம் கோவிலில் மூலவராக இருந்த பெருமாளை, காஞ்சி கோவிலில் மூலவராக பிரதிஷ்டை 1487ல் செய்யப்பட்டார்.
உண்மையில் நமது ஆதி அத்திகிரி வரதர் (மூலவர்)  பல்லாண்டுகள் (83 வருடங்கள் 1404AD-1487AD) நீருக்குள் இருந்தாலும் அவர் திருமேனியில் எந்த வித சேதமும் ஏற்படவில்லை.

அப்படியே "மூல மூர்த்திக்கு பின்னம் ஏற்பட்டு இருந்தாலும், அதை சீர் செய்து ஆராதனை செய்ய வேண்டும்" என்று பஞ்சாத்ர ஆகம விதி சொல்கிறது.
ஆகம விதி தெரிந்தும், ஆதி அத்திகிரி வரதரை (மூலவரை) நிரந்தரமாக வெளியில் வைத்து ஆராதனை செய்ய 1487ADல் பயந்தார்கள் என்பது ஏற்புடையது.




இதற்கு ஏற்பாடாக 40 வருடத்திற்கு ஒரு முறை 48 நாட்கள் மட்டும் ஆதி வரதரை குளத்தில் இருந்து எடுத்து வெறும் தரிசனமாவது செய்வோம் என்று முடிவெடுத்து இருப்பார்கள் என்பதே உண்மை.

1947AD வரை இந்திய தேசம் இஸ்லாமிய ஆட்சியாலும், கடைசி 200 வருடங்கள் கிறிஸ்தவ ஆட்சியாலும் ஆக்ரமிப்பு செய்யப்பட்டு இருந்ததை மறுக்க முடியாது. 

மீண்டும் ஒருவாறு காஞ்சி வரதராஜன் கோவிலில், உத்சவங்கள் நடக்க, உபகாரம் செய்த உடையார் பாளையம் ஜமீன் குடும்பத்துக்கு "மண்டகப்படி" உத்சவம் பிரத்யேகமாக, ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரட்டாதி நக்ஷத்திரம் அன்று நடைபெற்று வருகிறது. 



இதற்கான கல்வெட்டு, 
திரு பெருந்தேவி தாயார் சன்னதியில் வடக்கு பகுதியில் உள்ள முற்றத்தில் இருக்கும் குத்துக்கல்லில் தெலுங்கு மொழியில் இருக்கும் கல்வெட்டு கூறுகின்றது.

"சையத்" ஆட்சிக்கு பின், "லோதி" ஆட்சி தொடர்ந்தது. 
லோதிக்கு பின், "முகலாய" ஆட்சி தொடர்ந்தது. 
முகலாய ஆட்சியில் "பாபர், ஹுமாயுன், அக்பர், ஜஹாங்கிர், ஷாஜஹான்,  ஒளரங்கசீப்" போன்றவர்கள் வரை, இந்திய நாடு கடும் சேதத்தை சந்தித்தது. 

முகலாயர்களின் வீழ்ச்சியும், கிறிஸ்தவர்களின் எழுச்சியும் ஆரம்பித்த சமயத்தில், 

அதாவது 1780ADல் (சாலிவாஹன சகாப்தம் 1703) வருடம், 1404ல் இருந்து, சுமார் 376 வருடங்கள் திருக்குளத்தில் வைக்கப்பட்டு இருந்த "ஆதி அத்தி வரதரை" ஒரு முறையாவது தரிசனம் செய்வோம் என்று தீர்மானித்தது, 1780ADல் திருக்குளத்தில் இருந்து வெளியில் எடுத்து, 

வரதனை காண்போமா !! என்று தவித்து கொண்டிருந்த  வைணவ பக்தர்களுக்கு "ஆதி அத்திகிரி மூலவர் தரிசன" வைபவம் தொடங்கப்பட்டது.

அப்பொழுதும் முகலாயர்களின் ஆட்சி, கிறிஸ்தவர்களின் அரசியல் சூழ்ச்சி நடந்து கொண்டிருந்ததால், 

48 நாட்கள் மட்டும் ரகசியமாக வெளியில் எடுத்து, "ராமானுஜர் பார்த்த, ப்ரம்ம தேவனுக்கு காட்சி கொடுத்த வரதனை" தரிசித்து, மனத்துயருடன் மீண்டும் திருக்குளத்தில் வைத்து விட்டனர்.

'1780ADல் (சாலிவாஹன சகாப்தம் 1703) வருடம், "ஆதி அத்திகிரி மூலவர் தரிசன" வைபவம் தொடங்கப்பட்டது' என்ற கல்வெட்டு, 
பேரருளாளன் துவஸ்தம்பத்தின் கீழ் பக்கம் 'தெலுங்கு எழுத்தில்' உள்ள கல்வெட்டு மூலம் நமக்கு தெரிகிறது.      
1947ADல் இந்திய சுதந்திரம் பெற்று விட்டது. 



இருந்தாலும், 
1780AD முதல், 40 வருடத்திற்கு ஒரு முறை 48 நாட்கள் மட்டும் ரகசியமாக வைணவர்கள் தரிசனம் செய்து வந்த "ஆதி அத்தி வரதரை", சம்ப்ரதாயம் என்று நினைத்து பயம் நீங்கிய சுதந்திர இந்தியாவில், 
1979ADல் திருகுளத்தில் இருந்து வெளியே எடுத்தும், 48 நாட்கள் தாங்கள் தரிசித்து விட்டு, மீண்டும் குளத்தில் வைத்து விட்டனர்.

2019ADல் ஜூலை மாதம், " ஆதி அத்தி வரதர் மீண்டும் திருகுளத்தை விட்டு வெளியே வருகிறார்" என்ற செய்தி உலகம் எங்கும் பரவியது..  

அனந்த சரஸ்வதி என்ற புஷ்கரணியில் பாதுகாத்து வைத்து இருந்த, ஆதி அத்தி வரதரை தற்போது ஜூலை 1  2019ல் வெளியில் கொண்டு வந்து போது, ஆச்சர்யங்கள் நிகழ்ந்தது.
ஒவ்வொரு நாளும் 2 லட்சம் பக்தர்கள் வந்து, "மூலவர் தரிசன" வைபவத்தில் தன் சிரமங்களை கூட பார்க்காமல், அத்தி வரதரை ஒரு முறையாவது கண்ணால் பார்த்து விட வேண்டும் என்று தரிசித்தனர்.

ஒவ்வொரு 40 வருடம் கழித்தும், வெறும் 48 நாட்களே ஆதி வரதர் தரிசனம் தருவார் என்ற ஏற்பாடு, முதன் முதலாக 1780AD (சாலிவாஹன சகாப்தம் 1703) வருடம் ஆரம்பித்தது.

பேரருளாளன் துவஜஸ்தம்பத்தின் கீழ் பக்கம் தெலுங்கு எழுத்தில்  இருக்கும் கல்வெட்டு மூலம் இந்த உண்மை நமக்கு தெரிகிறது.

"அன்று வரதனுக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் தான், மீண்டும் பிறவி எடுத்து வந்தார்களோ!!" என்று தோறும் அளவுக்கு 2019ல் சிரமங்களை பார்க்காமல், லட்சக்கணக்கான பக்த ஜனங்கள் காஞ்சியை சூழ்ந்தனர்.. 
"வரதா.... இனி உன்னை காண்பேனா!! என்று எத்தனை இதயங்கள் அன்று கதறியதோ !! 


"2019 ஜூலை மாதம் அத்தி வரதர் காட்சி கொடுக்க வருகிறார்" என்றதும், "48 நாட்கள் தான் தரிசிக்க முடியும்" என்றவுடன், 

தினமும் 2 லட்சம் பக்தர்கள் "வரதா... கோவிந்தா.. கோவிந்தா.." என்று தரிசனம் செய்ததை பார்த்தால் புரிந்து கொள்ளலாம். 

தன் உடல் கஷ்டங்களை பொருட்படுத்தாமல், ஆதி வரதனை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று வந்தார்களே..  

இவர்கள் தாகத்தை தீர்க்கும் படியாக, ஜூன் 2019 மாதம் வரை தாங்க முடியாத வெயிலை பார்த்த தமிழகம் மழையில் நனைந்தது. 

வரதனின் கருணையை நேரில் கண்டது. 
நாத்தீகம் ஒழிந்தது. 
லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வரதனை கண்டு தாகம் தீர்ந்து போனது.
"ஆழ்வார்கள், பெரிய நம்பிகள், ஆளவந்தார், திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீ ராமானுஜர், ஸ்வாமி தேசிகர், மணவாள மாமுனிகள்" முதலான ஆச்சார்யர்கள், மங்களாசாசனம் செய்த பெருமாளே "ஆதி அத்திகிரி வரதர்".

நம் கூரத்தாழ்வாருக்கு "கண் கொடுத்த பெருமாளை" நாம், சுதந்திர இந்தியாவில் எப்பொழுதும் நம் கண்களால் தரிசனம் செய்து கொண்டே இருப்பது தானே, நாம் கண் பெற்ற பயன்....

"அத்திவரதர்" நம்மோடு கூடவே எப்போதும் இருக்க வேண்டும். 

"ஆதி அத்தி வரதர்" நிரந்தரமாக வந்து விட்டார் என்றால், உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருடம் முழுவதும் வருகை புரிவார்கள்.

அதனால், நம் காஞ்சிபுரம் மற்றும் வரதர் கோவில் மேலும் மேலும் புகழ் பெறும்.

'மழையே இல்லாமல், வெயிலில் தவித்த நமக்கு' கருணை கடலான அத்தி வரதர் "மழை மேகங்களை திரட்டி தமிழகத்தை குளிர்வித்து விட்டார்".

நமது நாடும், நமது திருக்கோவிலும், பல பெருமைகள், பல பெருமைகள் அடைய,

ஆதி அத்திகிரி வரதர் - மூலவர் தரிசன வைபவம் நிரந்தரமாக எப்பொழுதும் நடக்க வேண்டும்.

இதுவே தினமும் ஓடோடி வரதனை பார்க்க வந்த, கோடிக்கணக்கான பாரத மக்களின் ஆசை.

காஞ்சியில் 2 மூல மூர்த்திகளாக நமக்கு பெருமாள் கிடைத்தார்கள் என்று நினைக்க வேண்டும்..

அத்தி வரதரை மீண்டும் குளத்தில் வைக்காமல், அடுத்த 40 வருடங்கள் பூஜைகள் இல்லாமல் செய்வதற்கு பதில், இவருக்கும் ஒரு மண்டபம் ஏற்பாடு செய்து பூஜைகள் செய்ய ஆரம்பிக்கலாம்.

ப்ரம்மா முதல் ராமானுஜர் வரை தரிசித்த அத்தி வரதருக்கு, தினமும் பூஜை நடக்க செய்யலாம்.

கலவர காலத்தில் ஏற்பட்ட இந்த ஏற்பாடு தொடர வேண்டிய அவசியம் உண்டா?? என்பது ஆஸ்தீகர்களின் கேள்வியாக உள்ளது.

இந்த வழக்கப்படி ஜூலை 2019 அத்தி வரதர் புஸ்கரணி தீர்த்தத்தில் இருந்து வெளி வந்து ஒரு மண்டலம் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். 
இந்திய குடியரசு தலைவர் வரை தரிசனம் செய்ய ஆசை கொண்டு இருந்தனர்.


"ப்ரம்ம தேவன் தனக்கு கொடுத்த கடமையை செய்ய வேண்டும்" என்று காஞ்சி வரதன் சொல்லி விட்டதால், ப்ரம்மா ப்ரம்மலோகத்துக்கு கிளம்பி ஆக வேண்டும்.

பெருமாளுக்கு உத்ஸவம், வைதீக முறைப்படியான நித்ய பூஜைகளை வகுத்து கொடுத்து, வரதராஜன் வீற்றிருக்கும் அந்த மலையை சுற்றி அக்ரஹாரங்கள் அமைத்து,
பூரணமாக வேதம் கற்ற வேதியர்களையும் அங்கு வசிக்கும் படியாக செய்து, வைதீக பூஜைகள், உத்சவங்கள் ச்ரத்தையோடு தினமும் செய்யுமாறு தானே சொல்லி, அனைத்து ஏற்பாடும் செய்தார் ப்ரம்மா.

காஞ்சி வரதனுக்கும் சேவை செய்யும் ஆசை உள்ள அனைத்து மக்களையும் காஞ்சிபுரத்தில் குடி ஏற்றினார்.