மஹா பாரத சமயத்தில் உத்திர பிரதேசம், ஹரியானா: Uttar Pradesh, Haryana
வ்ரஜ தேசம்,
குரு தேசம்,
காசி தேசம்,
வத்ஸ தேசம்,
கோசல தேசம்
ஆகிய தேசங்கள் இன்றைய உத்திர பிரதேசம்.
குருஜாங்கல தேசம் இன்றைய ஹரியானா (Haryana).
ராமாயண காலத்தில், 'சுமித்ரா' காசி தேச இளவரசி.
இவள் கோசல தேச அரசர் தசரதரை மணந்தாள்.
இவர்களுக்கு "லக்ஷ்மணன்" பிறந்தார். 'சத்ருக்னன்" பிறந்தார்
காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பிற் காலத்தில் வந்த முகலாய ஆட்சியில் ஔரங்கசிப் கோவிலை இடித்து, மசூதியை கட்டினான்.
த்ரேதா யுகத்தில், ராமாயண காலத்தில், கோசல தேசத்தின் தலைநகராக அயோத்தியா இருந்தது.
ஸ்ரீ ராமர் அயோத்தியாவில் அவதரித்தார்.
1526AD சமயத்தில், இந்த அயோத்தியில் இருந்த ஸ்ரீ ராமரின் கோவி்லை இடித்து, முகலாய ஆட்சியில் பாபர், மசூதியை கட்டினான்.
ஸ்ரீ ராமர், ஜனகர் மகள் "சீதை"யை மணந்தார்.
ஜனகர் மிதிலை (நேபால்) அரச மன்னர்.
அந்த சமயத்தில், லக்ஷ்மணன் கங்கை நதி ஓரம், ஒரு நகரை உருவாக்கினார். அதற்கு லக்ஷ்மணபுரம் என்று பெயர் இருந்தது.
பிற் காலத்தில் வந்த முகலாயர்கள்,
இந்த லக்ஷ்மணபுரம் என்ற நகரத்தை "லக்னோ" என்று மாற்றினர்.
இன்று இந்த நகரம் ஷியா இஸ்லாமியர்கள் நிரம்பிய முஸ்லீம் ஊராக இந்தியாவில் உள்ளது.
ஸ்ரீ ராமர், வனவாச சமயத்தில், வத்ஸ தேசத்தில்,
பிரயாகை (கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடம்) வந்து, இங்கு இருந்த பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்தார்.
பின்பு சித்ரகூடம் நோக்கி சென்றார்.
ஸ்ரீ ராமரை அழைத்து வர, பரதன் கோசல தேசத்தில் இருந்து வந்தார். குகனை பார்த்து விட்டு, பிரயாகையை கடந்து பரத்வாஜர் ஆஸ்ரமம் நோக்கி சென்றார்.
ஸ்ரீ ராமரின் நினைவிலேயே வந்த பரதனுக்கு,
யமுனையின் நீல நிறம் ஸ்ரீ ராமராகவும்,
கங்கையின் வெண்மை நிறம் சீதையாகவும் தெரிய,
இரண்டு புண்ய நதிகளும் சேரும் ப்ரயாகையை கண்டு மூர்ச்சையானார். பின் பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் தங்கி, சித்ரகூடம் சென்றார்.
வத்ஸ தேசத்தில், பிரயாகை என்ற ஊரை, பிற்காலத்தில் வந்த முஸ்லீம் ஆட்சியின் போது, அக்பர் இந்த பிரயாகை என்ற இடத்தை, இலகாபாத் என்று பெயர் மாற்றி முஸ்லீம் தேசமாக்க முயன்றார்.
பின் வந்த, பிரிட்டிஷ் ஆட்சியில், வழக்கம் போல, தவறாக உச்சரித்து, "அலகாபாத்" (Allahabad) என்று பெயர் மாற்றப்பட்டது.
அதே பெயரை 2018AD வரை சுதந்திர இந்தியாவும் வைத்துக்கொண்டது.
இந்த பிரயாகை என்ற அலகாபாத் நகரத்தில், 12 வருடத்திற்கு ஒரு முறை 'கும்ப மேளா' என்ற ஆச்சர்யமான விழா இன்று வரை நடக்கிறது.
மஹாபாரத சமயத்தில்,
காசி ராஜன் தன் 3 மகள்களுக்கு சுயம்வரத்தை காசியில் நடத்தினார்.
அப்போது, பீஷ்மர், சத்யவதி மகன் 'விசித்ரவீர்யன்' சார்பில் வந்து, அனைத்து அரசர்களையும் தோற்கடித்து "அம்பா, அம்பாலிகா, அம்பிகா" என்ற 3 மகள்களையும் தன் குரு தேசத்திற்கு கொண்டு சென்று, குரு அரசன் 'விசித்ரவீர்யனுக்கு' மனம் முடிக்க நினைத்தார்.
அம்பா என்ற பெண், தான் சால்வ தேச (ராஜஸ்தான்) அரசனை மணக்க ஆசை கொண்டிருந்ததாக சொல்ல,
பீஷ்மர் 'அம்பா'வை மட்டும் மீண்டும் அழைத்துக்கொண்டு சால்வ மன்னன் முன் விட்டு சென்றார்.
ஆனால்,
சால்வ மன்னன் (Rajasthan) 'அம்பா'வை பீஷ்மரிடம் தோற்றதாலும், அவரே வந்து விட்டது அவமானம் என்றும் காரணங்கள் சொல்லி விலகினான்.
அம்பா "இனி உயிர் வாழ்வது வீண்" என்று, "அடுத்த ஜென்மத்தில் பிறந்து பீஷ்மர் மரணத்திற்கு காரணம் ஆவேன்" என்று சபதம் செய்து, தீயில் விழுந்து உயிர் நீத்தாள். சிகண்டியாக பிறந்தாள்.
அம்பாலிகாவுக்கு "பாண்டு" பிறந்தார்.
பாண்டு "குந்தி" மற்றும் "மாத்ரி"யை மணந்தார்.
இவர்களுக்கு 5 பிள்ளைகள் பிறந்தனர். யுதிஷ்டிரர் மூத்தவர்.
அம்பிகாவுக்கு "திருத்ராஷ்டிரன்" பிறந்தார்.
விசித்ரவீர்யனுக்கு பிறகு, பாண்டு குரு தேசத்தை ஆட்சி செய்தார்.
பாண்டவர்களின் தந்தை "பாண்டு" குரு தேச அரசர்களின் பலத்தை, புகழை பரப்ப, திக் விஜயமாக, காசி தேசம், மகத தேசம், பௌண்ட்ரக தேசம், சுஹ்ம தேசம் போன்ற தேச அரசர்களை வென்றார்.
பாண்டுவுக்கு பிறகு, குரு தேச அரசனாக, திருத்ராஷ்டிரன் ஆட்சி செய்தார்.
கண் தெரியாத குருடனாக இருந்தாலும், பீஷ்மர், விதுரர் (chief minister) போன்றோர் துணையுடன் ஆட்சி புரிந்தான்.
பாண்டுவின் மைந்தன் யுதிஷ்டிரனுக்கு நியாயப்படி அரசாட்சி கொடுக்க வேண்டும் என்கிற நிலையில், தன் மகன் துரியோதனனுக்கு கொடுக்க ஆசை கொண்டு, மகாபாரத போருக்கு வித்திட்டான்.
வ்ரஜ தேசம், சூரசேனர் என்ற அரசர் ஆண்டு வந்தார்.
வ்ரஜ தேசம், உத்திர பிரதேசத்தில் உள்ள மதுராவில் இருந்து ஸ்ரீ வ்ருந்தாவனம் வரை உள்ள தேசம். "வ்ரஜ பூமி" என்று சொல்வார்கள்.
இங்குள்ள மக்கள் வ்ரஜ பாஷை பேசுவர்.
ஸ்ரீ கிருஷ்ணர் கோகுலத்தில் வ்ரஜ பாஷை பேசினார்.
பிராம்மண ரிஷிக்கும், ராக்ஷச தாயாருக்கும் பிறந்த ராவணன் தன் தங்கை "கும்பினி"யை 'மது' என்ற ராக்ஷஸனுக்கு மணம் செய்தான்.
கோசல தேசத்தில் அருகில் தான், இந்த மது என்ற ராக்ஷஸன் இருந்து வந்தான்.
மது என்ற இந்த ராக்ஷஸன் பிராம்மணர்கள் மீது மரியாதை வைத்து இருந்தான்.
தன் ஆட்சியில் தவம் செய்து கொண்டு இருக்கும் முனிவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தான்.
இவனுக்கு "லவணாசுரன்" என்ற மகன் பிறந்தான்.
இவன் ராக்ஷஸ குணம் நிரம்பியவனாக இருந்ததால், சாதுக்களை வெறுத்தான்.
நர மாமிசம் சாப்பிடும் பழக்கம் உள்ள லவணாசுரன், தவம் செய்யும் முனிவர்களை அப்படியே கொன்று பச்சை மாமிசமாக சாப்பிட்டு, எலும்பை துப்பி விடுவான்.
ச்யவனர் (Chyavana Rishi) என்ற ரிஷி ஸ்ரீ ராமரிடம் சென்று, ராக்ஷஸர்கள் செய்யும் தொந்தரவை பற்றி சொல்ல, ராமரின் தம்பி "சத்ருக்னன்" லவணாசுரனை கொன்றார்.
மது ஆண்ட ஊருக்கு சத்ருக்கனன் அரசன் ஆனார்.
இதுவே இன்றைய மதுரா.
ராமாயண காலத்தில், ராமரின் தம்பி 'சத்ருக்னன்" மது என்ற வனம் இருந்த இடத்தை செப்பனிட்டு, 'மதுரா' என்ற நகரை உருவாக்கினார்.
மஹாபாரத சமயத்தில், இங்கு இருந்த யாதவர்கள்,
"யாதவ, வ்ருஷ்ணி, போஜ" என்று 3 பிரிவாக பிரிந்து இருந்தனர்.
இந்த தேசத்தை வ்ருஷ்ணி குல உக்ரசேனர் ஆண்டு வந்தார்.
இவர் தன் மகள் "தேவகி"யை, யாதவ குல தலைவர் "சூரசேனர்" மகன் "வசுதேவருக்கு" மணம் செய்து கொடுத்தார்.
உக்ரசேனர் மகன் 'கம்சன்' அசரீரி வாக்கினால், தேவகியையும் வசுதேவரையும் மதுராவில் உள்ள ஜெயிலில் தள்ளினான்.
இவர்களுக்கு பிறந்த ஸ்ரீ கிருஷ்ணர் 11 வயதில் கம்சனை கொன்று, மீண்டும் உக்ரசேனரை மன்னனாக்கி, பிரிந்து இருந்த யாதவர்களை ஒன்று இணைத்தார்.
மதுராவில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மாளிகை, முகலாய ஆட்சியில் ஔரங்கசிப் இடித்து, மசூதியை கட்டினான்.
துரியோதனனும், சகுனியும் பாண்டவர்களை உயிரோடு கொளுத்த திட்டம் தீட்டினர்.
வாரனாவதம் என்ற ஊரில் இவர்களுக்காக ஒரு மாளிகை கட்டி, இரவில் பாண்டவர்கள் இருக்கும் போது, தீயிட்டு கொளுத்தினான்.
சுரங்கம் வழியாக பாண்டவர்கள், தன் தாய் குந்தியுடன் தப்பித்தனர்.
வாரனாவதம், Barnava என்ற பெயரில் இன்றைய உத்திரபிரதேசத்தில் உள்ளது.
திரௌபதியின் சுயம்வரத்தில், வத்ஸ தேச அரசர் கலந்து கொண்டார்.
திருத்ராஷ்டிரன்,
துரியோதனின் பகைமை உணர்வை குறைக்க, பாண்டவர்களையும் சமாதானம் செய்ய, தன் குரு தேசத்தில் உள்ள ஒரு மேற்கு பகுதியை பாண்டவர்களுக்கு ஆட்சி செய்ய கொடுத்தார்.
இந்த மேற்கு பகுதியில் இருந்த குரு தேசத்தின் பெயர் "குருஜாங்கள தேசம்". இந்த தேசத்தில் உள்ள காண்டவ வனம் இன்று ஹரியானா (Haryana) என்ற பெயருடன் உள்ளது.
இந்த குருஜாங்கள தேசம் வெறும் காடாக இருந்தது.
இதை வாழும் தேசமாக்கி, இந்த்ரப்ரஸ்தம் என்ற தலைநகரையும் உருவாக்கினார், யுதிஷ்டிரர்.
இந்த 'இந்த்ரப்ரஸ்தம்' பிற்காலத்தில் டெல்லி நகர் (Delhi) என்று பெயர் பெற்றது.
இன்று இந்தியாவின் தலைநகராகவும் உள்ளது.
இந்த குருஜாங்கள தேசத்தில் உள்ள ஓரு ஊரை, திருத்ராஷ்டிரன் த்ரோணருக்கு தானமாக கொடுத்தார்.
இந்த ஊர், குருகிராமம் (Gurgaon) என்ற பெயர் பெற்றது.
இந்த ஊரில் தான், பாண்டவர்களும், கௌரவர்களும் தங்கள் குரு "துரோணரிடம்" கல்வி கற்றனர்.
முஸ்லீம் ஆட்சிக்கு பிறகு, இந்த நகரம் குர்கான் "gurgaon" என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பிறகு மீண்டும் அதன் உண்மையான பெயருக்கு மாற்றப்பட்டது.
மறைக்கப்பட்ட ஹிந்து கலாச்சாரத்தை மீட்க, முதல் படியாக, 2016ஆம் ஆண்டு, ஹரியானா முதல்வர், சட்டம் திருத்தம் கொண்டு வந்து, "குருகிராம்"(Gurugram) என்ற சரித்திர பெயரை மீட்டார்.
மஹாபாரத காலத்தில், கோசல தேசத்தின் பகுதியை பலர் ஆண்டனர். "ப்ருஹத்பாலா" என்பவர் ஒரு கோசல பகுதியின் அரசனாக இருந்தார்.
இவர், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டார்.
ப்ருஹத்பால அரசன், துரியோதனின் பக்கம் நின்று போரிட்டார்.
மற்ற கோசல அரசர்கள் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.
மஹா பாரத போரில்,
13ஆம் நாள் யுத்தத்தில், துரோணர் வகுத்த சக்ரவ்யூஹத்தை உடைத்து, அபிமன்யு சென்றான்.
தனி ஒருவனாக அங்கிருந்த மஹா ரதர்களை எதிர்த்து போரிட்டான்.
எதிர்த்த கோசல அரசன் "ப்ருஹத்பாலனை" அர்ஜுனனின் மகன் அபிமன்யு கொன்றான்.
மஹா பாரத போரில், "வத்ஸ தேச அரசர்" பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டார்.
போர் முடிந்த பின், யுதிஷ்டிரரின் அஸ்வமேத யாகத்திற்கு, திக்விஜயமாக புறப்பட்ட அர்ஜுனன், கோசல தேசத்தை வீழ்த்தி யுதிஷ்டிரரின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.