புத்திரன் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன ? அறிவோம் மஹாபாரதம்
யயாதியின் மூத்த பிள்ளை "யது". இருந்தாலும், தன்னுடைய கடைசி புத்திரனான "புரு"வுக்கு பட்டாபிஷேகம் செய்ய தீர்மானித்தார்.
ஏன் யதுவை அரசனாக்கவில்லை? என்று கேட்க, இவ்வாறு யயாதி சொன்னார்.
प्रतिकूलः पितुर्यश्च न स पुत्रः सतां मतः।
मातापित्रोर्वचनकृद्धितः पथ्यश्च यः सुतः।
स पुत्रः पुत्रवद्यश्च वर्तते पितृमातृषु।।
पुद् इति नरकस्य आख्या दुःखं च नरकं विदुः।
पुतस्त्राणात्ततः पुत्त्रमिहेच्छन्ति परत्र च।।
- ஆதி பர்வம்
தந்தைக்கு விரோதமாக நடக்கும் பிள்ளையை, சான்றோர்கள் புத்திரனாக ஏற்பதில்லை.
தாயும் தந்தையும் சொல்வதை கேட்பவன், அவர்கள் சொன்னபடி நடப்பவன் எவனோ, அவனே புத்திரன் என்று சொல்லப்படுகிறான்.
புத்திரன் என்ற சொல்லில் உள்ள "புத்" என்ற சொல் "நரகத்தை" குறிக்கிறது. துக்கமயமானது நரகம். அந்த துக்கத்திலிருந்து இக லோகத்திலும், பர லோகத்திலும் பிள்ளை காப்பாற்றுவதால், இவனை "புத்திரன்" என்று சொல்கிறோம்.
இவ்வாறு யயாதி, வந்திருந்த பிராம்மண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்திரர்களிடம் சொல்லி, தன் கடைசி இளைய புத்திரனான புருவுக்கு பட்டாபிஷேகம் செய்ய அழைத்தார்.
கேசவா, கோவிந்தா நாராயணா மாதவா என்ற பெயருக்கு அர்த்தம் என்ன?
விஷ்ணு
ब्रह्मादि नामानि हरेर्हि देवीं विष्णो:
स्व-नामानि ददौ दिवौकसाम्
नादाद् दीर केशव आदीनि कन्ये
स्वकं पुरं प्रविहायैव राजा
एवं मयोक्तं कन्यके सर्वं एतदे
तत्परं सम्यगारोहणीयम्
- கருட புராணம்
பிரம்மாவின் பெயர் உட்பட, உலகத்தில் உள்ள அனைத்து பெயர்களும் விஷ்ணுவின் பெயர்களே!
விஷ்ணுவின் நாமங்களே! அவரே தான் இஷ்டப்பட்டு தன் பெயர்களை அனைத்து தேவர்களுக்கும் கொடுத்து இருக்கிறார். இருந்த போதிலும், எப்படி ஒரு அரசன் தன் நாட்டையே கொடுத்தாலும், "அரசன்" என்ற தன் அடையாள பெயரை விட்டு கொடுப்பதில்லையோ அது போல, கேசவன் போன்ற குறிப்பிட்ட பெயர்களை யாருக்கும் கொடுக்காமல் தனக்கே வைத்து இருக்கிறார்.
திருப்பதி
गोविन्द नारायण माधव इति
यूयं मया सर्वं आराधि तव्यम्
सर्वे मिलित्वा पुन: एवं खगेन्द्र
समारुहन वैङ्कटाद्रिं गृणन्त:
- கருட புராணம்
ஆதலால், கருடா! வேங்கட மலையில் (திருப்பதி) இருக்கும் ஶ்ரீனிவாசன் அவருகென்றே வைத்து இருக்கும் பெயர்களான "கோவிந்தா நாராயணா மாதவா" என்ற பெயர்களை (நாமங்களை) சொல்லி மீண்டும் மீண்டும் அழைப்பது உத்தமம்.
கேசவா
ब्रह्मणम् आहु: च पुराण माह
क शब्द वाच्यम सर्वलोकेशम् आहु:
ईशम चार्हं रूद्रम् इत्येव चाहु:
तत्प्रेरकं सृष्टि संहार कार्ये
- கருட புராணம்
புராதனமான நாராயணன், ஒரு சமயம் பிரம்மாவை படைத்தார். பிரம்மா உலகங்களை படைத்தார். கேசவன் என்ற இவருடைய பெயரில், "க" என்ற ஒலி "அனைத்து உலகங்களையும் படைத்தவர்" என்ற அர்த்தத்தை குறிக்கிறது.
அது போல, பிரம்மாவின் நெற்றியில் இருந்து சுயமாக வெளிப்பட்ட ருத்ரன், ஈசனாக (தலைவனாக) இருந்து சம்ஹார காரியங்கள் செய்கிறார்.
உண்மையில், படைத்தல் அழித்தல் என்ற இரண்டு காரியத்தையும் இவரே தான் பிரம்மாவாகவும், ருத்ரனாகவும் இருந்து கொண்டு செய்கிறார்.
இதனாலேயே இவருக்கு "கேசவன்" என்ற பெயரும் உண்டு.
நாராயணா
नारायणेति प्रवदन्तीह लोके
नारानुबन्धात् सर्वमुक्ताः खगेन्द्र ।
नाराः प्रोक्ता आश्रयत्वाच्च तेषाम्
अत: अपि नारायण एव वीन्द्र ।
मुक्ताश्च ये तु प्रपदंनु जग्मु:
अण्डोदकं यस्य कटाक्षमात्रात् ॥
- கருட புராணம்
உலகத்தில் மனிதனாக பிறந்த எவனும், நாராயணனை சரணாகதி செய்வதால் மட்டுமே,
சம்சார துக்கத்தில் இருந்து விடுபட்டு மோக்ஷம் அடைய முடியும்.
மனிதன் (நரன் - நார:) என்று உலகத்தில் பிறந்த எவரும் ஆஸ்ரயிக்க (அயன) தகுந்த ஒரே ஒருவர் விஷ்ணுவே.
அதனாலேயே விஷ்ணுவுக்கு "நாராயணன்" என்றும் பெயர். அந்த நாராயணனின் கடாக்ஷத்தை பெற்ற நரன் (மனிதன்) சம்சாரம் என்ற இந்த பெரிய அண்டத்தை விட்டு வெளியேறி மோக்ஷம் அடைகிறான்.
यद् उत्पन्नं तेन नाराः खगेन्द्र
तेषां सदापि आश्रयत्वाच्च वीन्द्र ।
नारायणेति प्रवदन्तीह लोके हि
अनन्त ब्रह्माण्ड विसर्जकत्वात् ॥
- கருட புராணம்
ககேந்திரா! நாரா என்ற சொல்லுக்கு தண்ணீர் என்றும் அர்த்தம் உண்டு. நதியில் உள்ள தண்ணீர் எப்படி அதன் உற்பத்தி ஆகும் இடத்தையே ஆஸ்ரயித்து/அண்டி (அயன) இருக்கிறதோ! அது போல, உலகத்தில் உள்ள அனைத்து ஜீவாத்மாக்களும் உற்பத்தியான இடமான நாராயணனையே ஆஸ்ரயித்து (அயன) இருக்கிறது.
கோவிந்தா
एवं न अनृतु: परिशंसयन्तो गोविंद
हि न च एव दर्शनम्
गो शब्द वाच्यास्तु समस्त वाचो
गोभि: च सर्वै प्रतिपाध्यते यत:
अतो हि गोविन्द इति स्मृत: सदा
भो वेद-वेद्येति तथा न अनृतु:
- கருட புராணம்
"கோ" என்ற ஒலி, ஆகாசத்தில் பரவி இருக்கும் வேத ஒலியை குறிக்கிறது. அந்த வேத சப்தத்தால் அறிய வேண்டியவர் என்பதால், இவருக்கு "கோவிந்தன்" என்ற பெயரும் உண்டு.
வாசுதேவா
यतस्त्वमेवं वसतीति वासुश्चात्रैव
नित्यं क्रीडते सर्वदैव ॥
- கருட புராணம்
நீங்களே எங்கும் வசிக்கிறீர்கள். நீங்களே இந்த அனைத்து உலகத்திலும், அனைத்து தேவதைகளிலும் அந்தர்யாமியாக இருந்து நீங்களே லீலைகள் செய்கிறீர்கள்.
यतो देवेत्येवमाहुर्महान्तस्त्वतो
हरिं वासुदेवेति चाहुः ।
भो वासुदेवेति ननृतुः सर्वदैव
भो माधवेति ननृतुश्चैव सर्वे ॥
- கருட புராணம்
அனைத்து தேவதைகளுக்கு உள்ளும் நீங்களே வசிப்பதால், உங்களுக்கு "வாசுதேவன்" என்றும் பெயர். நீங்கள் வசிக்காத இடம் என்று ஒன்றுமே இல்லை. உண்மையில் அனைத்து தேவதைகளுமே வாசுதேவனான நீங்கள் தான். மாதவா! உங்களை தவிர வேறு தனியான தெய்வங்கள் என்று ஏதும் இல்லை.
மாதவா
लक्ष्मीपते चेति वदन्ति सर्वे धनीति
शब्दः स्वाभिवाची यतो हि ।
अतोपि आर्या माधवेति ब्रुवन्ति
लक्ष्मीपते पाहि तथैव भक्तान् ॥
- கருட புராணம்
ப்ரபோ! விஷ்ணுவாகிய உங்களை "லக்ஷ்மீபதி" என்றும் அழைக்கிறார்கள். தனத்திற்கு (செல்வத்திற்கு) உரிமையாளனாக நீங்களே இருக்கிறீர்கள். மாதாவான லக்ஷ்மியை உடையவர் (தவ) என்பதால், பண்புள்ளவர்கள், உங்களை "மாதவன்" என்றும் அழைக்கிறார்கள். லக்ஷ்மீபதி!
"ஊர்வசி", "ராஜா", "க்ஷத்ரியன்" என்ற பெயர்களுக்கு அர்த்தம் என்ன?
பாரத யுத்தம் முடிந்த பிறகு, யுதிஷ்டிரர், 'இப்படி பூமியை ஆளவேண்டும் என்ற ஆசையில் பீஷ்மர் தாத்தா என்னால் ரத்த வெள்ளத்தில் பூமியில் விழுந்தாரே! துரோணர் கேட்டும் உண்மையை சொல்லாமல் இருந்தேனே! அபிமன்யுவை துரோணர் காக்கும் சக்ர வ்யுகத்தில் அனுப்பி கொன்றேனே! கர்ணன் என் சகோதரனை இழந்தேனே! நான் இனி எதையும் உண்ணாமல் பிராண தியாகம் செய்ய போகிறேன்' என்று சொல்லி துவண்டு கிடந்தார்.
அர்ஜுனன், பீமன், சகதேவன், நகுலன், திரௌபதி, வியாசர் என்று பலர் சமாதானம் செய்தனர்.
இருந்தும் சமாதானம் அடையாத நிலையில், அர்ஜுனன், ஸ்ரீ கிருஷ்ணரிடம் யுதிஷ்டிர மகாராஜனுக்கு சமாதானம் சொல்ல சொன்னான்.
ஸ்ரீ கிருஷ்ணர், இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய ப்ருது, பகீரதன் என்று பல அரசர்களை பற்றி சுருக்கமாக சொல்லி, 'அனைவரும் உத்தமர்களாக வாழ்ந்தார்கள். ஆனாலும் காலத்துக்கு கட்டுப்பட்டு அனைவரும் மறைந்து விட்டார்கள். அனைவருக்கும் மறைவு நிச்சயம். நீ சொன்ன அனைவரும் போரில் தைரியமாக மரணத்தை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். ஆதலால் மறைந்து போனவர்கள் பற்றி கவலை கொள்ளாதே.'
என்று சமாதானம் செய்து பேசினார்.
இப்படி பல அரசர்களை பற்றி சொன்ன போது, பகீரதனை பற்றி சொல்லும் போது 'ஊர்வசி' என்றால் என்ன அர்த்தம்? என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.
பகீரதன் செய்த ஒரு பெரிய யாகத்தில், அவர் கொடுத்த ஸோம ரசத்தை இந்திரன் குடித்துவிட்டு, தன் கை வன்மையால் பல ஆயிரம் அசுரர்களை ஜெயித்தான். இந்திரனுக்கு ஜெயம் கிடைக்கும் அளவுக்கு பகீரதன் யாகம் செய்தார்..
மேலும், பல யாகங்கள் செய்து, 10 லட்சம் கன்னிகைகளுக்கு தங்க ஆபரணங்கள் சீதனமாக கொடுத்து கன்னிகாதானம் (திருமணம்) செய்து வைத்தார்.
सर्वा रथगताः कन्या रथाः सर्वे चतुर्युजः
रथे रथे शतं नागाः पद्मिनॊ हेममालिनः
सहस्रम् अश्वा एकैकं हस्तिनं पृष्ठतॊ ऽन्वयुः
गवां सहस्रम अश्वे ऽश्वे सहस्रं गव्य अजाविकम्
- வியாசர் மஹாபாரதம்
மணம் செய்து கொடுத்த ஒவ்வொரு கன்னிகைக்கும், 4 குதிரைகள் பூட்டிய தேரையும், அதை தொடர்ந்து தங்க ஆபரணங்கள் அணிவிக்கபட்ட 100 யானைகளும், ஒவ்வொரு யானைக்கு பின் 1000 குதிரைகளும், ஒவ்வொரு குதிரைக்கு பின் 1000 பசுக்களும், ஒவ்வொரு பசுவுக்கு பின் 1000 ஆடுகளும் தானம் செய்தார்.
இப்படிப்பட்ட கொடையாளியான பகீரதனின் மடியில், ஒரு குழந்தை போல, கங்கை வந்து அமர்ந்தாள்.
उपह्वरे निवसतॊ यस्याङ्के निषसाद ह |
गङ्गा भागीरथी तस्माद् उर्वशी हि अभवत् पुरा ||
- வியாசர் மஹாபாரதம்
பகீரதன் தொடை (ஊரு) மீது கங்கை அமர்ந்த காரணத்தால், அவளுக்கு "ஊர்வசி' என்று பெயர் கிடைத்தது. (ஊர்வசி என்ற அப்சரஸ் உண்டு. கங்கைக்கும் இந்த பெயர் கிடைத்தது)
பல யாகங்கள் செய்து, அதிகமான தானங்கள் செய்த பகீரதனுக்கு, மூன்று உலகையும் பரிசுத்தமாக்கும் கங்கையேமகளானாள்.
வேனன் என்ற இக்ஷ்வாகு குலத்தில் வந்த அரசனுக்கு ப்ருது பிறந்தார்.
प्रथयिष्यति वै लॊकान् पृथु: इत्य एव शब्दितः |
क्षता: च न: त्रायतीति स तस्मात् क्षत्रियः स्मृतः ||
'ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்று "உலகம் அனைத்திலும் விஷ்ணுவே எங்கும் புகுந்து அந்தர்யாமியாக (ஆத்மாவாக) உள்ளார்" என்று வேதம் சொல்கிறது.
இதையே, அர்ஜுனன், ஸ்ரீ கிருஷ்ணர் காண்பித்த விஸ்வரூப தரிசனத்தில் கண்டான். அவரே அனைத்துமாக இருப்பதை கண்டான்.
வேதம் "உலகத்தால் ப்ரம்மத்தை மறைக்காதே. ப்ரம்மத்தை கொண்டு, உலகத்தை மறைத்து விடு"
என்று ஈஷோ உபநிஷத் ஆரம்பிக்கிறது.
புரியவில்லையே !! உலகத்தால் ப்ரம்மத்தை மறைக்காதே என்றால் என்ன அர்த்தம்?
ஆத்மா இல்லாத ஒரு உடம்பை, நாம் எத்தனை முறை கூப்பிட்டாலும் நடந்து வராது.
ஆத்மா இல்லாத ஒரு உடம்புக்கு "பிரேதம்" என்று பெயர்.
உடம்பு இல்லாத ஆத்மாவை கூப்பிட்டால், நம் கண்ணுக்கு தெரியாது.
நாம் ஒருவரை கூப்பிட்டால், உடம்போடு கூடவே அதன் ஜீவ ஆத்மாவும் கூடவே வருகிறது.
வருபவரை வெறும் உடம்பு சம்பந்தமாக நீ பார்த்தாய் என்றால், அவரை பார்த்ததினால், பேராசை, பொறாமை, கோபம் போன்ற குணங்கள் உனக்குள் எழும்.
உடம்பை மட்டும் கவனிக்கும் போது, "இவன் தனக்கு வேண்டியப்பட்டவன்", "இவன் எதிரி", "இவன் உயர்ந்தவன்", "இவன் தாழ்ந்தவன்" போன்ற எண்ணங்கள் நமக்குள் வந்து விடும்.
நமக்கு பிடிக்காதவர்கள் வந்தால், "இவன் ஏன் வந்தான்?" என்று கோபம் வரும்.
உடம்பை பார்க்காமல், ஆத்மாவை பார்த்தாய் என்றால், ஒருவரை பார்த்து, பொறாமையோ, கோபமோ உண்டாகாது.
மகாத்மாக்கள், ஞானிகள், ஆத்மாவை மட்டும் தான் பார்க்கின்றனர். இதனாலேயே அவர்களுக்கு யார் மீதும் கோபமோ, பொறாமையோ வருவதில்லை.
ஞானிகள், உடம்பை கவனிக்காமல், ஆத்மாவை மட்டும் கவனிப்பதால், அனைவரும் அந்த பகவானின் அம்சமே என்று பார்க்கின்றனர். இதனால் தன்னிடம் துர்குணங்கள் சேராமல் பார்த்துக்கொள்கின்றனர்.
இந்த ஞானம் இல்லாத சாதாரண ஜனங்கள், யாரை பார்த்தாலும் சரீரத்தையே கவனிக்கின்றனர். ஆத்மாவை கவனிப்பதில்லை.
மற்றவர்கள் மீது உள்ள ஆசை, பொறாமை, கோபத்தால், தன்னிடம் துர்குணங்களை வளர்த்து கொள்கின்றனர்.
இந்த ஞானத்தை நாம் அனைவரும் பெற வேண்டும்.
துர்குணங்கள் நமக்கு எழாமல் இருக்க வேண்டும் என்ற ஆசையில், வேதம் நம்மை பார்த்து, "உள்ளே இருக்கும் பரமாத்மாவை பார், உடம்பை பார்த்து பழகாதே"
என்று சொல்கிறது.
உலகம் முழுவதும் அந்த பரமாத்மா ப்ரவேசித்து உள்ளார். ஒவ்வொரு உடம்பிலும் ஜீவாத்மாவாக அவரே உள்ளார்.
'உள்ளே இருக்கும் ஆத்மாவை கவனிக்காமல், உடம்பையே கவனிப்பவர்கள்' அஞானிகள் (உண்மையை அறியாதவர்கள்).
அஞானிகளுக்கு, உடம்புக்குள் ஆத்மாவாக இருக்கும் விஷ்ணு தெரிவதில்லை.
உடம்பையே பார்க்கும் அஞானிகளுக்கு, விஷ்ணு என்ற தேவன் மறைக்கப்படுகிறார்.
இதனாலேயே, விஷ்ணுவுக்கு "வாசுதேவன்" (மறைந்து இருக்கும் தேவன்) என்று பெயர்.
ஞானிகள், உடம்பை பார்க்காமல், உள்ளே மறைந்து இருக்கும் ஆத்மாவை கவனிப்பதால், வாசுதேவனாக இல்லாமல், ப்ரத்யக்ஷமாக தெரிகிறார் பரப்ரம்மா.
ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனனை பார்த்து, "அர்ஜுனா !! கோடி ஜென்ம புண்யத்தால், ஒருவனுக்கு இந்த ஞானம் உண்டாகிறது. அத்தகைய ஞானிக்கு, நாயை பார்த்தாலும், கழுதையை பார்த்தாலும், தன்னை கொல்ல வரும் சத்ருவை பார்த்தாலும், அவர்களுக்கு உள்ளே உள்ள பரப்ரம்ம ஸ்வரூபமே தெரிகிறது. அத்தகைய ஞானி எனக்கு மிகவும் பிரியப்பட்டவன்" என்று சொல்கிறார். பிரகலாதன் போன்ற தன் பக்தனை மனதில் கொண்டு இதை சொன்னார், ஸ்ரீ கிருஷ்ணர்.