Followers

Search Here...

Showing posts with label அரசாட்சி. Show all posts
Showing posts with label அரசாட்சி. Show all posts

Tuesday, 6 December 2022

அரசன் எப்படி மந்திரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்? யார் யாரை தன்னுடன் வைத்து கொள்ள வேண்டும்? யாரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்? அரசனுக்கு எதனால் பயம் ஏற்படும்? வியாசர் மஹாபாரதம் தெரிந்து கொள்வோம்...

அரச தர்மம்.....

தர்மபுத்திரர் பீஷ்மரிடம், "ஒரு அரசன் எவ்வித குணங்கள் கொண்ட மந்திரிகளை தனக்கு வைத்து கொள்ள வேண்டும்?" என்று கேட்டார்.


பீஷ்மர் இதற்கு பதில் சொல்ல ஆரம்பிக்கிறார்.

"தர்மம் எது, அதர்மம் எது என்று வேதத்தை கொண்டு கற்று அறிந்தவனும், ஸாமர்த்தியசாலியும், ப்ரம்மச்சர்யத்தில் சுத்தமாக இருந்தவனுமான பிராம்மண வர்ணத்தில் இருக்கும் 4 பிராம்மணர்களையும்,

பலசாலியும், ஆயுதங்களில் தேர்ச்சி பெற்றவனுமான க்ஷத்ரிய வர்ணத்தில் இருக்கும் 18 க்ஷத்ரியர்களையும் தேர்ந்தெடுத்து சேர்த்து கொள்ள வேண்டும்,

चतुरो ब्राह्मणान् वैद्यान् प्रगल्भान् स्नातकाञ् शुचीन्।

क्षत्रियान् दश च अष्टौ च बलिनः शस्त्र-पाणिनः।।

- மஹாபாரதம் (வியாஸர்)


நிறைந்த பொருள் கொண்ட வைஸ்ய வர்ணத்தில் இருக்கும் 21 வைஸ்யர்களையும் (Businessman/Employer), மரியாதைக்கு பாத்திரமாகவுள்ள, வாழ்க்கையில் எந்த ஸமயத்திலும் பரிசுத்தமாகவே இருக்கும் 3 சூத்திரர்களையும் (Employee),

वैश्यान् वित्तेन संपन्नान् एकविंशति सङ्ख्यया।

त्रींश्च शूद्रान् विनीतांश्च शुचीन्कर्मणि पूर्वके।।

- மஹாபாரதம் (வியாஸர்)

மற்றவர் சொல்வதை அமைதியாக கேட்பதில் ஆர்வமும், கேட்பதிலும், அறிவதிலும், அதை நடைமுறை படுத்திக்கொள்வதிலும், செய்யக்கூடாததை புத்தியால் விலக்குவதிலும், ஆராய்ச்சியிலும், சாரம் எது என்று அறிந்து கொள்வதிலும்/தத்வ-ஞானம், ஆகிய 8 குணங்களுடன் இருக்கும், புராணங்களை கற்றவரும், 50 வயதாவது ஆனவரும், ஸாமர்த்தியசாலியும், பிறரிடம் உள்ள நல்ல குணத்தை தோஷமாக பார்க்காதவரும்/அஸூயை,

வேதங்கள், தர்ம சாஸ்திரங்கள் (20 ஸ்ம்ருதிகள்) அறிந்தவரும், அகம்பாவம் இன்றி பணிவு உள்ளவரும், ஸமமாக பார்ப்பவரும், விவாவதம் என்று வரும் போது சக்தியுடன் தன் பக்கத்தை பேச தெரிந்தவரும், பொருளில் ஆசை இல்லாதவரும்,

மிகவும் தவறான 7 காரியங்கள் (வேட்டை ஆடுதல், சூதாட்டம் விளையாடுதல், பெண் மோகம் கொண்டிருத்தல், மது அருந்துதல், பிறரை அடித்தல், கீழ்த்தரமான சொற்களை பேசுதல், பிறர் பொருளை அபகரித்தல்) செய்யாதவருமான ஸூதரை தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்களில் எட்டு பேரை (4 பிராம்மணன், 3 சூத்திரன், 1 சூதன்) மந்திரிகளாக (cabinet minister) வைத்து கொண்டு நடுவில் அரசன் இருந்து கொண்டு ஆலோசனையை தீர்மானிக்க வேண்டும்.

अष्टाभि: च गुणै:-युक्तं सूतं-पौराणिकं तथा।

पञ्चाशद् वर्ष वयसं प्रगल्भम् अनसूयकम्।।

श्रुति-स्मृति समायुक्तं विनीतं सम-दर्शिनम्।

कार्ये विवदम् आनानां शक्तम् अर्थेष्वलोलुपम्।।

वर्जितं च एव व्यसनैः सुघोरैः सप्तभिर्भृ भृशम्।

अष्टानां मन्त्रिणां मध्ये मन्त्रं राजोप-धारयेत्।।

- மஹாபாரதம் (வியாஸர்)


இந்த மந்திரிகளுடன் ஆலோசனை செய்து முடிக்கப்பட்ட தீர்மானத்தை ராஜ்யத்தில் இருக்கும் மற்ற பிரதான அதிகாரிகளிடம் அனுப்பி தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு, அரசனாக நீயும் எப்பொழுதும் பிரஜைகளை பார்த்து கொள்ள வேண்டும்.

ततः संप्रेषयेद् राष्ट्रे राष्ट्रीयाय च दर्शयेत्।

अनेन व्यवहारेण द्रष्टव्यास्ते प्रजाः सदा।।

- மஹாபாரதம் (வியாஸர்)

யாருக்கும் தெரியாமல், எந்த சமயத்திலும் எந்த பொருளையும் ரகசியமாக நீ (அரசன்) எடுத்து கொள்ள கூடாது.

சர்ச்சையுள்ள விஷயங்களில், அதில் சம்பந்தப்பட்ட பொருளை நீ எடுக்க கூடாது. அப்படி எடுத்தால், அரசனுக்கும், அது சம்பந்தப்பட்டவர்களுக்கும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தும்.

न च अपि गूढं द्रव्यं ते ग्राह्यं कार्योपघातकम्।

कार्ये खलु विपन्ने त्वां यो धर्मस्तं च पीडयेत्।।

- மஹாபாரதம் (வியாஸர்)


(இவ்வாறு பொருளை அபகரிப்பதால்) பருந்திடமிருந்து பறவை கூட்டங்கள் விலகுவது போல, உன் ராஜ்ஜியம் உன்னை விட்டு விலகி ஓடும். தர்மத்தை மீறி, முறை தவறி மக்களை பரிபாலிக்கும் அரசனுடைய ஆட்சி, கடலில் வழி தவறி சிதறி போன கப்பல் போல, வழி தவறி அலையும்

विद्रवेच्चैव राष्ट्रं ते श्येनात् पक्षिगणा इव।

परिस्रवेच्च सततं नौर्विशीर्णेव सागरे।।

- மஹாபாரதம் (வியாஸர்)


தர்மத்தை மூலமாக கொண்டு ஆட்சி செய்ய வேண்டிய அரசன், எப்பொழுது அதர்மமாக ஆட்சி செய்ய ஆரம்பிக்கிறானோ, அவன் உள்ளத்தில் பயம் உண்டாகும். இறந்த பிறகு, சொர்க்கமும் கிடைக்காது.

प्रजाः पालयतोऽसम्यग् अधर्मेण इह भूपतेः।

हार्दं भयं संभवति स्वर्गश्चस्य विरुध्यते।।

- மஹாபாரதம் (வியாஸர்)

இப்படிப்பட்ட அரசனை பின் தொடர்ந்து செல்பவர்களும், அரசனோடு அதோகதி ஆவார்கள்.

अथ यो धर्मतः पाति राजाऽमात्योऽथवा आत्मजः।

धर्मासने सन्नियुक्तो धर्ममूले नरर्षभ।।

- மஹாபாரதம் (வியாஸர்)

இவ்வாறு பீஷ்மர் யுதிஷ்டிர மஹாராஜனுக்கு "அரசன் எப்படி மந்திரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்? யார் யாரை தன்னுடன் வைத்து கொள்ள வேண்டும்? யாரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்? அரசனுக்கு எதனால் பயம் ஏற்படும்?" என்று அரச தர்மத்தை எடுத்துரைத்தார்.

Saturday, 11 June 2022

அரசாட்சி செய்பவன் செய்யக்கூடாத 18 செயல்கள் என்னென்ன? ராஜ தர்மம் அறிவோம். மஹாபாரதம் சொல்கிறது.

ராஜ தர்மம்:


ஆட்சி செய்பவன் எதை விட்டு விலகி இருக்க வேண்டும்? என்று பீஷ்மர் சொல்கிறார்.


व्यसनानि च सर्वाणि 

त्यजेथा भूरिदक्षिण |

न चैव न प्रयुञ्जीत् 

सङ्गं तु परिवर्जयेत ||

- வியாசர் மஹாபாரதம்

நிரம்ப தானம் அளிப்பவனே! யுதிஷ்டிரா !

அரசாட்சி செய்பவன், வ்யஸனங்களை (தீய விஷயங்கள்) விட்டு விலகி இருக்க வேண்டும்.

எந்த சமயத்திலும், வ்யசனங்களில் ஆசை கொண்டு, செயல் செய்ய கூடாது 


नित्यं हि व्यसनी लॊके 

परिभूतॊ भवत्य उत |

उद्वेजयति लॊकं चाप्य 

अति द्वेषी महीपतिः ||

- வியாசர் மஹாபாரதம்

வ்யஸனமுள்ள (தீய செயல்களை செய்யும்) அரசன் உலகத்தில் அவமதிக்கப்படுவான்.

பிறரை கண்டு வெறுக்கும் குணமுள்ள அரசனாக இருந்தால், அவனை கண்டு உலகம் நடுங்கும்.


வ்யஸனங்கள் (தீய செயல்) மொத்தம் 18 என்று சொல்லப்படுகிறது:

  1. பொழுதுபோக்காக வேட்டை ஆடுவது
  2. பணயம் வைத்து பகடை ஆடுவது (gambling)
  3. பகலில் தூங்குவது
  4. மற்றவரை திட்டுவது
  5. பெண்களிடம் மோகம் கொள்வது
  6. மதம் கொள்வது (கர்வம்)
  7. பொழுதுபோக்க பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது
  8. கூத்து பார்ப்பது
  9. பொழுதுபோக்க வாத்தியங்கள் இசைக்க சொல்லி கேட்பது
  10. மது குடிப்பது

இந்த 10 வ்யஸனங்கள் காமத்தால் (உலக ஆசை) உண்டாகின்றன.


  1. தெரியாத குற்றத்தை வெளியிடுவது
  2. குற்றமில்லாதவனை தண்டிப்பது
  3. கபடமாக கொல்வது
  4. பிறர் பெருமையை கண்டு பொறாமை அடைவது
  5. பிறர் நற்குணங்களை, தோஷமாக சொல்வது
  6. பிறர் சொத்தை பிடுங்க முயற்சிப்பது
  7. கீழ்த்தரமாக பேசுவது
  8. நியாயமில்லாத தண்டனை கொடுப்பது

இந்த 8 வ்யஸனங்கள் கோபத்தால் உண்டாகின்றன.


கோபமும், காமமும் உள்ள அரசன், இந்த தீய செயல்களை செய்கிறான்.

காமத்தையும், கோபத்தையும் அடக்கி இருக்கும் அரசன், இந்த செயல்களில் ஈடுபடாமல் இருப்பான்.