Followers

Search Here...

Showing posts with label அனுமதி. Show all posts
Showing posts with label அனுமதி. Show all posts

Saturday, 19 March 2022

நாதீகனுக்கும் இடம் கொடுக்கும் ஒரே மதம், நம்முடைய ஹிந்து மதம். ஏன் சனாதன தர்மம் நாதீகனுக்கு இடம் கொடுக்கிறது? எந்த வேத வாக்கியம் நாதீகனுக்கும் இடம் கொடுக்கிறது? நாதீகனை என்னவென்று அழைக்கிறது? தெரிந்து கொள்வோம்...

நாதீகனுக்கும் இடம் கொடுக்கும் ஒரே மதம், நம்முடைய 'ஹிந்து மதம்' ஒன்றே.

நாதீகனுக்கும் இடம் கொடுக்கும் ஒரே தர்மம், நம்முடைய 'சனாதன தர்மம்' ஒன்றே

கீழே உள்ள வேத வாக்கியம் நாதீகனுக்கும் இடம் தருகிறது என்று பார்க்கிறோம்.

அஸ்தி ப்ரம்மேதி சேத் வேதா

சந்தமேநம் ததோ விதூரிதி |

அஸத் ப்ரம்மேதி வேதசேத்

அஸன்நேவ ஸ: பவதி ||

- தைத்தரீய உபநிஷத்

"'கடவுள் இருக்கிறார்' என்று சொல்பவனுக்கு, தான் இருப்பதை அந்த பரமாத்மாவே உணர செய்கிறார்

'கடவுள் இருக்கிறார்' என்று எவன் சொல்கிறானோ, அவனே சத்தியமாக வாழ்கிறான் (ஸத்துக்கள்)

'கடவுள் இல்லை' என்று சொல்பவனுக்கு, அந்த பரமாத்மா (ஸ:) தான் இருந்தும், இல்லாதது போலவே (அஸன்நேவ) உணர செய்கிறார்.

'கடவுள் இல்லை' என்று எவன் சொல்கிறானோ, அவன் வாழ்ந்தும் நடைபிணம் போல, பொய்யாக வாழ்கிறான் (அஸத்துக்கள்)"

இது வேத வாக்கியம்.


'ஸத்துக்கள்' என்று ஆஸ்தீகனை வேதம் சொல்கிறது.

'அஸத்துக்கள்' என்று நாஸ்தீகனை வேதம் சொல்கிறது.


மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிற மதங்களில், நாஸ்தீகனுக்கு இடமில்லை.

'கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை! கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி'

என்று சொல்பவனை மட்டுமல்ல, அப்படிப்பட்டவரகளை ஆதரிப்பவரகளை கூட பிற மதங்கள் ஏற்று கொள்வதில்லை. 

'கடவுள் உண்டு' என்று  உண்மையாக நம்பும் பிற மதங்களை சேர்ந்தவர்கள், இப்படி பொதுவாக "கடவுள் இல்லை. கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி" என்று கடவுளை சொல்லி எழுதி பேசுபவர்களை துளியும் ஏற்பதில்லை. கடவுள் நம்பிக்கை நிஜமாக உள்ளவர்களால் ஏற்கமுடியாது.





நம்முடைய சனாதன தர்மமாகிய வேதம் மட்டுமே, நாஸ்தீகனுக்கும் வேத வாக்கியத்தாலேயே இப்படியெல்லாம் 'பேசவும்வாழவும்' இடம் தருகிறது.


ஆனால் "ஐயோ! அஸத்துக்களாக வாழ்கிறார்களே!" என்று குறைபட்டு கொண்டே, பல குழந்தை பெற்ற தாய், ஒரு முட்டாள் பிள்ளையையும் பெற்று வருத்தப்படுவது போல, நாதீகனுக்கும் இடம் கொடுக்கிறது.


ஸத்துக்கள், அஸத்துக்கள் (ஆஸ்தீகன்-நாஸ்தீகன்) இருவருமே தான் செய்யும் நல்ல காரியங்கள், கெட்ட காரியங்களுக்கு ஏற்ப பலனை அடைகிறார்கள்.

ஆனால், 

வேதத்தால் 'ஸத்துக்கள்' என்று அழைக்கப்படும் ஆஸ்தீகர்கள், தெய்வ பிரார்த்தனைகள் மூலம், தன் பாப கர்மாக்களின் பலனை அழித்து கொள்கிறார்கள்

தெய்வ பிரார்த்தனைகள் மூலம், தன் புண்ணிய கர்மாக்களின் பலனையும் அழித்து கொண்டு 'மோக்ஷம்' அடைந்து விடுகிறார்கள். 


வேதத்தால் 'அஸத்துக்கள்' என்று அழைக்கப்படும் நாஸ்தீகர்கள், தான் சமைத்த உணவை தான் மட்டுமே உண்டு, மறுநாள் மிச்சமாகி போன உணவையும் தான் மட்டுமே உண்டு வாழ்பவன் போல, 

தான் செய்த செயலுக்கான பலனை, சில நாட்கள் நல்ல காலமாகவும், சில நாட்கள் கெட்ட காலமாகவும் அனுபவித்து கொண்டே வாழ்ந்து, கடைசியில் இறந்து, பிறகு மீண்டும் பிறந்து, இறந்து கொண்டே இருக்கிறார்கள். 

ஒரு ஜென்மத்தில், உலக கஷ்டங்களை உணர்ந்து, தனக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்று உணர்ந்து, ஒரு நாள் "கடவுள் இருக்கிறார்" (அஸ்தி) என்று இந்த ஆத்மாக்களும் உணரும் போது, அவர்களும் படிப்படியாக முன்னேறி, ஒருநாள் விஷ்ணு பாதத்தை அடைந்து விடுகிறார்கள்.


ஊரெல்லாம் அலைந்து திரிந்து சம்பாதித்து வளர்த்த தகப்பனை, 

சில பிள்ளைகள் கடைசி வரை கூடவே வைத்து கொண்டு காக்கிறார்கள்.

சில பிள்ளைகள் தகப்பனை அலட்சியம் செய்து விடுகிறார்கள்.





"பிள்ளை அலட்சியம் செய்கிறான்" என்பதால் தகப்பனும், தன் பிள்ளையிடம் நெருங்காமல் இருக்கிறார்.

இருந்தும் இல்லாதவர் போலவே இருக்கிறார். (அஸன்நேவ ஸ: பவதி)

தாயோ, 'தன் பர்தா (கணவன்) இப்படி அமைதியாக இருக்கிறாரே! இப்படி என் பிள்ளையும் தகப்பனை அலட்சியம் செய்கிறானே!' என்று தவிக்கிறாள்.

'எப்பொழுதாவது, தன் அசட்டு பிள்ளையும் தகப்பனின் அருமையை உணர்ந்து கொள்வான்' என்ற நம்பிக்கையிலேயே வாழ்கிறாள்.


அது போல,

வேதம் என்ற தாய், "விஷ்ணு" என்ற தகப்பனை நிராகரிக்கும் தன் நாஸ்தீக பிள்ளையை நிராகரிக்க முடியாமல், 'ஒருநாள் தன் தகப்பனின் பெருமையை உணர்ந்து கொண்டு இவனும் வருவான். விஷ்ணுவை ஒருநாள் அடைந்து விடுவான்' என்ற நம்பிக்கையில், ஒரு தாயை போல இருந்து கொண்டு, நாதீகனுக்கும் இடம் தருகிறாள்.