அர்ஜூனன் கருப்பா, சிவப்பா?
பிராமணர்களை போல இருந்த பாண்டவர்கள் திரௌபதியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர்.
வந்திருந்த கர்ணன், துரியோதனன் உட்பட க்ஷத்ரிய அரசர்கள் அனைவரும், வில்லின் நாண்கயிறை கூட ஏற்றமுடியாமல் கீழேவிழ, அர்ஜூனன் எழுந்திருந்து, "பிராம்மணன் முயற்சிக்கலாமா?" என்று கேட்டான்.
"க்ஷத்ரியன், பிராம்மணன், வைஸ்யன், சூத்திரன் யார் வேண்டுமானாலும் இந்தவில்லை நாண்ஏற்றி இலக்கை அடித்தால், என் சகோதரியை கொடுப்பேன். இது சத்தியம்" என்றான் த்ருபதன் மகன் த்ருஷ்டத்யும்னன்.
तस्य तद्वचनं श्रुत्वा धृष्टद्युम्नोऽब्रवीद्वचः।
ब्राह्मणो वाथ राजन्यो वैश्यो वा शूद्र एव वा।
एतेषां यो धनुःश्रेष्ठं सज्यं कुर्याद्द्विजोत्तम।।
तस्मै प्रदेया भगिनी सत्यमुक्तं मया वचः।।
ஆதி பர்வம்
அர்ஜூனன் எளிதாக நாண் ஏற்றி 5 அம்புகளால் எந்திரத்தின் இடையிலுள்ள துவாரங்கள் வழியே இலக்கை அடித்து கீழே தள்ளினான்
பிராம்மணர்கள் ஆச்சர்யம் அடைந்து ஆனந்தப்பட்டனர்.
நன்றாக வளர்ந்த செடி, காய் கொடுக்கும்போது வெட்டுவது போல, இந்த த்ருஷ்டத்யும்னன் திரௌபதியை க்ஷத்ரியஅரசனுக்கு கொடுக்காமல், பிராம்மண்ணுக்கு கொடுத்தானே, அவனை நாமே கொன்றுவிடுவோம், அந்த திரௌபதியையும் அக்னியில் தள்ளுவோம் என்று முடிவு செய்தனர்
த்ருஷ்டத்யும்னன் போர் செய்வதை அப்போது விரும்பாத காரணத்தால், பிராம்மணர்களின் பின்னால் ஒடிச்சென்று, தடுக்க சொன்னான்.
தவம் கொண்ட பிராம்மணர்கள், தாக்க வரும் அரசர்களை தடுக்க முயற்சிக்க, பிராம்மண வேடத்தில் இருந்த அர்ஜூனன், கையில் சுயம்வரத்தில் வென்ற வில்லோடு ஒரு மதங்கொண்ட யானைபோல நின்றான்.
அருகில், பீமன் ஒரு பெரிய மரத்தை பிடுங்கி ஒடிவரும் அரசர்களை தாக்க நின்றான்.
பீமன் சல்லியனோடு மல்யுத்தம்செய்து தூக்கி எறிந்தான்.
அர்ஜூனன் கர்ணனின் வில்லை முறித்து தோற்கடித்தான்.
யுதிஷ்டிரர் துரியோதனனை யுத்தம் செய்து தோற்கடித்தார்.
சகாதேவன் துச்சாதனன் இருவரும் யுத்தம் செய்தனர்.
பிராம்மணர்களோடு யுத்தம் வேண்டாம் என்று மற்ற கௌரவர்கள் சொல்ல, போரை நிறுத்திவிட்டு திரும்பி சென்றனர்.
திரௌபதி பாண்டவர்களோடு குயவன் வீட்டிற்கு சென்றாள்.
பிக்ஷை என்று நினைத்து பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாள் குந்தி.
யுதிஷ்டிரர் அர்ஜுனனை உடனே பானிக்ரகனம் செய்து கொள்ள சொன்னார்.
அண்ணன்கள் இருவரும் இருக்க தான் மணம் செய்து கொள்ளக்கூடாது என்று மறுத்தான் அர்ஜூனன்.
தாய் சொன்னதால், அவள் வாக்கு ஸத்யமே என்பதால். அனைவருமே திரௌபதிக்கு பதிகள் தான் என்றார் யுதிஷ்டிரர்.
அப்போது கிருஷ்ணன் பலராமரோடு முதல் முறையாக பாண்டவர்களை பார்க்க வந்தார்.
நான் கிருஷ்ணன் என்று சொல்லி யுதிஷ்டிரருக்கு நமஸ்காரம் செய்தார். குந்திக்கு செய்து, நலம் விசாரித்து. காலம் வரும்வரை பிராம்மண வேஷத்தில் இருங்கள் என்று சொல்லி விடைபெற்றார்
இரவு பாண்டவர்கள் தெற்குபக்கமாக தலைவைத்து படுத்தனர்.
அவர்கள் கால் மாட்டில் குந்தி படுத்து இருந்தாள். அவள் கால் மாட்டில் திரௌபதி படுத்து இருந்தாள்.
இதை இரவில் வந்து கண்ட த்ருஷ்டத்யும்னன், நடந்ததை சொல்ல அரசவை சென்றான்.
பாஞ்சாலதேச அரசன் த்ருபதன், என்ன நடந்தது? யார் அவர்கள்? என்று விசாரிக்க, த்ருஷ்டத்யும்னன் அர்ஜூனன் அடையாளத்தை சொல்கிறான்.
"கருமையான நிறத்தோடு, இளைஞனாக, மதம் கொண்ட யானை போல இருந்தவன், யாராலும் சாதிக்க முடியாத அந்த பெரிய சாதனையை செய்துவிட்டு, அந்த தேரோட்டி மகனான கர்ணனையும் எதிர்த்து போரிட்டு வென்றான். என் அனுமானப்படி இந்திரனுக்கு ஒப்பான அவன் அர்ஜூனனே ஆவான்"என்றான்
श्यामो युवा वारणमत्तगामी
कृत्वा महत्कर्म सुदुष्करं तत्।।
यः सूतपुत्रेण चकार युद्धं
शङ्के अर्जुनं तं त्रिदशेश वीर्यम्।'
- ஆதி பர்வம்
கிருஷ்ணன் திரௌபதி போலவே, அர்ஜூனனும் கருப்பான தேகம் உடையவன் என்று வியாசமஹாபாரதம் காட்டுகிறது.
No comments:
Post a Comment