Followers

Search Here...

Sunday, 21 July 2024

பிராம்மண, தெய்வ, ஆர்ஷ, ப்ராஜாபத்ய, காந்தர்வ, ராக்ஷஸ திருமணங்கள் பற்றி துஷ்யந்தன், சகுந்தலைக்கு சொல்கிறார்.

க்ஷத்ரிய அரசனான துஷ்யந்தன், காந்தர்வ திருமணம் செய்து கொள்ளலாம் என்று சகுந்தலையை கேட்டார். 

துஷ்யந்தன் அப்போது, தர்ம சாஸ்திரம் காந்தர்வ மணம் க்ஷத்திரியனுக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை இவ்வாறு சொன்னார்.


अष्टावेव समासेन विवाहा धर्मतः स्मृताः।

ब्राह्मो दैव: तथैव आर्षः प्राजापत्य स्तथा आसुरः।

गान्धर्वो राक्षस: चैव पैशाच: च अष्टमः स्मृतः।।

பிராம்மண, தெய்வ, ஆர்ஷ, ப்ராஜாபத்ய, ஆசுர (rape and marry), காந்தர்வ (love marriage), ராக்ஷஸ (capture and marry), பைசாச ஆகிய 8 திருமணங்கள் தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.


तेषां धर्म्यान्यथा पूर्वं मनुः स्वायंभुवो अब्रवीत्।।

இந்த 8 திருமணங்களில் யார் யாருக்கு எது தர்மமான திருமணம் (விவாஹம்) என்று முன் காலத்தில் ஸ்வாயம்பு மனு சொன்னதை அப்படியே உனக்கு சொல்கிறேன்..


प्रशस्तां चतुरः पूर्वान् ब्राह्मणस्य उपधारय।

षडानु पूर्व्या क्षत्रस्य विद्धि धर्म्यान् अनिन्दिते।

राज्ञां तु राक्षसो अप्युक्तो विट्शूद्रेष्व आसुरः स्मृतः।

ப்ராம்மணனுக்கு (MLA, MP, Advocate, Judge, CM, PM, Vedic Scholars, Vedic Priest, Teachers) முதல் 4 திருமணங்கள் (பிராம்மண, தெய்வ, ஆர்ஷ, ப்ராஜாபத்ய) அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.

க்ஷத்திரியனுக்கு (police, defence, army) முதல் 6 திருமணங்கள் (பிராம்மண, தெய்வ, ஆர்ஷ, ப்ராஜாபத்ய, ஆசுர, காந்தர்வ) அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.

ராக்ஷஸ திருமணம் க்ஷத்ரியர்களில் ராஜாக்களுக்கு (army chief) மட்டும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. 

வைஸ்யர்களுக்கும் (employer), சூத்திரர்களுக்கும் (employee) அசுர திருமணம் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.


पञ्चानां तु त्रयो धर्म्या अधर्म्यौ द्वौ स्मृताविह।

पैशाच आसुरश्चैव न कर्तव्यौ कदाचन।।

- வ்யாஸ மஹாபாரதம் 

5 திருமணங்கள் (பிராம்மண, தெய்வ, ஆர்ஷ, ப்ராஜாபத்ய, காந்தர்வ, ராக்ஷஸ) எப்பொழுதுமே தர்மமான திருமணம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. மற்ற 2 திருமணங்கள் (ஆசுர, பைசாச) எப்பொழுதுமே அதர்மமான திருமணம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஆசுர, பைசாச திருமணங்கள் எந்த நிலையிலும் செய்யவே கூடாது.


இவ்வாறு சொல்லி, தான் காந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சகுந்தலையிடம் துஷ்யந்தன் சொன்னார்.


பெண் சுதந்திரமானவளாக செயல் பட கூடாது - சகுந்தலை (வ்யாஸ மஹாபாரதம்)

யயாதி வம்சத்தில் பிறந்த அரசன் "துஷ்யந்தன்" கண்வ ரிஷியின் ஆஸ்ரமத்தில் சகுந்தலை இருப்பதை கண்டார்.

சகுந்தலை விச்வாமித்ரருக்கு தேவலோக மேனகையால் பிறந்தவள். அவளை கண்வ ரிஷி, தந்தை போல வளர்த்து வந்தார்.

கண்வ ரிஷி மலர்கள் எடுக்க சென்று இருந்த போது, துஷ்யந்தன் அந்த காட்டின் பக்கம் வேட்டைக்காக வந்த போது, அந்த ஆஸ்ரமத்தை கண்டார். 

துஷ்யந்தன், சகுந்தலையை பார்த்து, "காந்தர்வ முறைப்படி மணம் செய்து கொள்ள இஷ்டமா?" என்று கேட்டார்.


"எனக்கு இப்போது தந்தையே முக்கியமான தெய்வம். அவர் என்னை யாருக்கு கொடுப்பாரோ, அவரே எனக்கு கணவர் ஆவார்" என்றாள்.

மேலும் சொன்னாள்,

पिता रक्षति कौमारे भर्ता रक्षति यौवने।

पुत्रस्तु स्थाविरे भावे न स्त्री स्वातन्त्र्यमर्हति ।।

- வ்யாஸ மஹாபாரதம் 

"இளமை காலத்தில் தந்தை ஒரு பெண்ணை காப்பாற்றுகிறார். பருவ காலத்தில் கணவன் ஒரு பெண்ணை காப்பாற்றுகிறார். முதிர்ந்த காலத்தில் அவள் பிள்ளை அவளை காப்பாற்றுகிறான். எந்த நிலையிலும் பெண் சுதந்திரமாக செயல் படுவது கூடாதுஎன்றாள்.


"இளமை பருவத்தில் இருக்கும் என்னை இப்போது என் தந்தை காக்கும் பொழுது, அவரை மதிக்காமல், நானாக எப்படி ஒருவரை அடைய நினைக்கலாம்?" என்று கேட்டாள்.


இவ்வாறு சகுந்தலை துஷ்யந்தனுக்கு பெண் சுதந்திரமானவளாக செயல் பட கூடாது என்று தர்மத்தை சொன்னாள்.

Saturday, 20 July 2024

பித்ரு காரியத்தில், பெண் வயிற்று பேரனை அழைத்து சாப்பிட செய்தால் புண்ணியம். இந்த வரம் யாரால் கிடைத்தது?

"யயாதி" தன் ராஜ்யத்தை தன் மகனான "புரூ"விடம் கொடுத்து விட்டு, சொர்க்க லோகம் சென்றார்.

பல காலம் அங்கு வசித்த அவரை பார்த்து, இந்திரன் ஒரு சமயம் "நகுஷ புத்ரா! நீ அனைத்து கடமையையும் செய்து விட்டு, வனம் சென்று தவம் செய்தீர். அதனால் உன்னிடம் கேட்கிறேன்! தவம் செய்வதில் நீ யாருக்கு ஒப்பானவன்?" என்று கேட்டார்.

इन्द्र उवाच।

सर्वाणि कर्माणि समाप्य राजन्

गृहं परित्यज्य वनं गतोऽसि।

तत्त्वां पृच्छामि नहुषस्य पुत्र

केनासि तुल्य: तपसा ययाते।।

- வ்யாஸ மஹாபாரதம்


யயாதி "இந்திர தேவா! எனக்கு நிகராக தவத்தில் நான் எந்த தேவனையும், மனிதர்களையும், கந்தர்வனையும், ரிஷியையும் காணவில்லை" என்றார்.

ययाति उवाच।

नाहं देव मनुष्येषु गन्धर्वेषु महर्षिषु।

आत्मन: तपसा तुल्यं कंचित् पश्यामि वासव।।

- வ்யாஸ மஹாபாரதம்


உடனே இந்திரன் "ராஜன்! ஒவ்வொருவரின் மகிமை அறியாமல், உனக்கு ஸமமாகவோ, தாழ்வாகவோ, உனக்கு மேலாகவோ இருக்கும் இவர்களை நீ அவமதித்ததால், உனக்கு இனி இந்த சொர்க்கலோகத்தில் இடமில்லை. உன் புண்ணியங்கள் அழிந்து இப்பொழுதே விழுவாய்" என்றார்.

इन्द्र उवाच।

यदा अवमंस्थाः सदृशः श्रेयसश्च 

अल्पीयसश्चा विदित प्रभावः।

तस्मात् लोका: त्वन्तवन्त: तवे मे

क्षीणे पुण्ये पतिता अस्यद्य राजन्।।

- வ்யாஸ மஹாபாரதம்


யயாதி "இவர்களை அவமத்தித்தால், எனக்கு இந்த லோகம் இல்லாமல் போனது. நான் விழும் போது, சாதுக்களின் மத்தியில் விழ விரும்புகிறேன்" என்றார்.

ययातिरुवाच।

सुरर्षि गन्धर्व नर अवमानात् 

क्षयं गता मे यदि शक्रलोकाः।

इच्छाम्यहं सुरलोकाद् विहीनः

सतां मध्ये पतितुं देवराज।।

- வ்யாஸ மஹாபாரதம்


இந்திரன் "சாதுக்களின் மத்தியிலேயே விழுவாய். இதன் பயனாக மீண்டும் இந்த இடத்திற்கு திரும்புவாய். யயாதி! இனி ஒருபோதும் உனக்கு ஸமமானவர்களையோ, தாழ்வானவர்களையோ, மேலானவர்களையோ அவமதிக்காதே" என்றார்.

इन्द्र उवाच।

सतां सकाशे पतिता असि राजंश्च्युतः 

प्रतिष्ठां यत्र लब्धासि भूयः।

एतद् विदित्वा च पुन: ययाते

त्वं मा अवमंस्थाः सदृशः श्रेयसश्च।।

- வ்யாஸ மஹாபாரதம்

யயாதி சொர்க்க லோகத்திலிருந்து கீழே விழ தொடங்கினார்.

விழும் போது, யயாதியின் பெண்ணான "மாதவி" என்பவளின் பிள்ளையாஅஷ்டகன், ஆகாசத்தில் சந்தித்தான். தான் புண்ணியங்களை தருவதாக சொன்னான். 

அரசனாக இருந்த தன்னால், தானம் ஏற்க முடியாது என்று மறுத்தார். 

மேலும் வசுமானன், சிபி, காசி அரசன் ப்ரதர்த்தன் போன்ற ராஜரிஷிகள், முன் வந்து தங்கள் புண்ணிய லோகங்களை தர முன் வந்தனர். அனைத்தையும் தானமாக வாங்க மறுத்தார் யயாதி. 


அப்போது மாதவி தன் புத்திரர்களின் யாக சாலைக்கு வந்தாள். தன் பிதாவான யயாதி இருப்பதை பார்த்து, 

"இவன் உங்கள் மகள் வழி பேரன். ஆதலால் நீங்கள்  என்னுடைய புண்ணியம் மேலும் இவர்களுடைய புண்ணியத்தை எடுத்து கொண்டு மீண்டும் சொர்க்கம் செல்லுங்கள்" என்றாள்.

அதை கேட்டு மகிழ்ந்த யயாதி, "உனது தவத்தின் பயனால், எனது பேரன்களாலும் நான் கரையேறிவன் ஆனேன். இன்று முதல், பித்ரு காரியத்தில், பெண் சந்ததிகள் பெரும் புண்ணியத்தை பெறுவார்கள்" என்றார்.

यदि धर्मफलं ह्येतच्छोभनं भविता तव।

दुहित्रा चैव दौहित्रैस्तारितोऽहं महात्मभिः।।

- வ்யாஸ மஹாபாரதம்


மேலும் இவ்வாறு சொன்னார்.

"மகளின் பிள்ளை (பேரன்), குதபகாலம், எள் இந்த மூன்றும் ஸ்ரார்த்தம் (திவசம்) செய்யும் போது பயன்படுத்தபட்டால், மிகவும் புண்ணியமாக கருதப்படும்.

तस्मात्पवित्रं दौहित्रमद्यप्रभृति पैतृके।

त्रीणि श्राद्धे पवित्राणि दौहित्रः कुतपस्तिलाः।।

- வ்யாஸ மஹாபாரதம்

சுத்தமாக இருப்பதும், கோபமே இல்லாமல் இருப்பதும், அவசரம் இல்லாமல் இருப்பதும் திவசம் (ஸ்ரார்த்தம்) செய்பவனுக்கு அடிப்படை தேவை என்று சொல்லப்படுகிறது. 

திவசத்தில் (சிரார்த்தத்தில்) சாப்பிடுபவர்கள், சாப்பாடு பரிமாறுபவர்கள், வேதம் சொல்பவர்கள் இந்த மூவரும் திவசத்தை பரிசுத்தம் செய்கிறார்கள்.

त्रीणि चात्र प्रशंसन्ति शौचमक्रोधमत्वराम्।

भोक्तारः परिवेष्टारः श्रावितारः पवित्रकाः।।

- வ்யாஸ மஹாபாரதம்


பகல் பொழுதின் 8வது முகூர்த்தத்தில் சூரியன் உஷ்ணம் குறைந்து இருக்கும் காலமே "குதபகாலம்"

அந்த குதப காலத்தில் பித்ருக்களுக்கு தத்தம் கொடுப்பது அழிவில்லாத புண்ணியங்களை தரும்.

दिवसस्याष्टमे भागे मन्दीभवति भास्करे।

स कालः कुतपो नाम पितॄणां दत्तमक्षयम्।।

- வ்யாஸ மஹாபாரதம்


திவசத்தில் பயன்படுத்தும் எள் பிசாசுகள் பித்ரு அன்னத்தை அண்ட விடாமல் செய்யும்.

திவசத்தில் பயன்படுத்தும் தர்ப்பை புல் ராக்ஷஸர்கள் பித்ரு அன்னத்தை அண்ட விடாமல் செய்யும்.

பித்ரு காரியத்தில், சன்யாசிகள் (யதிகள்) சாப்பிட்டால் அழிவில்லாத புண்ணியங்களை தரும்.

तिलाः पिशाचाद्रक्षन्ति दर्भा रक्षन्ति राक्षसात्।

रक्षन्ति श्रोत्रियाः पङ्क्तिं यतिभिर्भुक्तमक्षयम्।।

- வ்யாஸ மஹாபாரதம்


ஞான (மெய் அறிவு) உள்ளவன், வேதம் ஓதியவன், செல்வம் உடையவன், சுத்தமாக இருப்பவன் கிடைத்தால், அதுவே காலம்.

அந்த காலத்திலேயே அவர்களுக்கு அன்னம் கொடுக்கலாம். அவர்களை சந்தித்த காலமே நல்ல காலம். அதை தவிர நல்ல நேரம் பார்க்க அவசியமில்லைஎன்று சொல்லி யயாதி மகிழ்ந்தார்.

लब्ध्वा पात्रं तु विद्वांसं श्रोत्रियं सुव्रतं शुचिम्।

स कालः कालतो दत्तं नान्यथा काल इष्यते।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்) 


இவ்வாறு யயாதி வரம் கொடுத்ததால், பித்ரு காரியத்தில், பெண் வயிற்று பேரனை அழைத்து சாப்பிட செய்பவர்களுக்கு பெரும் புண்ணியம் சேருகிறது. மேலும் அந்த பெண்ணுக்கும் பேரனுக்கும் அழிவில்லாத புண்ணியங்கள் சேருகிறது.


மனு ஸ்மிருதி

व्रतस्थमपि दौहित्रं श्राद्धे यत्नेन भोजयेत् ।
कुतपं च आसनं दद्यात् तिलैश्च विकिरेन् महीम् ॥

பெண் வயிற்று பேரன் பிரம்மச்சாரியாக இருந்தாலும் அழைத்து எள் இரைத்து, ஆசனம் கொடுத்து உபசரித்து உணவு கொடுக்க வேண்டும்.

त्रीणि श्राद्धे पवित्राणि दौहित्रः कुतपस्तिलाः ।
त्रीणि चात्र प्रशंसन्ति शौचमक्रोधमत्वराम् ॥

பெண் வயிற்று பேரன், பிற்பகல், எள் இவை மூன்றும் பவித்ரமானவை. ஸ்ரார்த்த சமயத்தில், இந்த மூன்றையும் சந்திக்கும் போது, கர்த்தா சுத்தமாகவும், கோபமில்லாமலும், அவசரமில்லாமலும் அணுகினால், பித்ருக்கள் மிகவும் போற்றுவார்கள்.