யயாதியின் மூத்த பிள்ளை "யது". இருந்தாலும், தன்னுடைய கடைசி புத்திரனான "புரு"வுக்கு பட்டாபிஷேகம் செய்ய தீர்மானித்தார்.
யயாதியின் பிள்ளைகள் மூலம் என்னென்ன குலங்கள் உருவாகின? என்பதை யயாதி சொன்னார்.
यदोस्तु यादवा जातास्तुर्वसोर्यवनाः स्मृताः।
द्रुह्योः सुतास्तु वै भोजा अनोस्तु म्लेच्छजातयः।।
पूरोस्तु पौरवो वंशो यत्र जातोऽसि पार्थिव।
इदं वर्षसहस्राणि राज्यं कारयितुं वशी।।
- ஆதி பர்வம்
என்னுடைய மூத்தவனான யது மூலம், யாதவ வம்சம் உருவானது.
துர்வசுவிடமிருந்து, யவனர்கள் வம்சம் உருவானது.
த்ருஹ்யுவிடமிருந்து போஜர்கள் வம்சம் உருவானது.
அனுவிடமிருந்து மிலேச்சர்கள் வம்சம் உருவானது.
புருவிடமிருந்து பௌரவர்கள் வம்சம் உருவானது,
என்றார்.
No comments:
Post a Comment